Monthly Archives: February, 2011

பிப்ரவரி26 முதல் மறியல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது குறித்து முதன்மைகல்வி அலுவலருக்கு முதுகலை மற்றும் தலைமைஆசிரியர்கள் கடிதம் அனுப்பினர்

>பிப்ரவரி26 முதல் மறியல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது குறித்து முதன்மைகல்வி அலுவலருக்கு முதுகலை மற்றும் தலைமைஆசிரியர்கள் கடிதம் அனுப்பினர்

>

அரசு வேலைக்கு அதிகரிக்கும் மோகம்

கால் காசு என்றாலும் கவர்மென்ட் காசு என்பார்கள் அரசு வேலை பார்ப்பவர்கள். அது சம்பளம் குறைவாக இருந்தபோது சொன்னது. இப்போது நிலைமை  அப்படியில்லை. சம்பளம் அதிகமாகவே கிடைக்கிறது. அதனால்தான் 3500 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் 9.5 லட்சம்பேர்  தேர்வு எழுதியுள்ளனர். அரசு வேலைக்கு இன்னமும் மவுசு குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள 3,484 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தியுள்ளது. 1,077 இடங்கள் எஸ்சி, எஸ்டி பிரிவின ருக்கும் மீதியுள்ள 2407 இடங்கள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வேலைகளுக்கு மொத்தம் 10 லட்சத்து 44 ஆயிரம் பேர் விண்ணப்பித்தி ருந்தனர். 
85 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட, 9 லட்சத்து 59 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த  3,456 மையங்களில் 9 லட்சத்து 59 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். சென்னை மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 8,007 பேர் எழுதினர். மாணவ, மாணவிகள்,  இளைஞர்கள், மாற்றுத் திறனாளிகளும் தேர்வில் பங்கேற்றனர். பல பெண்கள் கைக்குழந்தையுடன் வந்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத சென்ற நேரத்தில்,  பால் புட்டியும் கையுமாக குழந்தைகளுடன் கணவன்மார் தேர்வு மையத்துக்கு வெளியே காத்திருந்தனர்.

Read more »

>அரசு வேலைக்கு அதிகரிக்கும் மோகம்

வாசிப்புப் பழக்கத்தின் முக்கியத்துவம்

எழுத்தறிவு என்பது பள்ளிக் கல்வியின் ஆதாரமாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் எழுத்தறிவு என்பது முதியோர் கல்வி யுடன் மட்டுமே பேசப்படும் பொருளாகிவிட் டது. உலகில் உள்ள எழுத்தறிவற்ற மக்கட் தொகையில் பெரும் பகுதியினர் இந்தியா வைச் சேர்ந்தவர்கள் என்பதால் இதில் ஒன் றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏன் இந்தி யாவில் தொடர்ந்து எழுத்தறிவற்றவர்களின் எண்ணிக்கை நீடிக்கிறது? இதற்குக் கார ணம் இந்தியாவில் ஆரம்பக் கல்வி கற்ற பின் னரும் குழந்தைகளின் எழுத்தறிவின்மை தொடருவதுதான். குழந்தைகள் எட்டாண்டு கால ஆரம்பக் கல்வியை முடிக்காமலேயே வெளிவருவதாலும், ஆரம்பக் கல்வியை விட்டு வெளி வந்த பின்னர் படிக்கும் பழக் கத்தை விட்டுவிடுவதாலும் மீண்டும் எழுத் தறிவின்மை நிலைக்கே சென்றுவிடுகின்ற னர். எழுத்தறிவு பெற்ற குழந்தைகளிடமும் தொடர்ந்து படிக்கும் பழக்கத்தையும், ஆர்வத் தையும் பள்ளிக்கூடம் அவர்களுக்கு கற்றுக் கொடுக்காத குறையுள்ளது. படிக்கும் பழக்கம் தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ளவும், விழிப்புணர்வுடன் செயல்படவும் உதவிடும் என்பதை உணர்பவர்கள் மிகக் குறைவு.
பள்ளிக் குழந்தைகளிடம் செய்யப்பட்ட ஆய்வில் அவர்களின் படிக்கும் திறன் மிகவும் குன்றியிருப்பதும், அவர்களுக்கு அதற்கான பயிற்சியே கொடுக்கப்படுவதில்லை என் பதும் வெளிவந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதைச் சரி செய்வதற்கு பள்ளிக் கூட அளவில் தக்க நடவடிக்கை எடுக்க வில்லையெனில், புதிதாக நிறைவேற்றப்பட் டுள்ள கல்வி பெறும் உரிமைச் சட்டமே செயலற்றுப் போய்விடும். கற்றுக் கொடுக்கும் முறையில் மிகப் பெரிய மாற்றம் வரவேண்டும்.

