Category Archives: education

தமிழகத்தில் 15ம் தேதி நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன .

தமிழகத்தில் 15ம் தேதி நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன . மாணவர்களுக்கு எத்தகைய பாடத்திட்டங்களை அமல்படுத்துவது என்பது குறித்து, அரசு பின்னர் அறிவிக்கும்

வேலை தரும் கல்விக்குத் தயாராகுங்கள்!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு நாள்கள் பல கடந்து விட்டன. ஒவ்வொரு மாணவரும், மாணவியும் அவர்களது பெற்றோர்களும் கட்-ஆஃப் மதிப்பெண்களுடன் பொறியியல் கல்லூரிகளை மொய்த்து வரும் காலம் இது. வீடுகள் தோறும் பெற்றோர்கள், நண்பர்கள் என ஆளாளுக்கு இலவச ஆலோசனைகளை வழங்கி பிளஸ் 2 தேர்வு பெற்ற மாணவர்களை ஒரு வழி ஆக்கிவிடும் காலகட்டம் இது.

பொதுவாகவே, மேல்படிப்புக்கு மட்டுமல்ல, பிள்ளைகள் எல்.கே.ஜி. சேர்ந்ததில் இருந்து இந்தப் படிப்பு குறித்த ஆலோசனைகள், அவன் அல்லது அவள் ஒரு வேலைக்குச் செல்வது வரை தொடர்ந்து நிழல் போல் வருவது என்பது வழக்கமான நிகழ்வாகிவிட்டது.

பள்ளிகளில் சேர்க்கும் போதே பொறியாளர், மருத்துவர் ஆக வேண்டும் என்கிற தனது ஆசையை தங்கள் பிள்ளைகளின் தோளில் ஏற்றி அவர்களின் தோள் வலியைக் கூட பொருள்படுத்தாது சுமக்கச் சொல்லி வருவதே பல பெற்றோர்களின் செயலாக இருந்து வருகிறது.

பொறியியல் கல்லூரியில் சேர்ந்த பக்கத்து வீட்டு மாணவரைக் காட்டி, இது போல் படிக்க வேண்டும். அப்போதுதான் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று அடிக்கடி கூறுவதுதான் பல குடும்பங்களிலும் நடக்கும் நிகழ்ச்சி. இந்த வார்த்தை மாணவர்களின் மனதில் பதிவாகி எப்படியாவது பொறியியல் கல்லூரியில் சேர்ந்து விட வேண்டும் என்ற துடிப்பையும் உருவாக்கி விடுகிறது.

இதனால் பொறியியல், மருத்துவம் போன்றவைகளைத் தவிர்த்த மற்ற படிப்புகள் குறித்து மாணவர்கள் மத்தியில் ஒரு தெளிவான பார்வை இல்லாமலேயே போய் விடுகிறது.

இதனைத் தவிர்த்து எத்தனையோ படிப்புகள், அதுவும் படித்தவுடனே வேலை வாய்ப்பு வழங்கும் படிப்புகள், பல்வேறு பல்கலைக்கழகங்கள் நடத்தும் பட்டயப் படிப்புகள் என எண்ணற்ற படிப்புகள் இன்றைய கல்விச் சந்தையில் குவிந்து கிடக்கின்றன.

அப்படி இருந்தாலும் அந்தப் படிப்புகள் என்னவோ மாணவர்கள் மத்தியில் பொறியியல் படிப்பு போன்று கிராக்கியுடன் இருப்பதில்லை என்பதுதான் வேதனை.

தெரிந்த பையன் ஒருவன் பொறியியல் படித்து இன்று கைநிறைய சம்பளம் வாங்குகிறான் என்ற பிரமிப்புத்தான் பெற்றோர்கள் மத்தியில் நிலவுகிறதே தவிர எண்ணிக்கையில் அடங்காத பொறியியல் பட்டம்பெற்ற மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சொற்பமான சம்பளத்தில் வேலை செய்வதைக் கவனத்தில் கொள்வதில்லை.

