Monthly Archives: April, 2011

எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., கவுன்சிலிங் அறிவிப்பு :மே 16 முதல் விண்ணப்பங்கள்

எம்.பி.பி.எஸ்., மற்றும் பல் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான முதற்கட்ட கவுன்சிலிங், ஜூன் 30 ல் துவங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள், மே 16 முதல் வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவு விரைவில் வெளிவரும் நிலையில், அடுத்த கல்வியாண்டுக்கான (2011-12) பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படிப்பு சேர்க்கைக்கான பணிகள், ஒவ்வொரு துறையிலும் மும்முரமாக துவங்கியுள்ளன. பொறியியல் சேர்க்கைக்கான பணிகளை ஏற்கனவே அண்ணா பல்கலை துவக்கிவிட்ட நிலையில், தற்போது மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைப் பணிகளும் துவங்கியுள்ளன. தமிழகத்தில், 17 அரசு மருத்துவக் கல்லூரிகளும், எட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. அரசு மருத்துவக் கல்லூரிகளில், 1,653 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டில், 635 இடங்கள் என, மொத்தம், 2,283 இடங்கள், கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளன.

பல் மருத்துவப் படிப்பை பொறுத்தவரை, ஒரே ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள, 85 இடங்கள் மற்றும் 17 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடான, 891 இடங்கள் ஆகியவை சேர்த்து, 976 இடங்கள், கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன. மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு, மே 15ம் தேதி வெளியிடப்படும் என்றும், 16ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்றும், உயர்கல்வித் துறை செயலர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன் 2ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கை முக்கிய விவரம்
மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியீடு………15.5.11
விண்ணப்பங்கள் விற்பனை ஆரம்பம் ………..16.5.11
விண்ணப்பம் விற்பனை கடைசி நாள்……… 2.6.11
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க
கடைசி நாள்………………………………………….2.6.11
தர வரிசைப் பட்டியல் வெளியீடு………….. 21.6.11
முதற்கட்ட கவுன்சிலிங் ஆரம்பம்…………..30.6.11
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ஒரு லட்சம் விண்ணப்பங்கள் அச்சடித்து தயாராக வைக்கப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. எஸ்.சி., – எஸ்.டி., பிரிவு மாணவர்கள், இலவசமாக விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். இதர பிரிவு மாணவர்கள், 500 ரூபாய் செலுத்தி, விண்ணப்பங்களை பெற வேண்டும்.

>எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., கவுன்சிலிங் அறிவிப்பு :மே 16 முதல் விண்ணப்பங்கள்

>

Interesting video clippings

>Interesting video clippings

>

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்(SSA) திரு சி.சக்கரபாணி M.Sc.,M.Ed, அவர்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழா

>திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்(SSA) திரு சி.சக்கரபாணி M.Sc.,M.Ed, அவர்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழா

>

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்(SSA) திரு சி.சக்கரபாணி M.Sc.,M.Ed, அவர்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழா 

10th SAMACHEERKALVI TEXT BOOK FREE DOWNLOAD

10th SAMACHEERKALVI SOCIAL SCIENCE FREE DOWNLOAD

10th SAMACHEERKALVI ENGLISH TEXT BOOK FREE DOWNLOAD

>10th SAMACHEERKALVI TEXT BOOK FREE DOWNLOAD

>

>10th SAMACHEERKALVI SOCIAL SCIENCE FREE DOWNLOAD

>

>10th SAMACHEERKALVI ENGLISH TEXT BOOK FREE DOWNLOAD

>

ஆசிரியர்கள் பொதுமாறுதல்-2011-2012

பள்ளிக்கல்வித்துறை- ஆசிரியர்கள் பொதுமாறுதல்-அரசு/நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள்/ தலைமை ஆசிரியர்களுக்கு 2011-2012ம் கல்வியாண்டில் பொதுமாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை 21.04.2011 முதல் 10.05.2011 க்குள் மூன்று பிரதிகளில் பெற்று மாறுதல் விண்ணப்பத்தினை தலைமையாசிரியர்கள் மேலொப்பம் இட்டு 12.05.2011 அன்றுக்குள்  வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும்.

