Monthly Archives: November, 2012

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இம்முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். 1870 பணியிடங்களுக்கு நடந்த இந்த தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில், காலியாக உள்ள, உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, அடுத்த மாதம், 7ம் தேதி, கலந்தாய்வு நடக்கிறது.

தமிழக அரசின் செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உயர்நிலைப் பள்ளிகளில், 2010-11 மற்றும் 2011-12ம் ஆண்டிற்கு, காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், ஒதுக்கீடு பெறப்பட்டது. இதன் படி, ஆதிதிராவிடர் நலத்துறையால் அழைப்பாணை அனுப்பப்பட்ட, 47 பேருக்கு, அடுத்த மாதம், 7ம் தேதி, 11:00 மணிக்கு, சேப்பாக்கம், எழிலக இணைப்பு கட்டடத்தில் உள்ள, ஆதி திராவிடர் நல கமிஷனர் அலுவலகத்தில், கலந்தாய்வு நடக்கிறது. அன்று, உரிய சான்றுகளுடன், தவறாமல் ஆஜராக வேண்டும். இவ்வாறு, செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி இலக்கு – பள்ளிக் கல்வித்துறை திட்டம்.

கள்ளர் சீரமைப்புத்துறை | பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய, தடைகோரிய வழக்கில், "இடைப்பட்ட காலத்தில் செய்யப்படும் பணி நியமனங்கள், இவ்வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது,’எனவும், அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும், மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய, தடைகோரிய வழக்கில், “இடைப்பட்ட காலத்தில் செய்யப்படும் பணி நியமனங்கள், இவ்வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது,’எனவும், அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும், மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. உசிலம்பட்டி அருகே, கவுண்டம்பட்டி சூரியகாந்தியம்மாள் தாக்கல் செய்த மனு: நான், உசிலம்பட்டி அருகே திசுப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியை. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளின் ஆசிரியர்கள், வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் கோரி, பள்ளிக் கல்வித்துறை செயலாளரிடம் மனு அளித்தோம். அதன்படி, கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளின் 119 பட்டதாரி ஆசிரியர்கள், 27 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை, பள்ளிக் கல்வித்துறைக்கு மாறுதல் செய்ய, 2011 மார்ச்சில் அரசு உத்தரவிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க, அக்.,14ல், தகுதித்தேர்வு நடந்தது. நவ., 2 ல் தேர்வு முடிவு வெளியானது. நவ.,6 முதல் 7 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இவர்கள், பல்வேறு மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால், எங்களது இடமாறுதல் பாதிக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் சதீஷ் ஆஜரானார். நீதிபதி,””இடைப்பட்ட காலத்தில் செய்யப்படும் பணி நியமனங்கள், இவ்வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது,” என்றார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர், கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தார். 

கல்வித்துறையில், நான்காவது நாளாக நேற்று நடந்த பணி நியமன கலந்தாய்வில், உடற்கல்வி ஆசிரியர், 1,025 பேர் உட்பட, 1,453 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

கல்வித்துறையில், நான்காவது நாளாக நேற்று நடந்த பணி நியமன கலந்தாய்வில், உடற்கல்வி ஆசிரியர், 1,025 பேர் உட்பட, 1,453 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த, 21ம் தேதி, அமைச்சுப் பணியில் இருந்து, தகுதி வாய்ந்தவர்களுக்கு, முதுகலை ஆசிரியர் பணி வழங்குவதற்கான கலந்தாய்வு நடந்தது. 22ம் தேதி, ஓவிய ஆசிரியர் நியமன கலந்தாய்வும்; 23ம் தேதி, காவலர் மற்றும் துப்புரவு பணியாளர் நியமன கலந்தாய்வும் நடந்தது. நான்காவது நாளான நேற்று, 1,025 உடற்கல்வி ஆசிரியர், கலை ஆசிரியர், 304 பேர், தையல் ஆசிரியர், 84 பேர் மற்றும் இசை ஆசிரியர், 40 பேர் உட்பட, 1,453 பேருக்கான நியமனம் நடந்தது.அந்தந்த மாவட்ட தலைமை இடங்களில், இணையதளம் வழியாக, கலந்தாய்வு நடந்தது. சென்னை மாவட்டத்தில், உடற்கல்வி ஆசிரியர், 31 பேர், இசை ஆசிரியர், இரண்டு, ஓவிய ஆசிரியர், நான்கு, தையல் ஆசிரியர், மூன்று பேர் என, 40 ஆசிரியர் பணியிடங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதற்கான கலந்தாய்வு, சேத்துப்பட்டு, எம்.சி.சி., பள்ளியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.”மாநிலம் முழுவதும், அனைத்து பணி நியமனங்களும் நடந்து முடிந்தன; 1,453 பேருக்கும், சம்பந்தபட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பணி நியமன உத்தரவுகளை வழங்கினர்’ என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு `ஸ்மார்ட் கார்டு’ வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு `ஸ்மார்ட் கார்டு’ வழங்கினார்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு `ஸ்மார்ட் கார்டு’ வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு `ஸ்மார்ட் கார்டு’ வழங்கினார்இந்த ஸ்மார்ட் கார்டில், மாணவ, மாணவியரின் பெயர், பெற்றோர் முகவரி, பெற்றோர் வருமானம், பிறப்பு, பள்ளி சேர்க்கை, தேர்ச்சி, நடத்தை, ரத்த வகை போன்ற அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும்.
இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பள்ளிக் கல்வித்துறைக்கென கல்வி தகவல் மேலாண்மை முறைமையினை (இ.எம்.ஐ.எஸ்.) முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 5-ந் தேதி தொடங்கி வைத்தார். இந்த கல்வி தகவல் மேலாண்மை முறைமையில் நான்கு இணைய தளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. இதில்,ஷ்ஷ்ஷ்.ணீபீனீவீஸீ.åஸீæநீலீஷீஷீறீæ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதளம் பள்ளி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் இணையதளம் ஆகும். இந்த இணையதளத்தில் பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு பாதுகாக்கபட்டு உள்ளது.

மாணவ, மாணவியரின் நலனைக் கருத்தில் கொண்டு, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு “ஸ்மார்ட் கார்டு” வழங்கிட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் முன்னோட்டமாக, திருச்சி மாவட்டத்தில் திருச்செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி, அய்லாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, எட்டரை அரசு மேல்நிலைப் பள்ளி, இனாம் குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் ஸ்மார்ட் கார்டுகளை வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்த ஸ்மார்ட் கார்டுகளில் உள்ள விவரங்கள் அனைத்தும் கல்வித் தகவல் மேலாண்மை முறைமையில் (இ.எம்.ஐ.எஸ்.) ஒருங்கிணைக்கப்படும்.

