Category Archives: AFTER PLUS TWO 2013-2014

பிளஸ்–2 தேர்வில் பெயிலாகி துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு என்ஜினீயரிங் கலந்தாய்வு 28–ந்தேதி நடக்கிறது

பிளஸ்–2 தேர்வில் பெயிலாகி துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு என்ஜினீயரிங் கலந்தாய்வு 28–ந்தேதி நடக்கிறது. ஆனால் அவர்கள் 27–ந்தேதி நேரடியாக விண்ணப்பிக்கவேண்டும். அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ராஜாராம் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
என்ஜினீயரிங் கலந்தாய்வு 26–ந்தேதி மாலை முடிவடைகிறது. அப்போது காலியாக உள்ள பி.இ. இடங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான மற்றொரு கலந்தாய்வு 28–ந்தேதி நடத்தப்படுகிறது. இதில் பிளஸ்–2 தேர்வில் தேர்ச்சி பெயிலாகி இருந்த மாணவர்கள் சமீபத்தில் நடைபெற்ற சிறப்பு துணைத்தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று தகுதி படைத்தவர்கள் கலந்துகொள்ளலாம்.
ஆனால் அந்த மாணவ–மாணவிகள் 27–ந்தேதி அண்ணாபல்கலைக்கழகத்திற்கு வந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அன்றே ஒப்படைக்கவேண்டும். அந்த மாணவர்கள் பிளஸ்–2 மதிப்பெண் சான்று, தேர்வு எழுதிய அனுமதி கடிதம் (ஹால்டிக்கெட்), 10–வது வகுப்பு மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்று சான்றிதழ், நிரந்தர சாதி சான்றிதழ், முதல் பட்டதாரிகளுக்கான சான்று மற்றும் உறுதி அளிப்பு படிவம், புகைப்படம் ஆகியவற்றுடன் 27–ந்தேதி வரவும். விண்ணப்பத்தொகை ரூ.500. ஆதிதிராவிடர், அருந்ததியினர், பழங்குடியினர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 மட்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.சி. நர்சிங் போன்ற மருத்துவம் சார்ந்த படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. கடைசி தேதி ஜூலை 5.

பி.எஸ்.சி. நர்சிங் போன்ற மருத்துவம் சார்ந்த படிப்பிற்கான விண்ணப்பங்கள் அரசு மருத்துவமனைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 5–ந்தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.சி. நர்சிங் (4 வருடம்), பி.பார்ம் (4 வருடம்), பிசியோதெரபி (பி.பி.டி.) (4வருடம்), பி.ஏ.எஸ்.எல்.பி. (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய்க் குறியியல் பட்டப்படிப்பு) (4 வருடம்), பி.எஸ்.சி. ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி (பி.எஸ்.சி. ஐ.எம்.) (3 வருடம்), பி.எஸ்.சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி (பி.எஸ்.சி. ஆர்.டி.) (3 வருடம்), பி.ஓ.டி (4 வருடம்) போன்ற மருத்துவம் சார்ந்த படிப்பிற்கான விண்ணப்பங்கள் விற்பனை நேற்று முதல் தொடங்கியது. இந்த விற்பனை ஜூன் 4–ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்த படிப்பில் சேர பிளஸ்–2 படிப்பில், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்கள் அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதப்பாடங்களை கொண்ட பிரிவில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசு மருத்துவக்கல்லூரிகளில் 180 பி.எஸ்.சி. நர்சிங் இடங்களும், 120 பி.பார்ம் இடங்களும், 25 பி.ஏ.எஸ்.எல்.பி. இடங்களும், 60 பி.எஸ்.சி. ஐ.எம். இடங்களும், 60 பி.எஸ்.சி. ஆர்.டி. இடங்களும் உள்ளன.
இந்த மருத்துவம் சார்ந்த படிப்பிற்கான விண்ணப்பங்களை பெற, செயலாளர், தேர்வுக்குழு, கீழ்ப்பாக்கம், சென்னை–10 என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் டி.டி. எடுத்து அரசு மருத்துவக்கல்லூரிகளில் கொடுத்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவர்கள் தங்கள் ஜாதி சான்றிதழ்களின் உண்மை நகல் சான்றொப்பம் பெறப்பட்ட 2 நகல்களை கொடுத்து விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
இந்த விண்ணப்பங்கள் சென்னை மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, செயலாளர், தேர்வுக்குழு, 162, ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை–6000 010. என்ற முகவரியில் ஜூலை 5–ந்தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவர்கள் விண்ணப்பிக்கும் காலம் முதல் கலந்தாய்வு முடிவுகள் தெரியும் வரை தங்கள் விண்ணப்பங்கள் பற்றிய முழு விவரங்களை http://www.tnhealth.org/www.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அவ்வப்போது பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மருத்துவ படிப்பிற்கான திருத்திய தரவரிசை பட்டியல் வெளியீடு

மருத்துவ படிப்பு விண்ணப்பதாரர்களில், 120 பேரின் தரவரிசை மாறியுள்ளதாக, திருத்திய தரவரிசை பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களில், 5,726 பேர், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில், தாங்கள் பெற்ற மதிப்பெண்களை மறுகூட்டல் செய்யவும், விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யவும் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களில், 3,291 மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக, பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவால், மருத்துவ தரவரிசை பட்டியலில், 120 பேருக்கு மட்டும், அவர்களின் தரவரிசையில், மாற்றம் ஏற்பட்டுள்ளதாக, எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., ஆகிய படிப்புகளுக்கான திருத்திய தரவரிசை பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள், கூடுதல் விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் பெறலாம். முதுநிலை மருத்துவ படிப்பிற்கான திருத்திய தரவரிசை பட்டியல் விவரங்களையும், விண்ணப்பதாரர்கள், குறிப்பிட்ட இணையதளத்தில் பெறலாம்.

எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் (2013-14) அடிப்படையில், 200-க்கு 200 தொடங்கி 200-க்கு 190 வரை ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை .

தமிழகத்தில் உள்ள, 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம், 2,145 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இவற்றில், 322 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு போக, மீதமுள்ள, 1823 இடங்கள், வரும், 19ம் தேதி துவங்கும் பொது கலந்தாய்வு மூலம், நிரப்பப்பட உள்ளன.

தமிழகத்தில் உள்ள, 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம், 2,145 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இவற்றில், 322 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு போக, மீதமுள்ள, 1823 இடங்கள், வரும், 19ம் தேதி துவங்கும் பொது கலந்தாய்வு மூலம், நிரப்பப்பட உள்ளன.இவை தவிர, ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியில், மாநில ஒதுக்கீடாக உள்ள, 85 பி.டி.எஸ்., இடங்களும், முதல்கட்ட கலந்தாய்வில் சேர்த்துக் கொள்ளப்படும். மேலும், 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக உள்ள, 838 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடான, 909 பி.டி.எஸ்., இடங்களும், கலந்தாய்வில் நிரப்பட உள்ளன. தனியார் கல்லூரிகளில் பிரிவு வாரியாக உள்ள, எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., இடங்கள் குறித்த விவரம், ஓரிரு நாளில் வெளியிடப்படும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ். ரேங்க் பட்டியல் வெளியீடு 7 மாணவ–மாணவிகள் 200–க்கு 200 கட் ஆப் மார்க்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான ரேங்க் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 7 மாணவ–மாணவிகள் 200–க்கு 200 கட் ஆப் மார்க் பெற்று முதல் 7 இடங்களையும், 3 பேர் 200–க்கு 199.75 கட் ஆப் எடுத்து 8, 9, 10–ம் இடங்களையும் பிடித்துள்ளனர். விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான முதல்கட்ட கவுன்சிலிங் 19–ந்தேதி தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த ஆண்டு புதிதாக தொடங்கப்படும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியும் அடங்கும். இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 2,430 எம்.பி.பி.எஸ். இடங்களில், அகில இந்திய ஒதுக்கீடு (15 சதவீதம்) போக எஞ்சியுள்ள 2065 இடங்களும், அதேபோல் 12 தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிற்கு கிடைக்கும் 838 இடங்களும் கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்படும்.
பல் மருத்துவக் கல்லூரியைப் பொருத்தவரையில் சென்னையில் மட்டும் ஒரேயொரு அரசு பல் மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்குள்ள 100 பி.டி.எஸ். இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு (15 சீட்டுகள்) எஞ்சிய 85 இடங்களும், 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டிற்கு கிடைக்கும் 939 இடங்களும் பொது கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்பட உள்ளன. மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு 29 ஆயிரம் மாணவ–மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களில் தகுதியான 28, 785 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்களுக்கு கடந்த 7–ந் தேதி கம்ப்யூட்டர் மூலமாக ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், ரேங்க் பட்டியல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இன்று மதியம் 12.15 மணிக்கு வெளியிடப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ரேங்க் பட்டியலை வெளியிட்டார்.
இதில் 7 மாணவ–மாணவிகள் 200–க்கு 200 கட் ஆப் மார்க் பெற்று முதல் 7 இடங்களையும், 3 பேர் 200–க்கு 199.75 கட் ஆப் எடுத்து முறையே 8, 9, 10–ம் இடங்களையும் பிடித்தனர். பின்னர் அமைச்சர் வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்த ஆண்டு மருத்துவ, பல் மருத்துவ படிப்புகளுக்கு 29,569 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் தகுதியான 28,785 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்களில் மாணவர்கள் 10,182 பேர். மாணவிகள் 18,603 பேர். மொத்த விண்ணப்பதாரர்களில் 26,348 பேர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள். 850 பேர் சி.பி.எஸ்.இ. மாணவர்கள். 28 பேர் ஐ.சி.எஸ்.இ. மாணவர்கள். மொத்த மாணவ–மாணவர்களில் 10,629 பேர் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் ஆவர்.
மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் பொது கவுன்சிலிங் 19–ந்தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக 18–ந்தேதி மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்டோருக்கான சிறப்பு ஒதுக்கீட்டு கவுன்சிலிங் நடைபெறும். கவுன்சிலிங் அட்டவணை ஓரிரு நாளில் வெளியிடப்படும்.இவ்வாறு அமைச்சர் வீரமணி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் வம்சதாரா, கூடுதல் இயக்குனரும், தேர்வுக்குழு செயலாளருமான டாக்டர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்கள்
எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். ரேங்க் பட்டியலில் 7 மாணவ–மாணவிகள் 200–க்கு 200 கட் ஆப் பெற்று முதல் 7 இடங்களையும், எஞ்சிய 3 பேர் 200–க்கு 199.75 கட் ஆப் எடுத்து 8, 9, 10–ம் இடங்களையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். அவர்களின் பெயர், படித்த பள்ளி விவரம் வருமாறு:–
1. எஸ்.அபினேஷ், கிரீன் பார்க் மெட்ரிக்குலேஷன் பள்ளி, நாமக்கல்
2. ஜி.பரணிதரன், ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி
3. எஸ்.பழனிராஜ், வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளி, வரகுராம்பட்டி, திருச்செங்கோடு
4. எஸ்,தினேஷ், ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி
5. கே.ரவீனா, ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை
6. ஜி.நந்தினி ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை
7. என்.பி.ஜெயஓவியா, ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை
8. எஸ்.முத்துமணிகண்டன், நசரேத் மெட்ரிக் பள்ளி, ஆவடி, சென்னை
9. எஸ்.விக்னேஷ், கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல்
10.கே.ஏ.ஹேம்நாத், ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை.

