Monthly Archives: June, 2011

விழுப்புரம் முதன்மைக்கல்வி அலுவலர் திரு.பெ.புண்ணியக்கோட்டி அவர்கள்.

 1. விழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள்
 2. 29–வது பாரதியார் தின விளையாட்டுப்போட்டிகள் – துவக்க விழா காட்சிகள்..
 3. தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக மாநில அளவிலான 29–வது பாரதியார் தின விளையாட்டுப்போட்டிகள் அழைப்பிதழ்.
 4. விழுப்புரம் முதன்மைக்கல்வி அலுவலராக பொறுப்பேற்பு
 5. நாளிதழ் செய்திகள்
 6. நாளிதழ் செய்திகள் .
 7. திண்டிவனம், முருங்கப்பாக்கம் , அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா.
 8. 29th Bharathiyar Day State Level Sport meet function at villupuram
 9. 29th Bharathiyar Day State Level Sport meet cultural programme at villupuram
 10. 29th Bharathiyar Day State Level Sport meet cultural programme at villupuram
 11. பிளஸ் டூ தேர்வு ஆலோசனைக்கூட்டம்
 12. மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைத்தல் – தலைமை ஆசிரியர்கள் ஆய்வுக் கூட்டம்
 13. சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – ஆய்வுக்கூட்டம்
 14. முருங்கப்பாக்கம் பள்ளியில் மாணவிகளுக்கு வினாவிடை புத்தகம் வழங்கும் விழா
 15. பேரிடர் மேலாண்மை கையேடு ஒப்படைத்தல்
 16. செஞ்சி மகளிர் பள்ளியில் பிளஸ் டூ செய்முறைத்தேர்வு பார்வை.

FLASH NEWS OLD

GG

PUTHIYATHALAIMURAI TV

நேரடித் தொலைக்காட்சி

Get Adobe Flash player

var flashvars = {}; var playerWidth = 625; var playerHeight = 417 + 20; // adjust for the “toolbar” at the bottom flashvars.File = “http://bglive-a.bitgravity.com/ngmcpl/secure/live/feed01?e=0%26h=84a2c0e53390e7c26f9bdc71f87ae183”; flashvars.Mode = “live”; flashvars.AutoPlay = “true”; flashvars.ScrubMode = “simple”; flashvars.BufferTime = “1.5”; flashvars.VideoFit = “automatic”; flashvars.DefaultRatio = “1.5”; flashvars.LogoPosition = “topleft”; flashvars.ColorBase = “#000000”; flashvars.ColorControl = “#666666”; flashvars.ColorHighlight = “#99FF00”; flashvars.ColorFeature = “#99FF00”; flashvars.Unlock = “6c720dcdd3f030446601ee1e763d63e3”; var params = {}; params.allowFullScreen = “true”; params.allowScriptAccess = “always”; var attributes = {}; attributes.id = “bitgravity_player_6”; swfobject.embedSWF(stablerelease, “bg_player_location”, playerWidth, playerHeight, “9.0.115”, “http://bitcast-b.bitgravity.com/player/expressInstall.swf”, flashvars, params, attributes);

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுப் பணிகள் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தன. புதிய மதிப்பெண் விவரம் கிடைக்கப்பெற்றவுடன் திருத்திய எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் புதன்கிழமை மாலை வெளியிடப்படுகிறது.

எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை ஜூன் 30-ம் தேதி தொடங்குகிறது.பி.இ., எம்.பி.பி.எஸ் படிப்புகளில் சேருவதற்கான முக்கியப் பாடங்களில் இந்த முறை அதிகமான மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர். இதன் காரணமாக, இந்தப்

Read more »

புதுச்சேரி அரசு பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்கான நேர்காணல் துவங்கியது

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்கான நேர்காணலை, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் பன்னீர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு சேர்க்கை, அந்தந்தப் பள்ளிகளில் உள்ள மொத்த இடங்களில் 50 சதவீதம் அப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் மூலமாகவும், மீதமுள்ள 50 சதவீதம் மையப்படுத்தப்பட்ட கலந்தாய்வு மூலமாகவும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மையப்படுத்தப்பட்ட சேர்க்கைக்கான

Read more »

குறைபாடுகளை களைவதற்காகவே சமச்சீர் கல்வி அமல்படுத்துவது தள்ளிவைப்பு

சமச்சீர் கல்வியை இந்த கல்வியாண்டில் அமல்படுத்துவதை நிறுத்தி வைத்து, தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட பலர் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த ஐகோர்ட், சட்டத் திருத்தத்துக்கு தடை விதித்தது. பின், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் செய்தது. மனுவை

Read more »

ஆரம்பக் கல்வியை மேம்படுத்துவதன் மூலம் கல்வியின் தரத்தை உயர்த்தலாம் : அப்துல் கலாம்

அணுசக்தி மின்சாரம் என்பது நமக்குத் தேவையான ஒன்று. விமானங்களில் விபத்து ஏற்படுகிறது. அதனால் விமானங்களை நாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமா?. அணுஉலைகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடைபெறுகிறது. அதில் பாதுகாப்பு விவரங்கள் கிடைக்கும். எனவே

Read more »

தமிழாசிரியர் பதவி உயர்வு பட்டியல்

பள்ளிக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர் பணியில் இருந்து, (பி.டி.,) தமிழ் ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாநில அளவில் 699 பேர் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணத்தில் மாற்றமில்லை

 பொறியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தில் இந்த ஆண்டு எந்தவித மாற்றமும் இல்லை என பொறியியல் கல்வி கட்டணக்குழு தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் படிக்க 32, 500 ரூபாயும், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்க 62 500 ரூபாயும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தரத்தை உயர்த்தி சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும்-தனியார் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை

மெட்ரிக்குலேஷன் அல்லது சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் அளவுக்கு பாடத்திட்டத்தை அதிகரிக்க வேண்டும். எனவே, தரத்தை உயர்த்தி சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு தனியார் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

TEXT TO SPEECH SOFTWARE

விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த, பிளஸ் 2 மாணவர்களுக்கு, 80 ஆயிரம் விடைத்தாள்கள் அனுப்பப்பட்டுள்ளன-இப்பணிகளுக்கான, சிறப்பு அலுவலர் நரேஷ்

விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த, பிளஸ் 2 மாணவர்களுக்கு, 80 ஆயிரம் விடைத்தாள்கள் அனுப்பப்பட்டுள்ளன. பிளஸ் 2 பொதுத்தேர்வுக்குப் பின், விடைத்தாள் நகல் கேட்டு, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர். இவர்களில், பெரும்பாலான மாணவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வுகளின் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தனர். அந்த வகையில், மொத்தம், 80 ஆயிரம் விடைத்தாள் நகல்கள், மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இப்பணிகளுக்கான, சிறப்பு அலுவலர் நரேஷ் கூறியதாவது: மறு மதிப்பீடு அல்லது மறு கூட்டல் செய்ய விரும்பினால், விடைத்தாள் நகல் பெற்ற தேதியில் இருந்து, ஐந்து நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மறு மதிப்பீடு செய்ய முடிவு செய்தால், பாட ஆசிரியரின் ஆலோசனையை மாணவர்கள் கேட்க வேண்டும். மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தால், அதில் பெறக் கூடிய மதிப்பெண்கள் தான் இறுதியானது. எனவே, முதலில் பெற்ற மதிப்பெண்கள் அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்பு இருக்கிறது. இதனால், மாணவர்கள் நன்றாக யோசித்து, அதன்பின் முடிவு எடுப்பது நல்லது. இவ்வாறு நரேஷ் தெரிவித்தார்.

TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT – TEACHERS PROMOTION PANEL 2011-2012 FOR TAMIL,ENGLISH,MATHS,PHYSICS,CHEMISTRY,BOTANY,ZOOLOGY,HISTORY,ECONOMICS,COMMERCE,POLITICAL SCIENCE,GEOGRAPHY,PHYSICAL DIRECTORS

2011-2012ம் கல்வி ஆண்டில் முதுகலை ஆசிரியர்கள் (அனைத்துப்பாடங்கள் )  காலிப்பணியிடத்திற்குத் தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல் வெளியிடப்பட்டன.

