Monthly Archives: August, 2012

பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட, முதுகலை ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட, முதுகலை ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட, முதுகலை ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில், 1,185 பேர் இடம் பெற்றனர். கடந்த 2010-11ம் ஆண்டு, 1,347 முதுகலை ஆசிரியரை, பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த தேர்வு தொடர்பாக, ஏற்கனவே ஒரு முடிவு வெளியிடப்பட்டு, பதிவுதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட விளக்கங்கள், விடுபட்ட பதிவுதாரர்கள் என, பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, இறுதி தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டது. இந்தப் பட்டியலில், 1,185 பேர் இடம் பிடித்தனர். 162 பணியிடங்களுக்கு, குறிப்பிட்ட சில பிரிவுகளில் பதிவுதாரர்கள் இல்லாததால், இந்தப் பணியிடங்கள் காலியாக இருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்த தேர்வில் இருந்து, இந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிகிறது.

தமிழ்நாடு முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு போல ஒரே தேதியில், ஒரே வித வினாத்தாளுடன் காலாண்டு தேர்வு செப்டம்பர் மாதம் 12-ந்தேதி தொடங்குகிறது.

தமிழ்நாடு முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு போல ஒரே தேதியில், ஒரே வித வினாத்தாளுடன் காலாண்டு தேர்வு செப்டம்பர் மாதம் 12-ந்தேதி தொடங்குகிறது.தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திலும் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு போல ஒரே தேதியில் ஒரே வித வினாத்தாளுடன் காலாண்டு தேர்வு செப்டம்பர் மாதம் 12-ந் தேதி தொடங்குகிறது.தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் (மெட்ரிகுலேசன் பள்ளிகள்) ஆகியவற்றில் இதுவரை பொதுத்தேர்வு மட்டுமே ஒரே நாளில் ஒரே வித வினாத்தாளுடன் நடைபெற்று வந்தது. காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வுகள் அந்தந்த பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர் முடிவுபடிதான் இதுவரை தேர்வுகள் நடந்துவந்தன.ஆனால் பல தனியார் பள்ளிகளில் 9-வது வகுப்பில் உள்ள பாடங்கள் முழுவதையும் நடத்தாமல் டிசம்பர் மாதம் முதல் 10-வது வகுப்பு பாடத்தை நடத்திவந்தனர். அதுபோல 11-வது வகுப்பு மாணவர்களுக்கு நடத்தவேண்டிய பாடங்களை முழுமையாக நடத்தாமல் பிளஸ்-2 பாடங்களை டிசம்பர் மாதம் முதல் நடத்தி வந்தனர்.இந்த நிலை மாறவேண்டும். எல்லா வகுப்பு பாடங்களையும் மாணவர்கள் படித்தால்தான் அவர்களுக்கு அறிவு விருத்தியாகும் என்று கருதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிவபதி, முதன்மை செயலாளர் த.சபிதா ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒரே நாளில் ஒரே வித வினாத்தாளுடன் தேர்வு நடத்த முடிவு செய்தனர்.அதன்படி தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டு வினாத்தாளும் அச்சடிக்கப்பட்டு தேர்வுத்துறை மூலம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.அதன்படி எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு செப்டம்பர் 12-ந் தேதி தமிழ் முதல் தாள் பரீட்சை தொடங்குகிறது. 13-ந் தேதி தமிழ் 2-வது தாள், 14-ந் தேதி ஆங்கிலம் முதல் தாள், 15-ந் தேதி ஆங்கிலம் 2-வது தாள். 17-ந் தேதி கணிதம், 18-ந் தேதி அறிவியல், 20-ந் தேதி சமூக அறிவியல் ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளன. தேர்வுகள் பொதுத்தேர்வு போலவே தொடங்க உள்ளன. அதாவது காலை 10 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்படும். மாணவர்கள் அதை 10.10 மணிவரை வாசிக்கவேண்டும். 10.10 முதல் 10.15 வரை (5 நிமிடம்) விடைத்தாளில் தேர்வு பதிவு எண் உள்ளிட்டவற்றை நிரப்பவேண்டும். 10.15 மணி முதல் 12.45 மணிவரை தேர்வு நடைபெறும்.எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 10 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு 12-ந் தேதி தமிழ் முதல் தாள், 13-ந் தேதி தமிழ் 2-வது தாள், 14-ந் தேதி ஆங்கிலம் முதல் தாள், 15-ந் தேதி ஆங்கிலம் 2-வது தாள், 17-ந் தேதி கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலாஜி, நிïட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ், 18-ந் தேதி வணிகவியல், மனை அறிவியல், புவியியல், 20-ந் தேதி இயற்பியல், பொருளாதாரம், 21-ந் தேதி கம்ïனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்ïட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழி, தட்டச்சு, 22-ந் தேதி வேதியியல், அக்கவுண்டன்சி, 24-ந் தேதி உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம், 25-ந் தேதி அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழில்கல்வி தேர்வு காலை 10 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்படும். 10.10 மணிவரை அதை வாசித்துப்பார்க்கலாம். 10.10 மணி முதல் 10.15 மணிவரை தேர்வு எண் உள்ளிட்டவற்றை நிரப்பவேண்டும்.10.15 மணி முதல் 1.15 மணிவரை தேர்வு நடைபெறும்.மாணவ-மாணவிகள் 10.15 மணிக்கு பின்னர் அனுமதிக்கப்படமாட்டார்கள்.பிளஸ்-2 தேர்வை 7 1/2 லட்சம் பேர்கள் எழுத உள்ளனர்.முதல் முதலாக, ஒரே நாளில் ஒரே வித கேள்வித்தாள் வழங்கப்பட உள்ளது.இவ்வாறு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை மாணவர்கள் எழுதுவதால் பொதுத்தேர்வில் அவர்கள் பயம் இன்றி எழுதமுடியும்.காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வுகள் முடிந்ததும் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரி மூலம் தேர்வுத்துறைக்கு அனுப்பும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கல்வித்துறை அதிகாரிகளும் ஆங்காங்கே சென்று விடைத்தாள் எவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று ஆய்வு செய்ய உள்ளனர்.

பி.எட். மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தொடங்கியது.

பி.எட். படிப்பில் சேர்வதற்கான கவுன்சிலிங் நேற்று சென்னையில் தொடங்கியது. அதில் பார்வையற்ற மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.பி.ஏ., பி.எஸ்சி. படித்த பட்டதாரிகள் ஆசிரியர் பணியில் ஈடுபடுவதற்கு பி.எட். என்ற ஆசிரியர் பயிற்சி தேவை. அந்த பி.எட். படிப்புக்கான அரசு கல்லூரிகள் 7 உள்ளன. அரசு உதவிபெறும் கல்லூரிகள் 14 உள்ளன. இந்த 21 கல்லூரிகளில் உள்ள 2118 இடங்களில் மாணவர்களை பி.எட். சேர்க்க கவுன்சிலிங் சென்னை கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் பி.எட். கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கியது. நேற்று பார்வையற்ற மாணவ-மாணவிகள், உடல் ஊனமுற்றவர்கள், பழங்குடியினர் மற்றும் மலைசாதியினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு நடத்தப்பட்டது.முதலில் பார்வையற்ற மாணவர்களுக்கு கவுன்சிலிங் தொடங்கியது. அப்போது மதுரையைச் சேர்ந்த மணிவண்ணன் என்ற மாணவர் சைதாப்பேட்டை பி.எட். கல்லூரியை தேர்ந்து எடுத்தார். அவர் எடுத்த கட் ஆப் மார்க் 79.22-வதாக திருச்சியை சேர்ந்த மாணவர் பாலமுருகன் சைதாப்பேட்டை கல்லூரியை தேர்ந்து எடுத்தார். அவர் எடுத்த கட் ஆப் மார்க் 78.8403-வதாக ஆர்.ஜெயராஜ் என்ற திருச்சி மாணவர் ஈரோடு மாவட்டம் குமாரப்பாளையத்தில் உள்ள பி.எட். கல்லூரியை தேர்ந்து எடுத்தார். அவர் எடுத்த கட் ஆப் மார்க் 78.25.இவர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ்ச்செல்வி சான்றிதழ் வழங்கி கவுன்சிலிங்கை தொடங்கிவைத்தார். மாணவர்சேர்க்கை செயலாளர் பரமேஸ்வரி முன்னிலை வகித்தார்.முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள் கூறுகையில், நாங்கள் கண்பார்வையை இழந்தாலும் மாணவர்களுக்கு கல்வி என்ற பார்வையை ஆசிரியர் பணியின் மூலம் நன்றாக கொடுக்க முடியும். அந்த ஆவலில்தான் பி.எட். படிக்க உள்ளோம் என்றனர்.பார்வையற்ற மாணவர்களுக்கு 7 அரசு பி.எட். கல்லூரிகளிலும் தலா 5 இடங்கள் ஒதுக்கப்பட்டன. முன்னாள் ராணுவத்தினருக்கு 21 கல்லூரிகளிலும் தலா ஒரு இடம் கொடுக்கப்பட்டது. பழங்குடியினருக்கு 21 இடங்கள் ஒதுக்கப்பட்டன.பொது கவுன்சிலிங் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், புவியியல், தாவரவியல், விலங்கியல் உள்பட 13 வகையான பாடங்களுக்கு நடத்தப்பட உள்ளது.