பி.இ., "ரேங்க்’ பட்டியலை, அண்ணா பல்கலை, நாளை(12ம் தேதி) காலை வெளியிடுகிறது.

பி.இ., “ரேங்க்’ பட்டியலை, அண்ணா பல்கலை, நாளை(12ம் தேதி) காலை வெளியிடுகிறது. இந்த ஆண்டு, 2.35 லட்சம் பி.இ., விண்ணப்பங்கள் விற்பனை ஆயின. எனினும், 1.89 லட்சம் மாணவர்கள் மட்டும், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அண்ணா பல்கலையிடம் சமர்ப்பித்தனர். இதில், மாணவர்கள், 1.14 லட்சம் பேர்; மாணவியர், 74 ஆயிரம் பேர். கடந்த, 5ம் தேதி, “ரேண்டம்’ எண்களை, அண்ணா பல்கலை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, 1.89 லட்சம் மாணவர்களின் “ரேங்க்’ பட்டியலை, நாளை, 12ம் தேதி காலை, அண்ணா பல்கலை வெளியிடுகிறது. அண்ணா பல்கலை, “ரேங்க்’ பட்டியலை வெளியிட்டதும், மாணவர்கள், தங்களுடைய “ரேங்க்’ விவரங்களை, http://www.annauniv.edu என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். வரும் 21ம் தேதி முதல், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்குகிறது. ஜூலை, 30ம் தேதி வரை கலந்தாய்வை நடத்தி, ஆகஸ்ட் 1ம் தேதி, வகுப்புகளை துவக்க, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகள் பட்டியல் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடத்துவதற்கு இந்திய மருத்துவ கல்வி கவுன்சிலிடம் அங்கீகாரம் பெற்று, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திடம் இணைப்பு பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளின் பெயர்ப்பட்டியலை இந்திய மருத்துவக் கவுன்சில் தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகள், மருத்துவப்படிப்புக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள அங்கீகாரம் பெற்றுள்ளது.
கல்லூரிகள் பெயர் பட்டியல்
இதுதவிர, 
  1. வேலூர், கிறிஸ்துவ மருத்துவக்கல்லூரி (சி.எம்.சி.), 
  2. கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக்கல்லூரி, 
  3. பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவ கல்லூரி, 
  4. கன்னியாகுமரி ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவ கல்லூரி, 
  5. மேல்மருவத்தூரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி, 
  6. காஞ்சிபுரத்திலுள்ள கற்பக விநாயகா மருத்துவக்கல்லூரி, 
  7. திருச்சியிலுள்ள சென்னை மருத்துவக்கல்லூரி, 
  8. சென்னை, மாங்காட்டிலுள்ள ஸ்ரீ முத்துகுமரன் மருத்துவக்கல்லூரி, 
  9. பெரம்பலூர் ஸ்ரீ முத்துகுமரன் மருத்துவக்கல்லூரி, 
  10. தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி, 
  11. சேலத்தில் உள்ள அன்னப்பூர்ணா மருத்துவக்கல்லூரி, 
  12. சென்னை மாதா மருத்துவக்கல்லூரி, 
  13. கோவையிலுள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி 

ஆகிய தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகள் மட்டுமே மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்ள அங்கீகரிக்கப்பட்ட தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளாகும்.
மாணவர்களுக்கு கோரிக்கை
திருவள்ளூர் மாவட்டம், குன்னவலம் கிராமத்தில் உள்ள டி.டி. மருத்துவக்கல்லூரிக்கு 2011–2012, 2012–2013, 2013–2014 ஆகிய கல்வி ஆண்டில் மருத்துவப்படிப்பில் மாணவர்களை சேர்த்துக்கொள்ள அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை.
2013–14 கல்வியாண்டில் மருத்துவப்படிப்பில் சேரும் மாணவர்கள், அங்கீகாரம் பெற்ற தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளின் பெயர் விபரங்களை இந்திய மருத்துவ கவுன்சிலின் இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள் என தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

அண்ணாமலை பல்கலைகழகத்தின் 2013-14ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பொறியியல் சார்ந்த படிப்பிற்கான நுழைவு தேர்வு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப கடைசி தேதி 30.05.2013 | நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள் : 7,8,9-06-2013

அண்ணாமலை பல்கலைகழகத்தின் 2013-14ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பொறியியல் சார்ந்த படிப்பிற்கான நுழைவு தேர்வு விண்ணப்பங்களை  பூர்த்தி செய்து, மே  30ம் தேதிக்குள், பல்கலைக்கழக அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.அண்ணாமலை பல்கலைகழகத்தில் இந்த ஆண்டு நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் களின் அடிப்படையில் சேர்க்கை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு ஒற்றை சாளர முறை மாணவர் சேர்க்கை 2013-2014 | விண்ணப்பங்கள் 27.05.2013 முதல் வழங்கப்படுகின்றன.

தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு ஒற்றை சாளர முறை மாணவர் சேர்க்கை 2013-2014 | விண்ணப்பங்கள் 27.05.2013 முதல் வழங்கப்படுகின்றன.

நர்சிங், பார்மசி, பிசியோதெரபி உள்ளிட்ட துணைநிலை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் வழங்கப்படும் என்று மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் தெரிவித்தார்.