TAMIL NADU TEACHERS PROMOTION PANEL – 2011-20122011-2012
AEEO SECOND LIST முன்னுரிமை பட்டியல் 151-250.
கீழே கிளிக் செய்தால் டவுன்லோட் செய்யலாம்

AEEO PROMOTION  STATE LEVEL PANEL – 2011

2011-2012
AEEO FIRST LIST முன்னுரிமை பட்டியல் 1-150.
கீழே கிளிக் செய்தால் டவுன்லோட் செய்யலாம்
AEEO PROMOTION  STATE LEVEL PANEL – 2011

2011-2012
2005-06 ஆம் கல்வியாண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு (BRT)ஆசிரியர் பயிற்றுநர்களாக நியமனம் செய்யப்பட்ட 500 ஆசிரியர் பயிற்றுநர்களின் முன்னுரிமை பட்டியல்
கீழே கிளிக் செய்தால் டவுன்லோட் செய்யலாம்
500 BRTE TO BT CONVERSION  STATE LEVEL PANEL – 2011

2011-2012
2011-2012ம் கல்வி ஆண்டில் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான திருத்தப்பட்ட பட்டியல்.
கீழே கிளிக் செய்தால் டவுன்லோட் செய்யலாம்
PG,HIGH HM TO  HR SEC HM REVISED STATE LEVEL PANEL – 2011

2011-2012
2011-2012ம் கல்வி ஆண்டில் உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான திருத்தப்பட்ட பட்டியல்.
கீழே கிளிக் செய்தால் டவுன்லோட் செய்யலாம்
BT,PG TO HIGH HM REVISED STATE LEVEL PANEL – 2011

2011-2012
2011-2012ம் கல்வி ஆண்டில் பட்டதாரி ஆசிரியர்  (வரலாறு) காலிப்பணியிடத்திற்குத் தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களின் பட்டியல்
கீழே கிளிக் செய்தால் டவுன்லோட் செய்யலாம்
SGT TO BT (HISTORY) STATE LEVEL PANEL – 2011

2011-2012
2011-2012ம் கல்வி ஆண்டில் பட்டதாரி ஆசிரியர்  (அறிவியல்) காலிப்பணியிடத்திற்குத் தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களின் பட்டியல்
கீழே கிளிக் செய்தால் டவுன்லோட் செய்யலாம்

SGT TO BT (SCIENCE) STATE LEVEL PANEL – 2011

2011-2012
2011-2012ம் கல்வி ஆண்டில் பட்டதாரி ஆசிரியர்  (கணிதம் ) காலிப்பணியிடத்திற்குத் தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களின் பட்டியல்
கீழே கிளிக் செய்தால் டவுன்லோட் செய்யலாம்
SGT TO BT (MATHS) STATE LEVEL PANEL – 2011

2011-2012
2011-2012ம் கல்வி ஆண்டில் பட்டதாரி ஆசிரியர்  (ஆங்கிலம் ) காலிப்பணியிடத்திற்குத் தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களின் பட்டியல்
கீழே கிளிக் செய்தால் டவுன்லோட் செய்யலாம்
SGT TO BT (ENGLISH) STATE LEVEL PANEL – 2011

2011-2012
2011-2012ம் கல்வி ஆண்டில் பட்டதாரி ஆசிரியர்  (தமிழ் ) காலிப்பணியிடத்திற்குத் தகுதியுள்ள திருத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் பட்டியல்(805 பேர்)
கீழே கிளிக் செய்தால் டவுன்லோட் செய்யலாம்
SGT TO BT (TAMIL) STATE LEVEL PANEL – 2011

2011-2012
2011-2012ம் கல்வி ஆண்டில்  முதுகலை ஆசிரியர் (தமிழ்)  காலிப்பணியிடத்திற்குத் தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல்
கீழே கிளிக் செய்தால் டவுன்லோட் செய்யலாம்
BT TO PG (TAMIL) STATE LEVEL PANEL – 2011

2011-2012
2011-2012ம் கல்வி ஆண்டில்  முதுகலை ஆசிரியர் (ஆங்கிலம் ஒரே பாடம்)  காலிப்பணியிடத்திற்குத் தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல்
கீழே கிளிக் செய்தால் டவுன்லோட் செய்யலாம்
BT TO PG (ENGLISH) STATE LEVEL PANEL – 2011

2011-2012
2011-2012ம் கல்வி ஆண்டில்  முதுகலை ஆசிரியர் (ஆங்கிலம் வேறு பாடம்)  காலிப்பணியிடத்திற்குத் தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல்
கீழே கிளிக் செய்தால் டவுன்லோட் செய்யலாம்
BT TO PG (ENGLISH) STATE LEVEL PANEL – 2011

2011-2012
2011-2012ம் கல்வி ஆண்டில்  முதுகலை ஆசிரியர் (கணிதம்)  காலிப்பணியிடத்திற்குத் தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல்
கீழே கிளிக் செய்தால் டவுன்லோட் செய்யலாம்
BT TO PG (MATHS) STATE LEVEL PANEL – 2011

2011-2012
2011-2012ம் கல்வி ஆண்டில்  முதுகலை ஆசிரியர் (இயற்பியல்)  காலிப்பணியிடத்திற்குத் தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல்
கீழே கிளிக் செய்தால் டவுன்லோட் செய்யலாம்
BT TO PG (PHYSICS) STATE LEVEL PANEL – 2011

2011-2012
2011-2012ம் கல்வி ஆண்டில்  முதுகலை ஆசிரியர் (வேதியியல்)  காலிப்பணியிடத்திற்குத் தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல்
கீழே கிளிக் செய்தால் டவுன்லோட் செய்யலாம்
BT TO PG (CHEMISTRY) STATE LEVEL PANEL – 2011

2011-2012
2011-2012ம் கல்வி ஆண்டில்  முதுகலை ஆசிரியர் (தாவரவியல்)  காலிப்பணியிடத்திற்குத் தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல்
கீழே கிளிக் செய்தால் டவுன்லோட் செய்யலாம்
BT TO PG (BOTANY) STATE LEVEL PANEL – 2011

2011-2012
2011-2012ம் கல்வி ஆண்டில்  முதுகலை ஆசிரியர் (விலங்கியல்)  காலிப்பணியிடத்திற்குத் தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல்
கீழே கிளிக் செய்தால் டவுன்லோட் செய்யலாம்
BT TO PG (ZOOLOGY) STATE LEVEL PANEL – 2011

2011-2012
2011-2012ம் கல்வி ஆண்டில்  முதுகலை ஆசிரியர் (அரசியல் அறிவியல் )  காலிப்பணியிடத்திற்குத் தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல்
கீழே கிளிக் செய்தால் டவுன்லோட் செய்யலாம்
BT TO PG (POLITICAL ) STATE LEVEL PANEL – 2011

2011-2012
2011-2012ம் கல்வி ஆண்டில்  முதுகலை ஆசிரியர் (பொருளியல்)  காலிப்பணியிடத்திற்குத் தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல்
கீழே கிளிக் செய்தால் டவுன்லோட் செய்யலாம்
BT TO PG (ECONOMICS SAME/CROSS MAJOR) STATE LEVEL PANEL – 2011

2011-2012
2011-2012ம் கல்வி ஆண்டில்  முதுகலை ஆசிரியர் (வணிகவியல் வேறு பாடம் )  காலிப்பணியிடத்திற்குத் தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல்
கீழே கிளிக் செய்தால் டவுன்லோட் செய்யலாம்
BT TO PG (COMMERCE) STATE LEVEL PANEL – 2011

2011-2012
2011-2012ம் கல்வி ஆண்டில்  முதுகலை ஆசிரியர் (வணிகவியல் ஒரே பாடம் )  காலிப்பணியிடத்திற்குத் தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல்
கீழே கிளிக் செய்தால் டவுன்லோட் செய்யலாம்
BT TO PG (COMMERCE) STATE LEVEL PANEL – 2011

2011-2012
2011-2012ம் கல்வி ஆண்டில்  முதுகலை ஆசிரியர் (உடற்கல்வி இயக்குநர் )  காலிப்பணியிடத்திற்குத் தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல்
கீழே கிளிக் செய்தால் டவுன்லோட் செய்யலாம்
BT TO PG (PHYSICAL DIRECTOR) STATE LEVEL PANEL – 2011

2011-2012
2011-2012ம் கல்வி ஆண்டில்  முதுகலை ஆசிரியர் (வரலாறு)  காலிப்பணியிடத்திற்குத் தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல்
கீழே கிளிக் செய்தால் டவுன்லோட் செய்யலாம்
BT TO PG (HISTORY SAME/CROSS MAJOR) STATE LEVEL PANEL – 2011

2011-2012
2011-2012ம் கல்வி ஆண்டில்  முதுகலை ஆசிரியர் (புவியியல்)  காலிப்பணியிடத்திற்குத் தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல்
கீழே கிளிக் செய்தால் டவுன்லோட் செய்யலாம்
BT TO PG (GEOGRAPHY) STATE LEVEL PANEL – 2011

