Monthly Archives: October, 2012

நவம்பர் 4ம் தேதி நடக்கும் குரூப்-2 தேர்வுக்கு, அனைத்து ஏற்பாடுகளையும், டி.என்.பி.எஸ்.சி., செய்து முடித்துள்ளது. நகராட்சி கமிஷனர், சார்-பதிவாளர், உதவி வணிகவரி அலுவலர் உள்ளிட்ட, குரூப்-2 நிலையில், 3,687 காலி பணியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட் 12ல், தேர்வு நடந்தது. இதில், 6.5 லட்சம் பேர் பங்கேற்றனர். அத்தேர்வு கேள்வித்தாள், முன்கூட்டியே, "லீக்’ ஆனதால், தேர்வு ரத்து செய்யப்பட்டு, நவம்பர் 4ல், மறுதேர்வு நடக்கும் என, தேர்வாணையம் அறிவித்தது. அதன்படி, 4ம் தேதி நடக்கும் மறுதேர்வில், ஏற்கனவே பதிவு செய்த, 6.5 லட்சம் பேரும் பங்கேற்கின்றனர். இவர்களுக்கான, "ஹால் டிக்கெட்’, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

டி.இ.டி., முதல் தாளில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்கள், தற்போதுள்ள நடைமுறை விதிகளின்படி, வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையில், இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கு, தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, தேர்ச்சி பெற்றவர்கள், வேலைவாய்ப்பு பதிவை பதிவு செய்துள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில், இம்மாதம், 31ம் தேதி ஆஜராகி, வேலைவாய்ப்பு பதிவு அட்டையின், சான்றொப்பமிட்ட இரு நகல்களை, சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்த்தலுக்காக அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தின் நகலையும், "ஹால் டிக்கெட்’ நகலையும், எடுத்துச் செல்ல வேண்டும் என்று டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

டி.இ.டி. மறு தேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. எனவே தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

TRB PG RESULT – முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

TRB PG RESULT – முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

ஆசிரியரை கத்தியால் குத்திய ஒன்பதாம் வகுப்பு மாணவன்

விருதுநகரில், பள்ளி மாணவனுக்கு ஆசிரியர் தண்டனை வழங்கியதால், ஆத்திரமடைந்த அவன், ஆசிரியரை கத்தியால் குத்தி தப்பினான். விருதுநகர், தனியார் பள்ளியில், 4,000 பேர் படிக்கின்றனர். இப்பள்ளியில், கம்மாபட்டியை சேர்ந்த ராஜேஷ், 14 (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான்.ஒரு வாரமாக ராஜேஷ், பள்ளிக்கு செல்லவில்லை; கணக்கு பாடத்தில், குறைந்த மதிப்பெண் பெற்றான். நேற்று முன்தினம், பள்ளிக்கு வந்த ராஜேஷை, கணித ஆசிரியர் பாண்டியராஜன், வகுப்பறையின் வெளியே நிற்க வைத்தார். நேற்று பிற்பகல், 12:00 மணிக்கு, ஆசிரியர் பாண்டியராஜன், வகுப்பறை போர்டில் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது ராஜேஷ், ஆசிரியரின் இடுப்புக்கு கீழ் பகுதியில், கத்தியால் குத்தி தப்பி ஓடினான். லேசான காயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சம்பவம் குறித்து, போலீசில் புகார் தரப்படவில்லை.

ஆசிரியர் பாண்டியராஜன் கூறுகையில், “”பள்ளிக்கு தொடந்து வராமலும், அன்று தாமதமாக வந்ததாலும், வகுப்புக்கு வெளியில் நிற்க வைத்தேன். நேற்று, வகுப்புக்கு சென்ற போது, அவனாகவே வெளியில் நின்று கொண்டிருந்தான். நான் எழுதிக் கொண்டிருந்த போது, கத்தியால் குத்தி விட்டு ஓடி விட்டான்,” என்றார்.
முதன்மைக் கல்வி அலுவலர் பகவதி கூறுகையில், “”பள்ளியில் விசாரணை நடத்தப்பட்டு, மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது,” என்றார்.

