Category Archives: OUR ANIMAL

>முத்துச்சிப்பி

>

கவிஞர்கள் பலர் முத்துக்களைப் பற்றி வர்ணித்திருக்கிறார்கள். அது கடலின் ஆழத்தில் விளைகிறது என்பது பலருக்குத் தெரிவதில்லை.

பிங்டெடா பூயூகோட்டா

மனிதனுக்குத் தெரிந்த விலைமதிப்பற்ற, ஒப்பற்ற நவரத்தின கற்களின் வகைகளில் ஒன்றே முத்துச் சிப்பி. குர்ஆன், பைபிள், மற்றும் வேதங்களிலும் முத்துக்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சிப்பிக்குள் விலை மதிப்பற்ற முத்துக்கள் உருவாகும் விதங்கள், சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது: “”சிப்பிகளும் ஒரு விலங்கினம் எனலாம். இதன் அறிவியல் பெயர் பிங்டெடா பூயூகோட்டா . தமிழகத்தில் மன்னார் வளைகுடா, குஜராத்தில் கட்ச் வளைகுடா கடல்பகுதிகளில்தான் அதிகமான முத்துக்குளிப்பு நடந்து வந்தது.
கடலில் மூழ்கிச் சென்று முத்துச்சிப்பிகள் சேகரிப்பதையே முத்துக்குளித்தல் என்கிறார்கள். மன்னார் வளைகுடா கடல்பகுதியில் பாம்பன் முதல் மணப்பாடு வரை கடலில் 160 கி.மீ.தூரம் வரை 600 வகையான முத்துச்சிப்பி படுகைகள் இருந்தாலும் 6 வகைகள்தான் இப்போது இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
அக்டோபர் மாதம் முதல் மே மாதம் வரை இவற்றின் வளர்ச்சிக் காலமாக இருப்பதால் அலைகள் குறைந்தும் கடல் தெளிந்தும் இருக்கும்போது முத்துக்குளிப்பு நடைபெறும். இக்காலங்களில்தான் குறைந்தபட்சம் 2 லட்சம் முத்துச்சிப்பிகள் வரை சேகரித்துள்ளனர்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் முத்துக்குளிப்பின் மையமாக விளங்கியது தூத்துக்குடி. அதன் காரணமாக இந்த நகருக்கு முத்து நகர் என்ற பெயரும் வந்தது. கடலில் உள்ள முத்துச்சிப்பி படுகைகள் அனைத்தும் அரசுக்குச் சொந்தம் என்பதால் முத்துக்களின் வளமும், முத்துக் குளிப்பும் மீன்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 10-20 கி.மீ. தூரத்தில் 15-25 கி.மீ. ஆழம் வரை இலை வடிவத்தினாலான முத்துச்சிப்பிப் படுகைகள் தென்படும். கடலுக்கு அடியில் உள்ள பாறைகள், முத்துச்சிப்பிகள் அதில் ஒட்டி வளர பேருதவியாக இருக்கின்றன.
மன்னார் பகுதியில் சேறு அதிகம் இல்லாததால் கடல் நீர் கலங்கவோ, சிப்பிகளின் வளர்ச்சி குறையவோ வாய்ப்பில்லை. சிப்பிகளுக்குத் தேவையான இயற்கை தாவர நுண்ணுயிரிகள்,ஆக்சிஜன் ஆகியனவும் முத்துச்சிப்பி படுகைகள் வளமுடன் அமைவதற்கு ஏற்ற வாய்ப்பாகவும் உள்ளது.
சிப்பிக்குள் முத்து உருவாவதைப் பற்றி பல மூட நம்பிக்கை கதைகள் அதிகமாக அலைந்து கொண்டிருந்தாலும் உண்மையில் முத்து உருவாவது அதன் உட்கரு நுழைவதைப் பொறுத்தே அமையும். எல்லாச் சிப்பிகளிலும் முத்து இருப்பதில்லை. எந்தச் சிப்பியில் முத்து இருக்கும் எதில் இருக்காது என்பதையும் யாரும் அறிய முடிவதில்லை. சிப்பிக்குள் ஏதேனும் ஒரு வேற்றுப் பொருள் சிப்பிகளுக்குள் நுழைந்து உட்கருவாக செயலாற்றி அதனை சுற்றி நேக்ரி எனப்படும் பொருளை உற்பத்தி செய்து மூடி அதில் உருவாகும் மாந்தில் என்ற ஒரு திரவத்தின் மூலமாகத்தான் முத்து உருவாகும். இவ்வாறு இயற்கையாகவே சிப்பிகளுக்குள் முத்துக்கள் தோன்றி முத்துச் சிப்பிகளாகிவிடுகின்றன.
கடல் மாசுபடுதல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் இதன் வளம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முத்துச்சிப்பி படுகைகள் நல்ல ஆரோக்கியமாக இருந்தால் 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை முத்துக் குளித்திட முடியும். ஆனால் 1961}க்குப் பிறகு முத்துக்குளிப்பே இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது. தற்போது மன்னார் வளைகுடாவில் முத்துச்சிப்பிகளே இல்லை எனும் நிலையில் கடலின் இயற்கை வளம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவும் அரியவகை கடல் வாழ் உயிரினங்களில் உள்ள விலை மதிப்பற்ற விநோத ஜீவன்.

