Monthly Archives: July, 2011

டி.என்.பி.எஸ்.சி., குருப் 2 தேர்வு தமிழகம் முழுவதும் நடந்து முடிந்தது. 6695 பணியிடங்களுக்காக 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

டி.என்.பி.எஸ்.சி., குருப் 2 தேர்வு தமிழகம் முழுவதும் நடந்து முடிந்தது. 6695 பணியிடங்களுக்காக 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

95 சதவீத மாணவ-மாணவிகள் வந்திருந்ததாக தமிழக அரசு கூறியுள்ளது.

சமச்சீர் கல்விக்கு ஆதரவாக திமுக போராட்டம் அறிவித்து இருந்தபோதிலும் நேற்று தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல நடைபெற்றதாகவும், 95 சதவீத மாணவ-மாணவிகள் வந்திருந்ததாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.

இளைஞர்கள் சில புள்ளி விவரங்கள்

சமச்சீர் பாடப் புத்தகங்களை வினியோகிக்க, ஆகஸ்ட் 5ம் தேதி வரை தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கால அவகாசம் அளித்துள்ளது.

சமச்சீர் பாடப் புத்தகங்களை வினியோகிக்க, ஆகஸ்ட் 5ம் தேதி வரை தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கால அவகாசம் அளித்துள்ளது. சமச்சீர் கல்வி அமல்படுத்துவதை தள்ளிவைக்கும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த கல்வியாண்டில், சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்றும், பாடப்

Read more »

சமச்சீர் கல்வி வழக்கு மீண்டும் ‌2 ம் தேதி விசாரணை

வரும் 2 ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி புத்தகம் வழங்கிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து கால அவகாசம் போதாது என தமிழக அரசு கேட்டுக்கொண்டதன்பேரில் மேலும் அவகாசம் ( வரும் 5ம் தேதிக்குள் ) நீட்டித்து அனுமதி வழங்கியுள்ளது. வழக்கு மீண்டும் வரும் 2 ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

வரையறுக்கப்பட்ட விடுப்பு விதிகள்

வரையறுக்கப்பட்ட விடுப்பு 

அ) தமிழக அரசு தமது அலுவலர்களுக்கு கீழே உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள  விழாக்களுக்கு ஒரு ஆண்டிற்கு நாட்கள் என வரையறுக்கப்பட்ட விடுப்பு அனுமதிக்கிறது. (அ.நி.எண் 3 /ப.ம.நி.சீ துறை நாள் 12.01.2006 )
ஆ) மத சார்பின்றி எந்த பண்டிகைக்கு வேண்டுமானாலும் ஆண்டிற்கு நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும். 

இ) இவ்விடுப்பினை அரை நாளாக எடுக்க இயலாது. (அ.க.எண். 118727 அ.வி. III/88-1 ப.ம.நி.சீ. துறை நாள் 04.04.87)ஈ) காலதாமத வருகைக்காக இவ்வகை விடுப்பை ஈடுகட்ட முடியாது. ஆனால் தற்செயல் விடுப்புடன் இவ்விடுப்பை இணைத்துக் கொள்ளலாம். (அரசுக் கடித எண். 24686 /அவி III / ப.ம.நி.சீ. துறை நாள் 04.04.87)          

சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்

சிறப்பு தற்செயல் விடுப்பு

அ) சில சிறப்பு காரணங்களுக்காக இவ்விடுப்பு வழங்கப்படுகிறது. இதனை ஈட்டிய விடுப்பு / ஈட்டா விடுப்புகளுடன் சேர்த்துத் துய்க்கலாம்.

ஆ) குடும்ப நலத்திட்ட அறுவை மருத்துவம் செய்து கொள்பவரின் கணவருக்கு அறுவை மருத்துவம் நடந்த நாள் முதல் ஏழு நாள்கள் வழங்கப்படும்.

