Category Archives: OTHERS

…..

..

..

..

..

..

உலகின் மக்கள்தொகை 700 கோடி . நமது எண்ணிக்கை 121 கோடி. இன்னும் 19 ஆண்டில் (2030) சீனாவை முந்துவோம்

>.

>

.

>தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறார் ஜெயலலிதா

>

10th SAMACHEERKALVI TEXT BOOK FREE DOWNLOAD

10th SAMACHEERKALVI SOCIAL SCIENCE FREE DOWNLOAD

10th SAMACHEERKALVI ENGLISH TEXT BOOK FREE DOWNLOAD

>10th SAMACHEERKALVI TEXT BOOK FREE DOWNLOAD

>

>10th SAMACHEERKALVI SOCIAL SCIENCE FREE DOWNLOAD

>

>10th SAMACHEERKALVI ENGLISH TEXT BOOK FREE DOWNLOAD

>

>o

>

செஞ்சுருள் சங்க ஆலோசனைக் கூட்டம்

செஞ்சி அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் செஞ்சுருள் சங்க மாவட்ட கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.உதவி தலைமை ஆசிரியர் திலகவதி தலைமை தாங்கினார். மாவட்ட செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் வரவேற்றார். தமிழ்நாடு , உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் ஏழுமலை பேசினார்.கூட்டத்தில் எய்ட்ஸ் தடுப்பதற்கான விழிப்புணர்வு செய்திகளை மாணவர் களுக்கு கொண்டு செல்லும் முறைகள் தெரிவிக்கப்பட்டது.
எய்ட்ஸ் சார்ந்த குறும்படங்கள் திரையிடப்பட்டன.கல்வி மாவட்ட அளவிலான 150 பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள், கருத்தா ளர்கள் ஜெயச்சந்திரன், தண்டபாணி, ஞானவடிவு, செஞ்சி மருத்துவமனை ஐசிடிசி.,கவுன்சிலர் சரவணகுமார், டெக்னீசியன் விஜயகுமார் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ராமன், ஆசிரியர்கள் பாஸ் கரன், சிவக்குமார், காளிதாஸ், ஆல்பர்ட், வசந்தகுமார் செய்தனர். ஆசிரியர் அண்ணாமலை நன்றி கூறினார்.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வுக்காக விளம்பரங்களில் நடிக்க கமல் முடிவு

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வுக்காக வணிக ரீதியான விளம்பரப் படங்களில் நடிக்க நடிகர் கமலஹாசன் முடிவு செய்திருக்கிறார்.
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ் இயங்கும் அரசு சார்ந்த அறக்கட்டளையின் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் இன்று கலந்து கொண்டு பேசினார். விளம்பரப் படங்களில் கடந்த 35 ஆண்டுகளாக நடிக்கவில்லை எனக் குறிப்பிட்ட கமல், எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளின் மறுவாழ்வுக்காக இனி விளம்பரப் படங்களில் நடித்து அதில்வரும் நிதியை அளிக்க இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த நிதிக்கு அரசிடம் இருந்து வரிவிலக்குப் பெறப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்

செஞ்சுருள் சங்கம் சார்பில் உலக எய்ட்ஸ் தின விழா

எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்

உலக எய்ட்ஸ் தினவிழாவையொட்டி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சியில் ரெட் ரிப்பன் கிளப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் வரவேற்றார். பள்ளி தாளாளர் நாகராஜ், ஜே. ஆர்.சி., ஒருங்கிணைப்பா ளர்கள் முரளிதரன், இளங்கோ முன்னிலை  வகித்தனர். சி.இ.ஓ., குப்புசாமி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.மாவட்ட கல்வி அலுவலர் பூபதி வாழ்த்துரை வழங்கினார். ஞானவடிவு, ஜெயச்சந்திரன்,தண்டபாணி  கலந்துரையாடல் நடத்தினர். ராமன் நன்றி கூறினார்.