இப்படி குடும்பமும்,சொந்தமும், அக்கம்பக்கமும் ஒவ்வொரு மாணவரையும் பொறியியல் படிப்புக்காகத் தயார்படுத்தி இருக்கின்றனர். இந் நிலையில் பிளஸ் 2 தேர்வில் சரியான மதிப்பெண் எடுக்க முடியாமல் குறைவான கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற நிலையிலும் கூட வேறு வழியின்றி மாணவர்களும், பெற்றோர்களும் ஏதாவது ஒரு கல்லூரியில் அவர்கள் கேட்கும் கட்டணத்தைச் செலுத்திப் படிக்கவைக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகின்றனர்.

அங்கு அவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்குமா என்பதைக்கூட யோசிப்பதில்லை. தன் பிள்ளை என்ஜினீயரிங் படிக்கப் போகிறான் என்பது மட்டுமே அவர்களுக்குப் பெருமைக்குரிய விஷயம். இது ஒரு சமூக அந்தஸ்தாகி விட்டது.

குறைவான மதிப்பெண்கள் பெற்று ஏதோ ஒரு கல்லூரியில் பொறியியல் படிப்பதை விட, படிக்கும் திறனுக்கு ஏற்ப வேலை வாய்ப்புக்குரிய கல்வியைக் கற்க பெற்றோர்களும் விரும்புவதில்லை. மாணவர்களும் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் குறைந்த மதிப்பெண் பெற்ற நிலையிலும், பணத்தைச் செலவழித்து பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களால், பொறியியல் கல்லூரிகளிலும் தனது திறனை வெளிப்படுத்த இயலாமல் போகிறது.

இதனால் ஏராளமானவர்கள் தங்கள் கல்வியைத் தொலைத்த சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன.

இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்துள்ள விவரங்கள் ஏராளம். உலகியல் நடப்புகளை உள்ளங்கையில் வைத்திருக்கும் திறன் பெற்றவர்கள் இன்றைய மாணவர்கள்.

அவர்களைப் பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்கள் அவர்களுக்கு வழிகாட்டுவதில் தவறில்லை. ஆனால், அவர்களின் எண்ணங்களை மாணவர்களின் மனதில் திணிப்பதுதான் பிரச்னையாகி வருகிறது. இதன் காரணமாகத் தங்களின் சிந்திக்கும் ஆற்றலை இழக்க வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டு வருகின்றனர்.

மாணவர்களுக்கு உதவிசெய்து, அவர்களுக்கு வழிகாட்ட எத்தனையோ தொலைக்காட்சிகள் நல்ல பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. நாளிதழ்கள் பல கல்லூரிகளின் பாடப்பிரிவுகளைத் தொகுத்து வழங்கி வருகின்றன. எத்தனையோ கல்வித்துறை வல்லுநர்கள் நாள்தோறும் ஊடகங்கள் வாயிலாக மாணவர்களின் கேள்விகளுக்கு விடையளித்து வருகின்றனர்.

எனவே, தேர்வு முடிவுகளை அறிந்துள்ள நிலையில், அடுத்த நிலைக்குச் செல்ல மாணவர்களைப் பெற்றோர்கள் தயார்படுத்தினாலே போதும். மாணவர்களின் சிந்தனையை மழுங்கடிக்காமல் இருந்தாலே,அவர்களின் ஆற்றல் தானாகவே வெளிப்படும். பெற்றோர்களே பிள்ளைகளைச் சிந்திக்க விடுங்கள்.

>சமச்சீர் கல்வி: 10-ம் வகுப்பு புத்தக "செட்’ ரூ.350

>

 1, 2 வகுப்புகள் – தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழல் இயல் ஆகிய 4 புத்தகங்கள் அடங்கிய செட் விலை ரூ.200 (ஒரு புத்தகத்தின் சில்லறை விலை ரூ.60).


 3,4,5,6 வகுப்புகள் – தமிழ் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 புத்தகங்கள் அடங்கிய செட் விலை ரூ.250 (ஒரு புத்தகத்தின் சில்லறை விலை ரூ.60)


 7,8 வகுப்புகள் – 5 புத்தகங்கள் அடங்கிய செட் விலை ரூ.300 (ஒரு புத்தகத்தின் சில்லறை விலை ரூ.65).


