Monthly Archives: September, 2011

தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு .

நன்றி : தினமணி 

வரும் (2012-13) கல்வியாண்டு முதல் எட்டாம் வகுப்பு வரை மதிப்பெண்ணுக்கு பதில் கிரேடு முறை தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

வரும் கல்வியாண்டு (2012-13) முதல் எட்டாம் வகுப்பு வரை மதிப்பெண்ணுக்கு பதில் கிரேடு முறை தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படுகிறது.2013-14 கல்வியாண்டு முதல் 9, 10 வகுப்புகளில் இந்த கிரேடு முறை அமலுக்கு வரும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், ஒரு கல்வியாண்டை மூன்று பருவங்களாகப் பிரித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவம், அக்டோபர் முதல் டிசம்பர் வரை இரண்டாம் பருவம், ஜனவரி முதல் ஏப்ரல் வரை மூன்றாம் பருவம் என ஒரு கல்வியாண்டு மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி. சபீதா வெளியிட்டுள்ள அரசாணை விவரம்:
பள்ளி மாணவர்கள் மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையை மாற்றி, அவர்களது சிந்தனைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறையை அறிமுகம் செய்வது தொடர்பாக தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்தது. அந்தக் குழு, தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
பரிந்துரை விவரம்: 

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமும் இத்தகைய மதிப்பீட்டு முறையை கட்டாயமாக்கியுள்ளது.இப்போதுள்ள தேர்வுமுறை, மாணவர்களின் நினைவாற்றலை மையப்படுத்தியே உள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள்கள் மாணவர்கள் கணித்துவிடக் கூடிய வகையில் உள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் புத்தகங்களைத் தாண்டி வெளியே படிக்க முடியாது.

பொதுத்தேர்வுகள் காரணமாக அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. தேர்வில் தோல்வி பயம் பல தவறான முடிவுகளுக்கும் இட்டுச் செல்கிறது. இதைத் தவிர்க்க தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீடு அறிமுகப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை இந்த மதிப்பீட்டு முறை ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களும் இந்த முறையை அறிமுகப்படுத்தியுள்ளன.

இரண்டு வகையான மதிப்பீடு:கல்வியாண்டுக்குப் பதில் மூன்று பருவ முறை அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த வேண்டும். உடனடி மதிப்பீடு, பருவ மதிப்பீடு என இரண்டு மதிப்பீடுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு பருவத்துக்கும் உடனடி மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண்ணும், பருவ இறுதியில் மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண்ணும் வழங்கப்பட வேண்டும்.

பாடல்கள், விளையாட்டு, நாடகம், கற்பனைத் திறனை வளர்க்கும் நடவடிக்கைகள் போன்றவை உடனடி மதிப்பீட்டிலும், பருவ இறுதியில் நடைபெறும் தேர்வு பருவ இறுதி மதிப்பீட்டிலும் கணக்கில் கொள்ளப்படவேண்டும்.

இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப கிரேடுகள் வழங்கப்படும். ஏ1, 2, பி1, பி2, சி1, சி2, டி, 1, 2 போன்ற கிரேடுகள் உள்ளன. ஒவ்வொரு கிரேடுக்கும் கிரேடு புள்ளிகளும் வழங்கப்படுகின்றன.

இதில் இ1, 2 கிரேடுகளைத் தவிர அனைத்து கிரேடுகளுக்கும் கிரேடு புள்ளிகள் வழங்கப்படும்.

மூன்று பருவத்தின் முடிவில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் கிரேடுகள் அடிப்படையில் ஆண்டு இறுதியில் மாணவர்களுக்கு கிரேடு மட்டும் வழங்கப்பட வேண்டும்.

ஒரு பருவத்தில் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் பாடங்கள், அடுத்த பருவத் தேர்வுக்கு வராது. இதனால், ஆண்டுத் தேர்வுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் குறைந்துவிடும்.

ஒவ்வொரு ஆண்டிலும் மூன்று முறை மாணவர்களின் திறன் மதிப்பிடப்படும். இதுதொடர்பான அறிக்கை ஆண்டு முழுவதும் பராமரிக்கப்பட வேண்டும்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

கல்லூரிகளில் பின்பற்றப்படும் செமஸ்டர் முறைக்கு எளிமையாக மாறும் வகையில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும் செமஸ்டர் முறையை அறிமுகப்படுத்தலாம்.

பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஆகியோர் தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறை செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க வேண்டும் என்று பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரைகளை ஆராய்ந்தபிறகு, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறையை அடுத்தக் கல்வியாண்டில் இருந்தும், 9, 10 வகுப்பு வரை 2013-14 கல்வியாண்டிலிருந்தும் அமல்படுத்த உத்தரவிடப்படுகிறது.

முப்பருவ முறையும் அடுத்தக் கல்வியாண்டில் இருந்து அனைத்துப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலாண்டு விடுமுறை: அக்டோபர் 2 முதல் 9 வரை எட்டு நாட்களாக நீடிப்பு. பள்ளிகள் திறக்கும் தேதி அக்டோபர் 10 .

பள்ளிகளில் நடந்து வரும் காலாண்டுத் தேர்வுகள், வரும் வெள்ளிக்கிழமையுடன் முடிகின்றன. அதன்பின், காலாண்டு விடுமுறை அக்டோபர் 2 முதல் 9 வரை எட்டு நாட்களாக நீடிக்கப்பட்டுள்ளது . பள்ளிகள் திறக்கும் தேதி அக்டோபர் 10 என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் மணி அறிவிப்பு .

                                                                                          

பள்ளித் தேர்வு முறையில் மாற்றம் :

பள்ளித் தேர்வு முறையில் எழுத்துத் தேர்வு முறைக்குப் பதிலாக மதிப்பீட்டு முறை அமலுக்கு வருகிறது. அதாவது மதிப்பெண் போடும் முறைக்குப் பதிலாக ஏ, பி, சி, டி, இ

Read more »

Na.Ka.No:38907, dated: 10.09.2011: தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப்பணி – புதிய நியமனங்கள் – ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2007 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளில் ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டவர்கள் – முறையான நியமனமாக முறைப்படுத்தி திருத்திய ஆணை வழங்குதல்

Na.Ka.No:59215, dated: 23-09-2011: தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி-முதுகலை ஆசிரியர்கள் நேரடி நியமனம் 2007-08,2008-09,2009-10 ஆகிய கல்வி ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டவர்கள் முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்குதல்

ANGIOPLASTY VS BYPASS

HEART DISEASE

DENGUE FEVER

நெட் தேர்வு: விண்ணப்பிக்க அக்டோபர் 25 கடைசி

தேசிய அளவில் நடத்தப்படும் கல்லூரி ஆசிரியர் பணியிடத்துக்கான "நெட்' தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 25 கடைசி தேதியாகும்.ஆண்டுதோறும், இந்தத் தகுதித் தேர்வு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும்.

Read more »

ஒன்பது, பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு முழு விவரம்:தமிழக அரசு அறிவிப்பு

சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு முழு விவரங்களை, தமிழக அரசு அறிவித்துள்ளது. செய்முறைத் தேர்வுக்கான 25 மதிப்பெண்கள், பகுதி வாரியாகப் பிரித்து அறிவிக்கப்பட்டுள்ளன.

Read more »

கல்வித்துறை இயக்குனர்கள் மாற்றம்

கல்வித்துறை இயக்குனர்கள் மாற்றம் 
பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக திரு மணி அவர்களும் , தொடக்கக் கல்வித்துறை இயக்குனராக திரு சங்கர் அவர்களும் ,ஆசிரியர் தேர்வு வாரிய  இயக்குனராக திரு அறிவொளி அவர்களும் ,ஆசிரியர் கல்வி இயக்குனராக திரு தேவராஜன் அவர்களும் ,ஆர்.எம்.எஸ்.ஏ இயக்குனராக திரு இளங்கோவன் அவர்களும் ,மெட்ரிக் பள்ளிகள்  இயக்குனராக திருமதி செந்தமிழ்ச்செல்வி அவர்களும் ,நூலகத்துறை   இயக்குனராக திரு அன்பழகன்  அவர்களும்,முறைசாரக்கல்வி  இயக்குனராக திரு கருணாகரன் அவர்களும் பொறுப்பேற்க உள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள் மாற்றம் :

பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள் மாற்றம் :
மேல்நிலைக்கல்வி இணை இயக்குனராக திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்களும், பணியாளர் தொகுதி இணை இயக்குனராக திரு பழனிச்சாமி அவர்களும், மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனராக திரு.பூ.ஆ.நரேஷ் அவர்களும்  இடைநிலைக்கல்வி இணை இயக்குனராக திரு.ராமேஸ்வரமுருகன் அவர்களும், நூலகத்துறை இணை இயக்குனராக திரு.தங்கமாரி  அவர்களும், ஆசிரியர் கல்வி  இணை இயக்குனராக திரு.கண்ணப்பன் அவர்களும்,  பொறுப்பேற்க உள்ளனர். அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட இணை இயக்குனர் திரு.கார்மேகம் அவர்கள் அதே பதவியில் தொடர்கிறார் .




பள்ளிக்கல்வி – ஆசிரியர் பொது மாறுதல் – காலிப்பணியிட விவரங்கள் வெளியிடப்பட்டன.

பள்ளிக்கல்வி – ஆசிரியர் பொது மாறுதல் – காலிப்பணியிட விவரங்கள் வெளியிடப்பட்டன.

Teachers Vacancy List – 2011-2012

SAMACHEERKALVI SSLC MODEL QUESTION PAPERS

பள்ளிக் கல்வி – 2011-12 – மாணவ / மாணவியர்கள் இடைநிற்றலை (School Dropouts) முற்றிலும் நீக்குவதற்கு அரசின் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் – அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் அனைத்துத்துறை நிருவாக கட்டுப்பாட்டிலுள்ள உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்கள் படிப்பை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து படித்திட கல்வி ஊக்கத் தொகை வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

+1,+2 பயிலும் மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கும் திட்டம்: முதல் அமைச்சர் ஜெயலலிதா துவங்கி வைத்தார்

முதல் அமைச்சர் ஜெயலலிதா இன்று (15.09.2011) திருவள்ளூர், காக்களூர், தர்மமூர்த்தி ராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்து மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு திட்டங்கள் தொடக்க விழாவில், +1,+2 பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி திட்டங்களை துவக்கி வைத்தார்.

மத்தியஅரசு ஊழியர்கள் அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை 2011 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் .

மத்தியஅரசு ஊழியர்கள் அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை 2011 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் .

தொடக்கக்கல்வி – ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு – 2011-2012-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் மற்றும் கால அட்டவணை – ஆணை

பள்ளிக்கல்வி : அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கான (HIGH HM,HR HM) , "கவுன்சிலிங்’ செப்., 19, 20 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகிறது மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி அனைத்து வகை ஆசிரியர்களுக்கு (PGT,BT,SGT,BRT,PET,SPECIALTRS) , செப்., 19, 20 ஆகிய தேதிகளில் தான் நடத்தப்படுகிறது , "கவுன்சிலிங்’ நடைபெறும் இடமும் அறிவிக்கப்பட்டுள்ளது .

பள்ளிக்கல்வி : அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கான (HIGH HM,HR HM) , “கவுன்சிலிங்’ செப்., 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடத்தப்படுகிறது மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி அனைத்து வகை ஆசிரியர்களுக்கு (PGT,BT,SGT,BRT,PET,SPECIALTRS) , செப்., 19, 20 ஆகிய தேதிகளில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்படுகிறது. “கவுன்சிலிங்’ நடைபெறும் இடமும் அறிவிக்கப்பட்டுள்ளது .

பள்ளிக்கல்வி : அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கான , "கவுன்சிலிங்’ செப்., 19, 20 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகிறது மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி அனைத்து வகை ஆசிரியர்களுக்கு, செப்., 19, 20 ஆகிய தேதிகளில் தான் நடத்தப்படுகிறது , "கவுன்சிலிங்’ நடைபெறும் இடமும் அறிவிக்கப்பட்டுள்ளது .

