Category Archives: RECRUITMENTNEWS

17 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் : பள்ளிக்கல்வித்துறை

தொடக்க கல்வியில் நேரடி நியமனம் மூலம் 350 பட்டதாரி ஆசிரியர்களும், பதவி உயர்வு மூலம் 399 பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். சிறுபான்மை மொழி பட்டதாரி ஆசிரியர்கள் 21 பேர் நியமிக்கப்படுகிறார்கள். இடை நிலை ஆசிரியர்கள் 3ஆயிரத்து 433 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.

பள்ளிக்கல்வி இயக்குனரகம் மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் 5,081 பேர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மேலும் 260 தையல் ஆசிரியர்களும் 4 இசை ஆசிரியர்களும், 888 உடற்கல்வி ஆசிரியர்களும் நியமிக்கப்படுகிறார்கள். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2494 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.
மாநகராட்சி பள்ளிகளில்பட்டதாரி, முதுகலை பட்டதாரி, உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட அனைத்து தரப்பு ஆசிரியர்களாக 232 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.
இவை அனைத்தும் கடந்த ஆண்டில் நிரப்பப்படவேண்டியவை. மொத்தத்தில் 16ஆயிரத்து 400 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.
இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசு தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்விஸ் (பிரிமிலினரி தேர்வு) ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க ஏப்ரல் 4 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்விஸ் (பிரிமிலினரி தேர்வு) ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க ஏப்ரல் 4 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசு பணியிடங்களை நிரப்புவதற்காக யுபிஎஸ்சி சிவில் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு மே 26ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர் 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு தேர்வெழுதிய மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்ப படிவங்களை http://www.upsonlune.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். அகர்தலா, அகமதாபாத், அலகாபாத், பெங்களூர், போபால், சன்டிகர், சென்னை, டெல்லி, ஹைதராபாத், மும்பை, லக்னோ, கோல்கத்தா, ராய்பூர், ஷில்லாங், ஷிம்லா உள்ளிட்ட இடங்களில் தேர்வு நடைபெறுகிறது. ஏப்ரல் 4ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாளாகும். மே 26ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. மேலும விரிவான தகவல்களுக்கு http://www.upsc.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

PGT ONLINE COUNSELLING | 700 இடங்களுக்காக தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு Online மூலம் நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 05-03-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது. நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 03.06.2013 அன்று பணியில் சேர வேண்டும்.

 2011-12ம் ஆண்டில் ஏற்பட்ட காலி இடங்கள் மற்றும் அதற்கு முந்தைய ஆண்டில் நிரப்பப்படாத காலி இடங்கள் ஆகியவை சேர்த்து 700 இடங்களுக்காக தேர்வு பெற்ற நபர்களுக்கு Online மூலம் நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 05-03-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலகங்களில் நடைபெறுகிறது. 2011-12ம் ஆண்டில் ஏற்பட்ட காலி இடங்கள் மற்றும் அதற்கு முந்தைய ஆண்டில் நிரப்பப்படாத காலி இடங்கள் ஆகியவை சேர்த்து, 700 இடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்களின் பெயர் பட்டியலை, பள்ளிக் கல்வித் துறைக்கு, டி.ஆர்.பி., வழங்கியது. இவர்கள், வரும், 5ம் தேதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடக்கும், “ஆன்-லைன்கலந்தாய்வு மூலம், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.
 இந்த கலந்தாய்வில் கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். 
1.    ஆசிரியர் தேர்வு வாரிய வரிசை எண்ணின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான  கலந்தாய்வு முதலிலும், இதன்பின்னர் இந்த கலந்தாய்வில் சொந்த மாவட்டங்களில் போதுமான காலிப்பணியிடங்கள் இல்லாததால் பணியிடம் கிடைக்கப் பெறாதவர்களுக்கும் மற்றும் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான  கலந்தாய்வு  அன்றே தொடர்ந்து  அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்பட  வேண்டும். 
2.    தங்கள் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் அவர்களுடைய ஆசிரியர் தேர்வுவாரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு,  கல்விச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
3.    ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி கணினியை பயன்படுத்தி ஒரே நேரத்தில் அனைத்து பாடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். 
4.    தனியர்  அவருக்குரிய இடத்தை தேர்வுசெய்தபின்னர், அவர் எந்த பாட முதுகலை ஆசிரியராக தெரிவு செய்யப்பட்டுள்ளாரோ அதற்குரிய கல்வித்தகுதிகளை பெற்றுள்ளாரா என்பதை அவருடைய கல்விச் சான்றிதழ்கள் மற்றும் இதர சான்றிதழ்களை சரிபார்த்து அனைத்தும் சரியாக இருப்பின் நியமன ஆணையினை அவருக்கு வழங்க வேண்டும் . நியமன ஆணைகளின் நகல் ஒன்றினை இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) அவர்களின் பெயரிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  
7.    நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 03.06.2013 அன்று பணியில் சேரும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  விவரத்தினை அன்றைய தினமே பாடவாரியாக இணை இயக்குநர்(மேநிக) அவர்களின் மின்னஞ்சலுக்கும் ஒரு நகலினை பெயரிட்ட முகவரிக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
8.    ஏற்கனவே நடத்தப்பட்ட Online கலந்தாய்வுகளில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளை தவறாது இந்த  கலந்தாய்விலும் பின்பற்றப்பட வேண்டும். 