முத்துச்சிப்பி

>பண மழையைக் கொட்டும் பறக்கும் "தேவதைகள்’! தேனீக்கள்

>

இந்த வார்த்தையை நினைக்கும்போதே பலருக்கும் நாவில் நீர் சுரக்கும். அத் தேனை பல கி.மீட்டர் தூரம் தேடிச் சென்று சேகரித்துவரும் தேனீக்களைத் தேவதைகளாகப் போற்றி, அதன் மூலம் வாழ்வை வளமாக்கியுள்ளார் மதுரையைச் சேர்ந்த எஸ்.ஜோசப்பின் செல்வராஜ். தான் முன்னேறியது மட்டுமின்றி 500 தேனீ வளர்ப்பு விவசாயிகளை உருவாக்கியதுடன் ஆயிரக்
கணக்கான இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்து சிறந்த தொழில் முனைவோராக திகழ்ந்து வருகிறார். மதுரை புதூரில் உள்ள தனது “பிரபா ஹனி ஹவுஸில்’ பரபரப்பான வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஜோசப்பினை சந்தித்தோம்.
“”எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முத்துப்பட்டி கிராமமாகும். மதுரையில் திருமணம் முடிந்து 20 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், 2005-ம் ஆண்டின் இறுதியில் மதுரை வேளாண் கல்லூரியில் உள்ள கிருஷி விக்யான் கேந்திராவில் மூன்று நாள் தேனீ வளர்ப்புப் பயிற்சி பெற்று, ரூ.10 ஆயிரம் முதலீட்டில் தேனீ வளர்க்க முடிவு செய்தேன்.
ஒரு பெட்டி சுமார் ரூ.1200 விலையில் 10 பெட்டிகளுடன் தொடங்கப்பட்ட தேனீ வளர்ப்பின் மூலம், முதல் மாதத்தில் நான் ஈட்டிய வருமானம் ரூ.600 மட்டுமே. ஆனால், இந்தத் தொழில் செய்வது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது யாருக்கும் பிடிக்கும். எனது நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் தொடர்ந்து தேன் அதிகம் கிடைத்ததால் தேனீ வளர்ப்பு தொழிலை விரிவுபடுத்திட திட்டமிட்டேன். இதற்காக தேசிய தோட்டக்கலை இயக்ககத்தை அணுகியபோது 50 சதம் மானியத்துடன் கடன் வழங்கினர். இதன் மூலம், பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்தோம்.
ராணி தேனீயை உற்பத்தி செய்வதையும் தெரிந்துகொண்டதால் பெட்டிகளின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்தது. தேவையைக் கருத்தில்கொண்டு மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி செல்லும் வழியில் உள்ள கள்ளிவேலிப்பட்டி கிராமத்தில் “விபிஸ் இயற்கை தேனீ பண்ணை’யைத் தொடங்கினேன். சுமார் இரண்டரை ஏக்கரில் தொடங்கப்பட்ட இப் பண்ணையில் தற்போது 1,500 பெட்டிகள் மூலம் தேனீ வளர்த்து வருகிறேன்.
இதுதவிர, தேனீ வளர்ப்புப் பயிற்சியையும் ஒவ்வொரு மாதமும் 2-வது ஞாயிற்றுக்கிழமை இலவசமாக அளித்து வருகிறேன். உணவு, போக்குவரத்து ஆகியவற்றுக்கான செலவை மட்டும் பயிற்சியில் பங்கேற்பவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். எங்களது பண்ணையிலும், தேன் விற்பனை நிலையத்திலும் தற்போது 20 பேர் வரை வேலை செய்கின்றனர். தோட்டக்கலை துறையினரும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையமும் எங்களின் முயற்சிக்கு தகுந்த ஊக்கமும் உதவியும் அளித்தன.
ரூ.600 வருவாயை ஈட்டத் தொடங்கிய நான் இன்றைக்கு மாதம் ஏறக்குறைய ரூ.80 ஆயிரம் வரை வருமானம் ஈட்டும் அளவுக்கு எனது நிலை உயர்ந்துள்ளது. பெண்கள், மாணவர்களும் சுலபமாக மாதம் ரூ.2 ஆயிரம் வருவாய் ஈட்டலாம். இத்தொழிலுக்கு நிலம்தான் தேவை என்றில்லை. வீட்டின் மாடியில்கூட செய்யலாம். தேனீ வளர்ப்புத் தொழிலில் ஈடுபட படித்தவர்கள் மட்டும் அல்ல, படிக்காத பாமர மக்களும் வரலாம். கிராமப்புற மகளிர் குடும்ப பொருளாதார மேம்பாட்டுக்காக தங்களின் பங்களிப்பாக தேனீ வளர்ப்பைச்செய்யலாம்.
தேனீ கொட்டும் தன்மை கொண்டதால், பலருக்கு தேனீக்கள் மீது பயமாகக் கூட இருக்கலாம். ஆனால், தேனீயை மென்மையாகக் கையாண்டால் அது நண்பன் போல் நம் வசமாகிவிடும். தேனீ கொட்டுவதற்காகவே பலரும் வந்து எங்களிடம் வந்து செல்கின்றனர். இது கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. தேனீக்கள் கொட்டினால் ஒரு நாள் வீக்கம் வலி ஏற்படும். அதனால், மூட்டுவலி, தசைப்பிடிப்பு மற்றும் முடக்கு வாதத்திற்கு சிறந்த மருந்தாக உள்ளது. சிக்கன்குனியா நோய் பாதிப்பைக் குறைப்பதாகவும் சொல்லுகின்றனர்.
தேனீ கொட்டினால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகமாகும். இதனால், அக்குபஞ்சர் சிகிச்சை போன்று தேனீக்கள் மூலம் “பீவனம் தெரபி’ அளிக்கப்பட்டு வருகிறது. தேனீக்கள் மூலம் கிடைக்கும் தேன் மட்டும்தான் விலை குறைவு. மற்றபடி தேன் மெழுகு, தேன் பிசின், ராயல் ஜெல்லி, தேனீ மூலம் கொண்டு வரப்படும் மகரந்தம், தேனீ விஷம் எனப் பல்வேறு பொருள்களும் விலை அதிகமானவை. ஆனால், இதுபற்றி பலருக்கும் தெரிவதில்லை.
எங்கள் பிரபா தேன் ஹவுஸ் மூலம் இயற்கை தேன், பலபூக்கள் தேன், நாவல் தேன், சூரியகாந்தி தேன், முருங்கைத் தேன், குங்குமப்பூ தேன், இஞ்சித்தேன், வெள்ளைப்பூண்டு தேன், ஆப்பிள் தேன், பேரீச்சை தேன், ரோஜா தேன், மாம்பழத் தேன் என 25 தேன் ரகங்களை விற்று வருகிறோம்.
நாவல் தேனை நீரிழிவு நோயாளிகள் அதிகம் வாங்கி உண்கின்றனர். இவற்றின் விலையும் மற்ற தேனை விட சற்று கூடுதலாகும். நாவல் பழ மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் தேனீ வளர்ப்புப் பெட்டிகளைக் கொண்டு இந்த வகை தேன் உற்பத்தி செய்யப்படுகிறது.
அண்மையில் தில்லியில் உள்ள தேசிய தேனீ வாரிய அதிகாரிகளுடன் விடியோ கான்பரன்ஸிங் மூலம் உரையாடியபோது, 1981-ல் தேன் உற்பத்தியில் தமிழகம் முன்னிலையில் இருந்ததாகவும், தற்போது அந்த உற்பத்தி வரைபடத்திலேயே தமிழகம் இல்லை என்ற தகவல் எனக்குத் தெரியவந்தது. என் லட்சியமெல்லாம் இளைஞர்களுக்கு இப்பயிற்சியை அளிப்பதன் மூலம் தேன் உற்பத்தியில் தமிழகத்தை முன்னிலை பெறச் செய்வதுதான்” என்கிறார் ஜோசப்பின் தேனீயின் சுறுசுறுப்புடன்.

பண மழையைக் கொட்டும் பறக்கும் "தேவதைகள்’! தேனீக்கள்

>ஆக்டோபஸ்

>

உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியின் முடிவை முன்னரே அறிவித்த ​(?) ஆக்டோபஸ்சை   யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டீர்கள்.​ ஆக்டோ என்ற லத்தீன் சொல்லுக்கு எட்டு என்று பொருள்.​ பன்னெடுங்காலமாக கடல் பயணம் செய்பவர்களால் பேய் மீன் என்று பேசப்படும் எட்டு கால்களையுடைய அபூர்வ விநோதமான ஜீவராசியே ஆக்டோபஸ்.​ மெல்லுடலிகள் குடும்பத்தைச் சேர்ந்த இவை தலைகாலிகள் என்ற வகுப்பைச் சேர்ந்தவை.
இதில் உலகம் முழுவதும் 160 வகைகள் இருக்கின்றன.​ இவற்றின் அறிவுத்திறன் மற்றும் அதிசய குணங்கள் குறித்து,​​ மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசியக் ​ காப்பகத்தின் கடல் உயிரியலாளர் ர.​ செந்தில்குமார் தெரிவித்தது.
ஒரு சில ஆக்டோபஸ் மட்டும் ஆழமற்ற கடல் பகுதியில் வசித்தாலும்,​​ பெரும்பாலானவை கடலில் மிக ஆழமான பகுதிகளில்தான் அதிகமாகவும் கூட்டம்,​​ கூட்டமாகவும் தனி சாம்ராஜ்யமே அமைத்துக்கொண்டு வசிக்கின்றன.​ ​
இந்த உயிரினத்தின் எட்டு கால்களில்,​​ ஒவ்வொரு காலிலும் இரண்டு வரிசையில் ​ உறிஞ்சு குப்பிகளாகவும்,​​ அவை சுவை உணர்வுகளையும் கொண்டிருக்கும்.இந்த சுவை உணர்விகள் மூலமே,​​ தனது உணவின் சுவை,நிறம் ஆகியனவற்றை இவை ​ எளிதாக அறிந்துகொள்கின்றன.​ மனிதர்களின் கண்களுக்கு இணையாக ஆக்டோபஸின் கண்களும் இருக்கின்றன.​ அதாவது பார்க்கும் பிம்பத்தின் நிறம்,​​ வடிவம்,​​ தூரம் முதலியனவற்றை மிகச் சரியாகத் ​ தெரிந்து கொள்கின்றன.​ தலை உருண்டையாகவும் அதனுள்ளே அனைத்து முக்கிய உறுப்புக்களையும் கொண்டதாகவும் இருக்கிறது.
இதன் மேல்தோல் மென்மையானதாகவும் அடிக்கடி தனது நிறத்தை பச்சோந்தி போல மாற்றிக் கொள்ளும் வசதியுடையதாகவும் இருக்கிறது.​ கூர்மையான பற்கள் இருக்கின்றன.​ இதன் மூளை ​ விரைவாகக் கற்றுக் கொள்ளும் திறன் பெற்றது.
அதனையும் மீறி எதிரிகள் இதன் அருகே வந்துவிட்டால்,​​ மை போன்ற ஒரு திரவத்தை சுற்றுப்புறம் முழுவதும் பீய்ச்சி அடித்து,​​ அந்த இடத்தையே கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசிய பகுதிபோல கருமையாக்கிவிட்டு,​​ பாறைகளுக்கு இடையே ஒளிந்து ஆக்டோபஸ்கள் தப்பி விடுகின்றன.
உலகில் சில நாடுகளில் மட்டும்,​​ இதனையும் ஒரு செல்லப் பிராணிகளாகவே வளர்த்து வருகிறார்கள்.​ பல கோடி ரூபாய் கொடுத்து அதை விலைக்கு வாங்கவும்,​​ பலர் தயாராக உள்ளனர்.
உலகக் கோப்பை சோதிடத்துக்குப் பிறகு ஒருபடி மேலே போய்,​​ ஸ்பெயின் அரசு அந்த ஆக்டோபஸ்க்கு கவுரவக் குடியுரிமையே வழங்கிவிட்டது.
சின்னஞ்சிறு மீன்கள்,நத்தைகள்,சிப்பிகள் இது போன்ற அசைவ அயிட்டங்கள்தான் ​ இவற்றின் இரை.​ சில சமயங்களில் பெரிய ஆக்டோபஸ்கள் சிறிய ஆக்டோபஸ்சை கபளீகரம் செய்து விடுகின்றன.​ இரண்டு ஆண்டுகள்தான் இதன் ஆயுட்காலம் என்றாலும்,​​ ஒரே சமயத்தில் 200 ​ முட்டைகள் வரை இடுகின்றன.
ஆண் ஆக்டோபஸ் தனது உயிரணுக்களை,​​ அதன் காலில் அமைந்துள்ள சிறப்பு உறுப்பான ஹெக்டோ காட்டிலஸ் மூலமாக பெண்ஆக்டோபஸ் இனத்துடன் இனச்சேர்க்கை நடத்துகிறது.​​
ஏறக்குறைய 3 வாரங்கள் கழித்து,​​ ஒவ்வொரு குஞ்சுகளாக வெளிவருகின்றன.​ மன்னார் வளைகுடா பகுதியில் ஆக்டோபஸ் தொடர்பான ஆராய்ச்சிகள் எதுவும் பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை.
வடக்கு பசிபிக் ஆக்டோபஸ் உருவத்தில் பெரிதாகவும்,​​ 30 அடி வரை வளரக்கூடியதாகவும் உள்ளது.​ கலிபோர்னியா ஆக்டோபஸ் ஒரு இன்ச் மட்டுமே வளரும் மிகச்சிறிய உயிரினம்.