ஆசிரியர் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு…

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கவுன்சிலிங், 19 மற்றும் 20ம் தேதிகளிலும், தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங், 16, 17, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளிலும் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட தேதிகளில், எந்த எந்த வகையிலான ஆசிரியர்களுக்கு, எந்த நேரத்தில் கவுன்சிலிங் நடத்துவது குறித்து, துறை அதிகாரிகள் அட்டவணை வகுத்து வருகின்றனர். இதற்கான அட்டவணை, விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

நம் உண்மையான தோழர்கள் புத்தகங்களே



பூ.ஆ. நரேஷ், தமிழக பொது நூலகத்துறையின் இணை இயக்குனர். துடிப்பான அதிகாரியான நரேஷ், சமீபத்தில் ஹிலாரி கிளிண்டன் சென்னைக்கு வருகைதந்து உரையாற்றியபோது வரவேற்புரை நிகழ்த்தினார். தன் பேச்சின்போது ஹிலாரி, இவரைக் குறிப்பிட்டு சில நிமிடங்கள் பேசியது பலருக்கும் ஆச்சரியம்.


அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனே உங்களைக் குறிப்பிட்டுப் பேசினாரே… எப்படி?

2006 இல் கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றியபோது, சுனாமி மறுவாழ்வுப் பணிகளை ஆய்வு செய்ய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் வந்தார். அவரிடம் கல்வித்துறையின் பணிகளை விளக்கிக் கூறும் வாய்ப்புக் கிட்டியது. இப்போது ஹிலாரி அவர்கள் சென்னைக்கு வந்தபோது, அவர் ஆற்றிய கொள்கை விளக்க உரையின்போது அவர் பற்றிய அறிமுக உரை நிகழ்த்துமாறு என்னை அமெரிக்க தூதரக அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இப்படித்தான் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

வெளிநாடுகளில் நூலகத்துக்கும் சமூகத்துக்குமான உறவு எப்படி உள்ளது?

அங்கு பாடப்புத்தகத்துக்கு வெளியே ஒரு மனிதனை எதிர்கால வாழ்வுக்கு, எந்தச் சவாலையும் சந்திக்கும் தயார்நிலையை ஏற்படுத்துபவையாக புத்தகங்களே உள்ளன. பல நாடுகளில் அவர்களின் கலாச்சாரத்திலேயே இயல்பான ஒன்றாக நூல் வாசிப்பு அமைந்துள்ளது. அங்கு தொடக்கப்பள்ளிகளில் ஆரம்பித்து கல்லூரிகள் வரை மாணவர்கள் இயல்பாக நூல்களை வாசிக் கின்றனர். வீடுகள், குடியிருப்புகள், கல்விக்கூடங்களில் கட்டாயமாக நூலகங்கள் உள்ளன. வாசிப்புப் பழக்கம் உண்டு. நம் கல்விமுறையில் பாடப் புத்தகங்களுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறோம். இங்கும் இளைஞர்களுக்கு பாடப் புத்தகங்களைத் தாண்டி நூல்களை வாசிக்கும் பழக்கம் இயல்பாகவே ஏற்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

அரசுப்பணிக்கு ஏன் வந்தீர்கள்? 

படித்து முடித்தவுடன் நான் செய்யும் வேலை பலருக்குப் பலனுள்ளதாக அமையவேண்டும். பலர்  வாழ்வை மாற்றி அமைக்கக்கூடிய ஒன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன். அதற்கு அரசுப் பணியே தகுதியாக அமைந்தது. நான் பணிபுரியும் கல்வித்துறையில் மாணவர்கள், அவர்களுக்குக் கற்பிப்பவர்கள் என்று பல்வேறுபட்டவர்களை ஒவ்வொரு ஆண்டும் புதிதாக சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இப்படி புதியவர்களைச் சந்திக்கும் வாய்ப்புள்ள ஒரே துறை கல்வித்துறை மட்டுமே.

புத்தக வாசிப்பில் ஆர்வம் உடையவர் நீங்கள். தினமும் வாசிப்பீர்களா?

நான் சமகால வரலாறு, அரசியல், தத்துவம் தொடர்பான நூல்களை வாசிப்பதில் ஆர்வம் உடையவன். நாவல்கள் என்றால் வேகமாகப் படித்துவிடலாம். ஆனால் இதுபோன்ற நூல்களில் அவற்றின் தீவிரத்தைப் பொறுத்து ஒரு புத்தகத்தை வாசித்து முடிக்க ஒரு வாரமும் ஆகும்; மூன்று வாரமும் ஆகும். நம் உண்மையான தோழர்கள் புத்தகங்களே.

இப்போது வாசிக்கும் புத்தகம்?