பள்ளி பஸ்களை கட்டுப்படுத்தும் புதிய வரைவு விதிகளை அடுத்தமாதம் 3-ந் தேதி தாக்கல் செய்தாக வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

பள்ளி பஸ்களை கட்டுப்படுத்தும் புதிய வரைவு விதிகளை அடுத்தமாதம் 3-ந் தேதி தாக்கல் செய்தாக வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.மாணவ-மாணவிகளை ஏற்றிச் செல்லும் பள்ளி பஸ்களை கட்டுப்படுத்துவதற்காக புதிய வரைவு விதிகளை அடுத்த மாதம் செப்டம்பர் 3-ந் தேதி கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.சென்னை தாம்பரத்தை அடுத்த சேலைïர் இந்திரா நகரில் உள்ள சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுருதி (வயது 6) என்ற மாணவி 2-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த மாதம் பள்ளியில் இருந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில், தாம்பரம் முடிச்சூர் சாலையில் செல்லும்போது பஸ்சின் தரைப்பகுதியில் இருந்த ஓட்டை வழியாக சாலையில் விழுந்து, உடல் நசுங்கி உயிரிழந்தாள்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, இந்த சம்பவத்தை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் தன்னிச்சை (சூ-மோட்டோ) வழக்காக எடுத்து விசாரிக்கின்றனர்.கடந்த மாதம் ஜுலை 27-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, `தமிழக அரசு வகுத்துள்ள தமிழ்நாடு மோட்டார் வாகன விதிமுறைகளில், பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகன பராமரிப்பு, தகுதி போன்றவற்றை நிர்ணயிப்பதற்கான பிரிவுகள் இல்லை. எனவே, புதிய விதிகளை அரசு உருவாக்க வேண்டும். விதிகளை மீறுவோர்களை தண்டிக்கவும், பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும், பள்ளி பஸ்களுக்கு தகுதிச் சான்றிதழ் கொடுப்பதற்கும் புதிய விதிகளில் வழிவகைகள் செய்யப்பட வேண்டும். அதற்காக வரைவு விதிகளை கோர்ட்டில் அரசு தாக்கல் செய்ய வேண்டும்என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்த நிலையில், தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி ஏ.ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு 23-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் அரசுப் பிளீடர் வெங்கடேஷ் ஆஜரானார். புதிய விதிகள் தொடர்பான வரைவு அறிக்கை தயாராக இருக்கிறது என்றும் அதை இன்னும் சில நாட்களில் அமைச்சரவையின் முன் ஒப்புதலுக்காக வைக்கப்பட உள்ளது என்றும் கூறினார்.மேலும், இதற்கு கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அரசுப் பிளீடர் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை 29-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்த நிலையில், நேற்று இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி ஏ.ஆறுமுகசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜரானார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
அட்வகேட் ஜெனரல்:- புதிய வரைவு விதிகளை தாக்கல் செய்வதற்கு இன்னும் கொஞ்ச கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே அரசுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும்.
தலைமை நீதிபதி:- கடந்த 10-ந் தேதியன்றே வரைவு விதி தொடர்பான உத்தரவை பிறப்பித்துவிட்டோம். ஏன் இந்த விஷயத்தில் நீங்களும் அரசும் முக்கியத்துவம் காட்டுவதில்லை? மற்ற பிரச்சினைகளுக்காக அமைச்சரவையின் ஒப்புதலைப் உடனடியாகப் பெறும் அரசு, இதிலும் முக்கியத்துவம் காட்டலாமே.
அட்வகேட் ஜெனரல்:- இந்த பிரச்சினையில் அரசு அக்கரை காட்டுகிறது. அதுவும் இது போன்ற பிரச்சினைகளுக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது.
வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ்:- சுருதி பிரச்சினையை ஐகோர்ட்டு கையில் எடுத்த பிறகு, மேலும் 5 விபத்து சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் 5 குழந்தைகள் பலியாகிவிட்டனர். எனவே இதில் துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
இந்த முக்கியமான பிரச்சினைக்கான வரைவு விதிகளை தாக்கல் செய்வதாக அரசு சார்பில் உத்தரவாதம் அளித்தும் அதை நிறைவேற்றாமல், இதுவரை அதை தாக்கல் செய்யாமல், மேலும் கால அவகாசம் கேட்பது துரதிருஷ்டவசமாகும்.
அந்த வரைவு விதிகளுக்கு அமைச்சரவையின் ஒப்புதலை பெறவேண்டும் என்று கடந்த 2 வாய்தாக்களில் கால அவகாசம் கோரப்பட்டது. அதற்கான அனுமதியையும் அளிக்கப்பட்டது.இந்த நிலையில், சுருதி சம்பவத்துக்குப் பிறகு தமிழகத்தில் மேலும் நடந்த விபத்து சம்பவங்களில் 5 பள்ளிக்குழந்தைகள் பலியாகியதாக எங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.எனவே, இதற்கான வரைவு விதிகளை சமர்ப்பிப்பதற்கு இதுதான் சரியான நேரம். வழக்கை செப்டம்பர் 3-ந் தேதிக்கு தள்ளி வைக்கிறோம். அன்று வரைவு விதிகளை அரசு கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும்.

தமிழகத்தில், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, "நபார்டு’ வங்கி, 129 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்தில், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, “நபார்டுவங்கி, 129 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.இதுதொடர்பாக, “நபார்டுவங்கியின், தமிழ்நாடு மண்டல தலைமை மேலாளர் லலிதா வெளியிட்ட அறிக்கை: ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ், தமிழகத்தில், 31 மாவட்டங்களில் அமைந்திருக்கும், 131 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 129.82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், புதிதாக, 1,508 வகுப்பறைகள், 112 ஆய்வுக் கூடங்கள், விடுதிகள், குடி நீர் மற்றும் கழிவறை வசதிகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால், 1.7 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைவர். ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ், 2012-13ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த நிதியாக, 822 கோடி ரூபாய், தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், சேமிப்பு தானிய கிடங்குகளை உருவாக்க மட்டும், சிறப்பு நிதியாக, 151.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

47 லட்சம் மாணவ, மாணவியருக்கு வண்ண பென்சில்கள்: செப்டம்பரில் வழங்க முடிவு

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா வண்ணப் பென்சில், கணித உபகரணப் பெட்டி ஆகியவற்றை, செப்., இறுதியில் வழங்க, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, விலையில்லா காலணி, பாடப் புத்தகம், சைக்கிள், வண்ணப் பென்சில், கிரையான் பென்சில், புத்தகப் பை, ஊக்கத் தொகை உள்ளிட்ட, 14 திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதில், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும், 12.50 லட்சம் மாணவர்களுக்கு, விலையில்லா கிரையான் பென்சில் வழங்குவதற்கான பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் பயிலும், 35 லட்சம் மாணவர்களுக்கு, வண்ணப் பென்சில் வழங்கும் திட்டமும், இறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும், 46 லட்சம் மாணவர்களுக்கு, விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்குவதற்கான ஏற்பாடுகளும் முடிந்துள்ளன. கிரையான் பென்சில், வண்ணப் பென்சில் தலா, 16, தனித்தனி பாக்கெட்டுகளில் வழங்கப்படுகின்றன. பாக்கெட்டின் முன்புறம், தமிழக அரசின் முத்திரையுடன், முதல்வர் படம் பொறிக்கப்பட்டுள்ளது; பின்புறம், மாணவரின் பெயர், வகுப்பு, பள்ளி, மாவட்டம் ஆகியவை அச்சிடப்பட்டுள்ளன. வகுப்புகளில், பென்சில் பாக்கெட்டுகள் மாறிவிடாமல் இருக்கவே, இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மூன்று திட்டங்களுக்கும், டெண்டர் விடப்பட்டு, தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தற்போது, பென்சில், கிரையான் பென்சில் மற்றும் கணித உபகரணப் பெட்டி தயாரிக்கும் வேலை, மும்முரமாக நடந்து வருகிறது. செப்., இறுதி வாரத்தில் இருந்து, அனைத்து மாணவ, மாணவியருக்கும், கிரையான் பென்சில், வண்ணப் பென்சில் மற்றும் கணித உபகரணப் பெட்டி வழங்கப்படும் என, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அக்., 3ம் தேதி நடக்கும் டி.இ.டி., தேர்வு கேள்வித்தாளின் தரத்தில் சமரசம் கிடையாது. ஏற்கனவே இருந்த அதே தரம் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி கூறியுள்ளார்.

ஜூலை 12ம் தேதி நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு, நேற்று வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய, 6.72 லட்சம் பேரில், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 25 ஆயிரம் பேரை தேர்வு செய்ய நடத்திய தேர்வில், வெறும், 0.36 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதால், அக்., 3ம் தேதி, மீண்டும் ஒரு தேர்வை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.ஏற்கனவே நடத்திய தேர்வுக்கு, போதிய நேரம் வழங்கவில்லை என, எழுந்த புகாரைத் தொடர்ந்து, அக்டோபரில் நடக்கும் தேர்வுக்கு, 3 மணி நேரம் வழங்கப்படும் எனவும் டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

ஜூலை 12ம் தேதி, டி.ஆர்.பி., நடத்திய முதல் தகுதித் தேர்வில், 6 லட்சத்து, 72 ஆயிரத்து, 204 பேர் பங்கேற்றனர். முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய இரண்டுமே கடினமாக இருந்ததாகவும்; போதிய அளவிற்கு நேரம் வழங்கவில்லை எனவும், தேர்வர்கள் குற்றம் சாட்டினர்.அதற்கு தகுந்தாற்போல், நேற்று வெளியான தேர்வு முடிவும் அமைந்தது. தேர்வு எழுதிய 6.72 லட்சம் பேரில், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 0.36.
தேர்வு முடிவுகள், டி.ஆர்.பி., இணையதளத்தில், நேற்று அதிகாலை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, தேர்வு முடிவு குறித்த புள்ளி விவரங்களை, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி வெளியிட்டார்.அப்போது, நிருபர்களிடம் அவர்கூறியதாவது:
முதல் தாள் தேர்வில், 1,735 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 713 பேரும் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். விண்ணப்பத்திலும், விடைத்தாளிலும் கேட்கப்பட்ட அடிப்படை விவரங்களை சரிவரச் செய்யாத தேர்வர்களுக்கு, அவர்கள் செய்த தவறுகளுக்கு ஏற்ப, மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது.கையெழுத்தில் வித்தியாசம் இருந்ததால், இரு தேர்வர்களுக்கு, டி.ஆர்.பி., தேர்வில் பங்கேற்க, ஐந்தாண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல் தாள் தேர்வில், 685 பேருக்கும்; இரண்டாம் தாள் தேர்வில், 1,547 பேருக்கும், அவர்கள் செய்த தவறுகளுக்கு ஏற்ப, உரிய தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.இரு தேர்வர், தங்கள் அசல் விடைத்தாள் நகலை ஒப்படைக்காததால், அவர்களுடைய தேர்வு ரத்து செய்யப்பட்டது.

