பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு தேர்வு கிடையாது என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் தேர்வில் ஐந்து மதிப்பெண்களுக்குரிய வங்கி மாதிரி படிவத்தை கேள்வித்தாளுடன் மாணவர்களுக்கு வழங்கவில்லை எனவே மாணவர்கள் எழுத முயற்சி செய்திருந்தால், அந்த கேள்விக்குரிய ஐந்து மதிப்பெண்களும் முழுமையாக வழங்கப்படும் என தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
"விடைத்தாள், ரயில் பாதையில் கிடந்த விவகாரத்தில், தேர்வு துறையின் தவறுகள் எதுவும் இல்லை’ என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.
பார்சலில் அனுப்பப்பட்ட, 10ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாள்கள், ரயில் பாதையில் சிதறிக் கிடந்ததால், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
"டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில், தமிழ் மொழித்திறன் பகுதிக்கு, மீண்டும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, தேர்வாணையத்திற்கு, கடிதம் மூலமாக வலியுறுத்தி உள்ளோம்,” என, சட்டசபையில், பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாள் வினாக்கள் மிகவும் எளிமை : ஆசிரியர், மாணவர் மகிழ்ச்சி
ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ், வரும், 30ம் தேதி வழங்கப்படுகிறது.
டிசம்பர் 2012-ல் நடந்த அரசு துறை தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3012 மையங்களில் 10 லட்சத்து 68 ஆயிரத்து 838 பேர் எழுதுகிறார்கள்.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான முரண்பாடுகள் மற்றும் குறைகளை ஆராய குழு அமைத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் போராட்டங்கள் குறைந்து வரும் நிலையில், இன்று கல்லூரி திறக்கப்படும் என, மாணவர்களிடம் பரவிய குறுஞ்செய்தியால், கல்லூரி திறப்பு குறித்த விவரம் தெரியாமல், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும், 55 மையங்களில் ப்ளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 25-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தாண்டு ‘திருத்தம் இல்லாத திருத்தம் ஆண்டு’ பிழை இல்லாமல் திருத்தம் செய்யப்படவுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ப்ளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 25-ம் தேதி முதல் தொடங்குகிறது. முதலில் தமிழ் மற்றும் ஆங்கில விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன.முதல் நாளில் முதன்மை தேர்வாளரும், கூர்ந்து ஆய்வாளரும் விடைத்தாள்களை திருத்துவர். 26-ம் தேதி முதல்,உதவி தேர்வர்கள் திருத்துவர்.இதனை முதன்மை தேர்வாளரும்,கூர்ந்து ஆய்வாளரும் கண்காணித்து கையெழுத்திடுவர்.ஏப்ரல் 15-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 1-ம் தேதி தொடங்கிய 12ம் வகுப்புத் தேர்வுகள் 27-ம் தேதி முடிவடைகிறது.
பள்ளி கல்வித் துறையில் இருக்கை கண்காணிப்பாளர்கள் 100 பேர் கண்காணிப்பாளர்களாக நேற்று பதவி உயர்வு செய்யப்பட்டனர்.
புதியதாக 2,300 அரசு டாக்டர்கள் நியமனம்
பிளஸ் 2 தேர்வில், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, 18 மாவட்டங்களில் இருந்து, 289 மாணவர்கள், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டுள்ளனர்.
கடந்த 1ம் தேதியில் இருந்து, பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வருகின்றன. இதுவரை, தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், கணக்குப் பதிவியல், வணிகவியல், பொருளியல், விலங்கியல், உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம் ஆகிய தேர்வுகள் நடந்துள்ளன. நாளை, 25ம் தேதி, உயிர் வேதியியல் தேர்வும், கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வும் நடக்கின்றன. 27ம் தேதி, புள்ளியியல் மற்றும் அரசியல் அறிவியல் தேர்வுகளுடன், பிளஸ் 2 தேர்வுகள், முடிவுக்கு வருகின்றன. கடந்த 18ம் தேதி வரையிலான தேர்வுகளில், “பிட்’ வைத்திருந்தது, விடைத்தாள் துண்டுகளைப் பார்த்து, விடை எழுதியது, பக்கத்து மாணவரைப் பார்த்து எழுதியது, விடைத்தாள்களை பரிமாறியபடி, விடைகளை எழுதியது உள்ளிட்ட, பல்வேறு தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, 289 மாணவர்கள், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டுள்ளனர். கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருவள்ளூர், தருமபுரி, வேலூர் உள்ளிட்ட, 18 மாவட்டங்களில் தான், தேர்வு முறைகேடுகள் அதிகம் நடந்துள்ளன. திருப்பூர், கன்னியாகுமரி, தேனி, மதுரை உள்ளிட்ட, 14 மாவட்டங்கள், தேர்வு முறைகேடு பட்டியலில் இடம் பெறவில்லை.
