Category Archives: TRBNEWS

ஆசிரியர் தேர்வு வாரியம் தொடர்பாக எந்த சந்தேகமாக இருந்தாலும் நேரில் செல்லுங்கள் அல்லது 7373008134 மற்றும் 7373008144 ஆகிய செல்போன்களில் தொடர்பு கொள்ளுங்கள் .

ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மனு கொண்டுவருபவர்களுக்கு கம்ப்யூட்டர் உதவியுடன் உடனடியாக பதில் அளிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் செய்கிறது. அதுமட்டுமல்ல அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்கிறது. மேலும் அரசு கலை கல்லூரிகளுக்கு உதவி பேராசிரியர்களை தேர்வு செய்கிறது. இப்படியாக வருடம் முழுவதும் ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை நடத்தி வருகிறது.
இப்போது ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக விபுநய்யர் உள்ளார். உறுப்பினர் செயலாளராக தண்.வசுந்தராதேவியும், உறுப்பினர்களாக க.அறிவொளியும், தங்கமாரியும் உள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அதில் சிலர் மதிப்பெண் குறைவாக இருக்கிறது என்றும், சிலர் விடை சரியாக இல்லை என்றும் புகார் தெரிவித்தவண்ணம் தினமும் வருகிறார்கள்.
அவ்வாறு வருபவர்களுக்கு சரியான முறையில் பதில் அளிப்பதற்காக தலைவர் விபுநய்யர் ஒரு குறைதீர்ப்பு மையத்தை ஏற்படுத்தி உள்ளார்.
இந்த மையம் ஆசிரியர் தேர்வு வாரிய நுழைவு வாயில் அருகே உள்ளது.
இதற்காக லேடி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் திலகவதியும், கூடுவாஞ்சேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் செந்தில்வேலும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதில் ஆசிரியர் செந்தில்வேல் ஆசிரியர் தேர்வு வாரிய நுழைவு வாயிலில் இருக்கிறார். கோரிக்கை கொண்டுவருபவர்களிடம் மனுக்களை பெறுகிறார். ஆசிரியர் தகுதி தேர்வில் குறைந்த மார்க் உள்ளது என்று கூறினால் உடனே அவரை அருகே உள்ள குறை தீர்க்கும் மையத்திற்கு அழைத்துச்செல்கிறார்.
அங்கு ஆசிரியர் திலகவதி உடனடியாக கம்ப்யூட்டர் உதவியுடன் அந்த நபரின் விடைத்தாளை எடுத்து காண்பித்து பார்க்கவைக்கிறார்.
கடந்த 2 நாட்களாக இந்த மையம் செயல்பட்டு வருகிறது. இது தொடர்ந்து செயல்பட உள்ளது. கடந்த 2 நாட்களில் 13 பேர் மதிப்பெண் வித்தியாசம் என்று கோரி வந்தனர். அந்த நிமிடமே கோரிக்கை மனு கொண்டுவந்தவர்களை கம்ப்யூட்டர் முன் அமர்த்தி பதில் அளிக்கப்படுகிறது. குறைதீர்க்கும் மையத்தில் பார்த்த பின்னர் அவர்கள் திருப்தியுடன் செல்கிறார்கள்.
மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ள விடைகளில் சில தவறு உள்ளன என்று பலர் மனு கொடுத்துள்ளனர்.
இந்த குறை உள்பட மொத்தம் 300–க்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளன. சிலர் தொலைபேசியில் தங்களது குறைகளை தெரிவிக்கிறார்கள். அவர்களின் தொலைபேசி எண்ணை வாங்கி வைத்துக்கொண்டு பின்னர் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து பதில் அளிக்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் தொடர்பாக எந்த சந்தேகமாக இருந்தாலும் நேரில் வரலாம். அல்லது 7373008134 மற்றும் 7373008144 ஆகிய செல்போன்களில் தொடர்பு கொள்ளலாம்.

கல்விச்சோலை | டி.இ.டி., தேர்வு முடிவு வெளியீடு: 4 சதவீதம் பேர் தேர்ச்சி -முழு விவரம்.

செய்தி 

டி.ஆர்.பி., மூன்றாவது முறையாக, ஆகஸ்ட்டில் நடத்திய டி.இ.டி., தேர்வு முடிவை, நேற்றிரவு வெளியிட்டது. தேர்வெழுதிய, 6.6 லட்சம் பேரில், வெறும், 4.09 சதவீதம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றனர். முந்தைய தேர்வை விட, 1.1 சதவீதம் பேர், கூடுதலாக தேர்ச்சி பெற்றனர். ஆகஸ்ட், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. தமிழகத்தில், முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியர் பணி), 2.62 லட்சம் பேரும், இரண்டாம் தாள் தேர்வை (பட்டதாரி ஆசிரியர் பணிக்கானது), 4 லட்சம் பேரும் எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் தயாராக இருந்தன. இரு வாரங்களாக, தேர்வு முடிவை, தேர்வர் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில், நேற்றிரவு, தேர்வு முடிவை, டி.ஆர்.பி., வெளியிட்டது. www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், தேர்வு முடிவு வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய, 6.6 லட்சம் பேரில், 27,092 பேர், தேர்ச்சி பெற்றனர். வெறும், 4.09 சதவீதம் பேர் மட்டுமே, நிர்ணயிக்கப்பட்ட, 60 சதவீத மதிப்பெண் மற்றும் அதற்கு அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு, அக்டோபரில் நடந்த தேர்வை விட, 1.1 சதவீதம் பேர், கூடுதாலாக தேர்ச்சி பெற்றனர். கடந்த தேர்வில், 2.99 சதவீதம் பேர், தேர்ச்சி பெற்றனர்.

புள்ளி விவரம்

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள்தேர்வுகள் நடத்தப்பட்டன. முதல் தாள் தேர்வை இரண்டு லட்சத்து 62 ஆயிரத்து 187 பேர் எழுதினர். இரண்டாம் தாள் தேர்வை 4 லட்சத்து 311 பேர் எழுதினர். அந்த வகையில் தமிழகத்தில் இரண்டு தாள்களையும் 6 லட்சத்து 62 ஆயிரத்து 498 பேர் எழுதினர்.

முதல் தாள் எழுதிய இரண்டு லட்சத்து 62 ஆயிரத்து 187 பேரில் ஆண்கள் 63ஆயிரத்து 717 பேர், பெண்கள் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 470 பேர். இவர்களில் 12 ஆயிரத்து 596 பேர், 60 சதவீதம் மார்க்குக்கு மேல் (தேர்ச்சிக்கான மதிப்பெண்) பெற்றுள்ளனர்.முதல் தாள் தேர்வு எழுதியவர்களில் 4.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் இரண்டாயிரத்து 908 பேர் (4.56 சதவீதம்) ஆண்கள்; 9 ஆயிரத்து 688 பேர் (4.88 சதவீதம்) பெண்கள்.

முதல் தாளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது, கன்னடா ஆகிய மொழிக்கான தேர்வு நடத்தப்பட்டன. தமிழ் தேர்வில் இரண்டு லட்சத்து 58 ஆயிரத்து 990 பேர் (ஆண்கள் 62 ஆயிரத்து 190, பெண்கள் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 800) பங்கு பெற்றனர். அவர்களில் 12 ஆயிரத்து 433 பேர் (ஆண்கள் 2,823, பெண்கள் 9,610) 60 சதவீதம் மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இரண்டாம் தாளை எழுதிய 4 லட்சத்து 311 பேரில், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 954 பேர் ஆண்கள், இரண்டு லட்சத்து 84 ஆயிரத்து 357 பேர் பெண்கள். இவர்களில் 14 ஆயிரத்து 496 பேர் 60 சதவீதத்துக்கும் மேல் மார்க் எடுத்து தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி அடைந்துள்ள 14,496 பேரில்,4,835 பேர் ஆண்கள், 9,661 பேர் பெண்கள். இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் 3.62 ஆகும். ஆண்கள் 4.16 சதவீதம், பெண்கள் 3.39 சதவீதம் பேர் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இரண்டு தாள்களையும் எழுதிய 6 லட்சத்து 62 ஆயிரத்து 498 பேரில், 27 ஆயிரத்து 92 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் சதவீதம் 4.21 ஆகும்.

புதுச்சேரிக்கான முதல் மற்றும் இரண்டாம் தாள்களை 7 ஆயிரத்து 991 பேர் எழுதினர். முதல் தாளை 3 ஆயிரத்து 857 பேரும் (642 ஆண்கள், 3,215பெண்கள்), இரண்டாம் தாளை 4 ஆயிரத்து 134 பேரும் (875 ஆண்கள், 3,259 பெண்கள்) எழுதினர்.முதல் தாளை எழுதிய 3,857 பேரில் 181 பேர், 60 சதவீதம் மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி அடைந்த 181 பேரில் 28 பேர் ஆண்கள் (4.36 சதவீதம்), 153 பேர் பெண்கள் (4.75சதவீதம்). அந்த வகையில் முதல் தாளை எழுதியவர்களில் மொத்தம் 4.69 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.இரண்டாம் தாளை எழுதிய 4,134 பேரில், 58 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 7 பேர் ஆண்கள் (0.08 சதவீதம்), 51 பேர் பெண்கள் (1.56 சதவீதம்). இரண்டாம் தாளை எழுதியவர்களில் 1.40 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

TET RESULT RELEASED | கடந்த ஆகஸ்டு 2013-ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தின் பலகையில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டுள்ளன.இணையதளத்திலும் வெளியிடப்பட்டது.