தேர்வில், குறைந்த தேர்ச்சி சதவீதம் ஏற்பட்டிருப்பது குறித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவ, மாணவியரின் எதிர்காலத்தையும், தரமான கல்வித் தரத்தை ஏற்படுத்துவதையும் கருத்தில் கொண்டும், 60 சதவீத மதிப்பெண் பெறுபவர் மட்டுமே தேர்ச்சி என்ற நிலையை தொடர்ந்து கடைபிடிக்குமாறு, அரசு அறிவுறுத்தியது.தரமான ஆசிரியரை பணியில் அமர்த்தினால் தான், தரமான கல்வியை வழங்க முடியும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 60 சதவீத மதிப்பெண் பெறாத தேர்வருக்காக, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில், மற்றொரு டி.இ.டி., தேர்வை உடனடியாக நடத்தவும், அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அக்., 3ம் தேதி, அடுத்த டி.இ.டி., தேர்வு நடக்கும்.இதன் முடிவு, அக்., இறுதிக்குள் வெளியிடப்படும். ஏற்கனவே நடந்த தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெறாத தேர்வர் மட்டுமே, இந்தத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.இந்தத் தேர்வுக்காக, தனியாக விண்ணப்பிக்கவோ, தேர்வுக் கட்டணம் செலுத்தவோ தேவையில்லை. புதிய, “ஹால் டிக்கெட்அனுப்பப்படும்; அதில் குறிப்பிடும் மையங்களுக்குச் சென்று தேர்வு எழுதினால் போதும்.ஏற்கனவே நடத்திய தேர்வுக்கு, போதிய நேர அவகாசம் வழங்கவில்லை என, கடும் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அக்., 3ல் நடக்கும்,முதல் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய இரண்டு தேர்வுக்கும், தலா 3 மணி நேரம் வழங்கப்படும்.கேள்வித்தாள் கடினமாக இருந்தது என, அனைவரும் கூறினர். ஆனால், இந்தத் தேர்விலும், இத்தனை ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக, பெண்கள் அதிகளவு மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களால் மட்டும் எப்படி முடிந்தது?கேள்வித்தாள் அமைப்பை புரிந்து, தேர்வுக்கு முழுவதுமாக தயாரானால், கண்டிப்பாக தேர்ச்சி பெற முடியும். அடுத்து நடக்கும் டி.இ.டி., தேர்வு கேள்வித்தாளின் தரத்தில், எவ்வித மாற்றமும் இருக்காது. ஏற்கனவே இருந்த அதே தரம், தொடர்ந்து கடைபிடிக்கப்படும். கேள்வித்தாள் தரத்தில், சமரசம் கிடையாது.இதுவரை, 13 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்யும் பணி, இறுதி செய்யப்பட்டுள்ளது. அக்., இறுதிக்குள், மேலும், 26 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்யும் பணி முடிவடையும்.இவ்வாறு சுர்ஜித் சவுத்ரி கூறினார்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் விவரம்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்து ரேங்க் பெற்ற மூன்று பேருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வில் எம்.திவ்யாவும் (வயது 26), பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வில் சமூக அறிவியல் பிரிவில் ஆர்.அருள்வாணியும் (32), கணிதம்-அறிவியல் பிரிவில் பி.சித்ராவும் (39) முதலிடத்தை பிடித்துள்ளனர். தகுதித்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை படைத்த ஒன்பது பேருமே பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,448 பேரில் 1,680 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல் 3 இடங்களை பிடித்தவர்கள்
இடைநிலை ஆசிரியர் தேர்வு
1. எம்.திவ்யா, பொள்ளாச்சி (மார்க் 122)
2. சி.சவீதா, திண்டுக்கல் (116)
3. ஷோபனா, திருச்சி (116)
பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல் பிரிவு)
1. ஆர்.அருள்வாணி, உத்தமபாளையம் (மார்க் 125)
2. ஏ.பிருந்தா, உத்தமபாளையம் (124)
3. எஸ்.செந்தில்குமார், உத்தமபாளையம் (124)
கணிதம்-அறிவியல் பிரிவு
1. பி.சித்ரா, நாகப்பட்டினம் (மார்க் 142)
2. எச்.சர்மிளா, கோபிசெட்டிப்பாளையம் (131)
3. பிருந்தாதேவி, உத்தமபாளையம் (117)

ஆசிரியர் தகுதித்தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தவும்,இனிமேல், தகுதித்தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளுக்கும் ஆன்லைன் விண்ணப்பமுறையும் அறிமுகப்படுத்தப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி தெரிவித்துள்ளர்.

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்

ஆசிரியர் தகுதித்தேர்வு மூலமாக 5,451 இடைநிலை ஆசிரியர் பணி இடங்களும், 18,932 பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களும் நிரப்பப்பட உள்ளன. பாடவாரியான பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் விவரம் வருமாறு:-

தமிழ் – 1,778
ஆங்கிலம் – 5,867
வரலாறு – 4,185
புவியியல் – 1,044
கணிதம் – 2,606
இயற்பியல் – 1,213
வேதியியல் – 1,195
தாவரவியல் – 518
விலங்கியல் – 513
தெலுங்கு – 12
உருது – 1