இந்த ஸ்மார்ட் கார்டு மூலம், மாணவ, மாணவியரின் பெயர், பெற்றோர் முகவரி, பெற்றோர் வருமானம், பிறப்பு, பள்ளி சேர்க்கை, தேர்ச்சி, நடத்தை, ரத்த வகை போன்ற அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். மேலும், மாணவ, மாணவிகள் குடும்பச் சூழ்நிலைக் காரணமாக இடம்பெயர நேரும்போது இதில் பதிவு செய்துள்ள விவரங்களின் அடிப்படையில் எந்தப் பள்ளியிலும் சேர முடியும்.மேலும், மாணவர்களின் இடைநிற்றல் துல்லியமாகக் கண்டறியப்பட்டு பள்ளிகளில் சேர்க்கை செய்திட வழிவகை செய்யப்படுவதுடன் அரசு வழங்கும் நலத் திட்டங்களுக்கு மாணவ, மாணவியரை தெரிவு செய்யவும் பயன்படுத்தப்படும். இந்த ஸ்மார்ட் கார்டு திட்டத்தின் மூலம் 91 லட்சத்து 54 ஆயிரத்து 741 மாணவ, மாணவியர் பயன்பெறுவர். மாணவ, மாணவியர்களின் உடல்நலம் குறித்த விவரங்களை பதிவு செய்யும் ஹெல்த் கார்டுடன் “ஸ்மார்ட் கார்டு” ஒருங்கிணைக்கப்படும். இத்திட்டம் படிப்படியாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும்.

2011-12-ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்றுள்ள 4 லட்சத்து 60 ஆயிரத்து 779 மாணவ, மாணவியருக்கு முதிர்ச்சியடைந்த சிறப்பு ஊக்கத் தொகையினை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்து, மாணவ, மாணவியருக்கு ஊக்கத் தொகையினை வழங்கினார்.மாணவர்கள் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு, 2011-12-ம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் முதல்-அமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தின்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10, 11ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ரூ.1,500-ம், 12-ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ரூ.2 ஆயிரமும் அவர்களின் பெயரில் தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அவர்கள் 12-ம் வகுப்பு முடிக்கும் போது வட்டியுடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, 2011-12-ம் கல்வியாண்டில் 21 லட்சத்து 36 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.313 கோடியே 13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் வைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2012-13-ம் கல்வி ஆண்டில் 21 லட்சத்து 52 ஆயிரத்து 986 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.353 கோடியே 56 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரின் வருமானம் ஈட்டும் தாய் தந்தையர் விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, அப்பெற்றோரின் குடும்பத்தில் உள்ள அனைத்து பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்விச் செலவு மற்றும் பராமரிப்புச் செலவிற்காக ஒரு மாணவருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் நிரந்தர வைப்பு நிதியாக வழங்கப்படும் என்ற திட்டத்தின் கீழ் 2011-12 மற்றும் 2012-13-ம் கல்வியாண்டுகளில் 720 மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் ரூ.3 கோடியே 60 லட்சத்திற்கான வைப்பு நிதி பத்திரங்களை மாணவ, மாணவியருக்கு வழங்கினார். இந்த நிதியானது அரசு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டி தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை ஆகியவற்றை பயன்படுத்தி மாணவ, மாணவிகள் தங்கள் கல்வி மற்றும் பராமரிப்புச் செலவினை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.

மாணவர்கள் நலன் கருதியும், கல்வி தரத்தை மேம்படுத்திடவும், சிறப்பான நிர்வாகத்தை வழங்கிடவும் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் ஆய்வுப் பணிகள், தேர்வுப் பணிகள், பள்ளிகளைப் பார்வையிடுதல் மற்றும் திட்டப் பணிகளைக் கண்காணித்தல் போன்ற பணிகளை தடையின்றி சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு 6 புதிய வாகனங்களும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு 9 புதிய வாகனங்களும், என மொத்தம் ரூ.83 லட்சத்து 460 செலவில் வாங்கப்பட்ட 15 புதிய வாகனங்களை வழங்கினார்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், 2024ம் ஆண்டில், 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்டுவதற்கு, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், 2024ம் ஆண்டில், 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்டுவதற்கு, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

அரசு, தனியார், உதவிபெறும் பள்ளிகள் என, ஒட்டுமொத்தமாக, 55 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 1.35 கோடி மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 5.5 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பல ஆண்டுகளாக இருந்து வந்த கல்விமுறை, முந்தைய தி.மு.க., ஆட்சியில் மாற்றப்பட்டு, சமச்சீர் கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது.

அ.தி.மு.க., அரசு, இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்தி, 1 முதல் 8ம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டத்தையும், தொடர் மதிப்பீட்டு முறை திட்டத்தையும் அமல்படுத்தியுள்ளது. கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம், தொடர்ந்து ஒரே அளவில் இருந்து வருகிறது.

தேர்ச்சியில் முரண்பாடு:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி சதவீதம், 85 முதல், 87 வரை இருந்து வருகிறது. இதிலும், தனியார் பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சி கணிசமாகவும், அரசுப் பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சி குறைவாகவும் உள்ளது. மேலும், தென் மாவட்டங்கள், கல்வி தரத்தில் உயர்ந்தும், வட மாவட்டங்கள் தாழ்வான நிலையிலும் உள்ளன.

கல்வித்துறை ஆய்வு:இந்த முரண்பாடுகள் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து, கடந்த பொதுத்தேர்வு தேர்ச்சியின் அடிப்படையில், பள்ளிக் கல்வித்துறை, விவரமாக ஆய்வு நடத்தி உள்ளது. ஒட்டுமொத்த தேர்ச்சியில், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைவதற்கான காரணங்களை ஆய்வு செய்ததில், தேர்ச்சி குறைந்த அனைத்துப் பள்ளிகளிலும், ஆசிரியர் பற்றாக்குறை அல்லது ஏற்கனவே உள்ள பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

கணிதத்தில் தோல்வி அதிகம்:பிளஸ் 2 தேர்ச்சி குறித்த ஆய்வு விவரம், தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, கணிதப் பாடத்தில், 10.8 சதவீதம் பேரும், வணிகவியல் பாடத்தில், 8.9 சதவீதம் பேரும் தோல்வி அடைந்துள்ளனர். பாட வாரியாக, அரசுப் பள்ளி மாணவர்கள் அடைந்துள்ள தோல்வி குறித்து, கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலப் பாடத்தில் தான், மிகக் குறைவான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

தமிழில், 0.8 சதவீதம் பேரும், ஆங்கிலத்தில், 2.20 சதவீதம் பேரும் மட்டுமே தோல்வி அடைந்துள்ளனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திலும், மிகக் குறைவாக, 0.8 சதவீத மாணவர் மட்டுமே தோல்வி அடைந்துள்ளனர். 2,243 அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பெற்ற சராசரி மதிப்பெண்கள், 682. அரசுப் பள்ளி மாணவர்களில், 77 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். அதுவே, தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், 93.6 ஆக உள்ளது.

இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது, இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு எடுத்துவரும் தொடர் சீர்திருத்த நடவடிக்கைகளால், அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்து வருகிறது. கடந்த பிளஸ் 2 தேர்வில், 325 அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளை மிஞ்சி, 93.6 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

தேர்ச்சி சதவீத முரண்பாடுகளை களைந்து, 2024ம் ஆண்டு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி மற்றும் கல்வி தரத்தில், சரிசமமான நிலையை ஏற்படுத்த வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

* ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்கள், வரும் கல்வியாண்டு துவங்குவதற்கு முன் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்படும்.
* மாணவர்கள் பாதிப்பை தவிர்க்க, தற்காலிகமாக, பெற்றோர்-ஆசிரியர் கழகம் சார்பில், ஆசிரியரை நியமித்துக்கொள்ள, பள்ளி நிர்வாகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* திறமையான ஆசிரியர் பயிற்றுனர்களை, ஆசிரியர் பணிக்கு மாறுதல் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.
* 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி குறைந்த அரசுப் பள்ளிகளில், பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு, தொடர்ந்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது உடன், பாட நிபுணர்களின், வழிகாட்டுதல்களும் அளிக்கப்படும். இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால், இலக்கை எட்ட முடியும் என, நம்புகிறோம்.இவ்வாறு, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, வளாக தேர்வை எதிர்கொள்ளும் வகையில், பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான மையங்கள், அரசு கல்லூரிகளில் துவங்கப்பட உள்ளன. இதற்காக, ஆறு கோடி ரூபாயை, தமிழக அரசு செலவிட உள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, வளாக தேர்வை எதிர்கொள்ளும் வகையில், பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான மையங்கள், அரசு கல்லூரிகளில் துவங்கப்பட உள்ளன. இதற்காக, ஆறு கோடி ரூபாயை, தமிழக அரசு செலவிட உள்ளது.தமிழகத்தில் உள்ள, 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும், 20 ஆயிரம் மாணவர்களுக்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு திட்டம் மூலம், இப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நான்காம் மற்றும் ஐந்தாம் பருவ தேர்வுகளில், இப்பயிற்சி அளிக்கப்படும்.

ஒரு வாரத்திற்கு, எட்டு மணி நேரம் என்ற கணக்கில், நடப்புக் கல்வியாண்டில் பயிற்சி தரப்படும்.கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறும் வளாக தேர்வில், எந்தெந்த காரணங்களால், மாணவர்கள் தோல்வியடைகின்றனர் என்பதை கண்டறிந்து, அதை போக்க
இப்பயிற்சி உதவிடும். பன்னாட்டு நிறுவனங்கள், மருத்துவம், சில்லரை வணிகம் என, அந்தந்த துறைகளுக்கு ஏற்ப இப்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

பணி சார்ந்த மொழி கற்பித்தல், ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி, வாக்கியங்களை, தகவல்களை தெளிவாக புரிந்து கொள்ளுதல், சரளமாகவும், தன்னிச்சையாகவும் ஆங்கிலம் பேசுதல், பிரபலமான தலைப்புகளிலிருந்து கருத்துகளை தெரிவித்தல், நிகழ்வுகள், அனுபவங்களை ஆங்கிலத்தில் விவரித்தல் போன்ற பயிற்சிகள், இதில் அடக்கம்.ஒவ்வொரு துறைவாரியான பயிற்சி, தன்னம்பிக்கை வளர்த்தல் உள்ளிட்டவை குறித்தும், பயிற்சி பாடத்தில் அடங்கும்.அரசு விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு, ஆங்கில அறிவை வளர்க்கும் வகையில், பயிற்சி அளிக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, பயிற்சி அதிகாரி கூறியதாவது:இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, முன்தேர்வு நடக்கிறது. இதில், வெற்றி பெறும் மாணவர்கள் மட்டுமே, பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். கல்லூரி வளாகத்தில் நேர்காணலை சந்திக்கும் மாணவர்களுக்கு, இப்பயிற்சி பெரும் உதவியாக இருக்கும். பயிற்சி மையங்கள் அமைக்க, டெண்டர் கோரப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

துப்புரவு பணியாளர், காவலர் நியமனம்

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 2,216 துப்புரவு பணியாளர்கள், 1,492 காவலர்கள் என, 3,708 பேருக்கு, இணையதளம் வழியாக, நேற்று கலந்தாய்வு நடத்தி, பணி நியமனம் செய்யப்பட்டனர்.மொத்தம், 5,000 பேர், பணி நியமனம் செய்யப்படுவர் என, கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால், சில மாவட்டங்களில், முன்னுரிமைப் பட்டியலின் கீழ், சில பிரிவினர் இல்லாததால், முதல் கட்டமாக, 3,708 பேருக்கு மட்டும், பணி நியமனம் நடந்ததாக, பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மீதமுள்ள, 1,292 பேருக்கான பதிவுமூப்பு பட்டியல், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து பெற்று, விரைவில், பணி நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அதிகாரிகள் தெரிவித்தனர். மாநிலம் முழுவதும், 66 கல்வி மாவட்ட அலுவலகங்களில், பணி நியமன கலந்தாய்வு நடந்தது. இதை, பள்ளிக்கல்வி இயக்ககத்தில் இருந்தபடி, இயக்குனர் தேவராஜன், இணை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் கண்காணித்தனர்.

கலந்தாய்வு முடிந்ததும், சம்பந்தபட்டவர்களுக்கு, கல்வி மாவட்ட அலுவலர்கள், பணி நியமன உத்தரவுகளை வழங்கினர். நியமன உத்தரவு பெற்ற அனைவரும், உடனடியாக பணியில் சேர, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.அதிகபட்சமாக, வேலூர் கல்வி மாவட்டத்தில், 116 துப்புரவு பணியாளர்களும், 98 காவலர்களும், பணியில் சேர்ந்தனர். தர்மபுரி கல்வி மாவட்டத்தில், 85 துப்புரவு பணியாளர்கள், 67 காவலர்களும், சேலம் கல்வி மாவட்டத்தில், 69 துப்புரவு பணியாளர்கள், 59 காவலர்களும் நியமிக்கப்பட்டனர்.மிகக் குறைவாக, மத்திய சென்னை கல்வி மாவட்டத்தில், இரு பணிகளிலும், தலா ஒருவர் நியமிக்கப்பட்டனர்.

அடுத்த, ஐந்து ஆண்டுகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தேவை, 15 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும்

“அடுத்த, ஐந்து ஆண்டுகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தேவை, 15 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும்’ என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.இது குறித்து, துறை வட்டாரங்கள் கூறியதாவது:டி.இ.டி., தேர்வு வழியாக, தற்போது, 25 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆண்டுதோறும், ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், புதிய மற்றும் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு, ஆசிரியர் பணியிடங்கள் என, ஆண்டுதோறும், புதிய ஆசிரியர் நியமன எண்ணிக்கை, கணிசமாகவே இருக்கும்.பட்டதாரி ஆசிரியரில், தமிழ், வரலாறு, அறிவியல் பாடங்களில் படித்தவர்கள், எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர்.

ஆனால், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களுக்கு, தேவை அதிகமாக உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் மட்டும், 15 ஆயிரத்திற்கும் அதிகமாக தேவைப்படுவர்.எனவே, பி.ஏ., – பி.எட்., ஆங்கிலம் படிப்பவர்கள், எளிதாக, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவதுடன், உடனடியாக வேலை வாய்ப்பையும் பெற முடியும்.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

கணக்கு பட்டதாரிகள் தேவை பற்றிய புள்ளிவிவரம் தரப்படவில்லை. ஆனால், முதுகலை கணக்கு பட்டதாரிகள் ஆசிரியர்கள் தேவையும் அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, 10 ஆயிரம் முதல், 15 ஆயிரம் ஆசிரியர் வரை, புதிதாக நியமிக்கப்படுகின்றனர். வரும் ஆண்டுகளில், தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். எனவே, ஆசிரியர் நியமனங்களுக்கு பஞ்சம் இருக்காது என, எதிர்பார்க்கப்படுகிறது.

"தமிழக அரசுக்கு, பல்வேறு வகைகளில் வரிகளை செலுத்தும் மக்கள், தங்கள் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் சேர்த்து, இலவச கல்வி பெற ஆர்வம் காட்ட வேண்டும்’ என, தமிழக துவக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.