2011-2012
2011-2012ம் கல்வி ஆண்டில்  முதுகலை ஆசிரியர் (இந்திய பண்பாடு )  காலிப்பணியிடத்திற்குத் தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல்
கீழே கிளிக் செய்தால் டவுன்லோட் செய்யலாம்
BT TO PG (INDIAN CULTURE) STATE LEVEL PANEL – 2011

2011-2012ம் கல்வி ஆண்டில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் காலிப்பணியிடத்திற்குத் தகுதியுள்ள முதுகலை ஆசிரியர்களின் பட்டியல்
கீழே கிளிக் செய்தால் டவுன்லோட் செய்யலாம்
PG TO BRC SUPERVISOR STATE LEVEL PANEL – 2011

2011-2012
2011-2012 கல்வியாண்டில் 1.1.2011 – நிலவரப்படி அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்குத் பதவிக்கு தகுதியுடையோர் பட்டியல்
கீழே கிளிக் செய்தால் டவுன்லோட் செய்யலாம்
PG,MUNI.PG/HIGH.HM,MUNI HIGH HM TO HR SEC HM STATE LEVEL PANEL – 2011

2011-2012
2011-2012 கல்வியாண்டில் பட்டதாரி ஆசிரியர், உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற வெளியிடப்பட்ட மாநில அளவிலான சீனியாரிட்டி பட்டியல் 001 முதல் 862 வரை
கீழே கிளிக் செய்தால் டவுன்லோட் செய்யலாம்

நாம் நம் அறிவுத் திறனை சரியான பாதையில் செலுத்தினால், நம்மை மிஞ்ச இவ்வையகத்தில் எவரும் இல்லை

* கடந்த, பத்தாயிரம் ஆண்டுகளில், எந்த நாட்டின் மீதும் இந்தியா போர் தொடுக்கவில்லை.

* கணக்கிடுவதற்கு மிகத் தேவையான, “பூஜ்ஜியத்தைகண்டுபிடித்தது இந்தியா; கண்டுபிடித்தவர் ஆர்யபட்டர்.

* கிறிஸ்துவுக்கு, எழுநூறு ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் தட்சசீலத்தில், உலகிலேயே முதன்முதலாக பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து, பத்தாயிரத்து, 500 மாணவர்கள் இங்கு பயின்றனர். அறுபதுக்கும் மேற்பட்ட பாட வகைகள் கற்பிக்கப்பட்டன.


* கிறிஸ்துவுக்கு, நானூறு ஆண்டுகளுக்கு முன், நாளந்தா பல்கலைக் கழகம் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. இது, கல்வி உலகுக்கு பெரும் வழிகாட்டியாக அமைந்தது.

* ஐரோப்பிய மொழிகள் அனைத்திற்கும் தாய் மொழியாக அமைந்தது, இந்திய மொழியான சமஸ்கிருதம். கம்ப்யூட்டர், “சாப்ட்வேர்தயார் செய்ய மிகவும் ஏற்ற மொழி சமஸ்கிருதம் தான் என, அமெரிக்கப் பத்திரிகையான, “போபர்ஸ், 1987 ஜூலை இதழில் குறிப்பிட்டுள்ளது.

* ஆயுர்வேதம் தான் மனித இனத்திற்கு ஆதியில் தெரிந்த மருத்துவ முறை. இதை, இந்தியாவின் சரகர் என்பவர்தான் கண்டு பிடித்து முறைப்படுத்தினார். இன்று, உலகம் முழுவதும் ஆயுர்வேத மருத்துவ முறை புத்துயிர் பெற்று வளர்ந்து வருகிறது.

* பிரிட்டிஷ்காரர்கள் இங்கு ஊடுருவும் முன், இந்தியாதான் உலகிலேயே பணக்கார நாடாகத் திகழ்ந்தது.

* “நாவிகேஷன்‘ – என ஆங்கிலத்தில் சொல்லப்படும், கப்பல் – படகு செலுத்தும் கலையை 6,000 ஆண்டுகளுக்கு முன், சிந்து நதியில் நிகழ்த்திக் காட்டியவர்கள் இந்தியர்களே. “நவ்காத்எனும் சமஸ்கிருத சொல்லே ஆங்கிலத்தில், “நாவிகேஷன்என்றானது. ஆங்கிலத்தில், “நேவிஎன, கடற்படையைக் குறிக்கும் சொல், “நூவ்என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்தே வந்தது.

* சூரியனை பூமி சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நாட்கள் எத்தனை என்பதை, ஐரோப்பிய வான சாஸ்திரி ஸ்மார்ட் கண்டுபிடித்து கூறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அதாவது, கி.பி, 5ம் நூற்றாண்டிலேயே இந்தியாவின் பட்டாச்சாரியர் கண்டுபிடித்து விட்டார். மிகச் சரியாக 365.258756484 நாட்களாகிறது என்பதை பட்டாச்சாரியர் கண்டுபிடித்தார்.

* கணித சாஸ்திரத்தில், “பைஎன்பதன் மதிப்பைக் கணக்கிட்டவர் புதையனார் என்ற இந்தியரே. ஐரோப்பிய கணித மேதைகள், “பித்தகோரஸ் தேற்றத்தை, விளக்குவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன், அதாவது, 6வது நூற்றாண்டிலேயே விளக்கினார் புதையனார்.
* கணிதத்தில் அல்ஜிப்ரா, டிரிக்னாமெட்ரி, கால்குலஸ் ஆகியவை இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. குவாட்ராட்டிக் சமன்பாடுகள், ஸ்ரீதராச்சார்யா என்ற இந்தியரால், 11ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

* கம்பியில்லா தகவல் தொடர்பை, இந்தியாவின் ஜகதீஷ் போஸ் தான் முதன் முதலில் கண்டுபிடித்தார் – மார்கோனி (ரேடியோ கண்டுபிடித்தவர்) அல்ல என்று அமெரிக்க நிறுவனமான ஐ.இ.இ.இ., அடித்துக் கூறுகிறது.

* செஸ் விளையாட்டு, இந்தியாவிலேயே முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சந்திரஞ்சா (சதுரங்கம்), அஷ்டபாதா என, இரு பெயரில் அழைக்கப்பட்டது.

* சிசேரியன், கேட்ராக்ட், செயற்கைக் கால், எலும்பு முறிவு, பித்தப்பைக் கல், மூளை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை, 2,600 வருடங்களுக்கு முன்பே, செய்து இருக்கிறார் சுஷ்ருதன் என்ற இந்தியர். அறுவை சிகிச்சைக்கு முன் கொடுக்கப்படும் மயக்க மருத்து சிகிச்சையையும் செய்து இருக்கிறார். 125க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைக்கு கருவிகளையும் பயன்படுத்தி உள்ளார்.— இப்படி எல்லாவற்றிலும் சரித்திரத்தில் நம்பர் ஒன் ஆகத் திகழ்ந்த இந்தியர்கள், இன்றும் நம் பெருமையை உலகம் முழுவதும் நிலைநாட்டி வருகின்றனர். 

உதாரணத்திற்கு: அமெரிக்காவில் உள்ள டாக்டர்களில், 38 சதவீதம் இந்தியர்கள்; விஞ்ஞானிகளில், 12 சதவீதம் இந்தியர்கள்; விண்வெளி துறையான, “நாசாவில், 36 சதவீதம் இந்தியர்கள்; பில்கேட்சின், “மைக்ரோ சாப்ட்நிறுவனத்தில், 34 சதவீதம் இந்தியர்கள்; கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ.பி.எம்.,மில் 28 சதவீதம் இந்தியர்கள்; அதே போல, “இன்டெல்கம்ப்யூட்டர் நிறுவனத்தில், 17 சதவீதம் இந்தியர்கள்; “சிராக்ஸ்நிறுவனத்தில், 13 சதவீதம் இந்தியர்கள்; அமெரிக்காவில், 35 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்…


இவை சிறு எடுத்துக்காட்டு தான்; அரசியல், ஜாதி, மதம் இவற்றை ஒதுக்கி வைத்து, நம் மக்கள் தம் அறிவுத் திறனை சரியான பாதையில் செலுத்தினால், நம்மை மிஞ்ச இவ்வையகத்தில் எவரும் இல்லை தானே!

பிளஸ் 2 தனித் தேர்வர்கள் வரும் செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள தேர்வுக்கு ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 12 வரை விண்ணப்பிக்கலாம் என தேர்வுத் துறை அறிவிப்பு.