கடந்த ஆகஸ்டு 2013-ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தின் பலகையில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டுள்ளன.இணையதளத்திலும்  வெளியிடப்பட்டது..

முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு – தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவின் முழு விவரம்….நவம்பர் 12 ந் தேதி வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதி அரசர்கள் ஜெயச்சந்திரன் எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு வர உள்ளது.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில்,பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன.பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத்தாக்கல் செய்தனர்.ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியருக்கான போட்டித்தேர்வில் தமிழ்ப் பாடத்தில் 31 ஆயிரத்து 983 பேர் எழுதியுள்ளனர். ஏ,பி,சி,டி என நான்கு பிரிவாக வழங்கப்பட்ட வினாத் தாளில் பி வரிசையில் 8,002 பேர் எழுதியுள்ளனர். நான்கு பிரிவு வினாத்தாளும் ஒன்றே, கேள்விகளின் வரிசையில் மற்றும் மாற்றம் இருக்கும். இருப்பினும்,பி வரிசை வினாத்தாளில் 54 இடங்களில் எழுத்துப் பிழைகள் உள்ளன. அதுவும் ங் என்ற எழுத்து து எனவும், ழ் என்பது துணைக் காலாகவும் அச்சிடப்பட்டுள்ளது. தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண்ணை எடுத்தவர், பி வரிசை வினாத்தாளில் தான் எழுதியிருக்கிறார். அதோடு, அதிக மதிப்பெண் எடுத்த முதல் 10 பேரில் 6 பேர் பி வரிசை வினாத்தாளில் எழுதியவர்கள். ஆனால், இரு தேர்வர்கள்மட்டுமே எழுத்துப் பிழையான 21 கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த நிலையில், தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், பிழையான 40 கேள்விகளுக்கும் முழு மதிப்பெண் வழங்குவது அல்லது பிழையான கேள்விகளை நீக்கிவிட்டு 110மதிப்பெண்களுக்கு மட்டும் மதிப்பீடு செய்வது என இரு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும், இதை தனி நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில், மறுதேர்வு நடத்துவதால் இந்தப் பணி மேலும் தாமதமாகும். மேலும், 31 ஆயிரத்து 983 பேர் எழுதிய தமிழ்ப் பாடத் தேர்வை ரத்து செய்துவிட்டு, மீண்டும் தேர்வு நடத்துவது தேவையற்ற பெரும்செலவினத்தை ஏற்படுத்தும். அதோடு, முந்தைய தேர்வை நன்றாக எழுதியவர்கள், மறுதேர்வில் அதே அளவுக்கு சிறப்பாகச் செய்ய முடியாமல் போகலாம். மறுதேர்வை சிலதேர்வர்கள் எழுத முடியாமலும் போகலாம். இதனால் அவர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். ஆகவே,மறுதேர்வு உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் எனமனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த மனுவை விசாரித்த எம்.ஜெயச்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்குத் இடைக்கால தடை விதித்தது.
முதுகலைத் தமிழாசிரியர்கள் தேர்வு முடிவு குறித்து அனைவரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில்.வருகின்ற நவம்பர் 12 ந் தேதி வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதி அரசர்கள் ஜெயச்சந்திரன் எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு வர உள்ளது. அன்று எதிர்மனுதாரர்கள் எதிர்மனு தாக்கல் செய்வதுடன் தங்கள் தரப்பு வாதத்தை முன் வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதே சமயத்தில் முதுகலைத் தமிழாசிரியர் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தோர் மறு தேர்வு என்பது தங்களது பலமாத உழைப்பினால்கிடைத்த பலன் கைக்கு வந்தது வாய்க்கு எட்டாத நிலையினை ஏற்படுத்தியுள்ளது என்பதால் வழக்கினில் தங்களையும் இணைத்துக்கொண்டு தங்கள் தரப்பு வாதத்தையும் முன் வைக்கக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையில் நடைபெற்ற முதுகலைத் தமிழாசிரியர் தேர்வில் முதல் இடத்தை பி பிரிவில் தேர்வு எழுதியவர்தான் பெற்றுள்ளதாகவும் அப் பிரிவில் தேர்வு எழுதியோர் 8,002 பேரின் சராசரி மதிப்பெண்ணுக்கும் மற்ற ஏ,சி,டி பிரிவினரின் சராசரி மதிப்பபெண்ணுக்கும் வித்தியாசம் மிகமிகக் குறைவே என டிஆர்.பி தனது மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளதாகவும் தெரிகின்றது.
அத்தேர்வில் முதல் மதிப்பெண் 120 ஐ ஒட்டியே உள்ளதாகவும் சுமார் 20 பேர் மட்டுமே 150 மதிப்பெண்களுக்கு 110 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர் எனவும் . தேர்வு முடிவு அதனடிப்படையில் வெளியிடப்பட்டால் கட்ஆப் மதிப்பெண் வெகுவாகக் குறையக்கூடும் எனவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர் தகுதித்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் பட்டியல் ……..

ஆசிரியர் தகுதித்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் பட்டியல் வெளியீடு

முதல் தாள் (இடைநிலை ஆசிரியர் தேர்வு):

1. சி. இராஜம்மாள் – ஈரோடு மாவட்டம் – 126 மதிப்பெண் – முதல் இடம்

2. பி. சத்யா – திண்டுக்கல் மாவட்டம் – 122 மதிப்பெண் – இரண்டாவது இடம்

   ஆர்.இராமசந்திரன் – விழுப்புரம் மாவட்டம் – 122 மதிப்பெண்

   (ஒரே மதிப்பெண் இருந்தால், பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்)

இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர் தேர்வு) :

1. ஆர். வினுஷா – தூத்துக்குடி மாவட்டம் – 126 மதிப்பெண் – முதல் இடம்

2. பி. இராஜகாளீஸ்வரி – இராமநாதபுரம் மாவட்டம் – 123 மதிப்பெண் – இரண்டாவது இடம்

3. வி. மேகலா – காஞ்சிபுரம் மாவட்டம் – 122 மதிப்பெண் – மூன்றாவது இடம்

   சி. குருமூர்த்தி – ஈரோடு மாவட்டம் – 122 மதிப்பெண் – மூன்றாவது இடம்

   பி. அன்பரசி – திருவண்ணாமலை மாவட்டம் – 122 மதிப்பெண் – மூன்றாவது இடம்

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கூடுதலாக அழைக்கப்பட்ட 213 பேருக்கு நவம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கூடுதலாக அழைக்கப்பட்ட 213 பேருக்கு நவம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கடந்த ஜூலை 22ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தமிழ் பாடத் தேர்வு வினாத்தாளில் 40 க்கும் அதிகமான பிழைகள் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இதனைத்தொடர்ந்து தமிழைத் தவிர பிற பாடங்களுக்கு மதிப்பெண் பட்டியல் www.trb.tn.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.இதனைத் தொடர்ந்து, 2770 பேர் அழைக்கப்பட்டு, கடந்த 22 மற்றும் 23ஆம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. ஒரே இன சுழற்சியில் சமமான மதிப்பெண் பெற்ற மேலும் 213 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவதாககடந்த 24ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதன் அடிப்படையில் வரும் 5 மற்றும் 6ம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில், தற்போது அழைப்புக் கடிதம் பெற்றவர்களுடன், ஏற்கெனவே பங்கேற்க தவறியவர்களும் பங்கேற்கலாம் என்று டிஆர்பி தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வின் முடிவினை வெளியிட தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வின் முடிவினை வெளியிட தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எம்.பழனிமுத்து தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்ட அறிவிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வு நடத்தி வருகிறது.
இந்த தகுதி தேர்வு, இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் நடத்தப்படுகிறது. ஆனால் ஆந்திரா உள்ளிட்ட 14 மாநிலங்களில், ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது.
எனவே தமிழகத்திலும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்த ஆசிரியர் தேர்வு வாரியம், ‘தகுதியான, திறமையான ஆசிரியர்களை தேர்வு செய்யவேண்டும் என்பதற்காக தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றப்படவில்லை. இதுகுறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது’ என்று கூறியிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் பழனிமுத்து ஆஜராகி, ‘கடந்த ஆகஸ்டு மாதம் நடந்து முடிந்த ஆசிரியர் தகுதி தேர்வின் விடைத்தாள்களை திருத்தும் பணி முடிந்துவிட்டது. தேர்வின் முடிவினை, ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்க உள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று வாதம் செய்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘இந்த மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் 18–ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதேநேரம், ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள், அதைத்தொடர்ந்து நடைபெறும் பணி நியமனம் ஆகியவை இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது’ என்று உத்தரவிட்டனர்.

