தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரத்து 105 பணி இடங்கள் தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தெரிவித்தார்.
இந்த ஆண்டு அரசு பணியில் எத்தனை காலி இடங்களுக்கு என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும்? என்ற விவரங்கள் அடங்கிய ஆண்டு தேர்வுபட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ், வருடாந்திர தேர்வுபட்டியலை வெளியிட்டார். பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது நட்ராஜ் கூறியதாவது:–இந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. மூலமாக 10 ஆயிரத்து 105 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 27 துறைகளில் 37 விதமான பதவிகள் அடங்கும். அதிகபட்ச காலி இடங்கள் எண்ணிக்கை என்று பார்த்தால் குரூப்–2 தேர்வு மூலமாக 2,714 இடங்களும், குரூப்–2 தேர்வு மூலம் 1,300 பணி இடங்களும், 1,500 வி.ஏ.ஓ. இடங்களும், தொழில்நுட்ப பணியைப் பொருத்தவரையில், அதேபோல், 2,790 டாக்டர் பணி இடங்களும் 1,800 கால்நடை மருத்துவர்கள் இடங்களும் நிரப்பப்படும், இந்த காலி இடங்களின் எண்ணிக்கை தோராயமானதுதான். இந்த எண்ணிக்கை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாக உறுப்பினர் எம்.ஷோபினி தலைமையில் ஒரு கமிட்டியும், பாடத்திட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து உறுப்பினர் கே.லட்சுமணன் தலைமையில் தனியாக ஒரு கமிட்டியும் போடப்பட்டது. இந்த இரு கமிட்டிகளின் பரிந்துரைஅடிப்படையில், தேர்வுமுறையிலும், பாடத்திட்டத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.அதன்படி, இதுவரை குரூப்–2 தேர்வில் இடம்பெற்றிருந்த நகராட்சி கமிஷனர், சார்–பதிவாளர், உதவி வணிகவரி அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி மற்றும் தனித்தேர்வாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) ஆகிய பதவிகள் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்படுகின்றன. முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு கொண்ட குரூப்–1 தேர்வில் விண்ணப்பதாரர் எடுக்கிற மதிப்பெண் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் பதவிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
குரூப்–1 தேர்வில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், இதுவரை மெயின் தேர்வுக்கு தேர்வுசெய்யப்படுவோரின் எண்ணிக்கை ஒரு காலி இடத்திற்கு 20 பேர் என்ற விகிதாச்சாரத்தில் இருந்து வந்தது. இனிமேல் ஒரு காலி இடத்திற்கு 50 பேர் என்ற வீதத்தில் மெயின் தேர்வுக்கு தேர்வர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.இதுவரை நேர்முகத்தேர்வு கொண்ட சார்நிலை பதவிகளும், நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளும் குரூப்–2 தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. இனிமேல், நேர்முகத்தேர்வு கொண்ட பதவிகள் தனியாக நடத்தப்படும். அதில் முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவை இடம்பெற்றிருக்கும். நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு தற்போது இருப்பது போல் ஒரேதேர்வுதான். மெயின் தேர்வு கிடையாது.
மேலும், வி.ஏ.ஓ. தேர்வில், பணிக்கு தேவையாக கருதப்படும் கிராம நிர்வாகம், வி.ஏ.ஓ. பணிகள் தொடர்பான கேள்விகளும் இடம்பெறும். இதுவரை, மருத்துவம், கால்நடை மருத்துவம், என்ஜினீயர், வேளாண் அதிகாரி போன்ற தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பணிகளுக்கான தேர்வில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டன.இனிமேல், கூடுதலாக பொதுஅறிவு, தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், தமிழ்ப்பண்பாடு தொடர்பான வினாக்களும், பொது விழிப்புத்திறன் (ஆப்டிடியூடு) கேள்விகளும் கூடுதலாக இடம்பெறும்.
பொதுவாகவே, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் நடப்புகால நிகழ்ச்சிகள் குறித்த கேள்விகள் அவ்வளவாக இடம்பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. இனிமேல், பொதுஅறிவு தாளில் நடப்பு கால நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதற்காக தனியாக வினா வங்கி தயாரிக்கப்படும்.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட குரூப்–2 தேர்வின் முடிவு பிப்ரவரி மாதம் 1–ந் தேதி வெளியிடப்பட்டு அதற்கான கவுன்சிலிங் 18–ந் தேதி தொடங்கும்.இவ்வாறு நட்ராஜ் கூறினார்.
டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் கூறியதாவது;–
இப்போது வெளியிடப்பட்டுள்ள ஆண்டு தேர்வு பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்திலும் உடனடியாக வெளியிடப்படும்.
நகராட்சி கமிஷனர், சார்–பதிவாளர் போன்ற பதவிகள், குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்படுவதால் வயது வரம்பு விதிமுறையால் பாதிப்பு வருமே என்று கேட்கிறீர்கள். அதுபோன்று பாதிப்பு ஏதும் வராத வகையில், புதிதாக சேர்க்கப்பட்ட இந்த குரூப்–2 பதவிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படும். இதுதொடர்பாக தனியாக அறிவிப்பு வெளியிடப்படும். மேலும், மாவட்ட கல்வி அதிகாரி பணி இடம் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்படுவதால் அதற்கு விண்ணப்பிப்பவர்கள் கல்வியியல் தொடர்பாக கூடுதலாக ஒரு தாள் எழுத வேண்டும்.இவ்வாறு விஜயகுமார் கூறினார்.பேட்டியின்போது டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா உடனிருந்தார்.
ஆள்மாறாட்ட வழக்கில், புதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாண சுந்தரத்துக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டிவனம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
2 அரசு பொறியியல், 10 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள்! தமிழக அரசு உத்தரவு!