மத்திய அரசின் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு ஆகஸ்ட் 31-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) ஆசிரியர் தகுதித்தேர்வினை நவம்பர் மாதம் 18-ந்தேதி சென்னை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடத்த உள்ளது. மத்திய தகுதித்தேர்வுக்கு முன்பு விண்ணப்பம் வாங்கி விண்ணப்பிக்கும் முறை இருந்தது.
தற்போது இந்த தேர்வில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி, http://www.ctet.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து அதை பிரிண்ட் அவுட் எடுத்து சி.பி.எஸ்.இ. தலைமை அலுவலகத்திற்கு தேர்வுக்கட்டணத்துடன் அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 31-ந் தேதி ஆகும். ஆன்லைன் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து செப்டம்பர் 7-ந் தேதிக்குள் அனுப்பிவிட வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
மத்திய அரசின் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றால் மட்டுமே சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும், கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு. மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை: அக்டோபர் 3-ம் தேதி நடைபெறும் மறுதேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்காக மட்டுமே மறுதேர்வு நடத்தப்படுகிறது. எனவே, ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்தத் தேர்வில் பங்கேற்க முடியும் தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளதால், தேர்வு நேரமும் அதிகரிக்கப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதால், சுமார் 6.74 லட்சம் பேருக்கு அக்டோபர் 3-ம் தேதி (புதன்கிழமை) மறுதேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி சென்னையில் சனிக்கிழமை அறிவித்தார். பெரும்பாலான தேர்வர்களின் வேண்டுகோளை ஏற்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார். ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெள்ளிக்கிழமை இரவு வெளியிடப்பட்டன. இரண்டு தாள்களையும் சேர்த்து தேர்வு எழுதிய 6.76 லட்சம் பேரில் 2,448 பேர் மட்டுமே (0.40%) தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இவர்களில் 14 மாற்றுத் திறனாளிகளும், 2 பார்வைத் திறன் குறைந்தவர்களும் அடங்குவர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் 5,451 இடைநிலை ஆசிரியர்களும், தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 18,922 பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையிலே ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதால், சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு இவர்கள் அனைவரும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. மீதமுள்ள 22 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கவும், தேர்வில் வெற்றிபெறாதவர்களுக்கு வாய்ப்பளிக்கவும் மறுதேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு தாளிலும் எவ்வளவு பேர் தேர்ச்சி? தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கடந்த ஜூலை 12-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. 6.76 லட்சம் பேர் தேர்வு எழுதினர். முதல் தாளை எழுதிய 2 லட்சத்து 83 ஆயிரத்து 806 பேரில் 1,735 பேர் மட்டுமே தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 0.61%. இரண்டாம் தாளை எழுதிய 3 லட்சத்து 83 ஆயிரத்து 616 பேரில் 713 மட்டுமே தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 0.19%. முதல் தாள், இரண்டாம் தாள் ஆகிய இரண்டு தாள்களையும் எழுதிய 57 ஆயிரம் பேரில் 83 பேர் மட்டுமே இரண்டு தாள்களிலும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சியடைந்தவர்களில் 1680 பேர் பெண்கள், 768 பேர் ஆண்கள். முதலிடங்களைப் பிடித்த பெண்கள்: ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் பொள்ளாச்சியைச் சேர்ந்த எம்.திவ்யா 150-க்கு 122 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் சமூக அறிவியல் பாடத்தைத் தேர்ந்தெடுத்தவர்களில் உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஆர்.அருள்வாணி 150-க்கு 125 மதிப்பெண்ணும், கணிதப் பாடத்தில் தேர்வு எழுதியவர்களில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பி.சித்ரா என்பவர் 150-க்கு 142 மதிப்பெண்ணும் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர். மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை: “”வரும் அக்டோபர் 3-ம் தேதி நடைபெறும் மறுதேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்காக மட்டுமே மறுதேர்வு நடத்தப்படுகிறது. எனவே, ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்தத் தேர்வில் பங்கேற்க முடியும்என்று சுர்ஜித் கே.சௌத்ரி தெரிவித்தார். இது தொடர்பாக, அவர் மேலும் கூறியது: ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைந்த எண்ணிக்கையிலான தேர்வர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றது அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பதால், இந்தத் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்ணை எடுக்காதவர்களுக்கு (150-க்கு 90 மதிப்பெண்) மறுதேர்வு நடத்த அரசு உத்தரவிட்டது. அதேபோல், தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளதால், தேர்வு நேரமும் அதிகரிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, வரும் அக்டோபர் 3-ம் தேதி (புதன்கிழமை) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக மறு தேர்வு நடத்தப்படும். அன்றைய தினம் ஆசிரியர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்கும் வகையில் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படும். இந்தத் தேர்வு முடிவுகள் அக்டோபர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும். தேர்வுக்கான அழைப்புக் கடிதம் விரைவில் தேர்வர்களுக்கு அனுப்பப்படும். 13 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு: இப்போதுவரை 13 ஆயிரம் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான பணிகள் முடிவடைந்துள்ளன. வரும் அக்டோபர் மாதத்துக்குள் 26 ஆயிரம் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகளும் முடிவடையும் என்றார் அவர்.
முதல் தாள் தேர்வு எழுதியோர் :2,83,806 தேர்ச்சி: 1,735
 இரண்டாம் தாள் தேர்வு எழுதியோர் :3,83,616 தேர்ச்சி: 713
 இரண்டு தாள்களையும் எழுதியோர் : 57,000 தேர்ச்சி: 83
 தேர்வு எழுதியவர்களின் மொத்த எண்ணிக்கை 6,76,763
 தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 2,448
 விடைத்தாளில் தவறுகளால் மதிப்பெண்ணை இழந்தவர்கள் 2,182
ஆண்டுக்கு இருமுறை தேர்வு
 சிரியர் தகுதித் தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஜூன் மாதம் ஒரு தேர்வும், டிசம்பரில் மற்றொரு தேர்வும் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இப்போதுள்ள அரசாணையின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் உள்ளதுபோல் விரைவில் இந்த அரசாணை ஆண்டுக்கு இருமுறை நடத்தும் வகையில் திருத்தப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல், ஒரு குறிப்பிட்ட தேதியில் இந்தத் தேர்வை நடத்தும் யோசனையும் தேர்வு வாரியத்தின் பரிசீலனையில் உள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் சுமார் 1.50 லட்சம் பேர் தங்களது விண்ணப்பங்களில் பல்வேறு தவறுகளைச் செய்திருந்தனர். அவர்களுக்கு தவறுகளைத் திருத்த பல்வேறு வாய்ப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கியது. இந்த நிலையில், தேர்வு நாளன்றும் தவறுகளைச் செய்தவர்களுக்கு மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு இரண்டு தாள்களிலும் மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. விடைத்தாளில் வினாத்தாள் புத்தக எண்ணைக் குறிப்பிடாதவர்களுக்கு 5 மதிப்பெண்ணும், தேர்வு எழுதும் பாடத்தைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளவர்களுக்கு 3 மதிப்பெண்ணும், சரியான மொழிப்பாடத்தைக் குறிப்பிடாதவர்களுக்கு 2 மதிப்பெண் வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் தவறுகளால் முதல் தாளில் 685 பேருக்கும், இரண்டாம் தாளில் 1,497 பேருக்கும் மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. விடைத்தாளை எடுத்துச் சென்ற தேர்வர்கள் தகுதியிழந்தவர்களாகக் கருதப்பட்டனர். அதேபோல், வேறு தேர்வு எண்ணை எழுதியவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவில்லை. சில தேர்வர்களின் கையொப்பங்கள் விண்ணப்பம், விடைத்தாளில் வெவ்வேறாக இருந்தன. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து 5 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டன

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டன TET RESULT

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. கடந்த மாதம் 12ம் தேதி நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 2,88,588 பேர் எழுதிய முதல் தாளில், 1,735 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், 3,88,185 பேர் எழுதிய இரண்டாம் தாளில் 713 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டு தாள்களிலும் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 83 என்று தமிழ்நாடு ஆசிரியர் ‌தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் சிறப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளின் தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.மதிப்பெண் சான்றிதழை 29 மற்றும் 30 தேதிகளில் தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். செப்டம்பர், அக்டோபர் மாத தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். அதுவரை அரசு தேர்வுகள் இயக்குனரகத்தை அணுகவேண்டாம் என அரசு தேர்வுத்துறை இயக்குனர் திருமதி தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

மே 2012 துறைத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன

Results of Departmental Examinations – MAY 2012
(Updated on 14 August 2012)
Enter Your Register Number :                                                         

மாநில தகுதித் தேர்வான, "செட்’ தேர்வு வரும், அக்., 7ம் தேதி நடக்கிறது. இதற்காக, இணையதளம் வழி விண்ணப்பம் சமர்ப்பிக்க, கடைசி நாள் ஆக., 31ம் தேதி.

பாரதியார் பல்கலை சார்பில், விரிவுரையாளர், உதவி பேராசிரியர்களுக்கு நடத்தப்படும், மாநில தகுதித் தேர்வான, “செட்தேர்வு வரும், அக்., 7ம் தேதி நடக்கிறது.இதற்காக, பல்கலை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பல்கலை மானியக் குழு அனுமதியோடு, உதவி பேராசிரியர், விரிவுரையாளருக்கான மாநில தகுதித் தேர்வை, பாரதியார் பல்கலை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு இத்தேர்வை, அக்., 7ம் தேதி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10 முதன்மைத் தேர்வு மையங்கள் வழியாக, 53 தேர்வு மையங்களில் நடத்த உள்ளது. பல்கலை மானியக் குழு அனுமதியுள்ள, 27 பாடப்பிரிவுகளில் தேர்வுகள் நடக்கின்றன.மூன்று தாள்கள் கொண்ட இத்தேர்வில், முதல் மற்றும் இரண்டாம் தாள்கள், அக்., 7ம் தேதி காலை, 9.30 முதல், 12 மணி வரையும், மூன்றாம் தாள் மதியம், 1.30 முதல், 4 மணி வரையும் நடக்கின்றன. பட்ட மேற்படிப்பு இறுதியாண்டு மாணவர்களும், பட்ட மேற்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பம் பூர்த்தி செய்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் படி, தேவையான விண்ணப்ப நகல், தேர்வு வருகை பற்றிய தாள், தேர்வு அனுமதிச் சீட்டு, தேர்வுக் கட்டணம் செலுத்திய, “சலான்மற்றும் சான்றிதழ்களின் நகல்கள் போன்றவற்றை இணைத்து, செயலர், விரிவுரையாளர் மாநில தகுதிக்கான தேர்வு –2012, பாரதியார் பல்கலை, கோவை – 641046 என்ற முகவரிக்கு, அனுப்ப வேண்டும்.விண்ணப்பத்தின் மீது, “விரிவுரையாளர் மாநில தகுதிக்கான தேர்வு- 2012′ என்று அவசியம் குறிப்பிட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், செப்., 7ம் தேதி மாலைக்குள், பல்கலை வந்து சேர வேண்டும். இணையதளம் வழி விண்ணப்பம் சமர்ப்பிக்க, ஆக., 31ம் தேதி கடைசி நாள். பூர்த்தி செய்யப்பட்டு, இணைப்புகளோடு நகல்களை, பல்கலைக்கு, செப்., 7ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விவரங்களை பல்கலை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான காலாண்டு தேர்வு, செப்., 12ம் தேதி துவங்குகிறது.

எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான காலாண்டு தேர்வுசெப்., 12ம் தேதி துவங்குகிறது.நடப்பாண்டு முதல்எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ் 2 வகுப்புக்குபொதுத்தேர்வை போலவேஒரே மாதிரியான கேள்வித்தாளுடன்ஒரே நாளில்அனைத்து பள்ளிகளிலும் தேர்வு துவக்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி.,
செப்டம்பர் 12,2012 – தமிழ் முதல் தாள்
செப்டம்பர் 13,2012  – தமிழ் இரண்டாம் தாள்
செப்டம்பர் 14,2012  – ஆங்கிலம் முதல் தாள்
செப்டம்பர்  15,2012  – ஆங்கிலம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 17,2012  – கணிதம்
செப்டம்பர் 18,2012  – அறிவியல்
செப்டம்பர்  20,2012  – சமூக அறிவியல்
பிளஸ் 2
செப்டம்பர் 12,2012  – தமிழ் முதல் தாள்
செப்டம்பர் 13,2012   – தமிழ் இரண்டாம் தாள்
செப்டம்பர் 14,2012   – ஆங்கிலம் முதல் தாள்
செப்டம்பர் 15,2012   – ஆங்கிலம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 17,2012   – கணிதம்விலங்கியல்மைக்ரோ பயாலஜி
                   நியூட்ரீஷன்  அண்டு டயப்டிக்ஸ்செப்.,
செப்டம்பர் 18,2012   – வணிகவியல்ஹோம் சயின்ஸ்புவியியல்
செப்டம்பர் 20,2012   – இயற்பியல்பொருளியல்.
செப்டம்பர் 21,2012   – கம்யூனிகேடிவ் இங்கிலீஷ்கம்ப்யூட்டர் சயின்ஸ்
                   பயோ கெமிஸ்ட்ரி
செப்டம்பர் 22,2012   – வேதியியல்அக்கவுன்டன்சி
செப்டம்பர் 24,2012   – உயிரியல்வரலாறுதாவரவியல்
                   பிசினஸ் மேத்ஸ்
செப்டம்பர் 25,2012   – பொலிடிகல் சயின்ஸ்நர்சிங்புள்ளியியல்
பொதுத்தேர்வுகளை போன்றேகாலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை நடத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி வினாத்தாளை படித்து பார்க்க, 15 நிமிடம்இத்தேர்வுகளுக்கும் வழங்கப்படுகிறது.

எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான காலாண்டு தேர்வு, செப்., 12ம் தேதி துவங்குகிறது.

எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான காலாண்டு தேர்வு, செப்., 12ம் தேதி துவங்குகிறது.நடப்பாண்டு முதல், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு, பொதுத்தேர்வை போலவே, ஒரே மாதிரியான கேள்வித்தாளுடன், ஒரே நாளில், அனைத்து பள்ளிகளிலும் தேர்வு துவக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி.,
செப்டம்பர் 12,2012 – தமிழ் முதல் தாள்
செப்டம்பர் 13,2012  – தமிழ் இரண்டாம் தாள்
செப்டம்பர் 14,2012  – ஆங்கிலம் முதல் தாள்
செப்டம்பர்  15,2012  – ஆங்கிலம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 17,2012  – கணிதம்
செப்டம்பர் 18,2012  – அறிவியல்
செப்டம்பர்  20,2012  – சமூக அறிவியல்
பிளஸ் 2
செப்டம்பர் 12,2012  – தமிழ் முதல் தாள்
செப்டம்பர் 13,2012   – தமிழ் இரண்டாம் தாள்
செப்டம்பர் 14,2012   – ஆங்கிலம் முதல் தாள்
செப்டம்பர் 15,2012   – ஆங்கிலம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 17,2012   – கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி
                   நியூட்ரீஷன்  அண்டு டயப்டிக்ஸ்செப்.,
செப்டம்பர் 18,2012   – வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்
செப்டம்பர் 20,2012   – இயற்பியல், பொருளியல்.
செப்டம்பர் 21,2012   – கம்யூனிகேடிவ் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் சயின்ஸ்
                   பயோ கெமிஸ்ட்ரி
செப்டம்பர் 22,2012   – வேதியியல், அக்கவுன்டன்சி
செப்டம்பர் 24,2012   – உயிரியல், வரலாறு, தாவரவியல்
                   பிசினஸ் மேத்ஸ்
செப்டம்பர் 25,2012   – பொலிடிகல் சயின்ஸ், நர்சிங், புள்ளியியல்
பொதுத்தேர்வுகளை போன்றே, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை நடத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி வினாத்தாளை படித்து பார்க்க, 15 நிமிடம், இத்தேர்வுகளுக்கும் வழங்கப்படுகிறது.

கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். நம் தாய்த்திருநாடு அடிமைச்சங்கிலியை அறுத்து தலை நிமிர்ந்து 66 ஆண்டுகள் ஆகின்றன. இன்நன்நாளில் அனைவரும் வேற்றுமை மறந்து ஒற்றுமையாய் நம் நாட்டை உலக அரங்கில் வல்லரசாக உயர்த்த உறுதி மேற்கொள்வோம். நம் அன்புக்குரிய தலைவர் திரு.அப்துல் கலாம் அவர்களின் உன்னத கனவு நினைவேற நேர்மையாக உழைப்போம். அனைவருக்கும் இனிய சுதந்திர நன்நாள் வாழ்த்துக்கள்.வாழ்க பாரதம்! வளர்க நம் மணித்திரு நாடு!!

