தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

காவல்துறையின் பணிச் சுமையைக் குறைத்து, சட்டம் ஒழுங்கையும் சிறப்பாகப் பராமரிக்கும் வகையிலும் காவல்துறைக்கு துணையாக தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார்.

இளைஞர்களைக்கொண்டு மாவட்ட எஸ்.பி. மற்றும் காவல் ஆணையர்களால் உருவாக்கப்படும் இந்தப் படை, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துதல், கூட்ட நெரிசல்களை சரிசெய்தல் போன்ற வேலைகளோடு இரவு ரோந்துப் பணியிலும் ஈடுபடுத்த தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளது.

இந்தப் படையில் இவ்வாண்டு பத்தாயிரம் பேரையும், அடுத்த ஆண்டு 15 ஆயிரம் பேரையும் சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த நவம்பர் 10-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழ்நாடு சீருடையாளர் பணியாளர் தேர்வு குழுமம் நடத்தியது.

இந்தத் தேர்வு 31 மாவட்டங்கள், 6 மாநகரங்கள் ஆகியவற்றில் மொத்தம் 94 மையங்களில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 120 பேர் எழுதினர். இத் தேர்வின் முடிவு தமிழ்நாடு சீருடையாளர் பணியாளர் குழுமத்தின் http://www.tnpolice.gov.in என்ற இணையத்தளத்திலும்,ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ர்ப்ண்ஸ்ரீங்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையத்தளத்திலும் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இந்த இணையத்தளத்தைப் பார்த்து தேர்வின் முடிவைத் தெரிந்துக் கொள்ளலாம்.

இத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உடற்கூறு அளத்தல், உடற்திறன் போட்டி, அசல் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவை நடைபெறும்.

இதற்கான அழைப்புக் கடிதம் இம் மாதம் 26ம் தேதிக்குள் கிடைக்கப்பெறாதவர்கள், அவர்கள் விண்ணப்பித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துணை ஆணையாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்று அழைப்பு கடிதத்தின் நகலை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழும அலுவலகத்தை 044-28413658 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.

இத் தகவலை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழும இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Leave a comment