அரசு பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, கம்ப்யூட்டர் பாடத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, கம்ப்யூட்டர் பாடத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான, ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. அரசு பள்ளிகளில், மேல்நிலை கல்வியில் தான், கம்ப்யூட்டர் சயின்ஸ் தனி பாடமாக கற்பிக்கப்படுகிறது. 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, அறிவியல் பாடத்தில் கம்ப்யூட்டர் குறித்து, ஒரு யூனிட் பாடம் மட்டுமே இருக்கும். தனியார் பள்ளிகளில், ஆங்கிலவழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு, 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் உள்ளது. தற்போதைய உலகில், கம்ப்யூட்டர் அறிவு இல்லாமல், 10ம் வகுப்பு வரை படித்தால், அது அரசு பள்ளி மாணவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, தமிழக அரசு,6 முதல், 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, அடுத்த கல்வி ஆண்டு முதல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை, அறிமுகப்படுத்த உள்ளது.இதற்காக, அரசு பள்ளி மாணவர்களின் விகிதம், தேவைப்படும் கம்ப்யூட்டர்கள், நியமிக்கப்பட வேண்டிய ஆசிரியர்கள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர்கள் கணக்கெடுத்துள்ளனர். வகுப்பு வாரியாக பாட புத்தகம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இத்திட்டத்தை, சிறப்பாக நடைமுறைப்படுத்த, பள்ளி கல்வி துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்ட நிலையில், எந்த முறையில் தேர்வு நடத்துவது என்பதில், தற்போது குழப்பம் நிலவுகிறது.

 அரசு கல்லூரிகளில், 1,093 பணியிடங்களும், அரசு உதவி பெறும் கலை கல்லூரிகளில், 3,120 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டது. இப்பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடந்து வருகிறது. டி.ஆர்.பி., மூலம் போட்டி தேர்வு நடத்தாமல், பணி அனுபவம், நேர்முக தேர்வின் மூலமாக தேர்வு நடத்த போவதாக தெரிவிக்கப்பட்டது. பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக, 15 மதிப்பெண்ணும், நேர்முக தேர்வுக்கு 10 மதிப்பெண்ணும், பி.எச்டி., பட்டத்துக்கு, 9 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. பி.எச்டி., பட்டம் பெறாமல் எம்.பில்., பட்டத்துடன் நெட், ஸ்லெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால், 6 மதிப்பெண்ணும், முதுகலை பட்டத்துடனம், நெட், ஸ்லெட் தேர்ச்சி பெற்றிருந்தால், 5 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. போட்டி தேர்வு மூலம் தேர்வு நடைபெறாமல், நேர்முக தேர்வுக்கும், அனுபவத்துக்கு அதிக மதிப்பெண் வழங்கப்படுவதால், முறைகேடுகள் அதிகளவில் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போட்டி தேர்வு நடத்த வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டது. இந்நிலையில், எந்த முறையில் தேர்வு நடத்துவது என்பதில், தற்போது குழப்பம் நிலவி வருகிறது. ஒரு சீட் 10 லட்சம்: தமிழகத்தில், அரசு உதவி பெறும் கல்லூரி பணியிடங்கள், கல்லூரி நிர்வாகம் மூலமே நிரப்பப்படுகின்றன. இதனால், அதிகளவில் பணம் விளையாடுவதாகவும் கூறப்படுகிறது. இப்பணியிடங்கள், ஏழு முதல் 10 லட்ச ரூபாய் வரை விலை போவதாகவும் கூறப்படுகிறது. கேரள மாநிலத்தில், அரசு உதவி பெறும் கல்லூரி பணியிடங்களை அரசு நிரப்புகிறது. ஆனால், தமிழகத்தில், அரசு உதவி பெறும் கல்லூரி பணியிடங்களை, கல்லூரி நிர்வாகங்களே நிரப்புகிறது. இதனால், அதிகளவில் முறைகேடுகள் நடைபெறுகிறது. எனவே, தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டத்தில், திருத்தம் கொண்டு வந்து, அரசு உதவி பெறும் கல்லூரி பணியிடங்களை அரசே நிரப்ப வேண்டும் என ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது. இதுகுறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்க செயலர் பிச்சாண்டி கூறியதாவது: மாணவர்களுக்கான நேர்முக தேர்வுகளையே ரத்து செய்ய போராடும் நிலையில், நெட், ஸ்லெட் தேர்வுகளில் ஏற்கனவே வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டி தேர்வு வைப்பது தவறான செயல். போட்டி தேர்வு நடத்தாமல், இப்போது இருக்கும் தேர்வு முறைகளிலேயே, ஒழுங்குபடுத்தி, நேர்மையான தேர்வு நடைபெற வேண்டும். கல்லூரி ஆசிரியர் தேர்வு பற்றி, அமைச்சர் தலைமையிலான குழு விரைவில் விவாதித்து அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு பிச்சாண்டி கூறினார்.