ஆக்டோபஸ்

>யானை…. தெரிந்ததும்… தெரியாததும்…

>

யானை நாம் எல்லாரும் நேசிக்கும் விலங்கு. பெரிய கால்கள், அகன்ற காதுகள், துதிக்கை, தந்தம் என பார்ப்பதற்கு முரடாக இருந்தாலும், ‘மதம்’ பிடிக்கும் காலத்தை தவிர, மற்ற நேரங்களில் பரம சாது.சொன்னதை கேட்கும் நல்ல பிள்ளை. இதன் குணாதிசயங்கள் சுவாரஸ்யமானவை. இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான் உட்பட 13 ஆசிய நாடுகளில் 50,000 யானைகள் இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
ஆசியாவில் மூன்று வகையான யானைகள் காணப்படுகின்றன. தென்மாநிலங்கள் மற்றும் இலங்கையில் காணப்படும் யானைகளின் நெற்றியில் செம்புள்ளிகள்,சிவப்பான காது மடல்கள் இருக்கும்.வடமாநிலங்கள் மற்றும் மியான்மர் நாட்டில் காணப்படும் யானைகள் கொஞ்சம் உயரம் குறைவானவை. இந்தோனேஷியா, மலேசியாவில் காணப்படும் யானைகள் மிகவும் குள்ளமானவை.
‘பேச்சலர்’ யானைகள்: கூட்டமாக வாழக்கூடியவை. ஆண் யானை பருவ வயதை(15) அடைந்தவுடன் மற்ற யானைகளால் தனியே விரட்டி விடப்படும். இப்படி விரட்டப்பட்ட ‘பேச்சலர்கள்’ தனிக்கூட்டமாக வாழும்.வயதான பெண் யானைதான் மற்ற யானைகளுக்கு வழிகாட்டியாக தலைமை வகித்து முன்னே செல்லும். குட்டிகளை கண்டிப் புடன் வளர்க்கக்கூடியவை.
அடுத்த ‘சீனியாரிட்டியான’ யானை, வயதான பெண் யானைக்கு பிறகு ‘பதவிக்கு’ வரும். யானைகள் கண்ட கண்ட பாதைகளில் செல்லாது. உணவு, தண்ணீர் உள்ள இடத்தில், என்றைக்காவது குடும்பம் குடும்பமாக சந்தித்துக் கொண்டால் ஒரே கும்மாளம்தான். வாயின் வெட்டுப்பல்தான் தந்தம். இது இல்லாத ஆண் யானைகளை ‘மக்னா’ என்கின் றனர். யானையின் வால் அடிப் பகுதியில் மேடாக இருந்தால் அது ஆண் யானையாகவும், ‘வி’ வடிவில் இருந்தால் பெண் யானையாகவும் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
தொடர்பு கொள்வதில்கில்லாடிகள்: இயற்கையாகவே பார்க்கும்திறன் குறைந்த யானைகள், தொடுதல், அருகில் இருப்பவற்றை பார்த்தல், சத்தம், ரகசியமாக சத்தமிடுதல், யானைகளிலிருந்து வெளிப்படும் ஒருவித வாசனைகளால் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன.மகிழ்ச்சியாக இருக்கும் போது பிளிறும். கோபமாக இருக்கும் போது ‘கிரீச்… கிரீச்…’ என்ற சத்தத்தை எழுப்பும். ஒரு கி.மீ., வரை ‘வாசம்’ பிடிக்கும்.
தோலின் எடை 1,000 கிலோ: உணவு, தண்ணீர், பசுமையான இடங்கள் போன்றவற்றை கணக் கிட்டு, சராசரியாக ஆண்டுக்கு ஒரு யானை 750 சதுர கி.மீ., வரை சுற்றி வரும். இயற்கையாகவே யானைக்கு ஜீரண சக்தி குறைவு என்பதால், யானை ஒன்றுக்கு தினமும் 200-250 கிலோ புற்கள் தேவை. இதில் 45-50 சதவீதம் வரை மட்டுமே ஜீரணமாகும்.இதனால், தினமும் 20 முறையாவது சாணம் இடும். ஜீரண சக்தி குறைவால், 18 மணி நேரம் வரை சாப்பிட வேண்டிய கட்டாயம் யானைக்கு உண்டு.
காலை மற்றும் மாலை 4 மணிக்கு மேல் யானைகள் சுறுசுறுப்பாக இருக்கும். இதன் சராசரி எடை 4,000 கிலோ. தோலின் எடை மட்டும் 1,000 கிலோ.தினமும் 200 லிட்டர் வரை தண்ணீர் தேவை. பொதுவாக யானைகள் நின்றுக்கொண்டும், படுத்துக் கொண்டும் தூங்கும் தன்மை உடையவை. நிழல், உணவு கிடைக்காதபட்சத்தில் ‘டென்ஷன்’ ஆகும்.மனிதன், யானை, டால்பின் இந்த மூன்றுக்கும் மூளையில் ‘எமோஷன் மையம்’ ஒத்திருப்பதால், மனிதன் போன்று புத்திசாலியான விலங்காக கருதப்படுகிறது. ஞாபக சக்தி அதிகம்.
தும்பிக்கையே நம்பிக்கை: வறட்சி காலத்தில் தண்ணீர் இல்லாதபட்சத்தில், ஈரப்பதமான இடத்தை துதிக்கையால் தோண்டி தண்ணீர் பருகும்.கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களை தேடி, இயற்கையாக உள்ள உப்புப் பாறைகளை உடைத்து, சாப்பிடும். மூக்கும், மேல் உதடும் சேர்ந்த துதிக்கை 60,000 தசை நார்களால் ஆனது. ஒருமுறை 10 லிட்டர் தண்ணீர் உறிஞ்சும். தண்ணீர் கிடைக்காத போது, தொண்டை பகுதி, வயிற்று பகுதியிலிருந்து ஒரு லிட்டர் வரை தண்ணீரை உறிஞ்சி எடுத்து சமாளிக்கும்.
காதை ஆட்டுவதன் ரகசியம்: யானையில் நகத்தில் மட்டுமே வியர்வை சுரக்கும். மற்ற இடங் களில் சுரக்காததால், உடல் வெப்ப நிலையை சீராக வைத்துக் கொள்ள, ரத்த நாளங்கள் அதிகமுள்ள காதை ஆட்டிக் கொண்டே இருக்கும்.இதன்மூலம் உடல் வெப்பநிலையை 1 டிகிரி செல்சியஸ் வரை குறைக்கும்.
தவிர, உடல் வெப்பத்தை குறைக்க, தன் மேல் தண்ணீரை தெளித்தல், மண்ணை போட்டுக் கொள்ளுதல், எச்சிலை விழுங்குதல் போன்றவற்றால் சமாளிக்கும்.தூண்கள் போன்ற கால்களால் வேகமாக ஓட முடியுமே தவிர, தாவ முடியாது. முரடாக தெரியும் அந்த பாதம் மென்மையானது. நடக்கும்போது விரியும். தரையில் இருந்து காலை எடுக்கும் போது சுருங்கும்.
மதம் மூன்று மாதம்: ஆண் யானைக்கு காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள வீக்கமான பகுதியில் மதநீர், ஆண்டுக்கு ஒருமுறை வழியும். இதைதான் ‘மதம்’ என்கின்றனர். இது மூன்று மாதங்கள் வரை இருக்கும். 15 வயது முதல் 20 வயதுக்குள் மதம் பிடிக்க ஆரம்பித்து, 45 வயது வரை ஏற்படும். அப்போது விதைப்பை 16 மடங்கு பெரியதாகும்.மற்ற ஆண் யானைகளை பிடிக்காது. பெண் யானையுடன் சேர துடிக்கும். அரைமணி நேரம் உணர்வுகளை தூண்டி, ஒரு நிமிடத்தில் இணைந்து விடும். குறிப்பிட்ட காலம் வரை அந்த பெண் யானையுடனே ‘ஹனிமூன்’ செல்லும்.