பள்ளிப்படிப்புக்குப் பிறகு கிராமப்புற மாணவ, மாணவியர்கள், தங்கள் கல்வியினை நிறுத்திவிடாமல் தொடர்ந்து உயர்கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில், அரசு சார்பில் பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தமிழகத்தின் பல மாவட்டங்களில் துவக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்ற 2011-12 ஆம் ஆண்டில் 11 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. இதுவன்றி தேனி மாவட்டம், போடி நாயக்கனூரில் 2012-13 ஆம் ஆண்டு முதல் அரசு பொறியியல் கல்லூரி துவக்க ஆணையிடப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தர்மபுரி மாவட்டம், தர்மபுரி வட்டம் செட்டிக்கரையிலும், தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம் செங்கிப்பட்டியிலும் என இரண்டு அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது உத்தரவிட்டுள்ளார்.
இக்கல்லூரிகளுக்கு தேவையான கட்டடங்கள், உபகரணங்கள், அறைகலன்கள், ஆசிரியர் நியமனம், மாணவ, மாணவியர் விடுதி, நூலகம்,ஆய்வுக் கூடங்கள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை நிறைவேற்ற ஒவ்வொரு கல்லூரிக்கும் 89 கோடியே 90 லட்சம் ரூபாய் என 179 கோடியே 80 லட்சம் ரூபாய் நிர்வாக ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
முதற்கட்டமாக ஒவ்வொரு கல்லூரிக்கும் 14 கோடியே 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் உத்தரவிட்டுள்ளார்.
இதே போன்று, திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை, விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, அரியலூர் மாவட்டம் அரியலூர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, மதுரை மாவட்டம் செக்கானூரனி ஆகிய 10 இடங்களில் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் துவக்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த 10 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளின் கட்டுமான பணிகளுக்காக ஒவ்வொரு கல்லூரிக்கும் 13.30 கோடி ரூபாய் வீதம் பத்து கல்லூரிகளுக்கு மொத்தம் 133 கோடி ரூபாய் நிர்வாக ஒதுக்கீடு செய்தும், மற்றும் அத்தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு தேவையான ஆய்வகக் கருவிகள், கணிப்பொறிகள், அறைகலன்கள் மற்றும் நூலகங்களுக்குத் தேவையான புத்தகங்கள் ஆகியவற்றிற்கான செலவினத்திற்கு ஒரு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிக்கு 50 லட்சம் ரூபாய் வீதம், பத்து பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகளுக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்குடு செய்தும், மொத்தம் 138 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரத்திலுள்ள பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி தற்பொழுது காஞ்சிபுரம் பக்தவச்சலம் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரிக்கென சொந்தமாக கட்டடம் கட்ட காஞ்சிபுரம் வட்டம், காரப்பேட்டை கிராமத்தில் 4.32.0 ஹெக்டேர் புன்செய் நிலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட இந்த இடத்தில், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிக்கு என அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டுவதற்காக 20 கோடி ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் : புதுவை முன்னாள் அமைச்சர் மீதான வழக்கில் 31ம் தேதி தீர்ப்பு
இது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தேர்வு மைய கண்காணிப்பாளராக இருந்த ஆசிரியர் ஆதவன், திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலக உதவியாளர் ரஜினிகாந்த் ஆகியோர் மீது திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சாட்சி விசாரணை கடந்த செப்டம்பர் 5ம் தேதி தொடங்கியது.
விழுப்புரம் மாவட்ட அப்போதைய முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி, அப்போதைய திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் சண்முகம், தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கர் உட்பட மொத்தம் 56 சாட்சிகளிடம் விசாரனை நடந்தது.
இந்த வழக் கில் நேற்று (29ந் தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி நீதிபதி சரிதா முன்னிலையில் இறுதிகட்ட விவாதம் நடந்தது. புதுவை முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் சார்பில் வழக்கறிஞர் அரியலூர் சிவ குமார் ஆஜராகி வாதிட் டார்.
இதையடுத்து, கல்யாண சுந்தரம் மீதான ஆள்மாறாட்ட வழக்கில் தீர்ப்பை 31ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
1,200 பணி இடங்கள் காலி: கணினி அறிவியலை பிற பாட ஆசிரியர்கள் நடத்தி வரும் அவலம் : பொது தேர்வு மாணவர்கள் தவிப்பு
பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதி, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியரின் முடிவுகள், வியாழக்கிழமை, தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
TETல் தேர்ச்சி பெற்றாலும் இரட்டை பட்டங்கள் ஆசிரியர் பணிக்கு செல்லாது என்று நீதிபதி தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தார்.
TETல் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக பணி வழங்கப்படதோர் தொடுத்த வழக்கு இன்று மதுரை கோர்டில் தள்ளுபடி செய்யப்பட்டது . கடந்த TET தேர்வில் வெற்றி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக ஆசிரியர் தேர்வு வாரியம் இவர்களுக்கு பணி நியமனம் வழங்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதில் தங்கள் தரப்பு வாதங்களை முழுமையாக பதிவு செய்தனர் . இவ்வழக்கின் மீது கடந்த 21.12.2012 முதல் விசாரணை நடைபெற்று வந்தது. இறுதியாக இன்று(29.01.2013) தீர்ப்பளித்த நீதிபதி திரு.இராம சுப்பிரமணியம் அவர்கள், இரட்டை பட்டங்கள் ஆசிரியர் பணிக்கு செல்லாது என்று தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் இரண்டு வருட பி.எட்., படிப்பில் சேர தகுதியானவர்களிடமிருந்து பிப்.,25 தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் தற்போது ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். இளநிலை பட்டப் படிப்பில் அதாவது பி.லிட்.,யில் (ஆங்கிலம், கணிதம், இயற்பியல், புவி-இயற்பியல், உயிரி-இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ், வேதியியல், உயிரி-வேதியியல், தாவரவியல், சுற்றுச்சூழல் அறிவியல், கணினி அறிவியல், நிலவியல்) ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மெரிட் முறையிலும் நுழைவுத்தேர்வு அடிப்படையிலும் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பப் படிவங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.800 வரைவோலை எடுத்து பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும், தபால் மூலம் அனுப்ப ரூ.850 வரைவோலை எடுக்க வேண்டும்.