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமனத் தேர்வில், அச்சுப் பிழையான கேள்விகள் இடம்பெற்றதால், ரத்து செய்து, மறு தேர்வு நடத்தும் தனி நீதிபதியின் உத்தரவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச், தடை விதித்தது.

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமனத் தேர்வில், அச்சுப் பிழையான கேள்விகள் இடம்பெற்றதால், ரத்து செய்து, மறு தேர்வு நடத்தும் தனி நீதிபதியின் உத்தரவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச், தடை விதித்தது. 
 மதுரை புதூர் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவில், “முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், “பி’ வரிசை வினாத்தாள்களில், 47 கேள்விகளில் அச்சுப்பிழைகள் காரணமாக, அவற்றுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும்; தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்றார். 
இதேபோல், திருச்சி, அந்தோணி கிளாரா, மற்றொரு மனு செய்தார். அக்., 1ல், நீதிபதி எஸ்.நாகமுத்து பிறப்பித்த உத்தரவில், “இதற்கு, ஒரே தீர்வு, மறு தேர்வு தான். ஜூலை 21ல் நடந்த தமிழாசிரியர் நியமன தேர்வு ரத்து செய்யப்படுகிறது. ஆறு வாரங்களுக்குள், டி.ஆர்.பி., மறு தேர்வு நடத்த வேண்டும்’ என்றார். இதை எதிர்த்து, டி.ஆர்.பி., செயலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு: “பி’ வரிசை வினாத்தாள், 8,002 பேருக்கு வினியோகிக்கப்பட்டது. இதில், பிழையான வினாக்கள் இடம்பெற்றதாக, இருவர் மனு செய்துள்ளனர். அச்சுப்பிழையால் வினாக்கள், விடைகளில் பொருள் மாறவில்லை; புரியும் வகையில் உள்ளன. “பி’ வரிசை வினாத்தாள்படி தேர்வு எழுதியவர்கள், அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். மறுதேர்வு நடத்தினால், காலவிரயம், அரசுக்கு கூடுதல் செலவு, பணிச்சுமை ஏற்படும். ஆசிரியர்களை உடன் நியமிக்க வேண்டியுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டிருந்தார். நீதிபதிகள், எம்.ஜெய்சந்திரன், எஸ்.வைத்தியநாதன், “பெஞ்ச்’ முன், மனு விசாரணைக்கு வந்தது. “மறுதேர்வு நடத்தும், தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது; நவ., 12க்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது’ என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தாவரவியல் ஆசிரியர் தகுதி தேர்வில், தவறான விடைக்கு மதிப்பெண் அளித்ததால், 193 பணியிடங்களில் ஒரு இடத்தை மட்டும் காலியாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தாவரவியல் ஆசிரியர் தகுதி தேர்வில், தவறான விடைக்கு மதிப்பெண் அளித்ததால், 193 பணியிடங்களில் ஒரு இடத்தை மட்டும் காலியாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பி.தேன்மொழி (வயது 34). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
நான், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவள். எம்.எஸ்சி. (தாவரவியல்), பி.எட். பட்டங்கள் பெற்றுள்ளேன். ஆசிரியர் தேர்வு வாரியம், 193 முதுநிலை தாவரவியல் உதவி பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு கடந்த 21–7–2013 அன்று நடத்திய எழுத்து தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதினேன்.
இந்த தேர்வு முடிவு 11–10–2013 அன்று வெளியானது. அதில், எனக்கு 93 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த தேர்வில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு ‘கட் ஆப்‘ மதிப்பெண் 94 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து என் விடைத்தாளை சரிபார்த்தபோது, நான் அளித்த சரியான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கவில்லை என்பது தெரியவந்தது.
இந்த தேர்வில், கேள்வி எண்கள் 31–க்கு சரியான விடைக்கு மதிப்பெண் வழங்காமலும், தவறான விடைக்கு மதிப்பெண் வழங்கப்பட்டும் உள்ளது. நான் அளித்த சரியான விடைக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு இருந்தால், ‘கட் ஆப்’ மதிப்பெண் 94 பெற்று, ஆசிரியர் பணிக்கு தகுதியானவராக இருந்து இருப்பேன்.
இதுகுறித்து, 31–வது கேள்விக்கு சரியான விடைகளை ஆதாரங்களுடன் குறிப்பிட்டு, மனுவாக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பினேன்.
இதுவரை எந்த பதிலும் வரவில்லை. எனவே சரியான விடை அளித்த எனக்கு மதிப்பெண் வழங்கவும், ‘கட் ஆப்’ மதிப்பெண் பெற்றுவிட்டதால், எனக்கு ஆசிரியர் பணி வழங்கவும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜி.அன்பரசு ஆஜராகி வாதம் செய்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
ஆசிரியர் தகுதி தேர்வில், தாவரவியல் பாடத்தில் 31–வது கேள்விக்கு சரியான விடையை மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இது சரியான விடைதான் என்பதை 11–ம் வகுப்பு தாவரவியல் பாடபுத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதையும் ஆதாரமாக தாக்கல் செய்துள்ளார்.
இப்போது, மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்கினால், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு நிர்ணயம் செய்துள்ள ‘கட் ஆப்’ மதிப்பெண்ணை அவர் பெற்றுவிடுவார்.
எனவே, மனுதாரரை சான்றிதழ் சரிபார்க்கும் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு விடுக்க வேண்டும். 193 தாவரவியல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களில், ஒரு இடத்தை நிரப்பாமல் வைத்திருக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிடுகிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக 213 தேர்வர்கள் அடங்கிய கூடுதல் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக 213 தேர்வர்கள் அடங்கிய கூடுதல் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வகுப்பு வாரியாக ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதையடுத்து, மொத்தம் 213 பேர் அடங்கிய பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வியாழக்கிழமை இரவு வெளியிட்டது.
இவர்கள் அனைவருக்கும் நவம்பர் 5, 6-ஆம் தேதிகளில் சென்னையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடம், நேரம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. தமிழ் பாடம் தவிர மீதமுள்ள பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டன.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களின் பட்டியல் அக்டோபர் 11-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்வு முடிவுகளை வெளியிடவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் தேர்வு வாரியம், வழக்கமான பாணியை மாற்றி, புதிய முறையில், முதுகலை ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம், வழக்கமான பாணியை மாற்றி, புதிய முறையில், முதுகலை ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியுள்ளது. வழக்கமாக, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந் ததும், தேர்வர்களுடைய ஆவணங்கள் அனைத்தும், டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு கொண்டு வரப்படும்.
பின், அதிகாரிகள் அடங்கிய குழு, ஒவ்வொரு தேர்வரின் சான்றிதழ்களையும், ஆய்வு செய்யும். இந்தப் பணிகள் முடிவதற்கே, பல நாட்கள் ஆகிவிடும். இந்நிலையில், 23, 24ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14 மையங்களில், முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில், வழக்கத்திற்கு மாறாக, புதிய முறையை, டி.ஆர்.பி., கையாண்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மையத்திற்கும், சி.இ.ஓ., தலைமையில், நான்கு அலுவலர்கள், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பொறுப்பு ஏற்கச் செய்தது. தேர்வர்களுடைய சான்றிதழ்களை, மையத்தில் உள்ள பல்வேறு குழுக்கள் ஆய்வு செய்து முடித்ததும், அது குறித்த விவரங்களை, அங்கே இருந்தபடி, டி.ஆர்.பி., இணையதளத்தில், அப்லோட் செய்தனர். மேலும், தேர்வர்களின் சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும், ஆசிரியர் பணிக்கு, தகுதியானவர் என்றும், தேர்வு செய்யப்பட்ட தேர்வரின் ஆவணத்தில், சி.இ.ஓ., உட்பட, நான்கு பேரும் கையெழுத்திட்டு, அதன் நகலை, தேர்வர்களுக்கு வழங்கவும், டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்தது. இதன்மூலம், டி.ஆர்.பி., அலுவலகத்தில், மீண்டும் ஒரு முறை தனியாக, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடக்காது. நேரடியாக, தேர்வுப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, பட்டியல் வெளியிடப்படும். அதே நேரத்தில், தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில், சி.இ.ஓ., உள்ளிட்ட நான்கு அலுவலர்களை பொறுப்பேற்கச் செய்திருப்பதை நினைத்து, அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்வு செய்யப்படும் ஆசிரியரில், யாராவது பின்னாளில், தகுதியற்றவர்களாக கண்டுபிடிக்கப்பட்டால், சான்றிதழை சரிபார்த்த, நான்கு அலுவலர்கள் மீதும், துறை ரீதியாக, கடும் நடவடிக்கை எடுப்பதற்கு, டி.ஆர்.பி., வழிவகை செய்துள்ளது. இது, எங்களுக்கு, தேவையற்ற, டென்ஷனை ஏற்படுத்தி உள்ளது, என்றார்.