உலகின் பெரிய ஜனநாயக நாடாக இந்தியாஇருக்கிறது. விண்வெளி, மருத்துவம், கல்வி, பொருளாதாரம், ராணுவம், அணு சக்தி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உலகளவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைஎட்டியுள்ளது.ஆனால் வல்லரசு நாடாக உருவாவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும். ஏனெனில் வல்லரசாக வேண்டுமெனில் பல்வேறு துறைகளில் நாம் மேலும் வளர்ச்சியடைய வேண்டும். உலகில் தற்போதுஅமெரிக்கா வல்லரசு நாடாக விளங்குகிறது. சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த நூற்றாண்டில் வல்லரசு நாடாக உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. வல்லரசு நாடு என்பது உள்நாட்டிலும், உலக நாடுகள் மத்தியிலும் செல்வாக்கைநிலைநிறுத்தும் தகுதியை பெற்றிருக்க வேண்டும். உலகின் எப்பகுதியிலும் தனது ஆதிக்கத்தை பயன்படுத்தும் அளவுக்கு ஆதிக்கம் மிக்கதாக இருக்க வேண்டும்.நமது ராணுவம் உலகில்இரண்டாவது இடத்திலும், விமானப்படைநான்காவது இடத்திலும், கடற்படை மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்திய வியாபார நிறுவனங்கள், வெளிநாடுகளில் கிளைகளை கொண்டுள்ளன. சாப்ட்வேர் துறை ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியர்கள் உலகில் அனைத்துபகுதிகளிலும் வாழ்கின்றனர்.இந்தியா சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகள்ஆகிவிட்டன. இந்த ஆண்டுகளில் இந்தியா வல்லரசாக முடியவில்லை. இதற்கு பலகாரணங்கள் உள்ளன. இருந்தாலும் வல்லரசு ஆவதற்கு இன்னும் அதிக தூரம் பயணம் செய்ய வேண்டும். இந்தியா 2020ம் ஆண்டுக்குள் வல்லரசாகும் என்பது நாட்டின் முன்னாள் ஜனாதிபதிஅப்துல்கலாம் அவர்களின் கருத்து. இவரது கூற்று நிறைவேறுமா என்று பார்த்தால் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒருசாரார் கண்டிப்பாக முடியும் எனவும், இன்னும் அதிக ஆண்டுகள் ஆகும் எனவும் கருதுகின்றனர். நாடு வல்லரசாக வேண்டுமெனில், இதற்கான பொறுப்பு மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமல்லாது, அனைவரிடமும் உள்ளது.என்ன செய்யலாம்?இந்தியா 2020ம் ஆண்டுக்குள் வல்லரசாக வேண்டுமெனில் சில துறைகளில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். சீனாவுடன் ஒப்பிடுகையில், நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாகத் தான் உள்ளது. நிலவுக்கு நாம்இன்னும் மனிதனுடன் செயற்கைகோளை அனுப்பவில்லை. 5,500 கி.மீ., தூரத்தை தாண்டி பாயும் ஏவுகணைகள் நம்மிடம் இல்லை. நாட்டில் உள்ளநதிகளை இணைத்தால் அனைத்து பகுதிகளும் வளம் பெறும். நமது அரசியல்வாதிகளிடம் இது பற்றி ஒருமித்த கருத்து இல்லை. இத்திட்டத்தை இப்போது துவக்கினால் தான் அடுத்த10 ஆண்டுகளிலாவது செயல்படுத்த முடியும். இன்ஜினியரிங், டாக்டர்கள், வக்கீல்கள் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுவோர், பணிக்காலத்தில், சிறிது காலம் கட்டாயம் கிராமங்களில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு பணியாற்றுபவர்களுக்கு வரிச்சலுகை அளிக்கலாம். இதனால் கிராமப்புற வளர்ச்சி மேம்படும். கல்வித்துறையில் சீரான இடைவெளியில் மாற்றம் கொண்டு வரவேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படவேண்டும்.பொதுமக்களும் தங்களது பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். அனைவரும் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும். அப்போது தான் தகுதியானவர்கள் தேர்ந் தெடுக்கப்பட முடியும். மக்கள்தொகை என்பது நமது நாட்டின் வளர்ச்சியில் தடைக்கல்லாக இருக்கிறது என்று பெரும்பாலோனோர் கருதுகின்றனர். ஆனால் மக்கள்தொகை உயரும் போது, அனைவரும் படித்தவர்களாக இருக்கும் போது, இதை ஆக்கபூர்வ சக்தியாக மாற்றலாம்.“கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு’ என்று மறைந்த மகாத்மாகாந்தியடிகள் கூறினார். இவரது கூற்று நூறு சதவீதம் உண்மை. ஏனெனில் நமது மக்கள்தொகையில் 51.5 சதவீதம் பேர் கிராமங்களில் வாழ்வதாக சமீபத்திய சென்செஸ் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்பகுதிகள் எந்தளவுக்கு முன்னேற்றப்பட வேண்டியுள்ளதை அறியலாம். மொத்த மக்கள்தொகையில் பாதிபேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். இந்த 21ம் நூற்றாண்டிலும் அதிகளவிலான கிராமங்களில் சாலை வசதி, போக்குவரத்து மின்சாரம், குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகள் இல்லை. ஒவ்வொரு மாவட்ட தலைநகருடன், அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களின் சாலைகளும் இணைக்கப்படவேண்டும்.””நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களைத் தாருங்கள்;இந்தியாவை உயர்த்திக் காட்டுகிறேன்” என்று விவேகானந்தர்கூறினார். இளைஞர்களால் ஒரு செயலை எளிதாகவும், சிறப்பாகவும் செய்து முடிக்க முடியும். இதனாலேயே விவேகானந்தர் ஆணித்தரமாகஇளைஞர் சக்தியை நம்பினார். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் இந்தியாவை அனைத்து துறையிலும் உயர்த்தி வருகின்றனர். இந்த எழுச்சியால், இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது, என்பதை யாராலும் மறுக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த நாடுகளே பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக் கொண்டன. இந்தியா இதிலிருந்து தப்பித்து சீரான வளர்ச்சி அடைந்து வருவது, உலகநாடுகளை வியப்படையச் செய்தது. இந்தியர்களின் கடின உழைப்பு தான், வளர்ச்சிக்கு காரணம். உலக மக்கள் தொகையில் நாம் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். சில ஆண்டு களுக்கு முன், மக்கள்தொகை பெருக்கம் நமக்கு சவாலாக இருந்தது. தற்போது அந்த சவால், நமக்கு சாதகமாகி வருகிறது. இந்திய மக்கள்தொகையில் இளைஞர்கள் அதிகரித்திருப்பதே இதற்கு காரணம். இது நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 50 சதவீதம் பேர் இளைஞர்கள். இந்த இளமைத் துடிப்பு எந்த நாட்டுக்கும் இல்லை. சுதந்திரத்தின் போது, கல்வி, விவசாயம், தொழில்நுட்பம் என்று பல்வேறு துறைகளில் இந்தியா, பின்தங்கியே இருந்தது.84 சதவீதம் பேர் அப்போது கல்லாதவர்கள்.மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.8 சதவீதத்துடனும், ஆண்டுக்கு 2 சதவீத மக்கள் தொகை வளர்ச்சியுடனும் பெரிய சுமையுடனே இந்தியாமுன்னேற்றப் பாதையில் மெல்ல அடி எடுத்து வைத்தது.கல்வி வாய்ப்பின்மை, ஏழ்மை, மோசமான சுகாதாரம், வேலை வாய்ப்பின்மை என்று ஏராளமான பிரச்னைகளை சமாளிக்க வேண்டிய நிலை. உலக நிலப்பரப்பில் 2 சதவீதமே இந்தியாவினுடையது. ஆனால், உலகின் ஆறில் ஒருவர் இந்தியர். இன்று அனைத்து துறைகளும் வளர்ந்திருக்கின்றன. சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளுக்கிணங்க, இளமை சக்தியுடன்இந்தியா விரைவில் வல்லரசாக மாறும்.சுதந்திரம் பெற்ற இரவு நடந்தது என்ன?””தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா – இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!” -என்ற பாரதியின் வரிகளிலே நம்முன்னோர்கள் பெற்ற சுதந்திரத்தின் மதிப்பை அறியலாம். கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்களின் சகாப்தம், 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி இரவு முடிவுக்கு வந்தது. அன்றைய தினம் இரவு என்ன நடந்தது…டில்லியில் பார்லிமென்ட் கூடியது. காந்தி, நேரு, மவுண்ட் பேட்டன் உள்பட பல முக்கிய தலைவர்கள் கூடினர். சுதேசா கிருபளானி வந்தே மாதரம் என்ற பாடலை பாடினார். ராஜேந்திர பிரசாத் கூட்டத்தின் தலைமை உரையை வாசித்தார். நள்ளிரவு 12 மணிக்கு இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. முதல் பிரதமராக நேரு பதவியேற்றார். கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன், ஆட்சி அதிகாரத்தை நேருவிடம் ஒப்படைத்தார். ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்ட நேரு, “விதியுடன் ஒரு போராட்டம்’ என்ற தலைப்பில் சிறப்பான உரை நிகழ்த்தினார்.அதில், “” இன்று நாம் ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை முழுமையாக அடையவில்லை என்றாலும் கணிசமான அளவு அடைந்து விட்டோம். உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தியா சுதந்திரத்தையும் புது வாழ்வையும் பெறுகிறது. புதிய சகாப்தம் இன்று துவங்குகிறது. வரலாற்றில் மிகவும் அரிதானதருணம் இது. நீண்ட காலம் அடைபட்டுக் கிடந்த ஒரு நாட்டின் மறுமலர்ச்சி இன்று புத்துயிர் பெறுகிறது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்கவும், நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லவும், மக்களின் சேவைக்காவும், மனிதநேயத்திற்காகவும் அர்ப்பணித்து அயராது உழைப்போம்.சக்கரம் என்ன சொல்கிறது?நமது தேசிய கொடியில் உள்ள சக்கரம், சாரநாத்தில் உள்ள அசோகர் ஸ்தூபியிலிருந்து எடுக்கப்பட்டது. ஜூலை 22 ஆம் நாள், 1947 ம் ஆண்டு
இந்திய அரசால் இது ஏற்றுக் கொள்ளப்பட்டது. சக்கரம், 24 ஆரங்களுடன் கூடிய நீல வண்ணமுடையது. இது சத்தியம், தர்மம், சட்டம் ஒழுங்கு, உண்மை போன்றவற்றை கடைப்பிடித்து, நல்லொழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று உணர்த்துகிறது. வெள்ளையர் ஆட்சிக் காலத்தில், இந்தியாவில் 565 சுதேசி சமஸ்தானங்கள் இருந்தன. வெள்ளையர்களுக்கு வரி கட்டிக்கொண்டு இருந்த சமஸ்தான மன்னர்கள், நாடு சுதந்திரம் அடைந்த பின்னும் தனி நாடுகளாக இருக்க வேண்டும் என்று எண்ணினர். இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பதவியேற்ற பின், சுதேச சமஸ்தானங்கள் அனைத்தும் இந்தியாவுடன் இணைய வேண்டும் என வேண்டுகோள்விடுத்தார். அதன்படி பிகானிகர், பாட்டியாலா,குவாலியர், பரோடா முதலிய சமஸ்தானங்கள்இந்தியாவுடன் உடனடியாக இணைய முன்வந்தன.பின், அப்போதைய உள்துறை அமைச்சர்சர்தார் வல்லபாய் படேலின் முயற்சியால் 552சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைந்தன. ஆனால் காஷ்மீர், ஐதராபாத், திருவாங்கூர், ஜூனாகத் போன்ற சில சமஸ்தானங்கள், தனி நாடாக இருப்போம் என்று அடம் பிடித்தன. ஐதராபாத்தை நிஜாம் ஆண்டு வந்தார். 1948 செப்டம்பர் 13 ம் நாள் இந்திய ராணுவம் ஐதராபாத்தை இந்தியாவுடன் இணைத்தது. பின்ஜூனாகத், காஷ்மீர், திருவாங்கூர் சமஸ்தானங்கள்இந்தியாவுடன் இணைந்தன. தமிழ்நாட்டில் இருந்த ஒரே சமஸ்தானம் புதுக்கோட்டை. இதை ஆண்டராஜகோபால் தொண்டமான், 1948 மார்ச் 3ம் நாள்இந்தியாவுடன் இணைந்தார்.அப்போதும் இப்போதும்:சுதந்திரம் அடைந்த போது, நமது நாட்டின் மக்கள் தொகை 31 கோடியே82 லட்சம். அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள்.

குரூப் 2 தேர்வின் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தைத் தொடர்ந்து, நடந்து முடிந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் மறுதேர்வை எழுதலாம். மறு தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் நட்ராஜ் கூறினார்.

தமிழகத்தில் அரசுப் பணிகளில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வின் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தைத் தொடர்ந்து, நேற்று நடந்த குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.    இன்று மதியம் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் நட்ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாள் நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கடலூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் முன்கூட்டியே வெளியானதாக புகார்கள் எழுந்தன.இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இதுவரை 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் தேடப்பட்டு வருகிறார்.     இது குறித்து டிஎன்பிஎஸ்சி முன்னாள் ஊழியரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.தேர்வுக்கு விண்ணப்பித்து மோசடியில் ஈடுபட்டவர்கள் இனி அரசுத் தேர்வே எழுத முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நட்ராஜ் கூறியுள்ளார்.டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு வினாத்தாள் அவுட்டான விவகாரத்தில் 3 ஆசிரியர்கள், தம்பதியர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்கிலி தொடர்போல் தமிழகம் முழுவதும் பலருக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. வினாத்தாள் அவுட் ஆனதால், தேர்வு ரத்தாகுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு அலுவலர், கூட்டுறவு தணிக்கை அலுவலர், சார்பதிவாளர், நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட 3687 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 2 தேர்வு நேற்று நடந்தது. தமிழகம் முழுவதும் 144 மையங்களில் 6.4 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். ஈரோடு, நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் வினாத்தாள் அவுட் ஆனதாக பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த ஈச்சம்பாடி முத்தானூரை சேர்ந்த சுரேஷ்குமார், கம்பைநல்லூர் அரசு பள்ளியில் தேர்வு எழுதினார். தேர்வு மையத்துக்குள் செல்வதற்கு முன்பு அவர் வைத்திருந்த ஒரு பேப்பரை தேர்வுக்கூட கண்காணிப்பாளரான துணை தாசில்தார் கருப்பசாமி பறிமுதல் செய்தார். தேர்வு முடிந்து மகிழ்ச்சியுடன் சுரேஷ்குமார் வருவதை பார்த்த துணை தாசில்தார், சந்தேகப்பட்டு அவரிடம் பறிமுதல் செய்த பேப்பரை பிரித்து பார்த்தார். அது, குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாள் நகல் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.போலீசாரிடம் சுரேஷ்குமார் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியில் வசிக்கும் தங்கையை பார்க்க அடிக்கடி செல்வேன். அப்போது ஆசிரியர் விவேகானந்தன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பலமுறை டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியும் வேலை கிடைக்கவில்லை என்று அவரிடம் கூறி வருத்தப்பட்டேன். பணம் கொடுத்தால் வினாத்தாள் கிடைக்கும். தேர்வை ஈஸியாக எழுதி அரசு வேலை வாங்கி விடலாம். இதுபற்றி திருவண்ணாமலையை சேர்ந்த ரங்கராஜன், குமார் ஆகியோரை தொடர்பு கொள்ளுங்கள்என விவேகானந்தன் கூறினார். அவர்களை தொடர்பு கொண்டு பேசியபோது, வினாத்தாளுக்கு ரூ.4 லட்சம் தர வேண்டும் என கேட்டனர்.இதைபற்றி எனது நண்பர்கள் அருண், பூபேஸ் மற்றும் ஒருவரிடம் கூறினேன்.