நர்சிங், பார்மசி, பிசியோதெரபி உள்ளிட்ட துணைநிலை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் வழங்கப்படும் என்று மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் தெரிவித்தார்.
தொழிற்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்து விட்ட நிலையிலும், கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையிலும் மாணவ–மாணவிகள் குறிப்பாக, மாணவிகள் பெரிதும் விரும்பும் நர்சிங் படிப்புக்கான விண்ணப்பங்கள் மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை. விண்ணப்பம் எப்போது வழங்கப்படும்? என்பதும் அறிவிக்கப்படவில்லை.இதுகுறித்து மாநில மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனரும், மருத்துவ தேர்வுக்குழுவின் செயலாளருமான டாக்டர் சுகுமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, செங்கல்பட்டு, சேலம் ஆகிய 4 இடங்களில் அரசு நர்சிங் கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 50 சதவீதம் மொத்தம் 200 பி.எஸ்சி. (நர்சிங்) இடங்கள் இருக்கின்றன. இவை தவிர, 145 தனியார் நர்சிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 5,087 இடங்கள் கிடைக்கும்.கூடுதல் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைக்க வாய்ப்பு இருப்பதால் இந்த இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், பிசியோதெரபி பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப படிவங்கள் அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் வழங்கப்படும்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள 23 அரசு நர்சிங் கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு 2 ஆயிரம் சீட்டுகள் உள்ளன. இவற்றில் சேருவதற்கான விண்ணப்பங்களை ஜூன் மாதம் 2–வது வாரத்தில் வழங்க திட்டமிட்டுள்ளோம். இதுபற்றி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு டாக்டர் சுகுமார் கூறினார்.
மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்து விட்ட நிலையில் முக்கிய படிப்புகளில் ஒன்றான நர்சிங் படிப்புக்கு மட்டும் விண்ணப்பம் வழங்குவது தாமதமாகி வருவதால் மாணவ–மாணவிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நர்சிங் பட்டப் படிப்புக்கும் சரி, டிப்ளமோ நர்சிங் படிப்புக்கும் சரி வேலைவாய்ப்பு அதிகமாக இருப்பதால் நர்சிங் படிப்பில் சேர மாணவிகள் அதிக ஆர்வமாக உள்ளனர்.
கடந்த ஆண்டு கட் ஆப் மார்க்
நர்சிங் பட்டப் படிப்புக்கான கட் ஆப் மார்க் பிளஸ்–2 இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய மதிப்பெண்களின் அடிப்படையில் 200–க்கும், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு 100–க்கும் கணக்கிடப்படுகிறது.
கடந்த 2012–2013–ம் கல்வி ஆண்டில் நர்சிங் பட்டப் படிப்புக்கும் டிப்ளமோ படிப்புக்கும் இருந்த கட் ஆப் மார்க் பட்டியலை மருத்துவ தேர்வுக்குழு வெளியிட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:–
பி.எஸ்சி. நர்சிங் 
மாணவர்கள்
பொதுப்பிரிவு – 182.75
பிற்படுத்தப்பட்டோர் – 171.25
பிற்படுத்தப்பட்டோர்–முஸ்லிம் – 181.75
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 161
ஆதி திராவிடர் – 174.25
ஆதி திராவிடர் – அருந்ததியினர் – 174.25
மாணவிகள்
பொதுப்பிரிவு – 182.75
பிற்படுத்தப்பட்டோர் – 175.25
பிற்படுத்தப்பட்டோர்–முஸ்லிம் – 173.25
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 175
ஆதி திராவிடர் – 171.25
ஆதி திராவிடர் – அருந்ததியினர் – 175
பழங்குடியினர் – 151.50
டிப்ளமோ நர்சிங் 

உதவித்தொகையுடன் கூடியது
பொதுப்பிரிவு – 87
பிற்படுத்தப்பட்டோர் – 76.63
பிற்படுத்தப்பட்டோர்–முஸ்லிம் – 48.38
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 76.88
ஆதி திராவிடர் – 76.38
ஆதி திராவிடர் – அருந்ததியினர் – 73.38
பழங்குடியினர் – 61.75
உதவித்தொகை இல்லாதது
பொதுப்பிரிவு – 81.13
பிற்படுத்தப்பட்டோர் – 74.13
பிற்படுத்தப்பட்டோர்–முஸ்லிம் – 41.25
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 76
ஆதி திராவிடர் – 75.63
ஆதி திராவிடர் – அருந்ததியினர் – 72.38
பழங்குடியினர் – 57.63

மருத்துவம் மற்றும் பல்மருத்துவ படிப்புகளில் சேர 28,300 மாணவ–மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 700 குறைவு ஆகும்.

மருத்துவம் மற்றும் பல்மருத்துவ படிப்புகளில் சேர 28,300 மாணவ–மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 700 குறைவு ஆகும்.அரசு மருத்துவ கல்லூரிகளில் 1,823 எம்.பி.பி.எஸ். இடங்களும், அரசு பல் மருத்துவ கல்லூரியில் 85 சீட்டுகளும் பொது கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்படுகின்றன. இவை தவிர, அரசு ஒதுக்கீடாக தனியார் மருத்துவ கல்லூரிகளில் 836 எம்.பி.பி.எஸ். இடங்களையும், தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் 909 இடங்களையும் கவுன்சிலிங் மூலமாகத்தான் நிரப்புகிறார்கள்.நடப்பு கல்வி ஆண்டில் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரிக்கு 100 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், சென்னை மருத்துவ கல்லூரிக்கு 85 இடங்களுக்கும், ஸ்டான்லி மருத்துவ கல்லூரிக்கு 100 இடங்களுக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) அனுமதி அளிக்கும் பட்சத்தில் அகில இந்திய இடஒதுக்கீடு இடங்கள் நீங்கலாக எஞ்சிய இடங்களும் கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்படும்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 9–ந் தேதி முதல் 18–ந் தேதி வரை வழங்கப்பட்டன. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 32,050 விண்ணப்பங்கள் விற்பனை ஆனது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க நேற்று கடைசி நாள் ஆகும்.அதன்படி, கடைசி நாளான நேற்று வரை மொத்தம் 28,300 விண்ணப்பங்கள் நேரிலும், தபால் மூலமாகவும் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் நிருபர்களிடம் தெரிவித்தார்.
சென்ற ஆண்டு மருத்துவ படிப்புகளில் சேர 39 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை ஆனது. ஆனால், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தவர்கள் 29 ஆயிரம் பேர் மட்டுமே. எனினும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 700 பேர் குறைவாக விண்ணப்பித்து இருக்கிறார்கள்.ஒருசில மாணவர்கள் என்ஜினீயரிங் மற்றும் மருத்துவம் இரண்டு படிப்புகளுக்கும் விண்ணப்பிப்பது உண்டு. இரண்டிலும் அரசு கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டால் பெரும்பாலான மாணவ–மாணவிகள் மருத்துவ படிப்பை உதறிவிட்டு என்ஜினீயரிங் சேர்ந்துவிடுவது வழக்கம். இந்த ஆண்டும் கணிசமான மாணவ–மாணவிகள் மருத்துவ படிப்புக்கும், என்ஜினீயரிங் படிப்புக்கும் விண்ணப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.இ., பி.டெக். படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே 21 முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன.