 

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற தவறிய பாடங்களை மீண்டும் தேர்வு எழுத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் எச் வகை விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் ஒரு பாடத்துக்கு தேர்வு கட்டணமாக ரூ. 50-ம் இதரக்கட்டணமாக ரூ. 35-ம் செலுத்த வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டு இடைவெளியும் 1.9.2011 அன்று பதினாறரை வயது பூர்த்தி அடைந்தவர்களும் பிளஸ் 2 நேரடி தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம். இவர்கள் எச்.பி. வகை விண்ணப்பத்தினை பயன்படுத்த வேண்டும். இவர்கள் தேர்வுக் கட்டணமாக ஒரு 
பாடத்துக்கு ரூ. 150, இதரக் கட்டணம் ரூ. 35, கேட்டல், பேசுதல் திறன் தேர்வு ரூ. 2 என மொத்தம் ரூ. 187 செலுத்த வேண்டும். சென்னை மாவட்ட தனித் தேர்வர்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கேட்புக் காசோலை அல்லது வங்கிக் காசோலே மூலமாக “அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை – 600 006′ என்ற பெயரில் எடுக்க வேண்டும். மற்ற மாவட்ட மாணவர்கள் அரசுக் கருவூலங்களில் கருவூலச்சீட்டு மூலமாக மட்டும் செலுத்த வேண்டும். தொழில்கல்விப் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால், மார்ச் 2011 மற்றும் அதற்கு முந்தைய பருவங்களில், தொழில்கல்வி பாடங்களில் தோல்வியுற்றோர், பழைய பாடத் திட்டத்தின்படி தேர்வெழுத செப். 2011, மார்ச் 2012 ஆகிய இரு பருவங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முதன் முதலாக தேர்வு எழுதுபவர்கள் 2005-2006-ம் கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட பாடத் திட்டத்தின்படி தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். விண்ணப்பப் படிவங்களை ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 12 வரை அலுவலகப் பணி நாள்களில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், இணை இயக்குநர் (கல்வி), புதுச்சேரி, அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்கள் (திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோவை, கடலூர், வேலூர், சென்னை) பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் பதிவஞ்சல் மூலமாகவோ, நேரடியாக வந்தோ மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். சென்னையில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக தலைமை அலுவலகத்துக்கு அனுப்பக் கூடாது. குறிப்பிட்ட நாளுக்கு பின்பு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மெட்ரிக் சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள், தத்கலில் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

பத்தாம் வகுப்பு மெட்ரிக் சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள், தத்கலில் இன்று முதல், வரும் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கட்டணம்: ஒரு பாடத்திற்கு 135 + 500 என மொத்தம் ரூ.635, இரண்டு பாடங்களுக்கு 235 + 500 மொத்தம் ரூ.735, மூன்று பாடங்கள் 335 + 500 ஆகமொத்தம் ரூ.835 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்குனர், சென்னை -600 006 என்ற பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், சென்னையில் மாற்றத்தக்க வகையில் “டிமாண்ட் டிராப்ட்’ எடுத்து, விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகம், 4, ஹக்கீம் அஜ்மல்கான் ரோடு, சின்னசொக்கிகுளம், மதுரை-625 002ல், ஜூன் 22 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின், “ஹால்டிக்கெட்’கள் வழங்கப்படும். இதன்கீழ், மதுரை மையத்தில் மட்டும் தேர்வு எழுத மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என, மண்டல துணை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – ஆய்வுக்கூட்டம்

சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஆறாம் வகுப்பு அறிவியல் பாடத்தில், தி.மு.க., கொடியின் நிறத்தை போல கறுப்பு, சிவப்பு நிறத்துடன் சட்ட காந்தம் படம் அச்சிடப்பட்டுள்ளது. படத்தை, ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


கடந்த தி.மு.க., ஆட்சியில் சமச்சீர் கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மே மாதம் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற அ.தி.மு.க., அரசு சமச்சீர் கல்விக்கு தடை விதித்தது. இந்நிலையில், இறுதி தீர்ப்பு வரும் வரை நடப்பாண்டில், ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பில் சமச்சீர் கல்வியை நடைமுறைபடுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு பாடப்புத்தகங்களில், சில பகுதிகளை நீக்கியும், ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து வெளியிட தமிழக அரசு முடிவு செய்தது. சில நாட்களாக கல்வித்துறை அறிவுரைபடி, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு பாடங்களில் குறிப்பிட்ட பகுதிகளை மறைக்கும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஆறாம் வகுப்பு அறிவியல் பாடத்தில், 81ம் பக்கத்தில் தி.மு.க.,வின் கறுப்பு, சிவப்பு வர்ண கொடியை மாணவர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில், கறுப்பு – சிவப்பு நிறத்துடன் கூடிய சட்டகாந்தம் படம் அச்சிடப்பட்டுள்ளது. அதனால், அந்த படத்தையும் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க வேண்டும் என, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி அறிவியல் பாடத்தில் சட்டகாந்தம் படத்தை ஆசிரியர்கள் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

JOINT DIRECTOR P.A.NARESH

 1. P A Naresh (left), Joint Director introducing Hillary Clinton at the Anna Centenary Library speech.
 2. magicfingers.kalvisolai.com
 3. நம் உண்மையான தோழர்கள் புத்தகங்களே
 4. கண்ணைக் கவரும் கலை உலகம் – திருமதி மேனகா நரேஷ் அவர்களின் தினத்தந்தி ஞாயிறு மலர் – நேர்காணல்
 5. பெண்கள்தான் பிறவி ஓவியர்கள்-ஓவியர் மேனகா நரேஷ் – கல்கி வார இதழ் – 05.02.2012
 6. தூரிகை தொட்ட மேனகை ! – தேவதை மாத இதழ்
 7. உங்கள் விரல் வழி ஓவியமாய் கசிய வேண்டும்…ஓர் அனுபவ பகிர்வு
 8. சொல்கிறார்கள் – தினமலர் செய்தி
 9. US Secretary of State Hillary Clinton arrives to deliver a speech at the Anna Centenary Library in Chennai.
 10. பணி நிறைவு பாராட்டு விழா
 11. இணையதள தேடலில் திரு பூ.ஆ.நரேஷ் – 1
 12. இணையதள தேடலில் திரு பூ.ஆ.நரேஷ் – 2
 13. CHENNAI CEO Mr P.A.NARESH’S INTERVIEW ON DINAMALAR
 14. பத்திரிக்கை செய்திகள்
 15. பத்திரிக்கை செய்திகள்
 16. பத்திரிக்கை செய்திகள்

MBBS/BE மாணவர் சேர்க்கை

 • தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழான பி.இ. இடங்கள் ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இந்த கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும்.
 • தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். சேர விண்ணப்பித்துள்ள 20,765 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) வெளியிடப்படுகிறது.

344 தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கான அரசாணை ரத்தாகிறது

G.O No.46 DT 01.03.2011 : RMSA திட்டத்தின் கீழ் 2011-2012ஆம் கல்வியாண்டில் 344 தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கான அரசாணை ரத்தாகிறது.மாணவர் சேர்க்கைக்கும் தடை.

G.O Ms. No. 23 January 12, 2011 | திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 – பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கப் பள்ளிக் கல்வித் துறைகளின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.

Review of websites useful for medical professionalshttp://mediconet.blogspot.com/
………………………………………………………………………………………………………………………….

Anatomy Physiology Biochem Pathology Pharmacology Microbiology forensic Ophthalmology E N T Medicine Gynaecology Obstetrics surgery Paediatrics and many more subject’s ready made power point presentations.
http://medicalppt.blogspot.com/
………………………………………………………………………………….
Free Medical Books – Over the next years, many textbooks will be available online, free and in full-text. The unrestricted access to scientific knowledge will have a major impact on medical practice.
http://www.freebooks4doctors.com/
………………………………………………
http://bookboon.com/uk/textbooks

பள்ளிகள் திறக்கத் தடை

தமிழகத்தில் பள்ளிகளை ஜூன் 18  அன்று திறக்கக் கூடாது என, அரசு உத்தரவிட்டுள்ளது. 

KALVISOLAI VIDEO CLIPPINGS

தொழில் நுட்பக் கல்வித் துறை – 2011-2012 ஆம் ஆண்டில் அரசினர் பொறியியல் கல்லூரிகள், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் அரசினர் சிறப்புப் பயிலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலம் பொது மாறுதல் அளித்தல் – நெறிமுறைகள் நிர்ணயித்திடல் மற்றும் இடமாற்றம் குறித்த கலந்தாய்வு நடத்திக் கொள்ள தொழில் நுட்பக் கல்வி ஆணையருக்கு அதிகாரம் வழங்கி ஆணைகள் வெளியிடப்படுகிறது.

2011-2012 கல்வியாண்டு துவக்கத்தில் மாணவர்களுக்கு வழங்கக் கூடிய முனைப்பு இணைப்புப் பயிற்சி- தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்து வகுப்புகளுக்கு ஜுன் 15 முதல் ஜுலை 15 வரை ஒருமாத காலம் இப்பயிற்சி நடைபெறும்.