Read more »

>வாசிப்புப் பழக்கத்தின் முக்கியத்துவம்

பத்தாம் வகுப்பு, ஓஎஸ்எல்சி வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள்-தனித் தேர்வர்களுக்கும் மார்ச் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ஹால் டிக்கெட் வினியோகம் செய்யப்படும்

சென்னை:அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பத்தாம் வகுப்பு, ஓஎஸ்எல்சி வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 28-ல் தொடங்கி ஏப்ரல் 11ம் தேதி வரை நடக்கிறது. மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் வகுப்பு தேர்வுகள் மார்ச் 22-ல் தொடங்கி ஏப்ரல் 11 வரை நடக்கிறது. இந்த தேர்வுகளை எழுத விண்ணப்பித்த அனைத்து தனித் தேர்வர்களுக்கும் மார்ச் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ஹால் டிக்கெட் வினியோகம் செய்யப்படும். ஹால் டிக்கெட்டுகளை சம்பந்தப்பட்ட மண்டலத் துணை இயக்குநர்களால் அறிவிக்கப்படும் வினியோக மையங்களில் பெற்றுக் கொள்ளலாம். ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட மண்டல அரசுத் தேர்வுகள் துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். ஆங்கிலோ இந்தியன் தேர்வை எழுத உள்ளவர்கள் சென்னையில் உள்ள அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தேர்வுகளுக்கு இதுவரை விண்ணப்பிக்காமல் உள்ளவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இவ்வகை தேர்வர்கள் தேர்வுக் கட்டணம் ரூ.125 உடன், கூடுதல் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 16ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு அதே நாளில் ஹால்டிக்கெட் வழங்கப்படும்.

>பத்தாம் வகுப்பு, ஓஎஸ்எல்சி வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள்-தனித் தேர்வர்களுக்கும் மார்ச் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ஹால் டிக்கெட் வினியோகம் செய்யப்படும்

>

சென்னை:அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பத்தாம் வகுப்பு, ஓஎஸ்எல்சி வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 28-ல் தொடங்கி ஏப்ரல் 11ம் தேதி வரை நடக்கிறது. மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் வகுப்பு தேர்வுகள் மார்ச் 22-ல் தொடங்கி ஏப்ரல் 11 வரை நடக்கிறது. இந்த தேர்வுகளை எழுத விண்ணப்பித்த அனைத்து தனித் தேர்வர்களுக்கும் மார்ச் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ஹால் டிக்கெட் வினியோகம் செய்யப்படும். ஹால் டிக்கெட்டுகளை சம்பந்தப்பட்ட மண்டலத் துணை இயக்குநர்களால் அறிவிக்கப்படும் வினியோக மையங்களில் பெற்றுக் கொள்ளலாம். ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட மண்டல அரசுத் தேர்வுகள் துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். ஆங்கிலோ இந்தியன் தேர்வை எழுத உள்ளவர்கள் சென்னையில் உள்ள அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தேர்வுகளுக்கு இதுவரை விண்ணப்பிக்காமல் உள்ளவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இவ்வகை தேர்வர்கள் தேர்வுக் கட்டணம் ரூ.125 உடன், கூடுதல் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 16ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு அதே நாளில் ஹால்டிக்கெட் வழங்கப்படும்.

VILLUPURAM DEO BOOPATHI FUNCTION PHOTOES

>மக்கள் தொகை கணக்கெடுப்பில் மக்களிடம் கேட்கும் 29 கேள்விகள்

>

மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள், பிப்., 28 வரை நடைபெறுகிறது.
வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்கள் பொதுமக்களிடம் கேட்கும் 29 கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். அவை:
1. பெயர்,
2. குடும்ப தலைவருக்கு உறவு முறை,
3. இனம்,
4. பிறந்த தேதி மற்றும் வயது,
5. தற்போதைய திருமண நிலை,
6. திருமணத்தின் போது வயது,
7. மதம்,
8. ஷெட்யூல்டு வகுப்பு/ ஷெட்யூல்டு பழங்குடி,
9. மாற்றுத் திறன் (ஊனம்),
10. தாய்மொழி,
11, அறிந்த பிற மொழிகள்,
12. எழுத்தறிவு நிலை,
13. கல்வி நிலையம் செல்பவர்களின் நிலை.
14. அதிக பட்ச கல்வி நிலை,
15. கடந்த ஆண்டில் எப்பொழுதாவது வேலை செய்தாரா.
16. பொருளாதார நடவடிக்கையின் வகை,
17. நபரின் தொழில்,