>ஆசிரியர்கள் பொதுமாறுதல்-2011-2012

சமச்சீர்க்கல்வி மக்கள் கருத்துக்களின் தொகுப்பு

>சமச்சீர்க்கல்வி மக்கள் கருத்துக்களின் தொகுப்பு

>

என்.எஸ்.கிருஷ்ணன் – சி‌ரிக்க வைத்த சிந்தனையாளர்

நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் (என்.எஸ்.கே.) பிறந்தது கன்னியாகும‌ரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள ஒழுகினசே‌ரி. அப்பா சுடலையாண்டி பிள்ளை, தாய் இசக்கியம்மாள். பிறந்த வருடம் 1908 நவ. 29 ஆம் நாள். ஏழு பே‌ரில் இவர் மூன்றாவது பிள்ளை. வறுமை காரணமாக நான்காம் வகுப்புடன் படிப்பு தடைபடுகிறது. 

என்.எஸ்.கே.-யின் ஆரம்ப நாட்கள் கடுமையானவை. காலையில் டென்னிஸ் கோர்ட்டில் பந்து பொறுக்கிப் போடும் வேலை. பிறகு மளிகைக் கடைக்கு பொட்டலம் மடிக்க‌ச் செல்வார். மாலையில் நாடகக் கொட்டாயில் தின்பண்டங்கள் விற்பார். நாடகம் அவரை மிகவும் ஈர்த்தது. மகனின் விருப்பம் அறிந்த தந்தை ஒழுகினசே‌ரியில் நாடகம் போட வந்த ஒ‌ரி‌ஜினல் பாய்ஸ் கம்பெனியில் அவரை சேர்த்துவிடுகிறார். சிறுவனின் நாடக வாழ்க்கை ஆரம்பமாகிறது.
பாய்ஸ் நாடக கம்பெனியிலிருந்து டி.கே.எஸ். சகோதரர்களின் ஸ்ரீ பால சண்முகானந்தா நாடக சபையில் சேர்கிறார் கிருஷ்ணன். அங்கிருந்து பால மீனரஞ்சனி சங்கீத சபை. பல நாடக கம்பெனிகள் மாறினாலும் அவருக்கு டி.கே.எஸ். சகோதரர்களின் நாடக சபையே மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது. 
ஒப்பந்தத்தை மீறி பால மீனரஞ்சனி சங்கீத சபையிலிருந்து வெளியேறி மீண்டும் ஸ்ரீ பால சண்முகனாந்தா நாடக சபையில் சேர்கிறார். இதனால் கோபமுற்ற பால மீனரஞ்சனி சங்கீதா சபை ஜெகன்னாத அய்யா, கிருஷ்ணன் மீது பணம் கையாடல் செய்ததாக காவல் நிலையத்தில் பொய்யாக புகார் தருகிறார். ஆலப்புழையில் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் கைது செய்யப்படுகிறார்.
இந்த முதல் கைதுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டார் கிருஷ்ணன். அந்த கைது தமிழ்நாட்டையே உலுக்கியது.
நாடகத்தில் பல ப‌ரீட்சார்த்த முயற்சிகளை கலைவாணர் மேற்கொண்டார். வில்லு‌ப் பாட்டை நாடகத்தில் முதன் முதலாக புகுத்தியவர் இவரே. தேசபக்தி நாடகத்தில் காந்தி மகான் கதை என்ற பெய‌ரில் வில்லு‌ப் பாட்டை சேர்த்து காந்தியின் மது அரு‌ந்தாமை கொள்கையை‌ப் பரப்பினார். இந்த நாடகத்தில் கலைவாணர் ராட்டையுடன் வரும் காட்சிக்காக நாடகம் தடைசெய்யப்பட்டது.
கிந்தனார் நாடகத்தில் பாகவதர் வேடத்தில் கலைவாணர் செய்யும் காலட்சேபம் பிரசித்திப் பெற்றது. அன்பே கடவுள் என்ற முகவுரையுடனே காலட்சேபம் தொடங்கும். இதில் கலைவாணர் எழுதிய ரயில் பாடல் குறித்து திராவிட நாடு பத்தி‌ரிகையில் கட்டுரை ஒன்று எழுதினா‌் அண்ணர். சாதி, மத ஏற்றத்தாழ்வை ரயில் இல்லாமல் செய்ததை அந்த பாடலில் குறிப்பிட்டிருந்தார் கலைவாணர்.
கரகரவென சக்கரம் சுழல

கரும்புகையோடு வருகிற ரயிலே

கனதனவான்களை ஏற்றிடும் ரயிலே

ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே 

மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி மதபேதத்தை ஓழித்திட்ட ரயிலே.