சென்னை, கோயம்பத்தூர், மதுரை, சேலம், திருநெல்வேலி மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் ஜன.,24ம் தேதி முதல் வழங்கப்படுகின்றது. பூத்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்.,25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மார்ச் 3ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.
மேலும் விரிவான தகவல்களுக்கு http://www.mkudde.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்
சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் (சி.ஏ.) படிப்பு அனைத்து தரப்பினரும் கற்கும் வகையில் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெய்தீப் நரேந்திரஷா கூறினார்.
இந்தியா முழுவதும் அகில இந்திய பட்டயக்கணக்காளர்கள் சங்கத்தின் 128 கிளைகள் இயங்கி வருகின்றன. இங்கு சி.ஏ.கற்கும் மாணவர்களின் வசதிக்காக உயர்தொழில் நுட்ப வசதிகள் மிககுறைந்த செலவில் அளிக்கப்படுகின்றன. இந்த சங்கத்தில் 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 10 லட்சம் மாணவ–மாணவிகள் படிக்கின்றனர். ஆண்டு தோறும் சி.ஏ., படிப்பில் சேர ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் செய்கின்றனர். தற்போது என்ஜினியரிங் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேர்ந்து படிக்க அதிக செலவாகிறது. ஆனால் சி.ஏ.படிப்பில் அனைத்து நிலையில் உள்ள மாணவ மாணவிகள் சேர்ந்து படிக்க வசதியாக கட்டணங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
மற்ற படிப்புகளுடன் ஒப்பிடும் போது சி.ஏ.படிப்பை குறைந்த செலவில் படிக்க முடியும். மும்பையை சேர்ந்த ஆட்டோ டிரைவருடைய மகள் பிரேமா சி.ஏ. இறுதித் தேர்வில் இந்தியா அளவில் முதலாவதாக வந்து தேர்வு பெற்றுள்ளார் என்பதே இதற்கு உதாரணம். மேலும் அனைவரும் படிக்கும் வகையில் சி.ஏ. படிப்பு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு ஜெய்தீப் நரேந்திரஷா பேசினார்.
வரும் கல்வி ஆண்டில் பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்ற தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது.
இந்த நிலையில், அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கி வருவதைப் போன்று எல்லா கல்வியியல் கல்லூரிகளையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவரும் வண்ணம் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே ஆசிரியர் கல்விக்கென தனியே ஒரு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் கல்வியியல் படிப்பில் அவ்வப்போது புதிய மாறுதல்களை ஆசிரியர் பல்கலைக்கழகம் செய்து வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.
இதைத்தொடர்ந்து, பி.எட். படிக்கும் மாணவ–மாணவிகள் படித்துக்கொண்டிருக்கும்போதே ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு தயாராகும் பொருட்டு தகுதித்தேர்வு பாடத்திட்டம் கடந்த ஆண்டு பாடத்திட்டத்தில் தேர்வுசெய்யக்கூடிய ஒரு பாடமாக சேர்க்கப்பட்டது. இந்த நிலையில், இன்றைய கல்வித்தேவைக்கு ஏற்ப பி.எட். எம்.எட். எம்.பில். (கல்வியியல்) படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்ற ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, கல்வியியலிலும், கற்பித்தலிலும் ஏற்பட்டு இருக்கும் நவீன முன்னேற்றங்களை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் பாடத்திட்டத்தில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. மேற்கண்ட படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வரும் கல்வி ஆண்டில் (2013–2014) முதல் அமல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் ‘தினத்தந்தி’ நிருபரிடம் தெரிவித்தார்.
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புவிழா அண்மையில் நடந்து முடிந்த நிலையில், 2010–2011, 2011–2012–ம் கல்வி ஆண்டில் பி.எட். எம்.எட். படித்து முடித்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு பட்டச் சான்றிதழ் (டிகிரி சர்டிபிகேட்) தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இப்பணி 50 சதவீதம் முடிவடைந்துவிட்டது.
எஞ்சியுள்ள பணிகளும் விரைவாக முடிக்கப்பட்டு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பி.எட்., எம்.எட். பட்டதாரிகளுக்கும் அடுத்த மாதம் (பிப்ரவரி) 15–ந் தேதிக்குள் பட்டச்சான்றிதழ் கிடைக்க பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதற்காக சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி உள்பட 6 விநியோக மையங்கள் அமைக்கப்பட்டு பல்கலைக்கழக அதிகாரிகள் சான்றிதழை வழங்குவார்கள். சம்பந்தப்பட்ட கல்வியியல் கல்லூரியின் முதல்வர்கள் அருகே உள்ள மையங்களுக்குச் சென்று தங்கள் கல்லூரி மாணவ–மாணவிகளுக்கான பட்டச்சான்றிதழை வாங்கிக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. பின்னர் மாணவ–மாணவிகள் தாங்கள் படித்த கல்லூரிகளில் பட்டச்சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.