ராபர்ட் கிரீன் எழுதிய 48 Laws of Power  வாசித்து வருகிறேன். மனித குலத்தின் மூன்றாயிரம் ஆண்டு களின் வரலாற்றுப் பின்னணியில் சமகால மனிதனின் முன்னேற்றத் துக்கான வழிகளைச் சொல்கிறது இந்நூல். இதில் ஏராளமான வரலாற்று, தத்துவத் தகவல்கள் விரவிக் கிடக்கின்றன.

ஆசிரியர் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு : பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு 19 மற்றும் 20ம் தேதிகளிலும்,தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங், 16, 17, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளிலும் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கவுன்சிலிங், 19 மற்றும் 20ம் தேதிகளிலும், தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங், 16, 17, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளிலும் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட தேதிகளில், எந்த எந்த வகையிலான ஆசிரியர்களுக்கு, எந்த நேரத்தில் கவுன்சிலிங் நடத்துவது குறித்து, துறை அதிகாரிகள் அட்டவணை வகுத்து வருகின்றனர். இதற்கான அட்டவணை, இன்றோ அல்லது நாளையோ வெளியாகலாம் எனத் தெரிகிறது.

பள்ளிக்கல்வி – ஆசிரியர் பொது மாறுதல் – தொடக்க ,நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் – 2011-2012-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் – அரசாணை வெளியிடப்பட்டது

GO.(D).No 259 09.09.2011/பள்ளிக்கல்வி – ஆசிரியர் பொது மாறுதல் – ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் – 2011-2012-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் – ஆணை

PLUS TWO MARCH 2011 KEY ANSWERS

TN PLUS TWO SEPTEMBER 2011 QUESTION PAPERS

TN PLUS TWO JUNE 2011 QUESTION PAPERS

TN PLUS TWO MARCH 2011 QUESTION PAPERS

PLUS TWO GOVT QUESTION PAPERS

புதிய பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

மாறுதலுக்குப் பின், புதிய பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் ஆறு பாடங்களுக்கு 1,110 பேரும், தொடக்க கல்வித்துறையில் மூன்று பாடங்களுக்கு 216 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள, 3,665 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, மாநில பதிவுமூப்பு அடிப்படையில் தகுதி வாய்ந்தவர்களின் தேர்வுப் பட்டியலை, கடந்த பிப்ரவரி இறுதியில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

இந்நிலையில், மாநில பதிவு மூப்பில் விடுபட்டவர்களின் பட்டியலை, காலதாமதமாக வேலை வாய்ப்பு இயக்குனரகம், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் அளித்தது.இதனால், அவர்களுக்கு தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடத்தப்பட்டன. அப்பட்டியலில் இருந்த பலர், தேர்வுப் பட்டியலில் இடம்பெறும் நிலை ஏற்பட்டதால், ஏற்கனவே தயாரித்திருந்த தேர்வுப் பட்டியலை திருத்தி, புதிய பட்டியலை வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்தது. அதன்படி, பாட வாரியாக புதிய பட்டியலை தயாரித்துள்ளது.

முதற்கட்டமாக, பள்ளிக் கல்வித்துறையில், தமிழ், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியில் ஆகிய ஆறு பாடங்களுக்கும், தொடக்க கல்வித்துறையில் இயற்பியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய மூன்று பாடங்களுக்கும் புதிய பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. மீதமுள்ள பாடங்களுக்கு, பின்னர் வெளியிடப்படும் என தெரிகிறது.

பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழில் 210 பேர், இயற்பியலில் 444, தாவரவியலில் 193, விலங்கியலில் 58 மற்றும் புவியியலில் 12 பேர் என மொத்தம் 1,110 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் பெயர் விவரங்கள் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தொடக்க கல்வித்துறைக்கு, இயற்பியலில் 116 பேர், தாவரவியலில் 50 பேர், விலங்கியலில் 50 பேர் என 216 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிக் கல்வித்துறைக்கான ஒதுக்கீட்டில், 29 பேரின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இன சுழற்சிகளில் 131 பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பது பணியிடங்கள், கோர்ட் உத்தரவுப்படி, “ரிசர்வ்’ செய்யப்பட்டுள்ளன. தொடக்க கல்வித்துறையில், எட்டு பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இல்லை என்றும், 9 பேரின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பணியிடம்,”ரிசர்வ்’ செய்யப்பட்டுள்ளது.