 9,10 வகுப்புகள் – 5 புத்தகங்கள் அடங்கிய செட் விலை ரூ.350 (ஒரு புத்தகத்தின் சில்லறை விலை ரூ.75)

>வாசிப்புப் பழக்கத்தின் முக்கியத்துவம்

>

எழுத்தறிவு என்பது பள்ளிக் கல்வியின் ஆதாரமாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் எழுத்தறிவு என்பது முதியோர் கல்வி யுடன் மட்டுமே பேசப்படும் பொருளாகிவிட் டது. உலகில் உள்ள எழுத்தறிவற்ற மக்கட் தொகையில் பெரும் பகுதியினர் இந்தியா வைச் சேர்ந்தவர்கள் என்பதால் இதில் ஒன் றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏன் இந்தி யாவில் தொடர்ந்து எழுத்தறிவற்றவர்களின் எண்ணிக்கை நீடிக்கிறது? இதற்குக் கார ணம் இந்தியாவில் ஆரம்பக் கல்வி கற்ற பின் னரும் குழந்தைகளின் எழுத்தறிவின்மை தொடருவதுதான். குழந்தைகள் எட்டாண்டு கால ஆரம்பக் கல்வியை முடிக்காமலேயே வெளிவருவதாலும், ஆரம்பக் கல்வியை விட்டு வெளி வந்த பின்னர் படிக்கும் பழக் கத்தை விட்டுவிடுவதாலும் மீண்டும் எழுத் தறிவின்மை நிலைக்கே சென்றுவிடுகின்ற னர். எழுத்தறிவு பெற்ற குழந்தைகளிடமும் தொடர்ந்து படிக்கும் பழக்கத்தையும், ஆர்வத் தையும் பள்ளிக்கூடம் அவர்களுக்கு கற்றுக் கொடுக்காத குறையுள்ளது. படிக்கும் பழக்கம் தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ளவும், விழிப்புணர்வுடன் செயல்படவும் உதவிடும் என்பதை உணர்பவர்கள் மிகக் குறைவு.
பள்ளிக் குழந்தைகளிடம் செய்யப்பட்ட ஆய்வில் அவர்களின் படிக்கும் திறன் மிகவும் குன்றியிருப்பதும், அவர்களுக்கு அதற்கான பயிற்சியே கொடுக்கப்படுவதில்லை என் பதும் வெளிவந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதைச் சரி செய்வதற்கு பள்ளிக் கூட அளவில் தக்க நடவடிக்கை எடுக்க வில்லையெனில், புதிதாக நிறைவேற்றப்பட் டுள்ள கல்வி பெறும் உரிமைச் சட்டமே செயலற்றுப் போய்விடும். கற்றுக் கொடுக்கும் முறையில் மிகப் பெரிய மாற்றம் வரவேண்டும்.

Read more »

>கல்வியில் பின் தங்கிய வட மாவட்டங்களுக்கு ரூ. 132 கோடி ஒதுக்கீடு

>

கல்வியில் பின் தங்கிய தர்மபுரி, கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மத்திய அரசு திட்டத்தின் கீழ், தலா மூன்று கோடி ரூபாய் செலவில் 18 மாதிரிப் பள்ளிகள் கட்டும் பணி துவங்கியுள்ளது. இரண்டாவது கட்டத்தின் கீழ், 78 கோடி ரூபாய் செலவில், மேலும் 26 மாதிரிப் பள்ளிகளை கட்டவும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசின் ஆர்.எம்.எஸ்.ஏ., (ராஷ்ட்ரிய மத்திய மிக் சிக்ஷா அபியான்) திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், மாதிரிப் பள்ளிகள் அமைப்பது முக்கியத் திட்டமாக உள்ளது.
கல்வியில் பின் தங்கியுள்ள தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், ஈரோடு, கரூர், நாமக்கல், சிவகங்கை, திருப்பூர் ஆகிய 10 மாவட்டங்களில், தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளுடன், 18 மாதிரிப் பள்ளிகளை துவக்கிட, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ஒவ்வொரு பள்ளியும் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில், தற்காலிகமாக அருகில் உள்ள அரசு பள்ளிகளில், ஆற முதல் ஓன்பது வரையிலான வகுப்புகளும், பிளஸ் 1 வகுப்பும் நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்த கல்வியாண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளும் துவக்கப்படும். முழுக்க, முழுக்க ஆங்கில வழிக் கல்வியில் பள்ளியை நடத்திட மத்திய அரசு உத்தரவிட்டிருந்தாலும், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை மட்டும் ஆங்கில வழியுடன் தமிழ் வழிக் கல்வியும் நடத்தப்பட்டு வருகின்றன.