பெரியாரின் கொள்கைகள் உயிர்பெற வேண்டும்
பாரத நாடு பழம்பெறும் நாடு. இந்த நாட்டை வேற்றுமையில் ஒற்றுமை என்று பாராட்டும் தலைவர்கள் ஏராளம் உண்டு. பல சாதிகள், பல மதங்கள், பல மாநிலங்கள், பல மொழிகள் என்று எவ்வளவோ வேற்றுமைகள் இருந்தாலும், அவற்றில் எல்லாம் ஒற்றுமை காணப்படவேண்டும் என்பதுதான் மறைந்த பல தலைவர்களின் கனவாக இருந்தது. மற்ற வேற்றுமைகளில் எல்லாம் பண்டைய காலங்களில் ஒற்றுமை இருந்தாலும், சாதி விஷயத்தில் மட்டும் நீண்ட நெடுங்காலமாக ஆண்டான் அடிமை, மேல் சாதி கீழ் சாதி என்று பெரிய பிரிவினை இருந்தது. கிழக்கே தோன்றிய விடிவெள்ளி காண் என்பதுபோல, ‘பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் இந்த தமிழ்நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்த பிறகுதான், அவரது முழக்கங்களினால் இந்த சமுதாயம் விழித்துக்கொண்ட பிறகுதான், இந்த வேற்றுமை உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கின.
பெரியாரை ஏதோ கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர் என்பதுபோல மட்டும், சில சக்திகள் சித்தரிக்கிறதே தவிர, உண்மையில் அவர் கொண்டுவந்த சீர்திருத்தம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, நலிந்த மக்கள் உயர்வுபெற வேண்டும், பெண்கள் அடிமைத்தனத்தில் இருந்து எழுந்து நிற்க வேண்டும் என்பதுபோன்ற எண்ணில் அடங்கா சீர்திருத்தங்களை கொண்டுவந்தார். அதில், மிக முக்கியமானதாக அவர் கருதிய சீர்திருத்தம், பொதுமனித சமூகத்தில் மக்களின் பிறப்பின் காரணமாக உயர்வு தாழ்வு கற்பித்திருப்பதை பற்றியதாகும். இந்தமுறை நமது இந்தியாவைதவிர, வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு மோசமான கற்பனையின் மீது கையாளப்படுவதே இல்லை என்று முழங்கி, தன் பணிகளை தொடங்கினார். அவர் விதைத்து சென்ற அந்த கொள்கைதான் இன்று செடியாகி… மரமாகி… ஓங்கி வளர்ந்து கொண்டிருக்கிறது என்று எல்லோரும் மகிழ்ந்து கொண்டிருக்கிற நேரத்தில், இடிவிழுந்ததை போல, ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் சமூக ஆர்வலர் என்றும், எழுத்தாளர் என்றும் சொல்லிக்கொள்கிற ஆஷிஸ் நந்தி என்பவர் பேசியிருக்கிறார். ‘‘பெரும்பாலான ஊழல்வாதிகள் எல்லாம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள்தான். இப்போது மலைவாழ் மக்கள் அந்த பட்டியலில் அதிகமாக வந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு நான் ஒரு எடுத்துக்காட்டு சொல்வேன். குறைவான ஊழல் இருக்கும் மாநிலம் ஒன்று உண்டு என்றால், அது மேற்குவங்காளம்தான். அங்கே கடந்த 100 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் சாதியை சேர்ந்த யாரும் அதிகாரத்தின் பக்கத்திலேயே நெருங்க முடியவில்லை. மிகவும் சுத்தமான மாநிலமாக அது இருக்கிறதுÓ என்று சேற்றை வாரி இரைத்திருக்கிறார்.
இந்த வார்த்தைகளை கேட்டபிறகும், பொங்கியெழ வேண்டிய அரசியல்வாதிகள் ஏதோ வாய் மூடி மவுனியாக இருக்கிறார்கள். நந்தி என்று கூறப்படும் இந்த மனிதரின் முதல் குறி, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மலைவாழ் சமுதாயத்தை சேர்ந்த அரசியல்வாதிகள்தான். அடுத்த குறிதான் மற்ற அதிகாரிகள் மற்றும் இந்த சமூகத்தை சேர்ந்த மக்களை பற்றியதாகும். வடநாட்டில் உடனடியாக ஏதோ சில எதிர்ப்புகள் எழுந்ததை கண்டவுடன், உப்புக்கு சப்பாக சில விளக்கங்களை நந்தி கூறியிருக்கிறார். ஆனால், இந்த விளக்கங்கள் எல்லாம் நிச்சயமாக அவர் ஏற்படுத்திவிட்ட பெரிய காயத்திற்கு மருந்தாய் போய்விடாது. இதற்கு ஒரு காரணம் என்னவென்றால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மலைவாழ் சாதிகளை சேர்ந்த மக்களே ஒற்றுமையாக இருந்து உயர்வடைய வேண்டும் என்று நினைக்காமல், அவர்களுக்குள்ளே சமீபகாலமாக மோதல்கள், பூசல்கள் ஏற்படுவதுதான்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடையே மோதல்கள் நடப்பது குறித்தும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடையே நடக்கும் மோதல்கள் குறித்தும் கூறும்போது, ‘‘ஒரே நீரோடையில் புலியும், மானும் தண்ணீர் குடிக்க முடியாவிட்டாலும், மானும் மானுமாவது ஒற்றுமையோடு தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக, அவைகளுக்கு இடையே பலத்த சண்டைகள் ஏற்பட்டு ஒன்றையன்று காயப்படுத்திக்கொள்கிறதே! என்று கவலையோடு கூறினார். அந்த உவமையின் உண்மை வெளிப்பாடாக சமீபகாலங்களில் ஏற்படும் மோதல்கள், தகராறுகள் காரணமாகத்தான் இப்படிப்பட்ட கருத்துகள் தைரியமாக உலாவருகின்றன. ‘‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழி இனி தமிழ்நாட்டில் நிறைவேறிவிடக்கூடாது. நந்தி கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழக அரசியல்வாதிகள் முன்னணியில் நிற்கவேண்டும். பெரியாரின் கொள்கைகள் உயிர்பெற வேண்டும்.
