Monthly Archives: December, 2015

கல்விச்சோலை | பள்ளிக்கல்வித்துறை சார்பில

கல்விச்சோலை | பள்ளிக்கல்வித்துறை சார்பில் SCERT வெளியிட்டுள்ள பிளஸ்டூ மாணவர்களுக்கான குறைந்த பட்ச கற்றல் கையேடுகளை பதிவிறக்கம் செய்யுங்கள்…http://goo.gl/adJkdQ

கல்விச்சோலை செய்திகள் | > அனைத்து வகையான

கல்விச்சோலை செய்திகள் |
> அனைத்து வகையான வங்கிகணக்கு தொடங்குவதற்கும்’பான்’ எண்கட்டாயமாக்கப்படுகிறது என மத்தியநிதி அமைச்சர்அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.அனைத்து வகையான வங்கிகணக்கு தொடங்குவதற்கும்’பான்’ எண்கட்டாயமாக்கப்படுகிறது.

>அரசு பள்ளிகளில் வினியோகிக்க வழங்கிய அரசின் இலவச லேப்- டாப் பதுக்கப்படுவதாக எழுந்த தகவலால் கணக்கெடுக்க பள்ளிக்கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது.

>சென்னையில் கூடிய ஜாக்டோ உயர்மட்டக் குழு கூட்டத்தில் கனமழை பாதிப்பு காரணமாக டிசம்பரில் நடக்க வேண்டிய மறியல் போராட்டம் ஜனவரி 30,31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடத்துவென ஒருமனதாக முடிவாற்றப்பட்டுள்ளது.

>பள்ளிக்கல்வி – பெண்கல்வி – மாணவிகள் இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டு ரூ.3000/- ஊக்கத் தொகை – ONLINE பதிவு செய்ய இயக்குநர் உத்தரவு.

>மழை வெள்ள பாதிப்புக்கு பிறகு சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 14–ந் தேதி பள்ளிகள் தொடங்கியுள்ளன. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப உளவியல் ‘கவுன்சிலிங்’ வழங்கப்படுகிறது. குறிப்பாக 10–ம் வகுப்பு, 12–ம் வகுப்பு படிக்கும் மாணவ–மாணவிகள் மன அழுத்தம், மன உளைச்சலில் இருந்து மீண்டு வர பள்ளிக்கல்வி துறை சார்பில் நடமாடும் உளவியல் ஆலோசனை குழுக்கள் மாணவர்களை தேர்வு பயத்தில் இருந்து மீட்க ஆலோசனைகளை வழங்கி வருகின்றன.

>அடுத்தடுத்து தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி? தமிழக அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட கோரிக்கை.

>வெள்ள நிவாரணத்திற்காக பணம் வசூலிக்க மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது,’என, தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

>பள்ளிகளில், அரையாண்டு தேர்வு நடத்தாமல், ஆண்டு இறுதித்தேர்வு மட்டும் நடத்த வேண்டும்’ என, தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

>அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான (ஏஐபிஎம்டி) அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ளது.

>நெடுஞ்சாலைத் துறையில் காலியாகவுள்ள உதவிப் பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் 28-ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது.

>தனியார் பள்ளி மாணவர்கள் புத்தகங்களை இழந்திருந்தால், இணையதளம் மூலம் பதிவுசெய்து வீட்டு முகவரியிலேயே புத்தகங்களை பெறலாம் என தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.

>மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் உள்ள, காது கேளாதோர் மற்றும் பார்வையற்றோர் அரசு சிறப்புப் பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் துணை விடுதி காப்பாளர் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் அனுப்ப, கடைசி தேதி, 15ம் தேதி என, அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது, 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

>தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வு (NMMS)தேதி நீடிக்கப்பட்டுள்ளது.

>TNPSC VAO | வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பிக்க, காலக்கெடு 31.12.2015 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

> சிவில் சர்வீஸ் தேர்வுக்கு ‘இ – அட்மிட் கார்டு’.

>நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு தேர்வை நடத்தக்கூடாது: தலைமை நீதிபதியிடம், வக்கீல் மனு

| http://www.kalvisolai.com

கல்விச்சோலை செய்திகள் | > பத்தாம் வகுப்ப

கல்விச்சோலை செய்திகள் |
> பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதிய தேர்வர்கள், அசல் மதிப்பெண் சான்றிதழ்களை டிச.,18 வரை தேர்வு மையங்களில் சான்றிதழ்களை பெறலாம்.

>கம்பைன்டு மெடிக்கல் சர்வீஸ் 2015-க்கான தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

>கல்வியை வர்த்தகப் பொருளாக்கும் உலக வர்த்தக அமைப்பு உடன்பாட்டை இந்தியா நிராகரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

>பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான விடுமுறை எப்போது விடப்படும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

>’நாடு முழுவதும், பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை, தினமும், ஒன்று அல்லது இரண்டு பெற்றோர் சுவைத்து, சோதித்து பார்ப்பதை கட்டாயமாக்க வேண்டும்’ என, மத்திய அரசு கூறியுள்ளது.

>புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலனுக்கான அரசாணை இல்லை என, முதல்வரின் தனிப்பிரிவு கைவிரித்தது. இதனால் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்த 4.20 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

>தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இலவச லேப்டாப்களில், விரைவில் ‘விண்டோஸ் 10 ஆப்ரேட்டிங் சிஸ்டம்’ (ஓ.எஸ்.,) வசதி செய்யப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக ‘லேப்டாப்’களில் தொடுதிரை வசதி ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

>உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்; கலங்காதீர்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உருக்கமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

>வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 21 ஆம் தேதி திருச்சியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

>டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, வி.ஏ.ஓ., தேர்வு எழுதும் மாணவர்களிடம் வேலைவாங்கிதருவதாககூறி ஒரு சிலர் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகபுகார் எழுந்துள்ளது.

>பள்ளிக்கு முன்பாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவு பொருட்களை மாணவர்கள் வாங்கி உண்ணக்கூடாது என ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் – பள்ளிக்கல்வி இயக்குநர்

>தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் விரிவுரையாளர் இன்னும் 5 ஆண்டுகளுக்குள் UGC நிர்ணயித்துள்ள கல்விதகுதியை பெற்றுக் கொள்ள வேண்டும் .இல்லையெனில் 5 வருடத்திற்கு பிறகு தாங்களாகவே வெளியேற சம்மதிக்கிறோம் என தனியார் கல்லூரயில் கையெழுத்து வாங்குகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

>தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு (பிளஸ் 2) தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைதோறும் அரசுப் பள்ளிகள் செயல்படும். அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மற்ற வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் பள்ளி நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் ஓரிரு நாள்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

>வெள்ளத்தால் சீருடைகளை இழந்த 31 ஆயிரம் மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அனுப்பப்பட்டுள்ளன என சமூக நலத் துறையினர் தெரிவித்தனர்.

>மழை, வெள்ளத்தால் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கான சிறப்பு முகாம்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் 132 இடங்களில் திங்கள்கிழமை தொடங்கின. இவற்றில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பவர்களுக்கு ஒரு வாரத்தில் சான்றிதழ் நகல்கள் அளிக்கப்பட உள்ளன.
>உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, வெள்ளப் பாதிப்புக்கு ஆளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 148 பொறியியல் கல்லூரிகளில் அனைத்து பருவத் தேர்வுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. மேலும், தேர்வுகள் டிசம்பர் 28 முதல் தொடங்கி நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

| http://www.kalvisolai.com

கல்விச்சோலை செய்திகள் | >G.O Ms:117 | மு

கல்விச்சோலை செய்திகள் |

>G.O Ms:117 | முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்களின் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

>TNPSC VAO | வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பிக்க, காலக்கெடு 31.12.2015 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

>அரசு தொழில்நுட்ப தேர்வுக்கு, புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

>தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், கணக்கீட்டாளர், பொறியாளர் பணியிடங்களை அண்ணா பல்கலை மூலம் எழுத்து தேர்வு நடத்தி நியமிக்கப்பட உள்ளனர் இது குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

>மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் காது கேளாதோர் மற்றும் பார்வையற்றோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களான இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் துணை விடுதிக்காப்பாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படுவதற்கான விண்ணப்பம் அளித்திட நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாள் நீட்டிப்பு அறிவிப்பு.