இவன் இப்படி ஏன் ஆனான்? : மதுரை அரசு மருத்துவமனை மனநலப் பிரிவு பேராசிரியர் வெ.ராமானுஜம்:வகுப்பறையில் அனைத்து மாணவர்களுமே ஒன்றுபோல் இருப்பதில்லை. சிலர் எளிதில் உணர்ச்சி வசப்படுவர். திட்டினாலோ, அடித்தாலோ உடனடியாக ஏதாவது செய்துவிடுவர். மற்ற மாணவர்கள் முன்னிலையில், ஒரு மாணவனை மட்டும் விமர்சிக்கும் போது, தனது சுயமதிப்பீடு பாதிப்பதாக நினைப்பது உண்டு. வளரும் சூழ்நிலை, பெற்றோர் வளர்ப்பைப் பொறுத்து, இது மாறுபடும். சினிமாவை, இதற்கு காரணமாக சொல்லலாம். கத்தியோடு வகுப்பறைக்குள் நுழைந்திருக்கிறார் என்றால், முந்தைய சம்பவங்களின் தொடர்ச்சியாக இருக்கலாம். “விடலைப் பருவத்தில்’ தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள மாட்டார்கள்; பெற்றோர், ஆசிரியர் சொல்வதை கேட்க மாட்டார்கள். விலங்குகளை கல்லை விட்டு எறிவது போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுவர்; பெண்களை கேலி செய்வர். இதை நடத்தைக் கோளாறு என்பர். பெரியவரானால் மற்றவர்களைப் போல, விதிமுறைகளை பின்பற்ற மாட்டார்கள். அடுத்தவர்களை துன்புறுத்தி, திருடுவது என, சமூகப் பார்வையிலிருந்து விலகியிருப்பர்.ஆசிரியர்கள் இத்தகைய மாணவர்களை தனியாக பிரிக்க முடியும். அவர்களை, பெற்றோருக்கு அடையாளம் காண்பிக்க வேண்டும். உளவியல் ரீதியாக மட்டுமே, இவர்களை சரிசெய்ய முடியும்.

TNTET KEY ANSWER 2012 | ஆசிரியர் தகுதித் தேர்வு விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TNTET KEY ANSWER 2012 | ஆசிரியர் தகுதித் தேர்வு விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.CLICK TO DOWNLOAD.

TNTET KEY ANSWER 2012 | ஆசிரியர் தகுதித் தேர்வு விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TNTET KEY ANSWER 2012 | ஆசிரியர் தகுதித் தேர்வு விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.CLICK TO DOWNLOAD.

தமிழகத்தில் 1:30 விகிதாச்சாரப்படிஆசிரியர்கள் நியமனம்: அரசு திட்டம்

அரசு பள்ளிகளில்,1:30 விகிதாச்சாரத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில், அரசு நடு, உயர், மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப, ஆசிரியர்கள் இல்லை. மாநில அளவில், பள்ளிகளில் பல ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளன. குறிப்பாக, மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டப்படி, 1:30 விகிதாச்சாரப்படி, ஆசிரியர்கள் இருக்க வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில், 60 முதல் 90 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் உள்ளனர். இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகின்றது.

குறிப்பாக, 10 மற்றும் பிளஸ் 2 அரசு பொதுதேர்வுகளில், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கீழ்நிலைக்கு சென்று விடுகிறது. இவற்றை தவிர்த்து, மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கும் பொருட்டு, மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டப்படி, தமிழக அரசு 1: 30 விகிதாச்சாரப்படி மாணவர்களை நியமிக்க, திட்டமிட்டுள்ளது. இதற்காக, அரசு பள்ளிகளில், தற்போது பணியாற்றும் முதுகலை பட்டதாரி, இளங்கலை பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கை; 1:30 விகிதாச்சாரப்படி பள்ளிகளில் தேவைப்படும் ஆசிரியர்கள் விபரம்; ஒவ்வொரு பள்ளிகளிலும்,காலியாக உள்ள ஆசிரியர்கள் குறித்த விபரங்களை அனுப்ப, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,””தமிழகத்தில், 1:30 விகிதாச்சாரப்படி, ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, பிரிவு வாரியாக தேவைப்படும் ஆசிரியர்கள் விபரங்களை, அரசு சேகரிக்கிறது. 2013 ஜூன்- முதல்,இந்த விகிதப்படி ஆசிரியர்கள் பணியாற்றுவர்,”என்றார்.