Read more »

>நேர் வழியில் கல்வி நெறி

>

கடந்த 1950ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின், 45வது பிரிவில் இடம் பெற்று, 10 ஆண்டுகள் கெடு விதிக்கப்பட்டிருந்தும், நம் நாட்டுக் குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை ஏன் வழங்க இயலவில்லை? அந்த சட்டம் சொன்னது இது தான்: "14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க, இந்த அரசியலமைப்புச் சட்டம் துவங்கிய, 10 ஆண்டுகளுக்குள் அரசு வழிவகை செய்ய வேண்டும்…' இது அமலுக்கு வந்ததா?
இப்போது புதிதாக அரசியலமைப்புச் சட்டத்தின், 86வது திருத்தமாக, 21ஏ பிரிவில் கொண்டுவரப்பட்டு, ஏப்., 1, 2010 முதல் அமலாக்கப் பட்டுள்ள உத்தரவுகளின் சாராம்சம் இதோ:
* ஒரு கல்வி ஆண்டின் முதல் நாளிலிருந்து, ஆறு மாதங்கள் வரை, புதிய மாணவர் சேர்க்கை அனுமதிக்க வேண்டும்.
* அரசு அமைப்புகள் வழங்கும் பிறப்புச் சான்றிதழை பள்ளிகள் வற்புறுத்தக் கூடாது. அது இல்லாதபோது, வயது குறித்து பெற்றோர் அளிக்கும் எழுத்துப்பூர்வமான உறுதிமொழியே போதுமானது.
* எட்டாம் வகுப்பு வரை, எந்த ஒரு குழந்தையையும் பெயிலாக்கக் கூடாது. இவை நிறைவேற்றுவதற்குக் கடினமானதாகவும், கல்வி என்ற ஒரு விஷயத்தையே புரட்டிப் போடும் விதத்திலும் அமைந்துள்ள சட்டங்கள். இது, வரவேற்கக் கூடியதாக, ஆனால் வருமா என்ற ஏக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ள, திருத்தப்பட்ட பிற விதிகள் வருமாறு:

Read more »

>Decision on separate directorate for higher secondary education soon

>School Education Minister Thangam Thennarasu at a review meeting with Chief Educational Officers in Pudukottai district on Thursday.A decision on creation of a separate directorate for higher secondary education will be taken based on the suggestions from the one-man commission headed by a former Director of School Education, School Education Minister Thangam Thennarasu said on Thursday.
The report is expected soon, the Minister told The Hindu. The commission is in the process of finalising the report. While the demand was long pending, there were certain “ifs and buts,” he said responding to a question whether the demand was reasonable.
To a query on the dismay expressed by self-financing schools over not being given time to respond to the State government’s plan of action to implement the Right to Education Act, the Minister said implementation of the Act was a lengthy process.
A State Child Rights Protection Council would be formed. It would be followed by formation of various committees, including one to protect the educational rights of children.
Accompanied by Director of School Education P. Perumalsamy, the Minister earlier chaired a zonal-level review meeting to assess the performance of Chief Educational Officers and District Educational Officers of six districts.

>படிப்பது எப்படி?

>

படிப்பது என்பது மூன்று வகையான செயல்களை உள்ளடக்கியது.