தேர்வு முறைகேடுகளில், கல்வியில் பின்தங்கியுள்ள வட மாவட்டங்கள் தான், அதிகம் இடம் பெற்றுள்ளன. அதிகபட்சமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில், 130 மாணவர்கள், தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர், 27 மாணவர்களுடன், இரண்டாம் இடத்திலும்; விழுப்புரம், 22 பேருடன், மூன்றாம் இடத்திலும் உள்ளன. கல்வி தரத்திற்கு பெயர் பெற்ற சென்னை மாவட்டமும், 19 மாணவர்களுடன், நான்காம் இடத்தில் இடம் பெற்றுள்ளது; தூத்துக்குடி மாவட்டத்தில், 14 மாணவர்கள், “பிட்’ அடித்ததால், ஐந்தாம் இடத்தில் உள்ளது. மிகக் குறைவாக, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில், தலா ஒரு மாணவர் மட்டுமே, தேர்வுமுறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். பொது தேர்வுகளில், ஆண்டுதோறும் முதலிடத்தை வகிக்கும், விருதுநகர் மாவட்டத்திலும், இரு மாணவர்கள் பிடிபட்டுள்ளனர்.
வட மாவட்டங்கள், தொடர்ந்து கல்வியில் பின் தங்கியிருப்பதை, இந்த தேர்வு முறைகேடுகள், எடுத்துக் காட்டுகின்றன. ஆண்டு முழுவதும் படித்த ஒரு பாடத்தில் இருந்து, தேர்ச்சிக்குரிய, 70 மதிப்பெண்களைக் கூட பெற முடியாது என்ற நம்பிக்கையின்மை ஏற்பட்டு, எப்படியாவது தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன், மாணவர்கள், முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். பள்ளி கல்விக்காக, ஆண்டுதோறும், பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், கல்வியில் பின் தங்கியுள்ள மாவட்டங்களை முன்னேற்றுவதற்கு, கல்வித்துறை, உருப்படியாக, எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்பதையே, முறைகேடு புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. முந்தைய தி.மு.க., ஆட்சியில், வட மாவட்டங்களில், கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த நிதியில் எந்த திட்டங்களை செய்தனர், அதனால், என்ன முன்னேற்றம் ஏற்பட்டது என்பது, அதிகாரிகளுக்கே வெளிச்சம்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேர்வு முறைகேடுகளை, வெறும் எண்ணிக்கையாக பார்க்காமல், இதன் பின்னணிக்கான காரணங்களை, முழுவதுமாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில், மாணவர்களை மட்டும், மட்டம் தட்டக்கூடாது. கற்பித்தலில், செயல்படுத்தப்படும் கல்வி திட்டங்களில், ஆசிரியர் செயல்பாடுகளில் உள்ள ஓட்டைகளை கண்டறிந்து, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வட மாவட்ட பள்ளிகளில், எப்போதுமே, ஆசிரியர் காலி பணியிடங்கள், அதிகம் இருப்பதும், தரம் குறைவதற்கு ஒரு முக்கிய காரணம். கல்வியில் முன்னேறியுள்ள தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தான், ஆசிரியர் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுகின்றனர். இதனால், இவர்களை, வட மாவட்டங்களில், பணி நியமனம் செய்ததும், சில ஆண்டுகளுக்குப்பின், மீண்டும், தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு சென்று விடுகின்றனர். இதனால், தொடர்ந்து, வட மாவட்டங்களில், ஆசிரியர் பணியிடங்கள் காத்தாடுகின்றன. இந்நிலை மாற, வட மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரிகளும், அதிக எண்ணிக்கையில், ஆசிரியர் தேர்வுகளில், தேர்வு பெற வேண்டும். இதற்கு, முதலில், பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதுடன், இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், உயர்கல்வி பெறுவதையும், அரசு உறுதிப்படுத்த வேண்டும். இந்த இரண்டையும் செய்தால், கல்வியில், வட மாவட்டங்கள், வெகுவாக முன்னேறும். இந்த நிலை உருவானால், சமூக, பொருளாதார நிலையிலும், வட மாவட்டங்கள் முன்னேற்ற நிலையை அடையும். இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.
4,000 பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி., மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
10ம் வகுப்பு கணித பாட வினாத்தாள் மாற்றம்: பள்ளிகளுக்கு சுற்றறிக்கை
குரூப்-1 தேர்வு வயது வரம்பை 45 ஆக உயர்த்த கோரிக்கை
ஊரக திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் மதிப்பெண் குறைந்தால் உதவி தொகை நிறுத்தப்படும்
அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வேலை பளுவை குறைக்க CCE செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் முதற்கட்டமாக 64 பள்ளிகளில் அறிமுகம்
எம்.பில் பகுதி நேர படிப்பு
2013-14ம் ஆண்டில் முதல்தலை முறை பட்டதாரி
2013-14ம் ஆண்டில் முதல்தலை முறை பட்டதாரிகளுக்காக 673 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையில் கூறினார். http://ow.ly/jhkl5
2013-14ம் ஆண்டில் 8 கலை அறிவியல் கல்லூரி
2013-14ம் ஆண்டில் 8 கலை அறிவியல் கல்லூரிகள் துவக்கப்படும் என நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையில் கூறினார். http://ow.ly/jhjP3
2013-14ம் ஆண்டில் 8 கலை அறிவியல் கல்லூரிகள் துவக்கப்படும்.