“தமிழக அரசுக்கு, பல்வேறு வகைகளில் வரிகளை செலுத்தும் மக்கள், தங்கள் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் சேர்த்து, இலவச கல்வி பெற ஆர்வம் காட்ட வேண்டும்’ என, தமிழக துவக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது. இதை வலியுறுத்தி, ஒரு லட்சம் துண்டுப் பிரசுரங்களை வினியோகிக்க முடிவு செய்திருக்கிறது.

சங்க நிர்வாகி, அப்துல் மஜீத் வெளியிட்ட அறிக்கை:பெற்றோர், இலவச கல்வி தரும் பள்ளிகளில், தங்கள் குழந்தைகளை சேர்க்க முன்வர வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், தரமான ஆசிரியர்கள் உள்ளனர் . தமிழக அரசு, மாணவ, மாணவியருக்கு, இலவச கல்வி வழங்குவதுடன், பல்வேறு இலவச திட்டங்களையும் வழங்குகிறது.ஆண்டுக்கு, நான்கு ஜோடி இலவச சீருடை, நாள்தோறும், ஒரு முட்டையுடன், ஏழு வகை மதிய உணவு, வாழைப்பழம், இலவச பாடப் புத்தகங்கள், எழுது பொருட்கள், நோட்டுகள், சைக்கிள், “லேப்-டாப்’ கம்ப்யூட்டர் என, பல்வேறு திட்டங்களை, தமிழக அரசு அளிக்கிறது. இதை, பெற்றோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பல்வேறு வரிகளை கட்டுகிற மக்கள், அதைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தங்கள் குழந்தைகளை, இலவச கல்வி அளிக்கும் அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.இதை வலியுறுத்தி, இன்று மற்றும் நாளை, ஒரு லட்சம் துண்டுப் பிரசுரங்கள், மக்களுக்கு வழங்கப்படும்.இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.மக்களுக்கு வழங்க அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தில், அரசு பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க வேண்டியதன் அவசியம் மற்றும் நன்மைகள், இரண்டு பக்கங்களில் பட்டியலிடப்பட்டு உள்ளன..

டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தொழிலாளர் அதிகாரி தேர்வுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியீடு

தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் 5 தொழிலாளர் அதிகாரி (உதவி கமிஷனர் அந்தஸ்து) காலி பணி இடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. கடந்த 10–ந் தேதி ஒரு போட்டித்தேர்வை நடத்தியது. சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய 6 மையங்களில் நடத்தப்பட்ட இந்த தேர்வை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதினார்கள்.

இந்த நிலையில், தொழிலாளர் அதிகாரி தேர்வுக்கான விடைகளை (கீ ஆன்சர்) டி.என்.பி.எஸ்.சி. தனது இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. சமூக அறிவியல், தொழிலாளர் சட்டம் ஆகிய பாடப்பிரிவுகளில் கேட்கப்பட்டு இருந்த 200 வினாக்களுக்கும் விடைகளை தெரிந்து கொள்ளலாம். கீ ஆன்சர்–ஐ பார்ப்பதன் மூலம், தேர்வர்கள் தங்களுக்கு எத்தனை மதிப்பெண் கிடைக்கும்? என்பதை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.

எழுத்துத்தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 300 ஆகும். தேர்வு முடிவை இந்த மாத இறுதிக்குள் வெளியிட டி.என்.பி.எஸ்.சி. திட்டமிட்டுள்ளது. எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்முகத்தேர்வு நடத்தப்படும். அதற்கு 40 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு, எழுத்துத்தேர்வு–நேர்முகத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

பத்து லட்சம் பேர் எழுதியுள்ள வி.ஏ.ஓ. தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் கூறினார்.

10 லட்சம் பேர் எழுதியுள்ள வி.ஏ.ஓ. தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் அறிவிப்பு

பத்து லட்சம் பேர் எழுதியுள்ள வி.ஏ.ஓ. தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் கூறினார்.
 
டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2 தேர்வில் நேர்காணல் அல்லாத பதவிகளில் உள்ள 3,220 காலி இடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் துறை ஒதுக்கீட்டு கவுன்சிலிங் நேற்று தொடங்கியது. இந்த கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள 4,838 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். முதல் நாள் கவுன்சிலிங்கில், மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ரேங்க் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் துறை ஒதுக்கீட்டிற்கான ஆணையை வழங்கினார். இந்த கவுன்சிலிங் டிசம்பர் 1–ந் தேதி வரை வேலை நாட்களில் தொடர்ந்து நடைபெறுகிறது. முன்னதாக கவுன்சிலிங் பணிகளை பார்வையிட்ட நட்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:–

கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பதவியில் 1,870 காலி இடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வை ஏறத்தாழ 10 லட்சம் பேர் எழுதியுள்ளனர். வி.ஏ.ஓ. தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும். அதேபோல், கடந்த 4–ந்தேதி நடந்து முடிந்த குரூப்–2 தேர்வு முடிவை அடுத்த மாதம் (டிசம்பர்) 2–வது வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு நட்ராஜ் கூறினார்.
ஜனவரியில் தேர்வு அட்டவணை

ஓராண்டில் என்னென்ன போட்டித்தேர்வுகள் வெளியிடப்படும்? என்று முன்கூட்டியே தேர்வு அட்டவணை வெளியிடும் முறையை டி.என்.பி.எஸ்.சி. இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தியது. அதன்படி போட்டித்தேர்வுகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், 2013–ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை குறித்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நட்ராஜிடம் கேட்டபோது, ‘‘அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக துறை வாரியாக காலி இட விவரங்களை கேட்டுப்பெற்று வருகிறோம். தேர்வு அட்டவணையை ஜனவரி மாதத்தில் வெளியிட்டு விடுவோம்’’ என்றார்.

குருப்–1 பதவிகளில் 25 காலி இடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத்தேர்வு டிசம்பர் மாதம் 30–ந்தேதி நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. ஆனால், அதே தேதியில் யு.ஜி.சி. நெட் தேர்வும் நடைபெற உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் தேர்வு தேதியை டி.என்.பி.எஸ்.சி. மாற்றியமைப்பது வழக்கம். இதுகுறித்து நட்ராஜிடம் கேட்டபோது, ‘‘ குரூப்–1 முதல்நிலைத்தேர்வு தேதியை மாற்றுவது குறித்து பரிசீலிப்போம்’’ என்று கூறினார்.

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கவர்னர் ரோசய்யா நாளை வழங்குகிறார்

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் கல்வி மற்றும் மருத்துவப்பணியில் சிறந்து விளங்குவோரை தேர்வுசெய்து ஆண்டுதோறும் வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறந்த டாக்டர் விருது, சிறந்த ஆசிரியர் விருது ஆகிய விருதுகளை வழங்கி வருகிறது. உயர்கல்வியில் இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா ஆண்டு நிறைவு விழாவில் துணைவேந்தர் ஜி.விஸ்வநாதனுக்கு கவர்னர் கே.ரோசய்யா வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவிக்கிறார். சிறந்த டாக்டர் விருது, சிறந்த ஆசிரியர் விருது ஆகியவையும் வழங்கப்படுகின்றன. விழாவில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய், துறையின் செயலாளர் டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன், பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.