>TNPSC | DEPARTMENTAL EXAMINATIONS-DECEMBER 2015 TIME-TABLE DOWNLOAD | டிசம்பர் மாதத்தில் நடைபெறும் துறைத்தேர்விற்க்கான கால அட்டவணையை TNPSC வெளியிட்டுள்ளது.

>நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு தேர்வை நடத்தக்கூடாது: தலைமை நீதிபதியிடம், வக்கீல் மனு

>சிவில் சர்வீஸ் தேர்வுக்கு ‘இ – அட்மிட் கார்டு”சிவில் சர்வீஸ் பிரதான தேர்வு களில் பங்கேற்போர், ‘இ – அட்மிட் கார்டு’ எனப்படும், இணையவழி அனுமதி அட்டைகளை, பிரின்ட் செய்து, தேர்வின் போது எடுத்து வர வேண்டும்’ என, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான – யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., – ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான, சிவில் சர்வீஸ் தேர்வுகள், யு.பி.எஸ்.சி.,யால் நடத்தப்படுகின்றன.பிரதானத் தேர்வுகள், நாடு முழுவதும், 23 மையங்களில், டிச., 18ல் துவங்கி, 23ம் தேதி வரை நடக்கும்.

| http://www.kalvisolai.com

கல்விச்சோலை செய்திகள் | >FIND TEACHER PO

கல்விச்சோலை செய்திகள் |
>FIND TEACHER POST.COM | தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி பெற பதிவு செய்யுங்கள் அல்லது 08067335589 என்ற எண்ணுக்கு MISSED CALL கொடுங்கள்.

>கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு மாற்று கல்விச்சான்றிதழ்கள் வழங்க டிசம்பர் 14 முதல் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

>வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கான நகல்களை வழங்கும் முகாம் திங்கள்கிழமை (டிச. 14) தொடங்கப்பட உள்ளது. 132 இடங்களில் இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் இந்த முகாம்களில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வாரத்துக்குள்ளாக கட்டணமின்றி சான்றிதழ்களின் நகல்கள் வழங்கப்படும் என அதிகாரிகள்தெரிவித்தனர்.

>TRB NEWS | மழை வெள்ளத்தால் சேதமடைந்த TNTET தேர்ச்சி பெற்ற சான்றிதழ் மறுபடியும் DOWNLOAD செய்து கொள்ளலாம் என TRB அறிவித்துள்ளது.

>அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்து தமிழக முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு அரசு , அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கும் பொருந்தும் என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

>பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் டிசம்பர் 11 முதல் 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

>பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதியை அறிவிக்காததால், தேர்வு தாமதமாகுமோ என, மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், மார்ச்சில் பொதுத் தேர்வு நடக்கும். வழக்கமாக, டிசம்பர், முதல் வாரமே பொதுத் தேர்வு அறிவிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு இன்னும் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

>16, 18-ந் தேதிகளில் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. சென்னை உள்பட 4 மாவட்ட மாணவர்கள் தேர்வை ஏப்ரல் மாதம் எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.தேர்வுகள் தள்ளிவைப்புதமிழ்நாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகள் அனைத்திற்கும் செமஸ்டர் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டன.

>சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 34 நாள் விடுமுறைக்கு பின், இன்று, பள்ளிகள் திறக்கப்படுகின்றன. வெள்ளத்தில் புத்தகங்களை பறிகொடுத்த அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகங்கள் மற்றும் சீருடைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

>சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு தொற்றுநோய்கள் குறித்த பரிசோதனை திங்கள்கிழமை முதல் மேற்கொள்ளப்பட உள்ளது. அனைவருக்கும் நிறைவடையும் வரை பரிசோதனை தொடரும்.