1) கூர்ந்து கவனித்தல் (Observation)
2)தொடர்பு படுத்துதல் (Correlation)
3) செயல்படுத்தல் (Application)
கூர்ந்து கவனித்தல்:
கூர்ந்து கவனித்தல் என்பது நாம் ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது அது எதைப்பற்றிக் கூறுகிறது. எவ்வாறு கூறுகிறது என்பதைக் கவனத்துடன் படிப்பதாகும்.
தொடர்பு படுத்துதல்:
அவ்வாறு நாம் கூர்ந்து கவனிக்கும் புது விஷயங்களை ஏற்கெனவே நமக்கு நன்கு தெரிந்த ஒரு சிலவற்றோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது நம் நினைவிலிருக்க உதவுகிறது.
செயல்படுத்தல்:
நாம் புதிதாகக் கற்றவற்றைத் தகுந்த சூழ்நிலைகள் வரும்போது பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, நாம் புதிதாக ஒரு செய்யுளைக் கற்றோமென்றால், அதுபோன்ற நமக்குத் தெரிந்த பாடலுடன் தொடர்பு செய்து கொள்வதோடு மட்டுமல்லாமல், பேச்சுப் போட்டி, கடிதங்கள் போன்றவற்றில் நாம் கற்ற அந்த செய்யுள்பாடலைப் பயன்படுத்த வேண்டும். இது கற்றதை மறந்துவிடாமல் இருக்க உதவுகிறது.
கற்றல் செயற்பாங்கு: (Learning Process)
கவனத்தோடு கேட்பது அல்லது படிப்பது: என்ன பாடம் – அதிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பது தெளிவாகத் தெரிந்தால் மிக எளிதாகக் கல்வி கற்கலாம்.
குறிப்பு எடுக்க வேண்டும்:
ஆசிரியர் பாடங்களைக் கற்றுத்தரும்போதும், படிக்கும்போதும் குறிப்பு எடுக்க வேண்டும். குறிப்பெடுத்த பின் என்ன கற்றோம் என்பதை நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும்.
புதிதாகக் கற்றவற்றை அடிக்கடி சொந்த வார்த்தைகளில் சொல்லிப் பார்க்க வேண்டும். புதிதாகக் கற்றவற்றைத் தகுந்த சூழ்நிலைகள் கிடைக்கும்போதெல்லாம் நடைமுறைப்படுத்தல் அல்லது செயல்படுத்தல் வேண்டும்.
எவ்வாறு படிப்பது?:
தலைப்புகளைப் படித்துப் புரிந்துகொண்டு அதனைக் கேள்வியாக மாற்றுவதன் மூலம் நாம் என்ன படிக்கப் போகிறோம் என்பது நமக்கு நன்கு புரியும்.
முக்கியத் தலைப்புக்குக் கீழ் உள்ள சிறிய தலைப்புகளையும், எடுத்துக்காட்டுகளையும் வரைபடங்களையும் ஆராய்ந்து அறிவதன் மூலம் நாம் படிக்கும் புத்தகம், பாடம் நமக்குக் கூறும் முக்கியக் கருத்து என்ன என்பது தெரியும்.
ஒவ்வொரு தலைப்புக்குக் கீழ் உள்ள முதல் பத்தியும், பாடத்தின் பின்பகுதியில் உள்ள சுருக்கமான தொகுப்புகளும் மற்றும் வினாக்களை நன்கு படித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்தபின், நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்பதை நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும். ஒரு தாளில் நீங்கள் தெரிந்து கொண்ட அனைத்தையும் எழுதிப் பார்க்க வேண்டும்.

Read more »

>Seven Types of Learning Styles

>

How many ways are there to learn about a subject? According to the latest findings by several leading psychologists, there are seven specific types of learning styles. This means that in order to maximize learning advantages, you must define the type of learner that you have, and cater the lesson to that particular learning style. For example, if your child is primarily a linguistic learner, you could incorporate several novels into your curriculum. You could encourage short stories to explain scientific developments, or allow the student to rewrite a difficult math problem into a story problem. If he/she is primarily logical, you will want to emphasize charts, tables, and diagrams. Venn diagrams work well with a logical learner
Read each description below to determine which style best describes your student. Remember that it is possible to have more than one style of learning, particularly in the intrapersonal and interpersonal categories (numbers six and seven), which have traditionally been interpreted as personality types.
1. Linguistic:
This type of learner loves to read, write, and tell stories. They tend to memorize places, dates, names, and trivia very easily, and are always mesmerizing you with their incredible tales. They have a remarkable ability to repeat back everything you have ever told them, word for word. Encourage their creativity, and do your best to distinguish between the truth and exaggeration (it is all well intended). These students learn best by saying, hearing, and seeing words. Ask them to write down a word or a phrase, and it is forever locked into their memory. Encourage them to participate in spelling bees and creative writing courses. You could have another Shakespeare on your hands