ஆசிரியர் நல தேசிய நிதி நிறுவனம் – புது டில்லி, தொழிற்கல்வி பட்டப்படிப்பு / பட்டயப் படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2010-11ம் ஆண்டிற்கு உதவித் தொகை வழங்குதல் – விண்ணப்பங்கள் கோருதல் LAST DATE 31.07.2011

சமச்சீர் கல்வி அமல்படுத்துவது குறித்து நிபுணர்குழு ஆராயந்து முடிவு எடுக்கலாம்.நிபுணர்குழு 2 வாரத்திற்குள் அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்


ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு இந்தாண்டு சமச்சீர் கல்வி தொடர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் கொண்டு வந்த சமச்சீர்கல்வி திட்டத்தை ரத்து செய்து மேலும் மாற்றங்கள் கொண்டு வந்து மேன்படுத்த வேண்டியிருக்கின்ற காரணத்தினால் இந்த ஆண்டு சமச்சீர் கல்வி தொடர முடியாது என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
அரசின் உத்தரவை இந்த எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதில் சென்னை ஐகோர்ட் தமிழக அரசின் முடிவுக்கு தடை விதித்தது. இதனை எதிர்த்து ‌சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் செய்‌தது.

இந்த மனுவை விசாரித்த கோர்ட் இன்று உத்தரவு பிறப்பித்ததுது. இதர வகுப்புகளில் சமச்சீர் கல்வி அமல்படுத்துவது குறித்து நிபுணர்குழு ஆராயந்து முடிவு எடுக்கலாம்.நிபுணர்குழு 2 வாரத்திற்குள் அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். நிபுணர் குழு அறிக்கை மீது சென்னை ஐகோர்ட் தினமும் விசாரணை நடத்தி ஒரு வார காலத்திற்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் .

மேலும் தமிழக தலைமை செயலாளர் தலைமையில் 9 பேர் கொண்ட நிபுணர்குழு அமைக்கப்பட வேண்டும். குழுவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இரண்டு அதிகாரிகளும், தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் இரண்டு அதிகாரிகளும், கல்வித்துறை செயலாளர் மற்றும் பள்ளி கல்வித்துறை இயக்குனரும் இடம் பெற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் வகுப்புகளில் பாடம் நடத்த வேண்டாம். சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு பின்னர் பாடம் நடத்தலாம் இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 15ம் தேதி நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன .

தமிழகத்தில் 15ம் தேதி நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன . மாணவர்களுக்கு எத்தகைய பாடத்திட்டங்களை அமல்படுத்துவது என்பது குறித்து, அரசு பின்னர் அறிவிக்கும்

சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தக் கூடாது: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தக் கூடாது என்றும், இத்திட்டத்தை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.


மேலும், சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தும் அரசின் சட்ட திருத்ததுக்கு இடைகால தடைவிதித்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முந்தைய திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி திட்டத்தை புதிதாக பொறுப்பேற்ற அதிமுக அரசு நிறுத்தி வைத்தது. பாடத் திட்டம் தரமானதாக இல்லை என்று கூறி. இந்தத் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.

அத்துடன் சமச்சீர் கல்வி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, இக்கல்வி திட்டத்தை நிறுத்தி வைப்பதாக புதிய சட்டத் திருத்தம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, சமச்சீர் கல்வி நிறுத்தி வைக்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, வழக்கறிஞர் ஷியாம் சுந்தர், பெற்றோர் மனோன்மணி உள்பட 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணனிடம் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைப்பது என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது? பெற்றோர்கள் – ஆசிரியர்களிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டதா? பாடத் திட்டங்கள் தரமில்லை என்று எந்தக் கமிட்டி பரிந்துரை செய்தது? என்று நீதிபதி கேள்விகளை அடுக்கினார்.

மேலும், அரசின் இந்த முடிவால் பாதிக்கப்படபோவது பெற்றோரும், மாணவர்களும்தான். சமச்சீர் கல்வி சட்டம் சரியானது என்று இந்த நீதிமன்றமும் (சென்னை உயர் நீதிமன்றம்) உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது.

உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி சில உத்தரவுகளை முந்தைய அரசு பின்பற்றவில்லை என்பதற்காக சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதா? அந்த உத்தரவுகளை புதிய அரசு பின்பற்ற வேண்டியதானே?

சமச்சீர் கல்வி பாடத்தில் முந்தைய அரசின் புகழ் பாடுவது போல பாடங்கள் இருந்தால், அதை நீக்க வேண்டியது அவசியம்தான். அதை விடுத்து ஒட்டு மொத்த பாடத்தையும் ரத்து செய்வது ஏன்?

இது மக்களின் பணம். இந்த பணம் பெரிய விஷயமில்லை என்று அட்வகேட் ஜெனரல் கூறுவதை ஏற்க முடியாது. இந்த அரசு கொண்டு வந்த திருத்த சட்டமானது, இந்த நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த தீர்ப்பை ஒன்றும் இல்லாதது போல் செய்கிறது.

பள்ளிப் பாட புத்தகத்தில் எந்த ஒரு தனி நபர் அல்லது கட்சிகளின் புகழ் பாடும் விதமாக இருக்கக் கூடாது என்ற அரசின் வாதத்தை நாங்கள் ஏற்கிறோம்,” என்று கூறினார், தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால்.

இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல் நவ நீதகிருஷ்ணன், “சமச்சீர் கல்விக்கான பாடங்கள் தரமற்றவை. இது தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள் கொடுத்த ஏராளமான புகார்களின் அடிப்படையிலேயே சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைப்பதென்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதற்கான ஆதாரங்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக உள்ளோம்,” என்று வாதிட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கில் இன்று மாலை உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

இந்த நிலையில், சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தக் கூடாது என்றும், இத்திட்டத்தை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தும் அரசின் சட்ட திருத்ததுக்கு இடைகால தடைவிதித்தும் அவர்கள் உத்தரவிட்டனர்.

ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கும், எஞ்சிய வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை நடப்பு ஆண்டிலும் தொடர வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

சூரிய ஒளி மின் உற்பத்தி

சூரிய ஒளி மின் திட்டங்கள், பரவலாக்கப்பட்ட மின் உற்பத்தி திட்டங்கள் என்பதால், மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் பஞ்சாயத்து அளவிலும் திட்டங்களை மாநில அரசு நடைமுறைப்படுத்த முடியும். அனல், அணு, நீர், காற்றாலை என்று எந்த மின் திட்டமானாலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் மின் உற்பத்தி செய்ய முடியும். மின் தேவையோ பரவலாக இருக்கிறது. மின் வினியோகத்தின் போது, தற்போது ஏற்படும் 19 சதவீத மின் இழப்பை தவிர்க்கவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள துணை மின் நிலையங்களை மேம்படுத்தாமல், பயன்படுத்தி கொள்ளவும் சூரிய ஒளி மின் திட்டங்கள் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் அமைக்க வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு பஞ்சாயத்தும் 3-5 மெ.வா., சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு தனியார் முதலீட்டுடன் 25 ஏக்கர் நிலம் போதும். ஒரு மெகா வாட்டிற்கு சுமார் 13 முதல் 14 கோடி வரை முதலீடு தேவைப்படும். இது வேறு எந்த திட்டத்திலும் இயலாத காரியம் சூரிய ஒளிமின் திட்டம். ஒரு ஆண்டுக்குள் நிறுவ முடியும். மழைநீர் சேமிப்புத் திட்டத்தை கண்டிப்புடன் அமல் செய்து மக்களிடம் நற்பெயர் வாங்கிய முதல்வர் ஜெயலலிதாவால் தான் இதுபோன்ற சூரிய ஒளி மின் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். மின் உற்பத்தியை மின் தொகுப்புக்கு (கிரிட்) அனுப்பும் இத்திட்டம் தவிர, மின் தொகுப்புக்கு அனுப்பாமல் நான் கிரிட் முறையும் உள்ளது. (ரூப் டாப் மாடல்) ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன் படி தமிழகத்தில் உள்ள சுமார் 5000 வீடுகளில் 2 முதல் 3 கி.வா., மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு 100 சதுர அடி இடம் இருந்தால் போதும். ஒரு கி.வா. மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ. 2 லட்சம் செலவாகும். 3 கி.வா., மின்சாரம் உற்பத்தி செய்ய மொத்தம் ரூ. 6 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். ஏற்கனவே தமிழ்நாடு மரபுசாரா மின் உற்பத்தி கழகம் (TEDA) 30 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது. ஆகவே முதலீட்டாளருக்கு ரூ.4.20 லட்சம் செலவாகும். மீதமுள்ள தொகையில் 5 சதவீதம் வட்டியுடன் தமிழ்நாடு பவர் பினான்சியல் கார்ப்பரேஷன் கடன் வழங்கினால் முதலீடு செய்யும் ஆர்வம் அதிகரிக்கும்.