நாடகத்தில் கலைவாணர் செய்த சாதனைகள் பல. திரைத்துறையில் காலடி வைத்த பிறகும் அவரது நாடகம் மீதான தாகம் குறையவில்லை. பிறருக்கு உதவுவதற்காகவே அவர் பலமுறை நாடகம் போட்டிருக்கிறார். நாடக கம்பெனி ஏதேனும் நொடித்துப் போனால் கலைவாணருக்கு சேதி வரும். அவர் சென்று ஒரு நாள் நடித்துவிட்டு வருவார். அந்த நாடகம் கலைவாணர் நடித்தார் எனபதற்காகவே மக்களிடம் வரவேற்பை பெறும்.
கலைவாண‌ரின் திரை வாழ்க்கையை தொடங்கி வைத்த படம் எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய சதிலீலாவதி. எஸ்.எஸ்.வாசன் எழுதி ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் கலைவாணருக்கு மட்டுமில்லாது பல ஜாம்பவான்களுக்கு அறிமுகப் படமாக அமைந்தது. எம்.‌ஜி.ஆர்., எம்.‌ஜி.சக்கரபாணி, டி.எஸ்.பாலையா, எம்.கே.ராதா, எம்.வி.மணி, கே.வி.தங்கவேலு ஆகியோர் இந்தப் படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்கள்.
தனது முதல் படத்திலேயே தனக்கான காட்சிகளை கலைவாணரே எழுதிக் கொண்டார். தமிழ் திரையில் நகைச்சுவைக்கென தனி ட்ராக் எழுதியவரும் அவரே. முதல் படம் சதிலீலாவதி என்றாலும் திரைக்கு முதலில் வந்த படம் மேனகா. இது கலைவாணர் நடித்து வந்த நாடகம். திரைப்படமாக எடுத்த போது நாடகத்தில் கலைவாணர் நடித்து வந்த சாமா அய்யர் வேடத்தை அவருக்கே அளித்தனர்.

சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் திரு.என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் சிரிப்பு பற்றிய இந்த பாடல் ஒரு சிறந்த நகைச்சுவை மற்றும் சிந்தனை நிறைந்த பாடல்.
திரு.என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களும், அவர் மனைவி திருமதி.டி.ஏ.மதுரம் அவர்களும் இந்த பாடலில் சிரிப்பு…..சிருப்பு…..என பலவகைச் சிரிப்புகளை பட்டியலிடுவது மட்டுமல்லாது, அவற்றை செய்து காட்டியும் நம்மை பாடல் முழுவதுமாய் சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைத்திருக்கிறார் திரு.என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள்.

>என்.எஸ்.கிருஷ்ணன் – சி‌ரிக்க வைத்த சிந்தனையாளர்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 14 ந்தேதி வெளியாகும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 25 ந்தேதி வெளியிடப்படும்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா,பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 14 ந்தேதி வெளியாகும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 25 ந்தேதி வெளியிடப்படும். பிளஸ் 2 தேர்வு விடைத் தாள் திருத்தும் பணி நிறை வடைந்து விட்டன. எஸ்.எஸ். எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது என்று கூறினார்

>பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 14 ந்தேதி வெளியாகும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 25 ந்தேதி வெளியிடப்படும்

>

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா,பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 14 ந்தேதி வெளியாகும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 25 ந்தேதி வெளியிடப்படும். பிளஸ் 2 தேர்வு விடைத் தாள் திருத்தும் பணி நிறை வடைந்து விட்டன. எஸ்.எஸ். எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது என்று கூறினார்