பள்ளி கல்வித்துறை வளர்ச்சிக்காக ரூ.16,965.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2013- 2014 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார் | சிறப்பு அம்சங்கள்
* பட்ஜெட் திட்ட ஒதுக்கீடு 37 ஆயிரம் கோடி
* போலீஸ் ஸ்டேஷன்களுக்கு சொந்த கட்டடம் கட்ட 50 கோடி
* நீதி துறை மேம்பாட்டுக்கு 695 கோடி
* நகர்ப்புற வறுமை ஒழிப்புக்கு 200 கோடி
* கல்வி- சுகாதாரத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு
* காய்கறி கழிவு சுத்திகரிப்பு ரூ. 34 கோடி
* 6 லட்சம் இலவச ஆடுகள்; 250 கோடி ஒதுக்கீடு
* கால்நடை துறைக்கு 10 82 கோடி
* 100 கால்நடை மருத்துவமனைகள் தரம் உயர்வு
* கால்நடை மருத்துவமனை சீரமைக்க 25 கோடி
* ஆழ்கடல் மீன் பிடிக்க மானியம் 5 சதம் உயர்வு
* 12 ஆயிரம் கறவை மாடுகள்
* ஈரோடு கால்நடை தீவன உற்பத்தி
* பெண்களுக்கு 12ஆயிரம் கறவை மாடுகள்
* 1.5 லட்சம் பேருக்கு செம்மறி ஆடுகள்
* தூத்துக்குடியில் புதி கப்பல் கட்டும் தளம்
* 17 ஆயிரத்து 138 போலீசார் நியமிக்க திட்டம்
* மீன்வளத்துறை மேம்பாட்டுக்கு 467 கோடி
* மீனவர்கள் படகு வாங்கிட 50 சதம் மானியம்
* கடலூர் முடசலோடையில் மீன் இறங்கு தளம்
* உணவு மானியத்திற்கு 4 ஆயிரத்து 900 கோடி
* மாநில திறன் மேம்பாட்டுக்கு 100 கோடி
* மதுரை – தூத்துக்குடி தொழில் வழித்தடம்
* மதுரை கோரிப்பாளையம்- காளவாசலில் 2 புதிய பாலங்கள்
* சென்னையில் 4 புதிய பாலங்கள்
* கோழி வளர்ப்பை ஊக்குவிக்க 25 கோடி
* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 750 கோடி
* இலவச வேட்டி – சோலை வழங்கிட 362 கோடி
* நெடுஞ்சாலை ஆணையம் * சூரிய ஒளி மின் திட்டம்
* வல்லூர் மின்உறபத்தி 500 மொ வாட் அக்டோபரில் துவங்கும்
* 21 ஆயிரம் கோடியில் புதிய மின் திட்டங்கள்
* இலவச நோட்டுகள் வழங்கிட 110 கோடி
* மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிட 200. 9 கோடி
* புதிதாக 8 கலைக்கல்லூரிகள் அறிவிப்பு
* இலவச மடிக்கணினி வழங்கிட 1 500 கோடி
* மாணவிகளுக்கு நாப்கின் வழங்கிட 54. 63 கோடி
* சிறைத்துறைக்கு 179 கோடி
* 20 ரூபாய்க்கு வெளிச்சந்தையில் அரிசி
* அணை புனரமைப்புக்கு 390 கோடி
* ஒக்கேனக்கல் திட்டத்திற்கு 500 கோடி
* நெடுஞ்சாலை துறைக்கு 6 ஆயிரத்து 452 கோடி
* சென்னை பெருநகர மேம்பாட்டுக்கு 500 கோடி
* போக்குவரத்து கூடுதல் செலவுக்கு 500 கோடி
* பழங்குடியினருக்கு மிதி வண்டி வழங்கிட 56 கோடி
* 60 ஆயிரம் பசுமை வீடுகள் அமைக்கப்படும்
* தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கூலி 148 ஆக உயர்வு
* 2 லட்சம் வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படும்
* கல்வித்துறை மேம்பாட்டுக்கு 16 ஆயிரத்து 965 கோடி
* இலங்கை தமிழ் அகதிகளுக்கு மருத்துவ காப்பீடு
* இலங்கை தமிழர் நலன் காத்திட 109 . 9 கோடி
* மாற்றுத்திறனாளி நலனுக்கு 263 கோடி
* அரசு ஊழியர் நலன் காத்திட காப்பீட்டு தொலை அதிகரிப்பு
* மாமல்லபுரத்தில் கடல்வாழ் உயிரின பூங்கா
* திருமண உதவி தொகைக்கு 750 கோடி
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வுகள் அந்தந்த நாட்களில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மார்ச் 23, 24 ஆகிய தேதிகள் சனி, ஞாயிற்றுக்கிழமை என்பதால், புதன்கிழமை மூடப்படும் பள்ளி கல்லூரிகள் மீண்டும் மார்ச் 25-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் எனத் தெரிகிறது.