முதலீட்டை ஈடு கட்ட: சூரிய ஒளியில் முதலீடு செய்யும் தனி நிறுவனத்துக்கோ, வீட்டுக்கோ, அமைப்புக்கோ அவர்கள் செய்யும் முதலீட்டுக்கு சரிபங்காக, அவர்கள் அரசுக்கு செலுத்தும் பலவித வரிகளில் உதாரணமாக சொத்து வரி, கார்ப்பரேஷன் வரி, தொழில் வரி, விற்பனை வரி, வாட் வரி ஆகியவற்றில் 6 ஆண்டில் தாங்கள் செய்த முதலீட்டை ஈடுகட்ட செய்யும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்தால் இதில் முதலீடு செய்ய பலர் முன்வருவார்கள். 6 ஆண்டுகளுக்கு பின் மீதமுள்ள 19 ஆண்டுகளில் (சூரிய ஒளி மின் சாதனங்கள் 25 ஆண்டுகள் உற்பத்தி தரும்). 3 கி.வா. மின்சாரம் இலவசமாக கிடைக்கும் என்ற நிலை உருவானால் இதில் முதலீடு செய்ய ஏராளமானோர் ஆர்வம் காட்டுவார்கள். அரசுக்கு இந்த முதலீட்டை சலுகை என்று நினைக்காமல் அரசுக்கு பதில் முதலீட்டை தனியார் செய்தார்கள் என்று எண்ணி, 6 ஆண்டுகளில் பணத்தை திருப்பி செலுத்துகிறோம் என்று கருத வேண்டும். பல வெளிநாடுகளில் இத்திட்டம் வெற்றிகரமாக நடைபெறுகிறது. மாநிலத்தின் பத்து வெவ்வேறு இடங்களில் சூரிய ஒளி மின் உற்பத்தி பூங்காக்களை (சோலார் பார்க்) அமைக்க மாநில அரசு யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு இடத்திலும் 300 மெ.வா. மின் உற்பத்திக்கும் உத்தேசிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு முதலீட்டாளருக்கு 1 மெ.வா., முதல் அதிகபட்சமாக 5 மெ.வா., உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கும் திட்டமாக இருந்தால், இத்திட்டம் வெற்றிகரமாக அமையும். ஒரே இடத்தில் பல முதலீட்டாளர்கள் இந்த பூங்காக்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு ஏற்படும். அதே நேரத்தில் ஒரே இடத்தில் 300 மெ.வா., சோலார் பூங்கா அமைக்க நேரிட்டால் அரசுக்கும், துணை மின் நிலையங்கள், உயர் மின் அழுத்த வினியோகம் செய்ய குறைந்தது 1500 கோடி ரூபாய் வரை தேவைப்படும். இவ்வாறு சோலார் பார்க்கை முதல் கட்டமாக வைத்து கொள்ளாமல் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் தனியார் முதலீட்டை ஈர்க்கும் வகையில் ஒன்று முதல் மூன்று மெ.வா., சிறு திட்டங்களை தமிழகத்தில் உள்ள குறைந்தது 250 பஞ்சாயத்துக்களில் நடைமுறை படுத்த ஆவன செய்ய வேண்டும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது . அரசு ஏற்படுத்தும் சோலார் கொள்கையும், அந்த கொள்கையில் ஏற்படுத்தும் நம்பிக்கையும் தான், முதலீட்டாளர்களை தமிழகத்தில் சோலார் மின் நிலையங்களை துவக்க ஈர்க்கும்.

குஜராத் கொள்கை: ஜவகர்லால் நேரு தேசிய சோலார் மிஷன் திட்டத்தை அடுத்து, குஜராத் தனக்கென தனி சூரிய ஒளி மின் உற்பத்தி கொள்கையை அறிவித்தது. குஜராத் மாநிலத்தில் துவங்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை அங்குள்ள அரசு ஒரு யூனிட்டுக்கு ரூ.15 வீதம் 12 ஆண்டுகளுக்கு பெற்று கொள்ளவும், மீதமுள்ள 13 ஆண்டுகளுக்கு ரூ.12 வீதமும் பெற்றுக்கொள்ள நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. திட்டத்துக்கான நிலத்துக்கு பதிவுக் கட்டணம், வரி ஆகியவற்றில் குஜராத் அரசு சலுகையும் அளிக்கிறது. நிலம் கையகப்படுத்துவது முதல் மின் மீட்டர்களை பொருத்துவதற்கான அனைத்து துறைகளிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் ஒரே இடத்தில் சந்திக்க வைத்து ஏற்படும் பிரச்னைகளை களைய அதிகாரி நியமிக்க படுகிறார். உயர் அதிகாரி தலைமையில் ஒற்றை சாளர முறையில் ஒப்புதல் அளிக்கும் முறையையும் அந்த அரசு கடைப்பிடிக்கிறது.

குஜராத்தில் இந்த வெற்றி பார்முலாவை தொடர்ந்து, ராஜஸ்தான், அரியானா, மேற்கு வங்கம், டில்லி, மகாராஷ்ட்ரா, ஒடிசா, ஆகிய மாநிலங்கள் தனிக் கொள்கையை வகுத்துள்ளன. இருந்தும் குஜராத் போல், இந்த மாநிலங்களில் அதிக அளவு சோலார் முதலீட்டாளர்களை ஈர்க்க முடியவில்லை. இதற்கு காரணம் குஜராத் போல் அதே விலைக்கு சோலார் மின்சாரத்தை வாங்கிய போதிலும், குஜராத் போல் அதிகாரிகள் மட்டத்தில், ஒத்துழைப்பு இருக்காது. என்ற நம்பிக்கையும், சில மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் பிரச்னையாலும் சில மாநிலங்களில் கிராமங்களில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் பிரச்னையாலும், தங்கள் முதலீட்டை குஜராத்தில் அதிகப்படுத்துகிறார்களே தவிர, இந்த மாநிலங்களில் போக வேண்டும் என்று எண்ணுவதில்லை. ஒரு வேலை தமிழகத்தில் சோலார் மின் உற்பத்தியை கூடுதல் விலையில் வாங்குவார்கள் என்று திட்டம் வகுத்து கொடுத்தால் மட்டுமே தமிழகத்தின் பக்கம், இவர்களை ஈர்க்க முடியும்.

அதிகாரிகள் ஒத்துழைப்பு: தமிழகத்தில் உள்ள சில அதிகாரிகளின் ஒத்துழைப்பு பிரசித்தி பெற்றது. இவர்களால் ஒரு போதும் குஜராத் அதிகாரிகள் போல் தொழில் செய்ய வருபவர்களுக்கு ஓத்துழைப்பு கொடுக்க முன் வரமாட்டார்கள். இதை ஈடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு குஜராத்தை விட அதிக சலுகை வழங்கினால் மட்டுமே இந்த திட்டம் வெற்றிகரமாய் நிறைவேறும். மின் துறையில் உள்ள பல அதிகாரிகளுக்கு சூரிய ஒளி மின் உற்பத்தி என்றாலே ஒரு நம்பிக்கை இல்லாத, முடியாத ஒரு திட்டமாக கருதுகிறார்கள். சூரிய ஒளி மின் உற்பத்தி மூலம் கிடைக்கும். ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.15 செலவாகும் என்பது தான் இதற்கு அவர்கள் சொல்லும் ஒரே காரணம். மின் பற்றாக்குறையை சமாளிக்க தமிழக அரசு பிற மாநிலங்களில் இருந்து யூனிட்டுக்கு ரூ.13 வரை கொடுத்து மின்சாரத்தை விலைக்கு வாங்குகிறது. சில சமயங்களில் டீசல் ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்பவர்களிடமிருந்து ஒரு யூனிட்டுக்கு ரூ.12 வரை விலை கொடுத்து வாங்குகிறது. இப்படியிருந்தும் சூரிய ஒளி ரூ.15 கொடுக்க வேண்டுமே என்று அதிகாரிகள் நினைக்கிறார்களே தவிர ஒரு மெகா வாட்டுக்கு 14 கோடி முதலீடு செய்ய தனியார் முன் வருகிறார்களே என்று நினைப்பதில்லை. அரசு செய்ய வேண்டிய முதலீட்டுக்கு பதில் தனியார் செய்ய முற்படும்போது அதை ஊக்குவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் நினைப்பதில்லை. முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தி, அரசு அதிகாரிகளின் தலையீடே இல்லாமல் ஒரு திட்டத்தை வகுத்து கொடுத்தாலே அரசு நினைக்கும் பல அடிப்படை திட்டங்கள் வெற்றிகரமாக முடியும்.