பள்ளிக்கல்வித்துறை- ஆசிரியர்கள் பொதுமாறுதல்-அரசு/நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள்/ தலைமை ஆசிரியர்களுக்கு 2011-2012ம் கல்வியாண்டில் பொதுமாறுதல் – விண்ணப்பங்கள் பெறுதல் சார்ந்தான – அறிவுரை

1) 2011-2012 மாறுதல் கலந்தாய்வு தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டதும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.  அங்ஙனம் அனுப்பி வைக்கப்படும் அரசாணையின் நகலினை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு உடனடியாக அனுப்பி அதற்கான ஒப்பத்தினைப் பெற்று கோப்பில் வைக்க வேண்டும்.  தலைமையாசிரியர் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுக்கும் அதனை சுற்றுக்கு விட்டு ஒப்புதல் பெறவேண்டும்.

2) பொது மாறுதல் கோரும் விண்ணப்பப் படிவத்தின் நகல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அதனை அனைத்து உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளுக்கும் உடன் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

3) பொது மாறுதல் கோரும் விண்ணப்பப் படிவத்தில் உள்ள அனைத்து கலங்களும் சரியாக பூர்த்தி செய்யப் பட்டுள்ளனவா என ஆய்வு செய்து தலைமையாசிரியரால் ஒப்பமிடப்பட வேண்டும்.

4) ஆசிரியர் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்குமுறை மற்றும் மேல்முறையீடு) விதிகள்  17 (a), 17 (b),ன் கீழ் ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளதா என்பதையும், நீண்டகால விடுப்பில் உள்ளவராயின் அதன் விவரம், தற்காலிகப் பணிநீக்கத்தில் உள்ளவராயின் அதன் விவரம், ஒழுங்கு நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டவராயின் அதன் விவரம், நிர்வாக நலன் கருதி மாறுதல் அளிக்கப்பட்டிருப்பின் அதன் விவரம் போன்ற விவரங்களைத் தெளிவாக அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள கலத்தில் தலைமையாசிரியரால் குறிப்பிடப்பட வேண்டும்.

5) மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை 21.04.2011 முதல்  10.05.2011 க்குள் மூன்று பிரதிகளில் பெற்று மாறுதல் விண்ணப்பத்தினை தலைமையாசிரியர்கள் மேலொப்பம் இட்டு 12.05.2011 அன்று வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும்.

6) ஒரே மாவட்டத்திற்குள் மாறுதல் கோரும் ஆசிரியர்கள் சார்பாக முழுமையாக விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 1 பிரதியிலும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் ஆசிரியர்கள் சார்பாக முழுமையாக விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 2 பிரதிகளிலும் தலைமையாசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

7) விண்ணப்பம் பெற்ற 5 தினங்களுக்குள் தகுதியுள்ள விண்ணப்பம்/தகுதியிலா விண்ணப்பம் நிராகரிக்கப்பட வேண்டியது என வகைப்படுத்தி A மற்றும் B பதிவேடுகள் தயார் செய்து அவற்றைப் பதிந்து முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்பம் பெற்று பராமரிக்கப்பட வேண்டும்.

8) கலந்தாய்விற்கான நாள் மற்றும் நேரம் இவ்வியக்ககத்தால் பின்னர் அறிவிக்கப்படும்.

9) வெளிமாவட்ட மாறுதல் கோரும் விண்ணப்பங்களைத் தொகுத்து முதன்மைக் கல்வி அலுவலரின் மேலொப்பத்துடன் 12.05.2011 க்குள் சம்மந்தப்பட்ட வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குக் கிடைக்கத் தக்க வகையில் தனிநபர் மூலமாகவோ, விரைவு அஞ்சல் மூலமாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

10) ஒரு ஆசிரியர் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களுக்கு மாறுதல் விண்ணப்பித்திருப்பினும், அந்த விண்ணப்பத்தினை சான்றொப்பமிட்டு அனுப்பலாம்.