டி.இ.ஓ., காலியிடங்கள் 70 ஆக உயர்வு : பதவி உயர்வு அறிவிப்பு எப்போது

தமிழகத்தில் 70 மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) பணியிடங்கள் காலியாக உள்ளதால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. டி.இ.ஓ., பதவி உயர்வு பட்டியல் அறிவிப்பு தாமதமாவது குறித்து ஆசிரியர்களிடம் கேள்வி எழுந்துள்ளது. அரசு திட்டங்களை செயல்படுத்துவது, கல்வி பணிகளை ஆய்வு செய்வது மற்றும் களப்பணிகள் ஆற்றுவது என, டி.இ.ஓ.,க்கள் பங்கு அதிகம். மாநிலத்தில் 70 டி.இ.ஓ., பணியிடங்கள் காலியாக உள்ளன. 35 சி.இ.ஓ., பணியிடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், டி.இ.ஓ., பணிமூப்பு பட்டியலும், பள்ளி கல்வி துறையில் தயார் நிலையில் உள்ளது. ஆனால், அறிவிப்பில் தாமதம் ஏற்படுகிறது.பள்ளி கல்வி துறை இயக்குனராக தேவராஜ் பொறுப்பேற்றதும், காலி சி.இ.ஓ., பணியிடங்களை நிரப்பியது, “ஆன்லைன்’ கவுன்சிலிங் மூலம் ஆசிரியர்களுக்கு அலைச்சலை தவிர்த்தது போன்ற நடவடிக்கைகள் எடுத்தது, வரவேற்பை பெற்றது. டி.இ.ஓ.,க்கள் பணியிடங்களை அறிவிப்பதில் மட்டும் “தொய்வு’ நீடிக்கிறது.பதவி உயர்வு மூப்பு பட்டியலில் உள்ள தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது: டி.இ.ஓ.,க் கள் பதவி உயர்வு, நேரடி நியமனம் மூலம் 25 சதவீதம், உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு 40 சதவீதம், மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு 35 சதவீதம் அடிப்படையில் ஒதுக்கப்படும். தலைமையாசிரியர்களின் பணிப்பதிவேடு (எஸ்.ஆர்.,) மற்றும் “கான்பிடன்ஷியல்’ சான்று பரிசீலிக்கப்படும். தலைமையாசிரியர்கள் ரகசிய அறிக்கைகள் பெறுவதில் சிக்கல் உள்ளது. தலைமையாசிரியர் ஒருவர் பணிக்காலத்தில் எத்தனை டி.இ.ஓ.,க்களுக்கு கீழ் பணியாற்றினாரோ அவர்களின் ரகசிய அறிக்கைகளையும் பெற்று, இயக்குனரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பல அதிகாரிகள் ஓய்வு மற்றும் காலமானதையடுத்து, அந்த அறிக்கைகள் பெறமுடியவில்லை. இதனால், பதவி உயர்வு பட்டியல் அறிவிப்பில் தாமதம் ஆகிறது. பணிமூப்பு பட்டியலில் உள்ள தலைமையாசிரியர், கடைசியாக அதிகாரியிடம் பணியாற்றியவரின் ரகசிய அறிக்கையை மட்டும் பெற்றால் போதும், என விதியை தளர்த்த வேண்டும், என்றார்.

பெரியார் பல்கலையில், ஐந்தாண்டுகளுக்கும் மேலாக தேர்ச்சி பெறாத நிலுவைத் தாள்களை வைத்திருக்கும் மாணவ, மாணவியருக்கு, மீண்டும் பழைய பாடத்திட்டத்திலேயே தேர்வெழுத, தற்போது வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

பெரியார் பல்கலையில், ஐந்தாண்டுகளுக்கும் மேலாக தேர்ச்சி பெறாத நிலுவைத் தாள்களை வைத்திருக்கும் மாணவ, மாணவியருக்கு, மீண்டும் பழைய பாடத்திட்டத்திலேயே தேர்வெழுத, தற்போது வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது. பெரியார் பல்கலை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: பெரியார் பல்கலை இணைவு பெற்ற கல்லூரி களில், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு படித்து, வெளிச்சென்ற மாணவர்கள், தேர்ச்சி பெறாத நிலுவைத் தாள்களை, ஐந்தாண்டுகள் படிப்புக் காலத்துக்குள் முடிக்க வேண்டியது வழக்கம்.
இவ்வாறு, படிப்பு ஆண்டு, ஐந்தாண்டுகள் நிறைவடைந்த நிலையில் உள்ளவர்களுக்கும், அதற்கு முந்தைய ஆண்டில் பயின்று தேர்ச்சி பெறாத நிலுவைத் தாள் வைத்திருக்கும் மாணவர்களுக்கும், தற்போது இறுதியாகப் படித்த பாடத்திட்டத்திலேயே தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், டிச., 14ம் தேதிக்குள், பெரியார் பல்கலைக்கு வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை தாங்கள் பயின்ற கல்லூரியிலேயே பெற்று, பூர்த்தி செய்து, முதல்வர் வாயிலாக அனுப்ப வேண்டும். இதற்கான கால அட்டவணை மற்றும் தேர்வு மைய விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்.

"ஸ்லெட்’ தேர்வு முடிவு எப்போது?

கல்லூரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு, விரைவில் அறிவிக்கப்படவுள்ளதால், “ஸ்லெட்’ தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும்’ என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. பல்வேறு பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், கல்லூரிகளில் பேராசிரியர் பணியில் சேர, மாநில அளவிலான தகுதித்தேர்வு (ஸ்லெட்) அல்லது தேசிய அளவிலான தகுதித்தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற வேண்டும் என, பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) விதிமுறை வகுத்துள்ளது. அதன்படி, மத்திய, மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள் மூலம் தகுதித்தேர்வு நடத்தி வருகின்றன. நடப்பு கல்வியாண்டுக்கான, “ஸ்லெட்’ தேர்வு, கோவை பாரதியார் பல்கலை மூலம் நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும், 62 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். 76 மையங்களில், அக்., 7ம் தேதி தேர்வு நடந்தது; 51 ஆயிரத்து 500 பேர் பங்கேற்று, 27 பாடப்பிரிவுகளில் தேர்வு எழுதினர். தேர்வு முடிவு, ஒரு மாதத்துக்குள் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை வெளியிடப்படவில்லை. கல்லூரி ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ள நிலையில், “ஸ்லெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பத்தை பெற முடியும். எனவே, “ஸ்லெட்’ தேர்வு முடிவை உடனடியாக வெளியிட வேண்டும் என, தேர்வெழுதியோர் வலியுறுத்தியுள்ளனர்.

தேர்வு அதிகாரி ஒருவர் கூறுகையில், “பல்கலை மாணவர் சேர்க்கை, தேர்வு போன்ற வழக்கமான பணிகளுக்கு இடையே, “ஸ்லெட்’ தேர்வு விடைத்தாள் திருத்த வேண்டியுள்ளதே, தாமதத்துக்கு காரணம். கம்ப்யூட்டர் பிரிவில் விடைத்தாள் திருத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. விரைவில், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்’ என்றார்.

பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், 6,524 பேரை, இணையதள வழியில் பணி நியமனம் செய்யும் கலந்தாய்வு, நேற்று ( 21.11.12 ) துவங்கியது.

பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், 6,524 பேரை, இணையதள வழியில் பணி நியமனம் செய்யும் கலந்தாய்வு, நேற்று துவங்கியது.கல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களில், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு, 2 சதவீத பணி வாய்ப்பு வழங்க, அரசுஉத்தரவிட்டு உள்ளது.
அதன்படி, 25 முதுகலை ஆசிரியர், வேதியியல்பட்டதாரி ஆசிரியர்கள், 14 பேர், முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு, நேற்று துவங்கியது. தொடர்ந்து, 24ம் தேதி வரை, பல்வேறு பணி நியமனக் கலந்தாய்வு நடக்கிறது.தாங்கள் பணிபுரியும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்தபடி, இணையதளம் வழியாக, கலந்தாய்வில் சம்பந்தப்பட்டவர்கள் பங்கேற்றனர்.வழக்கமாக, பணி நியமனம், பதவி உயர்வுக் கலந்தாய்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு என, எல்லாமே, சென்னையில் நடக்கும். இதற்கு, மாநிலம்முழுவதிலும் இருந்து,ஆசிரியர்கள் சென்னைக்கு வருவது வழக்கம்.பள்ளிக் கல்வி இயக்குனராக தேவராஜன் பதவியேற்றதில் இருந்து, அனைத்து கலந்தாய்வுகளும், இணையதளம் வழியாக நடந்து வருகிறது. ஏற்கனவே, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இயக்குனராக இவர் இருந்தபோது, அத்துறையில், இணையவழி கலந்தாய்வுத் திட்டத்தை அமல்படுத்தினார்.அதே நடைமுறை, தற்போது பள்ளிக் கல்வித் துறையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

2013ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

முதுகலையுடன் பி.எட்., முடித்த கல்வித்துறை பணியாளர்களை, ஆசிரியர்களாக நியமிக்கும் "ஆன் லைன் கவுன்சிலிங்’ இன்று 21.11.12 நடக்கிறது.

முதுகலையுடன் பி.எட்., முடித்த கல்வித்துறை பணியாளர்களை, ஆசிரியர்களாக நியமிக்கும் “ஆன் லைன் கவுன்சிலிங்’ இன்று நடக்கிறது. பட்டதாரி, முதுகலை பி.எட்., முடித்து, கல்வித்துறை அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு, சர்வீஸ் அடிப்படையில் 2 சதவீதம் பேர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் அரசு உத்தரவு 6 மாதத்திற்கு முன்பு அமலானது. இதன்மூலம் ஓய்வு பெற 5, 7 ஆண்டுகளே உள்ள நிலையில், சிலருக்கு பள்ளியில் பாடமெடுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில், தகுதியுள்ள முதுகலை பி.எட்., பட்டதாரிகளுக்கு சீனியாரிட்டிப்படி அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆன்லைனில் இன்று (நவ.,21) நியமன கவுன்சிலிங் நடக்கிறது. ஒருசில மாவட்டங்களில் இரு சதவீத ஒதுக்கீட்டிற்கு ஆட்கள் இல்லாத நிலையில், சிவகங்கையில் இருவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது

தகுதிதான் அடிப்படை! தினமணி தலையங்கம் 19.11.12

ஆசிரியர் தகுதித் தேர்வு அண்மையில் நடத்தப்பட்டபோது, தேர்வு எழுதியவர்களில் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அப்போது தேர்வு எழுதியவர்கள் பலரும் வினாத்தாள் கடினமாக இருந்தது என்று கருத்துத் தெரிவித்ததால், மீண்டும் ஒருமுறை தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்விலும் சுமார் 3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இரண்டு முறையும் தேர்ச்சி விகிதம் குறைவு என்பதால் இந்தத் தேர்வு முறை தவறு என்று ஆசிரியர் அமைப்புகள், கூட்டணிகள் சார்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டு, தகுதித்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.

ஆனால், அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் அவர்கள் கோரிக்கைக்கு வலு சேர்ப்பதாக இல்லை.

வினாத்தாள் கடினம் என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. 6 லட்சம் பேர் தேர்வு எழுதும்போது, வினாத்தாள் கடினமாகத்தான் இருக்க முடியும். அதற்காகத்தான் அதை “தகுதித் தேர்வு’ என்று அழைக்கிறார்கள்.

இந்த அமைப்புகள் எழுப்பும் இன்னொரு கேள்வி, ஒரு தமிழாசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர் ஏன் மற்ற பாடங்களின் கேள்விக்குப் பதில் எழுத வேண்டும், ஆங்கில ஆசிரியர் பணியேற்கப்போகிறவர் ஏன் தாவரவியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான். மேலும், பி.எட். பாடத்திட்டத்திலிருந்து அதிகக் கேள்விகள் இடம்பெறுகின்றன என்ற முணுமுணுப்பும் உண்டு. இதில் எந்தவித நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.

இவர்கள் பணியாற்றப்போவது கல்லூரியில் அல்ல, பள்ளிகளில் பணியாற்றப் போகிறவர்கள். தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் 90 சதவீதம் புறநகர்ப் பகுதிகளில் இருப்பவை. பல நடுநிலைப் பள்ளிகளிலும் மேனிலைப் பள்ளிகளிலும் ஒரே ஆசிரியர் இரண்டு பாடங்களை எடுக்க வேண்டிய தேவையும் பொறுப்பும் இருக்கிறது.

மேலும், ஒரு மாணவன் ஓர் ஆசிரியரைத் தனக்குத் தெரியாத அனைத்தும் தெரிந்தவராக மதிக்கிறார். அனைத்துப் பாடங்களிலும் ஆசிரியருக்குத் தேர்ச்சி இல்லாவிட்டாலும், அந்நிலையில் அவர் கேட்கும் கேள்விகளுக்கு, குறைந்தபட்சம் அதற்கான சரியான விடையை எங்கே தேடலாம் என்கின்ற அறிவு படைத்தவராக ஆசிரியர் அமைய வேண்டும். இதுதானே நியாயமான எதிர்பார்ப்பாக இருக்க முடியும்?

அதைக் கருதியே, பல்வேறு பாடங்களில் இருந்தும் அடிப்படைக் கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன. இதையும்கூட தவறு என்று சொல்வார்கள் என்றால், அவர்கள் கல்லூரி விரிவுரையாளர்களாகப் பணியாற்ற முயற்சி செய்யலாமே தவிர, பள்ளிகளில் பணியாற்ற வேண்டியதில்லை.

இந்த இரண்டு தகுதித் தேர்வுகளிலும் அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது என்னவென்றால், வெற்றி பெற்றிருப்போர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுதான். அதாவது, தொடர்ந்து படித்துக்கொண்டும், தனியார் பள்ளிகளில் பாடம் நடத்திக்கொண்டும் இருப்போர் மட்டுமே இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். பட்டம் மட்டும் வாங்கிக்கொண்டு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துவிட்டு, பதிவுமூப்பு அடிப்படையில் வேலை கிடைத்துவிடும் என்று எதையும் படிக்காமல் சும்மா இருந்தவர்களால் இத்தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இதுதான் மிகவும் கசப்பான உண்மை.

இந்த உண்மையை ஏற்கவும், ஆன்ம பரிசோதனை நடத்தவும் முயல வேண்டிய ஆசிரியர் அமைப்புகள், கூட்டணிகள், அதற்கு மாறாக பணம் கொடுத்துதான் இவர்கள் தேர்ச்சி பெற்றார்கள் என்று சொல்வது தங்களைத் தாங்களே தரம் தாழ்த்திக் கொள்வதற்கு ஒப்பாகும். அறிவால் தேர்ச்சி பெற்றவர்களை வெறும் காழ்ப்புணர்ச்சியால் இதைவிடக் கொச்சைப்படுத்தும் செயல் வேறு ஏதும் இருக்க முடியாது.