குரூப்-2 கலந்தாய்வில், நேற்று வரை, 2,446 பேருக்கு, பணி ஒதுக்கீடு உத்தரவுகள் வழங்கப்பட்டன.

குரூப்-2 கலந்தாய்வில், நேற்று வரை, 2,446 பேருக்கு, பணி ஒதுக்கீடு உத்தரவுகள் வழங்கப்பட்டன.குரூப்-2 தேர்வில் தேர்வு பெற்ற, 3,475 பேருக்கு, பணி ஒதுக்கீடு உத்தரவுகள் வழங்குவதற்கான கலந்தாய்வு, 15ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் துவங்கியது. நேற்று வரை முடிந்த ஐந்து நாளில், 2,446 பணிகளை நிரப்பி, அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.கடைசி நாளான இன்றும் கலந்தாய்வு நடக்கிறது. இன்று, 1,000த்திற்கும் மேற்பட்டோர், பணி ஒதுக்கீடு ஆணை பெறுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆறு நாள் கலந்தாய்விலும் பங்கேற்காத தேர்வர்களுக்கு, வேறொரு நாளில் தனியாக, கலந்தாய்வு நடத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, "ஆன்-லைன்’ வழியாக, நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது. பட்டதாரி ஆசிரியர், 224 பேர், தலைமை ஆசிரியராக பதவி உயர்வு செய்யப்பட்டனர்.

அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, “ஆன்-லைன்’ வழியாக, நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது. பட்டதாரி ஆசிரியர், 224 பேர், தலைமை ஆசிரியராக பதவி உயர்வு செய்யப்பட்டனர்.கடந்த, 15ம் தேதி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, “ஆன்-லைன்’ வழியாக நடந்தது. இதில், 143 பேர், பதவி உயர்வு பெற்றனர்.இதைத் தொடர்ந்து, அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, நேற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், ஆன்-லைன் வழியாக நடந்தது.

மொத்தம், 446 பணியிடங்கள் காலியாக உள்ளன. நேற்று, 250 பணியிடங்களை நிரப்ப, பணிமூப்பு அடிப்படையில், தகுதி வாய்ந்தவர்கள் அழைக்கப்பட்டனர். முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்தபடி, ஆன்-லைனில், ஒவ்வொருவராக, விரும்பிய இடங்களை தேர்வு செய்தனர்.இதில், 224 பேருக்கு, பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டன. 26 பேர், பதவி உயர்வை, மறுத்தனர்.பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன், இணை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர், கலந்தாய்வு பணிகளை கவனித்தனர். மீதமுள்ள காலியிடங்களுக்கு, இன்று கலந்தாய்வு நடக்கிறது.

www.trb.tn.nic.in | பள்ளி கல்வித் துறையில், உடற்கல்வி, ஓவியம், தையல் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்கள்,முதுநிலை ஆசிரியர்கள்,பாலிடெக்னிக்’ கல்லூரி 139 விரிவுரையாளர்கள், அரசு பொறியியல் கல்லூரிகளில், 152 உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான தேர்வு பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

HIGH SCHOOL HM PROMOTION ONLINE COUNSELLING – 1.1.2012-ன் படி 2012-13 ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியலில் 967 முதல் 1398 முடிய உள்ள 430 ஆசிரியர்களுக்கு online மூலம் கலந்தாய்வு 19.10.2012 மற்றும் 20.10.2012 அன்று நடைபெற உள்ளது.

HIGH SCHOOL HM PROMOTION COUNSELLING -1.1.2012 ன் படி 2012-13 ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியலில் 967 முதல் 1398 முடிய உள்ள 430 ஆசிரியர்களுக்கு online மூலம் கலந்தாய்வு 19.10.2012 மற்றும் 20.10.2012 அன்று நடைபெற உள்ளது.