11) அரசு உயர்நிலைப்பள்ளி/அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளி/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் சார்ந்தது:-

     அரசு உயர்நிலைப்பள்ளி/ நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களில் மாறுதல் கோருபவர்களின் விண்ணப்பங்களை 21.04.2011 முதல் 10.05.2011 வரை சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கோரிபெற்று, அதனை சரிபார்த்து முதன்மைக் கல்வி அலுவலர் மேலொப்பத்துடன் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு தனி நபர்மூலம் 12.05.2011  அன்று  தவறாமல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

     மேற்படி மாறுதல் விண்ணப்பங்களில் மாவட்டத்திற்குள் மாறுதல் கோருபவர்களின் விண்ணப்பங்களை, தனியாகவும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோருபவர்களின் விண்ணப்பங்களை தனியாகவும் தொகுத்து அனுப்பி வைக்க வேண்டும்.  மேலே கூறப்பட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் தவறாது பின்பற்றி உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆசிரியர்கள் மாறுதல் கோரும் பணியினை முடித்து கலந்தாய்வுக்குத் தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

>பள்ளிக்கல்வித்துறை- ஆசிரியர்கள் பொதுமாறுதல்-அரசு/நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள்/ தலைமை ஆசிரியர்களுக்கு 2011-2012ம் கல்வியாண்டில் பொதுமாறுதல் – விண்ணப்பங்கள் பெறுதல் சார்ந்தான – அறிவுரை

முருங்கப்பாக்கம் பள்ளியில் மாணவிகளுக்கு வினாவிடை புத்தகம் வழங்கும் விழா

>ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கும் போது அனைத்து மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் கிடைக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை

>

2011ம் கல்வி ஆண்டுக்காக 197 தலைப்புகளில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு 1 கோடியே 33 லட்சம் புத்தகங்களும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 1 கோடியே 32 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. 2 முதல் 10ம் வகுப்பு வரை 4 கோடியே 49 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளது. விலை இன்னும் இறுதி செய்யப்படவில்லை.ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கும் போது அனைத்து மாணவர்களுக்கு புத்தகம் கிடைக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., சி 16 ராக்கெட்