தகுதி தேர்வில் தமிழகத்தை சேர்ந்த வக்கீல்கள் 85 சதவீதம் தேர்ச்சி தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் தகவல்
சென்னை மாவட்டத்தில் 11–ஆம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வு மார்ச் 5–ந் தேதி தொடங்கும் முதன்மை கல்வி அதிகாரி அறிவிப்பு
பிளஸ்–2 பொதுத்தேர்வு மார்ச் 1–ந் தேதி தொடங்கி 27–ந் தேதி வரை நடைபெறுகிறது. இதேபோல், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மார்ச் 27–ந் தேதி ஆரம்பித்து, ஏப்ரல் மாதம் 12–ந் தேதி வரை நடைபெற உள்ளது. அரசு பொதுத்தேர்வுகளுக்கு நாட்கள் நெருங்கிக்கொண்டிருப்பதால் மாணவ–மாணவிகள் முழுமூச்சுடன் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். ஆசிரியர்களும் சிறப்பு வகுப்புகள் மற்றும் திருப்புதல் தேர்வுகளை நடத்தி வருகின்றனர்.அரசு பொதுத்தேர்வு இல்லாவிட்டாலும் மற்ற வகுப்பு மாணவ–மாணவிகளும் ஆண்டு இறுதி தேர்வுக்கு தீவிரமாக படித்து வருகிறார்கள். பொதுத்தேர்வுகள் நீங்கலாக மற்ற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித்தேர்வுகள் மாவட்ட அளவில் வெவ்வேறு தேதிகளில் நடத்தப்படும். இந்த நிலையில், சென்னை மாவட்டத்தில் 11–ஆம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வு தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
சென்னை மாவட்டத்தில் 11–ஆம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வு மார்ச் மாதம் 5–ந் தேதி தொடங்கி 28–ந் தேதி முடிவடைகிறது. தினமும் மதியம் 1.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வு அட்டவணை விவரம் வருமாறு:–
மார்ச் 5–ந் தேதி – மொழித்தாள்–1
8–ந் தேதி – மொழித்தாள்–2
12–ந் தேதி – ஆங்கிலம் முதல்தாள்
13–ந் தேதி – ஆங்கிலம் 2–ஆம் தாள்
10–ந் தேதி – இயற்பியல், பொருளாதாரம்
20–ந் தேதி – கம்ப்யூட்டர் சயின்ஸ்
22–ந் தேதி – வேதியியல், கணக்குப்பதிவியல்
26–ந் தேதி – கணிதம், வர்த்தக கணிதம்
28–ந் தேதி – உயிரியல், வணிகவியல்
இவ்வாறு முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் கூறியுள்ளார்.
400 காலி பணி இடங்களை நிரப்ப குரூப்–2 தேர்வு 3–வது கட்ட கவுன்சிலிங் அடுத்த மாதம் 6–ந் தேதி நடக்கிறது
புதிதாக பணியில் சேர்ந்த, 21 ஆயிரம் ஆசிரியர்களில், 6,000 ஆசிரியர்களுக்கு, டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை.
பத்தாம் வகுப்பு வினா வங்கி புத்தகம், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, மாநில பெற்றோர் – ஆசிரியர் கழக அலுவலகத்தில், விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகம் முழுவதும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், மே மாதத்திற்கு முன், மாணவர் சேர்க்கை பணி மேற்கொள்ளக் கூடாது’ என, அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநில பாடத் திட்டம்,மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் கல்வி ஆகிய, நான்கு வகையான கல்வி திட்டங்களை ஒருங்கிணைத்து, சமச்சீர் கல்வி பாடத் திட்டம் அமல்படுத்தியுள்ள நிலையில், மெட்ரிக் பள்ளிகளுக்கென, தனியாக இயக்குனர் அலுவலகம் தேவையா, என்ற கேள்வி எழுந்து உள்ளது.
புதிய பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்குவது, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, பள்ளிகளுக்கு, அங்கீகாரத்தைப் புதுப்பித்து வழங்குதல், பள்ளிகளின் நிர்வாகங்களை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை, இயக்குனரகம்கவனித்து வருகிறது.சென்னையில் உள்ள, இயக்குனர் அலுவலகம் மற்றும் 15 மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகங்கள் சேர்த்து, 70 பேர், பணியாற்றிவருகின்றனர்.நான்கு வகையான கல்விதிட்டங்களை ஒருங்கிணைத்து, பொது பாடத் திட்டம் உருவாக்கி, அமல்படுத்தப் பட்டுள்ளது.எனினும், தனியார் பள்ளிகளுக்கு, இன்னும், “மெட்ரிகுலேஷன்’ என்ற பெயர் இருந்து வருகிறது. இந்த பெயரை மாற்றுவது குறித்து, தமிழக அரசு, எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
மேலும், மெட்ரிக் பள்ளிகளுக்கு என, தனி இயக்குனரகம் இயங்குவது, தேவையற்ற நிர்வாகச் செலவை ஏற்படுத்தும் என்றும், இந்த இயக்குனர் அலுவலகத்தை, பள்ளிக் கல்வி இயக்குனரகத்துடன் இணைத்து விடலாம் என்றும், தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, கல்வித் துறை வட்டாரத்தினர் கூறியதாவது:பாடத் திட்டங்கள் மட்டும் பொதுவானதாக மாற்றப்பட்டு உள்ளன. ஆனால், நான்கு விதமான கல்வி திட்டங்களுக்கான சட்ட விதிமுறைகள், அப்படியே உள்ளன.மாநில பாடத் திட்டம்,ஆங்கிலோ இந்தியன் மற்றும்ஓரியண்டல் ஆகிய, மூன்று கல்வி முறைகளுக்கான நிர்வாகம், பள்ளி கல்வித்துறையின் கீழ் இருக்கிறது. நர்சரி பள்ளிகளுக்கான நிர்வாக கட்டுப்பாடு, தொடக்க கல்வித் துறையிடம் உள்ளது.அனைத்து நிர்வாகப் பணிகளையும், ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் எனில், முதலில் அதற்கான சட்ட விதிமுறைகளை நீக்கி விட்டு, பொதுவான சட்ட விதிமுறைகளை கொண்டு வர வேண்டும். இதை எல்லாம், அரசு தான் செய்ய வேண்டும்.