ஒரு இடத்திற்கு, ஒருவர் வீதம், வெறும், 2,276 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி, முதுகலை ஆசிரியர், இறுதி தேர்வு பட்டியலை, விரைந்து வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்த நிலையில், ஐகோர்ட், மதுரை கிளை வெளியிட்ட உத்தரவு காரணமாக, தேர்வெழுதிய, 1.6 லட்சம் பேருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த உள்ளது.

ஒரு இடத்திற்கு, ஒருவர் வீதம், வெறும், 2,276 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி, முதுகலை ஆசிரியர், இறுதி தேர்வு பட்டியலை, விரைந்து வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்த நிலையில், ஐகோர்ட், மதுரை கிளை வெளியிட்ட உத்தரவு காரணமாக, தேர்வெழுதிய, 1.6 லட்சம் பேருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த உள்ளது. இதனால், இறுதி தேர்வுப் பட்டியல், இப்போதைக்கு வராது என, தேர்வர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 21ல், போட்டித்தேர்வு நடந்தது. அடுத்தடுத்த பணிகளை, விரைந்து முடிக்க, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்த நிலையில், தமிழ் பாட கேள்வித்தாளில், 47 கேள்விகள், பிழையாக அச்சடிக்கப்பட்டிருந்ததாக கூறி, ஐகோர்ட், மதுரை கிளையில், ஒரு தேர்வர், வழக்கு தொடர்ந்தார். தமிழ் பாடத்திற்கு, மறு தேர்வை நடத்த, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மறு தேர்வை நடத்துவதா, அல்லது கோர்ட் தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்வதா என, இதுவரை, டி.ஆர்.பி., முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில், தமிழ் பாடம் தவிர்த்து, இதர பாடங்களுக்கு, ஒரு பணிக்கு, ஒருவர் வீதம், 2,276 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, நேற்று துவங்கியது. மாநிலம் முழுவதும், 14 மையங்களில், நேற்று, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இன்றும், தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில், வரலாறு பாடத்தில், 111 மதிப்பெண் எடுத்தும், தமக்கு, சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்புக் கடிதத்தை, டி.ஆர்.பி., அனுப்பவில்லை என்றும், இதே மதிப்பெண் எடுத்த மற்றவர்களுக்கு, அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறி, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த, ஜான் ஆபிரகாம் என்பவர், ஐகோர்ட், மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல், விலங்கியல் பாடம் சம்பந்தமாகவும், வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, நாகமுத்து, ஒவ்வொரு பாடத்திலும், கடைசி, “கட்ஆப்’ மதிப்பெண் பெற்றவர் வரை, அனைவருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, அதன் பட்டியலை, கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்’ என, உத்தரவிட்டார். இதன் காரணமாக, தேர்வெழுதிய, 1.6 லட்சம் பேருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த வேண்டிய நிலைக்கு, டி.ஆர்.பி., தள்ளப்பட்டுள்ளது. இவ்வளவு பேருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவது குறித்த அட்டவணையை, விரைவில் தயாரிக்க, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. எனவே, இப்போதைக்கு, தேர்வுப் பட்டியல் வெளிவர வாய்ப்பில்லை என, தேர்வர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.
முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஏற்படும் தாமதத்தால், மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பாதிக்காமல் இருக்க, 2,645 முதுகலை ஆசிரியர்களும், 3,900 பட்டதாரி ஆசிரியர்களும், தற்காலிக அடிப்படையில், பணி நியமனம் செய்ய, கடந்த, 7ம் தேதி, முதல்வர் உத்தரவிட்டார். இது குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகனிடம் கேட்டபோது, “”80 சதவீத ஆசிரியர், பணியில் சேர்ந்துவிட்டனர். மீதம் உள்ள, 20 சதவீத ஆசிரியர்களும், இந்த வார இறுதிக்குள் சேர்ந்துவிடுவர்,” என்றார். “ரெகுலர்’ முதுகலை ஆசிரியர் நியமனம் தள்ளிப்போகும் நிலையில், தற்காலிக ஆசிரியர் பணி நியமனம், மாணவர்களுக்கு, பெரிதும் பயனளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் சட்டக்கல்லூரி விரிவுரையாளர்களை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் சட்டக்கல்லூரி விரிவுரையாளர்களை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய 7 இடங்களில் அரசு சட்ட கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 7 ஆயிரத்து 800ம் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சட்டம் சார்ந்த படிப்புகளை படிக்கின்றனர். 110க்கும் மேற்பட்டோர் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு னீ500 ஊதியமாக வழங்கப்படுகிறது. மாதத்திற்கு 30 மணி நேரம் வகுப்பு எடுக்கின்றனர். வகுப்பு முடிந்ததும் இவர்கள் கல்லூரியை விட்டு சென்று விடுவர். இதனால் நிர்வாக பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டது. இதன் காரணமாக நிரந்தர விரிவுரையாளர்களை நியமனம் செய்ய பல்கலை. தரப்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக அரசு அனுமதி பெறப்பட்டுள்ளது. தேவைப்படும் விரிவுரையாளர்களை ஆசிரியர் தேர்வாணையம் மூலம் நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விபரங்கள் தற்போது ஆசிரியர் தேர்வாணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க சான்றிதழ் சரிபார்த்தல் 22, 23–ந்தேதிகளில் 14 மாவட்டங்களில் நடக்கிறது

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்த்தல் பணி 22 மற்றும் 23–ந்தேதிகளில் 14 மாவட்டங்களில் நடக்கிறது.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் காலிப்பணியிடங்கள் 2 ஆயிரத்து 881 உள்ளன. இந்த இடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய கடந்த ஜூலை மாதம் 21–ந்தேதி எழுத்துத்தேர்வை நடத்தியது. அந்த தேர்வில் தமிழ்பாடத்திற்கான தேர்வு வினாத்தாளில் ஏராளமான எழுத்துப்பிழைகள் இருந்தன. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. முடிவில் தமிழ்பாடத்திற்கான தேர்வை மீண்டும் நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து தமிழ் அல்லாத பிற பாடங்களின் தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 7–ந்தேதி இரவு வெளியிட்டது.
இப்போது சான்றிதழ் சரிபார்த்தலுக்கு இணையதளம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்பட்டவர்களின் பெயர்கள் இணையதளத்தில் உள்ளன.
சான்றிதழ் சரிபார்த்தல் 22 மற்றும் 23–ந்தேதிகளில் கன்னியாகுமரி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், கோவை, நாமக்கல், தர்மபுரி, திருச்சி, திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, ஈரோடு ஆகிய 14 மாவட்டங்களில் நடைபெறுகிறது.இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு முடிவுகள் ஒரு சில நாளில் வெளியாக உள்ளது-புதிய ஆசிரியர்கள் ஜனவரியில் நியமனம்.

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 – 2013 | CERTIFICATE VERIFICATION CENTRE LIST

TEACHERS RECRUITMENT BOARD CERTIFICATE VERIFICATION CENTERS LIST
CERTIFICATE VERIFICATION DATES : 22.10.2013 and 23.10.2013

Note : The Call Letter and other relevant forms will be uploaded in website  only on Tuesday (15.10.2013).  Candidates can take that printouts from Tuesday onwards.

1  KANYAKUMARI TIRUNELVELI THOOTHUKUDI
SLB GOVT. HR. SEC. SCHOOL,
NAGERCOIL, KANYAKUMARI DT -629001,
PH. NO. 04652 -232867    
2  RAMANATHAPURAM SIVAGANGAI PUDUKKOTTAI 
GOVT. HR.SEC. SCHOOL,
MARUTHUPANDIYAN NAGAR,
COLLECTOR OFFICE COMPUS,
SIVAGANGAI-630562
PH. NO. 04575-240759, CELL: 9994836771    
3  MADURAI VIRUDHUNAGAR    
SRI MEENAKSHI SUNDARESWARAR GIRLS HSS,
TEPPAKULAM,
MADURAI -625 009
PH. NO. 0452-2311169 
4  DINDIGUL THENI    
JOHN PAUL HR. SEC., SCHOOL,
DINDIGUL -624 001,
PH.NO. 0451 -2421037 
5  COIMBATORE THE NILGIRIS TIRUPPUR    
PRESENTATION CONVENT GOVT. HSS,
NEAR HPO,
COIMBATORE -641001 PH.NO. 0422-2392458, CELL : 9443000648 
6  NAMAKKAL KARUR 
GOVT. GIRLS HR. SEC. SCHOOL,
NAMAKKAL -637001,
PH.NO. 222555,
CELL : 9489900307 
7  DHARMAPURI 
ADIAMAN ARASU BOYS HR. SEC. SCHOOL,
DHARMAPURI-636701.
PH. NO. 7373773324   
8  TIRUCHIRAPALLI, ARIYALUR, PERAMBALUR    
BISHOP HEEPER HR. SEC. SCHOOL,
PUTHUR, TRICHY-18,
PH.NO. 9345286552 
9  TIRUVARUR NAGAPATTINAM THANJAVUR 
V.S BOYS HR. SEC. SCHOOL,
SOUTH BANK TIRUVARUR -610 001,
PH.NO. 04366 -240502    
10  VILLUPURAM CUDDALORE 
GOVT. GIRLS HR. SEC. SCHOOL,
VILLUPURAM -605 602
PH. NO. 9488243734 
11  TIRUVANNAMALAI KRISHNAGIRI    
DANISH MISSION HR. SEC. SCHOOL,
TIRUVANNAMALAI -606 602
PH. NO. 9443815445 
12  VELLORE KANCHEEPURAM    
GOVT. MUSLIM HR. SEC. SCHOOL,
ANNA SALAI, VELLORE -632 001
PH. NO. 9360743154 
13  CHENNAI THIRUVALLUR    
FATHIMA MAT. HR. SEC. SCHOOL,
SAIDAPET,
CHENNAI -600 015
PH.NO. 23810627, CELL : 9884074728 
14  ERODE SALEM    
GOVT. GIRLS HR. SEC. SCHOOL,
ERODE -638 001