அரசு கலைக் கல்லூரிகளில் 1,063 உதவி பேராசிரியர் பணி இடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் அதிக காலி இடங்கள் இருக்கின்றன.

அரசு கலைக் கல்லூரிகளில் 1,063 உதவி பேராசிரியர் பணி இடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் அதிக காலி இடங்கள் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் 69 அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் காலியாக உள்ள 1,063 உதவி பேராசிரியர் பணி இடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. உதவி பேராசிரியர் பதவிக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டப்படிப்புடன் ஸ்லெட் அல்லது நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எச்டி. பட்டதாரிகளாக இருந்தால் ஸ்லெட், நெட் தேர்ச்சி அவசியம் இல்லை.அரசு பள்ளி ஆசிரியர்களை போல் போட்டித்தேர்வு ஏதும் இல்லாமல் சிறப்பு மதிப்பெண் வழங்கும் முறை அடிப்படையில் உதவி பேராசிரியர்களை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, பணி அனுபவம், கூடுதல் கல்வித்தகுதி, நேர்முகத்தேர்வு என ஒவ்வொன்றுக்கும் மதிப்பெண் வழங்கி மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

1,063 காலி பணி இடங்களில் ஆங்கிலம், கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களில்தான் அதிக காலி இடங்கள் உள்ளன. பாடவாரியாக முக்கிய பாடங்களில் காலி இடங்கள் விவரம் வருமாறு:–

தமிழ் – 76

ஆங்கிலம் – 140

கணிதம் – 135

இயற்பியல் – 100

வேதியியல் – 95

தாவரவியல் – 60

விலங்கியல் – 55

கம்ப்யூட்டர் சயின்ஸ் – 95

வரலாறு – 77

பொருளாதாரம் – 58

வணிகவியல் – 75

அரசியல் அறிவியல் – 5

நிர்வாகவியல் – 8

புள்ளியியல் – 18

மேற்கண்ட பாடப்பிரிவுகள் தவிர, சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை, எலெக்ட்ரானிக்ஸ் சயின்ஸ், அக்வாகல்சர் என பல்வேறு சிறப்பு பாடங்களில் குறைந்த எண்ணிக்கையிலான காலி இடங்கள் இடம்பெற்றுள்ளன. உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

 
 

ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதி தேர்வில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்தக் கோரிய மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

       ஆசிரியர் பணி நியமனத்துக்கான, தகுதி தேர்வு, கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்தது.தகுதி மதிப்பெண், 60 சதவீதம் என, நிர்ணயிக்கப்பட்டது. இதில், கலந்து கொண்டோர், சொற்ப அளவிலே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, கடந்த ஆண்டு, அக்டோபரில், மீண்டும் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறாத, 15 பேர், ஐகோர்ட்டில், தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்தி, சலுகை காட்டுமாறு, கல்வித் துறைக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும் உத்தரவிட வேண்டும் என, கோரப்பட்டது. இம்மனுக்களை விசாரித்த, நீதிபதி, சந்துரு பிறப்பித்த உத்தரவு:முதலாவதாகநடந்த தகுதி தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைவாக இருந்ததால், இரண்டாவதாக, தகுதி தேர்வை, அரசு நடத்தியது. இரண்டாவது தேர்விலும், மனுதாரர்கள் தேர்ச்சி பெறவில்லை. மற்ற மாநிலங்களில், தகுதி மதிப்பெண்ணில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதால், இங்கும் வழங்க வேண்டும் என, கோருகின்றனர். மற்ற மாநிலங்களில் சலுகைகள் வழங்குவது, தமிழகத்தை கட்டுப்படுத்தாது. 
            குழந்தைகளுக்கு, தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான், தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் கல்வி தரத்தில், எந்த சமரசத்துக்கும் இடமில்லை என, அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது.நிர்ணயிக்கப்பட்ட தகுதியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்; அதை மீறி நடக்கும் நியமனங்கள் செல்லாது என, ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே, மனுதாரர்களின் கோரிக்கையை, பரிசீலிக்க விரும்பவில்லை. கல்வி தரத்தை குறைக்கும் வகையில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்துவதற்கு, அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது. மனுக்கள், தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி, சந்துரு உத்தரவிட்டுள்ளார்.