Read more »

ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்திற்கு மத்திய அரசு ரூ. 625 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில், மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ் (ஆர்.எம். எஸ்.ஏ.,), பல்வேறு திட்டங்களை செயல்படுத்த 625 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 344 புதிய பள்ளிகள் துவங்குதல், 282 நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்துதல், 2,752 ஆசிரியர்கள் நியமனம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டத்தை தொடர்ந்து (எஸ்.எஸ்.ஏ.,), அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,-ராஷ்டிரிய மத்தியமிக் சிக்ஷா அபியான்) அமல் படுத்தப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் எட்டாம் வகுப்பு முடிக்கும் மாணவ, மாணவியரை, தொடர்ந்து 9, 10 ஆகிய வகுப்புகளை முடிக்கும் வகையில், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ், பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள், நடப்பு கல்வியாண்டுக்காக, பல்வேறு திட்டங்களை தீட்டி, திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் குழு விடம் அறிக்கையை சமர்ப்பித்தனர். இதை ஆய்வு செய்த குழு, தமிழகத்தின் பல்வேறு திட் டங்களை ஏற்றுக்கொண்டு, ஒட்டுமொத்தமாக 625 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ள தாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.பாரதிதாசன் பல்கலையுடன் சேர்ந்து, கல்வித்துறை நடத்திய ஆய்வில், தமிழகத்தில் கூடுதலாக 1,944 நடுநிலைப்பள்ளிகள் தேவை என கண்டறிந் துள்ளது. இந்த பள்ளிகளை துவக்கிட, மத்திய அரசின் அனுமதி ஏற்கனவே கோரப்பட்டது.

Read more »

>ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்திற்கு மத்திய அரசு ரூ. 625 கோடி ஒதுக்கீடு

வேகத்தடையை "வாய்ஸ்’ மூலம் விழிப்புணர்வு செய்யும் கருவி: தர்மபுரி மாணவர்கள் சாதனை

சாலைகளில் உள்ள வேகத்தடை மற்றும் சாலையோரங்களில் உள்ள மருத்துவமனைகள், பள்ளிகள் இருப்பதை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும் "வாய்ஸ்' விழிப்புணர்வு கருவியை, தர்மபுரி மாணவர்கள் கண்டுபிடித்து அறிமுகம் செய்துள்ளனர்.
தர்மபுரி, பிடமனேரியை சேர்ந்தவர் ஜெயபாண்டியன். அவர் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறார். 200 புதிய கண்டுபிடிப்புகள் அடங்கிய அறிவியல் மியூசியம் அமைக்க, இந்தியன் அறிவியல் கல்வி அறக்கட்டளை மூலம் நடவடிக்கை

Read more »

>வேகத்தடையை "வாய்ஸ்’ மூலம் விழிப்புணர்வு செய்யும் கருவி: தர்மபுரி மாணவர்கள் சாதனை

>

சாலைகளில் உள்ள வேகத்தடை மற்றும் சாலையோரங்களில் உள்ள மருத்துவமனைகள், பள்ளிகள் இருப்பதை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும் "வாய்ஸ்' விழிப்புணர்வு கருவியை, தர்மபுரி மாணவர்கள் கண்டுபிடித்து அறிமுகம் செய்துள்ளனர்.
தர்மபுரி, பிடமனேரியை சேர்ந்தவர் ஜெயபாண்டியன். அவர் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறார். 200 புதிய கண்டுபிடிப்புகள் அடங்கிய அறிவியல் மியூசியம் அமைக்க, இந்தியன் அறிவியல் கல்வி அறக்கட்டளை மூலம் நடவடிக்கை

Read more »

உலக அளவில் வேலை இல்லாதவர்கள் 20.50 கோடி

உலக அளவில், 20 கோடியே 50 லட்சம் பேர் வேலையில்லாமலும், இந்தியாவில், ஆறு கோடிக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையும், படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுமே இந்நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை ஏற்பட்டது. இதனால், உலகில் உள்ள எல்லா நாடுகளும் பாதிக்கப்பட்டன. அதன் பின், பொருளாதார மந்த நிலை சிறிது சிறிதாக மாறி வருகிறது. இதனால் பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சி சிறந்த முறையில் வளர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு வரை உலகில் வேலை இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 20 கோடியே 50 லட்சம் பேர். இது 6.1 சதவீதமாகும். இதில், 7 கோடியே 80 லட்சம் பேர் இளைஞர்கள். கடந்த 2007ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 7 கோடியே 35 லட்சமாக இருந்தது. உலக தொழிலாளர் நிறுவனம் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே, இந்த ஆண்டு வேலை இல்லாத தொழிலாளர்களின் எண்ணிக்கை உலகில் 20 கோடியே 33 லட்சமாக குறையும் என்று உலக தொழிலாளர் நிறுவனம் கூறியுள்ளது.