அங்குசம் தேவையா? பெரிய உருவமான யானை, மூன்று அடி உயரமுள்ள அங்குசத்திற்கு கட்டுப்படும் ரகசியம் எதுவுமில்லை. யானைக்கு 110 வர்ம இடங்கள் உள்ளன.அதில் ஏதாவது ஒன்றை அழுத்தி குத்தும்போது, யானை கட்டுப்படும். மற்றபடி, யானைக்கும், அங்குசத்திற்கும் சம்பந்தமில்லை.
பாலித்தீனால் பலியாகும் யானை: பரவலான மலைப்பகுதிகள் இல் லாமல் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள இடைவெளிகள், மனிதன் ஏற்படுத்திய வளர்ச்சி, காட்டுத்தீ, கால்நடைகள், மரம் சேகரிப்போரால் யானைகள் பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவில் அதிக யானைகள் (59 சதவீதம்) திருட்டுக் கும்பலால்தான் வேட்டையாடப்பட்டுள்ளன. ரயிலில் அடிபடுதல் 15 சதவீதம், விஷஉணவு 13, மின்சாரம் பாய்ந்து 8 சதவீத யானைகள் பலியாகி இருக்கின்றன.இதில் புதிதாக சேர்ந்திருப்பது மக்காத பிளாஸ்டிக் பொருட்கள். காட்டுப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிலர், காலியான பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் வாட்டர் கேன்களை கையோடு கொண்டு செல்லாமல், அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர்.
அதை உண்ணும் யானை போன்ற விலங்குகள், ஜீரணம் ஆகாமல், வயிறு உப்பி இறப்பது இன்றும் நடக்கிறது. தவிர, இயற்கையாகவே யானையின் குடலுக்குள் உருவாகும் புழுக்கள், பூச்சிகளாலும் இறப்பு நேரிடுகிறது.காசநோயாலும் இறக்கின்றன. இப்படி நோய்வாய்ப்பட்ட யானை களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தும் ஊசி, மருந்துகளில் 60 சதவீதம் மனிதனுக்கு பயன்படுத்தக் கூடியவை.
யானையை பாதுகாப்பது முக்கியம்: யானைகள் நல்ல பழங்கள், மரங்களில் உள்ள செடிகள், இலைகளை விரும்பி உண்ணும்.அதிலிருந்து கீழே விழும் விதைகள், மக்கி செடிகளாக வளரும். அதை நம்பி காளான் வளரும். காளானை நம்பி சில உயிரினங்கள் இருக்கின்றன. காடுகளில் யானை உருவாக்கும் புதிய பாதைகளில் மற்ற விலங்குகள் எளிதாக செல்ல முடியும்.
யானை சாப்பிட்டது போக, கீழே போடும் செடி, கொடிகளை, பின்தொடர்ந்து வரும் காட்டு எருது, மான்கள் உண்ணும். மரக் கிளைகளை உடைத்து இலைகளை யானை உண்பதால், வெயில்படாத இடங்களில்கூட சூரியக்கதிர்கள் ஊடுருவி புற்கள் வளரும். அதை நம்பி பல சிறு உயிரினங்கள் வாழ்கின்றன.இப்படி பல உயிரினங்கள் வாழ நேரடியாகவும், மறைமுகமாகவும் யானைகள் உதவுகிறது. காடுகள், காடுகளாக இருக்க பாதுகாவலனாக இருப்பது யானை. இதை பாதுகாப்பது நமது கடமை.
யானைகளின் பரிணாம வளர்ச்சி:குரங்கில் இருந்து மனிதர் தோன்றியதாக வரலாறு. அதுபோல தற்போதைய யானைகள், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பன்றி போன்ற உருவத்தில் இருந்து தட்பவெப்ப சூழ்நிலைகளால் மாற்றமடைந்து தற்போதைய உருவத்தை அடைந்தவை.
பல கோடி மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மூன்தெரியம் எனப்பட்ட பன்றி போல் உருவத்தில் தோன்றின. பின் மாமூத் என்ற பரிணாம வளர்ச்சி பெற்றது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமூத் இனங்கள் காணப்பட்டுள்ளன. பனிக்காலமாக இருந்ததால் அவை தோல் வளர்ந்து காணப்பட்டன.அதிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்று தற்போதைய உருவத்தை யானைகள் பெற்றன. தற்போது உலகில் 13 நாடுகளில் யானைகள் உள்ளன. இவற்றின் பூர்வீகம் ஆப்ரிக்கா.
ஆசியா யானைகளின் மொத்த எண்ணிக்கை:50,000 இந்தியா:27,500 – 28,500 தென்மாநிலங்கள்: 15,000 -16,000 தமிழகம்:3500 – 4000
இரட்டையர்களும் உண்டு:யானைகள் சராசரியாக 70 வயது வரை வாழும். பெண் யானைகள் 15 வயதில் ‘மேஜராகி’ விடும். 15-20 வயதில் ஆரம்பித்து 55 வயது வரை குட்டிப் போடும்.தனது வாழ்நாளில் 8-12 குட்டிகளை ஈன்றெடுக்கும். பிரசவ காலம் 18-22 மாதங்கள். பிறக்கும் குட்டி 90-125 கிலோ எடை இருக்கும். ஆண் குட்டி 9 அடி உயரமும், பெண் குட்டி 8 அடி உயரமும் இருக்கும். அரிதாக ஒரே சமயத்தில் இரட்டைக் குட்டிகளை ஈன்றெடுக்கும்.
ஆப்ரிக்கா, ஆசியா யானைகள் ஒப்பீடு:உலகில் ஆசியா, ஆப்ரிக்கா யானைகள் என இரு வகைகள் உண்டு. அதில் ஆப்ரிக்கா யானைகள் சவன்னா, ஹர்ச் என இரு வகைப்படும். ஆசியாவில் மூன்று வகையான யானைகள் உள்ளன.
ஆசியா யானைகள் பொதுவாக 11 அடி உயரம் கொண்டவை. ஆப்ரிக்கா யானைகள் 13 அடி உயரம் கொண்டவை. ஆப்ரிக்கா யானைகளில் ஆண், பெண்ணுக்கும் தந்தம் இருக்கும். ஆசியா யானைகளின் தும்பிக்கையில் பொருட்களை கையாளும் வகையில் மேல் பகுதியில் சிறு மடிப்பு உண்டு. ஆப்ரிக்க யானைகளில் தும்பிக்கையில் மேல் மற்றும் கீழ்புறமும் மடிப்புகள் இருக்கும்.ஆசிய யானைகளின் கால்களில் 4 மற்றும் 3 நகங்களும், ஆப்ரிக்க யானைகளின் கால்களில் 5 மற்றும் 4 நகங்களும் இருக்கும்.