குரூப்-2 முடிவு விரைவில் வெளியீடு

குரூப்-2 தேர்வு முடிவு, அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது. நகராட்சி கமிஷனர், சார்பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், கண்காணிப்பாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில், காலியாக உள்ள, 3,687 இடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு ஆக., 12ல், டி.என்.பி.எஸ்.சி., போட்டித்தேர்வை நடத்தியது. தேர்வு நாளன்று, கேள்வித்தாள், முன்கூட்டியே, “லீக்’ ஆன தகவல், ஈரோட்டில் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால், தேர்வு ரத்து செய்யப்பட்டு, நவ., 4ல், மீண்டும் மறுதேர்வு நடத்தப்பட்டது. இதில், 3.74 லட்சம் பேர் பங்கேற்றனர்.இதன் முடிவை, தேர்வர்கள், ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். அடுத்த வாரம், தேர்வு முடிவு வெளியாக வாய்ப்பு இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீட்டில் வெற்றிபெற்றவர்களின் படிப்பு தகுதியை உறுதி செய்வதற்காக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங் களுக்கும், கல்வியியல் பல்கலைக் கழகத்திற்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீட்டில் வெற்றிபெற்றவர்களின் படிப்பு தகுதியை உறுதி செய்வதற்காக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங் களுக்கும், கல்வியியல் பல்கலைக் கழகத்திற்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சுமார் 2,800 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வுசெய் வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் போட்டித்தேர்வு ஒன்றை நடத்தியது.

தேர்வில் பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு தேர்வுபட்டியல் வெளி யானது. தேர்வில் ஒரு சில பாடங்களுக்கான தவறான கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து, முதலில் வெளியான தேர்வுப் பட்டியல் ரத்து செய்யப்பட்டு திருத்தப்பட்ட பட்டியல் வெளியானது. பின்னர் புதிதாக தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்படி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திலும் இந்த 20 சதவீதஇட ஒதுக்கீட்டை பின்பற்ற ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு எடுத்தது. குறிப்பிட்ட பதவிக்கான கல்வித்தகுதியை தமிழ்வழியில் பெற்றிருந்தால் மட்டும் தமிழ்வழி இடஒதுக் கீட்டு சலுகையை பெறலாம்.

இதற்கிடையே, தமிழ்வழி இடஒதுக்கீடு நீங்கலாக தேர்வான 2,308 பேர் அடங்கிய திருத்தப்பட்ட பட்டியல் கடந்த 18ஆம் தேதி வெளியிடப்பட்டது. வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் ஆகிய பாடங்களில் தமிழ் வழியில் படித்தோர் பட்டியலும்,தாவரவியல் ஆசிரியர் பட்டியலும் இதில் இடம்பெறவில்லை.

வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் தமிழ் வழியில் படித்தோருக்கு தலா 40 இடங்கள் வீதம் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. இதன் கீழ் தேர்வு செய்யப்பட்டவர்களின் முதுகலை பட்டத்தையும், பி.எட். பட்டத்தையும் உறுதி செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக, தமிழ் வழியில் படித்த முதுகலை பட்டத்தை சரிபார்க்கும் வகையில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் பதிவாளருக்கும்,அதேபோல், பி.எட். படிப்பை சரிபார்க்க சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகப் பதிவாளருக்கும் கடிதம் அனுப்பப்பட்டு இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் உறுதி அளித்த பின்னரே தமிழ்வழி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை வெளியிட தேர்வுவாரியம் முடிவு செய்துள்ளது.

ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில், சிறப்பு தேர்வு எழுதியவர்களில் இருந்து, 120 பேரை தேர்வு செய்து, அவர்களின் பட்டியலை, நேற்றிரவு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி) வெளியிட்டது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், தொகுப்பூதிய அடிப்படையில்,கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்தனர். இவர்களை பணிநிரந்தரம் செய்வதற்காக, 2009ல், சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டது. 1,000த்திற்கும் மேற்பட்டோர், தேர்வில் பங்கேற்றும், மிக குறைந்தஅளவே தேர்ச்சி இருந்தது.

இதைத் தொடர்ந்து, 2010, ஜன., 24ல், மீண்டும், சிறப்புத் தேர்வுநடத்தப்பட்டது. மொத்தம், 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டகேள்விகளில், பல கேள்விகள் தவறாக இருந்ததாக கூறி, தேர்வர்கள், தொடர்ந்த வழக்கில், கடந்த மாதம்தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், 20 கேள்விகளை (தலா 1 மதிப்பெண்) நீக்கம் செய்து, மீதம் உள்ள, 130மதிப்பெண்களில், 50 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற, 120 பேரை தேர்வு செய்து,அவர்களின் தேர்வுப் பட்டியலை, இணையதளத்தில், (www.trb.tn.nic.in)  டி.ஆர்.பி., வெளியிட்டது.

இவர்களுக்கு, பள்ளி கல்வித்துறையில், இம்மாத இறுதிக்குள், பணி நியமனம் வழங்கப்படும் என,எதிர்பார்க்கப்படுகிறது.