இ) குடும்ப நலத்திட்ட அறுவை மருத்துவம் செய்து கொள்ளும் ஆண் ஆசிரியருக்கு 8 நாள்களும் பெண் ஆசிரியருக்கு 20  நாட்களும் வழங்கப்படும். ஆனால் மகப்பேறு காலத்தில் அறுவை மருத்துவம் செய்து கொள்ளும் பெண் ஆசிரியர்க்கு இவ்விடுப்பு கிடைக்காது.
ஈ) நாடளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுவோருக்கு 30 நாட்கள் வரையில் இவ்விடுப்பு வழங்கப்படும்.
உ) நாய் கடித்தவருக்கு ஏற்பளிக்கப்பட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவம் செய்து கொள்ள இவ்விடுப்பு கிடைக்கும். 
ஊ) ஊர்க்காவல் படையில் பணிபுரிவோருக்கு அப்பணியில் ஈடுபடுத்தப்படும் காலத்திற்கு சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு.

தற்செயல் விடுப்பு விதிகள்

தற்செயல் விடுப்பு
1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக்கலாம்.
2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக்கும் போது , இயற்கை சீற்றம், தேசிய  தலைவர் மரணம் , பந்த், பண்டிகை, திடீர் விடுமுறை காரணமாக 11 வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர்  10 க்கு மேற்பட்ட அந்த நாளையும் விடுப்பாக அனுபவிக்கலாம். (அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11) நாள் 16.08.93)
3. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுப்பு மற்றும் பிற முறையான விடுப்புடன் இணைத்து அனுபவிக்க இயலாது.
4. தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் அதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டியதில்லை. (அ.க.எண். 1410 ப.ம.நி.சீ துறை 2.12.77 ).
5. தற்காலிக பணியாளர் மற்றும் தகுதிகாண்பருவத்தினருக்கு 3 மாதங்களுக்கு நாட்கள் என்ற அளவில் இவ்வுடுப்பு வழங்கப்படும். (அவி. இணைப்பு VI )
6. தகுதிகாண்பருவம் முடித்தவர் / நிரந்தர பணியாளர் ஆண்டு துவக்கத்திலேயே பணிநிறைவு பெரும் பணியாளருக்கு 12  நாட்கள் தற்செயல் விடுப்பை ஆண்டு துவக்கத்திலேயே வழங்கலாம். (அரசு கடித எண். 61559 /82 -4  ப.ம.சீ துறை நாள். 17.1.83)
7.  குறைந்தபட்சம் அரைநாள் சிறுவிடுப்பு அனுமதிக்கப்படும்.
8. அவசர காரணங்களுகளுக்காக முதலில் விடுப்பு எடுத்து விட்டு பின்னர் இதற்கான விண்ணப்பத்தினை அளிக்கலாம். ( அரசுக் கடிதம் 61559 /82 -4  ப.ம.சீ துறை நாள். 17.1.83) 

எம்.பி.பி.எஸ். படிக்க மீண்டும் நுழைவுத் தேர்வா?-உச்ச நீதிமன்றம் அனுமதி



நாடு முழுவதும் அடுத்த கல்வி ஆண்டு (2012-13) முதல் எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்கப் பொது நுழைவுத் தேர்வை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவு செய்துள்ளது.எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்கப் பொது நுழைவுத் தேர்வை இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்த உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (ஜூலை 25) அனுமதி அளித்துள்ளது.இதையடுத்து தமிழகத்திலும் பொது நுழைவுத் தேர்வு மீண்டும் நடத்தப்படுமா என்ற அச்சம் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோரிடம் எழுந்துள்ளது.

Read more »

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 28 தொடங்குகிறது.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னைக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை (ஜூலை 28) தொடங்குகிறது.ஆகஸ்ட் 4-ம் தேதி வரை இக்கலந்தாய்வு நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) விடுமுறை நாள் என்பதால் அன்று கலந்தாய்வு நடைபெறாது.அரசு மருத்துவக் கல்லூரிகளில்

Read more »

சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு கூறுவது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ள நிலையில், சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்று கூறுவது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

Read more »

திருவள்ளுவர் பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன .

திருவள்ளுவர் பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன .

சமச்சீர் கல்வி வழக்கு :செவ்வாய்க்கிழமை (26)சுப்ரீம் கோர்ட் இறுதி விசாரணை

சமச்சீர் கல்வியை 1 முதல் 10-ம் வகுப்புவரை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த அப்பீல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை இறுதி விசாரணை நடத்துகிறது. சமச்சீர் கல்வி பாடமா, பழைய பாட திட்டமா என்ற 2 மாத இழுபறிக்கு செவ்வாய்க்கிழமை  தீர்வு கிடைத்துவிடும் என மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

30ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு

 டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு, வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஹால் டிக்கெட் அனுப்பும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தேர்வு மையத்தில் செல்போன், கால்குலேட்டர் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில், குரூப் 2 தேர்வு அறிவிப்பு கடந்த டிசம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்டது. நகராட்சி ஆணையர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உதவி பிரிவு அலுவலர் உள்ளிட்ட 37 பதவிகள் இதில் இடம் பெற்றிருந்தன.

Read more »

திருவள்ளுவர் பல்கலைக் கழக ஒன்பது மாணவர்களின் விடைத்தாள்கள் மாயமானதால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் |

திருவள்ளுவர் பல்கலைக் கழக ஒன்பது மாணவர்களின் விடைத்தாள்கள் மாயமானதால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது .

தொடக்கக் கல்வி தரத்தை பொறுத்தே இந்தியாவின் எதிர்காலம் அமையும் – அப்துல் கலாம் |

ஆரம்ப கல்வியை ஒவ்வொரு இந்தியனும் அடிப்படை உரிமையாக மாற்ற வேண்டும். படைப்பாற்றல் திறனை வளர்க்கும் வகையில் ஆரம்ப கல்வியை மாற்றியமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. மேலும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் குழந்தைகளை வளர்க்க வேண்டும். குழந்தைகள் அனுபவித்து படிக்கும் வகையில் தங்களை முழுவதுமாக அதில் ஈடுபடுத்தி கொள்ளும் வகையிலும் பாடத்திட்டம் இருக்க வேண்டும். மேலும் லட்சியத்தை அடைவதற்கு மிகவும் அடிப்படையான நேர மேலாண்மை குறித்து குழந்தைகளுக்கு கற்று தருவது அவசியம். அதன்படி சிறு வயதிலேயே ஒவ்வொருவருக்கும் ஒரு குறிக்கோளை ஏற்படுத்தி குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அவற்றை அடைவதற்கான ஊக்கத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டும் 

"பிளஸ் 2′ சிறப்பு துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கான முடிவுகள், 25ம் தேதி வெளியிடப்பட்டன.

ஜூன் மற்றும் ஜூலையில், பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள்25ம் தேதி பிற்பகல் வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை,"dge1.tn.nic.in, dge2.tn.nic.in, dge3.tn.nic.in மற்றும் http://www.pallikalvi.in'" ஆகிய இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Read more »

நேரடி 8ம் வகுப்பு தனித்தேர்வு திட்டம் ரத்து : ஆர்.டி.இ., சட்டம் காரணமாக அரசு நடவடிக்கை |

கட்டாயக்கல்வி சட்டம் காரணமாக, நடப்பாண்டு முதல் நேரடியாக, 8ம் வகுப்பிற்கான தனித்தேர்வு திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இதனால், இனி, 8ம் வகுப்பு வரை பள்ளிகளில் படித்தால் மட்டுமே, நேரடியாக, 10ம் வகுப்பு தனித்தேர்வை எழுதமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. பள்ளிகளில் சேர்ந்து படிக்க முடியாதவர்களுக்கும், படிப்பை பாதியில் விட்டுவிட்டவர்களுக்கு படிக்கும் வாய்ப்பை தரும் வகையிலும், ஆண்டு தோறும் நேரடியாக, 8ம் வகுப்பு தனித்தேர்வை, அரசு தேர்வுத்துறை நடத்தி வந்தது.

Read more »

சமச்சீர் கல்வி தொடர்பாக ஐகோர்ட் அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு |

சமச்சீர் கல்வி தொடர்பாக ஐகோர்ட் அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் பாடப்புத்தகங்களை விநியோகிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சமச்சீர் கல்வித்திட்ட வழக்கில், சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார். மேலும் வரும் 2ம் தேதிக்குள் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை விநியோகிக்கவும் உத்தரவு பிறப்பித்தார். இவ்வழக்கின் இறுதி விசாரணை வரும் 26ம் தேதி நடக்கிறது

US Secretary of State Hillary Clinton arrives to deliver a speech at the Anna Centenary Library in Chennai.