பாராட்டு சான்று

2010-2011 ஆம் கல்வி ஆண்டில் செஞ்சுருள் சங்கம் விழுப்புரம் மாவட்டத்த்தின் 436 பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக செஞ்சுருள் சங்க வருவாய் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.கே.தேவதாஸ் அவர்களுக்கு 26.01.2011 குடியரசு தின விழாவில் விழுப்புர மாவட்ட ஆட்சியர் இரா.பழனிச்சாமி அவர்கள் பாராட்டு சான்று வழங்கும் காட்சி.உடன் எஸ்.பி.பகலவன்,மாவட்டக் கல்வி அலுவலர் இரா .பூபதி ஆகியோர் உள்ளனர்.

>10th SAMACHEERKALVI TEXT BOOKS FREE DOWNLOAD

>

>மக்கள் தொகை கணக்கெடுப்பில் மக்களிடம் கேட்கும் 29 கேள்விகள்

>

மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள், பிப்., 28 வரை நடைபெறுகிறது.
வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்கள் பொதுமக்களிடம் கேட்கும் 29 கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். அவை:
1. பெயர்,
2. குடும்ப தலைவருக்கு உறவு முறை,
3. இனம்,
4. பிறந்த தேதி மற்றும் வயது,
5. தற்போதைய திருமண நிலை,
6. திருமணத்தின் போது வயது,
7. மதம்,
8. ஷெட்யூல்டு வகுப்பு/ ஷெட்யூல்டு பழங்குடி,
9. மாற்றுத் திறன் (ஊனம்),
10. தாய்மொழி,
11, அறிந்த பிற மொழிகள்,
12. எழுத்தறிவு நிலை,
13. கல்வி நிலையம் செல்பவர்களின் நிலை.
14. அதிக பட்ச கல்வி நிலை,
15. கடந்த ஆண்டில் எப்பொழுதாவது வேலை செய்தாரா.
16. பொருளாதார நடவடிக்கையின் வகை,
17. நபரின் தொழில்,

Read more »

>அலைபேசிகளால் விலைபோகும் நிம்மதி

>

இன்று கையில் புத்தகம் இருக்கிறதோ, இல்லையோ மாணவர்களிடையே அலைபேசிகள்தான் ஆக்கிரமித்துள்ளன. கர்ணன் கவசக் குண்டலத்துடன் பிறந்ததைப்போல அலைபேசியும் கையுமாக அலைபவர்கள் பலர். இதனால் சொந்த பந்தங்கள், உற்றார் உறவினர்களை மறந்து போய்விட்டனர்.
பாடம் படித்த நேரம்போக மீதி நேரம் விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள், புத்தகம் வாசித்தல் அனைத்தும் கனவாகிவிட்டன.
இப்படி விஞ்ஞான மயமாகிவிட்ட வாழ்க்கையில் மனிதனின் அனைத்து கௌரவங்களும் அவர்களது செய்கையால் நகைப்புக்கு ஆளாக வைக்கிறது.
பஸ், ரயில் இப்படிப் பயணம் செய்யும்போது பிறரைப்பற்றி கவலைப்படாமல் அலைபேசிகளில் பேசி வெறுப்பைச் சம்பாதிப்பவர்கள் ஏராளம். சொந்தப் பிரச்னை, அலுவலகம், கிண்டல் இப்படி எதுவாக இருந்தால் என்ன.. அதற்கென இடம், பொருள் பார்ப்பதைப் பலர் மறந்துவிடுகின்றனர். இது வாகன ஓட்டிகளிடம்தான் அதிகமாகக் காணப்படுகிறது.
ஏலே..மாப்ளே.. என்பதுடன் நிற்காமல் உரக்க சப்தமிட்டுப் பேசுவதால் பிற பயணிகள் முகம் சுழிக்கின்றனர்.

Read more »