400 காலி பணி இடங்களை நிரப்ப குரூப்–2 தேர்வு 3–வது கட்ட கவுன்சிலிங் அடுத்த மாதம் 6–ந் தேதி நடக்கிறது

குரூப்–2 தேர்வு மூலம் காலி பணி இடங்கள் 2 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் இன்னும் 400 காலி இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான 3–வது கட்ட கவுன்சிலிங் அடுத்த மாதம் (பிப்ரவரி) 6–ந் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கு 392 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் பதிவு எண் அடங்கிய பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.கவுன்சிலிங் நேரம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அழைப்புக்கடிதத்தை இந்த இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும். சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் கோட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் கவுன்சிலிங் நடத்தப்படும்.கவுன்சிலிங்கிற்கு வராத விண்ணப்பதாரர்கள் தங்கள் தரவரிசையையும், பதவி ஒதுக்கீட்டிற்கான முன்னுரிமையையும் இழப்பதுடன் அவர்களுக்கு இனி மறுவாய்ப்பும் வழங்கப்பட மாட்டாது.மேற்கண்ட தகவலை டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி முதல் வாரத்தில் செட் தேர்வு முடிவு

கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கான மாநில அளவிலான தகுதி தேர்வு(செட்) முடிவுகள் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகும் என பாரதியார் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. இத்தேர்வு கடந்த 2012 அக்டோபர் 7ம் தேதி நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் 51,678 பேர் எழுதினர். மொத்தம் 27 பாடங்களுக்கு மூன்று தாள்களைக் கொண்டதாக தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே எழுந்துள்ளது. இதுதொடர்பாக, பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி.ஜேம்ஸ் பிச்சை கூறியது: செட் தேர்வு வினாத்தாள் மதிப்பீடுகள் முடிந்துவிட்டன. அனைத்துப் பணிகளும் ஏறத்தாழ முடிந்துவிட்ட நிலையில், தேர்வு முடிவை வெளியிடத் தயாராக உள்ளோம். பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.)ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். ஒப்புதல் வந்தவுடன் பிப்ரவரி முதல் வாரம் அல்லது 2வது வாரத்தில் தேர்வு முடிவை வெளியிட உள்ளோம் என்றார். செட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அரசு கல்லூரி மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள 3,000 பணியிடங்களை நிரப்ப ஆள் தேர்வு நடக்கும் என தெரிகிறது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், பொறியியல் பேராசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணைகள்

    கடந்த அக்டோபர் மாதம் தேர்வு செய்யப்பட்ட அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன. 139 அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், 155 அரசுப் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு 2012 ஏப்ரல், மே மாதங்களில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்தத் தேர்வு முடிவுகள் ஜூலை 8-ம் தேதியும், சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு தேர்வுப் பட்டியல் அக்டோபர் 18-ம் தேதியும் வெளியிடப்பட்டன. 
         தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டு மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, தேர்வு பெற்ற விரிவுரையாளர்கள், பேராசிரியர்களோடு அரசுக் கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களும் பாதிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக வட்டாரங்கள் கூறியது:- அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் ஆகியோருக்கு விரைவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் நியமனம் தொடர்பாக வழக்கு இருந்ததால் ஆணைகளை வழங்கவில்லை.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அட்டவணை 28ல் வெளியீடு

2013ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி நடத்தவுள்ள தேர்வு அட்டவணை மற்றும், அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கைக் குறித்த விபரங்கள், இம்மாதம் 28ம் தேதி வெளியிடப்படும் என தேர்வாணையத் தலைவர் நட்ராஜ் தெரிவித்தார். வருவாய்த் துறையில் 1870 வி.ஏ.ஓ பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, இம்மாதம் முதல் வாரத்தில் நடந்தது. இதில், 1215 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள 655 இடங்களை நிரப்புவதற்கான, 2ம் கட்ட கலந்தாய்வு தேர்வாணைய அலுவலகத்தில் நடந்தது. அப்போது நட்ராஜ் கூறியதாவது: இன்றைய கலந்தாய்வுக்கு 450 பேர் வந்துள்ளனர். எனவே, மீண்டும் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப, இம்மாதம் 24ம் தேதி, மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடக்கும். குரூப் 4 தேர்வில், தேர்வுபெற்ற ஆதரவற்ற விதவைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது. அதன்படி, சம்பந்தப்பட்ட சான்றிதழ்களுடன், தேர்வு பெற்றவர்கள், 24ம் தேதி நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்கலாம். இந்த ஆண்டிற்கான தேர்வு அட்டவணை, இம்மாதம் 28ம் தேதி வெளியிடப்படும். எத்தனை வகையான தேர்வுகள் நடைபெறும், அவற்றில் எத்தனை ஆயிரம் பேர், அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவர் என்ற விபரங்கள் அப்போது வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்தாண்டு, 30 ஆயிரம் பேர் வரை, அரசுப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், குரூப் 4 பணியிடங்களை கணிசமாக எதிர்பார்க்கலாம்.