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தயாரிப்பில் உருவான, பதினெட்டாவது பி.எஸ். எல்.வி., ராக்கெட், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் சீறப்பாய்ந்த சில நிமிடங்களில் திட்டமிட்டபடி செயற்கோள்கள் அதன் இலக்கை அடைந்தது. செயற்கோள்கள் சரியான சுற்றுப்பாதையில் செல்வதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட முதல் ‌செயற்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாம் ஏவுதளத்தில் இருந்து, இன்று காலை, சரியாக 10:12க்கு, பி.எஸ்.எல்.வி -சி16 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. முந்தைய ராக்கெட்டுகளை விட, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக , “இஸ்ரோ’ தெரிவித்துள்ளது. இதற்கான, ஐம்பத்து நான்கரை மணி நேர கவுன்ட் டவுண், 18ம் தேதி அதிகாலை 3.42 மணிக்கு துவங்கியது.
இஸ்ரோ சேர்மன் பேட்டி : பி.எஸ்.எல்.வி., சி 16 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதாக இஸ்ரோ சேர்மன் ராதாகிருஷ்ணன் அறிவித்தார். ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டப் பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது : இந்த ஆண்டின் முதல் செயற்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இஸ்ரோ மையத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் நல்கிய முழு ஒத்துழைப்புக்கு நிர்வாகத்தினர் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
பி.எஸ்.எல்.வி., சி16 சிறப்பு : இன்று செலுத்தப்பட்ட பி.எஸ். எல்.வி., ராக்கெட், முந்தைய இதே வரிசை ராக்கெட்களில் இருந்து, பல்வேறு வகையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது . பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் இதுவரை 25 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும், 19 உள்நாட்டு செயற்கைக்கோள்களும் அனுப்பப்பட்டுள்ளன. இதில், சந்திரனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் – 1 செயற்கைக்கோள் குறிப்பிடத்தக்கது. இன்று விண்ணில் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில், இந்திய தயாரிப்பில் உருவான 1,206 கிலோ எடை கொண்ட, “ரிசோர்ஸ்சாட்-2′ என்ற தொலை உணர்வு செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம், இயற்கை வளம் குறித்து அதிகம் அறிய முடியும். மேலும் சுற்றுச்சூழல் குறித்தும், இயற்கை பேரழிவுகள் தொடர்பாகவும், ஆராய முடியும். இத்துடன் 92 கிலோ எடை கொண்ட, இந்திய – ரஷ்ய கூட்டு தயாரிப்பில் உருவான, “யூத்சாட்’ என்ற, சிறிய ரக செயற்கைக்கோளும், சிங்கப்பூரில் உருவான 106 கிலோ எடை கொண்ட, “எக்ஸ்- சாட்’ என்ற சிறிய ரக செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டன. இதில், யூத்சாட் செயற்கைக்கோள் கல்லூரி மாணவர்களுக்கு உதவும் வகையில், வான்வெளிக்கும், பூமி மண்டலத்திற்கும் உள்ள தொடர்பை ஆராயும் வகையில், நவீன தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. 
இதுவரை : பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் இதுவரை 25 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும், 19 உள்நாட்டு செயற்கைக்கோள்களும் அனுப்பப்பட்டுள்ளன. உள்நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் விபரம் பின்வருமாறு : 
1. பி.எஸ்.எல்வி., -டி1 செப்டம்பர் 20, 1993 ( தோல்வி)
2. பி.எஸ்.எல்வி., -டி2 ர்அக்டோபர் 15 , 1994 (வெற்றி)
3. பி.எஸ்.எல்வி., -ஈ3 மார்ச் 21, 1996 (வெற்றி)
4. பி.எஸ்.எல்வி., -இ1 செப்டம்பர் 29, 1997 (வெற்றி)
5. பி.எஸ்.எல்வி., -இ2 மே 26, 1999 (வெற்றி) 
6. பி.எஸ்.எல்வி., -இ3 அக்டோபர் 22, 2001 (வெற்றி)
7.பி.எஸ்.எல்வி., -இ4 செப்டம்பர் 12 , 2002 (வெற்றி)
8. பி.எஸ்.எல்வி., -இ5 அக்டோபர் 17, 2003 (வெற்றி)
9.பி.எஸ்.எல்வி., -இ6 மே 5, 2005 (வெற்றி)
10. பி.எஸ்.எல்வி., -இ7 ஜனவரி 10, 2007 (வெற்றி)
11. பி.எஸ்.எல்வி., -இ8 ஏப்ரல் 23, 2007 (வெற்றி) 
12. பி.எஸ்.எல்வி., -இ10 ஜனவரி 21, 2008 (வெற்றி) 
13. பி.எஸ்.எல்வி., -இ9 ஏப்ரல் 28, 2008 (வெற்றி)
14. பி.எஸ்.எல்வி., -இ11 அக்டோபர் 22, 2008 (வெற்றி) 
15. பி.எஸ்.எல்வி., -இ12 ஏப்ரல் 20, 2009 (வெற்றி)
16. பி.எஸ்.எல்வி., -இ14 செப்டம்பர் 23, 2009(வெற்றி)
17.பி.எஸ்.எல்வி., -இ15 ஜூலை 12, 2010 (வெற்றி)

>வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., சி 16 ராக்கெட்

SMS

>கால்நடை மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் மே மாதம் 2ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை விநியோகம்.

>

கால்நடை மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் மே மாதம் 2ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை விநியோகம் செய்யப்பட உள்ளது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க கடைசி நாள் ஜூன்7ம் தேதி. ஜூலை 13,14ம் தேதிகளில் கவுன்சிலிங் நடைபெறும் என்று கால்நடை மருத்துவ பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு த.ராஜேந்திரன் அவர்கள்.

>இணையதளத்தில் சமச்சீர்கல்வி 10ம் வகுப்பு பாடப்புத்தகம் : அரசு தகவல்

>

இணையதளத்தில் சமச்சீர்கல்வி 10ம் வகுப்பு ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி பாடப்புத்தகங்கள் ஏப்ரல் 22 அன்று வெளியிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பள்ளிக்கல்வி டாட் இன் என்ற இணையதளத்தில் பாடப்புத்தகங்கள் வெளியிடப்படும் எனவும் அதை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கல்வி அதிகாரி பதவி காலி இடங்கள் டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை உதவி கமிஷனர் மற்றும் மருத்துவ அதிகாரி பதவிகளில் 21 காலி இடங்கள் டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும்.