பி.இ., பி.டெக். படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே 21 முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ முடித்த மாணவர்கள் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேரலாம். வார வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
விண்ணப்பப் படிவங்களை நேரடியாக பெற விரும்புவோர் ரூ.300-க்கான டி.டி.யை “The Secretary, Second year BE/B.Tech Degree Admissions 2013. Alagappa chettiar College of Engineering and Technology Chettiar College of Engineering and Technology, Karaikudi – 630004” என்ற பெயரில், காரைக்குடியில் மாற்றத்தக்க வகையில் எடுக்க வேண்டும். அதைக் கொடுத்து விற்பனை மையங்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
சென்னையில் கிண்டிதொழில்நுட்பக் கல்வி இயக்ககத்திலும், புரசைவாக்கம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியிலும் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “The Secretary, Second year BE/B.Tech Degree Admissions 2013. Alagappa chettiar College of Engineering and Technology Chettiar College of Engineering and Technology, Karaikudi – 630004” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 12-ஆம் தேதி ஆகும்.
இதற்கான கலந்தாய்வு வருகிற ஜூன் மாதம் கடைசி வாரத்தில் அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும். அழைப்புக் கடிதம் உரியவர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்விஸ் தேர்வுகளான, ஜஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளின் விடைத்தாள்களை ஆன்லைனில் வெளியிட ஆலோசித்து வருகிறது.

யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்விஸ் தேர்வுகளான, ஜஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளின் விடைத்தாள்களை ஆன்லைனில் வெளியிட ஆலோசித்து வருகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், சிவில் சர்விஸ் தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. முதல் நிலை, பிரதான நிலை, நேர்முகத்தேர்வு என மூன்று நிலைகளை கொண்டது. விண்ணப்பதாரர்களின் கோரிக்கைக்கினங்க விடைத்தாள்களை ஆன்லைனில் வெளியிடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த முறைக்கு அனுமதி கிடைத்தவுடன் விடைத்தாள்கள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று மத்திய பணியாளர் தேர்வணையம் தெரிவித்துள்ளது.

பி.இ. விண்ணப்பத்துடன் மாற்றுச் சான்றிதழை இணைக்கத் தேவையில்லை

பி.இ. விண்ணப்பத்துடன் மாற்றுச்சான்றிதழை இணைக்கத் தேவையில்லை என்று அண்ணா பல்கலைக்கழக தாற்காலிக துணைவேந்தர் பி.காளிராஜ் கூறினார்.பி.இ. கலந்தாய்வின்போது மாற்றுச்சான்றிதழ் மற்றும் பிற அசல் சான்றிதழ்களைக் கொண்டுவந்தால் போதுமானது என்றும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
பி.இ. விண்ணப்பத்தில் கோரியுள்ள சான்றிதழ்கள் அனைத்தையும் கேட்டு வட்டாட்சியர் அலுவலகங்களில் மாணவர்கள் குவிந்துள்ளதாகத் தெரிகிறது. விண்ணப்பங்களைப் பெற்றவுடன் மாணவர்கள் அதில் வழங்கப்பட்டுள்ள குறிப்புகளை கவனமாகப் படிக்க வேண்டும்.
உதாரணத்துக்கு, தமிழ்நாட்டில் 8 முதல் 12 வரை படித்துள்ள மாணவர்களுக்கு இருப்பிடச் சான்றிதழ் தேவையில்லை. இந்தத் தகவல் விண்ணப்பத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழும் அனைவருக்கும் தேவையில்லை.
அந்தந்தப் பிரிவுக்குரிய மாணவர்களுக்கு தேவைப்படும் சான்றிதழ்களை மட்டும் விண்ணப்பதோடு இணைத்தால் போதுமானது. மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழோ, மாற்றுச்சான்றிதழோ இல்லையென்றாலும் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். கலந்தாய்வின்போது அவர்கள் அசல் சான்றிதழ்களை எடுத்துவந்தால் போதுமானது. சில அரிய சந்தர்ப்பங்களில் சான்றிதழ் கிடைக்கப்பெறாத மாணவர்களும் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 20-க்குள் சமர்ப்பித்துவிட வேண்டும்.
கலந்தாய்வுக்கு முன்னதாக அவர்களின் பதிவு எண்ணை குறிப்பிட்டு இந்தச் சான்றிதழ்களை மாணவர்கள், “செயலர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு’வுக்கு அனுப்பலாம்.
சி.பி.எஸ்.இ. மாணவர்கள்: பி.இ. விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க மே 20-ம் தேதி கடைசி நாளாகும். ஆனால், சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவு மே 20-க்குள் வெளியாக வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. எனவே, சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழின் நகலை மட்டும் மே 30-க்குள் நேரிலோ, தபால் மூலமோ சமர்ப்பித்தால் போதுமானது. பிற தகவல்கள் அடங்கிய விண்ணப்பங்களை அவர்கள் மே 20-க்குள் சமர்ப்பித்துவிட வேண்டும்.
ஜூன் 17-ல் விளையாட்டுப் பிரிவு கலந்தாய்வு: பி.இ. கலந்தாய்வில் விளையாட்டுப் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 500 இடங்களுக்கு ஜூன் 17-ம் தேதி கலந்தாய்வு தொடங்கும். ஜூன் 17 முதல் 19 வரை கலந்தாய்வு நடைபெறும். மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு ஜூன் 20-ம் தேதி நடைபெறும். பொது கலந்தாய்வு ஜூன் 21-ம் தேதி தொடங்கும்.
பொறியியலுக்குத் தேவையான கணிதம்: வரும் கல்வியாண்டில் பி.இ. படிப்பில் கணிதம், தொழில் திறன் மேம்பாடு ஆகியை பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பொறியியல் படிப்புகளுக்குத் தேவையான கணிதம் மட்டும் பி.இ., பி.டெக். முதலாமாண்டு மாணவர்களுக்கு மீண்டும் கற்றுத்தரப்படும். அவர்களுக்கான முதல் அகமதிப்பீட்டுத் தேர்வும் இந்த கணிதத்தில் இருந்துதான் இருக்கும்.
இதன் மூலம் மாணவர்கள் கணிதம், கணிதம் தொடர்பான படிப்புகளில் ஆர்வத்துடன் படிக்கலாம். பி.இ. மாணவர்களுக்கான தொழில் திறனை மேம்படுத்தும் வகையில் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். மாநிலம் தழுவிய அளவில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில் ஒவ்வொரு மண்டல அளவிலும் வளாகத் தேர்வுகளுக்கு முக்கியத்துவம் ஏற்படுத்தப்படும், என்றார் காளிராஜ்.தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலாளர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் உடனிருந்தார்.