முதுகலை ஆசிரியர்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. தாவரவியல் உட்பட சில பாடங்களில் தேர்வு பெற்றவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

முதுகலை ஆசிரியர்களுக்கான ரேங்க் லிஸ்ட் எனப்படும் தரவரிசைப் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகிறது .தாவரவியல் பாடத்தில் தேர்வு பெற்றவர்களின் பட்டியல் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதுகலை ஆசிரியர்களுக்கான ரேங்க் லிஸ்ட் எனப்படும் தரவரிசைப் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பணி நியமனம் பெற்றுள்ள 2,300 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல், அவர்களின் தரவரிசைப் பட்டியல், தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் விவரம், கட்-ஆஃப் மதிப்பெண் போன்ற விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. தாவரவியல்  பாடம் தவிர மீதமுள்ள பாட ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தாவரவியல் பாடத்தில் தேர்வு பெற்றவர்களின் பட்டியல் இம்மாத இறுதிக்குள் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்

பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்: ஓரிரு வாரங்களில் அனைவருக்கும் விநியோகம்.ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ்கள் இ-பார்கோடு உள்ளிட்ட 10 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்வு எழுதியவரின் பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்ச்சிபெற்ற தாள், விருப்பப் பாடம், மொழிப்பாடம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வு ஆகிய இரண்டுத் தேர்வுகளிலும் உரிய தகுதிகளோடு வெற்றி பெற்ற 18,600 பேருக்கான சான்றிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக வேறு யாரும் இந்தச் சான்றிதழ்களை அச்சிடாதவாறு ரகசிய பாதுகாப்பு அம்சங்கள் இந்தச் சான்றிதழில் உள்ளதாக அதிகாரிகள்தெரிவித்தனர். இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்ற 18,600 பேரில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்குச் சென்றுள்ளனர். வெறும் 7 பேர் மட்டும் தங்களுக்குச் சான்றிதழே போதும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தெரிவித்துள்ளனர். இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க பணியில் சேரும் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். 2010 ஆகஸ்ட் 21-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் இந்தத் தேர்வை எழுதுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு 7 ஆண்டுகள் வரை இந்தச் சான்றிதழ் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம். தமிழிலேயே விவரங்கள்: ஆசிரியர் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. இனி அந்த விவரங்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல், ஒவ்வொரு ஆசிரியர் தேர்வுக்கும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள், தகுதியான படிப்புகள் என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆசிரியர் தேர்வுக் கொள்கையும் இப்போது உருவாக்கப்பட்டு வருகிறது. தகுதியில்லாதவர்களும், வேறு படிப்புகளைப் படித்தவர்களும் ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்து ஏமாற்றமடைவதைத் தவிர்க்கவும், ஆசிரியர் தேர்வில் குழப்பங்களைக் களையவும் இதுஉதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்-லைன் வழியில் விண்ணப்பம்:
அடுத்து நடைபெற உள்ள அனைத்துவித ஆசிரியர் தேர்வுகளும் இனி ஆன்-லைன் மூலமாக நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம்தான் நடத்தப்படும்

அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம்தான் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால், அனைத்துவிதமான நியமனங்களும் இனி ஏப்ரலில்தான் தொடங்கும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு தகுதித் தேர்வுகளிலும் சேர்த்து 18,600 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தகுதியான ஆசிரியர்கள் இல்லாததால் 2,210 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 12,532 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அடுத்தத் தகுதித் தேர்வுக்குப்பிறகு இந்த 17 ஆயிரத்து 700இடங்களும் நிரப்பப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.அடுத்து நடைபெற உள்ள நியமனங்கள் என்ன? ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அடுத்து நடைபெற உள்ள நியமனங்களின் விவரம்:

1)இடைநிலை ஆசிரியர்கள் – 2,210

2)பட்டதாரி ஆசிரியர்கள் – 12,532

3)முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் – 2,600

4)அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் -1,063

5)சிறப்பாசிரியர்கள் – 841

நேரடி டி.இ.ஓ. தேர்வுமுறையிலும் அதிரடி மாற்றம் டி.என்.பி.எஸ்.சி. முடிவு

குரூப்–1 தேர்வை தொடர்ந்து நேரடி டி.இ.ஓ. (மாவட்ட கல்வி அதிகாரி) தேர்வுமுறையிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது.

உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை ஆய்வு செய்வது, ஆசிரியர்களின் பணிகளை மேற்பார்வையிடுவது, தேர்வு நடத்துதல் போன்ற பணிகளை செய்வதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஒரு மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியில் இருப்பார்.ஆசிரியர்களின் ஊதியம், விடுமுறை, இடமாற்றம், வருங்கால வைப்புநிதி தொடர்பான பணிகளையும் மாவட்ட கல்வி அதிகாரிகள்தான் கவனிக்கிறார்கள். எனவே, பள்ளிக்கல்வித்துறையில் டி.இ.ஓ. பதவி, முக்கிய பதவியாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 69 கல்வி மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் ஒரு டி.இ.ஓ. பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

