Category Archives: TNTET 2012

ஆசிரியர் தகுதி மறு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 6) தொடங்குகிறது. இதனைக் கண்காணிப்பதற் காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் 6 இயக்கு நர்கள், 11 இணை இயக்குநர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

ஆசிரியர் தகுதி மறு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 6) தொடங்குகிறது. இதனைக் கண்காணிப்பதற் காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் 6 இயக்கு நர்கள், 11 இணை இயக்குநர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். ஆசிரியர் தகுதி மறுதேர்வு முடிவுகள் வெள்ளிக் கிழமை வெளியிடப்பட்டன. முதல் தாளில் 10,397 பேரும், இரண்டாம் தாளில் 8,849 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தமாக 19,246 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அந்தந்த மாவட்டங்களிலேயே நடை பெற உள்ளது. நவம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் இரண்டாம் தாளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும், 8, 9 தேதிகளில் முதல் தாளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறுகிறது. முதல் தாளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில பதிவு மூப்பு அடிப்படையில் இடை நிலை ஆசிரியர்களாக பணி நியமனம் வழங்கப் படுகிறது. இரண்டாம் தாளில் வெற்றி பெற்றவர் களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் பணி நியமனம் வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. அதன்காரணமாக, சான்றிதழ் சரிபார்ப்பு முக்கியத்துவம் பெறுவதால் அதைக் கண் காணிக்க 17 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள் ளனர். இணைய தளத்தில் அழைப்புக் கடிதங்கள்: ஒவ்வொரு தேர்வருக்கும் சான்றிதழ் சரிபார்ப்புக் கான அழைப்புக் கடிதம் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சான்றிதழ் சரிபார்ப்புக்கான நேரம், இடம் உள்ளிட்ட விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அழைப்புக் கடிதங்கள் அஞ்சல் மூலம் அனுப்பப் படாது. ஒவ்வொரு தேர்வரும், வழங்கப் பட்டுள்ள அறிவுரைகளை கவனமாகப் படித்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கான படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அனைத்து அசல் சான்றிதழ்களையும், அவற்றின் இரண்டு நகல்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு கொண்டுவர வேண்டும். முதல் தாளில் வெற்றிபெற்ற தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும்போது, அசல் சான்றிதழ்களுடன் புதுப்பிக்கப்பட்ட வேலை வாய்ப்பு பதிவு சான்றிதழ் மற்றும் சம்பந்தப் பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரால் சான் றொப்பமிடப்பட்ட பதிவு சான்றிதழின் இரு நகல்கள் ஆகியவற்றை உடன் கொண்டுவர வேண்டும். இது தொடர்பாக, வேலைவாய்ப்பு இயக்குநரகம் உரிய உத்தரவுகளை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்களுக்கு வழங்கியுள்ள தாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியாகும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமாக, 5,451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும், 18 ஆயிரத்து 932 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. முந்தைய தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,448 பேருக்கான இடங்களைத் தவிர்த்து, மீதமுள்ள, 22 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு, இத்தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள் நியமிக்கப்படுவர்.

TNTET2012 – தமிழ்நாடு முழுவதும் 14-ந் தேதி நடைபெறும் ஆசிரியர் தகுதி தேர்வை 1094 மையங்களில் 6 லட்சத்து 75 ஆயிரத்து 643 பேர் எழுதுகிறார்கள்.அனைவரும் தகுதி பெற கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்.

தமிழ்நாடு முழுவதும் 14-ந் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை 1094 மையங்களில் 6 லட்சத்து 75 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்.

ஆசிரியர்கள் பி.எட். படித்திருந்தாலும், இடை நிலை ஆசிரியர் பயிற்சி முடித்திருந்தாலும் தனியாக ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெறவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஜுலை 12-ந் தேதி நடத்தப்பட்டது. அப்போது 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள். ஆனால் தேர்வு நேரம் 11/2 மணிநேரம் கொடுக்கப்பட்டதால் விடை அளிக்க போதிய நேரம் இல்லை என்று தேர்வு எழுதியவர்கள் சரமாரியாக புகார் அளித்தனர்.

அதுமட்டுமல்லாமல் கேள்விகள் மிக கடினமாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

அவர்கள் சொன்னது சரியாகவே இருக்கும் வகையில் 61/2 லட்சம் பேர் தேர்வு எழுதியதில் 2,500 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதாவது 150 மார்க்குக்கு 90 மார்க் எடுத்தவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றவர்கள்.

இந்த பிரச்சினை காரணமாக இப்போது மீண்டும் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக தனி கட்டணம் வசூலிக்கவில்லை. கடந்த முறை எழுதியவர்கள் தேர்வு எழுதலாம் என்றும் புதிதாக தேர்வு எழுத விரும்புபவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அதன்படி புதிதாக பலர் விண்ணப்பித்தனர்.

ஹால்டிக்கெட் ஒவ்வொருவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அது ஒருவேளை கிடைக்காவிட்டால் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பத்தின் எண்ணை அடித்து ஹால்டிக்கெட்டை பெற்று தேர்வு எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு 14-ந் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணிவரை நடக்க உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 1094 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் 85 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வை 6 லட்சத்து 75 ஆயிரத்து 643 பேர் எழுதுகிறார்கள்.

அவர்களில் இடை நிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கான முதல் தாள் தேர்வை 2 லட்சத்து 52 ஆயிரத்து 298 பேர்கள் எழுதுகிறார்கள். அவர்களில் 61 ஆயிரத்து 34 பேர் ஆண்கள். 1 லட்சத்து 91 ஆயிரத்து 264 பேர் பெண்கள்.

அதுபோல பி.எட். படித்தவர்ளுக்கான 2-வது தாள் தேர்வை 3 லட்சத்து 64 ஆயிரத்து 452 பேர் எழுதுகிறார்கள். அவர்களில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 426 பேர் ஆண்கள். 2 லட்சத்து 54 ஆயிரத்து 26 பேர் பெண்கள். இந்த இரு தேர்வையும் சேர்த்து 58 ஆயிரத்து 643 பேர் எழுதுகிறார்கள். அவர்கள் பி.எட். மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களாக இருப்பார்கள்.

தேர்வுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி, உறுப்பினர் செயலாளர் அன்பழகன், உறுப்பினர் கே.அறிவொளி ஆகியோர் செய்து வருகிறார்கள்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மார்க் எடுப்பவர்களுக்கு ஆசிரியர் வேலை காத்திருக்கிறது. கேள்விகள் எளிதாக கேட்கப்படும் என்றும் 30 ஆயிரம் பேர்களுக்கு மேல் தேர்ச்சி பெறுவார்கள் என்றும் ஆசிரியர்கள் நம்புகிறார்கள்.