யானை…. தெரிந்ததும்… தெரியாததும்…

>கடல் ஆமை

>

கடல் ஆமை
உலகம் முழுவதும் கடல் ஆமைகள் 225 வகைகள் காணப்பட்டாலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மட்டும் 20க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் காணப்படுகின்றன.
இதன் மேலோடு கடுமையான பலம் பொருந்தியதாகவும் இதன் உட்பகுதி மிகவும் பாதுகாப்பாகவும் அமைந்துள்ளது. விலா எலும்புகளும் முதுகு எலும்புகளும் ஒன்றாகி உடல் தசைகள் சுருங்கி காணப்படுகின்றன. இவற்றின் நுரையீரல் மேலோட்டினை ஒட்டியவாறு அமைந்திருக்கிறது.
பற்களுக்குப் பதிலாக கொம்புகளால் ஆன அசையாத அலகு போன்ற அமைப்பு இரு தாடைகளிலும் இருக்கிறது. இதன் கை, கால்கள் நீர் மற்றும் நிலத்தில் வாழ ஏற்றதாகவும் உள்ளது. முன்கால்கள் துடுப்புகளைப் போன்று இருப்பதால் மிகவேகமாக கடலில் நீந்திச் செல்கின்றது.
பின்னங்கால்களில் உள்ள விரல்கள் சவ்வு போன்ற அமைப்பால் இணைக்கப்பட்டுள்ளது. கண்கள் சிறியதாக இருப்பினும் அனைத்து வண்ணங்களையும் காணமுடியும்.
கடல் ஆமைகளின் வாயிலும் கழிவுகளை வெளியேற்றும் பகுதியிலும் சிறப்பு ரத்த நாளங்கள் உள்ளன. இவை நீரில் மூழ்கி இருக்கும் போது பிராணவாயுவை நீரிலிருந்து பிரித்தெடுத்து சுவாசிக்க உதவுகிறது. ஆண் ஆமையின் வயிற்றுப்பகுதி குழியாகவும் பெண்ணின் வயிற்றுப்பகுதி பெருத்தும் குவிந்தும் காணப்படும்.
ஆழ்கடலில் இனப்பெருக்கம் செய்யும் இவை மணற்பாங்கான கடற்கரையில்தான் முட்டையிடுகின்றன. கடற்கரையில் 50 முதல் 80 செ.மீ வரையிலான குழி தோண்டி அதில் 100 முதல் 150 முட்டைகள் வரை இட்டு அக்குழியை மூடி விடுகின்றன. முட்டை குஞ்சுகளாக மாற சூரிய வெப்பம் அவசியம் என்பதால் முட்டையிட மட்டுமே அவை கடற்கரைக்கு வருகின்றன.
60 முதல் 90 நாட்களில் முட்டைகள் குஞ்சுகளாகி கடலை நோக்கி ஊர்ந்து சென்று பின்னர் நீரில் நீந்தி ஆழ்கடலை அடைகின்றன. 1000 ஆமைகளில் ஒன்றுதான் பல்வேறு தடைகளைத் தாண்டி முதிர்ந்த பருவத்தை அடைகிறதாம்.
சில ஆமைகள் கடற்பாசிகளையும் கடற்பஞ்சுகளையும் உண்கின்றன. பெருந்தலை ஆமைகள் நண்டுகள் மற்றும் மெல்லுடலிகளையும் சில வகை ஆமைகள் கடலின் ஆழத்தில் டைவ் அடித்து ஜெல்லி மீன்களையும் சாப்பிடுகின்றன. இதன் மாமிசமும்,முட்டைகளும் உணவாகவும் பயன்படுகின்றன.
இந்த ஆமைகளில் இருந்து பெறப்படும் முட்டைகளில் இருந்து மருந்துப் பொருட்கள்,வாசனைத் திரவியங்கள், சோப்பு போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன.
இவற்றின் ரத்தம் மூலநோய்க்கு சிறந்த மருந்தாகிறது. ஆமைகளின் ஓடுகளில் இருந்து அலங்காரப் பொருட்களும் காலணிகளும் கூட தயாரிக்கப்படுகின்றன.
மீனவர்கள் விசைப்படகுகளின் மூலம் மீன் பிடிக்கும்போது மீன்பிடி வலைகளில் டெட் எனப்படும் ஆமை தவிர்ப்புக் கருவியைப் பொருத்திக் கொண்டால் வலைகளில் ஆமைகள் மாட்டி இறப்பதைத் தவிர்க்க முடியும். இந்த அரியவகை கடல்வாழ் உயிரினம் அழிந்து கொண்டே வருவதால் இவற்றைப் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

>காம்பிரியன் யுகத்தில் தோன்றிய ‘பொரி பெரா’

>

காம்பிரியன் யுகத்தில்
தோன்றிய ‘பொரி பெரா’

55 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காம்பிரியன் யுகத்தில் தோன்றியதாக கருதப்படும் ‘பொரி பெரா’க்கள் மன்னார் வளைகுடா பகுதியில் இன்றும் காணப்படுகின்றன. நீர்நிலைகளில், குறிப்பாக கடலின் அடிப்பகுதியில் வாழும் முதுகெலும்பற்ற உயிரினம் ‘பொரி பொரா’ . ‘புரையுடலிகள்’ என அழைக்கப்படும் இவற்றின், உடல் பல செல்களால் ஆனது.
7000 இனங்கள் இவ்வுலகில் இருப்பதாக சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இவை 55 கோடி ஆண்டுகளுக்கு முன், காம்பிரியன் யுகத்தில் தோன்றியிருக்கலாம் என கூறப்படுகிறது. பல்செல் உயிரிகளில் முதலில் தோன்றிய உயிரினமும் இவை தான். நீரில் மிதக்கும் தன்மை கொண்ட இது, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அடித்து செல்லப்படுகின்றன. சில செ.மீ., மட்டுமே வளர்ந்து குறைந்த காலமே உயிர் வாழும். இவற்றின் சில ரகங்கள் மட்டும் எட்டு முதல் 10 ஆண்டுகள் உயிர் வாழும். தங்களின் உடல் எடையை போல ஒரு மணி நேரத்தில் 50 மடங்கு வரை நீரை வெளியேற்றுகிறது. ஆஸ்டியா எனப்படும் பல்வேறு சிறு துளைகள் வழியே வந்து, ஆஸ்குலம் எனும் பெருந்துளை வழியாக நீரினை வெளியேற்றும். நீரில் கரைந்துள்ள நுண்ணிய அங்ககப் பொருட்கள் மற்றும் தாவர நுண் மிதவைகளை இவை உண்டு வாழ்கின்றன.
இவற்றில் சில பாலியலற்ற முறையிலும், சில பாலியல் முறையிலும் இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றிலிருந்து சுரக்கும் வேதியியல் பொருளின் நச்சுதன்மையால், பிற உயிரினங்களிடமிருந்து தன்னை காத்துக்கொள்கிறது. கடலில் பிராணவாயு கிடைக்கவும், கடல் சுற்றுச்சூழல் சமநிலையை மேம்படுத்தவும், ஊட்டச்சத்துக்கும், சுழற்சிக்கும் இவை முக்கிய பங்காற்றுகின்றன.