Read more »

செஞ்சுருள் சங்கம் சார்பில் உலக எய்ட்ஸ் தின விழா

 

>சரிநிகர் தருமா சமத்துவ கல்வி

>

இதோ அதோ என்று போக்குக் காட்டிக் கொண்டிருந்த சமச்சீர் கல்வியை, ஒருவழியாக, களத்தில் இறக்கியுள்ளது தமிழக அரசு; பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.ஆனால், சமச்சீர் கல்வி என்ற பெயரில் அனைவருக்கும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வந்தால் மட்டும் அரசு பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக வளர்ந்து விட முடியுமா?
ஆசிரியர் தரம், பள்ளியின் தரத்தை மேம்படுத்தாமல், பாடத்திட்டத்தில் மட்டும் மாற்றத்தை கொண்டு வருவது, மரத்தின் ஆணிவேர் அழுகிக் கிடக்கும் போது, அதன் கிளைகளுக்கு மட்டும் மருந்தடிக்கும் வெளிப்பூச்சு வேலையல்லவா!தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்பிற்கு கூட, டிகிரி படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கின்றனர். ஆனால், அரசு பள்ளிகளில்… எட்டாம் வகுப்பு நடத்துவதற்கான தகுதியே, பிளஸ் 2 முடித்து, செகண்டரி கிரேடு ஆசிரியர் பயிற்சி பெறுவது தான்!உதாரணத்திற்கு, பட்டப் படிப்பில் வேதியியலை முக்கியப் பாடமாக எடுத்து படித்த ஆசிரியர், தனியார் பள்ளியில், 8ம் வகுப்பு மாணவனுக்கு, வேதியியல் பாடம் நடத்திக் கொண்டிருப்பார். அதே பாடத்திட்டத்தை, அரசு பள்ளி ஆசிரியர் நடத்தும் போது, அதன் தரத்தைப் பற்றி சொல்லிப் புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்நிலை இருப்பின், சமச்சீர் கல்வி என்பது கண்துடைப்பாகவே இருக்கும்.
ஆக, அரசு பள்ளி மாணவன் வழக்கம் போல, அரசு பள்ளி மாணவனாகவே இருப்பான்; தனியார் பள்ளி மாணவனும் அப்படியே! ஆனால், அதற்கு பெயர் மட்டும் சமச்சீர் கல்வி.ஆசிரியர் பணிக்கு, வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அப்படி வருபவர்கள், 40 வயதை கடந்தவர்கள் என்பதோடு, அவர்களில் பெரும்பாலானோர், வேறு வேறு பணிகளிலும், சுயதொழில் செய்து கொண்டும், வீட்டிலும் இருந்துவிட்டு, இப்பணிக்கு வருகின்றனர். இதனால், தற்போதுள்ள சூழலுக்கேற்ப தங்களை தயார்படுத்திக் கொள்வதில், பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். நிலைமை இப்படியிருக்க, இவர்களிடம் கற்கும் மாணவர்கள் நிலை?அடுத்து, ஓராசிரியர், ஈராசியர் மட்டும் கொண்டு செயல்படும் பள்ளிகள்! இப்படிப்பட்ட பள்ளிகளில், அனைத்து வகுப்புகளுக்கும், அனைத்து பாடத்தையும் ஒரே ஆசிரியர் தான் நடத்துகிறார். அனைத்து வகுப்புகளையும் ஒரே ஆசிரியர் எடுக்கும் போது, அங்கு படிக்கும் மாணவர்களின் நிலையை சொல்லிப் புரிய வைக்கத் தேவையில்லை. ஆக, அடிப்படைக் கல்வியிலேயே அவனுக்கு அடி!
இவ்வளவு ஏன்… வகுப்பறைகளே சரியாக இல்லாமல், மரத்தடியில் பாடம் நடத்தும் கொடுமையும் நடக்கிறது. வகுப்பறையே கேள்விக்குறி என்றால், வேறு எந்த வசதியை அப்பள்ளியில் எதிர்பார்க்க முடியும். இதுபோன்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், பாடத்திட்டத்தை மாற்றுவதால் மட்டும், எப்படி தனியார் பள்ளி மாணவர்களுக்கு, இணையாக முடியும்?நடப்பாண்டில், முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளில், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது. அடுத்தாண்டு, அனைத்து வகுப்புகளுக்குமே சமச்சீர் கல்வி முறை பாடத்திட்டமாக அமையப் போகிறது. இது, மேலோட்டமாக பார்த்தால் எளிதாகவே தோன்றும்.ஆனால், 9ம் வகுப்பு வரை, அரசு பள்ளியில் படித்த ஒரு மாணவனுக்கு, பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்தி, திடீரென, 10ம் வகுப்பில், சமச்சீர் கல்வியை கொண்டு வந்தால், அவனால், அதை எப்படி உள்வாங்க முடியும்? மனனம் செய்து மதிப்பெண் பெறலாம்; ஆனால், அதன் தரம் உண்மையாகவே அவனைப் போய் சேருமா என்பது மிகப் பெரிய கேள்விக் குறியே!­