            PH.NO. 0424 -2250940 

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் மும்முரமான பணியில் ஈடுபட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவை விரைவில்  வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் மும்முரமான பணியில் ஈடுபட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த மாதம் 17 மற்றும் 18–ந் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. இடை நிலை ஆசிரியர்களுக்கான தேர்வை 2 லட்சத்து 67 ஆயிரத்து 950 பேர் 677 மையங்களில் எழுதினார்கள். இவர்களில் 17 ஆயிரத்து 974 பேர் மாற்றுத்திறனாளிகள்.
 பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை 4 லட்சத்து 11 ஆயிரத்து 600 பேர் 1060 மையங்களில் எழுதினார்கள்.
தேர்வு முடிவு உடனடியாக வெளியிடப்பட இருந்தது. ஆனால் முதுகலை பட்டதாரிகள் பணிக்கான எழுத்துத்தேர்வில் தமிழ் தேர்வில் உள்ள வினாத்தாளில் எழுத்து பிழை இருந்தது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்தது. இதன் காரணமாக ஆசிரியர் தகுதி தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி பாதிக்கப்பட்டது.
பின்னர் தமிழ் பாடம் தவிர மற்ற பாடங்களுக்கான முதுகலை பட்டதாரி பணிக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி முடிந்துவிட்டது. தற்போது சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. 90 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. எப்படியும் இன்னும் 10 நாட்களுக்குள் தேர்வு முடிவை வெளியிட அதற்கான பணியில் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் உள்ளனர்.

முதுகலை ஆசிரியர் தெரிவு பெற்றோர் பெயர் பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீட்டில் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யும் வகையில் யாரும் யாருடைய மதிப்பெண்ணையும் இணையதளத்தில் பார்க்கும் வசதியை, ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீட்டில் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யும் வகையில் யாரும் யாருடைய மதிப்பெண்ணையும் இணையதளத்தில் பார்க்கும் வசதியை, ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணி இடங்களை நிரப்ப கடந்த ஜூலை 21-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த போட்டித் தேர்வு ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 748 பேர் எழுதினர்.
இந்த நிலையில், தேர்வு முடிவு திங்கட்கிழமை இரவு வெளியிடப்பட்டது.
தமிழ் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அந்த பாடம் நீங்கலாக மற்ற அனைத்து பாடங்களுக்கான தேர்வு முடிவையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
வழக்கமாக ஒரு தேர்வு முடிவு வெளியிடப்படும்போது தேர்வர்களின் மதிப்பெ ண்ணை அவர்கள் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். இந்நிலையில், வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் வகையில், ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீட்டில் புதிய முறையை அமல்படுத்தியுள்ளது.
அதன்படி, யார் வேண்டுமானாலும் யாருடைய மதிப்பெண்ணையும் அறிந்து கொள்ளும் வகையில் அனைவரின் மதிப்பெண் விவரங்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியி டப்பட்டன.
ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக இதுவரை பலமுறை போட்டித் தேர்வுகளை நடத்தி இருக்கிறது.
ஆனால், யாரும் யாருடைய மதிப்பெண்ணையும் தெரிந்து கொள்ளும் வகையில் அனைவரின் மதிப்பெண் விவரங்களையும் வெளிப்படையாக இணை யதளத்தில் வெளியிடுவது ஆசிரியர் தேர்வு வாரிய வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் தேர்வு எழுதியவர்கள் அனைவரின் மதிப்பெண் விவரங்களை, இடஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாக அறிந்துகொள்ள முடிவதால், தங்களுக்கு வேலை கிடைக்குமா, கிடைக்காதா? என்பதை ஓரளவுக்கு தாங்களே யூகித்துக்கொள்ள முடியும்.

TRB PGT RESULT RELEASED | கடந்த ஜூலை மாதம் நடந்த முதுநிலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

TRB PGT RESULT RELEASED | கடந்த ஜூலை மாதம் நடந்த முதுநிலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.As per the Notification No.2/2013 published on 09.05.2013, the written Competitive Examination for the Direct Recruitment of Post of Post Graduate Assistants and Physical Education Director Grade I Posts was held on 21.07.2013. A total No. of 167688 candidates applied for the written examination, and 159748 candidates appeared for the Written Examination. Now the marks obtained by all the candidates who have appeared for the written examination are hereby released (except Tamil subject) along with the revised key answer. The list of candidates called for Certificate Verification will be released by Teachers Recruitment Board separately.

முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவு | தமிழ் பாடம் தவிர மற்ற பாடங்களுக்கான முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவை ஓரிரு நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழ் பாடம் தவிர மற்ற பாடங்களுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவை ஓரிரு நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1) ஆகிய பதவிகளில் 2,881 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூலை 21-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 59 ஆயிரத்து 750 பேர் எழுதினார்கள். தேர்வுக்கான தாற்காலிக விடைகள் (கீ ஆன்சர்) ஒரு வாரத்தில் வெளியிடப்பட்டது.
இந்த விடைகளில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அது தொடர்பான விவரங்களை ஆகஸ்டு 5-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி, தேர்வு எழுதிய பலரும் தனியார் பயிற்சி மைய நிர்வாகிகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு விளக்கங்களை அனுப்பினார்கள். உரிய ஆவணங்களுடன் வந்த விளக்கங்களை மூத்த ஆசிரியர்கள் அடங்கிய நிபுணர் குழு ஆய்வு செய்தது.
இதற்கிடையே, அனைத்து விடைத்தாள்களும் கம்ப்யூட்டர் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு மதிப்பீடு செய்யும் பணி தொடங்கியது. இப்பணி முழுவதும் வீடியோவில் கண்காணிக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, தேர்வு முடிவு வெளியிடப்பட இருந்தது. இந்த நிலையில், தமிழ் பாடத்தில் 47 கேள்விகள் தவறாக இருப்பதால் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், தமிழ் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மற்ற பாடங்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட உயர் நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை. மறு தேர்வு நடத்தலாமா அல்லது உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாமா என்று அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
தமிழ் தவிர மற்ற பாடங்களுக்கான தேர்வு முடிவை வெளியிட தடை ஏதும் இல்லாததால் அவற்றுக்கான முடிவுகளை ஓரிரு நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
பிரச்சினை ஒரு பாடத்துக்கு மட்டுமே இருப்பதால், மற்ற பாடங்களுக்கான தேர்வு முடிவு வெளியிடுவது பாதிக்கப்படாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்ட மொத்த காலிபணியிடங்களில் (2,881) சர்ச்சையில் சிக்கியுள்ள தமிழ் பாடத்துக்குத்தான் காலி இடங்களின் எண்ணிக்கை அதிகம் (606 பணியிடங்கள்) என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் பாடத்தில் மட்டும் 39 ஆயிரம் பேர் தேர்வு எழுதி உள்ளனர்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ்ப் பாடத் தேர்வுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ்ப் பாடத் தேர்வுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத்துக்கான கேள்வித்தாள் ஏராளமான எழுத்துப் பிழைகளுடன் இருந்தது. இதையடுத்து, இந்தப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மறுதேர்வு நடத்துவதால் தமிழ் ஆசிரியர் நியமனம் மேலும் தாமதாகும் என்பதால், மேல்முறையீடு செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்காக தமிழ் தவிர, பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவுகளை சரிபார்க்கும் பணிகள் ஒரு வாரம் நடைபெறும் எனவும், அதன்பிறகு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஜூலை 21-ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை 1.59 லட்சம் பேர் எழுதினர்.
இதில் 605 தமிழாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வை 32 ஆயிரம் பேர் எழுதினர்.
இதில் தமிழ்ப் பாடத்தில் பி வரிசை வினாத்தாளில் 47 வினாக்கள் அச்சுப்பிழைகளுடன் இருந்தன. சாப்ட்வேர் கோளாறால் ஏற்பட்ட இந்த அச்சுப் பிழைகள், கேள்விகளை புரிந்துகொள்வதில் எந்தவித சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. எனவே, இதற்கு மறுதேர்வு நடத்தத் தேவையில்லை என வல்லுநர் குழு, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அறிக்கை அளித்தது.
இந்த நிலையில், பிழைகளுடன் உள்ள கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் அல்லது மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது 40 கேள்விகள் பிழைகளுடன் இருப்பதாகவும், அவற்றுக்கான மதிப்பெண்ணை கழித்துவிட்டு, 110 மதிப்பெண்ணுக்கு விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. ஆனால், இதை நீதிமன்றம் நிராகரித்தது.
இந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சோமயாஜி மூன்று யோசனைகளை முன் வைத்தார்.
வினாத்தாளில் பிழையான 40 கேள்விகளை நீக்கிவிட்டு, அந்த வினாத்தாளில் தேர்வெழுதியவர்களுக்கு 110 மதிப்பெண்ணுக்கு மதிப்பீடு செய்வது அல்லது பிழையான 40 கேள்விகளுக்கும் முழு மதிப்பெண்களை வழங்குவது அல்லது தமிழ்ப் பாடத்துக்கான அனைத்து வரிசை வினாத்தாளில் எழுதியவர்களுக்கும் ஒரே மாதிரியாக 110 மதிப்பெண்ணுக்கு மதிப்பீடு செய்வது இவற்றில் ஏதாவதொரு பரிந்துரையை அரசு ஏற்கத் தயாராக உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்ட 3 யோசனைகளுமே ஏற்புடையதாக இல்லை எனக் கூறி தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எஸ்.நாகமுத்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவுசெய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