தகுதித் தேர்வுகள் மிகவும் இன்றியமையாதது என்பதும், குறிப்பாக ஆசிரியர் பணிக்கு அறிவுத்திறன் சோதனை அவசியமானது என்பதும் மேலும்மேலும் உறுதிப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆகவே, தமிழக அரசு இத்தகைய அடிப்படையற்ற விமர்சனங்களுக்காக அச்சப்படாமல், தகுதித் தேர்வைத் தொடர்ந்து முறைப்படி, நடத்தவும், அதில் தேர்ச்சி பெறுவோரை மட்டுமே பணியமர்த்தவும் செய்தல் வேண்டும். அதுமட்டுமே அடுத்த தலைமுறைக்கு நல்ல ஆசிரியர்களை வழங்கும் செயலாக இருக்கும்.

மேலும், தற்போதைய ஆசிரியர்கள் எந்த அளவுக்குத் தங்கள் பாடங்களில் ஆழமும் விரிவும் கொண்ட அறிவுப்புலம் பெற்றிருக்கிறார்கள் என்பது இன்றியமையாத கேள்வி. ஒருமுறை பணியில் சேர்ந்துவிட்டால், அந்த ஆசிரியருக்குச் சம்பளம் மட்டுமே வழங்க வேண்டும் என்பது எந்த நாட்டிலும் இல்லாத ஒரு நடைமுறை. ஆகவே, ஆசிரியர்கள் அனைவருக்கும், அவர்கள் பணியில் சேர்ந்த பிறகு, ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை, சுய ஆய்வுத் தேர்வு ஒன்றை நடத்துவது அவசியமாகிறது.

காலத்துக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொண்டிருக்கிறார்களா, இவர்களுக்குத் தாங்கள் நடத்தும் பாடப்புத்தகத்தில் உள்ள விஷயங்களாகிலும் முழுமையாகத் தெரிந்திருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள இத்தகைய சுய ஆய்வுத் தேர்வு அவசியம். அந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர்களாகத் தொடர அனுமதிக்க வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பது உறுதி. ஆனாலும், ஓர் ஆசிரியர் காலத்தால் பின்தங்கிவிட்டு, ஒரு மாணவனுக்கு எப்படி அறிவு புகட்ட முடியும்? தகுதியற்ற ஒருவருக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வழங்கிக் கொண்டிருப்பது எந்த வகையில் நியாயம்?

ஒரு சாதாரண தொழிலாளிக்கும்கூட புதிய இயந்திரங்களில் பயிற்சி அளித்து அவரைத் தரப்படுத்துகிறார்கள். மருத்துவர்கள், பொறியாளர்கள் தங்கள் துறையின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் புத்தாக்கப் பயிற்சிகள் மூலம் வளர்த்துக்கொள்கிறார்கள். ஓர் ஆசிரியர் காலத்துக்கேற்ற அறிவுப்புலம் கொண்டிருக்கிறாரா என்பதை அறிய சுயஆய்வுத் தேர்வு நடத்துவதில் என்ன தவறு?

மாணவர் நலன் கெடாமல் பாதுகாப்போம்: அண்ணாமலை பல்கலை பதிவாளர் உறுதி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்றைக்கும் மாணவர் நலனில் அக்கறை காட்டி வருகிறது. கூடிய விரைவில் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டு, மாணவர்கள் நலன் கெடாமல் பாதுகாப்போம் என்று உறுதி அளிக்கிறோம் என பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது: கடந்த நவ.7-ம் தேதி பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்ட நிதிசிக்கலை பற்றி துணைவேந்தர், அனைத்து ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசினார். 6-வது ஊதியக்கமிஷன் பரிந்துரைப்படியும், ஒரு நபர் குழு பரிந்துரைப்படியும் மற்றும் 32 மாதங்களுக்கு உள்ள நிலுவைத் தொகையும் 2009லிருந்து மூன்று வருடங்களில் அளிக்கப்பட்டுள்ளது. 2009ல் இருந்து ஒவ்வொரு ஆசிரிய, ஊழியரின் சம்பளமும் 35 விழுக்காடு உயர்ந்துள்ளது. மேலும் 2009ல் அளித்து வந்த 23 விழுக்காடு அகவிலைப்படி தற்போது 72 விழுக்காடாக உயர்ந்துள்ளது. 2009க்கும் பிறக ஒய்வு பெறுபவர்களுக்கு புதிய விகிதத்தில் கிராஜூட்டி, கம்யூட்டேஷன், என்கேஸ்மெண்ட் ஆஃப் யேர்ன் லீவ் அளிக்கும் போது, அது முன்பை விட 3.5 மடங்கு அதிகமாகி விட்டது.

அதுவுமல்லாமல் 2006 லிருந்து 2009-க்குள் ஓய்வு பெற்றவர்களுக்கும் விடுபட்ட நிலுவைத்தொகை ஏறத்தாழ 3 மடங்கு சுமார் 151 நபர்களுக்கு கொடுக்க வேண்டியதாயிற்று, ஓய்வூதியமும் 30 விழுக்காடு அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் சம்பளச் செலவினங்களை அளவிட முடியாத அளவிற்கு உயர்ந்து விட்டது. அதே சமயத்தில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தும், கல்வி மற்றும் மற்ற கட்டணங்களை உயர்த்திய போது செலவினங்கள் உயர்ந்த அளவிற்கு அவை உயரவில்லை. இந்த நிலைமையை சீர் செய்வதற்கு சிறுது காலத்திற்கு தற்காலிக சம்பள குறைப்பும், விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆட்குறைப்பும் செய்யலாமா? என்று ஆலோசனை கேட்டதற்கு, ஆட்குறைப்போ, சம்பள குறைப்போ ஒத்துக்கொள்ள முடியாது என கூறிவிட்டனர். எனவே அவர்களது கருத்துகளை இன்று நடைபெறும் ஆட்சி மன்றக்கூட்டத்தில் வைத்து முடிவு எடுக்கப்படும் என துணைவேந்தரால் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் ஆட்குறைப்போ, ஊதியக்குறைப்போ இல்லை என எழுத்து மூலம் நவ.,14க்குள் உத்தரவாதம் அளிக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என ஆசிரியர், ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மூலம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆட்குறைப்பு இருக்காது என்று துணைவேந்தரே உத்தரவாதம் அளித்தும், சம்பளம் பற்றி ஆட்சிமன்ற குழுவில் தான் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பருவகால வகுப்புகள் முடிந்து, தீபாவளி விடுமுறைக்கு சென்றுள்ள மாணவர்கள் தேர்விற்கு வரும் போது (சிலருக்கு study holidays, சிலருக்கு செய்முறை தேர்வு, நவ.,19லிருந்து எழுத்து தேர்வு)அவர்களுக்கு இடையூறுகள் ஏற்படக்கூடாது எனக்கருதி அவர்களுடைய தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே அவர்களுடைய வகுப்புகள் எதுவும் பாதிக்கப்பட்வில்லை.

மேலும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற பருவகால விடுமுறை எல்லா வருடமும் போல நவ.,14 லிருந்து நவ.,13ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த போராட்டம் அறிவிக்கப்படவில்லை என்றால் கூட அவர்கள் பருவகால விடுமுறையில் சென்று இருப்பார்கள் என பதிவாளர் ஆர்.மீனாட்சி்சுந்தரம் தெரிவித்துள்ளார்.