அதிகாரிகளின் நிலை: ஆற்காடுவீராசாமி அமைச்சகத்தின் கீழ் இருந்த சில அதிகாரிகளுக்கு சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்தில் விழிப்புணர்வு இல்லாததும், நாட்டின் முன்னேற்றத்தில் நம்பிக்கை இல்லாததும், தனியார் முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாததால் தான் கடந்த ஆட்சியில் மின்சாரத்துறை இவ்வளவு மோசமாக இருந்தது. இதுவே கடந்த ஆட்சிக்கு ஏற்பட்ட மிக பெரிய கெட்ட பெயராகும். சூரிய மின் திட்டத்தின் மூலம் ஒரு மெகா வாட்டிற்கு 14 கோடி தேவைப்படுவதால் இதை தயாரிக்க ஒரு யூனிட்டிற்கு ரூ.12 ஆகும். தனியாரிடமிருந்து இதை பெறும்போது, அவர்கள் ரூ.15 க்கு குறையாமல் விற்பார்கள். அதனால் அரசு மானியம் இல்லாமல் சூரிய மின் ஒளி திட்டம் நிறைவேற்ற முடியாது. அனல் மின் நிலையத்திற்கு ஒரு மெகாவாட்டிற்கு ரூ. 5 கோடி தான் ஆகும் என்று கூறும் அதிகாரிகள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். அனல் மின் நிலையம் குறைந்தது 1000 முதல் 3000 மெகா வாட் நிலையமாக தான் இருக்க முடியும். இது போக திட்டத்தில் வராத செலவாக அனல்மின் நிலையத்திலிருந்து பிற பகுதிகளுக்கு எடுத்து செல்வதற்கு (Sub Station) மற்றும் மின் விநியோகம்) ஒரு மெகாவாட் 5 கோடி செலவு ஏற்படும். இதை திட்ட செலவில் சோர்க்காமல், அரசு பட்ஜெட்டில் சேர்க்கப்படுகிறது. இதனாலே அனல்மின் நிலையம் அமைக்க வெறும் 5 கோடி ரூபாய் தான் ஆகும் இவர்கள், மேலும் அரசு செய்யும் செலவை சேர்க்காமல் அனல்மின் நிலையம் மூலம் பெறப்படும் ஒரு யூனிட்டிற்கு ரூ.3 க்கு குறைவாக கிடைக்கும் என்று அரசை நம்ப வைக்கிறார்கள்.

எப்படி செயல்படுத்துவது: சூரிய ஒளி மின் திட்டத்தை அமல் செய்ய, தலைமைச் செயலர் அந்தஸ்தில் ஓர் அதிகாரியை தமிழ் அரசு நியமிக்க வேண்டும். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பை பெற வேண்டியிருப்பதாலும் அத்துறையினரின் ஈடுபாடும் உதவியும் தேவைப்படுகிறது. பல்வேறு துறைகளில் உள்ள நடைமுறைச் சிக்கல்களுக்கு அஞ்சியே முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தயங்குகிறார்கள். ஆகவே, தலைமைச் செயலர் அளவிலான அந்தஸ்தில் இருந்தால் தான் மற்ற துறை செயலர்கள் இத்திட்டத்தில் முனைப்புடன் செயல்பட முடியும். இது வளரும் தொழில்நுட்பம் கொண்ட துறை என்பதால் இத்துறையில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த சிலரை உறுப்பினராகவும் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

கிராம ராஜ்யமே ராம ராஜ்யம்: கிராமங்களில் அடிப்படை பிரச்னைகளைத் தீர்த்தால், கிராம மக்கள் நகரங்களை நோக்கிச் செல்ல மாட்டார்கள். நகர வளர்ச்சி மற்றும் நெருக்கடி தீர்க்க அரசு செய்யும் செலவு கோடிக்கணக்கில் குறையும். கிராமப்புறங்களில் மின்சாரம் இல்லை. இருந்தாலும் தாழ்வழுத்த மின்சாரமே வழங்கப்படுகிறது. அப்பகுதிகளில் உள்ள மருத்துவமனையில் குழந்தைகளை காக்கும் இன்குபேட்டர், அறுவை சிகிச்சை அறைகளுக்கு போதுமான மின்சாரம் இல்லை. உயிர்காக்கும் கருவிகளை இயக்கவும் மின்சாரம் இல்லை. விதைகளை பாதுகாக்க, உற்பத்தி செய்த காய்கறி பழங்களை காப்பாற்றவும், கால்நடை இனவிருத்திக் கூடங்களை இயக்கவும் மின்சாரம் இல்லை. இந்நிலை மாற ஒவ்வொரு பஞ்சாயத்தும் 2 மெ.வா., மின்சாரத்தை நிறுவி அவர்களே மின்வினியோகம் செய்யும் முறைக்கும் ஒப்புதல் அளிக்க வேண்டும். சில மாநிலங்களில் இது நடைமுறையில் உள்ளது. 2003ம் ஆண்டு மின்சார உற்பத்திச் சட்டத்திலும் இதற்கான வழிமுறை இடம்பெற்றுள்ளது.

பஞ்சாயத்து மட்டத்திலும் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். இதற்காக சோலார் தொழிலில் ஈடுபட்டு வரும் Wipro, Tata BP, Moserbaer உள்ளிட்ட நிறுவனங்களை பயன்படுத்தினால், அவர்களே இந்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி சோலார் மின்சார திட்டத்தை நிறுவி அதனை விநியோகித்தும் செயல்படுத்தியும் கொடுப்பார்கள். அரசு இதற்கு உத்தரவும், தனிக்கொள்கையும் ஏற்படுத்தி கொடுத்தால் போதும். 3 ஆண்டுகளில் குறைந்தது 200 பஞ்சாயத்துகளில் 2 மெ.வா., திட்டங்களை நிறைவேற்றலாம். இதற்கு திடமான எண்ணமும், சரியான திட்டமும் நடைமுறைப்படுத்தும் வைராக்கியமும் நேர்மையான அதிகாரிகளும் இருந்தால் போதுமானது.

தேசிய சோலார் மிஷன் தமிழகத்தின் பொறுப்பு என்ன?: கடந்த 2009 நவம்பரில், தேசிய சோலார் மிஷன் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்தார். இத்திட்டம் மூன்று கட்டங்களாக அமல் செய்யப்படும். முதல் கட்டமாக 2010-13 ஆண்டுகளில் 1000 மெ.வா., மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்தது. 2010ல் துவங்கும் முதல் கட்டத்தை இரண்டாக பிரித்து, 30 நிறுவனங்களுக்கு 150 மெ.வா., சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனம் அதிகபட்சமாக 5 மெ.வா., உற்பத்தி செய்யலாம். தமிழகத்தில் தூத்துக்குடியில் 5 மெ.வா., மின் உற்பத்திக்கு ஒரு தனியார் நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது.

இக்கொள்கையின் படி, தேசிய அனல்மின் உற்பத்திக்கழக வியாபார அங்கமான என்.வி.வி.என்., (என்.டி.பி.சி., வித்யூத் வியாபார் நிகாம் லிட்.,) எனும் அமைப்பு தான் தற்போது, சூரிய ஒளி மின் உற்பத்தியை விலை கொடுத்து வாங்கவும், அதை மாநில அரசுகளுக்கு விற்கவும் உள்ள அதிகாரப்பூர்வ ஏஜன்சியாக செயல்படுகிறது.இந்த அமைப்புதான் சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்களின் தகுதிகளை முடிவு செய்து, ஒரு யூனிட்டுக்கு ரூ. 17.91 விலை கொடுத்து, இருபத்தைந்து ஆண்டு கால ஒப்பந்தம் செய்து கொள்ளும். அத்துடன், மின் உற்பத்திக்கு ஏற்ப பணத்தையும் நேரடியாக வழங்கும். தற்போது மாநிலங்களில் உள்ள, மின் உற்பத்தி தொடர்பான எந்த துறைக்கும், தேசிய சோலார் மிஷன் திட்டத்தில் உள்ள பொறுப்பு பற்றி தெரிவிக்கப்படவில்லை.