திருமதி ஹிலாரி கிளிண்டன்,அவர்கள்  அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாணவர்கள் மத்தியில் பேசினார். அவரை வரவேற்பவர் நூலகத்துறை இணை இயக்குநர் திரு பூ.ஆ.நரேஷ் அவர்கள் .







SUN NEWS VIDEO

SUN TV VIDEO

KALAIGNAR NEWS VIDEO

KALAIGNAR NEWS VIDEO

பள்ளி கல்வித்துறை முடிவு ஆசிரியர் நியமனத்துக்கு தேர்வு நடத்த திட்டம்

தேர்வு நடத்தி ஆசிரியர்களை தெரிவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பை அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். பல ஆயிரம் ஆசிரியர்கள் கடந்த ஆட்சியில் பணி நியமனம் பெற்றனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு 6,000 பேர் பணி நியமனம் செய்ய அறிவிக்கப்பட்டது. அதில் 5,800 பேர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டு, தெரிவுப் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், அதிமுக அரசு தற்போது ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளது. சமச்சீர் கல்வியில் திருத்தம் கொண்டு வரவும் முயற்சி செய்து வருகிறது.
இதற்கிடையே தெரிவுப் பட்டியலில் இடம்பெற்ற பட்டதாரிகள், தங்களுக்கு பணி நியமனம் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் காத்திருக்கின்றனர். ஆனால், அதிமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் பட்டதாரிகள் நியமனத்தில் தேர்வு நடத்தியே ஆசிரியர்களை தெரிவு செய்து வந்தது. அதன் அடிப்படையில், தற்போதும் தேர்வு நடத்துவார்களா அல்லது வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் தெரிவு செய்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இருப்பினும், தற்போதுள்ள சலுகைகள் தொடரும் என்று முதல்வர் ஜெயலலிதா தேர்தலின்போது தெரிவித்தார். அதனால், வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும் என்று பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், தேர்வு நடத்தியே பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கல்வி அதிகாரிகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

அதிகாரிகளின் கருத்தின்படி தேர்வு நடத்தலாமா என்று அரசு ஆலோசித்து வருகிறது இதற்கிடை யே, ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்ட 5,800 பேரையும், சான்று சரிபார்ப்பு முடித்து நிலுவையில் உள்ள 12,000 பேரையும் இந்த ஆண்டில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், கல்வி அதிகாரிகள் கல்வித் தரத்தை முன்வைத்து, தேர்வு நடத்தியே ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு மட்டும் முதல் மூன்று இடங்களில் அதிக அளவு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 வகுப்பிலும் அதிக அளவில் செண்டம் எடுத்துள்ளனர். கடந்த ஆண்டில் அதிக அளவில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதால்தான் இந்த அளவு தேர்ச்சி வீதம் கிடைத்துள்ளது என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டதுபோல 30 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற வீதத்தில் ஆசிரியர் நியமிக்கப்பட்டால் தரமும், தேர்ச்சியும் அதிகமாக இருக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தேர்வு நடத்தியே ஆசிரியர்களை தெரிவு செய்யப் போவதாக கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதை அரசும் வரவேற்றுள்ளது. இதையடுத்து, ஆசிரியர்களை தேர்வு செய்ய நடத்த வேண்டிய தேர்வுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

ஆசிரியர் தேர்வு வாரியம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. சமச்சீர் கல்வி தொடர்பான பிரச்னை முடிவுக்கு வந்ததும், அடுத்தபடியாக ஆசிரியர்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சமச்சீர் கல்வி தீர்ப்பு :தமிழக அரசு மேல்முறையீடு

1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கான சமச்சீர் கல்வி திட்ட பாடப் புத்தகங்களை இந்த மாதம் (ஜுலை) 22-ந் தேதிக்குள் வழங்க வேண்டும்.