D.TEd பட்டைய படிப்பு பனிரெண்டாம் வகுப்புக்கு இணையானது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அறிவித்துள்ளது.

D.TEd பட்டைய படிப்பு பனிரெண்டாம் வகுப்புக்கு இணையானது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அறிவித்துள்ளது. இரண்டு வருட ஆசிரியர் பயிற்சியான D.TEd பட்டைய படிப்பானது +2 படிப்புக்கு இணையாகவே கருதப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

பள்ளிகளில் ஆலோசனை பெட்டி

பள்ளிகளில் ஆலோசனை பெட்டி வைக்க பள்ளிகல்வி இயக்குனர் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.மாணவ – மாணவிகள் தங்களின் குறை / நிறைகளையும் மற்றும் அவர்களுக்கு பள்ளிகளில் ஏற்படும் பிரச்னைகளையும் தெரிவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறையை அனைத்து வகை மாணவ, மாணவியர்கள் தவறாது பின்பற்ற வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குரூப்-2 தேர்வு நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான கவுன்சிலிங் வியாழக்கிழமை தொடங்குகிறது

குரூப்-2 தேர்வில் நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான பணி ஒதுக்கீட்டு கவுன்சிலிங் வியாழக்கிழமை தொடங்குகிறது. இதற்கு அழைக்கப்பட்டோரின் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் எம்.விஜயகுமார் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

குருப்-2 தேர்வில் நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான கவுன்சிலிங்கிற்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவுஎண்கள் அடங்கிய பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (ஷ்ஷ்ஷ்.tஸீஜீsநீ.ரீஷீஸ்.வீஸீ) வெளியிடப்பட்டு இருக்கிறது.கவுன்சிலிங் நாளை (22&ந் தேதி) தொடங்கி டிசம்பர் மாதம் 1-ந் தேதி வரை (நவம்பர் 24, 25 நீங்கலாக) நடைபெறும். கவுன்சிலிங் நடைபெறும் நாள், நேரம் ஆகிய விவரங்கள் அடங்கிய அழைப்புக்கடிதத்தை மேற்கண்ட இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்துகொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

3,220 காலி பணி இடங்களை நிரப்பும் பொருட்டு 4,838 விண்ணப்பதாரர்கள் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். இந்த கவுன்சிலிங் மூலம் 3,220 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். எனவே, கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்ட அனைவரும் மேற்படி பணி இடங்களுக்கு தெரிவுபெறுவதற்கான எவ்வித உரிமையையும் கோர இயலாது.கவுன்சிலிங்கிற்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சென்னை பாரிமுனை பிரேசர் பால சாலையில் (அரசு பல் மருத்துவக்கல்லூரி அருகில்) அமைந்துள்ள டி.என்.பி.எஸ்.சி. புதிய அலுவலகத்தில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு வருகைதர தவறும் பட்சத்தில் பின்னர் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படாது. அதோடு அவர்கள் தங்கள் தரவரிசை முன்னுரிமையையும் இழக்க நேரிடும்.இவ்வாறு விஜயகுமார் கூறியுள்ளார்.

D.E.O to C.E.O Promotion | தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர் பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. முதன்மை கல்வி அலுவலர்கள் 2 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். செய்யார் மாவட்ட கல்வி அலுவலர் சி.சண்முகம் பதவி உயர்வு பெற்று, ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலராக (SSA) நியமிக்கப்படுகிறார். ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் பொ.அருண்பிரசாத், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமனம் செய்யப்படுகிறார்.

2 முதன்மை கல்வி அதிகாரிகள் இடமாற்றம்: 7 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அரசு உத்தரவு

தமிழகத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் 7 பேருக்கு முதன்மை கல்வி அதிகாரி பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. முதன்மை கல்வி அதிகாரிகள் 2 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

திருவள்ளூர் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி கே.தனபாலன் பதவி உயர்வு பெற்று, சென்னையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை துணை இயக்குனராக நியமிக்கப்படுகிறார். நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி மாவட்ட கல்வி அதிகாரி பி.முருகன், திண்டுக்கல் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக (அனைவருக்கும் கல்வி திட்டம்) பணிஅமர்த்தப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் மாவட்ட கல்வி அதிகாரி சி.சண்முகம் பதவி உயர்வுபெற்று, ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக (அனைவருக்கும் கல்வி திட்டம்) நியமிக்கப்படுகிறார். ஈரோடு மாவட்ட கல்வி அதிகாரி பொ.அருண்பிரசாத், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமனம் செய்யப்படுகிறார்.

தேனி மாவட்டம் உசிலம்பட்டி மாவட்ட கல்வி அதிகாரி ஜே.சாந்தமூர்த்தி, கரூர் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி (அனைவருக்கும் கல்வி திட்டம்) ஆகிறார். திண்டுக்கல் மாவட்டம் பழனி மாவட்ட கல்வி அதிகாரி வி.விஜயன் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக (அனைவருக்கும் கல்வி திட்டம்) நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி ஆர்.மகாலிங்கம் பதவி உயர்வு பெற்று, வேலூர் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.

திண்டுக்கல் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி (அனைவருக்கும் கல்வி திட்டம்) பி.சுகுமார் தேவதாஸ் இடமாற்றம் செய்யப்பட்டு, அதே மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி (அனைவருக்கும் கல்வி திட்டம்) ஆர்.சிவகாமசுந்தரி மாற்றப்பட்டு, அதே மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரியாக பணிஅமர்த்தப்படுகிறார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஓவியம், தையற்கலை, நடனம் மற்றும் இசை பாடங்களுக்கான அரசு தொழிற்கல்வி தேர்வு ஹால் டிக்கெட், நவம்பர் 20 முதல் வழங்கப்படுகிறது.

அரசு தொழிற்கல்வி தேர்வுக்கான ஹால் டிக்கெட், நவம்பர் 20 முதல் வழங்கப்படுகிறது.

அரசு தேர்வு துறையால், ஓவியம், தையற்கலை, நடனம் மற்றும் இசை பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நடனம், 21ம் தேதியும், ஓவியம், 22ம் தேதி முதல், டிச., 5ம் தேதி வரையும், தையற்கலை, டிச., 6ம் தேதி முதல், 12ம் தேதி வரையும், இந்திய இசை கீழ்நிலை, மேல் நிலை, டிச., 7ம் தேதியும் நடக்கின்றன.இத்தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவு சீட்டை, நாளை முதல், அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டு உள்ள தேர்வு மையங்களில் பெற்றுகொள்ளலாம். தேர்வு மையங்கள் விவரம் அனைத்து முதன்மை கல்வி, மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் அரசு தேர்வுகள் மண்டல அலுவலகங்களிலும் தெரிந்து கொள்ளலாம்.

கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,), துணை ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள, 24 இடங்களை நிரப்புவதற்கான, குரூப்-1 போட்டித் தேர்வு, வரும் டிசம்பர் மாதம் 30ம் தேதி நடைபெற உள்ளது.தகுதியுள்ள பட்டதாரிகள், அரசு பணியாளர் தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in. என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பிற்கு பிறகு நேரடியாக டி.டி.எட் படித்து இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பின் நகல் கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் டூ படிக்கவில்லை என்பதை காரணம் காட்டி இந்த கல்வியாண்டில் இவர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 18ம் தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளது.