Category Archives: EDU NEWS

எட்டாம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற தேசிய வருவாய்வழி மற்றும் திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

எட்டாம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற  தேசிய வருவாய்வழி மற்றும் திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்பு உதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித்தொகை வழங்க மாணவர்களை தேர்வு செய்யும் பொருட்டு என்.எம்.எம்.எஸ். தேர்வு அனைத்து வட்டார அளவில் நடைபெறவுள்ளது. தேர்வு தேதி 22–2–2014 இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை 16–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை இத்துறையின் இணையதளம் வழியாக 16–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.
அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2013–2014 கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ –மாணவியர் அவர்தம் பெற்றோரின் குடும்ப வருமானம் ஆண்டொன்றுக்கு ரூ.1,50,000–க்கு மிகாமல் இருக்கவேண்டும்.
இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். தலைமை ஆசிரியர்கள் வெற்று விண்ணப்பங்களை எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களிடம் கொடுத்து பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்தல் வேண்டும்.
புகைப்படம் ஒட்டி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வர்கள் தாம் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50 உடன் 25–12–2013–க்குள் ஒப்படைத்தல் வேண்டும். தலைமை ஆசிரியர் பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் www.tndge.in என்ற இணையதளம் மூலம் 23–ந்தேதி முதல் 31–ந்தேதிக்குள் பதிவு செய்தல் வேண்டும்.
இந்த தகவலை அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ளார்.
Advertisements

வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கான இடமாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்விற்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது.

வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கான இடமாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்விற்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது.அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கி வந்த நிதியை நிறுத்திக் கொண்டதைத் தொடர்ந்து, இத்திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாநில கல்வி திட்டத்திற்கு மாற்ற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
அதனையொட்டி வட்டார வளமைய மேற்பார்வையாளர்களை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.அதன்படி மாநிலம் முழுவதும் 280 வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் வழங்கவும், 248 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணி வழங்குவதற்கான கலந்தாய்வு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடந்தது.

தமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிப்படுத்தவும், படைப்பாக்க செயல்பாடு மற்றும் திட்டங்களை வடிவமைத்து ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் நோக்கத்துடனும், "பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைத்து பயிலும் திட்டத்தை’ (collaborative learning through connecting classrooms) அமல்படுத்த கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர், அமெரிக்காவில் பயிலும் மாணவருடன் “வீடியோகான்பரன்ஸ்’ மூலம் கலந்துரையாடும் திட்டம், பள்ளி கல்வித் துறையில் விரைவில் அமலாக உள்ளது.
தமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிப்படுத்தவும், படைப்பாக்க செயல்பாடு மற்றும் திட்டங்களை வடிவமைத்து ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் நோக்கத்துடனும், “பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைத்து பயிலும் திட்டத்தை’ (collaborative learning through connecting classrooms) அமல்படுத்த கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இணையதளம் மூலம் “பள்ளி விட்டு பள்ளி, மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு’ என்ற அடிப்படையில், கல்வியறிவு, கற்பதற்கான புதிய வழிகளை வேறுபட்ட முறையிலும், மாறுபட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடனும் கற்கும் வாய்ப்பு இதனால் ஏற்படும். தமிழகத்தில் 160 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள், 128 நடுநிலைப் பள்ளிகள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. சோதனை ரீதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 5 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, தொழிற்நுட்ப கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளன. இதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும், இணையதள வசதி, கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப், 3 ஜி டேட்டா கார்டு, வெப் கேமரா, மைக்ரோ போன், ஸ்பீக்கர்கள் வசதி செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்திட்டத்தை துவக்கி வைக்க முதல்வர் ஜெயலலிதாவின் தேதிக்காக, கல்வித்துறையினர் காத்திருக்கின்றனர். இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், தமிழக பள்ளிக் கல்வித்துறை வளர்ச்சியில் முக்கிய மைல் கல்லாக இருக்கும்.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல்வரின், “விஷன் 2023′ திட்டத்தின்கீழ் திட்டம் அமல்படுத்தப்படும். மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், இடைநிலைக் கல்வியில் சிறப்புக் கவனம் செலுத்தவும் பயன்படும். முதற்கட்டமாக, மாநில பள்ளிகளில் “வீடியோகான்பரன்சிங்’ வசதி செய்யப்படும். தொடர்ச்சியாக, வெளிநாட்டு மாணவர்களுடம் நம் மாணவர்கள் கலந்துரையாட விரைவில் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான தீவிர பணிகளில் கல்வித்துறை செயலாளர் சபிதா தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பாடப் புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு, நூலகப் புத்தகங்களை பயன்படுத்தத் தூண்டும். வேறுபட்ட வட்டார மொழிச் சொற்களின் அறிமுகம் பெறவும், மொழியாளுகைத் திறனும் மாணவர்களிடம் வளரும், என்றார்.

துணை கலெக்டர், வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, குரூப் 1 தேர்வு அறிவிப்பு, 17ம் தேதி வெளியாகிறது.

துணை கலெக்டர், வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, குரூப் 1 தேர்வு அறிவிப்பு, 17ம் தேதி வெளியாகிறது.துணை கலெக்டர், 3; வணிக வரித்துறை அலுவலர், 30; ஊரக வளர்ச்சித் துறையில், 30 பணியிடம் உட்பட பல்வேறு துறைகளில், 70 முதல் 80 பணியிடங்கள் வரை, அறிவிப்பில் இடம்பெறும் என, தெரிகிறது. 17ம் தேதிக்குள், மேலும் கூடுதல் காலி பணியிடங்கள், அரசு துறைகளில் இருந்து, தேர்வாணையத்திற்கு வரும் பட்சத்தில், காலி பணியிடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.

நடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

நடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வில் இருந்து, தேர்வு செய்யப்பட உள்ள, 15 ஆயிரம் பேர் நியமனத்துடன் சேர்த்து, இந்த, 3,500 பேரும் தேர்வு செய்யப்படுவர் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், ஒட்டுமொத்தமாக, 18,500 ஆசிரியர், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
கடந்த கல்வி ஆண்டுக்கான காலி பணியிடங்கள் மற்றும் நிரப்பப்படாத பணியிடங்கள் என, 15 ஆயிரம் பேர், டி.இ.டி., தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு மூலம், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பணிகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் (டி.ஆர்.பி.,), மும்முரமாக நடந்து வருகிறது.இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான காலி பணியிடங்கள் குறித்த பட்டியலை, பள்ளி கல்வித்துறையும், தொடக்க கல்வித்துறையும், தமிழக அரசுக்கு அனுப்பியது. பள்ளி கல்வி இயக்குனர், 3,487 பணியிடங்களுக்கும், தொடக்க கல்வி இயக்குனர், 694 இடங்களுக்கும், அரசின் அனுமதி கோரி, பட்டியலை அனுப்பினர். இதை, அரசு ஆய்வு செய்து, 3,525 இடங்களை நிரப்ப அனுமதி அளித்து, அரசாணை பிறப்பித்துள்ளது.
கல்வித்துறை செயலர், சபிதா, 10ம் தேதி வெளியிட்ட அரசாணை விவரம்:நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், 314; ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர், 380 பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்ப, அரசு அனுமதி அளிக்கிறது. மேலும், முதுகலை ஆசிரியர், 809; பட்டதாரி ஆசிரியர், 979; இடைநிலை ஆசிரியர், 887; சிறப்பு ஆசிரியர் (ஓவியம், இசை, தையல்), 156 பணியிடங்கள் என, 3,525 பணியிடங்களை, நடப்பு கல்வி ஆண்டில் நிரப்ப, சம்பந்தப்பட்ட துறைகள், நடவடிக்கை எடுக்கலாம்.இவ்வாறு, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணியாற்றும், வட்டார வள மைய மேற்பார்வையாளர்களில், 71 பேர், முதுகலை ஆசிரியராகவும், 115 வட்டார வள மைய பயிற்றுனர், பட்டதாரி ஆசிரியராகவும், பணிமாற்றம் செய்யப்படுவர் எனவும், அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

01.01.2013 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியலில் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நியமனத்திற்குத் தகுதி வாய்ந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களின் பெயர்களை உரிய இடத்தில் சேர்த்து வரிசை எண்.1 முதல் 248 வரை உள்ள ஒருங்கிணைந்த முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு 14.12.2013 அன்று கலந்தாய்வு மூலம் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.

1. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டுவரும் வட்டார வளமையங்களில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர்களுக்கு அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாறுதல் ஆணை வழங்கப்படவேண்டியுள்ளது. எனவே வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுள் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நிலையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை 14.12.2013 அன்று காலை 9.00 மணி முதல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் வழங்கப்படவுள்ளது.

2. 01.01.2013 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியலில் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நியமனத்திற்குத் தகுதி வாய்ந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களின் பெயர்களை உரிய இடத்தில் சேர்த்து வரிசை எண்.1 முதல் 248 வரை உள்ள ஒருங்கிணைந்த முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு 14.12.2013 அன்று கலந்தாய்வு மூலம் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.

IGNOU -M.Ed., நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது | M. Ed. Entrance Test, 2013 Results.

மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி அதிகரிப்பு .

மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி அதிகரிப்பு மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி மாதம் ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், நிறைவுரை ஆற்றிய முதல்வர் ஜெயலலிதா 312 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் சில: 
 * மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படித்தொகை மாதம் ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிப்பு. 
* அரசு ஊழியர்களுக்கான குளிர்காலபடி மாதம் 500 ரூபாயாக உயர்த்தப்படும்.

பொது தேர்வுப் பணியில், அரசு நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியரையும் சேர்க்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

பொது தேர்வுப் பணியில், அரசு நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியரையும் சேர்க்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. 
பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுப் பணியில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி, முதுகலை ஆசிரியர் மட்டும் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி ஆசிரியர் சேர்க்கப்படுவதில்லை. 
இந்த நிலையை மாற்றி, இரு துறைகளிலும் உள்ள பட்டதாரி ஆசிரியருக்கும், தேர்வுப்பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு போன்ற அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், வரும் பொது தேர்வில், நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியரையும், தேர்வுப் பணியில் ஈடுபடுத்த, தேர்வுத் துறை முடிவு செய்திருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

BRC-வட்டார வளமையம் | அரசாணை எண் 249 (பள்ளிக்கல்வித் துறை) நாள் 10.12.2013-சொல்வது என்ன?

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணியாற்றி வந்த வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் 324 பேர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாகவும்; 71 பேர் முதுகலை ஆசிரியராகவும்; 115 ஆசிரியர் பயிற்றுநர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிமாறுதல் அளிக்க உள்ளதாகவும், மேலும் வட்டார வளமையத்தினை மூத்த ஆசிரியர் பயிற்றுனர் வழிநடத்துவார். , ஒரு ஆசிரியர் பயிற்றுனருக்கு 10 பள்ளிகளை ஒதுக்கீடு செய்வது எனவும், அரசு ஆணை எண் 249 (பள்ளிக்கல்வித் துறை) நாள் 10.12.2013- இன் படி தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்த வட்டாரங்கள் கூறுகிறது.

வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுள் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நிலையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை 14.12.2013 அன்று காலை 9.00 மணி முதல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் வழங்கப்படவுள்ளது.

1. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டுவரும் வட்டார வளமையங்களில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர்களுக்கு அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாறுதல் ஆணை வழங்கப்படவேண்டியுள்ளது. எனவே வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுள் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நிலையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை 14.12.2013 அன்று காலை 9.00 மணி முதல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் வழங்கப்படவுள்ளது.

2. 01.01.2013 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியலில் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நியமனத்திற்குத் தகுதி வாய்ந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களின் பெயர்களை உரிய இடத்தில் சேர்த்து வரிசை எண்.1 முதல் 248 வரை உள்ள ஒருங்கிணைந்த முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு 14.12.2013 அன்று கலந்தாய்வு மூலம் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.

TEACHERS PROMOTION PANEL – 2013-2014

தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

காவல்துறையின் பணிச் சுமையைக் குறைத்து, சட்டம் ஒழுங்கையும் சிறப்பாகப் பராமரிக்கும் வகையிலும் காவல்துறைக்கு துணையாக தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார்.

இளைஞர்களைக்கொண்டு மாவட்ட எஸ்.பி. மற்றும் காவல் ஆணையர்களால் உருவாக்கப்படும் இந்தப் படை, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துதல், கூட்ட நெரிசல்களை சரிசெய்தல் போன்ற வேலைகளோடு இரவு ரோந்துப் பணியிலும் ஈடுபடுத்த தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளது.

இந்தப் படையில் இவ்வாண்டு பத்தாயிரம் பேரையும், அடுத்த ஆண்டு 15 ஆயிரம் பேரையும் சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த நவம்பர் 10-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழ்நாடு சீருடையாளர் பணியாளர் தேர்வு குழுமம் நடத்தியது.

இந்தத் தேர்வு 31 மாவட்டங்கள், 6 மாநகரங்கள் ஆகியவற்றில் மொத்தம் 94 மையங்களில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 120 பேர் எழுதினர். இத் தேர்வின் முடிவு தமிழ்நாடு சீருடையாளர் பணியாளர் குழுமத்தின் http://www.tnpolice.gov.in என்ற இணையத்தளத்திலும்,ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ர்ப்ண்ஸ்ரீங்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையத்தளத்திலும் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இந்த இணையத்தளத்தைப் பார்த்து தேர்வின் முடிவைத் தெரிந்துக் கொள்ளலாம்.

இத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உடற்கூறு அளத்தல், உடற்திறன் போட்டி, அசல் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவை நடைபெறும்.

இதற்கான அழைப்புக் கடிதம் இம் மாதம் 26ம் தேதிக்குள் கிடைக்கப்பெறாதவர்கள், அவர்கள் விண்ணப்பித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துணை ஆணையாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்று அழைப்பு கடிதத்தின் நகலை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழும அலுவலகத்தை 044-28413658 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.

இத் தகவலை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழும இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த துறைகள் சார்பில் எம்.ஃபில். மற்றும் ஆராய்ச்சி (பிஎச்.டி.) படிப்புகள் வழங்கப்படுகின்றன.

தெற்காசியாவிலேயே இருக்கும் ஒரே கல்வியியல் பல்கலைக்கழகம் என்ற பெருமை கொண்டது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம். சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தின் கீழ், 674 கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன.

கல்லூரிகளுக்கு இணைப்பு அந்தஸ்து வழங்குவது, ஆண்டுக்கு ஆண்டு இணைப்பு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து அந்த இணைப்பு அந்தஸ்தைப் புதுப்பிப்பது, பாடத் திட்டங்களை வகுப்பது, இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்குத் தேர்வுகளை நடத்தி, முடிவுகளை அறிவிப்பது என்பன உள்ளிட்ட பணிகளை மட்டுமே இத்தனை ஆண்டுகளாக இந்தப் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் இப்போது முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் எம்.ஃபில்., மற்றும் பிஎச்.டி. படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் புதன்கிழமை அளித்த பேட்டி:

பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் கலை அறிவியல் துறை, மதிப்பு சார்ந்த கல்வித் துறை, கல்வி உளவியல் துறை, கல்வி தொழில்நுட்பத் துறை, பாடத் திட்டம் தயாரிப்பு மற்றும் நிர்வாகத் துறை, கல்வித் திட்டம் மற்றும் நிர்வாகத் துறை என 6 துறைகள் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளன.

இந்த துறைகள் சார்பில் வரும் 2014 ஜனவரி முதல் பிஎச்.டி., எம்.ஃபில். படிப்புகள் அளிக்கப்பட உள்ளன. இதற்கு பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. எம்.ஃபில். படிப்பில் அதிகபட்சமாக 20 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். பிஎச்.டி.-யை பொருத்தவரை ஒரு பேராசிரியர் 8 பேருக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்.

இந்த படிப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பரில் மாணவர் சேர்க்கைக்கான விளம்பரம் கொடுக்கப்பட்டு ஜூலை மற்றும் ஜனவரியில் வகுப்புகள் தொடங்கப்படும்.

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள துறைகளில் 5 துறைகளுக்கு பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஒவ்வொரு துறைக்கும் 2 இணைப் பேராசிரியர்கள், 4 உதவி பேராசிரியர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார் அவர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இத் தேர்வில் பிழையான கேள்விகள் இடம் பெற்றிருந்ததால் கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்த எஸ்.விஜயலெட்சுமி, ஜே.ஆன்டனி கிளாரா ஆகியோருக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 
ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை 21 இல் நடத்திய முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில், பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன. பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தனர். பிழையான 40 கேள்விகளுக்கும் முழு மதிப்பெண் வழங்குவது அல்லது பிழையான கேள்விகளை நீக்கிவிட்டு 110 மதிப்பெண்களுக்கு மட்டும் மதிப்பீடு செய்வது என இரு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும், இதை தனி நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ், ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமாகிறது. தகுதித் தேர்வின் மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், மறுதேர்வு நடத்துவதால் இந்தப் பணி மேலும் தாமதமாகும். 31 ஆயிரத்து 983 பேர் எழுதிய தமிழ்ப் பாடத் தேர்வை ரத்து செய்துவிட்டு, மீண்டும் தேர்வு நடத்துவது தேவையற்ற பெரும் செலவினத்தை ஏற்படுத்தும். அதோடு, முந்தைய தேர்வை நன்றாக எழுதியவர்கள், மறுதேர்வில் அதே அளவுக்கு சிறப்பாகச் செய்ய முடியாமல் போகலாம். மறுதேர்வை சில தேர்வர்கள் எழுத முடியாமலும் போகலாம். இதனால் அவர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். ஆகவே, மறுதேர்வு உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டிருந்தனர். 
அதையடுத்து எம்.ஜெய்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதித்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுதாகர், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை வழக்குரைஞர் சோமையாஜி ஆஜராகி, பி வரிசை கேள்வித்தாளில் ஏற்பட்ட பிழை, அச்சுப்பிழை தான், இதனால் கேள்வியின் அர்த்தம் எவ்விதத்திலும் மாறுபடாது. இத்தேர்வை எழுதும் முதுகலைப் பட்டதாரிகள், எளிதில் புரிந்து கொள்ள முடியும். மறுதேர்வு நடத்துவது அரசுக்கு தேவையற்ற நிதிச்சுமையை ஏற்படுத்தும். ஆகவே, தேர்வு முடிவை வெளியிட நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார். அதையடுத்து மனுதாரர்கள் இருவருக்கும் 21 மதிப்பெண்களை வழங்க வேண்டும். மனுதாரர்களுக்கு இரு பணியிடங்களை காலியாக வைத்திருக்க வேண்டும். தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என உத்தரவிட்டனர். 
மேலும், தமிழ் பாடத்துக்கான திருத்தப்பட்ட ரேங்க் பட்டியலைத் தயாரித்து, டிசம்பர் 20 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

கல்லூரிகளில் சமச்சீர் கல்வியை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கல்லூரிகளில் சமச்சீர் கல்வியை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வந்த 4 கல்வி வாரியத்தை கலைத்து விட்டு பொது கல்வி வாரியம் 2008ல் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு தமிழகத்தில் சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்தது. இந்த முறை வரவேற்பு பெற்றது.

தமிழகத்தில் உள்ள 16 பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு பாடத்திட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளது. இதனால் சில பட்டங்கள் வேலைவாய்ப்புக்கு ஏற்றதல்ல என்று நிராகரிக்கப்படுகிறது.

சில பட்ட படிப்புகள் இணையில்லை என்றும் நிராகரிக்கப்படுகிறது.இதனால் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுபவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதை தொடர்ந்து ஒரே சமச்சீரான கல்வியை நடைமுறைபடுத்த அரசு சார்பில் ஆலோசிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கூட்டம் நடந் தது. அதில், கல்லூரிகளில் சமச்சீர் கல்வி கொண்டுவருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதற்கு பெரும்பாலான துணை வேந்தர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சமச்சீர் கல்வி தொடர்பாக கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்து அறிய உயர் கல்வி துறை திட்டமிட்டுள்ளது. எனவே விரைவில் சமச்சீர் கல்வியை கொண்டுவருவதற்கான அறிவிப்பை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனமழை காரணமாக, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று டிசம்பர் 13 விடுமுறை

கனமழை காரணமாக, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று டிசம்பர் 13 விடுமுறை அளிக்கப்படுவதாக, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். எனினும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகளை தபால்துறை மூலம் அனுப்பாமல் தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு கொண்டு செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகளை தபால்துறை மூலம் அனுப்பாமல் தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு கொண்டு செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகளை தபால்துறை மூலம் அனுப்பாமல் தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு கொண்டு செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய நடைமுறை, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள பொதுத்தேர்வுகளில் பின்பற்றப்படும்

அரசுப் பொதுத் தேர்வுகளான பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கும். ஒவ்வொரு தேர்வும் முடிந்ததும் மாணவர்களின் விடைத்தாள்கள் சீல் வைக்கப்பட்டு தபால்துறை மூலம் மதிப்பீட்டு மையங்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம். தபால்துறையின் பல்வேறு விதமான பார்சல்களுடன் விடைத்தாள் கட்டுகளும் பயணம் செய்யும்.

இவ்வாறு தபாலில் அனுப்பும்போது விடைத்தாள் கட்டுகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. கடந்த ஆண்டு நடந்த 2 சம்பவங்கள் விடைத்தாள் கட்டுகளின் பாதுகாப்பின்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் தபாலில் அனுப்பப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகள் சில மாயமாகிவிட்டன. இதேபோல், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஆர்.எம்.எஸ். மூலம் அனுப்பிய விடைத்தாள் கட்டுகள், ரயிலில் இருந்து கீழே விழுந்து சேதமடைந்தன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான விடைத்தாள் கட்டுகள் தேர்வுத்துறையைப் போல் இல்லாமல் தனி வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் மதிப்பீட்டு மையத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு நிகழ்ந்த சம்பவங்களை மனதில் கொண்டும், எதிர்காலத்தில் இதுபோன்று தவறுகள் நடந்துவிடக் கூடாது என்பதாலும் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்களை தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு எடுத்துச் செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

இதன்படி, விடைத்தாள் கட்டுகளை ஒவ்வொரு மையத்துக்கும் சென்று சேகரித்து பாதுகாப்புடன் வாகனங்களில் கொண்டுவர மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி சார்பில் ஒரு காப்பாளரும் (கஸ்டோடியன்), தேர்வுத்துறை சார்பில் பொறுப்பு அதிகாரியும் நியமிக்கப்படுவர். பல்வேறு தேர்வு மையங்களில் விடைத்தாள்களை சேகரித்து ஒரு குறிப்பிட்ட மையத்துக்கு கொண்டு வந்துவிடுவார்கள். அங்கிருந்து தனி வாகனங்களில் சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு மையங்களுக்கு அனுப்பப்படும்.

பழைய முறையில், விடைத்தாள் கட்டுகளை தபால் அலுவலகத்தில் புக்கிங் செய்வதை வைத்து அந்தக் கட்டுகள் எந்த மதிப்பீட்டு மையத்துக்கு செல்கின்றன என்பது தெரிந்துவிடும்.

ஆனால், புதிய முறையில் விடைத்தாள் கட்டுகள் அனுப்பப்படும் மதிப்பீட்டு மையம் எளிதில் வெளியே தெரியாது. விடைத்தாள் கட்டுகளின் பாதுகாப்புக்கான இந்த புதிய நடைமுறையை அடுத்த ஆண்டு மார்ச் பொதுத்தேர்வு முதல் அமல்படுத்த தேர்வுத்து றை முடிவு செய்துள்ளது.

“நெட்” தகுதித் தேர்வுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்.

கலை பட்டதாரிகளுக்கான நெட் தகுதித் தேர்வை பல்கலைக் கழக மானியக்குழு (யு.ஜி.சி.) நடத்துகிறது. இதே போல் அறிவியல், கணித பட்டதாரி களுக்கான நெட் தகுதித் தேர்வு சி.எஸ்.ஐ.ஆர். எனப்படும் மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு வருகிற 22-ம் தேதி சென்னை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த வர்களுக்கு ஆன்லைனிலேயே ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது. ஆன்லைன் ஹால்டிக்கெட்டை http://www.csirhrdg.res.in என்ற இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் ஹால்டிக்கெட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படம் தெளிவாக இல்லாவிட்டால். அத்தகைய விண்ணப்பதாரர்கள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்ப டங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைஆகியவற்றை தேர்வு மையத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்று சி.எஸ்.ஐ.ஆர். அறிவித்துள்ளது.

மத்திய அரசு நிதிக்குறைப்பு காரணமாக, மேற்பார்வையாளர் பணியிடங்களை நீக்குவது உட்பட சில மாற்றங்கள் கொண்டுவர தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

மத்திய அரசின் நிதிக் குறைப்பு நடவடிக்கையால், தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) வட்டார வள மைய மேற்பார்வையாளர் பணியிடங்கள் பறிபோகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இத்திட்டம் 2002ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இதில், இயக்குனர், இணை இயக்குனர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. ஒன்று முதல் 14 வயது வரையான குழந்தைகளுக்கு தரமான இலவசக் கல்வி கிடைக்கச் செய்வது தான் இத்திட்டத்தின் நோக்கம். இதுதவிர பள்ளிகள் கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது, கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுதவிர, திட்டத்தின் உட்பிரிவான உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ் அரசு பகல்நேர மையங்கள், ஆதார மையங்கள் செயல்படுகின்றன. இதன்மூலம், காது கேளாத, மனவளர்ச்சி குன்றிய, கை, கால் செயலிழந்த, மூளை முடக்கு வாதத்தால் பாதித்த, ஆட்டிசம் மற்றும் கற்றலின் குறைபாடால் பாதிப்பு என எட்டு வகை பாதிப்புடைய ஒன்று முதல் 18 வயது வரையான இயலாக் குழந்தைகளும் லட்சக்கணக்கில் பயன்பெறுகின்றனர். இத்திட்டங்களை ஆய்வு செய்ய ஒவ்வொரு மையங்களிலும், உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அந்தஸ்தில், வட்டார மேற்பார்வையாளர்கள் உள்ளனர். இத்திட்டத்தின் முக்கியப் பணியிடமாக இது கருதப்படுகிறது. மத்திய அரசு நிதிக்குறைப்பு காரணமாக, மேற்பார்வையாளர் பணியிடங்களை நீக்குவது உட்பட சில மாற்றங்கள் கொண்டுவர தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

இதற்கிடையே மேற்பார்வையாளர்களை, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக பணி மாற்றம் செய்வது தொடர்பாக (அரசாணை எண்: 212/10.12.2013) உத்தரவு நேற்று வெளியாகியுள்ளதாக கல்வித் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. திட்ட உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளதால் சில மாற்றங்களை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் பணியிடங்களை திட்டத்தில் இருந்து நீக்குவது தொடர்பான எவ்வித முடிவும் இதுவரை மேற்கொள்ளவில்லை. அதேநேரம், சீனியாரிட்டி அடிப்படையில், ஆண்டுதோறும், ஆசிரியர் பயிற்றுனர்கள் 500 பேர், “ரெகுலர்’ பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக பணிமாற்றம் செய்யப்படும் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரிக்க வாய்ப்புள்ளது, என்றார்.

இத்திட்ட மேற்பார்வையாளர்களை “ரெகுலர்’ பள்ளிகளுக்கு பணிமாற்றம் செய்தால், உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பணி ஒதுக்க வேண்டும். அப்படி ஒதுக்கும்பட்சத்தில், ஏற்கனவே, சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு “பேனலில்’ உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படும், என உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் சாமிசத்தியமூர்த்தி கூறுகையில், மாநிலம் முழுவதும் 500 உயர்நிலை தலைமையாசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இதை, “பேனலில்’ உள்ள தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதன் மூலம் நிரப்ப வேண்டும். எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர் பணியிடங்களை “ரெகுலர்’ பள்ளிகளுக்கு மாற்றம் செய்யக் கூடாது. இதுகுறித்து, கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகனை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம், என்றார்.

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு – முழு விவரம்

பள்ளிக்கூட வளாகத்துக்குள் வெளி ஆட்கள் நுழைய தடை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு பாதுகாப்பு அவசியம் தேவை என்றும் வெளியாட்கள் சம்பந்தம் இல்லாமல் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கக்கூடாது என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளாதாக அறியப்படுகிறது. ஒரு சில பள்ளிகளில் பொருட்கள் காணாமல் போவதாகவும், பள்ளிக்கூட வளாகத்திற்குள் வெளியாட்கள் சம்பந்தம் இல்லாமல் நடமாட்டம் இருப்பதாகவும், பள்ளிகளுக்குள் அத்துமீறி செல்வதாகவும், அவர்களால் பள்ளிக்கூட பொருட்கள் சேதப்படுத்தப்படுவதாகவும் என்னுடைய நேரடி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே இத்தகைய நடவடிக்கையை தலைமை ஆசிரியர்கள் விழிப்புடன் இருந்து தவிர்க்கவேண்டும். இது தலைமை ஆசிரியர்களின் கடமை. பள்ளிக்கூட மாணவர்–மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு தேவை. மாணவர்கள் அரையாண்டு மற்றும் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். மாணவர்களின் கல்வி மற்றும் தேர்வு பாதிக்காத வகையிலும், கற்றல் மற்றும் கற்பித்தல் பணிக்கு இடையூறு ஏதும் நேரிடாத வகையிலும் பாதுகாப்புஅளிக்கப்படவேண்டும். அதுமட்டுமல்லாமல் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்ட பொருட்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் பள்ளிக்கூட வளாகத்தினுள் பள்ளியைச்சாராத வெளிநபர்கள் வந்து செல்லும் நிலை கண்டிப்பாக தவிர்க்கப்படவேண்டும். பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். பள்ளிக்கூட பொருட்களுக்கு பாதுகாப்பு குறைவு எந்தக்காரணம்கொண்டும் வரக்கூடாது. இந்த அறிவுரைகளை அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டு அதன்படி நடக்கவேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என அறியப்படுகிறது.

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு – முழு விவரம்

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம்தேதி நடைபெற்றது. 2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். இதில், அதிகபட்சமாக, தமிழ் பாட தேர்வை, 33,237 பேர் எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வுப் பட்டியலை வெளியிட,டி.ஆர்.பி., தயாரான நிலையில், மதுரை புதூர் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவில்,”முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், “பி’ வரிசை வினாத்தாள்களில், 47 கேள்விகளில் அச்சுப்பிழைகள் காரணமாக,அவற்றுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும்; தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்றார். 
இதேபோல், திருச்சி, அந்தோணி கிளாரா, மற்றொரு மனு செய்தார். அக்., 1ல், நீதிபதி எஸ்.நாகமுத்து பிறப்பித்த உத்தரவில், “இதற்கு, ஒரே தீர்வு, மறு தேர்வு தான். ஜூலை 21ல் நடந்த தமிழாசிரியர் நியமன தேர்வு ரத்து செய்யப்படுகிறது. ஆறு வாரங்களுக்குள், டி.ஆர்.பி., மறு தேர்வு நடத்த வேண்டும்’ என்றார். இதை எதிர்த்து, டி.ஆர்.பி., செயலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு: “பி’ வரிசை வினாத்தாள், 8,002 பேருக்கு வினியோகிக்கப்பட்டது. இதில், பிழையான வினாக்கள் இடம்பெற்றதாக, இருவர் மனு செய்துள்ளனர். அச்சுப்பிழையால் வினாக்கள், விடைகளில் பொருள் மாறவில்லை; புரியும் வகையில் உள்ளன. “பி’ வரிசை வினாத்தாள்படி தேர்வு எழுதியவர்கள், அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். மறுதேர்வு நடத்தினால்,காலவிரயம், அரசுக்கு கூடுதல் செலவு, பணிச்சுமை ஏற்படும். ஆசிரியர்களை உடன் நியமிக்க வேண்டியுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டிருந்தார் முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று 11.12.13 புதன்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்.விசாரணைக்கு வந்தபோது, அரசின் தலைமை வழக்குரைஞர் சோமையாஜி ஆஜராகி மறுதேர்வு நடத்தினால்,காலவிரயம், அரசுக்கு கூடுதல் செலவு, பணிச்சுமை ஏற்படும். ஆசிரியர்களை உடன் நியமிக்க வேண்டியுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் வாதிட்டார் நீதியரசர்கள் முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் தேர்வு முடிவினை வெளியிட அனுமதி அளித்தனர். 
அதே சமயத்தில் வழக்கு தொடுத்த விஜயலட்சுமி மற்றும் ஆண்டனி கிளாரா ஆகியோருக்கு அவர்கள் தங்கள் மனுவில் கோரியுள்ளபடி கருணைமதிப்பெண் வழங்கவும் இரு பணியிடங்களை ஒதுக்கிவைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து.வழக்கினை வரும் 20 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே டிஆர்பி விரைவில் தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவினை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து வகுப்புகள் ஜனவரி 2–ந்தேதி தொடங்கும் அன்று மாணவர்களுக்கு 3–வது பருவத்திற்கு உரிய விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து வகுப்புகள் ஜனவரி 2–ந்தேதி தொடங்கும் அன்று மாணவர்களுக்கு 3–வது பருவத்திற்கு உரிய விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

பிளஸ்–2 அரையாண்டு தேர்வு 23–ந்தேதி முடிவடைகிறது. அதுபோல எஸ்.எஸ்.எல்.சி. அரையாண்டு தேர்வு 12–ந்தேதி தொடங்கி 23–ந்தேதி முடிவடைகிறது.இந்த இரு தேர்வுகளும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் பொதுவானவை ஆகும்.

தேர்வுகள் முடிவடைந்ததும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் ஜனவரி 2–ந்தேதி திறக்கப்படுகின்றன. பள்ளிக்கூடம் திறக்கும் அன்றையதினம் 1–வது வகுப்பு முதல் 9–வது வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் 3–வது பருவத்திற்கு உரிய விலை இல்லா பாடப்புத்தகங்கள், விலை இல்லா நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. மொத்தத்தில் 2 கோடியே 40 லட்சம் பாடப்புத்தகங்கள் கொடுக்கப்பட இருக்கின்றன.

இதற்காக பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுவிட்டன. அனைத்து பாடப்புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு டிசம்பர் 20–ந்தேதிக்குள் அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் 66 குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு புத்தகங்களை விலைக்கு வாங்குவதற்கு வசதியாகவும் அவர்களுக்கு தனியாக குடோன்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்கள் அளவுக்கு அதிகமாக அச்சிடப்பட்டு வருகிறது.இவ்வாறு வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.
 

ஆசிரியர் பாடம் நடத்துவதை வீடியோ எடுத்து அதை சி.டி.யாக தயாரித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வழங்க அண்ணாபல்கலைக்கழகம் ஏற்பாடு செய்து வருகிறது.

ஆசிரியர் பாடம் நடத்துவதை வீடியோ எடுத்து அதை சி.டி.யாக தயாரித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வழங்க அண்ணாபல்கலைக்கழகம் ஏற்பாடு செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் அண்ணாபல்கலைக்கழக கட்டுப்பாட்டில் அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் 600 உள்ளன. இந்த கல்லூரிகளில் சில கல்லூரிகளில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் அந்தந்த துறையில் நிபுணர்கள் இல்லை. எனவே அண்ணாபல்கலைக்கழகத்தில் உள்ள ஆசிரியர் மேம்பாட்டு துறை துணைவேந்தர் பேராசிரியர் ராஜாராம் உத்தரவுப்படி ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தஉள்ளது.

அதாவது இந்தியா ழுழுவதும் உள்ள ஐ.ஐ.டி. மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் நடத்தப்படும் பாடங்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்துவதுபோல தனியாக வீடியோ மற்றும் ஆடியோ தயாரித்து என்.டி.பி.இ.எல். நிறுவனம் வழங்கி உள்ளது.

அது பொதுவாக உள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டத்திற்கு ஏற்ப அதில் தேவையானதை மட்டும் பிரித்து எடுக்கப்பட்டு வருகிறது. சிவில் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் ஆகிய பாடங்களுக்கு மட்டும் அனைத்து செமஸ்டர்களுக்கும் தேவையான பாடங்களில் ஆசிரியர் பாடம் நடத்துவதை வீடியோ மற்றும் ஆடியோ பதிவுசெய்து சி.டி.தயாரித்து வருகிறது. இந்த சி.டி. வருகிற மார்ச் மாதத்திற்குள் தயாராகி விடும். பின்னர் அவை அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். அவற்றை அந்த கல்லூரிகள் மாணவர்களுக்கு காப்பி எடுத்து கொடுக்கும்.