காம்பிரியன் யுகத்தில் தோன்றிய ‘பொரி பெரா’

>கொசு கடித்தால் மலேரியா வராது: விஞ்ஞானிகள் புது கண்டுபிடிப்பு

>

மலேரியாவை தடுக்க, மரபணு மாற்றப் பட்ட கொசு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொசு நோயை பரப்புவதற்கு பதிலாக, மலேரியா வராமல் தடுக்கும் எதிர்ப்பு சக்தியை பரப்புகிறது’ என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.ஜப்பானை சேர்ந்த ஜிசி மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் ஷிகெடே யோஷிடா கூறியதாவது:இந்த ஆய்வு, மனிதர்களிடம் மலேரியாவை பரப்பும் அனோபிலஸ் வகை கொசுவை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்டது. கொசுக்கள் மனிதர்களிடம் இருந்து ரத்தத்தை உறிஞ்சும் போது நோய்க் கிருமிகளை பரப்புகிறது. இதனால், மலேரியா போன்ற நோய்கள் ஏற்பட்டு, ஆண்டுக்கு 10 லட்சம் முதல் 20 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதில், பெரும்பாலும் ஆப்ரிக்காவை சேர்ந்த குழந்தைகளே உயிரிழக்கின்றனர்.

கொசுக்களை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானதாக உள்ளது. எனவே, மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கு தடுப்பு மருந்தை பரப்புவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் கொசு கடித்ததும், பாரம்பரிய தடுப்பு மருந்துகள் போன்று பாதுகாப்பான நோய் எதிர்ப்பு திறன் தூண்டப்படுகிறது. இவ்வாறான கொசுக்கள் தொடர்ந்து கடிக்கும் போது, வாழ் நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு திறன் இயற்கையாகவே அதிகரிக்கிறது.இதனால், இந்த பூச்சி இனம், தீங்கு விளைவிப்பதில் இருந்து, ஆதாயம் தருவதாக மாறுகிறது. இந்த ஆய்வு மலேரியாவை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பம் குறித்த நம்பிக்கையை அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

கொசு கடித்தால் மலேரியா வராது: விஞ்ஞானிகள் புது கண்டுபிடிப்பு

>நவீனமயத்தால் அழியும் சிட்டுக்குருவிகள்: இன்று(20.03.10)உலக சிட்டுக்குருவி தினம்

>

‘சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு… தென்றலே உனக்கென்ன சொந்த வீடு…’ என்ற பாடலுக்கு ஏற்ப, சுதந்திரமாக சுற்றித் திரியும் பறவைகளில் சிட்டுக்குருவி முதலிடம் வகிக்கிறது. தொல்காப்பியம் உட்பட இலக்கியங்களில் அதிகம் பேசப்பட்டது. பாரதியார் கவிதைகளில், சிட்டுக்குருவியின் பெருமைகளை குறிப்பிட மறக்கவில்லை.

உருவத்தில் சிறியதாக, அழகான தோற்றம் கொண்ட, சுறுசுறுப்பாக பறக்கும் சிட்டுக்குருவி, காகங்களைப் போல், மனிதர்களின் பழக்க வழக்கத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு பழகும் அறிவுபூர்வமான உன்னத பறவை. கூரை வீடுகள், ஓடுகள் வேயப்பட்ட கூரைகளில் கூடு கட்டி முட்டையிடும் பெண் குருவிக்கு, பக்க பலமாக ஆண் குருவி கூடவே இருந்து குஞ்சு பொரிக்க உதவுகிறது. வீட்டுத் தோட்டங்களில் பூச்சிகளை குருவிகள் உண்பதால், ‘விவசாயிகளின் நண்பன்’ என அழைக்கப்பட்டது. பல சரக்கு கடைகள் முன் சிதறிக் கிடக்கும் தானியங்களை கூட்டமாகச் சேர்ந்து உண்டு மகிழும். ஆட்கள் வந்தால், நடப்பதற்கு வழி விடுவதற்காக சற்று நகர்ந்து கொண்டு தானியங்களை உண்ணும். சூரிய உதயத்திற்கு முன்பே குரல் எழுப்பும். அதன் அழகையும், குரலின் மென்மையையும் ரம்மியமாக ரசிக்கலாம்.

அழியும் குருவிகள்: மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்றுச்சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப்பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது.
* வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி, வீடு முழுவதும், ‘ஏசி’ செய்யப்பட்ட வீடுகளில், குருவிகள் கூடு கட்டி குடியிருக்க இயலாமல் போனது.
* பெட்ரோலில் இருந்து வெளியேறும், ‘மீத்தைல் நைட்ரேட்’ எனும் ரசாயனக் கழிவு புகையால், காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன.
* பல சரக்கு கடைகள் மூடப்பட்டு வருகின்றன. அவற்றிற்கு பதிலாக, டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு பிளாஸ்டிக் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், ரோட்டில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை.
* வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக, உணவு இல்லாமல் குருவிகள் அழிகின்றன.

* இவையனைத்துக்கும் மகுடம் சூட்டியது போல், மொபைல் போன் வருகைக்கு பின், குருவிகள் 90 சதவீதம் அழிந்துவிட்டன. மொபைல் போன் டவர்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும், கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மலைக்கிராமங்களில் சொற்ப அளவில் சிட்டுக்குருவிகள் தென்படுகின்றன. தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பிற மாவட்டங்களில், பெயரளவிற்கு கூட இவற்றை காண முடியவில்லை. விருதுநகர் மாவட்ட வனப்பகுதிகளில் அதிகளவில் சிட்டுக்குருவிகள் இருந்தன. மரங்கள் வெட்டப்படுவதாலும், வறட்சி காரணமாகவும் குருவிகள் பசுமையான இடங்களுக்கு இடம் பெயர்வது அதிகரித்து வருகிறது.

திருச்சி இயற்கை சங்கம் பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் ரெல்டன் கூறியதாவது: ஆண் குருவி – பெண் குருவி ரோமத்தின் அடிப்படையில் வேறுபடுகின்றன. வீடுகளின் கட்டமைப்பு, நச்சுத்தன்மை வாய்ந்த உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளினால் இந்த இனம் அழிகிறது. கொடைக்கானல், தாண்டிக்குடி, சிறுமலை, பன்றிமலை போன்ற இடங்களில் மட்டுமே இவற்றை காண முடிகிறது. இப்பறவை இனம் அழியாமல் இருக்க, இயற் கையை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு ரெல்டன் கூறினார்.

மதுரை பறவை வியாபாரி திலீப்குமார் கூறியதாவது: மொபைல் போன் வருகைக்கு பின், சிட்டுக்குருவிகள் இனப்பெருக்கம் செய்ய இயலாதபடி, அதன் கருப்பையில் பாதிப்பு ஏற்பட்டு வருவதை பறவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மொபைல் போன் டவர்கள் அல்லாத மலைப்பகுதிகளில், சிட்டுக்குருவிகள் குறைந்த அளவில் வசிக்கின்றன. கிராமங்களிலும் மொபைல் போன் சேவைகள் அதிகரித்து வருவதால், சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன. இவ்வாறு திலீப்குமார் கூறினார்.
குருவிகளை காக்கும் வழி: குறைந்த எண்ணிக்கையில் உள்ள சிட்டுக்குருவிகளை காக்கும் பொறுப்பு ஒவ்வொருவரிடமும் உள்ளது. சிறிய வீடாக இருந்தாலும், தோட்டம் அமைக்க வேண்டும். பயிர்கள், தாவரங்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கக்கூடாது. குருவிகள் குடிக்க கிண்ணத்தில் தண்ணீர் வைக்க வேண்டும். வீட்டு முன், மொட்டை மாடியில் தானியங்களை தூவ வேண்டும். மண்பானையில் வைக்கோல் வைத்தால், குருவிகள் கூடு கட்ட பயன்படும்.

நவீனமயத்தால் அழியும் சிட்டுக்குருவிகள்: இன்று(20.03.10)உலக சிட்டுக்குருவி தினம்

இந்திய நீர்வாழ் தேசிய விலங்காக டால்பின் .