அடுத்து, அரசு பள்ளி மாணவர்களையே எடுத்துக் கொண்டாலும், சென்னையில் பயிலும் ஒரு அரசு பள்ளி மாணவனுக்கும், கிருஷ்ணகிரியில் உள்ள மலை கிராமத்தில் பயிலும் மலைவாழ் கிராம மாணவனுக்கும் இடையிலேயே பெரும் வேறுபாடு காணப்படுகிறதே! வறுமை, குடும்பப் பின்னணி போன்ற இன்ன பிறவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டாமா?உதாரணமாக, சென்னையில் ஆறாம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவனிடம் ஒபாமாவை பற்றிக் கூறினால், அவனுக்கு தெரிந்திருக்கவாவது வாய்ப்புண்டு. ஆனால், மலைவாழ் கிராமப்புற மாணவர்கள் எத்தனை பேருக்கு ஒபாமாவைத் தெரியும் என்பது அரசுக்கே வெளிச்சம். அவர்களுக்குத் தேவையான, அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ள, இன்டர்நெட் போன்ற குறைந்த பட்ச வசதிகளை, இடைநிலைப் பள்ளிகளிலாவது செய்து கொடுக்க வேண்டாமா?சமச்சீர் கல்வி என்பது ஆசிரியர்களுக்கும் புதிது; மாணவர்களுக்கும் புதிது. இதற்கு முதலில் தயார்படுத்த வேண்டியது ஆசிரியர்களைத்தான்!
அரசு பள்ளிகளில் அறிவியல் இளநிலை ஆசிரியராக நியமிக்கப்படுபவருக்கான தகுதி பி.எஸ்சி., பி.எட்., அதன்படி பார்த்தால், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் என ஏதாவது ஒன்றை எடுத்து படித்திருப்பார். ஆனால், அவர் நியமிக்கப்படுவதோ அறிவியல் ஆசிரியராக! அதனால், மேற்குறிப்பிட்ட நான்கு பாடத்தையுமே அவர் கையாள வேண்டுமென்றால், அவருக்குத் தகுந்த பயிற்சி வேண்டாமா! ஒரு நாள், இரண்டு நாள் பயிற்சிகள் போதுமானதா?இனி வரும் காலத்திலாவது, அந்தந்த பாடத்திற்கு என, தனித்தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் தான் சமச்சீர் கல்வி என்பது ஓரளவிற்காவது சாத்தியப்படும்!
தனியார் பள்ளி மாணவர்கள் புத்தகப்புழுவாக மட்டும் இல்லாமல், பொது அறிவு, ஆளுமைத்திறன், தனித்திறமை, மற்றவர்களுடன் பழகும் தன்மை என பலவற்றிலும் சிறந்து விளங்குகின்றனர்; அதற்கான பயிற்சிகளும் அவர்களுக்கு பெரும்பாலான பள்ளிகளில் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு சமமாக அரசு பள்ளி மாணவர்களை முன்னேற்ற அரசு மேற்கொள்ளப் போகும் நடவடிக்கை என்ன…?ஆசிரியர்களின் தரம், ஆசிரியர்களுக்கான பயிற்சி முறை, பள்ளியின் கட்டமைப்பு, உபகரணங்கள் போன்றவையும் சிறப்பாக இருந்தால் மட்டுமே சமச்சீர் கல்வி வெற்றி பெறும் என்பது மறுக்க முடியாத உண்மை. அதுவும் ஊழலின்றி நடைபெற வேண்டும். இல்லாவிட்டால், பெயர் மாற்றமோ, பாடத்திட்டமோ எந்த விதத்திலும் பயன் தராது.
அரசு கல்வித் திட்டத்தையும், கற்பிக்கும் முறையையும் புதுப்பித்து அர்த்தமுள்ளதாக்குவதற்கு பல முயற்சிகளை எடுத்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால், அவை வெற்றி பெற வேண்டுமானால், இதுபோன்ற, இன்னும் சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.அரசு நினைத்தால், நிச்சயமாக, சமச்சீர் கல்வி என்பது சாத்தியம்தான்; அதில், மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. என்றாலும், இதுகுறை, அதுகுறை என்று இனியும் கூறிக் கொண்டிருக்காமல், வளர்ந்த நாடுகளில், சமச்சீர் கல்வி எப்படி சாத்தியமாயிற்று என்பதை அறிந்து, குறைகளை களைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். தமிழக பள்ளிக்கல்வித் துறையும், தமிழக அரசும் இவற்றை பரிசீலிக்குமா?
இரா. ஆஞ்சலா ராஜம்

>பிஎச்.டி., பட்டதாரிகள் குறையை சரிசெய்ய புதிய அகடமி

>

விஞ்ஞானத்திலும், பொறியியலிலும் பிஎச்.டி., பட்டம் பெறுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் சமீபகாலமாக மிகவும் குறைந்து வருகிறது. இந்த குறைபாட்டை சரிசெய்ய மத்திய அரசின் விஞ்ஞானம் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில், ஒரு புதிய அகடமியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த அகடமியை நிறுவதற்கு பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை நேற்று அனுமதி அளித்தது.மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்த பின், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அம்பிகாசோனி நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த அகடமியை அமைப்பதற்கான சட்ட முன்வடிவை வரும் பார்லிமென்ட் கூட்ட தொடரில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. புதிதாக அமைக்கவுள்ள அகடமியை, எந்த மாநிலத்தில் அமைப்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.தற்போது அந்த அகடமி ஆராய்ச்சி கவுன்சிலில் 37 பிரத்யேக கல்லூரிகளில் ஆராய்ச்சி குறித்த பாடத்திட்டங்கள் இந்த அகடமி மூலம் செயலாக்கப்படும். இதை நிறுவுவதற்கு 11வது ஐந்தாண்டு திட்டத்தில் 19 கோடி ரூபாயும், அடுத்த ஐந்தாண்டு திட்டத்தில் 62 கோடி ரூபாயும் செலவிட மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது.
விஞ்ஞான துறையில் 2006ம் ஆண்டு பிஎச்.டி., பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 8,420 பேர். சீனாவில் 22 ஆயிரத்து 953 பேர். அமெரிக்காவில் 30 ஆயிரத்து 452 பேர். இதே மாதிரி பொறியியல் கல்லூரியில் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 10 ஆயிரத்து 58 பேர். சீனாவில் 12 ஆயிரத்து 130 பேர். அமெரிக்காவில் 7 ஆயிரத்து 400 பேர்.
கடந்த 1980ம் ஆண்டில் சீனாவை விட இந்தியாவில் அதிகமான மாணவர்கள் பிஎச்.டி., பட்டம் பெற்றிருந்தனர். இந்த எண்ணிக்கை குறைந்து வருவதால் பொறியியல், ஐ.ஐ.டி., உள்ளிட்ட கல்லூரிகளுக்கு தகுதி பெற்ற ஆசிரியர்கள் கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனவே, அகடமியை அமைப்பதன் மூலம் இந்த பிரச்னைக்கு முடிவு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.இவ்வாறு அம்பிகாசோனி கூறினார்.