அலைபேசிகளால் விலைபோகும் நிம்மதி

அதேபோல தங்களது குடும்ப ரகசியங்கள், விவரங்கள் ஆகியவற்றையும் பெருமையாகப் பேசுகின்றனர். இன்னும் சிலர் கம்பெனி நிலவரம், சக பணியாளர்கள் பற்றி மட்டரகமான விமர்சனம் என ஏகமாகப் பேசிவிடுகின்றனர்.
பல திரைப்படங்களில் இதுபோன்ற காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். ஆனாலும் யாரும் திருந்தியபாடில்லை. மாறாக, தங்களது சுயகௌரவத்தையும், தன்மானத்தையும் இழக்கின்றனர்.
பல இடங்களில் வீடுகளில் நடைபெறும் கொள்ளைச் சம்பவங்கள் இதுபோன்ற அசட்டுத்தனமான உளறல்களால் ஏற்படுகின்றன. பொதுஇடங்களில் பேசுவதைக் கேட்டும் மர்மநபர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டுவதற்கும் இது இலகுவாக அமைந்துவிடுகிறது.
இதனால்தான் காவல்துறையினர் அவ்வப்போது வெளியூர் செல்வது குறித்தோ, பிற விவரங்கள் குறித்தோ பொது இடங்களிலோ, தொலைபேசிகளிலோ தெளிவாகப் பேச வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கின்றனர். ஆனால், அதை யாரும் காது கொடுத்துக் கேட்பதில்லை.
இது ஒருபுறம் இருக்க வாகனங்களில் செல்வோர் செய்யும் அட்டகாசம் கொஞ்சநஞ்சமல்ல. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணிகளும், மாணவ, மாணவிகளும் பயணம் செய்கின்றனர்.
வாகனம் ஓட்டும்போது அப்படி என்ன தலைபோகும் தகவலைப் பரிமாறிக் கொள்கிறார்களோ தெரியவில்லை. இதைவிட பெரிய கொடுமை இருசக்கர வாகன ஓட்டிகளின் செயல்பாடு. தகவல் பரிமாற்றம் மிக மிக அவசியம்தான். ஆனால், அதற்கென நேரம், காலம் வேண்டும் என்பதை இவர்கள் மறந்துவிடுகிறார்கள்.
இதுதவிர, அலுவலகங்களிலும் அலைபேசி தொந்தரவு பல வேலைகளுக்கு இடையூறாக உள்ளது. இது அரசு அலுவலகங்களிலும் அதிகமாகக் காணப்படுகிறது. இதைத் தடுக்க ரேஷன் கடைகள், பாலகங்கள், மின்வாரிய அலுவலகங்கள், தொலைபேசி கட்டணம் செலுத்துமிடம், ரயில் முன்பதிவு, பயணச்சீட்டு வழங்கும் இடம் உள்ளிட்ட இடங்களில் அலைபேசி பேசுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.
மேலும், பஸ்களில் அலைபேசி பேசுவோருக்கு நடத்துநர்கள் எச்சரிக்கை விடுக்க வேண்டும் அல்லது பிறருக்கு இடையூறு ஏற்படாதவாறு பேசுமாறு அறிவுரை வழங்கலாம்.
அலைபேசி பேசுவது அவரவர் உரிமைதான் என்றாலும், பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொள்வதைத் தவிர்க்கலாம். இவ்வாறு செய்வதால் தமக்குப் பாதுகாப்பு என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
குறிப்பாக, வாகனங்களில் செல்வோர் அலைபேசி பேசுவதை அறவே தவிர்த்தல் நலம். இப்படி அலைபேசிகளால் சில நேரங்களில், விலையாக உயிர்ப்பலிகளும் ஏற்படுவதால் அதைத் தவிர்க்கக் கற்றுக்கொள்வதே சிறந்தது.
எஸ்.ரவீந்திரன்

SUBSCRIBE UR MOBILE NUMBER TO GET FREE SMS FROM WWW.KALVISOLAI.COM

அன்பிற்குரிய கல்விச்சோலை நண்பர்களே. வணக்கம்

62000 பார்வைகள், 376 செய்திகள் ….

அனைவருக்கும் மகிழ்வான நன்றிகள் பல …
உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

கல்விச்சோலையின் புதிய அறிமுகம் ….

கல்விச்சோலையின் சூடான செய்திகள் SMS வாயிலாக உங்கள் மொபைலில்…
 
அதற்கு பின்வரும் முறைகளை பயன்படுத்தி உங்கள் மொபைல் எண்ணை மட்டும் பதிவு செய்யுங்கள். பின்னர்  கல்வித்துறையின் முக்கிய நிகழ்வுகள்  எஸ்.எம்.எஸ்  வாயிலாக உடனுக்குடன் பெறலாம்.
அதற்கு நீங்கள் பின்வரும் மாதிரியை கவனியுங்கள்

1. Subscribe என்ற இடத்தில் கிளிக் செய்யுங்கள் .

Read more »