Read more »

>உலக அளவில் வேலை இல்லாதவர்கள் 20.50 கோடி

Photoes

>மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 9ம் தேதி துவக்கம். 28ம் தேதி வரை கணக்கெடுப்பு பணி நடைபெறும்.

>

"மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு வீடு வீடாக வரும் அலுவலர்களுக்கு, ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தால், சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி: இந்தியா முழுக்க ஒரே காலகட்டத்தில், 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, நாளை (9ம் தேதி) துவங்குகிறது. இந்த மாதம் 28ம் தேதி வரை கணக்கெடுப்பு பணி நடைபெறும். சென்னை மாநகர பகுதியில், மாநகராட்சி கமிஷனர் முன்னிலையில், கணக்கெடுப்பு பணி நடைபெறும். தமிழகம் முழுவதும், 150 நகராட்சிகளில், அந்தந்த நகராட்சி கமிஷனர்களின் பொறுப்பில், கணக்கெடுப்பு பணி நடக்கும். மற்ற இடங்களில், வட்டாட்சியர்களின் மேற்பார்வையில் நடக்கும். ஒட்டு மொத்த கணக்கெடுப்பு பணி, அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் பொறுப்பில் நடைபெறும். முதற்கட்டமாக, கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில், வீட்டுப் பட்டியல், வீடுகள் கணக்கெடுக்கும் பணி முடிக்கப்பட்டது. எங்கெங்கு மக்கள் வசிக்கின்றனர், எவ்வளவு வீடுகள், மின்சார வசதி, குடிநீர் வசதிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறும். 21 நாட்களில் கணக்கெடுப்பு பணி முடிக்க வேண்டும்; கால நீடிப்பு இருக்காது. தமிழகம் முழுவதும், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு, மேற்பார்வையாளர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்கள் என 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுவர்.

Read more »

பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு நாளை முதல், "ஹால் டிக்கெட்’

பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு, நாளை முதல், 11ம் தேதி வரை, “ஹால் டிக்கெட்’ வழங்கப்படுகிறது. தேர்வுத்துறை அறிவிப்பு: மார்ச் மாதம் நடக்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வை, தனித்தேர்வாக எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, 9ம் தேதி(நாளை) பிற்பகல் முதல், 11ம் தேதி வரை, “ஹால் டிக்கெட்’ வழங்கப்படும். “ஹால் டிக்கெட்’டை பெற்றதும், அதில் உள்ள அனைத்து விவரங்களும் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். அதில், ஏதேனும் பிழை இருந்தால், உடனடியாக கூடுதல் செயலரை (மேல்நிலை) அணுகி, சரி செய்து கொள்ளலாம். “ஹால் டிக்கெட்’ கிடைக்காத மாணவர்கள், உரிய காலத்தில் விண்ணப்பம் செய்ததற்கான ஆதாரங்களுடன், கூடுதல் செயலரை அணுகலாம். கல்வி மாவட்ட வாரியாக, 64 கல்வி மாவட்டங்களிலும், “ஹால் டிக்கெட்’ வினியோக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

>பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு நாளை முதல், "ஹால் டிக்கெட்’

கல்வியில் பின் தங்கிய வட மாவட்டங்களுக்கு ரூ. 132 கோடி ஒதுக்கீடு

கல்வியில் பின் தங்கிய தர்மபுரி, கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மத்திய அரசு திட்டத்தின் கீழ், தலா மூன்று கோடி ரூபாய் செலவில் 18 மாதிரிப் பள்ளிகள் கட்டும் பணி துவங்கியுள்ளது. இரண்டாவது கட்டத்தின் கீழ், 78 கோடி ரூபாய் செலவில், மேலும் 26 மாதிரிப் பள்ளிகளை கட்டவும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசின் ஆர்.எம்.எஸ்.ஏ., (ராஷ்ட்ரிய மத்திய மிக் சிக்ஷா அபியான்) திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், மாதிரிப் பள்ளிகள் அமைப்பது முக்கியத் திட்டமாக உள்ளது.
கல்வியில் பின் தங்கியுள்ள தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், ஈரோடு, கரூர், நாமக்கல், சிவகங்கை, திருப்பூர் ஆகிய 10 மாவட்டங்களில், தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளுடன், 18 மாதிரிப் பள்ளிகளை துவக்கிட, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ஒவ்வொரு பள்ளியும் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில், தற்காலிகமாக அருகில் உள்ள அரசு பள்ளிகளில், ஆற முதல் ஓன்பது வரையிலான வகுப்புகளும், பிளஸ் 1 வகுப்பும் நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்த கல்வியாண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளும் துவக்கப்படும். முழுக்க, முழுக்க ஆங்கில வழிக் கல்வியில் பள்ளியை நடத்திட மத்திய அரசு உத்தரவிட்டிருந்தாலும், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை மட்டும் ஆங்கில வழியுடன் தமிழ் வழிக் கல்வியும் நடத்தப்பட்டு வருகின்றன.