டி.இ.ஓ. பதவியை பொறுத்தமட்டில், 25 சதவீத காலி இடங்கள் நேரடி போட்டித்தேர்வு மூலமாகவும், எஞ்சிய 75 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. பதவி உயர்வில், அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 40 சதவீத இடங்களும், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 35 சதவீத இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.நேரடி டி.இ.ஓ. காலி பணி இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வரலாறு என ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் குறிப்பிட்ட இடங்களை ஒதுக்குகிறார்கள். தேர்வு எழுதுவதற்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டப்படிப்புடன் பி.எட். பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

டி.இ.ஓ. பதவி என்பது அரசிதழ் பதிவு பெற்ற (கெஜட்டடு) நிர்வாக பதவி ஆகும். டி.இ.ஓ.வாக பணியில் சேருவோர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (சி.இ.ஓ.) பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குனர், இயக்குனர் என்று படிப்படியாக பதவி உயர்வு பெறுகிறார்கள். மேலும், சிறப்பு பதவி உயர்வு மூலமாக வருவாய்த்துறை சாராத பணிப்பிரிவில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும் பதவி உயர்வு பெறலாம்.எழுத்துத்தேர்வில் குறிப்பிட்ட பாடத்தில் இருந்து 200 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண். நேர்முகத்தேர்வுக்கு 40 மார்க் என்று இருந்தது. இந்த நிலையில், குரூப்–1 தேர்வில் அதிரடி மாற்றங்கள் செய்திருப்பதை போன்று நேரடி டி.இ.ஓ. தேர்விலும் ஏராளமான மாற்றங்களை கொண்டுவர டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்திருக்கிறது.

அதன்படி, டி.இ.ஓ. தேர்வில் வெறுமனே விண்ணப்பதாரர்கள் படித்த பாடங்களில் இருந்து மட்டுமின்றி பொது அறிவு, ஆளுமைத்திறன், உளவியல், நிர்வாகத்திறமை போன்றவற்றை ஆராயும் வகையில் புதிய வினாக்கள் சேர்க்கப்பட உள்ளன. புதிய தேர்வுமுறையில் பொதுஅறிவு தாளும் விருப்பப் பாட தாள் ஒன்றும் இடம்பெறக்கூடும் என்று தெரிகிறது.மேலும், குரூப்–1 தேர்வை போன்று நேர்முகத்தேர்வுக்கான மதிப்பெண்ணையும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. விரைவில் 12 டி.இ.ஓ. காலி பணி இடங்கள் நேரடித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வில் புதிய தேர்வுமுறை பின்பற்றப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.

1,060 காலி பணி இடங்கள்: அரசு கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்தை கண்காணிக்க தனி அதிகாரி

அரசு கல்லூரிகளில் புதிதாக நியமிக்கப்பட உள்ள 1,060 உதவி பேராசிரியர் நியமனத்தை கண்காணிக்க கல்லூரி கல்வி இயக்குனர் தேவதாஸ் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் 1,060 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். உதவி பேராசிரியர் பதவிக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுநிலை பட்டப்படிப்புடன் ஸ்லெட் அல்லது நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எச்டி. பட்டதாரிகளாக இருந்தால் ஸ்லெக்ட, நெட் தேர்ச்சி அவசியம் இல்லை.

ஸ்லெட், நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி, பி.எச்டி. பட்டம், பணி அனுபவம், நேர்முகத்தேர்வு என ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆசிரியர் நியமனத்திற்கு போட்டித்தேர்வு நடத்தப்படுவதால் உதவி பேராசிரியர் நியமனத்திற்கும் போட்டித்தேர்வு நடத்துவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், முந்தைய ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட பழைய நடைமுறையின்படியே நியமனம் நடைபெற உள்ளது.

உதவி பேராசிரியர் நியமன பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம்தான் மேற்கொள்ள உள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) வெளியிடப்பட இருக்கிறது. இந்த நிலையில், உதவி பேராசிரியர் நியமன பணிகள் அனைத்தும் தனி அதிகாரி தலைமையில் நடைபெற உள்ளது. இதற்காக கல்லூரி கல்வி இணை இயக்குனர் தேவதாஸ் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார்.

தமிழக அரசுத்துறைகளில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில், இந்த ஆண்டு மட்டும், 1.27 லட்சம் பேர் ஓய்வு பெறுகின்றனர். இதில், 52 ஆயிரம் ஆசிரியர்களும் அடங்குவர்.

தமிழக அரசுத்துறைகளில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில், இந்த ஆண்டு மட்டும், 1.27 லட்சம் பேர் ஓய்வு பெறுகின்றனர். இதில், 52 ஆயிரம் ஆசிரியர்களும் அடங்குவர். இதனால் அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரிக்கிறது.