Tips for life

1. Walk for 10-30 minutes every day.

2. Sit in silence for at least 40 minutes each day.

3. Sleep for 8 hours. (Prefer to sleep from 10 PM to 5AM)

4. Always be Energetic, Show enthusiasm and Empathy.

5. Play your favorite games.

6. Read good books.

7. Take time to practice Meditation, yoga, and prayer. They provide us with daily fuel for our busy lives.

8. Spend time with people over the age of 70 & with Children.

9. Dream more while you are awake.

10. Eat more foods that grow on trees and plants and eat less food that is manufactured in plants.

11. Drink plenty of water.

12. Try to make at least two people smile each day.

13. Don’t waste your precious time and energy on gossip.

14. Forget issues of the past. Don’t remind your relatives or friends with his/her mistakes of the past. That will ruin your present happiness.

15. Don’t have negative thoughts or things you cannot control. Instead invest your energy in the positive present moment.

16. Realize that life is a school and you are here to learn. Problems are simply part of the curriculum that appear and fade away like algebra class but the lessons you learn will last a lifetime.

17. Eat breakfast like a king, lunch like a prince and dinner like a beggar.

18. Always try to Smile and laugh more.

19. Life is too short to waste time hating anyone. Don’t hate others, try to love others.

20. Don’t take yourself so seriously. No one else does.

21. Don’t try to win every argument. Agree to disagree.

22. Make peace with your past so it won’t spoil the present.

23. Don’t compare your life to others’. You have no idea what their journey is all about.

24. You are in charge of your happiness; no one takes the charge.

25. Always try to forgive everyone for everything.

26. What other people think of you is none of your business.

27. However good or bad a situation is, it will change.

28. Your job won’t take care of you when you are sick. Your friends will. Stay in touch.

29. Get rid of anything that isn’t useful, beautiful or joyful.

30. Think always that the best is yet to come.

31. No matter how you feel, get up, dress up and show up.

32. Do the right thing every day.

33. Call your family often.

34. Your Inner most is always happy. So, be happy.

35. Each day give something good to others.

36. Don’t overdo. Keep your limits.

Have a great, wonderful & pleasant life!!!

>Tips for life

>1. Walk for 10-30 minutes every day.