இந்த சி.டி.யில் உள்ளவற்றை சாதாரண கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துக்கொண்டு மாணவர்கள் படிக்கலாம். இணையதள வசதி தேவையில்லை. இதனால் வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது புரியாவிட்டாலும் இந்த சி.டி.யில் உள்ளதை அடிக்கடி போட்டு பார்த்து படித்தால் நன்றாக விளங்கும். புரியாததும் புரியும்.

கல்லூரிக்கு போகாத நாட்களிலும் கல்லூரிக்கு போகவில்லையே என்ற கவலை வேண்டாம். எனவே இந்த சி.டி. மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். இதற்கான ஏற்பாடுகளை அண்ணாபல்கலைக்கழக ஆசிரியர் மேம்பாட்டு துறை இயக்குனர் மோகன், கூடுதல் இயக்குனர் ஸ்ரீதரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்

உரிய காரணம் இல்லாமல் ஆசிரியர்களை 2 மாதத்துக்கு மேல் இடைநீக்கம் செய்ய முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

உரிய காரணம் இல்லாமல் ஆசிரியர்களை 2 மாதத்துக்கு மேல் இடைநீக்கம் செய்ய முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சம்புரம் அருகே உள்ள கோயக்கல்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பெனிடிக்ட் கிரிஸ்டல். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–

நான், 1984–ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் விழுந்தையம்பழத்தில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளியான ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். 1991–ம் ஆண்டு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றேன். இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் என் மீது 35 குற்றச்சாட்டுகளை கூறி 29.6.2000 அன்று பணி நீக்கம்(டிஸ்மிஸ்) செய்தது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

பணி நீக்க உத்தரவை 11.12.2009 அன்று ரத்து செய்த ஐகோர்ட்டு, என் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விதிகளுக்கு உட்பட்டு புதிதாக விசாரணை நடத்த பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. என்னை பணி நீக்கம் செய்த உத்தரவை ஐகோர்ட்டு ரத்து செய்த போதிலும் பள்ளி நிர்வாகம் என்னை பணியில் சேர்த்துக்கொள்ளவில்லை.

இதனால், ஐகோர்ட்டில் அப்பீல் செய்தேன். அந்த அப்பீல் மனு விசாரணைக்கு வந்த போது, 8.10.2012 அன்று என்னை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்துள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். என்னை தலைமை ஆசிரியராக பணியாற்ற அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஈ.வி.என்.சிவா ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:–

‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்கு முறை சட்டப்படி 2 மாதத்துக்குள் மேல் உரிய காரணம் இல்லாமல் ஆசிரியர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய முடியாது. உரிய காரணத்தை தெரிவித்து பணி இடைநீக்க காலத்தை நீட்டிக்க அதிகாரம் உள்ளது. மனுதாரரை பொறுத்தமட்டில் அவரது பணி இடைநீக்க காலத்தை நீட்டிக்கவில்லை. 8.10.2012 அன்று மனுதாரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது பணி இடைநீக்க காலத்தை நீட்டிக்காததால் 8.12.2012 அன்றுடன் அவரது பணி இடைநீக்கம் முடிவு பெறுகிறது. எனவே, மனுதாரரை தலைமை ஆசிரியராக பணியாற்ற பள்ளி நிர்வாகம் உடனடியாக அனுமதிக்க வேண்டும். 9.12.2012 முதல் அவருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும்.’இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

குரூப்–4 தேர்வு முடிவு ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

குரூப்–4 தேர்வு முடிவு ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 531 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 1738 தட்டச்சர் பணியிடங்கள், 242 சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் உள்பட மொத்தம் 5 ஆயிரத்து 556 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக குரூப்–4 தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் 25–ந்தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 12 லட்சத்து 21 ஆயிரத்து 167 பேர் எழுதினார்கள்.

குரூப்– 4 தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீத கிருஷ்ணனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–

குரூப்–4 தேர்வை நிறைய மாணவர்கள் எழுதியதால் அதை வெளியிடுவதில் சற்று தாமதம் ஏற்படுகிறது. அதில் பெரும்பாலான வேலைகள் முடிந்துவிட்டன. இருப்பினும் அனைத்தையும் மீண்டும் சரிபார்க்கும் பணி உள்ளது. எனவே இந்த மாத இறுதி அல்லது ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது.

மேலும் காலியாக கிடக்கும் குரூப்– 1 அதிகாரிகளின் பணியிடங்களை நிரப்ப புதிதாக குரூப்–1 தேர்வு நடத்த உள்ளோம். அதற்கான விவரங்கள் துறைவாரியாக சேகரிப்பட்டு வருகிறது. பெரும்பாலான துறைகளில் இருந்து காலிப்பணியிடங்கள் விவரம் வந்துவிட்டது. சில துகைளில் இருந்து மட்டும் இன்னும் வரவில்லை. எப்படியும் குரூப்–1 தேர்வுக்கான விவரங்கள் அடங்கிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.குரூப்–2 தேர்வும் நடத்தப்பட்டு அதன் விடைத்தாள்களும் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

அரசு ஊழியரின் மகளுக்கான குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக, தமிழக அரசு தெளிவுபடுத்தி உள்ளது.

அரசு ஊழியரின் மகளுக்கான குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக, தமிழக அரசு தெளிவுபடுத்தி உள்ளது. தமிழக அரசு ஊழியர்களின், திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும், குடும்ப ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக, 2011ல் அரசாணை வெளியிடப்பட்டது. அதில், யார் யார் தகுதியுடையவர் என்பதை தெளிவுபடுத்தும்படி, தமிழக அரசிற்கு, சென்னை மாநகராட்சி கமிஷனர் கடிதம் எழுதினார். இந்த கடிதத்தின் அடிப்படையில், அரசு ஊழியர்களின் திருமணமாகாத மகள், அரசாணை வெளியிடப்பட்ட நாளிற்கு முன், 25 வயது முடிவடைந்து, குடும்ப ஓய்வூதியம் நிறுத்தப்பட்ட நபர்களுக்கு, அரசாணை வெளியிடப்பட்ட நாள் முதல் வழங்கலாம் என, கூறப்பட்டுள்ளது. மேலும், அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு, நிபந்தனைக்கு உட்பட்டு, வழங்க வேண்டும் என்பது உட்பட, ஏழு இனங்களுக்கு அரசு விளக்கம் அளித்து, அதற்கான அரசாணை நேற்று, நிதித்துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது.