தேசிய சேலார் மிஷன் திட்டப்படி, சூரிய ஒளி மின்உற்பத்தி செய்யும் தனியாரிடம் ஒரு யூனிட் ரூ. 17.91 வீதம் மின்சாரத்தைப் பெற்று, என்.டி.பி.சி., தன்னிடம் உள்ள மாநிலங்களுக்கு ஒதுக்கப்படாத மத்திய தொகுப்பிலிருந்து 3 மடங்கு மின்சாரத்தைச் சேர்த்து மாநிலங்களுக்கு திருப்பி வழங்கும். உதாரணமாக ஒரு சூரிய ஒளி மின்திட்டத்தில் 1000 யூனிட் மின் உற்பத்தியானால், 3000 யூனிட் சேர்த்து, 4 ஆயிரம் யூனிட்டாக மாநிலத்திற்கு திருப்பி வழங்கும். இதனால் மாநிலங்கள் பெறும் மின் உற்பத்திக்கு ரூ. 5.50 வீதம் என்.வி.வி.என்.,க்கு செலுத்தினாலே போதும். இதன் மூலம் தேசிய அனல் மின்கழக நிறுவனத்துக்கு (என்.டி.பி.சி.,) ஏற்படும் நஷ்டம் மத்திய அரசின் பட்ஜெட்டில் இருந்து சமாளித்து கொள்ளப்படுகிறது.

குறிப்பிட்ட சதவீதம்: ஒவ்வொரு மாநிலமும் அம்மாநிலங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் மொத்த அளவில் மரபுசாரா மின்சக்தியை குறிப்பிட்ட சதவீதம் பயன்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுடன் மத்திய மின்சார ஒழுங்குமுறை கமிஷன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு ஆர்.பி.ஓ., (ரெனியூவல் பர்ச்சேஸ் அப்ளிகேஷன்) என்று பெயர். காற்றாலை மின் உற்பத்தியால் இந்த இலக்கை தமிழகம் எளிதில் பூர்த்தி செய்து வந்தது. ஆனால் தற்போது சூரிய ஒளியை பயன்படுத்தி குறிப்பிட்ட சதவீதம் மின் உற்பத்தி செய்ய வேண்டும் என்று தனி ஆர்.பி.ஓ., தேசிய சோலார் மிஷனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்.பி.ஓ.,வை கடைபிடிக்காத மாநிலங்களுக்கு எதிர்காலத்தில் மின்வினியோகம் மற்றும் பிற உதவிகளை மத்திய அரசு குறைத்து விடும் அபாயம் உள்ளது.

அதன்படி, 2010 முதல் ஒரு மாநிலம் பயன்படுத்தும் மொத்த மின்சாரத்தில் 0.25 சதவீதம் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 0.25 சதவீதம் அதிகரித்து 2022ல் இதன் மொத்த உற்பத்தி 3 சதவீதமாக இருக்க வேண்டும். கடந்த ஆண்டு தமிழகத்தில் சுமார் 7 லட்சம் மில்லியன் யூனிட்டுகள் செலவானது. இதில் 0.25 சதவீதத்தை கணக்கிட்டால் 100 மெ.வா., மின்சாரம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்திருக்க வேண்டும். ஆனால் சிவகங்கையில் மோசர் பெயர் நிறுவனம் மத்திய அரசின் பழைய திட்டத்தின் படி, 5 மெ.வா., சூரிய ஒளி மின் உற்பத்தியை மட்டுமே துவக்கி உள்ளது.

தேசிய சோலார் மிஷன் திட்டப்படி, 2010-11 ஆண்டில் இரண்டாவது கட்டத்தில் 500 மெ.வா., திட்டங்களுக்கு இந்த ஜூன் மாதம் மத்திய அரசு டெண்டர் விட உத்தேசித்துள்ளது. இது போக சிறு முதலீட்டாளர்கள் பங்குபெற வேண்டும் என்ற நோக்கில், ஆர்.பி.எஸ்., எஸ்.ஜி.பி., எனும் மற்றொரு திட்டத்தை கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தில் தமிழகத்தில் மொத்தம் 7 நிறுவனங்கள் தேர்வாகின. அடுத்த மார்ச் மாதத்துக்குள் உற்பத்தி துவக்க வேண்டும்.

இன்ஜினியரிங் கல்லூரிகளில் சூரிய ஒளி மின்உற்பத்தி: கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பெரிய நிறுவனங்கள் அவர்கள் உபயோகிக்கும் மின்சாரத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் சூரிய ஒளி மின்சாரமாக உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும். 2 ஆண்டுகளில் இதை நடைமுறைப்படுத்த அறிவுறுத்த வேண்டும். பள்ளிகள், திருமண மண்டபங்கள், கம்யூனிட்டி ஹால்கள், கிளப்புகள் என்று இத்திட்டத்தை விரிவுபடுத்திக்கொண்டே போகலாம்.

தமிழகத்தில் 600 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இவை குறைந்தபட்சம் 500 கி.வா., முதல் 1000 கி.வா., வரை மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகின்றன. குறைந்தது 100 கி.வா., சோலார் மின் உற்பத்தியை செய்ய வேண்டும் என்று கட்டாயமாக்க வேண்டும். இதற்கு அவர்கள் ஒன்றரைக்கோடி வரை முதலீடு செய் வேண்டும். இதனால் 60 மெ.வா., மின்உற்பத்தியை இன்ஜினியரிங் கல்லூரிகள் வழியாக உற்பத்தி செய்ய முடியும். இன்ஜினியரிங் கல்லூரிகள் கிராமப்பகுதியில் அதிகம் இருப்பதால் இடப்பற்றாக்குறை என்ற பிரச்னை இல்லை.

பயோ கேஸ்: 500 பேருக்கும் மேல் சாப்பிடும் கேன்டீன்கள் ஹோட்டல்கள், தொழிற்சாலை கேன்டீன்களில் சமையலுக்கென அதிக மின்சாரம் செலவாகிறது. இதற்கு இந்த சமையல் கூடங்களில் சூரிய ஒளி மூலம் தான் வெந்நீர் உற்பத்தி செய்ய வேண்டும். அதேபோல், உணவுக்கழிவுகளிலிருந்து பயோகேஸ் உற்பத்திக்கான திட்டத்தை நிறைவேற்றவும் தமிழக அரசு உத்தரவிடவேண்டும். சில மாநிலங்கள் இம்முறையை பின்பற்றி வருகிறது. பாபா அணு ஆராய்ச்சி கழகம் இதற்கென தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது. தினமும் 500 கிலோ உணவு மற்றும் காய்கறி கழிவிலிருந்து 29 கிலோ எல்.பி.ஜி.,க்கு இணையான பயோகேஸ் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு குறைந்தது ரூ. 5 லட்சம் முதலீடு தேவைப்படும். இதையே 2 ஆண்டுகளில் அனைத்து கேன்டீன், ஹோட்டல்கள் திருமண மண்டபங்களில் நிறுவ அரசு உத்தரவிடவேண்டும். மின் நிதிக்கழகத்திலிருந்து இதற்கும் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும். இதில் முதலீட்டாளர்களுக்கு 2 ஆண்டுகளில் முதலீடு செய்த பணத்தை மீட்டுவிடும் வாய்ப்புள்ளது.

வாட்டர் ஹீட்டர்கள்: பெங்களூரு மற்றும் டில்லி போல, சூரியஒளி வாட்டர் ஹீட்டர்களை ஊக்குவிக்க, அதை நிறுவும் வீடுகள் மற்றும் பிளாட்டுகளுக்கு மட்டும் வீடுகட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். தொழிற்சாலைகள், கேன்டீன், ஹோட்டல்கள், மடங்கள், சர்ச் உள்ளிட்டவற்றில், குறிப்பதற்கான வெந்நீர் தேவை அதிகம் உள்ளது. ஏற்கனவே மானியமும் குறைந்த வட்டி வங்கிக்கடனும் நடைமுறையில் உள்ளது. அரசு கண்டிப்பாக சட்டம் இயற்றினால் ஒழிய இதை நிறுவ யாரும் முன்வரமாட்டார்கள்.

நியான் விளக்குகள்: நகரங்களில் உள்ள பல நிறுவனங்கள் நியான் விளக்குகளை பயன்படுத்துகின்றன. இதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் அதிக விலை கொடுத்து அந்நிறுவனங்கள் மின்சாரத்தை வாங்குகின்றன. நியான் விளக்குகளைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிடவேண்டும். அதிக விலை கொடுத்தாலும், சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். டில்லியில் உள்ள விளம்பர பலகைகள் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்த மின்சாரத்தைப் பயன்படுத்தியே விளக்குளை எரிக்கின்றன. அதுபோல், நியான் விளக்குகளுக்கும் இம்முறையை தமிழக அரசு உடனே கொண்டு வரவேண்டும்.

– ல. ஆதிமூலம்


முதன்மைக்கல்வி அலுவலர் திரு. பெ.புண்ணியகோட்டி அவர்கள்.