>ஆட்சிப்பணி உள்ளிட்ட பதவிகளுக்கு, யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் பிரதான தேர்வுகளை, இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

| http://www.kalvisolai.com

கல்விச்சோலை செய்தி துளிகள் | >9 மாவட்ட ப

கல்விச்சோலை செய்தி துளிகள் |
>9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருவாரூர், நாகை, தருமபுரி (சில வட்டங்கள்) மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு, 2.12.2015 – புதன் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

>தமிழகம் முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு. ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

>தமிழக அரசின் 2016 ஆண்டுக்கான விடுமுறைப்பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

> CTET: பிப்., 21ம் தேதிஆசிரியர் தகுதி தேர்வு.

> வட கிழக்கு பருவக் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். சென்னையில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்கக் கடலில் கடந்த நான்கு நாட்களாக நிலை கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்ததால் தமிழக கடலோரத்தில் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.

> அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளின் தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே போல் சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் தேர்வுகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டன.திருவள்ளூர் பல்கலைத் தேர்வுகளும் ஒத்திவைக்கப் பட்டன.

> அடுத்த ஆண்டில் கல்வி மேலும் செலவுமிக்கதாக மாற வாய்ப்பிருக்கிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடும் சேதத்தைச் சந்தித்த தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கனமழையால் பள்ளிக் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதால் கட்டண நிர்ணய கமிட்டியிடம் தனியார் பள்ளி நிர்வாகங்கள் முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

> பிளஸ்–2, 10–ம் வகுப்பு பொதுத் தேர்வை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை: தேர்வுத்துறை இயக்குனர் தகவல்.

> மாற்றுத்திறனாளிஅரசு ஊழியர்கள் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு DEC 03 அன்று சிறப்பு தற்செயல் விடுப்புஎடுத்துக்கொள்ளலாம்.

>முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு இம்மாதம் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண் டும் என தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.

| http://www.kalvisolai.com

கல்விச்சோலை செய்திகள் | >TNPSC GROUP 2A

கல்விச்சோலை செய்திகள் |
>TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT – TAMIL , PHYSICS,CHEMISTRY,BIOLOGY ,HISTORY,GEOGRAPHY , HISTORY OF INDIAN FREEDOM STRUGGLE , INDIAN CONSTITUTION , INDIAN ECONOMICS, MATHS , CURRENT AFFAIRS , G.K

>6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு, 1.12.2015 – செவ்வாய்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

>TNPSC NEWS | தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு டிசம்பர் 4 முதல் 12-ஆம் தேதி வரையும், 14-ஆம் தேதியும் நடைபெறுகிறது.

>நகர் மற்றும் ஊரமைப்புத் துறையான, DTCP.,யில், காலியாக உள்ள, 98, ‘சர்வேயர்’ மற்றும் உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு, டிசம்பர் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

>பிளஸ்-2 மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவெண்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக பிளஸ்-2 மாணவர்களின் விவரங்களில் உள்ள பிழைகளைத் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

>பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

>மாற்றுத் திறனாளி மாணவர்களின் சிறப்புப் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

>Tamil Nadu Open University B.Ed.,/B.Ed(SE).,/M.Ed(SE).,/PGPDSE & PGPCSE – DECEMBER 2015 Hall Ticket.

>2013 மார்ச் மாதம் முதல் 2015 பிப்ரவரி மாதம் வரை உள்ள கணக்கீட்டுத்தாள்(Account slip) மாநிலப் புள்ளி விபர மையத்தால் (Govt Data centre) வெளியிடப்பட்டுள்ளது.

>ஒரே கல்வி ஆண்டில் வெவ்வேறு தேர்வு கால அட்டவணையில் வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டம்(B.Sc) மற்றும் இளம் கல்வியியல்(B.Ed) பட்டப்படிப்பு முடித்தால் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தகுதி உண்டு.

| http://www.kalvisolai.com