எல்லாரும் சேர்ந்து அம்மா, மனைவி நகைகளை அடகு வைத்து தலா ரூ.1 லட்சம் புரட்டினோம். அதை ரங்கராஜன், குமாரிடம் கொடுத்து குரூப் 2 வினாத்தாள் ஜெராக்ஸ் பிரதிகளை வாங்கினோம். ஏ 4 சைசில், 59 பக்கம் கையால் எழுதிய ஜெராக்ஸ் பிரதிகளை அவர்கள் கொடுத்தனர். இவ்வாறு வாக்குமூலத்தில் சுரேஷ்குமார் கூறியுள்ளார். இதையடுத்து விவேகானந்தன், ரங்கராஜன், குமார், அருண், பூபேஸ் மற்றும் ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தனிப்படை போலீசார், நேற்றிரவு சுரேஷ்குமாருடன் திருவண்ணாமலை விரைந்தனர். அங்கு விடிய விடிய தீவிர விசாரணை நடத்தி, 2 பேரை மடக்கி பிடித்தனர். அவர்கள் இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

வினாத்தாள் நகல் விற்ற ரங்கராஜன் (40), விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த திருவரங்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருவது தெரிந்தது. அவரை நேற்று நள்ளிரவு போலீசார் கைது செய்தனர். கைதான ரங்கராஜன், சுரேஷ்குமார் மற்றும் 2 பேரிடம்  தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். வினாத்தாள் அவுட் ஆன விவகாரத்தில் தமிழகம் முழுவதும் பலருக்கு சங்கிலி தொடர்போல தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. வினாத்தாளை யாரிடம் வாங்கினார்கள், இதில் அதிகாரிகள் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என பல கோணங்களில் விசாரணை நடக்கிறது. இதற்கிடையே, பவானியை சேர்ந்த தனக்கொடி உள்ளிட்ட சிலர் நேற்று குரூப் 2 தேர்வு எழுதினர்.

அவர்கள் தேர்வு முடிந்ததும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷிடம், வினாத்தாள் அவுட் ஆகி விட்டதாக புகார் அளித்தனர். பஸ்சில் வந்தபோது, சீட்டுக்கு அடியில் கிடந்த வினாத்தாள் ஜெராக்ஸ் காப்பியை தனது கணவர் செந்தில் கண்டெடுத்து, தன்னிடம் கொடுத்ததாகவும் அது ஒரிஜினல் வினாத்தாள் போன்று இருந்ததாகவும் தனக்கொடி கூறியிருந்தார். இதுதொடர்பாக கோட்டாட்சியர் சுகுமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இரவு 2 மணி வரை தனக்கொடியிடமும், செந்திலிடமும்  விசாரணை நடத்தப்பட்டது. ஈரோடு டிஎஸ்பி பெரியய்யா தலைமையிலான போலீசார் செந்திலை தனியாக அழைத்து விசாரணை நடத்தினர்.

திருச்செங்கோட்டை சேர்ந்த சுதாகர் என்பவரிடம் பணம் கொடுத்து வினாத்தாளை வாங்கியதாகவும், அதை மனைவிடம் கொடுத்து தேர்வு எழுத அனுப்பியதாகவும் செந்தில் கூறினார். அவர் வைத்திருந்த மாடல் பேப்பரை சக தேர்வர்கள் வாங்கி பார்த்தபோது ஒரிஜினல் வினாத்தாளில் உள்ள கேள்விகள் அப்படியே இருந்ததால் சந்தேகம் ஏற்பட்டு, கலெக்டரிடம் புகார் கொடுக்க சென்றனர். சந்தேகம் வராமல் இருக்க எனது மனைவியும் அவர்களுடன் சென்றாள்என தெரிவித்தார். இதையடுத்து செந்தில், தனக்கொடியை போலீசார் கைது செய்தனர். செந்திலிடம் வினாத்தாளை விற்ற சுதாகரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அவுட்டான வினாத்தாள்கள் சென்னையில் இருந்து ஸ்கேன் செய்து அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் வினாத்தாள் நகல் அனுப்பப்பட்டிருக்குமோ என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. தேர்வுக்கு முதல்நாளில் வினாத்தாள் வெளியாகி இருக்க வாய்ப்பில்லை. கடலூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வினாத்தாள்களுடன் விடைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதனால், வினாத்தாள் அச்சடிக்கப்பட்டதும் புரோக்கர்களின் கைகளுக்கு சென்று, விடைகள் முழுமையாக தயாரிக்கப்பட்டு வெளியூர்களுக்கு அனுப்பியிருக்கலாம் என்று தேர்வு எழுதிய மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, தேர்வை ரத்து செய்வதோடு, சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணை நடத்தி, உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

டி.இ.டி., தேர்வில், 26 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 காலாண்டுத் தேர்வுகள், தேர்வுத் துறை அனுப்பும் கேள்வித்தாள் அடிப்படையில் நடக்க இருப்பதால், விடைத்தாள்களை ஆய்வு செய்ய, தேர்வுத்துறை திட்டமிட்டுஉள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 காலாண்டுத் தேர்வுகள், தேர்வுத் துறை அனுப்பும் கேள்வித்தாள் அடிப்படையில் நடக்க இருப்பதால், விடைத்தாள்களை ஆய்வு செய்ய, தேர்வுத்துறை திட்டமிட்டுஉள்ளது.நடப்பு கல்வியாண்டு முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, பொதுத்தேர்வை மட்டுமல்லாமல், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளையும், தேர்வுத் துறையே நடத்துகிறது.செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து, காலாண்டுத் தேர்வுகள் நடக்கின்றன. 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, இரண்டாவது வாரத்தில் தேர்வுகள் துவங்குகின்றன.தேர்வுக்காக, பாட வாரியாக கேள்விகள் தயாரிக்கும் பணி, தேர்வுத் துறையில் நடந்து வருகிறது.

கேள்விகளை, “சிடியில் பதிவு செய்து, மாவட்ட வாரியாக, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, தேர்வுத்துறை விரைவில் அனுப்ப உள்ளது. “சிடியில் இருந்து, தேவையான கேள்வித்தாள்களை, “பிரின்ட்எடுத்து, மாணவ, மாணவியருக்கு வினியோகம் செய்ய, பள்ளி தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.விடைத்தாள்களை, சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களே மதிப்பீடு செய்வர். எனினும், தேர்வுத்துறை வழங்கும் கேள்வித்தாள் அடிப்படையில், மாணவ, மாணவியர் எப்படி தேர்வு எழுதியிருக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள, விடைத்தாள்களை ஆய்வு செய்ய, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
தேர்வுத்துறை வட்டாரங்கள் இதுகுறித்து கூறியதாவது:பொதுத்தேர்வு எப்படி நடக்குமோ, அதே நடைமுறையில், காலாண்டுத் தேர்வும், அரையாண்டுத் தேர்வும் நடக்கும். வகுப்புகளில், ஆசிரியர் எவ்வளவு தான் எடுத்துக் கூறினாலும், பொதுத்தேர்வில், சிவப்பு மற்றும் பச்சை நிற, “ஸ்கெட்ச்எழுது கருவிகளை மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள், காலாண்டுத் தேர்வில் இருந்தே எடுக்கப்படும்.இவ்வாறு தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வு முடிவுகள், அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது.

பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வு முடிவுகள், அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது. உடனடித் தேர்வை, 1.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர். பிளஸ் 1 சேர்க்கை, முடியும் நிலையை எட்டி இருப்பதால், 10ம் வகுப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர், பிளஸ் 1 வகுப்புகளில் சேர வசதியாக, தேர்வு முடிவை விரைந்து வெளியிட, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்புப் பெற்ற, 649 கல்வியியல் கல்லூரிகளுக்கான, பி.எட்., – எம்.எட்., தேர்வு முடிவுகள், 11ம் தேதி (இன்று), வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்புப் பெற்ற, 649 கல்வியியல் கல்லூரிகளுக்கான, பி.எட்., – எம்.எட்., தேர்வு முடிவுகள், 11ம் தேதி (இன்று), வெளியிடப்படும். மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிகத் தேர்ச்சிச் சான்றிதழ், சம்பந்தப்பட்ட கல்லூரிகளில், இம்மாத இறுதி வாரத்தில் வழங்கப்படும்.மறுகூட்டல், மறு மதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் பெற விரும்பும் தேர்வர்கள், அதற்குரிய தனித்தனி விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து, அதற்குரிய கட்டணங்களை செலுத்தி, 24ம் தேதிக்குள், “தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, சென்னை-5′ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவங்களை, பல்கலை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார். முடிவினை அறிய

மேல்நிலை சிறப்புத் துணைத்தேர்வு ஜுன்/ஜுலை 2012 -ல் தேர்வெழுதியோர் விடைத்தாட்களின் அச்சுப்பகர்ப்பு நகல் (Photocopy of Answer scripts) மற்றும் மறுகூட்டலுக்கு ஜுன்/ஜுலை 2012 பருவம் முதல் On-line -ல் விண்ணப்பிக்கும் முறையை முதன்முதலாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிமுகப்படுத்துகிறது. எனவே தேர்வர்கள் விண்ணப்பங்கள் கோரி எந்த ஒரு கல்வி அலுவலகத்தையும் அணுக வேண்டாமெனவும், On-line முறையில் விண்ணப்பிக்குமாறும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் கேட்டுக்கொண்டுள்ளது. விண்ணப்பித்தலுக்கான காலம் 13.08.2012 (திங்கட்கிழமை) முதல் 16.08.2012(வியாழக்கிழமை) வரை.