Read more »

நடப்பு ஆண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும்: ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

 கடந்த வருடம் 1 மற்றும் 6-வது வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடத் திட்டம் கொண்டு வரப்பட்டது.   இந்த வருடம் மற்ற வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை நடை முறைப்படுத்த திட்ட மிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சமச்சீர் கல்வி பாடத் திட்டம் தரமானதாக இல்லை. எனவே, இந்த ஆண்டு அதை நடைமுறைப்படுத்த இயலாது. நிபுணர்குழுவை அமைத்து பாடத்திட்டம் ஆய்வுசெய்யப்படும் என்று அ.தி.மு.க. அரசு அறிவித்தது.

Read more »

The new and revised income tax slabs and rates applicable for the financial year (FY) 2012-13 and assessment year (AY) 2013-14.

INCOME TAX CALCULATION AND PRINTABLE FORM 2013 FOR MEN

INCOME TAX CALCULATION AND PRINTABLE FORM 2013 FOR WOMEN

For General Tax Payers

Income tax slab (in INR)
Tax (%)
0 to 2,00,000
No tax
2,00,001 to 5,00,000
10%
5,00,001 to 10,00,000
20%
Above 10,00,000
30%

 

For Female Tax Payers

Income tax slab (in INR)
Tax (%)
0 to 2,00,000
No tax
2,00,001 to 5,00,000
10%
5,00,001 to 10,00,000
20%
Above 10,00,000
30%

 

For Senior Citizens (Aged 60 years but less than 80 years)

Income tax slab (in INR)
Tax (%)
0 to 2,50,000
No tax
2,50,001 to 5,00,000
10%
5,00,001 to 10,00,000
20%
Above 10,00,000
30%

 

For Very Senior Citizens (Aged 80 years and above)

Income tax slab (in INR)
Tax (%)
0 to 5,00,000
No tax
5,00,001 to 10,00,000
20%
Above 10,00,000
30%

உயர்கல்வி – கல்லூரிக்கல்வி – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் சுழற்சி வகுப்புகள் துவங்கப்பட்டமை – தொகுப்பூதியத்தில் கெளரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யவும் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு உழைப்பூதியம் வழங்கவும் ஒப்பளிப்பு அளித்து – ஆணை வெளியிடப்படுகிறது.

கல்லூரிக் கல்வித்துறை – கல்வியியல் கல்லூரிகள்-கல்வியியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை – 2011-2012-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகள் – ஆணை வெளியிடப்படுகிறது

Honble Chief Minister reviewed the activities of School Education Department

கிராமங்களில் 70 சதவீத மக்கள் : சமீபத்திய கணக்கெடுப்பில் தகவல்

இந்தியாவில் 70 சதவீதம் பேர் கிராமப் பகுதிகளில்தான் வாழ்கின்றனர். அதேநேரம், ஒட்டு மொத்த மக்கள் தொகை வளர்ச்சி, இந்திய விடுதலைக்குப் பின், முதன் முதலாக குறைந்துள்ளதுஎன, சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. “இந்தியாவின் 2011 தற்போதைக்கான கிராம – நகர மக்கள் தொகைக் கணக்கெடுப்புஅறிக்கையை நேற்று மத்திய உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங் வெளியிட்டார். 

இதன்படி, ஒட்டு மொத்த மக்கள் தொகையான 121 கோடி பேரில், 37.7 கோடி பேர் தான் நகர்ப் பகுதிகளில் வாழ்கின்றனர். மீதமுள்ள 70 சதவீதம் பேர், கிராமப் பகுதிகளில் வசிக்கின்றனர். அதே நேரம், நாடு விடுதலை அடைந்தபின் முதன் முறையாக, கிராமப் பகுதிகளை விட, நகர்ப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. நகர்ப் பகுதிகளில், 2001ல் மக்கள் தொகை 27.81 சதவீதம் இருந்தது. கிராமப் பகுதிகளில் 72.19 சதவீதம் இருந்தது.உத்தர பிரதேசத்தில் தான் மிக அதிகளவாக 15.5 கோடி பேர், கிராமங்களில் வசிக்கின்றனர். நகரங்களில், மும்பையில் மிக அதிகபட்சமாக ஐந்து கோடி பேர் உள்ளனர். கடந்த 2001ல், கிராமங்களில் 1,000 ஆண்களுக்கு 946 பெண்கள் என்ற அளவில் இருந்தனர்.