1.1.2012 ன் படி 2012-13 ம் கல்வியாண்டிற்கான  அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியலில்  967 முதல்  1398 முடிய உள்ள 430 ஆசிரியர்களுக்கு  online மூலம் கலந்தாய்வு 19.10.2012 மற்றும் 20.10.2012 அன்று நடைபெற உள்ளது. கலந்தாய்வில் இம்முன்னுரிமையில் உள்ள ஆசிரியர்கள் பதவி உயர்வினை உரிமைவிடல் செய்வதால் ஏற்படக்கூடிய உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அதனையொத்த பணியிடங்களும் நிரப்பப்படவேண்டும் என்ற அடிப்படையில் அன்றே 1399 முதல் 1466 முடிய பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் அழைக்கப்படுகின்றனர் இருப்பினும் காலிப்பணியிடம் இருக்கும் வரை மட்டுமே பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
19.10.2012                           
# காலை 9.00 மணி முதல் பிற்பகல் 12.30 வரை   
முன்னுரிமை பட்டியல் வரிசை எண். 967 முதல் 1116 வரை
(150 ஆசிரியர்கள் மட்டும் )         
# பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை   
முன்னுரிமை பட்டியல் வரிசை எண்.1117 முதல் 1216 வரை
(100 ஆசிரியர்கள் மட்டும்)          
20.10.2012                                    
# காலை 9.00 மணி முதல் பிற்பகல் 12.30 வரை   
முன்னுரிமை பட்டியல் வரிசை எண். 1217 முதல் 1366 வரை 
( 150 ஆசிரியர்கள் மட்டும்)         
# பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை   
முன்னுரிமை பட்டியல் வரிசை எண். 1367 முதல் 1466 வரை 
( 100 ஆசிரியர்கள் மட்டும்)   

PROMOTION PANEL      

B.T APPOINTMENT ONLINE COUNSELLING | 2008-09, 2009-10, 2010-11 ஆகிய, மூன்று ஆண்டுகளில், நிரப்பப்படாத, தொடக்க கல்வித் துறைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட 83 பட்டதாரி ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

www.communication.tnschools.gov.in | தமிழகத்தில் பள்ளி கல்வி துறையில், அனைத்து பள்ளிகளின் நிலை குறித்த தகவல்கள், பதிவு செய்யப்பட்டு வருகிறது. டிசம்பர் முதல் இந்த தகவல்களை, ஆன்லைனில் பெறலாம்.

2008-09, 2009-10, 2010-11 ஆகிய, மூன்று ஆண்டுகளில், நிரப்பப்படாத, தொடக்க கல்வித் துறைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட 83 பட்டதாரி ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

தொடக்க கல்வித் துறைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.கடந்த, 2008-09, 09-10, 10-11 ஆகிய, மூன்று ஆண்டுகளில், நிரப்பப்படாத, 319 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, கடந்த ஜூனில், டி.ஆர்.பி., சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியது. அதன்பின், இறுதி தேர்வுப் பட்டியலையும் வெளியிட்டது.இவர்களில், பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 149 பட்டதாரி ஆசிரியர், 10ம் தேதி பணி நியமனம் செய்யப்பட்டனர். தொடக்க கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 83 பட்டதாரி ஆசிரியர், ஒரு வாரத்திற்குள், பணி நியமனம் செய்யப்படுவர் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.மதுரை மற்றும் கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 19 பணிஇடங்கள், நிரப்பப்பட்டு விட்டன. இதர துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு, சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
 

www.communication.tnschools.gov.in | தமிழகத்தில் பள்ளி கல்வி துறையில், அனைத்து பள்ளிகளின் நிலை குறித்த தகவல்கள், பதிவு செய்யப்பட்டு வருகிறது. டிசம்பர் முதல் இந்த தகவல்களை, ஆன்லைனில் பெறலாம்.

தமிழகத்தில் பள்ளி கல்வி துறையில், அனைத்து பள்ளிகளின் நிலை குறித்த தகவல்கள், பதிவு செய்யப்பட்டு வருகிறது. டிசம்பர் முதல் இந்த தகவல்களை, ஆன்லைனில் பெறலாம்.தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி திட்டம் இணைந்து, கல்வி தகவல் மேலாண்மை முறைக்கான தகவல் சேகரிக்கும் பணியில் இறங்கியுள்ளது. இதற்காக மாவட்டம்தோறும், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, படிவங்கள் வழங்கப்பட்டு, பள்ளிகள் குறித்து தகவல் சேகரித்தனர்.