இந்தியாவின் தேசிய விலங்காக புலி, தேசியப்பறவை யாக மயில் உள்ளது. தற்போது இந்திய நீர்வாழ் தேசிய விலங்காக டால்பின் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்திய நீர் நிலைகளில் டால்பின் இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.
எனவே டால்பின் இனத்தை பாதுகாக்க அதை தேசிய நீர்வாழ் விலங்காக அறிவிக்க வேண்டும் என்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்திருந்தார். அதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு அக்டோபர் 5,2009 அன்று இந்திய தேசிய நீர் விலங்காக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
ஓங்கில்கள் அறிவுக் கூர்மை வாய்ந்த விலங்குகளில் ஒன்றாகும். இவை மனிதர்களுடன் நன்கு பழகுகின்றன.
ஒவ்வொரு டால்பினும் தனித்துவமான சீட்டி (சீழ்க்கை) ஒலியை எழுப்புகின்றன. இவை மனிதர்களின் கை இரேகையைப் போல் ஒவ்வொரு டால்பினுக்கும் தனித்தன்மையானவை.[
மனிதர்களிடம் நட்புடன் வாழும் ஒரே கடல் வாழ் உயிரினம் டால்பின் மீன்கள்தான். மனிதனிடம் தானாகவே வந்து நட்புறவு கொள்ளும் டால்பின் மீன்கள் பார்ப்பதற்கு அழகானவை மட்டுமல்ல. மிகவும் புத்திசாலியான விலங்கும்கூட.
டால்பின் மீன்கள் அவை வாழும் பகுதியின் சுற்றுச்சூழலின் அளவுகோலாக இருக்கிறது. டால்பின்கள் அதிகம் வாழும் பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருப்பதாக சூழலியல் அறிஞர்கள் கருதுகின்றனர்
இந்த டால்பின் மீன்களை பழக்கி பொழுதுபோக்கு பூங்காக்களில் பயன்படுத்தும் பழக்கம் நீண்ட காலமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகிறது.
இன்று இந்த டால்பின் மீன்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. காரணமாக இருப்பவன் வழக்கம்போல மனிதன்தான்.

>இந்திய நீர்வாழ் தேசிய விலங்காக டால்பின் .

>அழிந்துபோன ‘யானைப் பறவை’ மீண்டும் வருகிறது

>

உலகின் மிகப் பெரிய பறவையாக கருதப்பட்ட ‘யானைப் பறவையான’ (எலிபண்ட் பேர்டு) 300 ஆண்டுகளுக்கு முன் பிரஞ்சு காலனிக்காரர்களால் அழிந்து போனது. மடகாஸ்கரை சேர்ந்த இந்த பறவையினம், அதன் பாதுகாக்கப்பட்ட முட்டையின் ஓட்டில் இருந்து எடுக்கப்படும் டி.என்.ஏ.,வின் மூலம் மீண்டும் உயிர் பெறலாம் என கருதப்படுகிறது.நெருப்புக் கோழி மற்றும் ஈமு வகை கோழியை போன்று உருவ அமைப்புடன் அளவில் மிகவும் பெரியதாக காணப்படுவது ‘யானைப் பறவை’ (எலிபண்ட் பேர்ட்). இது 10 அடி உயரமும், அரை டன் எடையும் கொண்டது.ஆப்ரிக்கத் தீவுகளில் பிரெஞ்சுக்காரர்கள் குடியேறும் வரை, இவ்வகை பறவை அங்கு காணப்பட்டது. அவர்கள் குடியேறிய சில ஆண்டுகளிலேயே, இந்தப் பறவை இனம் இறைச்சி மற்றும் முட்டைக்காக தொடர்ந்து வேட்டையாடப்பட்டதால், காலப்போக்கில் அழிந்து போயின. இந்த பறவையின் முட்டை, சாதாரண கோழி முட்டையை விட 160 மடங்கு பெரிது. தற்போது காணப்படும் ஈமு கோழியை விடப் பெரியது. மூக்கு குத்தீட்டி போல பெரியதாக இருக்கும்.
மடகாஸ்கரின் தெற்கு பகுதியில் அமைந்திருந்த இந்த பறவைகளின் பழைய கூடுகளில் காணப்பட்ட முட்டை ஓடுகளை, ஷெப்பீல்டு பல்கலைகழகத்தை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.அழிந்து போன பறவை இனங்களான நியூசிலாந்து நாட்டை சேர்ந்த ‘மோவா’ மற்றும் மடகாஸ்கர் பகுதியை சேர்ந்த ‘யானைப் பறவை’ (எலிபண்ட் பேர்டு) போன்ற பறவையினங்களின் முட்டை ஓடுகளில் இருந்து அவற்றின் மரபணுவை பிரித்தெடுக்கும் முறையை, விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர். அவ்வாறு வெற்றிகரமாக டி.என்.ஏ.,வை பிரித்தெடுத்து அதன் மூலக் கூறுகளைக் கண்டறிந்தால், அதன் மூலம் அழிந்து போன பறவை இனங்களை போன்ற தோற்றம் கொண்ட, ஒன்றை, குளோனிங் மூலம் உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில்,’முட்டை ஓடுகளில் இருந்து பழமையான டி.என்.ஏ.,வை பிரித்தெடுப்பது தான், தொல்பொருள் மற்றும் புதைபடிவ ஆராய்ச்சியில் இருக்கும் முக்கியமான ஒன்று. பழமையான டி.என்.ஏ., படிவங்களை போதுமான அளவு பெறுவது, மிகவும் சவாலாக உள்ளது. பொதுவாக, அழிந்து போன இனங்களின் புதைபடிவங்கள் ஆகியவை எங்காவது சில இடங்களில் சிறிதளவே உ ள்ளது’ என்றார்.இந்த ‘யானைப் பறவை’ (எலிபண்ட் பேர்டு) மிகப் பெரிய கால்கள், கூர்மையான நகங்கள், நீண்ட சக்தி வாய்ந்த கழுத்து மற்றும் ரோமம் போன்ற இறகுகளால் மூடப்பட்டு காணப்படும். பார்க்க மிகவும் பெரிதாக பயமுறுத்தும் தோற்றுத்துடன் இப்பறவை காணப்பட்டாலும், இதன் உணவு தாவரங்கள். மடகாஸ்கர் பகுதியில் இந்த பறவை ஆறு கோடி ஆண்டுகள் வாழ்ந்துள்ளன.
இதே போன்று, நியூசிலாந்தில் வாழ்ந்து 18ம் நூற்றாண்டில் அழிந்த பறவை இனம் ‘மவோ’. இது யானையை விட உயரமானது.இதுகுறித்து, ஆஸ்திரேலியாவின் முர்டாச் பல்கலைகழகத்தை சேர்ந்த உயிரியல் வல்லுனரான சார்லட் ஓஸ்காம் என்பவர் கூறுகையில்,’இந்த முட்டை ஓடுகள் மூலம் புதிய வகை டி.என்.ஏ., குறித்த தகவல்களை அறியலாம். பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட பறவைகளின் பழங்கால முட்டை ஓடுகளில் டி.என்.ஏ.,க்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதற்கு இது முதல் ஆதாரம்’ என்றார்.

அழிந்துபோன ‘யானைப் பறவை’ மீண்டும் வருகிறது

>மனித முரண்பாடுகளால் இடம்பெயரும் யானைகள்!