Read more »

>கல்வியில் பின் தங்கிய வட மாவட்டங்களுக்கு ரூ. 132 கோடி ஒதுக்கீடு

நேர் வழியில் கல்வி நெறி

கடந்த 1950ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின், 45வது பிரிவில் இடம் பெற்று, 10 ஆண்டுகள் கெடு விதிக்கப்பட்டிருந்தும், நம் நாட்டுக் குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை ஏன் வழங்க இயலவில்லை? அந்த சட்டம் சொன்னது இது தான்: “14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க, இந்த அரசியலமைப்புச் சட்டம் துவங்கிய, 10 ஆண்டுகளுக்குள் அரசு வழிவகை செய்ய வேண்டும்…’ இது அமலுக்கு வந்ததா?
இப்போது புதிதாக அரசியலமைப்புச் சட்டத்தின், 86வது திருத்தமாக, 21ஏ பிரிவில் கொண்டுவரப்பட்டு, ஏப்., 1, 2010 முதல் அமலாக்கப் பட்டுள்ள உத்தரவுகளின் சாராம்சம் இதோ:
* ஒரு கல்வி ஆண்டின் முதல் நாளிலிருந்து, ஆறு மாதங்கள் வரை, புதிய மாணவர் சேர்க்கை அனுமதிக்க வேண்டும்.
* அரசு அமைப்புகள் வழங்கும் பிறப்புச் சான்றிதழை பள்ளிகள் வற்புறுத்தக் கூடாது. அது இல்லாதபோது, வயது குறித்து பெற்றோர் அளிக்கும் எழுத்துப்பூர்வமான உறுதிமொழியே போதுமானது.
* எட்டாம் வகுப்பு வரை, எந்த ஒரு குழந்தையையும் பெயிலாக்கக் கூடாது. இவை நிறைவேற்றுவதற்குக் கடினமானதாகவும், கல்வி என்ற ஒரு விஷயத்தையே புரட்டிப் போடும் விதத்திலும் அமைந்துள்ள சட்டங்கள். இது, வரவேற்கக் கூடியதாக, ஆனால் வருமா என்ற ஏக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ள, திருத்தப்பட்ட பிற விதிகள் வருமாறு:
* நகரம், கிராமம் என்றில்லாமல், எல்லா இடங்களிலும் குழந்தைகளின் வீட்டுக்கு அருகே பள்ளிகள் இருக்க வேண்டும் அல்லது தோற்றுவிக்கப்பட வேண்டும்.
* தனியார் பள்ளிகள் நன்கொடை வசூலிக்கக் கூடாது. அப்படி வசூலித்தால், அவர்கள் வசூலித்த நன்கொடைக்கு பத்து மடங்கு, அபராதம் விதிக்க வேண்டும்.
* குழந்தைகளை சேர்க்க நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது. அப்படி நடத்தினால், 25 ஆயிரம் ரூபாய், முதல் முறை, பின், 50 ஆயிரம் வரை, ஒவ்வொரு முறையும், அவர்கள் அபராதம் செலுத்த வேண்டும்.
* அரசு அங்கீகாரம் இன்றி பள்ளிகளை நடத்தினால், ஒரு லட்சம் அபராதம்; தொடர்ந்து நடத்தினால், ஒவ்வொரு நாளுக்கும் பத்தாயிரம் அபராதம் விதிக்க வேண்டும்.
* தனியார் பள்ளிகளில், ஏழைக் குழந்தைகளுக்கு, 25 சதவீத இட ஒதுக்கீடு செய்து, இலவசக் கல்வி அளிக்க வேண்டும்.
இதற்கெல்லாம் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? போகட்டும்! நம் கவலையெல்லாம் முதலில் சொன்ன, மூன்று உத்தரவுகள் தான்… அரசு அமைப்புகள் வழங்கும் பிறப்புச் சான்றிதழ் கட்டாயமல்ல என்றாகிவிட்டால், பிஞ்சு வயதிலேயே, குழந்தைகளின் வயதை மறைத்தும், குறைத்தும், பள்ளிகளில் தள்ளும் நிலை உருவாகக்கூடும். “மூன்று மாதங்கள்தானே குறைவு; பரவாயில்லை… சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்று, பெற்றோர் தரப்பிலிருந்து வரும் அபாய கோரிக்கைகள், எங்களை போன்ற கல்வியாளர்கள் நன்கு அறிந்ததே. அடுத்து, ஒரு கல்வியாண்டின், முதல் ஆறு மாதங்கள் வரை மாணவர்கள் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு. இது எங்கே போய் முடியும் என்று நினைக்கவே அச்சமாக இருக்கிறது. சில பெற்றோர் அலட்சியமாக, காலதாமதம் செய்து, பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தல், தகுந்த காரணங்கள் இன்றி, அந்த ஆறு மாதத்தில் பள்ளி மாற்றத்தில் பெற்றோர் ஈடுபடுவது, ஆண்டில் பாதி படிப்பை படிக்க இயலாமல் குழந்தைகள் சிரமப்படுதல், பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறித்து