தமிழக அரசின் வெவ்வேறு துறைகளுக்கு தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.

இதற்காக குரூப்-1, குரூப்-2, குரூப்-4 என்ற பல்வேறு நிலைகளில் போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப்-1, குருப்-2 நிலையிலான போட்டித்தேர்வுகளை பட்டதாரிகள் எழுதலாம். இதேபோல், குரூப்-4 தரத்திலான தேர்வுகளை எழுத 10-ம் வகுப்பு தேர்ச்சியே போதுமானது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அதிகாரி பணி இடங்களை நிரப்ப போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே நடத்தப்பட்ட குரூப்-2 தேர்வுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டு, எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண்ணும் வெளியிடப்பட்டுள்ளன. இறுதி தேர்வுபட்டியல் மே மாதம் முதல் வாரத்தில் வெளியாகும்.

இந்த நிலையில், புதிய பணி நியமனம் பற்றிய அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்பட உள்ளது. அதன்படி, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் 9 உதவி கமிஷனர் பணி இடங்களும், பொது சுகாதாரத்துறையில் 12 மருத்துவ அதிகாரி இடங்களும், கால்நடை மருத்துவ துறையில் 6 பால்வள உதவியாளர் பணி இடங்களும் டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.

இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் பதவிக்கு பி.எல். பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க எம்.பி.பி.எஸ். பட்டதாரிகள் தகுதியுடையவராவர்.

இந்த அறிவிப்புகளை தொடர்ந்து, இளநிலை உதவியாளர், தொழிலாளர் உதவி கமிஷனர், மாவட்ட கல்வி அதிகாரி, ஆவண காப்பக உதவி ஆசிரியர் என்று அடுத்தடுத்து பல்வேறு பணி நியமனங்கள் வர இருக்கிறது.

>மாவட்ட கல்வி அதிகாரி பதவி காலி இடங்கள் டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து: ஒரு "ஹீரோ’வின், "ப்ளாஷ்பேக்’

“ஒரு நாள் இந்த ஆபீசுக்குள்ளே போய், கலெக்டர் சீட்டில் உட்காரணும்…’ புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை தன் சகோதரருடன் சைக்கிளில் கடக்கும்போதே, ஆசை விதை, அந்த சிறுவனுக்குள் முளைவிட்டிருந்தது. அந்த விதை, இன்று விருட்சமாக வளர்ந்து, மதுரையில் மையம் கொண்டு, நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தேர்தல் களத்தை சூடாக்கிய அந்த, “ஹீரோ’ மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம்.

புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுணை கிராமத்தை சேர்ந்த, உபகாரம் என்பவருக்கு, ஐந்து மகன்கள். இதில் கடைக்குட்டியாய் பிறந்தவர் சகாயம். பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பு, புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு, சென்னையில் முதுநிலை பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு என, அடுத்தடுத்து தன் கல்வி தகுதியை சகாயம் உயர்த்திக் கொண்டார். சிறுவனாய் இருந்தபோது முளைத்த, “கலெக்டர் கனவு’ நிறைவேற, யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத வைத்தது. ஐ.ஏ.எஸ்., கிடைக்காத நிலையில், ஏற்கனவே எழுதியிருந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியாக, துணை கலெக்டரானார் சகாயம். தர்மபுரியில் பயிற்சி கலெக்டர், நீலகிரி மாவட்டம், கூடலூரில், ஆர்.டி.ஓ., திருச்சி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி, காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ., திருச்சி சிவில் சப்ளைஸ் முதுநிலை மண்டல மேலாளர், கோவை கலால் பிரிவு துணை கமிஷனர், சென்னை, டி.ஆர்.ஓ., தொழில் வணிகத்துறை இணை இயக்குனர், மாநில தேர்தல் ஆணைய செயலர், நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர், நாமக்கல் மாவட்ட கலெக்டர், புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர், மதுரை கலெக்டர் என, இவர், “பந்தாடப்பட்ட’ விதமே இவரது நேர்மைக்கு சான்றாக சொல்லலாம்.