KALVISOLAI.COM

>நம்பரை மாற்றாமல் மொபைல் நிறுவனங்களை மாற்றும் வசதி

>

“”மொபைல் போன் வாடிக்கையாளர்கள் தங்கள் எண்ணை மாற்றாமல், விரும்பிய மொபைல் நிறுவனத்தை தேர்வு செய்து கொள்ளும் வசதி நவம்பர் முதல் வாரத்தில் அமலுக்கு வரும். “2ஜி’ லைசென்ஸ் பெறுவதற்காக புதிய கட்டணம் இரண்டு வாரத்தில் நிர்ணயிக்கப்படும்,” என டிராய் தலைவர் சர்மா கூறினார்.
நாட்டில் தூர்தர்ஷன் மற்றும் ஆறு தனியார் நிறுவனங்கள், டி.டி.எச்., சேவையை வழங்கி வருகின்றன. இதில் 2.1 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். ஒரே “செட்டாப் பாக்ஸ்’ மூலம் வாடிக்கையாளர்கள் விரும்பும் டி.டி.எச்., சேவைகளை பயன்படுத்திக் கொள்ளும் புதிய நடைமுறையை அமல்படுத்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து டி.டி.எச்., சேவை நிறுவனங்கள், நுகர்வோர் அமைப்புகள், பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணியை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் (டிராய்) ஒப்படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, “டிராய்’ நடத்திய கருத்துக் கேட்பு கூட்டம் சென்னை அண்ணா சாலை பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் நடந்தது. டிராய் தலைவர் சர்மா தலைமை வகித்தார். செயலர் அர்னால்டு, ஆணைய உறுப்பினர் அசோக், டி.டி.எச்., சேவை நிறுவன பிரதிநிதிகள், ஏஜன்சிகள், நுகர்வோர் அமைப்பினரும் இதில் பங்கேற்றனர்.
நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த சரவணன் பேசும்போது, “”வாடிக்கையாளர்களின் உரிமைகள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில், இதை நடைமுறைப்படுத்த வேண்டும். தற்போதுள்ள “செட்டாப் பாக்ஸ்’களில் இதை நடைமுறைப்படுத்த சாத்தியம் இல்லை. இலவசம் என்ற பெயரில் சேவை நிறுவனங்கள் மறைமுக வரி விதிக்காமல் இருக்க வேண்டும்,” என்றார். மற்றொரு நுகர்வோர் முருகன் பேசும்போது,””இது தொடர்பாக கோர்ட்டில் உள்ள வழக்கு முடிந்ததும் தான் இதை நடைமுறைப்படுத்த முடியும். நுகர்வோர் எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது,” என்றார்.
“செட்டாப் பாக்ஸ்’ சேவை நிறுவன பிரதிநிதிகள் பேசும்போது,””அவசரகதியில் இதை நடைமுறைப்படுத்தக் கூடாது. கால அவகாசம் அளிக்க வேண்டும். ஒரே “செட் டாப் பாக்சில்’ வாடிக்கையாளர் விரும்பும் சேவை நிறுவனத்தை தேர்வு செய்யும் நடைமுறை சரியாக இருக்காது. போட்டி நிறைந்த வர்த்த உலகில், சந்தையை பெரிதும் பாதிக்கும். “”ஏற்கனவே நாங்கள் ஆன்-லைன் மூலமாக தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளோம். நுகர்வோர் எந்த அளவில் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதை அறியாமல், திடீரென இதை அமல்படுத்துவது சிக்கலை ஏற்படுத்தும்,” என்றனர்.
இதற்கு பதில் அளித்த டிராய் தலைவர் சர்மா,””வெளிநாட்டுக்கு போகக் கூடாது என தடைபோட்டுவிட்டு, வெளிநாட்டுக்கு போக யாருக்கும் ஆர்வம் இல்லை என்று சொல்ல முடியாது. வெளிநாடுக்கு போகலாம் என அறிவித்தால்தான், எவ்வளவு பேர் போகிறார்கள் என தெரியும்,” என்றார். சார்ப்ட்வேர் இன்ஜினியர்கள் பேசும்போது, “”இந்த நடைமுறையை அமல்படுத்துவதில் எந்த சிக்கலும் ஏற்படாது. தொழில்நுட்ப வசதிகள் அதீத வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், இது சாத்தியம்தான்,” என்றனர்.
கருத்துக் கேட்புக்கு பின், டிராய் தலைவர் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது: பரிந்துரை, விதிமுறைகள் குறித்து நிர்ணயம் செய்ய கால நிர்ணயம் ஏதும் இல்லை. இருந்தபோதிலும் விரைவில் அது தொடர்பான அறிக்கையை அரசிடம் சமர்ப்பிப்போம். “2ஜி’ அலைவரிசை லைசென்ஸ் பெறுவதற்கான கட்டணம் 2001ல் நிர்ணயிக்கப்பட்டு, அப்படியே உள்ளது. இரண்டு, மூன்று வாரத்திற்குள் புதிய கட்டண நிர்ணயம் செய்யப்படும். மொபைல் போன் வாடிக்கையாளர்கள், அதே எண்ணில் விரும்பிய நிறுவனத்தை மாற்றிக் கொள்ளும் வசதி நவ., முதல் வாரத்தில் அமலுக்கு வரும். இவ்வாறு சர்மா கூறினார்.