சைதை துரைசாமியின் மனிதநேயம் மையத்தில் படித்து சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற்ற 8 பேருக்கு ஐ.ஏ.எஸ். பணியும், 4 பேருக்கு ஐ.எப்.எஸ். பணியும், 4 பேருக்கு ஐ.பி.எஸ். பணியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

சைதை துரைசாமியின் மனிதநேயம் மையத்தில் படித்து சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற்ற 8 பேருக்கு ஐ.ஏ.எஸ். பணியும், 4 பேருக்கு ஐ.எப்.எஸ். பணியும், 4 பேருக்கு ஐ.பி.எஸ். பணியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு உதவும் வகையில் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, மல்லிகா துரைசாமி, வெற்றி துரைசாமி, வசுந்தரா வெற்றி ஆகியோரால் மனிதநேய அறக்கட்டளை தொடங்கப்பட்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. சாதி, மத வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரும் பயன்பெறும் நோக்கில் இந்த அறக்கட்டளை சார்பில் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் மூலமாக பல்வேறு சமூகப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளும் அகில இந்திய அளவில் ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் பதவிகளுக்கு தேர்வுசெய்யப்பட வேண்டும் என்பது மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகத்தின் தலையாய நோக்கம் ஆகும். கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பயிற்சி மையம் 6 ஆண்டுகளாக சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கட்டணமில்லா பயிற்சிக்கு தமிழகம் முழுவதும் இருந்தும் மாணவ-மாணவிகள் நுழைவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வுசெய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய பயிற்சி வகுப்புகள், ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பாடப்புத்தகங்கள், மாத இதழ்கள், தனித்தனி செய்தித்தாள்கள், தரமான உணவு, வசதியான தங்குமிடம், யோகா வகுப்பு, போக்குவரத்து வசதி, மருத்துவ பரிசோதனை, நேர்முகத்தேர்வுக்கு செல்வோருக்கு தரமான ஆடை, உணவு, டெல்லி சென்றுவர விமான டிக்கெட் என அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. நேர்முகத்தேர்வுக்கு மட்டும் 5 மாதம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இத்தகைய சிறப்பு பயிற்சிகள் காரணமாக, கடந்த 4 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். ஆகிய பதவிகளுக்கு 150 பேரும், இந்திய வனப்பணிக்கு (ஐ.எப்.எஸ்.) 12 பேரும் தேர்வுபெற்று பதவியிலும், பயிற்சியிலும் உள்ளனர். டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு, குரூப்-2 தேர்வு, வி.ஏ.ஓ., தேர்வு, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியின் மூலமாக இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வில் வெற்றிபெற்று அரசு பணிகளில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், கடந்த 2011-2012-ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வுக்கு மனிதநேயம் மையத்தில் பயிற்சி பெற்று பங்கேற்ற 74 மாணவ-மாணவிகளில் 34 பேர் வெற்றிபெற்றனர். இதில் 26 பேர் மாணவர்கள், 8 பேர் மாணவிகள். இவர்களில் ஏ.தினேஷ்குமார், எம்.ஜே.பிரதீப் சந்திரன், ஆர்.ராமச்சந்திரன், பாலமுரளி, எம்.சுந்தரேஷ்பாபு, சுவாதி, எம்.ஆர்த்தி ஆகிய 8 பேருக்கு ஐ.ஏ.எஸ். பணி (இந்திய ஆட்சி பணி) ஒதுக்கப்பட்டு இருக்கிறது,
இதேபோல், ஜி.அபர்ணா, சி.கண்ணன், ஜெ.சுகன்யா, டி.ஜெய்சுந்தர் ஆகிய 4 பேருக்கு ஐ.எப்.எஸ். பணியும் (இந்திய வெளிநாட்டு பணி), ஆர்.ராஜா, கே.சசிகுமார், எம்.அருண் ரங்கராஜன், சி.கலைச்செல்வன் ஆகிய 4 பேருக்கு ஐ.பி.எஸ். பணியும் (இந்திய காவல் பணி) ஒதுக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. பள்ளி, கல்லூரி, அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் நாளை (09.08.2012) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. பள்ளி, கல்லூரி, அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் இன்று (09.08.2012) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. பள்ளி, கல்லூரி, அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் இன்று (09.08.2012)விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

முப்பருவ மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையை, அடுத்த கல்வியாண்டில் (2013-14) 9, 10ம் வகுப்புகளுக்கு அமல்படுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் தலைமையில் குழு அமைத்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

வரும் 2013-14ம் கல்வியாண்டில், 9, 10ம் வகுப்புகளுக்கான பாட நூல்களை, முப்பருவ முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையை உள்ளடக்கி தயாரிக்க ஏதுவாக, ஒவ்வொரு பாடத்திற்கும், ஒரு இணை இயக்குனரை, பொறுப்பு அலுவலர்களாக நியமனம் செய்ய வேண்டும்.பாடப் புத்தகங்கள் எழுதும் பணிக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும், அரசுக்கு, இயக்குனர் கருத்துரு அனுப்பினார். இதை பரிசீலித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் தலைமையில், பாட வாரியாக பொறுப்பு அலுவலர்களை நியமனம் செய்து, தமிழக அரசு உத்தரவிடுகிறது. இவ்வாறு சபிதா தெரிவித்து உள்ளார்.
அரசு உத்தரவுப்படி, தமிழ் பாடத்திற்கு – உமா; ஆங்கிலம் பாடம் – செல்லம்; கணிதம் – செல்வராஜ்; அறிவியல் – பாலமுருகன்; சமூக அறிவியல் பாடத்திற்கு – குப்புசாமி என, ஐந்து இணை இயக்குனர்கள் நியமிக்கப் பட்டு உள்ளனர்.
ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, ஏற்கனவே புதிய பாடத் திட்டங்கள் அமல்படுத்தப் பட்டு உள்ளன. ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்களை, முப்பருவ கல்வி முறைக்கு ஏற்றார்போல், சில மாற்றங்களை கொண்டு வருவது, பாடப் புத்தகங்களை பிரிப்பது மற்றும் தொடர் மதிப்பீட்டு முறைக்கான விதிமுறைகளை வகுப்பது உள்ளிட்ட பணிகளை குழு செய்யும்.வழக்கமாக இதுபோன்ற பணிகளுக்கு, ஓய்வுபெற்ற ஆசிரியர் அல்லது அதிகாரிகள், பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்படுவர். தற்போது, பணியில் உள்ள அதிகாரிகளையே நேரடியாக பொறுப்பு அலுவலர்களாக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.இந்தப் பணியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்படுவர் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பொதுத்தேர்வு ரத்தா? : முப்பருவ கல்வி முறையில், 60 மதிப்பெண்கள் எழுத்துத் தேர்வுக்கும், 40 மதிப்பெண்கள் செய்முறைக்கும் பிரிக்கப் பட்டு உள்ளது. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, முழு ஆண்டுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாக வைத்து, தேர்ச்சி முடிவு வெளியிடப்படுகிறது. அப்படியிருக்கும்போது, முப்பருவ கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையை, பத்தாம் வகுப்பிற்கு எப்படி அமல்படுத்துவர் எனத் தெரியவில்லை.
இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: பத்தாம் வகுப்பிற்கு, அடுத்த கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கவில்லை. முதலில், 9ம் வகுப்பிற்கு திட்டத்தை நீட்டிப்பு செய்துவிட்டு, அதற்கு அடுத்த கல்வியாண்டில் (2014-15), பத்தாம் வகுப்பிற்கு அமல்படுத்தலாம் என, யோசித்து வருகிறோம்.பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில், உயர்மட்டக்குழு அமைக்கப் பட்டு உள்ளது. இக்குழு கூடி, 10ம் வகுப்பிற்கு முப்பருவ கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு திட்டத்தை அமல்படுத்துவது குறித்து விவாதித்து, விதிமுறைகளை வகுக்கும்.சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பிற்கு, கட்டாய பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, பள்ளி நடத்தும் தேர்வு, போர்டு நடத்தும் தேர்வு என, இரு வகையான தேர்வு நடத்தி, “கிரேடு’ முறையில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இத்திட்டம் எந்தளவிற்கு வெற்றி பெற்றுள்ளது என்பதையும் ஆய்வு செய்வோம். இவ்வாறு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்த இந்தக் கருத்து மூலம், சி.பி.எஸ்.இ., முறையைப் பின்பற்றி, 10ம் வகுப்பிற்கான கட்டாய பொதுத்தேர்வு ரத்து செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.