எஸ்.ஐ.வி.இ.டி., கல்லூரியில், இளநிலை, முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

கௌரிவாக்கத்தில் உள்ள எஸ்.ஐ.வி.இ.டி., கல்லூரியில், இளநிலை, முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

இளநிலை பட்டப் படிப்பு:

பி.எஸ்சி., கணினி அறிவியல், பயோ-கெமிஸ்ட்ரி, பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.காம்.

முதுகலை பட்டப் படிப்பு;

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி.,பயோ-கெமிஸ்ட்ரி, எம்.பில்., (வணிகம், கணிதம்)

மாணவிகள் தங்கி படிப்பதற்கேற்ப விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான தகவல்களுக்கு S.I.V.E.T College. Velachery Main Road. Gowrivakkam, Chennai – 73, என்ற முகவரியில் கேட்டறியலாம் அல்லது 044-22780037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 199-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 199-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் கட்ட கலந்தாய்வு முடிந்த பிறகு, அனைத்துப் பிரிவினருக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் 198.50. இந்த ஆண்டு கட்-ஆஃப் மதிப்பெண் 0.50 அளவுக்கு அதிகரிக்கும் என்பதால், அனைத்துப் பிரிவினருக்கு (ஓ.சி.) உரிய கட்-ஆஃப் மதிப்பெண் 199-ஆக இருக்கும்.இதேபோன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.) உள்பட அனைத்துப் பிரிவினரின் கட்-ஆஃப் இந்த ஆண்டு 0.50 மதிப்பெண் வரை அதிகரிக்கும்.
2012-13 கட்-ஆஃப் விவரம்: 
ஓ.சி.-198.50; 
பி.சி.-197.50; 
பிசிஎம்-196.25; 
எம்.பி.சி.-196.00; 
எஸ்.சி.-192.25; 
எஸ்.சி.ஏ.-192.00; 
எஸ்.டி.-185.00.
இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் அதிகரித்துள்ளதால், கடந்த ஆண்டு படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு இந்த ஆண்டும் வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு சார்ந்த கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில், பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

அரசு மற்றும் அரசு சார்ந்த கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில், பொறியியல் படிப்பில் சேர  விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
மாணவர்கள் விண்ணப்ப படிவங்களை ரூ.500 செலுத்தியும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்தி விண்ணப்ப படிவத்தை  பெற்று கொள்ளலாம்.
தபால் மூலம் விண்ணப்பங்களை பெற ரூ.750ம், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.450ம் வரைவோலை எடுத்து The Secretary, Tamilnadi Engineering Admissions. Anna University, Chennai – 600025. என்ற முகவரி மூலம் விண்ணப்பங்களை பெறலாம்.
http://www.annauniv.edu/tnea2013 என்ற இணையதளத்திலும்  மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்ப படிவங்கள் மே 4 முதல் 20ம் தேதி வரை, காலை 9.30 முதல் மாலை 5.30 வரை (ஞாயிற்று கிழமைகளிலும்) வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 20ம் தேதி 5.30க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் தகவல்களை பெற http://www.annauniv.edu என்ற இணையதளத்தை அணுகலாம் அல்லது 044-2235 8265, 2235 8266, 2235 8267 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பம் விநியோகம் தொடக்கம்

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், மாணவர்கள் சேர்க்கைகான விண்ணப்பங்கள் நேற்று முதல் விநியோகிக்கப் படுகின்றது.
2013-14 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 30 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பல்வேறு படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதில், பிளஸ் 2 மற்றும் ஐஐடி படித்த மாணவர்கள், நேரடியாக இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்பில் சேர்க்கப்படுகின்றனர். விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 24ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

நடப்பாண்டில் சட்டப் படிப்புக்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு, மே 15ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

நடப்பாண்டில் சட்டப் படிப்புக்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு, மே 15ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
பி.ஏ., பி.எல்.,(ஹானர்ஸ்), பி.ஏ., பி.எல்., ஐந்தாண்டு சட்டப் படிப்புகள் ஆகியவை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வழங்கப்படுகிறது.
இப்படிப்புக்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் மே 15ம் தேதி முதல் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.