 தற்போது அது 947 ஆக அதிகரித்துள்ளது. நகரங்களில், 2001ல் 900 ஆக இருந்த பெண்கள் எண்ணிக்கை தற்போது 926 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம், கேரளா மற்றும் டில்லி உள்ளிட்ட 10 மாநிலங்களில், நகர்ப்பகுதி பாலியல் விகிதம், கிராமத்தை விட அதிகரித்துக் காணப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவு விரைவில்

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும்போது குறுக்கு வழியில் வெற்றியை பெற்றுத்தருகிறோம் என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள். தேர்வு முடிவு விரைவில் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

சமச்சீர் கல்வி வழக்கு தீர்ப்பு 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வழங்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு.

சமச்சீர் கல்வி வழக்கு விசாரணை முடிவடைந்தது.  சமச்சீர் கல்வி வழக்கு தீர்ப்பு 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வழங்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. 

1,014 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலி

தமிழகத்தில் 62 அரசுக் கல்லூரிகள் உள்ளன. இங்கு பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் என 6,003 பணியிடங்கள் உள்ளன. இதில் 4,989 இடங்களில் மட்டுமே தற்போது ஆசிரியர்கள் உள்ளனர். மீதமுள்ள 1,014 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பல மாதங்களாக இந்த பணியிடங்களில் உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. 

ALL APPLICATIONS TO TEACHERS

பள்ளிகளில் பயன்படும் அனைத்து வகை விண்ணப்பங்கள் (MS word file editable)
1.CPS கணக்கு எண் பெற விண்ணப்பம்
2.ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பம்
3.பள்ளிப் பணியில் இருந்து விடுவித்து அனுப்ப மாதிரி விண்ணப்பம்
4.PLUS TWO NEW DECLARATIONS FORM
5.தகுதிகாண் பருவம் முடிக்க விண்ணப்பம் (PAGE MAKER FORMAT)
6.ஆசிரியர்கள் மாறுதலுக்கான விண்ணப்பம் மற்றும் மனமொத்த மாறுதலுக்கான விண்ணப்பம்(EXCEL FORMAT)
7.அரசு ஊழியர்கள் தபால் வாக்கினை பதிவு செய்ய கோரும் விண்ணப்பம்
8.CERTIFICATE OF PHYSICAL FITNESS BY MEDICAL OFFICER.
9.MEDICAL CERTIFICATE FOR LEAVE/EXTENSION OF LEAVE.
10.MEDICAL CERTIFICATE OF FITNESS TO RETURN TO DUTY.
11.PERSONNEL INFORMATION FORMAT.
12.INSTRUCTIONS FOR FILLING THE PIS FORM.
13.COMBINED APPLICATION FORM FOR GENERAL PROVIDENT FUND FINAL CLOSURE AND PENSION
14.தற்செயல் விடுப்பு விண்ணப்பம்
15.INCOME TAX CALCULATION AND PRINTABLE FORM 2012 FOR MEN
16.INCOME TAX CALCULATION AND PRINTABLE FORM 2012 FOR WOMEN
17.விண்ணப்பம்
18.விண்ணப்பம்
19.விண்ணப்பம்
20.விண்ணப்பம்
21.விண்ணப்பம்
22.விண்ணப்பம்
23.விண்ணப்பம்

ஒரு ஆசிரியருக்கு 30 மாணவர்கள் என்பதை அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். ப.சிதம்பரம்

தமிழ்நாட்டில் கடந்த 1 1/2 மாதமாக மாணவர்களிடம் பாடப்புத்தகங்கள் இல்லாதது வருத்தத்தை தருகிறது என, ப.சிதம்பரம் கூறினார்.தமிழ்நாடு ஆரம்ப கல்வி ஆசிரியர் கூட்டணி சார்பில் இலவச ஆரம்ப கூட்டணி கல்வி குழந்தைகளின் கல்வி உரிமை மாநில மாநாடு சென்னையில்

Read more »