ஆறு மாதம் வரை பள்ளிகளும், அரசும் அறியாமல் இருத்தல் போன்ற, பல பிரச்னைகள் இதில் உண்டு. அடுத்து, எட்டாம் வகுப்பு வரை, எல்லாக் குழந்தைகளையும் பாஸ் செய்ய வேண்டும் என்ற சட்டம். “கட்டாயக் கல்வி’ என்ற பெயரில் உருவாகும் இச்சட்டம், “கட்டாயப் பள்ளி’ என்ற விதமாக மட்டுமே அமையும். இப்படி பாஸ் செய்து, ஒன்பதாம் வகுப்புக்குள் நுழையும் குழந்தைகள் எப்படி “படித்து’ பாஸ் செய்வர்? ஐந்தில் வளையாதது, பதினைந்தில் வளையும் என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை. இதில் ஆபத்து என்னவெனில், பத்தாம் வகுப்பில் இவர்கள் எப்படியாவது தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, அந்த இரண்டு ஆண்டுகளில் இவர்கள் 24 மணி நேரமும் படிக்க வேண்டும் என்று பள்ளிகளும், பெற்றோரும் மிரட்டக்கூடிய நிலை ஏற்படும்.
“பத்தாம் வகுப்புக்கு இவர்களை அனுப்பினால், 100 சதவீத தேர்ச்சி கிடைக்காது’ என்பதற்காக, ஒன்பதாம் வகுப்பிலேயே இக்குழந்தைகளை பள்ளிகள் பெயிலாக்கினால் அவர்களின் எதிர்காலம் என்னாகும்? டுட்டோரியல், தனித் தேர்வுகள் என்று ஓரங்கட்டப்பட்டு, கல்லூரிகளால் புறக்கணிக்கப்பட்டு, வாழ்க்கை தோல்வியில் முடியும் அபாயமே அதிகம். நம் குழந்தைகளுக்குத் தேவை கட்டாயப்பள்ளி மட்டுமல்ல; கட்டாயக் கல்வியும் கூட. அதற்குத் தேவை பள்ளிகளுக்கென்று, ஆசிரியர்களுக்கென்று சில சுதந்திரங்கள்; சில அதிகாரங்கள். தெரிந்தும் தவறு செய்யும் பெரியவர்களை நல்வழிப்படுத்த எப்படி காவல் துறைக்கு கட்டாய சட்டங்கள் தேவையோ, அதே போல, தெரியாமல் தவறு செய்யும் குழந்தைகளை நல்வழிப்படுத்த அவர்களுக்கு, “கட்டாயக் கல்வி’ அளிக்க பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் சுதந்திரங்கள் இருந்தாக வேண்டும். இன்றைய புள்ளி விவரப்படி, ஒரு ஆசிரியருக்கு, 50 மாணவர்கள் என்பதே நாடெங்கும் உள்ள பள்ளிகளின் நிலை. இதை இச்சட்டம் குறிப்பிடுவதைப் போல, 1:30 என, மாற்றவும், லட்சக்கணக்கான கிராமங்களில், குழந்தைகளின் வீட்டருகே பள்ளிகள் அமைக்கவும் பெரும் தொகை செலவாகும். 2010ல் மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வின்படி, இதையெல்லாம் நிறைவேற்ற, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 2 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். இதில், மத்திய அரசும், மாநில அரசும் 68:32 என்ற விகிதத்தில் பங்களிக்க வேண்டும் என, முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல மாநில அரசுகள், “எங்களிடம் பணமில்லை’ என, கைவிரித்துள்ளன.
நம் நாட்டில் கல்வி என்பது வெறும் பொழுது போக்கோ, சமுதாயக் கடமையோ மட்டும் அல்ல. மக்கள் தொகை என்ற கடலில், வேலைவாய்ப்பு மற்றும் குடும்ப வளம் என்ற நீச்சல் போட்டியில், நீந்திக் கரை சேர வேண்டிய நிலை இங்கு எல்லா மாணவர்களுக்கும் உண்டு. பெற்றோர் எதிர்பார்ப்பது, தங்கள் குழந்தைகள் பாஸ் என்ற வெற்று சான்றிதழ்கள் அல்ல. பேச்சு, எழுத்து, புத்திக்கூர்மை, பண்புகள் என எல்லாவற்றிலும் அவர்கள் வல்லவர்கள் என்ற சான்றுகளே அவர்களின் தேவைகள். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பள்ளிகளுக்குள் நுழையலாம். அங்கு படித்தும், படிக்காமலும் இருக்கலாம். எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் லீவு போடலாம். படி, ஒழுங்காக நடந்துகொள் என்ற ஆசிரியர்களின் கட்டளைகளை புறந்தள்ளலாம் என்றானால், “கல்வி’ என்பதுதான் என்ன? எனவே, கல்வியிலும் தேவை சட்டம், ஒழுங்கு. சட்டத்தை இயற்றுபவர்களும், விதிகளை உருவாக்குபவர்களும் இதையெல்லாம் கவனத்தில் கொள்வரா?
பா.புருஷோத்தமன், கல்வியாளர்