இப்பணி நேற்றுடன் முடிவடைந்தது. வட்டார மற்றும் மாவட்ட அளவில் சரிபார்க்கப்பட்டு, வரும் 21ம் தேதி, கம்பயூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. பள்ளி கல்வி இயக்குனரகத்திற்கு நவ., 30க்குள் கம்ப்யூட்டர் பதிவுகள் அனுப்பப்படும். டிசம்பர் முதல், பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் விபரங்கள் குறித்து, tn.nic.gov.inஎன்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் www.communication.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம், கல்வித்துறை வட்டார அலுவலர்கள் மற்றும் மாவட்ட அலுவலர்கள் தங்களுக்குள், தகவல் பரிமாற்றம் செய்யவும், மாநில அலுவலர்கள் நேரடியாக பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில் தொடர்பு கொள்ளவும் முடியும்.

முதன்மைக் கல்வி அலுவலர்கள், ஆறு பேர், இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .கோவை மாவட்ட சி.இ.ஓ., ராஜேந்திரன், சென்னை மாவட்ட சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார் .

முதன்மைக் கல்வி அலுவலர்கள், ஆறு பேர், இட மாற்றம் செய்யப் பட்டனர்.

கோவை மாவட்ட சி.இ.ஓ., ராஜேந்திரன், சென்னை மாவட்ட சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார் .

முதன்மைக் கல்வி அலுவலர்கள், ஆறு பேர், இட மாற்றம் செய்யப் பட்டனர். 
மாற்றம் செய்யப்பட்டவர்கள் விவரம்:

இட மாற்றம்

1.சிவா தமிழ்மணி சி.இ.ஓ., – சென்னை 
துணை இயக்குனர் – நிர்வாகம், தொடக்க கல்வி இயக்ககம்.
2.ராஜேந்திரன் சி.இ.ஓ., – கோவை 
சி.இ.ஓ.,-சென்னை
3.செங்குட்டுவன் துணை இயக்குனர் – நிர்வாகம், தொ.க.இ., 
சி.இ.ஓ., வேலூர்
4.பொன் குமார் சி.இ.ஓ., – வேலூர் 
எஸ்.எஸ்.ஏ., – சி.இ.ஓ., – கிருஷ்ணகிரி
5.ராமசாமி எஸ்.எஸ்.ஏ., – சி.இ.ஓ., 
கிருஷ்ணகிரி சி.இ.ஓ., – தேனி
6.ஞானகவுரி சி.இ.ஓ., – தேனி 
சி.இ.ஓ., – கோவை
பதவி உயர்வு

1.சிவகாம சுந்தரி டி.இ.இ.ஓ., – சென்னை கூடுதல் சி.இ.ஓ., – ராமநாதபுரம்
2.வசந்தா டி.இ.ஓ., – கடலூர் சி.இ.ஓ., – நீலகிரி
3.ஜெயலட்சுமி டி.இ.ஓ., – பெரம்பலூர் எஸ்.எஸ்.ஏ., – சி.இ.ஓ., – சிவகங்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியாகும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமாக, 5,451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும், 18 ஆயிரத்து 932 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. முந்தைய தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,448 பேருக்கான இடங்களைத் தவிர்த்து, மீதமுள்ள, 22 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு, இத்தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள் நியமிக்கப்படுவர்.

HR SEC HM PROMOTION COUNSELLING – முதுகலை ஆசிரியர்கள்/ உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு 15.10.2012 அன்று காலை 10.00 மணி அளவில் ஆன்லைன் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தர வரிசை 482 முதல் 812 வரை உள்ளவர்கள் இதில் கலந்துக்கொள்ளலாம். பதவி உயர்வு பட்டியல் கல்விச்சோலை யில் வெளியிடப்பட்டுள்ளது.

HR SEC HM PROMOTION COUNSELLING – முதுகலை ஆசிரியர்கள்/ உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு 15.10.2012 அன்று காலை 10.00 மணி அளவில் ஆன்லைன் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தர வரிசை 482 முதல் 812 வரை உள்ளவர்கள் இதில் கலந்துக்கொள்ளலாம். பதவி உயர்வு பட்டியல் கல்விச்சோலை யில் வெளியிடப்பட்டுள்ளது. CLICK TO DOWNLOAD