முதுகலை ஆசிரியர் தேர்வில் தமிழ் பாட கேள்வித்தாளை பிழைகளுடன் அச்சிட்ட நிறுவனத்திற்கு அபராதம் விதிப்பதுடன் அந்த அச்சகத்தை கறுப்பு பட்டியலில் சேர்க்கவும் டி.ஆர்.பி. , முடிவு செய்துள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வில் , தமிழ் பாட கேள்வித்தாளை , பிழைகளுடன் அச்சிட்ட நிறுவனத்திற்கு , அபராதம் விதிப்பதுடன் , அந்த அச்சகத்தை , கறுப்பு பட்டியலில் சேர்க்கவும் , டி.ஆர்.பி. , முடிவு செய்துள்ளது. 

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் , காலியாக உள்ள , 2,881  முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப , கடந்த ஜூலையில் , டி.ஆர்.பி. , போட்டித் தேர்வை நடத்தியது. 1.5  லட்சம் பேர் , தேர்வு எழுதினர். இதன் முடிவு , இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் , தமிழ் பாட கேள்வித்தாளில் , 52  கேள்விகளில் , எழுத்துப்பிழைகள் இருந்தன என்றும் , இதனால் , அதற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் , மதுரையைச் சேர்ந்த ஒரு தேர்வர் , ஐகோர்ட் , மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கு , டி.ஆர்.பி. , க்கு , கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. “கேள்விகளில் உள்ள எழுத்துப்பிழையால் , கேள்வியை புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படவில்லை , எனினும் , அந்த கேள்விகளை நீக்கிவிட்டு , மீதமுள்ள கேள்விகளை கணக்கிட்டு , மதிப்பெண் வழங்கலாம் ‘ என்ற , டி.ஆர்.பி. , யின் கருத்தை , கோர்ட் ஏற்கவில்லை.  ” பிழையான கேள்விகளை அச்சிட்டது ஏன் ?, இதற்கு டி.ஆர்.பி. , தான் பொறுப்பு ‘ என்று , கோர்ட் தெளிவாக கூறிவிட்டது. பெரிய சிக்கலுக்கு காரணமான , அச்சகத்தின் மீது , டி.ஆர்.பி. , கடும் கோபத்தில் உள்ளது. 
இதுகுறித்து , டி.ஆர்.பி. , வட்டாரங்கள் கூறியதாவது: ரிசர்வ் வங்கி அங்கீகரித்துள்ள அச்சகத்தில் தான் , கேள்வித்தாளை அச்சடித்தோம். “செக்யூரிட்டி பிரஸ் ‘ என , கூறப்படும் இதுபோன்ற அச்சகங்களில் , கேள்வித்தாள்கள் தவிர , வேறு எதுவும் அச்சிடப்படாது. கேள்விகள் கலக்கப்பட்டு , பின் , ” ஏ.பி.சி.டி. ,’ என , நான்கு பிரிவாக அச்சடிக்கப்பட்டன. இதில் , ” பி ‘ வகை கேள்வித்தாளில் தான் , எழுத்துப்பிழைகள் ஏற்பட்டுள்ளன. கம்ப்யூட்டரில் , ” பான்ட் ‘ கோளாறு ஏற்பட்டதால் , எழுத்துப்பிழை ஏற்பட்டதாக , அச்சகம் தெரிவித்துள்ளது. அச்சடிப்பதற்கு முன் , அச்சகத்தில் உள்ள பாட வாரியான நிபுணர்கள் , கேள்விகளை சரிபார்ப்பர் ; அச்சடிக்கப்பட்டபின் , சரிபார்ப்பது கிடையாது. அப்படியே , சீலிடப்பட்டு அனுப்பப்படும். நடந்த குளறுபடிக்கு , அச்சகம் தான் காரணம். இதற்காக , சம்பந்தபட்ட அச்சகத்தின் மீது , கடும் நடவடிக்கை எடுக்கப்படும். “பில் ‘ தொகையில் , 25 சதவீதம் வரை , அபராதம் விதிப்பது , அந்த அச்சகத்தை , ” கறுப்பு பட்டியலில் ‘ சேர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கை குறித்து , ஆலோசித்து வருகிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு , டி.ஆர்.பி. , வட்டாரங்கள் தெரிவித்தன.

TRB NEWS | ஓரிரு நாளில் முதுகலை ஆசிரியர் தேர்வின் இறுதி விடை | அடுத்த வாரத்தில் தேர்வுப் பட்டியல்.