பொது தேர்வு எழுத உள்ள, 17 லட்சம் பேரில், 90 சதவீத மாணவ, மாணவியர், தமிழ் வழியில் படிப்பதால், அவர்கள் அனைவருக்கும், தேர்வு கட்டணத்தில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பொது தேர்வு எழுத உள்ள, 17 லட்சம் பேரில், 90 சதவீத மாணவ, மாணவியர், தமிழ் வழியில் படிப்பதால், அவர்கள் அனைவருக்கும், தேர்வு கட்டணத்தில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
 மார்ச், ஏப்ரலில், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வை, 9 லட்சம் பேரும், பிளஸ் 2 தேர்வை, 8 லட்சம் பேரும் எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த, சரியான புள்ளி விவரம், இம்மாத இறுதியிலோ அல்லது, ஜனவரி, முதல் வாரத்தில் தெரிந்துவிடும். எனினும், 17 லட்சம் பேர், கண்டிப்பாக எழுதுவர். இதில், 90 சதவீதம் பேர், தமிழ் வழியில் படித்து, தேர்வை எழுத உள்ளனர். அதன்படி, 15.3 லட்சம் மாணவர், தமிழ் வழியில் படிப்பவர்களாக இருப்பர் என்றும், இவர்கள் அனைவருக்கும், தேர்வு கட்டணத்தில் இருந்து, விலக்கு அளிக்கப்படுகிறது என்றும், தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கட்டணத்தை, தமிழக அரசு, தேர்வுத் துறைக்கு வழங்கி விடுகிறது. பிளஸ் 2 தேர்வர், 225 ரூபாயும், பத்தாம் வகுப்பு தேர்வர், 125 ரூபாயும், தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும். ஆங்கில வழியில் படிக்கும் மாணவ, மாணவியர் மட்டும், இந்த கட்டணத்தை செலுத்தி உள்ளனர். மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆங்கில வழியில் படிக்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை, 1.5 லட்சத்திற்குள் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு, முப்பருவ முறை அமல்படுத்துவது தொடர்பாக, இன்னும் இறுதி முடிவு எடுக்காததால், ஆசிரியர், மாணவர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை அமலில் உள்ளது. பாட திட்டத்தை மூன்றாக பிரித்து, ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனியாக, அக, புற மதிப்பீட்டின்படி தேர்ச்சி கணக்கிடப்படுகிறது. அக மதிப்பீட்டின் படி, மாணவரின் தனித்திறனுக்கு, 40 மதிப்பெண்ணும், எழுத்து தேர்வுக்கு, 60 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. இதில், 91 முதல் 100 வரை மதிப்பெண் பெற்றால், ‘கிரேடு’ ஏ-1, 81 முதல் 90 வரை, ஏ-2; 71 முதல் 80 வரை பி-1; 61 முதல் 70 வரை, பி-2; 51 முதல் 60 வரை, சி-1; 41 முதல் 50 வரை, சி-2; 20 மதிப்பெண்ணுக்கு கீழ் எடுக்கும் மாணவர்களுக்கு, இ-2 என, ‘கிரேடு’ வழங்கப்படுகிறது. படிப்படியாக, 10ம் வகுப்பிற்கும், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப் படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், 10ம் வகுப்பிற்கு, முப்பருவ முறையை அறிமுகப்படுத்துவதில், பல குழப்பங்கள், தேர்வு குறித்த சிக்கல்கள் இருப்பதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால், பள்ளி கல்வித்துறை சார்பில், பல்வேறு கட்ட ஆய்வுகள், ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு, அரசு ஒப்புதலுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. முப்பருவ முறை அமல்படுத்தப்பட்டாலும், பொதுத்தேர்வு முறையிலேயே, தேர்வு நடத்த வேண்டும் என, பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2013-14 ம் கல்வியாண்டின் துவக்கத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 5 ஆயிரம் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப, அடுத்த வாரம் கவுன்சிலிங் அறிவிக்கப்படும், என கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். தமிழக அரசு மேல்நிலைப்பள்ளிகளில்அனைத்து பாடப்பிரிவிலும், 5 ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 2013-14 கல்வியாண்டின்பொதுத்தேர்வுக்கு முன்பாகவே காலியிடங்களை நிரப்பபள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே,முதுகலை ஆசிரியர்பதவி உயர்விற்கு தகுதியான (பட்டதாரி ஆசிரியர்)பட்டியல் தயாரித்த நிலையில், தற்போது, அப்பட்டியலில்திருத்தம் இருந்தால், அவற்றை உடனே சரி செய்து, அனுப்பசி.இ.ஓ.,க்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.இப்பட்டியல் இறுதி செய்த பின், அடுத்த வாரத்தில் முதுகலை ஆசிரியர்பதவி உயர்வு “கவுன்சிலிங்’ தேதி அறிவிக்கப்படும் என,எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரி ஒருவர் கூறுகையில், “”மாநிலம் முழுவதும்உள்ள 5 ஆயிரம் காலியிடத்தில் 2 ஆயிரம் முதல் 3ஆயிரம் வரை, பட்டதாரியில்இருந்து முதுகலை ஆசிரியர்பதவி உயர்வு கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும். எஞ்சியஇடங்கள் டி.ஆர்.பி.,யில் தேர்வானவர்களை கொண்டு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது. வழக்கு போன்ற பிரச்னையால் 2 ஆயிரம் காலியிடம் நிரப்புவதில் சிக்கல் இருந்தால், தள்ளிப்போக வாய்ப்புள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் ஆலோசனைப்படி, 2014-15 கல்வியாண்டின் துவக்கத்திலேயே அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பெரும்பாலும் முதுகலை ஆசிரியர் பணியிடம் காலியாக இருக்கக்கூடாது என்ற அடிப்படை யில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது,” என்றார்.