தமிழகத்தில் மொத்தம், 142 அரசுத் துறைகள் உள்ளன. கடந்த, 1996ம் ஆண்டு, ஜனவரி 1ம் தேதி எடுக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான கணக்கெடுப்பின்படி, 6 லட்சம் ஆசிரியர்கள், 3 லட்சம் அரசு ஊழியர்கள், 1 லட்சம் சீருடை பணியாளர்கள் மற்றும் 2 லட்சம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்கள் என, மொத்தம் 12 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த, 2001ம் ஆண்டு முதல், 2005ம் ஆண்டு வரை, தமிழகத்தில் வேலை நியமன தடைச்சட்டம் அமலில் இருந்தது. இதனால், தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளாக, புதிய பணியாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. அதேசமயம், அரசுப்பணிகளில் இருந்து, ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்தே வந்தது.

இந்திய தலைமை கணக்காய்வு நிறுவனத்தின், தமிழக பிரிவில், பணியாற்றும் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்களது அலுவலகத்தின் சார்பில், ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கும் ஆணை எண் வழங்கப்படும். அதன்படி, தமிழகத்தில் கடந்த, 1993ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ஆண்டுதோறும், 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றனர்.

இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்து, 2007ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு வரை, ஆண்டுதோறும், 40 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றனர். இந்நிலையில், 2012-13ம் நிதியாண்டில் மட்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என ஒட்டுமொத்தமாக, 1.27 லட்சம் பேர் ஓய்வு பெறுகின்றனர். இதில் 52 ஆயிரம் ஆசிரியர்களும் அடங்குவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த, 1991ம் ஆண்டுக்கு முன்பு வரை, மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், அரசுத் துறைகளுக்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் தொகைக்கு ஏற்ப, அரசின் நலத் திட்டங்கள், சரியான முறையில் சென்றடைய வேண்டுமானால், அதற்கு எந்த அளவுக்கு ஊழியர்கள் தேவை; அந்த ஊழியர்களின் பணிகள் என்னென்ன என்பதுஉள்ளிட்ட, பல விஷயங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதற்கேற்ப அரசுத்துறைகளில், புதியதாக ஆட்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், இந்த நடைமுறை, 1991ம் ஆண்டுக்கு பின்னர் பின்பற்றப்படுவதில்லை. ஒவ்வொரு துறைக்கும், தோராயமாகவே ஆட்களை நியமனம் செய்கின்றனர்.

அவர்களின் பணிகளும் வரைமுறைப்படுத்தப்படுவது இல்லை. இதனால் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், பொதுமக்களுக்கு அலைச்சலும் ஏற்படுகிறது. மத்திய அரசின், 13 வது நிதி ஆணைக்குழு, தமிழக அரசுக்கு சில பரிந்துரைகளை, 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கியது.

அதில், “தமிழகம் வளர்ந்த மாநிலமாக உள்ளது. எனவே மத்திய அரசின் தொகுப்பில் இருந்து, தமிழகத்துக்கு போதிய அளவில் நிதி வழங்க முடியாது. எனவே தங்களது சொந்த நிதியில் இருந்தே செலவினங்களை தமிழக அரசு கவனித்து கொள்ள வேண்டும்” என தெரிவித்திருந்தது. மேலும், “ஓய்வு பெறும் அரசு ஊழியர் பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் புதியதாக ஆட்களை நியமனம் செய்யலாம். இதனால் அரசுக்கும் செலவினங்கள் குறையும்” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தலைமை நிலைய செயலர் சீனிவாசனிடம் கேட்டபோது, “நிதி நிலையை காரணம் காட்டி, அரசுப்பணியிடங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புவதில் கவனம்செலுத்தும் அரசு, மற்ற அரசுத் துறைகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்னரும், மீண்டும் அவர்களுக்கே ஒப்பந்த அடிப்படையில், பணிகள் வழங்கப்படுகிறது. கருவூல கணக்கு துறையில் பணியாற்றி வந்த, 300 உதவி கருவூல அலுவலர்கள், சமீபத்தில் ஓய்வு பெற்றனர். ஆனால், இந்த பணியிடங்களுக்கு புதியதாக ஆட்கள் நியமனம் செய்யப்படவில்லை.

மாறாக, ஓய்வு பெற்றவர்களே ஒப்பந்த அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் புள்ளியல் துறையில், சமீபத்தில் ஓய்வு பெற்ற, 120 பேருக்கு, ஒப்பந்த அடிப்படையில், மீண்டும் பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் வேலைவாய்ப்பு அலுவலகங்களில், பதிவு செய்து வைத்து, அரசு வேலைக்காக காத்திருக்கும், 75 லட்சம் பேரின் கனவு கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ.152.73 கோடி ஒதுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 1591 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்,4937 ஆய்வக உதவியாளர்கள், 2108 இளநிலை உதவியாளர்களை நியமிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ.152.73 கோடி ஒதுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வருடந்தோறும மாணவ, மாணவியரின் நலன்களுக்கு தமிழக அரசு பல நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு 1590 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 1591 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.63.94 கோடி செலவாகும். மேலும் 4937 ஆய்வக உதவியாளர்கள், 2108 இளநிலை உதவியாளர்களை நியமிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.