>நேர் வழியில் கல்வி நெறி

>

கடந்த 1950ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின், 45வது பிரிவில் இடம் பெற்று, 10 ஆண்டுகள் கெடு விதிக்கப்பட்டிருந்தும், நம் நாட்டுக் குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை ஏன் வழங்க இயலவில்லை? அந்த சட்டம் சொன்னது இது தான்: "14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க, இந்த அரசியலமைப்புச் சட்டம் துவங்கிய, 10 ஆண்டுகளுக்குள் அரசு வழிவகை செய்ய வேண்டும்…' இது அமலுக்கு வந்ததா?
இப்போது புதிதாக அரசியலமைப்புச் சட்டத்தின், 86வது திருத்தமாக, 21ஏ பிரிவில் கொண்டுவரப்பட்டு, ஏப்., 1, 2010 முதல் அமலாக்கப் பட்டுள்ள உத்தரவுகளின் சாராம்சம் இதோ:
* ஒரு கல்வி ஆண்டின் முதல் நாளிலிருந்து, ஆறு மாதங்கள் வரை, புதிய மாணவர் சேர்க்கை அனுமதிக்க வேண்டும்.
* அரசு அமைப்புகள் வழங்கும் பிறப்புச் சான்றிதழை பள்ளிகள் வற்புறுத்தக் கூடாது. அது இல்லாதபோது, வயது குறித்து பெற்றோர் அளிக்கும் எழுத்துப்பூர்வமான உறுதிமொழியே போதுமானது.
* எட்டாம் வகுப்பு வரை, எந்த ஒரு குழந்தையையும் பெயிலாக்கக் கூடாது. இவை நிறைவேற்றுவதற்குக் கடினமானதாகவும், கல்வி என்ற ஒரு விஷயத்தையே புரட்டிப் போடும் விதத்திலும் அமைந்துள்ள சட்டங்கள். இது, வரவேற்கக் கூடியதாக, ஆனால் வருமா என்ற ஏக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ள, திருத்தப்பட்ட பிற விதிகள் வருமாறு:

Read more »