HR SEC HM PROMOTION COUNSELLING – முதுகலை ஆசிரியர்கள்/ உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு 15.10.2012 அன்று காலை 10.00 மணி அளவில் ஆன்லைன் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தர வரிசை 482 முதல் 812 வரை உள்ளவர்கள் இதில் கலந்துக்கொள்ளலாம். பதவி உயர்வு பட்டியல் கல்விச்சோலை யில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 1,093 உதவிப் பேராசிரியர் தேர்வு செய்யப்படுவது குறித்த அறிவிப்பை, இன்னும் 10 நாட்களில் வெளியிட, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 1,093 உதவிப் பேராசிரியர் தேர்வு செய்யப்படுவது குறித்த அறிவிப்பை, இன்னும் 10 நாட்களில் வெளியிட, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள, 1,093 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு, கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. ஒரு ஆண்டை கடந்த நிலையில், இன்னும், உதவிப் பேராசிரியர் தேர்வு செய்யப்படவில்லை. சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், உயர்கல்வித் துறை சார்பில், புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன. அதற்குள், பழைய அறிவிப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.ஆர்.பி.,க்கு, சமீபத்தில், உயர்கல்வித் துறை உத்தரவிட்டது. இது குறித்த செய்தி, இம்மாதம், 6ம் தேதி, “தினமலர்’ இதழில் வெளியானது. இதைத் தொடர்ந்து, உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான ஏற்பாடுகளை, டி.ஆர்.பி., வேகமாக செய்து வருகிறது. இம்மாதம், 20ம் தேதிக்குப் பின், டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும் வினியோகிக்கப்பட உள்ளது. எம்.பில்., மற்றும் “நெட்’ அல்லது “ஸ்லெட்’ ஆகிய தேர்வுகளில், தகுதியைப் பெற்றவர்கள், உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். நேரடியாக, பிஎச்.டி., பட்டம் பெற்றவர்களும், விண்ணப்பிக்கலாம். கற்பித்தல் அனுபவத்திற்கு, 15 மதிப்பெண், அதிக கல்வித் தகுதி இருந்தால், 9 மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வுக்கு, 10 மதிப்பெண் என, 34 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு, அதனடிப்படையில், தகுதியான விண்ணப்பதாரர், இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவர். பணி அனுபவத்தைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக, 7.5 ஆண்டு இருந்தால், 15 மதிப்பெண்கள் கிடைக்கும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

TRB 1,093 Assisitant Professor vacancies | அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,093 உதவிப் பேராசிரியர் தேர்வு செய்யப்படுவது குறித்த அறிவிப்பை, விரைவில் வெளியிட, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.

TNTET2012 – தமிழ்நாடு முழுவதும் 14-ந் தேதி நடைபெறும் ஆசிரியர் தகுதி தேர்வை 1094 மையங்களில் 6 லட்சத்து 75 ஆயிரத்து 643 பேர் எழுதுகிறார்கள்.அனைவரும் தகுதி பெற கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்.

தமிழ்நாடு முழுவதும் 14-ந் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை 1094 மையங்களில் 6 லட்சத்து 75 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்.

ஆசிரியர்கள் பி.எட். படித்திருந்தாலும், இடை நிலை ஆசிரியர் பயிற்சி முடித்திருந்தாலும் தனியாக ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெறவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஜுலை 12-ந் தேதி நடத்தப்பட்டது. அப்போது 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள். ஆனால் தேர்வு நேரம் 11/2 மணிநேரம் கொடுக்கப்பட்டதால் விடை அளிக்க போதிய நேரம் இல்லை என்று தேர்வு எழுதியவர்கள் சரமாரியாக புகார் அளித்தனர்.

அதுமட்டுமல்லாமல் கேள்விகள் மிக கடினமாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

அவர்கள் சொன்னது சரியாகவே இருக்கும் வகையில் 61/2 லட்சம் பேர் தேர்வு எழுதியதில் 2,500 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதாவது 150 மார்க்குக்கு 90 மார்க் எடுத்தவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றவர்கள்.

இந்த பிரச்சினை காரணமாக இப்போது மீண்டும் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக தனி கட்டணம் வசூலிக்கவில்லை. கடந்த முறை எழுதியவர்கள் தேர்வு எழுதலாம் என்றும் புதிதாக தேர்வு எழுத விரும்புபவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அதன்படி புதிதாக பலர் விண்ணப்பித்தனர்.