டி.இ.டி., தேர்வு விடைகளை ஆட்சேபித்து, 2,000 தேர்வர்கள், டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பித்து உள்ளனர். இந்த விண்ணப்பங்களை, பாட வாரியான நிபுணர் குழு, தற்போது, ஆய்வு நடத்தி வருகிறது. இதற்கிடையே, முதுகலை ஆசிரியர் தேர்வின் இறுதி விடைகளை, ஓரிரு நாளில் வெளியிட்டு, அடுத்த வாரத்தில், தேர்வுப் பட்டியலை வெளியிட, டி.ஆர்.பி., முடிவு எடுத்துள்ளது.
போட்டித் தேர்வு : அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., கடந்த ஜூலை, 21ல், போட்டித் தேர்வை நடத்தியது. 1.59 லட்சம் பேர், தேர்வை எழுதினர். தேர்வுக்கான தற்காலிக விடைகள் மீது, ஆட்சேபனை உள்ள தேர்வர்கள், அது குறித்து, உரிய சான்றுகளுடன், ஆக., 5ம் தேதி வரை, டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 1,000த்திற்கும் மேற்பட்டோர், ஆட்சேபனை தெரிவித்து விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்கள் மீது, பாட வாரியான நிபுணர் குழு, முடிவை எடுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அந்த முடிவுகளுக்கு டி.ஆர்.பி., போர்டு ஒப்புதல் அளித்ததும், இந்த வார இறுதிக்குள், இறுதி விடைகள் வெளியிடப்படும் எனவும், அடுத்த வாரத்தில், தேர்வு செய்யப்பட்ட, 2,881 பேரின் விவரங்கள், இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும், டி.ஆர்.பி.,
வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்வு செய்யப்படும் புதிய ஆசிரியர், இம்மாத இறுதிக்குள்ளாகவே பணி நியமனம் செய்யப்படுவர். வட மாவட்டங்களில், அதிகளவு, முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, அனைவரும், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில், பணி நியமனம் செய்யப்படுவர்.
2,000 பேர் ஆட்சேபனை : கடந்த ஆக., 17, 18 தேதிகளில், ஆசிரியர் தகுதிக்கான, டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. இதை, 6.5 லட்சம் பேர் எழுதினர். தேர்வுக்கான, தற்காலிக விடைகள், டி.ஆர்.பி., இணையதளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்டன. விடைகள் குறித்து, 2,000 பேர், ஆட்சேபம் தெரிவித்துள்ளதாக, டிஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம், மேலும் கூறியதாவது: பெற்றுள்ள விண்ணப்பங்களில் பெரும்பாலும் தமிழ்ப் பாட விடைகள் மீது தான், ஆட்சேபம் தெரிவித்து உள்ளனர். பல விடைகள், எங்களுக்கே குழப்பமாக உள்ளன. குறிப்பாக, குமரகுருபரர், எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பது கேள்வி. இதற்கு, 6ம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில், 16ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும், 8ம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இரு புத்தகங்களையும், பாடநூல் கழகம் வெளியிட்டு உள்ளது. நிபுணர் குழு, 17ம் நூற்றாண்டு தான் சரி என, தெரிவித்து உள்ளது. பாடநூல் கழகம், தவறான தகவலை வெளியிட்டு உள்ளதால், இந்தக் குழப்பம் ஏற்பட்டது. இதுபோல், பல தவறுகள் உள்ளன. அவற்றை, பாட வாரியான நிபுணர் குழு, ஆய்வு செய்து வருகிறது. ஒரு பாடத்திற்கான விடைகளை, மூன்று ஆசிரியர் குழு, ஆய்வு செய்கிறது. அதன்படி, டி.இ.டி., முதல் தாள் தேர்வு விடைகளை ஆய்வு செய்யும் பணியில், 25 ஆசிரியர்களும், இரண்டாம் தாள் விடைகளை ஆய்வு செய்யும் பணியில், 25 ஆசிரியர்களும் ஈடுபட்டு உள்ளனர். இவர்களில், ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் அடங்குவர். ஆட்சேபனை விண்ணப்பங்கள் மீது, முழுமையாக ஆய்வு நடத்தி, முடிவு எடுக்கப்பட்டதும், இறுதி விடைகள் வெளியிடப்படும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
பாடத்திட்டங்களின் அடிப்படையில், பல்வேறு ஆசிரியர்கள் எழுதிய நூல்களில் இருந்து, கேள்விகளும், விடைகளும் தயாரிக்கப்படுகின்றன. பாட வாரியாக, அனுபவம் வாய்ந்த நிபுணர் குழுக்கள் தான், கேள்விகளையும், விடைகளையும் தயாரிக்கின்றன. இதில், ஏதாவது சில கேள்விகளுக்கான விடைகள், தவறாக அமைவதற்கு வாய்ப்புகள் உண்டு. அப்படி அமைந்திருந்தால், அதைப் பற்றி, தேர்வர்கள், டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு, உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கும் போது, அது குறித்து ஆய்வு செய்து, தவறான விடைக்குரிய மதிப்பெண்களை வழங்குகிறது அல்லது சம்பந்தபட்ட கேள்வியை நீக்கி, மீதமுள்ள கேள்விகளுக்கு மட்டும் மதிப்பெண்களைக் கணக்கிட்டு, முடிவை வெளியிடுகிறது.ஆட்சேபனைகளுக்குப் பின், இறுதி விடைகள் தயாரிக்கப்பட்டு, மீண்டும், இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. இதன்பிறகே, பணி நியமனத்திற்கான தேர்வுப் பட்டியல் தயாராகிறது. தேர்வர்கள் பாதிக்கக் கூடாது என்ற அடிப்படையில், தற்காலிக விடை, இறுதி விடை என்ற முறையை, டி.ஆர்.பி., கையாள்கிறது. இதே முறையை, டி.என்.பி.எஸ்.சி.,யும் கடைப்பிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TNTET JUNE 2012 OCTOBER 2012 ஆகிய இரு டி.இ.டி., தேர்வுகளுக்குப் பின் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்கள், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்கள் ஆகியோருக்கு, இறுதியாக, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளித்து, டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த, இரு டி.இ.டி., தேர்வுகளுக்குப் பின் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்கள், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்கள் ஆகியோருக்கு, இறுதியாக, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளித்து, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. அதன்படி, செப்., 6, 7 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யார் வெளியிட்ட அறிவிப்பு:
கடந்த ஆண்டு, ஜூலை, 12 மற்றும் அக்டோபர், 14 ஆகிய தேதிகளில், டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, முறையே, கடந்த ஆண்டு, செப்., 7, 8 மற்றும் நவம்பர், 6 முதல் 9ம் தேதி வரை நடந்தன. இதில் பங்கேற்காத தேர்வர்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்று, உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்களுக்கு, மீண்டும் ஒரு இறுதி வாய்ப்பு வழங்கும் வகையில், வரும், செப்., 6, 7 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். இந்நிகழ்வு, சென்னை, அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்படும். கடந்த ஆண்டு, நவம்பர், 9ம் தேதி அன்று, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, உரிய முழுமையான கல்வித்தகுதியை பெற்றிருந்து, உரிய பட்டயச் சான்று, பட்டச் சான்று, மதிப்பீட்டிற்கான சான்று மற்றும் மதிப்பெண் பட்டியல் போன்றவற்றை சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு மட்டும், இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஏற்கனவே நடந்த சான்றிதழ் சரிபார்ப்பு ஆவணங்கள் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தேர்வர்களின் பதிவு எண்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. கடந்த, இரண்டு, டி.இ.டி., தேர்வுகளில், தேர்ச்சிக்குரிய, குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று, சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறியவர்களின் விவரங்கள், இணையதளத்தில் தரப்பட்டுள்ளன. தேர்வர்கள், பதிவு எண்களை சரிபார்த்து, அதில் அழைக்கப்பட்டுள்ளவர்கள் மட்டும், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம். தற்காலிக அடிப்படையில் தான், தேர்வர், அழைக்கப்படுகின்றனர். பெயர் விடுபட்டு இருந்தால், டி.ஆர்.பி., தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, விபு நய்யார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளுக்குப் பிறகே, பல தேர்வர்களுக்கு, சான்றிதழ்கள் கிடைத்தன. அவர்கள், அப்போதைய டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் சவுத்ரியிடம், பல முறை முறையிட்டும், அவர், தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. இதனால், வேலை வாய்ப்பை பெறும் நிலையில் இருந்த பலர், சான்றிதழ் இல்லாததன் காரணமாக, வேலை வாய்ப்பை இழந்தனர். பல பெண்கள், கண்ணீர் விட்டு கதறினர். எனினும், தேர்வர்களின் நியாயமான கோரிக்கைகள், கடைசிவரை பரிசீலிக்கப்படவில்லை. இந்நிலையில், எட்டு மாதங்களுக்குப்பின், டி.ஆர்.பி.,யின் புதிய தலைவராக பதவி ஏற்ற குறுகிய நாட்களிலேயே, தகுதி வாய்ந்த தேர்வர்களுக்கு, விபு நய்யார், வாய்ப்பு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தகுதி வாய்ந்த தேர்வர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளன. மொத்தம் 2,881 இடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளன. மொத்தம் 2,881 இடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர்.
முக்கிய விடைகள் தொடர்பாக மொத்தம் 1,500 பேர் ஆட்சேபங்களை அனுப்பியிருந்தனர். பெரும்பாலும் தமிழ் பாடத்தில்தான் அதிகளவிலான ஆட்சேபங்களைத் தேர்வர்கள் அனுப்பியிருந்தனர்.
இதில் “பி’ வரிசை வினாத்தாள்களில் மட்டும் அதிக அச்சுப்பிழைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தவறான கேள்விகள், அச்சுப் பிழைகள் தொடர்பாக அந்தந்த பாட நிபுணர்கள் ஆய்வு செய்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கைகள் மீது ஆசிரியர் தேர்வு வாரியும் விரைவில் முடிவு எடுக்கும் எனத் தெரிகிறது.
இது தொடர்பாக, முடிவு செய்யப்பட்டவுடன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான, இறுதி, "கீ-ஆன்சர்’, வரும், 20ம் தேதிக்குள் வெளியிடப்படும் என தெரிகிறது.