இதை எதுவும் செய்யாமல், இயக்குனரகத்தை மட்டும், வேறொரு துறையுடன் இணைக்க முடியாது. ஏற்கனவே, பெரும் பணிச்சுமையுடன் இயங்கி வரும், பள்ளிக் கல்வி துறையிடம், தனியார் பள்ளிகளையும் ஒப்படைத்தால், மேலும் பணிச்சுமை அதிகரிக்கும்.இதனால், பல்வேறு நிர்வாக குழப்பங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு, கல்வித் துறைவட்டாரத்தினர் தெரிவித்தனர்.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார்கூறியதாவது:மெட்ரிகுலேஷன் என்ற பெயரை எடுத்து விட்டு, தனியார் பள்ளிகளுக்கான இயக்குனரகம் என, அமைக்கலாம். இந்த நிர்வாகத்தை, பள்ளிக் கல்வியுடன் இணைத்தால், நிர்வாகம் ஸ்தம்பித்து விடும். தனியார் பள்ளிகளுக்கு, பெரும் பிரச்னைகள் ஏற்படும்.
நிர்வாக வசதிக்காகவும், பள்ளிகளை முறையாக கண்காணிக்கவும் தான், தனி நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிர்வாக முறையில், சில குறைகள் உள்ளன. குறிப்பாக, 15 மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பணியிடங்களில், 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.இவர்களால், தனியார் பள்ளிகளை, சரிவர கண்காணிக்க முடியவில்லை. அனைத்து காலி பணியிடங்களை நிரப்பியும், நிர்வாகப் பணிகளை விரைவுபடுத்த, உரிய நடவடிக்கை எடுத்தாலே போதும்.இவ்வாறு, நந்தகுமார்கூறினார்.
சென்னை பல்கலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள், இணையதளத்தில் இன்று 28.01.2013 வெளியிடப்படுகிறது.
அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே பாடத்திட்டம்: வரும் கல்வியாண்டில் அமல்
கணித, அறிவியல் பாடங்களுக்கு ஒரேமாதிரி தேர்வு!
நாடு முழுவதும் சிபிஎஸ்இ உள்பட பல்வேறு கல்வி போர்டுகள் உள்ளன. அந்தந்தக் கல்வி போர்டுகளுக்கு ஏற்ப, பாடத் திட்டங்களும் தேர்வு முறைகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன. அந்தந்த மாநில போர்டுகளில் படிக்கின்ற மாணவர்கள், அந்த மாநிலங்களில் அட்மிஷன் பெறும் போது பிரச்சினை எதுவும் இருப்பதில்லை. அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும்போது, அந்த நுழைவுத் தேர்வுகள் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தையொட்டியோ அல்லது என்சிஇஆர்டிபாடத்திட்டத்தையொட்டியோ இருக்கின்றன. இதனால், மாநில பாடத்திட்டப்படி படிக்கின்ற மாணவர்கள் பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். நுழைவுத் தேர்வுக்காகக் கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் விடுபட்ட பாடங்களைக் கூடுதலாகப் படிக்க வேண்டிய சுமையும் மாநில போர்டு மாணவர்களுக்கு ஏற்படுகிறது. இந்த நிலையில் பிளஸ் டூ வகுப்பில் கணிதம், அறிவியல் பாடங்களுக்கு நாடு முழுவதும் ஒரேமாதிரி தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் டூ தேர்வுகள் ஒரே மாதிரியாக இருக்கச் செய்யும் வகையில் பொதுவாக வடிவமைக்கப்பட்ட கேள்வித் தாள் வழங்கும் முறைக்கு பெரும்பாலான கல்வி போர்டுகள் கொள்கையளவில் ஆதரித்துள்ளன. 2010-ஆம் ஆண்டில், மத்திய செகண்டரி கல்வி போர்டு (சிபிஎஸ்இ), இந்திய பள்ளிச் சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) உள்ளிட்ட 20 கல்வி போர்டுகள், கணிதம், அறிவியல் பாடங்களுக்குப் பொதுவான பாடத்திட்ட வரையறையைப் பின்பற்றத் தீர்மானித்தன. 2011-ஆம் ஆண்டில், சீனியர் செகண்டரி தேர்வுக்கு இந்தப் பாடத் திட்ட வரையறையைப் பின்பற்றி 29 போர்டுகள் தேர்வு நடத்தின. இதன் தொடர்ச்சியாக, கணிதம், அறிவியல் பாடங்களுக்கு பொதுவான கேள்வித்தாளை உருவாக்குவதற்கான முயற்சியில் இறங்கும்படி, மத்திய செகண்டரி கல்வி போர்டை ஐஐடி போர்டு கேட்டுக் கொண்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக் கல்வி போர்டுகளின் பிரதிநிதிகள் அடங்கிய இந்திய பள்ளிக் கல்வி போர்டுகளின் கவுன்சில், ஒரே மாதிரியான கேள்வித்தாளை, உருவாக்குவதற்கான வழிமுறைகளை ஆராய, ஒரு துணைக் குழுவை நியமித்துள்ளது. அந்தக் குழுவில் அசாம், மகாராஷ்டிரா, பீகார், கேரளம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. கேள்வித்தாளின் தரம் ஒரே மாதிரியாக இருக்கும் சூழ்நிலையில், வழங்கப்படும் மதிப்பெண்களும் சமநிலையில் இருப்பதற்கான சூழ்நிலை ஏற்படும் என்கிறார்கள்.