>

மனிதஇன முரண்பாடுகளால் யானைகள் வனப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து விவசாய நிலங்களை நோக்கி வருவது அதிகரித்து வருகிறது. ஆசியாவிலேயே யானைகள் ஒரே இடங்களில் கூடி வாழ்வது கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்த வனப் பகுதிகளில்தான்.
இங்கு மட்டும் சுமார் 8 ஆயிரம் யானைகள் உள்ளன. பருவ காலங்கள் மாறும்போது யானைகளுக்கு உணவு முறைகள் மாறுபடுவது அவைகளின் உடல்ரீதியான மரபு. வனத்துறையினர் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் நடத்திய ஆய்வில் 2 முதல் 3 சதம் வரை யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மழைக்காலங்களில் வனப்பகுதிகளில் புற்கள், மரப்பட்டைகளை உண்டு வாழ்ந்து வரும் யானைகள், கோடைக்காலங்களில் வனங்கள் வறண்ட இலையுதிர் காடுகளாக மாறுவதால் யானைகள் இடம்பெயருகின்றன.
பருவகாலங்கள் மாறும்போது அவை மீண்டும் வனங்களை நோக்கிச் செல்கின்றன. பருவ நிலையால் இடம்பெயரும் யானைகள், அதற்கென வகுக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சென்று வரும்.
கடந்த 11 ஆண்டுகளாக யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சிறுமுகையில் இருந்து வாளையாறு வரை 25}க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் யானைகளின் வழித்தடங்களை அழித்துக் கட்டப்பட்டுள்ளதால் அவ் வழியே வரும் யானைகள் வழி தெரியாமல் குடியிருப்பு பகுதிகளிலோ அல்லது விவசாய நிலங்களிலோ புகுந்து விடுகின்றன.
கோவை மாவட்டத்தில் 80 சதவீதம் யானைகளின் வழித்தடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. வனங்களில் குச்சி, மரப்பட்டை, புற்களை மட்டுமே உண்டு வாழ்ந்து வரும் யானைகள், விவசாய நிலங்களில் பயிரிட்ட சோளம், கரும்பு மற்றும் வாழைப் பயிர்களை ருசியாகச் சாப்பிட்டுப் பழகுவதால் அது அங்கேயே வசிக்கத்தான் விரும்பும்.
தான் உண்டதும் இல்லாமல் தனது சந்ததியினரை அழைத்து வந்து விவசாய நிலங்களில் நிரந்தரமாக வசிக்கவும் முயற்சிக்கும் என்று வன ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
யானைகளின் வழித்தடத்தை அழித்து, கட்டடம் கட்டி அவை இருப்பிடத்துக்குச் செல்லவிடாமல் தடுப்பதால் அவை கோபம் கொண்டு குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்களைத் தாக்குகிறது.
கடந்த ஓராண்டில் 45 கிராமங்களில் சுமார் 300 ஏக்கர் நிலங்களை யானைகள் சேதப்படுத்தி உள்ளன.
கடந்த வாரம் தடாகம் சாலையில் உள்ள விவசாய நிலங்களுக்குள் யானைகள் புகுந்து வாழை மரங்களைச் சேதப்படுத்தியது. அவ்வழியே நடந்து சென்ற முதியவரையும் தாக்கிக் கொன்றது.
இந்தத் தவறுகளுக்கு யானைகளை மட்டும் குறை சொல்ல முடியாது. அதன் குணாதிசயமே அதுதான். நாம்தான் அதன் குணத்தை அறிந்து விலகிச் செல்ல வேண்டும். வனப் பகுதியையொட்டிய விவசாய நிலங்களில் யானைகளுக்குப் பிடித்த உணவு வகைகளை விவசாயிகள் பயிரிடுவதால் அவை இடம் பெயர்ந்து செல்லும்போது அவற்றைச் சாப்பிட்டு அதன் சுவை பிடித்துப்போய் அங்கேயே முகாமிடுகின்றன. யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளோ, விவசாய நிலங்களுக்குள்ளோ நுழைய விடாமல் முற்றிலும் தடுக்க முடியாது என்றாலும், அவற்றைக் கட்டுப்படுத்த வனத்துறையினருடன் இணைந்து பொதுமக்களும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.
உயிரினங்களைப் பாதுகாத்தால்தான் வனங்கள் செழிப்பாக இருக்கும். வனங்கள் பசுமையாக இருந்தால்தான் நீர்வரத்து அதிகரிக்கும். சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களைக் குறைப்பது வனங்களும், அதைச்சார்ந்த உயிரினங்களும்தான். ஆனால்,
சமீபகாலமாக இரண்டும் அழிக்கப்பட்டு வருகின்றன.
ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை யானைகள் வனங்களில் வசிக்கும். டிசம்பர் முதல் ஏப்ரல் வரை அவை இடம்பெயரும் காலம். யானைகளால் விவசாய நிலங்கள் அழிவதைத் தடுக்கவும் மனித உயிர்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்பது அவசர அவசியம். கோவை மாவட்டத்தில் ஆனைகட்டி, அனுவாவி, மருதமலை, தானிக்கண்டி, கல்கொத்தி, வாளையாறு, கல்லார், ஜக்கனாரி ஆகிய பகுதிகள் வழியே யானைகள் இடம்பெயர்கின்றன.
மேற்படி, பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு யானைகளின் வழித்தடங்கள் மிகவும் குறுகலாக உள்ளன. அந்த இடத்தை ஆய்வு செய்து யானைகளின் வழிதடங்களை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதற்கட்டமாக, மேட்டுப்பாளையம் அருகே கல்லார், ஜக்கனாரி வழியே யானைகள் அதிக அளவில் இடம்பெயர்வதால் அந்த இடத்தை அரசு வாங்கி யானைகள் எளிதாகக் கடக்கும் வகையில் அப் பாதையை அகலப்படுத்த வேண்டும்.
அழிந்துபோன யானைகளின் வழித்தடங்கள் சீரமைத்துக் குடியிருப்புப் பகுதிகளுக்குள் யானைகள் வராமல் தடுக்கவும், மனிதர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் அரசு திட்டம் வகுக்க வேண்டும்.
சுமார் 340 கி.மீ. தூர வனப் பகுதிகளைச் சுற்றி மின்வேலி அமைக்க வேண்டும். சேதமடைந்த மின்வேலியை உடனடியாகச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, யானைத் தடுப்பு அகழிகள் அமைக்க வேண்டும். குடியிருப்புப் பகுதிக்குள் நுழையும் யானைகளைத் துன்புறுத்தாமல் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
யானைகளால் பல விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டாலும் யானைகளைப் பாதுகாப்பதால் வனங்கள் செழிப்படையும்.

மனித முரண்பாடுகளால் இடம்பெயரும் யானைகள்!

>டைனோசர் இனம்

>பூமியின் மீது ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன், விண்கல் மோதியதால் ஏற்பட்ட பேரழிவின் காரணமாக, டைனோசர் இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் ராட்சத மிருகமான டைனோசரின் எலும்புகளும், முட்டைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த டைனோசர் இனம் அழிந்து ஆறரை கோடி ஆண்டுகள் ஆகின்றன, என பல்வேறு நாட்டு அறிஞர்கள் உறுதி படுத்தியுள்ளனர்.

பூமியில் ஏராளமான உயிரினங்கள் உலாவி கொண்டிருக்க, இந்த ராட்சத இனம் எப்படி அழிந்தது என்பது, புரியாத புதிராக இருந்து வருகிறது. வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டதாக சிலரும், எரிமலை சீற்றத்தில் சிக்கி இந்த இனம் அழிந்து விட்டதாக சிலரும் கூறி வருகின்றனர்.

இதுவரை கிடைத்த டைனோசரின் எலும்புகள் உள்ளிட்ட பாகங்களை கொண்டு, அதன் அழிவு குறித்து உலகம் முழுவதும் உள்ள 41 விஞ்ஞானிகள் கொண்ட குழு, கடந்த 20 ஆண்டுகளாக தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டது. பல கோடி ஆண்டுகளாக பூமியில் உலாவி வந்த இந்த மிருக இனம், ஆறரை ஆண்டுகளுக்கு முன் பூமியின் மீது மோதிய விண்கல்லால், முற்றிலும் அழிந்து விட்டதாக இந்த விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. மெக்சிகோ நாடு அமைந்துள்ள பகுதியில் 15 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட விண்கல், அணுகுண்டை விட வேகமாக பூமியின் மீது வந்து மோதியுள்ளது. இந்த அதிர்ச்சியால் பூமியில் பூகம்பமும், சுனாமியும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

விண்கல் மோதிய வேகத்தால் அணுகுண்டை விட பலமடங்கு சக்தி வாய்ந்த அதிர்வு ஏற்பட்டு பூமியில் ஏற்பட்ட கந்தக புழுதியால் உலகமே இருண்டு போய் விட்டது. பல இடங்களில் காட்டு தீ பரவியது. பூமியின் சுற்றுச்சூழலில் அதிரடிமாற்றம் ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த மாற்றத்தால் ஓடி ஒளியக்கூட இடம் இல்லாத காரணத்தால் டைனோசர் உள்ளிட்ட ஏராளமான உயிரினங்கள் முற்றிலும் அழிந்து போய் விட்டன என, இந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

டைனோசர் இனம்

பூமியின் மீது ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன், விண்கல் மோதியதால் ஏற்பட்ட பேரழிவின் காரணமாக, டைனோசர் இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் ராட்சத மிருகமான டைனோசரின் எலும்புகளும், முட்டைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த டைனோசர் இனம் அழிந்து ஆறரை கோடி ஆண்டுகள் ஆகின்றன, என பல்வேறு நாட்டு அறிஞர்கள் உறுதி படுத்தியுள்ளனர்.