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான, இறுதி, “கீ-ஆன்சர்’, வரும், 20ம் தேதிக்குள் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த மாதம், 21ம் தேதி, முதுகலை ஆசிரியர் தேர்வு நடந்தது. 1.67 லட்சம் பேர், தேர்வை எழுதியுள்ளனர். இதற்கான, தற்காலிக, “கீ-ஆன்சர்’, டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கேள்வி மற்றும் விடைகள் குறித்து, 1,000 தேர்வர்கள், மாற்று கருத்துக்களை தெரிவித்துள்ளனர். தேர்வர்களின் கருத்துக்களை, பாட வாரியான நிபுணர் குழு, ஆய்வு செய்து வருகிறது. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங் கள் கூறுகையில், “விடை தவறாக இருந்தால், அதற்குரிய மதிப்பெண், தேர்வர்களுக்கு வழங்கப்படமாட்டாது. மாறாக, சம்பந்தபட்ட கேள்வி, தேர்வில் இருந்து நீக்கப்படும். சரியான கேள்வி, பதில்களுக்கு மட்டும், மதிப்பெண்கள் வழங்கப் பட்டு, 20ம் தேதிக்குள், இறுதி, “கீ-ஆன்சர்’ வெளியிடப்படும்,’ என, தெரிவித்தன. ஒவ்வொரு கேள்விக்கும், 1 மதிப்பெண் வீதம், மொத்தம், 150 மதிப்பெண்களுக்கு, கேள்விகள் கேட்கப்பட்டன. இதில், 10 முதல், 15 கேள்விகளோ அல்லது அதற்கான பதில்களோ தவறாக கொடுக்கப்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது எனவே, 150 மதிப்பெண்களில், 15 மதிப்பெண்கள் வரை நீக்கப்பட்டு, மீதமுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில், தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர் தகுதித்தேர்வுகள் வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர் தகுதித்தேர்வுகள் வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் தகுதி தேர்விற்காக ஹால் டிக்கெட் வரும், 5ம் தேதி www.trb.tn.nic.in இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

ஆசிரியர் தகுதி தேர்விற்காக ஹால் டிக்கெட்  வரும், 5ம் தேதி, டி.ஆர்.பி., இணைய தளத்தில் வெளியிடப்படும்’ என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. வரும், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கிறது. 17ம் தேதி நடக்கும், முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியருக்கானது), 2,68,160 பேரும், 18ம் தேதி நடக்கும், இரண்டாம் தாள் தேர்வை (பட்டதாரி ஆசிரியருக்கானது), 4,11,634 பேரும் எழுதுகின்றனர். தேர்வுகளுக்கான ஏற்பாடுகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன. தேர்வர்களுக்கு, வரும், 5ம் தேதி, http://www.trb.tn.nic.in என்ற டி.ஆர்.பி., இணையதளத்தில், “ஹால் டிக்கெட்’ வெளியிடப்படுகிறது. இதற்கிடையே, 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், விண்ணப்பங்களை, சரியாக பூர்த்தி செய்யவில்லை என, தெரிய வந்துள்ளது. 44 பேர், ஆணா, பெண்ணா என்பதையே குறிப்பிடவில்லை. 2,500 பேர், தேர்வு மையத்தை குறிப்பிடவில்லை. விருப்ப பாடம் குறித்த தகவலை, 7,800 பேர் பூர்த்தி செய்யவில்லை என்பதையும், டி.ஆர்.பி., கண்டறிந்துள்ளது. 17 ஆயிரம் பேர், பல்வேறு தவறுகளை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த தவறுகளை சரிசெய்ய, தேர்வு நாளன்று வாய்ப்பு வழங்கப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. தேர்வு நாளன்று வழங்கப்படும் விடைத்தாளில், அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை, சரியாக பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக விபு நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.இப்பணியிலிருந்த சுர்ஜித் சவுத்ரி, மத்திய அரசுப் பணிக்கு செல்கிறார்.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், நான்கு பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, அரசு துணைச் செயலர் சிவசண்முக ராஜா, ஆதிதிராவிட நலத்துறை இயக்குனராகவும், அப்பதவியில் இருந்த விஜய ராஜ்குமார், தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் மேலாண் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் மற்றும் நீர் ஆதார மேலாண்மை திட்ட இயக்குனராகப் பணிபுரிந்த விபு நாயர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பணியிலிருந்த சுர்ஜித் சவுத்ரி, மத்திய அரசுப் பணிக்கு செல்கிறார்.வேளாண்மைத் துறை, அரசு சிறப்பு செயலர் அசோக்ரஞ்சன் மொகந்தி, மாநில மனித உரிமை ஆணையச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்விற்கான TENTATIVE ANSWER KEY இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர் , உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1) பணி இடங்களை நிரப்ப கடந்த 21-ம் தேதி போட்டி தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதினார்கள். தேர்வு எழுதிய அனைவருக்கும் அவர்களின் விடைத்தால் நகலும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், தேர்வுக்கான ‘கீ ஆன்சர்’-ஜ ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வினா வகை (ஏ,பி,சி,டி) வாரியாக தெரிந்து கொள்ளலாம். தேர்வு எழுதிய ஆசிரியர்கள் தங்கள் விடைத்தால் நகலை பார்த்து தங்கள் மதிப்பெண்ணை துல்லியமாக அறிய முடியும். தேர்வு முடிவை ஒரு மாதத்தில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு | ஒரு வாரத்திற்குள் "கீ-ஆன்சர்’ வெளியீடு | 20 நாட்களுக்குள் தேர்வு முடிவு | பல்வேறு எழுத்துப் பிழைகளுடன் இருந்த வணிகவியல் மற்றும் தமிழ்க்கேள்வித்தாளால் தேர்வர்கள் பாதிக்காத வகையில் உரிய முடிவு எடுக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரித்துள்ளது.

“முதுகலை ஆசிரியர் தேர்வில், தமிழ் மற்றும் வணிகவியல் பாட கேள்வித்தாளில் ஏற்பட்ட பிரச்னையால், தேர்வர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். “கீ-ஆன்சர்’ வெளியிடுவதற்கு முன், கேள்வித்தாளில் ஏற்பட்ட பிழைகள் குறித்து, பாட வல்லுனர்களின் ஆலோசனையை பெற்று, உரிய முடிவு எடுக்கப்படும்’ என, டி.ஆர்.பி., வட்டாரங்கள், நேற்று தெரிவித்தன.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, நேற்று முன்தினம், முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு நடந்தது. 1.59 லட்சம் பேர், தேர்வை எழுதினர். இதில், தமிழ்ப் பாட தேர்வர்களுக்கு தரப்பட்ட கேள்வித்தாளில், பல்வேறு கேள்விகளில், எழுத்துப் பிழைகள் இருந்தன. மேலும், வணிகவியல் பாட கேள்வித்தாளில், ஆங்கிலத்தில் இருந்து, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கேள்வியில், பிழை ஏற்பட்டது. இந்த இரு பிரச்னைகள் குறித்தும், டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு, உடனடியாக தெரிய வந்தது.
இந்த விவகாரம் குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள், நேற்று கூறியதாவது: தமிழ்ப் பாடத்திற்கான கேள்வித்தாளில், எழுத்துப்பிழைகள் அதிகம் ஏற்பட்டிருப்பது உண்மை தான். அச்சக நிறுவனம், கேள்வித்தாளில், பிழை இருக்கிறதா என்பதை சரிபார்த்து, செயல்பட்டிருக்க வேண்டும். அச்சகங்களில், பாட வாரியாக, நிபுணர்கள் இருக்கின்றனர். அவர்கள், கேள்வியை படித்துப் பார்த்து, ஏதாவது பிழைகள் இருக்கிறதா என்று சரிபார்ப்பர். தமிழ்ப் பாடத்தில், சரிபார்ப்பு நடந்ததா என, தெரியவில்லை. இது குறித்து, விசாரிக்கப்படும். வணிகவியலில், ஒரே ஒரு கேள்வி, தமிழில், சரியாக மொழிபெயர்க்கப்படவில்லை. இந்த பிரச்னைகள் குறித்து, “கீ-ஆன்சர்’ வெளியிடுவதற்கு முன், பாட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, தேர்வர்கள் பாதிக்காத வகையில், உரிய முடிவு எடுக்கப்படும்.
ஒரு வாரத்திற்குள் “கீ-ஆன்சர்’ வெளியிடப்படும். அதன்பின், விடையில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால், சம்பந்தப்பட்ட தேர்வர்கள், டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு கொண்டு வரலாம். அது குறித்தும், பாட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, முடிவை எடுப்போம். இதன்பிறகே, விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நடக்கும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. மாவட்டங்களில் இருந்து, சீலிடப்பட்ட விடைத்தாள் கட்டுகள், நேற்று, சென்னைக்கு, போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன. விரைவில், விடைத்தாள்களை, “ஸ்கேன்’ செய்து, 20 நாட்களுக்குள், தேர்வு முடிவை வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.

TRB PGT EXAM HALL TICKET DOWNLOAD | முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு 21–ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. தங்கள் பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டுள்ள விண்ணப்பதார்கள் விண்ணப்ப எண்ணையும், ஏதாவது ஒரு பிறந்த தேதியையும் குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு 21–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 664 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 532 பேர் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்துவிட்டனர். 8 ஆயிரம் பேர் ஆன்லைனில் ஹால்டிக்கெட் எடுக்க முயற்சி மேற்கொண்டும் அதில் வெற்றிபெறவில்லை. 27,500 ஹால்டிக்கெட்டை எடுப்பதற்கான முயற்சிகூட செய்வில்லை. பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் தங்கள் பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டு உள்ளனர் (அதாவது எழுதி இருப்பது ஒன்று, ஷேடிங் செய்திருப்பது ஒன்று). அத்தகைய விண்ணப்பதார்களுக்கு உதவும் வகையில் ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்து எடுக்கும் முறை மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ( www.trb.tn.nic.in ) விண்ணப்ப எண்ணையும், ஏதாவது ஒரு பிறந்த தேதியையும் குறிப்பிட்டால் போதும். ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்து எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.