கோயம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், 2013-14 கல்வியாண்டில் இளநிலை பட்டப் படிப்பில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோயம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், 2013-14 கல்வியாண்டில் இளநிலை பட்டப் படிப்பில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இளநிலையில்  – பி.எஸ்சி.,யில் (வேளாண்மை, தோட்டக்கலை, பாரஸ்ட்ரி, ஹோம் சயின்ஸ், சேரி கல்சுரல்),  பி.டெக்.,(பயோ-டெக்னாலஜி, தோட்டக்கலை, பயோ-இன்பர்மேடிக்ஸ், அக்ரிகல்சுரல் இன்பர்மேஷன் டெக்னாலஜி, அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங், புட் புராசஸ் இன்ஜினியரிங், எனர்ஜி அன்ட் என்விரான்மென்டல் இன்ஜினியரிங்)  பி.எஸ்., (அக்ரி பிசினஸ் மேனஜ்மென்ட்) ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றது.
விண்ணப்பதார்கள் பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் மற்றும் விலங்கியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்து படித்திருக்க வேண்டும்.
பிளஸ் 2வில் (Vocational Stream) உயிரியல் மற்றும் வேளாண் செயல்முறை பாடங்களைப் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பி.எஸ்சி., (அக்ரிகல்சுரல், ஹார்டிகல்சுரல், பாரஸ்ட்ரி), பி.டெக்., அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங்) ஆகிய பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
21 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினருக்கு வயது வரம்பு இல்லை.
தமிழ்நாட்டினை இருப்பிடமாக கொண்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே பட்டப்படிப்பில் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தமிழ்நாடு வேளாண்மை இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்த பின், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை இணையதளத்திலிருந்து அச்சுப்பதிவு (print out) எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழை இணைத்து பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்து பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூன் 7 ஆகும். மேலும் விரிவான தகவல்களுக்கு http://www.tnau.ac.in/admission.html என்ற இணையதளத்தில் அல்லது 0422 – 6611345, 6611346 என்ற தொலைபேசி எண்னை தொடர்பு கொள்ளலாம்.

மே 9 முதல் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன .

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 9 முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன .

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 1,823 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்காக மொத்தம் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பத்தைப் பெறுவதற்கான கடைசி தேதி மே 18 ஆகும்.
பூர்த்தி செய்யப்பட்ட் விண்ணப்பங்களை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ சேர்க்கைக் குழுவுக்கு மே 20-க்குள் அனுப்ப வேண்டும்.

2013-2014-ம் ஆண்டு மருத்துவம் மற்றும் பல்மருத்துவப் பட்டப்படிப்பிற்கு மார்ச் 2013 மேல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இணையதளத்திலிருந்து மேல்நிலை தேர்வு மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து “செயலர், தேர்வுக்குழு, சென்னை-10” என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

தேர்வு முடிவுகள் வெளிவரும் வரை காத்திருக்காமல் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சாதி மற்றும் இருப்பிட சான்றிதழ்களுடன் என்ஜினீயரிங் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்று சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் அறிவித்தார்.