ஐஐடிக்கள், என்ஐடிக்களில் சேருவதற்காக நடத்தப்படும் மெயின் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களுடன், பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்களும் அட்மிஷனுக்கு கணக்கில் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வுகள் அறிமுகமாகி வரும் சூழ்நிலையில், பிளஸ் டூ வகுப்பில் கணிதம், அறிவியல் பாடங்களுக்கு ஒரேமாதிரி தேர்வை நடத்தும் திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. முதல் கட்டமாக ஐந்து கல்வி போர்டுகளில் இந்த முறை முன்னோடித் திட்டமாக செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு, 2014 கல்வியாண்டில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்” என்கிறார், இந்திய பள்ளிக் கல்வி போர்டுகள் கவுன்சிலின் இணைச் செயலாளர் புரன் சந்த். தமிழகத்திற்கு இந்த முறை வருமா என்பது குறித்து தமிழகக் கல்வித் துறை அதிகாரிகள்தான் விளக்க வேண்டும்.
பிப்ரவரி முதல் வாரத்தில் செட் தேர்வு முடிவு
பி.எட்., மற்றும் எம்.எட்., துணைத் தேர்வில் தவறியவர்கள், மே, ஜூனில் நடைபெறும் தேர்விற்கான விண்ணப்பப் படிவங்களை, பல்கலை இணையதளம் மற்றும் அவரவர் பயின்ற கல்லூரிகளின் முதல்வரிடம் பெற்று பூர்த்தி செய்து கல்லூரிகள் வாயிலாக பிப்ரவரி 4ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இதை http://www.tnteu.in என்ற, இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். தேர்வில் தவறியவர்கள், மே, ஜூனில் நடைபெறும் தேர்விற்கான விண்ணப்பப் படிவங்களை, பல்கலை இணையதளம் மற்றும் அவரவர் பயின்ற கல்லூரிகளின், முதல்வரிடம் பெற்று, பூர்த்தி செய்து, கல்லூரிகள் வாயிலாக, பிப்ரவரி 4ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
பி.எட்., மற்றும் எம்.எட்., துணைத் தேர்வில் தவறியவர்கள், மே, ஜூனில் நடைபெறும் தேர்விற்கான விண்ணப்பப் படிவங்களை, பல்கலை இணையதளம் மற்றும் அவரவர் பயின்ற கல்லூரிகளின் முதல்வரிடம் பெற்று பூர்த்தி செய்து கல்லூரிகள் வாயிலாக பிப்ரவரி 4ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், பொறியியல் பேராசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணைகள்
மாணவ, மாணவியரின் விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம், 31ம் தேதியுடன் முடியும் நிலையில், மேலும் இரு வாரங்களுக்கு, அவகாசத்தை நீட்டிப்பு செய்ய, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்கக (அல்பருவ முறை) எம்.எஸ்சி., படிப்புக்கான, செய்முறை தேர்வுகள் (2011-12), ஜன.,28 ல், துவங்குகின்றன.
பள்ளிக்கல்வியை தமிழ் மீடியத்தில் படித்து, "சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்’ தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது பெருமையாக உள்ளது என மும்பையில் ஆட்டோ ஒட்டும் தமிழகத்தை சேர்ந்த, டிரைவர் மகள் பிரேமா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் 28–ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
8–ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு 1.4.2013 அன்று 12 வயது பூர்த்தி அடைந்த தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது குறித்து பிறப்பு சான்றிதழ் நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி ஏதும் தேவையில்லை. அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8–ம் வகுப்புக்கும் கீழ் உள்ள வகுப்புகளில் படித்து இடையில் நின்ற 12 வயது பூர்த்தியானவர்களும் தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை 28–ந் தேதி முதல் பிப்ரவரி 8–ந் தேதி வரை சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர், கடலூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
எக்காரணம் கொண்டும் தேர்வு கட்டணத்தை வங்கி டிமாண்ட் டிராப்ட் மூலமாக செலுத்தக்கூடாது. கருவூலம் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வுக்கட்டணம் ரூ.125–ஐ கருவூலத்தில் செலுத்தி, செலான் மற்றும் இதர இணைப்புகளுடன் சம்பந்தப்பட்ட துணை இயக்குனர் அலுவலகங்களில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 8–ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வுக்கான பாடங்களாக மொழிப்பாடம் ஒன்று (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, உருது ஆகிய மொழிகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்), ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்கள். கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை தமிழ், ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளில் (மீடியம்) ஏதேனும் ஒன்றில் விடையளிக்கலாம்.
சென்னை பெருநகர் பகுதிகளில் வசிக்கும் தேர்வர்கள் சென்னை தெற்கு, கிழக்கு, மத்திய சென்னை, வடக்கு தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அனைத்து பாடங்களையும் முதல்முறையாக எழுத இருப்பவர்கள், கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முப்பருவ பாடத்திட்டத்தின் அடிப்படையிலான பாடங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.
ஏற்கனவே பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி ஒருசில பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெறாதவர்கள் இந்த ஆண்டு மட்டும் பழைய பாடத்திட்டத்தின்படி தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். அடுத்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டத்தின்படிதான் அனைத்து பாடங்களையும் தேர்வு எழுத வேண்டும். இவ்வாறு வசுந்தராதேவி கூறியுள்ளார்.