அலைபேசிகளால் விலைபோகும் நிம்மதி

இன்று கையில் புத்தகம் இருக்கிறதோ, இல்லையோ மாணவர்களிடையே அலைபேசிகள்தான் ஆக்கிரமித்துள்ளன. கர்ணன் கவசக் குண்டலத்துடன் பிறந்ததைப்போல அலைபேசியும் கையுமாக அலைபவர்கள் பலர். இதனால் சொந்த பந்தங்கள், உற்றார் உறவினர்களை மறந்து போய்விட்டனர்.
பாடம் படித்த நேரம்போக மீதி நேரம் விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள், புத்தகம் வாசித்தல் அனைத்தும் கனவாகிவிட்டன.
இப்படி விஞ்ஞான மயமாகிவிட்ட வாழ்க்கையில் மனிதனின் அனைத்து கௌரவங்களும் அவர்களது செய்கையால் நகைப்புக்கு ஆளாக வைக்கிறது.
பஸ், ரயில் இப்படிப் பயணம் செய்யும்போது பிறரைப்பற்றி கவலைப்படாமல் அலைபேசிகளில் பேசி வெறுப்பைச் சம்பாதிப்பவர்கள் ஏராளம். சொந்தப் பிரச்னை, அலுவலகம், கிண்டல் இப்படி எதுவாக இருந்தால் என்ன.. அதற்கென இடம், பொருள் பார்ப்பதைப் பலர் மறந்துவிடுகின்றனர். இது வாகன ஓட்டிகளிடம்தான் அதிகமாகக் காணப்படுகிறது.
ஏலே..மாப்ளே.. என்பதுடன் நிற்காமல் உரக்க சப்தமிட்டுப் பேசுவதால் பிற பயணிகள் முகம் சுழிக்கின்றனர்.
அதேபோல தங்களது குடும்ப ரகசியங்கள், விவரங்கள் ஆகியவற்றையும் பெருமையாகப் பேசுகின்றனர். இன்னும் சிலர் கம்பெனி நிலவரம், சக பணியாளர்கள் பற்றி மட்டரகமான விமர்சனம் என ஏகமாகப் பேசிவிடுகின்றனர்.
பல திரைப்படங்களில் இதுபோன்ற காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். ஆனாலும் யாரும் திருந்தியபாடில்லை. மாறாக, தங்களது சுயகௌரவத்தையும், தன்மானத்தையும் இழக்கின்றனர்.
பல இடங்களில் வீடுகளில் நடைபெறும் கொள்ளைச் சம்பவங்கள் இதுபோன்ற அசட்டுத்தனமான உளறல்களால் ஏற்படுகின்றன. பொதுஇடங்களில் பேசுவதைக் கேட்டும் மர்மநபர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டுவதற்கும் இது இலகுவாக அமைந்துவிடுகிறது.
இதனால்தான் காவல்துறையினர் அவ்வப்போது வெளியூர் செல்வது குறித்தோ, பிற விவரங்கள் குறித்தோ பொது இடங்களிலோ, தொலைபேசிகளிலோ தெளிவாகப் பேச வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கின்றனர். ஆனால், அதை யாரும் காது கொடுத்துக் கேட்பதில்லை.
இது ஒருபுறம் இருக்க வாகனங்களில் செல்வோர் செய்யும் அட்டகாசம் கொஞ்சநஞ்சமல்ல. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணிகளும், மாணவ, மாணவிகளும் பயணம் செய்கின்றனர்.
வாகனம் ஓட்டும்போது அப்படி என்ன தலைபோகும் தகவலைப் பரிமாறிக் கொள்கிறார்களோ தெரியவில்லை. இதைவிட பெரிய கொடுமை இருசக்கர வாகன ஓட்டிகளின் செயல்பாடு. தகவல் பரிமாற்றம் மிக மிக அவசியம்தான். ஆனால், அதற்கென நேரம், காலம் வேண்டும் என்பதை இவர்கள் மறந்துவிடுகிறார்கள்.
இதுதவிர, அலுவலகங்களிலும் அலைபேசி தொந்தரவு பல வேலைகளுக்கு இடையூறாக உள்ளது. இது அரசு அலுவலகங்களிலும் அதிகமாகக் காணப்படுகிறது. இதைத் தடுக்க ரேஷன் கடைகள், பாலகங்கள், மின்வாரிய அலுவலகங்கள், தொலைபேசி கட்டணம் செலுத்துமிடம், ரயில் முன்பதிவு, பயணச்சீட்டு வழங்கும் இடம் உள்ளிட்ட இடங்களில் அலைபேசி பேசுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.
மேலும், பஸ்களில் அலைபேசி பேசுவோருக்கு நடத்துநர்கள் எச்சரிக்கை விடுக்க வேண்டும் அல்லது பிறருக்கு இடையூறு ஏற்படாதவாறு பேசுமாறு அறிவுரை வழங்கலாம்.
அலைபேசி பேசுவது அவரவர் உரிமைதான் என்றாலும், பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொள்வதைத் தவிர்க்கலாம். இவ்வாறு செய்வதால் தமக்குப் பாதுகாப்பு என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
குறிப்பாக, வாகனங்களில் செல்வோர் அலைபேசி பேசுவதை அறவே தவிர்த்தல் நலம். இப்படி அலைபேசிகளால் சில நேரங்களில், விலையாக உயிர்ப்பலிகளும் ஏற்படுவதால் அதைத் தவிர்க்கக் கற்றுக்கொள்வதே சிறந்தது.
எஸ்.ரவீந்திரன்

>அலைபேசிகளால் விலைபோகும் நிம்மதி