தேர்வு முடிவுகள் வெளிவரும் வரை காத்திருக்காமல் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சாதி மற்றும் இருப்பிட சான்றிதழ்களுடன் என்ஜினீயரிங் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்று சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் அறிவித்தார்.
மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழை ஆன்–லைன் மூலம் எடுத்து மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகளை அண்ணா பல்கலைக்கழகமே மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் கூறினார்.
சட்டசபையில் தே.மு.தி.க. உறுப்பினர் வெங்கடேசன் பேசுகையில், ‘‘இம்மாத இறுதியில் சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதால், அந்த மாணவர்கள் என்ஜினீயரிங் கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் தேதியை நீட்டிக்க அரசு ஆவன செய்ய வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.
அதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பதில் அளித்து பேசியதாவது:–
என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை ஜூலை 30–ந்தேதிக்குள் முடித்து, ஆகஸ்டு 1–ந்தேதி கல்லூரிகளில் வகுப்பு தொடங்க வேண்டும் என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.அதனால்தான் பிளஸ்–2 தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட்டுள்ளோம். கடந்த ஆண்டு மே மாதம் 21–ந்தேதிதான் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு மே 9–ந்தேதியே தேர்வு முடிவுகளை வெளியிட்டுவிட்டோம். என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 20–ந்தேதி கடைசி நாளாகும்.
ஜூன் 5–ந்தேதி ரேண்டம் எண்ணும், ஜூன் 12–ந்தேதி ரேங்க் பட்டியலும் வெளியிடப்படும். ஜூன் 21–ந்தேதி முதல் ஜூலை 30–ந்தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி குறித்த காலத்திற்குள் மாணவர் சேர்க்கை முடிக்கப்பட்டு, ஆகஸ்டு 1–ந்தேதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கும்.
சி.பி.எஸ்.இ. மாணவர்கள், தேர்வு முடிவுகள் வெளிவரும் வரை காத்திருக்காமல் உடனடியாக என்ஜினீயரிங் படிப்பிற்கான விண்ணப்பத்தை வாங்கி, பூர்த்தி செய்து, அத்துடன் சாதிச்சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து கொடுக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகமே சி.பி.எஸ்.இ. மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை ஆன்–லைன் மூலம் டவுன்லோடு செய்து மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகளை மேற்கொள்ளும்.
தேர்வு முடிவுகள் வந்த பிறகு இணையதளத்தில் இருந்து மதிப்பெண் பட்டியலை மாணவர்களே டவுன்லோடு செய்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கலாம். எனவே, சி.பி.எஸ்.இ.மாணவர்களை, என்ஜினீயரிங் படிப்பில் சேர்ப்பதில் எவ்வித பிரச்சினையோ, குழப்பமோ இருக்காது.இவ்வாறு அமைச்சர் பழனியப்பன் கூறினார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு மாணவர்கள் பி.இ. படிப்பில் சேருவதற்கு உரிய ஒட்டுமொத்த மதிப்பெண் (கட்-ஆஃப்) 0.25 முதல் 0.5 மதிப்பெண் வரை குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். படிப்பைப் பொருத்தவரை ஒட்டுமொத்த மதிப்பெண் (கட்-ஆப்) வகுப்பு வாரியாக 0.25 முதல் 0.5 வரை அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு மாணவர்கள் பி.இ. படிப்பில் சேருவதற்கு உரிய ஒட்டுமொத்த மதிப்பெண் (கட்-ஆஃப்) 0.25 முதல் 0.5 மதிப்பெண் வரை குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ். படிப்பைப் பொருத்தவரை ஒட்டுமொத்த மதிப்பெண் (கட்-ஆப்) வகுப்பு வாரியாக 0.25 முதல் 0.5 வரை அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண்: பி.இ. படிப்பைப் பொருத்தவரை கணிதம்-இயற்பியல்-வேதியியல் ஆகிய முக்கியப் பாடங்களில் மாணவர்கள் எடுத்துள்ள மதிப்பெண்ணைக் கணக்கிட்டு ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. இந்த ஆண்டு கணிதத்தில் 2,352 பேர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்; கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது (2,656 பேர்) இந்த எண்ணிக்கை குறைவு.
இந்த ஆண்டு கணிதத் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 200-க்கு 195 மதிப்பெண்ணுக்குமேல் கணிதத்தில் எடுத்துள்ளவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதனால் பி.இ. படிப்புக்கு உரிய ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண்ணில் (கட்-ஆஃப்) சரிவு ஏற்பட்டுள்ளது என்று கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்தார்.
காலியிடங்கள் அதிகரிக்கும்: ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகளில் ஏற்படும் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு சுமார் 55,000 காலியிடங்கள் ஏற்பட்டன; கட்-ஆஃப் மதிப்பெண் சரிவு மற்றும் கணிதத்தில் மதிப்பெண் குறைவு காரணமாக தகுதி மதிப்பெண்ணை எட்ட முடியாத நிலை ஆகியவை காரணமாக இந்த ஆண்டு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.இ. காலியிடங்கள் ஏற்படும் எனத் தெரிகிறது.
எம்.பி.பி.எஸ்.–தொடரும் கடும் போட்டி: எம்.பி.பி.எஸ். படிப்பைப் பொருத்தவரை உயிரியல்-வேதியியல்-இயற்பியல் ஆகிய முக்கியப் பாடங்களில் மாணவர்கள் எடுத்துள்ள மதிப்பெண்ணைக் கணக்கிட்டு ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.
இந்த ஆண்டு உயிரியல் பாடத்தில் 682 மாணவர்களும் வேதியியல் பாடத்தில் 1,499 மாணவர்களும் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்துள்ளனர்; இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் அதிகம். இயற்பியல் பாடத்தில் இந்த ஆண்டு 36 மாணவர்கள் மட்டுமே (கடந்த ஆண்டு 142 பேர்) 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
எனினும் இயற்பியல் பாடத்தில் 200-க்கு 195 மதிப்பெண்ணுக்குமேல் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகமான மாணவர்கள் பெற்றுள்ளதால், எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் 0.25 முதல் 0.5 வரை அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
சென்னை கல்லூரிகளுக்கு கடும் போட்டி: சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் சேருவதற்கு கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் வகுப்பு வாரியாக கடும் கட்-ஆஃப் போட்டி ஏற்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களில், ஒரே கட்-ஆப் மதிப்பெண்ணில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம்பெறுவதே கட்-ஆப் மதிப்பெண் போட்டிக்குக் காரணமாகும்.

மே 13 முதல் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பம் வினியோகம்

இளங்கலை கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே 13ஆம் தேதி முதல் வினியோகிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் கே.ஏ.துரைசாமி வெளியிட்டுள்ள செய்தி:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 2013-14ஆம் ஆண்டு அளிக்கப்படும் கால்நடை மருத்துவம், மீன்வளம், உணவுத் தொழில்நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்ப படிப்புகளுக்கான இளங்கலை பிரிவில் சேர விண்ணப்பப் படிவங்கள் நாமக்கல் லத்துவாடியிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆரய்ச்சி நிலையத்திலும், நாமக்கல் திருச்சி சாலையிலுள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்திலும் திங்கள்கிழமை (மே 13) முதல் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பப் படிவத்துக்கான கட்டணம் ரூ.600, இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் ரூ.300 மட்டுமே செலுத்தினால் போதும். இந்தக் கட்டணத்தை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டு அந்த ரசீதுடன் விண்ணப்ப கடித்தை இணைத்து அளித்து விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். மே 31ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டு அவற்றை ஜூன் 3ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தில் சமர்ப்பித்திட வேண்டும்.
விண்ணப்பப் படிவங்கள் குறித்த வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களையும் http://www.tanuvas.ac.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04286 – 266491 மற்றும் 04286 – 220650 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.