கடந்த 12 நாட்களாக நடைபெற்ற சென்னை 36–வது புத்தக கண்காட்சி நிறைவு பெற்றது நீதிபதிகள் தி.அரிபரந்தாமன், எஸ்.விமலா பங்கேற்பு
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளார் சங்கம்(பபாசி) சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் கடந்த 11–ந்தேதி தொடங்கிய சென்னை 36–வது புத்தக கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது.இதன் நிறைவு விழா ஓய்.எம்.சி.ஏ. உடற்பயிற்சி கல்லூரி வளாகத்திலுள்ள புன்னகை அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் தி.அரிபரந்தாமன், எஸ்.விமலா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தி.அரிபரந்தாமன் பேசியதாவது:–
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நடைபெறும் புத்தக கண்காட்சிக்காக காத்திருக்கிறோம். சென்னை புத்தக கண்காட்சிக்கு 36 வயது வரலாறு இருக்கிறது. அதேபோன்று புத்தகங்களுக்கும் வரலாறு உண்டு. 15–ம் ஆண்டு நூற்றாண்டில் உருவாகிய அச்சு எந்திரங்கள் தான் நாம் புத்தகங்களை படிப்பதற்கு முக்கிய காரணம். மனிதனின் மகத்தான சாதனையான அச்சு இயந்திரங்கள் தோன்றவில்லை என்றால் மின்சாரம், செல்போன் இல்லாமல் எப்படி நம்மால் இருக்க முடியாதோ, அது போன்று புத்தகங்கள், தினசரிகள், வார இதழ்கள், மாத இதழ், சுய சரிதைகள், கவிதை நூல்கள் போன்றவற்றிகாக நாம் அலைந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும்.500 ஆண்டுகளுக்கு முன்பே உலகத்தில் முதன்முறையாக ஐரோப்பியர்கள் தான் அச்சு இயந்திரங்களை உருவாகி அனைத்திலும் முன்னேறி கொண்டிருகிறார்கள். நாம் அவர்களை பின் தங்கி இருக்கிறோம். அதனால் தான் அவர்கள் 150 ஆண்டுகளுக்கு உருவாகிய மெட்ரோ ரெயிலை, நாம் இப்போது செய்து கொண்டிருக்கிறோம்.இவ்வாறு நீதிபதி அரிபரந்தாமன் பேசினார்.
30 ஆண்டு காலமாக பதிப்பகத்துறை பணியில் நிறைவு செய்வதர்களுக்கு பரிசுகளும், கேடயங்களும் வழங்கி நீதிபதி எஸ்.விமலா பேசியதாவது:–புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் கலந்துகொள்வது வருத்தமாக இருக்கிறது. ஏனென்றால் புத்தக கண்காட்சிகள் நிறைவு பெறாத நிரந்தர காட்சிகளாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆதங்கமாகும்.புத்தகங்கள் குறித்த கருத்துக்களை ஒரு சிறிய கதை மூலமாக கூறுகிறேன்,‘ ஒரு ஊரில் ஒருத்தர் இருந்தார். அவருக்கு 3 மகன்கள். அவர் தன்னுடைய சொத்துக்களை, தன்னுடைய மகன்களில் யார் சிறந்த நிர்வாகிகளாக இருப்பார்களோ அவர்களுக்கு தான் தருவேன் என்று கூறி, 3 பிள்ளைகளையும் தனி தனியாக அழைத்து ஒவ்வொருவருக்கும் 10 ரூபாய்களை கொடுத்து தன்னுடைய வீட்டில் நீண்ட காலமாக திறக்கமால் பூட்டி கிடக்கும் அறை நிரப்ப வேண்டும் என்றார்.
உடனே முதல் மகன் 10 ரூபாய்க்கு வைக்கோல் வாங்கி வந்து அந்த அறை முழுவதும் பரப்பினார். ஆனால் அறை நிரம்பவில்லை. 2–வது மகன் பஞ்சுவை வாங்கி அறை முழுவதும் பரப்பினார். ஆனால் அறை நிரம்பவில்லை. 3–வது மகன் ஒரு மெழுகுவர்த்தி வாங்கி அந்த அறையின் நடுவில் வைத்து ஏற்றி வைத்தார்.அந்த மெழுகுவர்த்தியின் வெளிச்சம் இருள் சூழந்த அந்த அறை முழுவதும் பரவி வெளிச்சமாகி, அந்த அறையை அழகுபடுத்திவிட்டது. அது தான் புத்தகம். மனிதனுடைய மனதில் உள்ள இருள்களை அகற்றி அவனுக்கு அறிவு ஒளிகளை ஏற்றி உலகம் முழுவதும் வெளிச்சம் போட்டு காட்டுவது தான் புத்தகம். அன்பு, பாசம், அறிவு, ஊக்கம் போன்று நாம் எதையெல்லாம் கேட்கிறோமோ அதையெல்லாம் அள்ளி தருகின்ற அச்சயபாத்திரமாக புத்தகங்கள் திகழ்கின்றன.இவ்வாறு நீதிபதி எஸ்.விமலா பேசினார்.
அதைதொடர்ந்து இலக்கியங்களின் நோக்கம் படித்து மகிழவே!பண்பட்டு வாழவே! என்ற தலைப்பில் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.நிறைவு விழாவினை முன்னிட்டு, நேற்று திரளலான வாசகர்களும், புத்தக பிரியர்களும் புத்தக கண்காட்சிக்கு வந்து தங்களுக்கு தேவைப்பட்ட புத்தகங்களை அள்ளி சென்றனர். திருப்பூரில் 25–ந்தேதியும், பெரம்பலூரில் பிப்ரவரி 1–ந்தேதியும் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.