பதவி வகித்த இடங்களில் சகாயம் படைத்த சாதனைகளில் சில:

*அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், நீலகிரி மாவட்டம், கூடலூரில் ஆர்.டி.ஓ.,வாக இருந்த போது, நேர்மையான நடவடிக்கைகளால், அப்பகுதி மக்களின், “தோழனாக’ மாறினார் சகாயம். அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த லீனாநாயருக்கு, சகாயத்தின் செல்வாக்கு சங்கடத்தை கொடுக்க, அதிரடியாக அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டார்.

*காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ.,வாக இருந்தபோது, மாசடைந்த குளிர்பானத்தை விற்பனை செய்தது தொடர்பாக வந்த புகாரையடுத்து, “பெப்சி’ குளிர்பான உற்பத்தி ஆலைக்கு, “சீல்’ வைத்து பரபரப்பு ஏற்படுத்தினார். பாலாற்றில் மணல் திருட்டை தடுக்க எடுத்த கடுமையான நடவடிக்கையால், கொலை முயற்சி தாக்குதலில் இருந்து தப்பினார்.

கோவை மாவட்டத்தில் கலால் துறை துணை ஆணையராக இருந்த போது, மதுபானக் கடை ஏலத்தை அரசு விதிமுறைப்படி நடத்த வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். அரசியல்வாதிகள், பினாமிகள் பெயரில் ஏராளமான கடைகளை எடுப்பதையும், “சிண்டிகேட்’ முறையில் நடந்த முறைகேடுகளுக்கு, “செக்’ வைத்தார்.

*அ.தி.மு.க., ஆட்சி நடந்த போது, திருப்பூர் அ.தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான பிராந்தி கடைகளில் அதிரடி சோதனைகளை நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினார். கோவையில் பிரபலமான சைவ ஓட்டலில், அனுமதி பெறாமல் மது வகைகள் பதுக்கி விற்கப்படுவதை அறிந்து, நேரடியாக, “ரெய்டு’ நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

*சென்னை டி.ஆர்.ஓ.,வாக இருந்தபோது, பிரபல ஓட்டல் நிறுவனம் ஆக்கிரமித்திருந்த, 48 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிரடியாக மீட்டார். இதேபோல், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகள், சகாயத்தால் அரசின் வசமானது. சுனாமி நிவாரண பணிகளில் நடந்த முறைகேடுகளை களைந்து, உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் பலன் பெற உதவினார்.

தி.மு.க., ஆட்சியின் போது, முதல்வருக்கு இவர் எழுதிய கடிதம், அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “நேர்மையான அதிகாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்’ என்பதோடு, தன் சொத்து விவரம், வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை கடிதத்தில் குறிப்பிட்டு, “இது தவிர எனக்கு ஏதாவது சொத்து இருந்தால், நடவடிக்கை எடுங்கள்’ என்று பகிரங்கமாக சவால் விடுத்தார். அதோடு, “நியாயம் கேட்டு, குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பேன்’ என்ற போர் குரலை தொடர்ந்தே, சகாயத்திற்கு ஐ.ஏ.எஸ்., தகுதி உயர்வு கிடைத்தது என்கிறது நேர்மையான அதிகாரிகள் வட்டாரம்.

*நாமக்கல் மாவட்ட கலெக்டராக சகாயம் பணியாற்றிய இரண்டரை ஆண்டுகள், அந்த மாவட்ட மக்களுக்கு பொற்காலமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் தன் சொத்து கணக்கை வெளியிட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டத்தில் பொறாமைக்குள்ளானார்; பொதுமக்கள் மத்தியில் பெருமைக்குள்ளானார்.

*இவரது நேர்மைக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த அங்கீகாரம், தற்போதைய மதுரை கலெக்டர் பதவி. இவரது இருக்கைக்கு பின்புறம் இருக்கும் வாசகங்கள், “லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து!’