Category Archives: ed

மத்திய-மாநில அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய-மாநில அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்னிலையில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்புக் கூறியது. அதில், “”பல்வேறு காரணங்களினால் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. அது வருத்தத்துக்குரியது. இந்நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவேண்டியது அரசின் கடமை. எனவே,மத்திய-மாநில அரசுப் பணிகளில் (அனைத்து துறைகள் மற்றும் நிறுவனங்களில்) மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். அனைத்துப் பிரிவினருக்கான மொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேல் போகக் கூடாது என்ற விதிமுறை மாற்றுத்திறனாளிகளுக்குப் பொருந்தாது. மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய-மாநில அரசுகள் வரும் 3 மாதத்திற்குள் நிரப்ப வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மாணவர்களுக்கு வழங்கிய கல்வி உதவித் தொகை, 81 லட்சம் ரூபாயை கையாடல் செய்த விவகாரத்தில், "சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட, 77 பேரில், 67 தலைமையாசிரியர்களுக்கு, ஏழு மாதங்களுக்கு பின், மீண்டும் பணி வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கு வழங்கிய கல்வி உதவித் தொகை, 81 லட்சம் ரூபாயை கையாடல் செய்த விவகாரத்தில், “சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட, 77 பேரில், 67 தலைமையாசிரியர்களுக்கு, ஏழு மாதங்களுக்கு பின், மீண்டும் பணி வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில், தொடக்க, நடுநிலைப் பள்ளி என, 1,002 பள்ளிகள் உள்ளன. அப்பள்ளிகளில் பயிலும் ஆதி திராவிட பிரிவைச் சேர்ந்த, ஒன்று முதல், பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, ஆதி திராவிடர் நலத்துறை மூலம், ஆண்டு தோறும், 1,850 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.ஆதி திராவிட பிரிவில், சுகாதாரமற்ற தொழிலில் ஈடுபடும் பெற்றோரின் குழந்தைகளுக்கு, இக்கல்வி உதவித் தொகை வழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில், 2010 – 11 மற்றும் 2011-12ம் ஆண்டுக்கான, 81 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகையை, அரசிடம் இருந்து, ஆதி திராவிடர் நலத்துறையினர் பெற்றனர்.

அந்தந்த பள்ளி தலைமையாசரியர்களுக்கு, மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை மூலம், அத்தொகை, காசோலையாக வழங்கப்பட்டது. போலிக் கையெழுத்திட்டு, 81 லட்சம் ரூபாயை, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள், “ஸ்வாகா’ செய்தனர். புரோக்கர்கள் சிலர், ஆதி திராவிட நலத்துறை மற்றும் தலைமையாசிரியர்களுக்கு, பாலமாக செயல்பட்டனர். இதில் தொடர்புடைய, 77 பள்ளி தலைமையாசிரியர்கள், 2012 ஆக., 3ம் தேதி, சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்; அதில், 51 பேர், பெண் தலைமையாசிரியர்கள். இந்த மோசடியில் ஈடுபட்ட, மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் ராமச்சந்திரன், கண்காணிப்பாளர் உமாபதி ஆகியோரும், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவருக்கும், விளக்கம் கேட்டு, “மெமோ’ வழங்கப்பட்டது. மேலும், ஏழு பேர் மீது, போலீசார் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் வழக்கு பதிந்து, விசாரணை நடத்துகின்றனர்.
இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட, 67 துவக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள், மீண்டும் பணியாற்ற, அந்தந்த, ஏ.இ.இ.ஓ.,க்கள் மூலம் நேற்று உத்தரவு வழங்கப்பட்டது. அதே பள்ளியில் இல்லாமல், வட்டாரத்தில் உள்ள மற்றொரு பள்ளியில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி கூறுகையில், “”ஒழுங்கு நடவடிக்கைக்கு, பாதகம் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மீது, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும். இந்த விசாரணை அறிக்கையின் முடிவில், இறுதி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.