ஏலகிரி

அன்றாட பரபரப்பான வாழ்க்கையிலிருந்து சற்று தங்களை விடுவித்துக்கொள்ள விரும்புவோரும், கொளுத்தும் கோடையிலிருந்து தப்பிக்க நினைப்போரும் பெரும்பாலும் தஞ்சம் புகும் இடங்கள் தமிழகத்தின் மலைப் பகுதிகள். ஆனால், இவற்றுக்காக மட்டுமின்றி, இயற்கையை நேசிக்கும் பலரும் அதன் இன்னிசையைக் கேட்டு, மனதை இலகுவாக்கிக்கொள்ளவும் ஏற்ற இடம் ஏலகிரி மலைப்பகுதி.
வாணியம்பாடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில், வழியில் பொன்னேரி கிராமத்தில் இருந்து ஏலகிரி மலைக்குப் பாதை பிரிகிறது. அங்கிருந்து 14 கி.மீ. தூரத்தில் ஏலகிரி மலையை அடைய முடியும். சற்று தூரத்திலேயே மலைப் பாதை தொடங்கிவிடுகிறது. மொத்தம் 14 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இந்த மலைப் பாதையில் பயணித்தால், ஒவ்வொரு வளைவுக்கும் காரி, பாரி, ஓரி, ஒüவையார், கபிலர், கம்பர், இளங்கோ, திருவள்ளுவர், பாரதியார், பாவேந்தர் எனத் தமிழ் வளர்த்த புலவர்கள், கவிஞர்களின் பெயர்கள்.
சாலைகள் அனைத்தும் பளிச்சென, புத்துயிர் பெற்று, பள்ளம் மேடின்றி, அழகாகப் பராமரிக்கப்பட்டிருந்தன.
13-வது வளைவு சென்றபோது, அங்கு வனத்துறை சார்பில் டெலஸ்கோப் மையம் அமைக்கப்பட்டிருந்தது. அதில், வனத்துறை ஊழியர் ஒருவர், டெலஸ்கோப் கருவிக்குப் பாதுகாப்பாக நின்றிருந்தார். அங்கிருந்து பார்த்தபோது, கீழே பொன்னேரி கிராமத்தின் இயற்கை அழகை ரசிக்க முடிந்தது. டெலஸ்கோப் பயன்படுத்த கட்டணம் ஏதும் கிடையாது.
அடுத்த ஒரு கொண்டை ஊசி வளைவுக்குப் பிறகு, ஏலகிரி மலையின் சமதளப் பரப்பு தென்படுகிறது. அங்கு புங்கனூர் கிராமத்தில் ஏரி இருக்கிறது. ஏலகிரியில் படகு சவாரி செய்வதற்கான மிகப் பெரிய ஏரி இது. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் எனப் பலர் ஒரே நேரத்தில் சவாரி செய்வதற்கான வகை, வகையான படகுகள் உள்ளன. சுற்றுக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கிறார்கள். இதை மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் கவனித்து வருகின்றனர்.
படகுத் துறைக்கு எதிரேயே இயற்கைப் பூங்கா அமைத்திருக்கின்றனர் சுற்றுலாத் துறையினர். இதை தனியார் நிறுவனம் பராமரித்து வருகிறது. புல்வெளிப் பூங்கா இது. இதன் நடைபாதையின் இரு பக்கமும் பச்சைப் பசேலெனப் புல் தரைகள், அழகான செடிகள், 5 செயற்கை நீரூற்றுகள், இசைக்கு ஏற்ப நடனமாடும் செயற்கை நீரூற்று, செயற்கையாகவே உருவாக்கப்பட்ட சிற்றருவி, தொட்டிகளில் பார்வைக்கு வைக்கப்பட்ட மீன்கள், ரோஜாப் பூந்தோட்டம் என அழகின் அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கிறது.
அந்தப் பூங்காவின் நடைபாதையில் மாலை நேரத்தில் மெல்ல நடைபழகினாலே, கண்களுக்கு இதமளிக்கும் அழகும், அங்கு உடலைத் தழுவும் குளிர்காற்றும், நமது மனதின் அத்தனை அழுத்தத்தையும் துடைத்தெறிகிறது. பிற கோடை வாசஸ்தலங்களோடு ஒப்பிடுகையில், இயற்கை சூழலுக்கும், தட்பவெப்ப நிலைக்கும் ஏலகிரி ஓரளவுக்கே மாறுபட்டிருக்கிறது.
கடல் மட்டத்திலிருந்து 1045 மீட்டர், அதாவது 3,400 அடி உயரத்தில் இந்த ஏலகிரி அமைந்திருக்கிறது. இதனால், கோடை காலத்திலும் சில்லென வீசும் காற்று, இரவில் எப்போதும் குளிர் என மனதுக்கு இதமளிக்கும் சூழல். குளிர்காலத்தில் இங்குள்ள குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்ஷியஸ், கோடை காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்ஷியஸ். கோடை காலத்தில் வெயில் நிலவினாலும், குளிர்ந்த காற்று வீசுவதை உணர முடியும்.