ஹால்டிக்கெட் ஒவ்வொருவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அது ஒருவேளை கிடைக்காவிட்டால் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பத்தின் எண்ணை அடித்து ஹால்டிக்கெட்டை பெற்று தேர்வு எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு 14-ந் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணிவரை நடக்க உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 1094 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் 85 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வை 6 லட்சத்து 75 ஆயிரத்து 643 பேர் எழுதுகிறார்கள்.

அவர்களில் இடை நிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கான முதல் தாள் தேர்வை 2 லட்சத்து 52 ஆயிரத்து 298 பேர்கள் எழுதுகிறார்கள். அவர்களில் 61 ஆயிரத்து 34 பேர் ஆண்கள். 1 லட்சத்து 91 ஆயிரத்து 264 பேர் பெண்கள்.

அதுபோல பி.எட். படித்தவர்ளுக்கான 2-வது தாள் தேர்வை 3 லட்சத்து 64 ஆயிரத்து 452 பேர் எழுதுகிறார்கள். அவர்களில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 426 பேர் ஆண்கள். 2 லட்சத்து 54 ஆயிரத்து 26 பேர் பெண்கள். இந்த இரு தேர்வையும் சேர்த்து 58 ஆயிரத்து 643 பேர் எழுதுகிறார்கள். அவர்கள் பி.எட். மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களாக இருப்பார்கள்.

தேர்வுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி, உறுப்பினர் செயலாளர் அன்பழகன், உறுப்பினர் கே.அறிவொளி ஆகியோர் செய்து வருகிறார்கள்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மார்க் எடுப்பவர்களுக்கு ஆசிரியர் வேலை காத்திருக்கிறது. கேள்விகள் எளிதாக கேட்கப்படும் என்றும் 30 ஆயிரம் பேர்களுக்கு மேல் தேர்ச்சி பெறுவார்கள் என்றும் ஆசிரியர்கள் நம்புகிறார்கள்.

அரசு பணிக்கு என்னென்ன பட்டங்கள் சமமான படிப்புகளாக கருதப்படும்? தமிழக அரசு அறிவிப்பு

அரசு பணி நியமனத்தின்போது என்னென்ன பட்டப்படிப்புகள் சமமான படிப்புகளாக கருதப்படும்? என்று அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் எம்.ஏ. (இங்கிலீஷ் மற்றும் கம்ïனிகேஷன்) படிப்பு, அரசு பணி நியமனத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படிப்புக்கு சமமான படிப்பாக கருதப்படும். கோவை அவினாசிலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்குகிற எம்.ஏ. அப்ளைடு சைக்காலஜி, கவுன்சிலிங் மற்றும் கைடன்ஸ் படிப்பு, மருத்துவக் கல்விப்பணியில் உதவி பேராசிரியர் மற்றும் கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் பணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதியான முதுநிலை உளவியல் படிப்புக்கு இணையானதாக ஏற்றுக்கொள்ளப்படும்.

இதேபோல், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.ஏ. அப்ளைடு எக்கனாமிக்ஸ் படிப்பு, எம்.ஏ. பொருளாதாரம் படிப்புக்கு சமமாக கருதப்படும். கோவை பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கும் பி.எஸ்சி. பிளான்ட் பயாலஜி மற்றும் பிளான்ட் பயோடெக்னாலஜி படிப்பானது, பி.எஸ்சி. தாவரவியல் படிப்புக்கு இணையானதாகவும், இதே பல்கலைக்கழகத்தின் பி.ஏ. வரலாறு மற்றும் சுற்றுலா படிப்பு, பி.ஏ. வரலாறு பட்டப் படிப்புக்கு சமமாக ஏற்றுக்கொள்ளப்படும்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பி.லிட் (தமிழ்) படிப்பு, சென்னை பல்கலைக்கழகத்தின் பி.லிட். (தமிழ்) படிப்புக்கு இணையானதாகவும், இதே பல்கலைக்கழகம் வழங்கும் எம்.ஏ. அப்ளைடு சைக்காலஜி படிப்பானது, எம்.ஏ. சைக்காலஜி படிப்புக்கு சமமாகவும் கருதப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SSLC PRACTICAL FOR PRIVATE – நேரடியாக, பத்தாம் வகுப்பு தனி தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியர், அறிவியல் பாடத்தில், செய்முறை பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள இம்மாதம், 15ம் தேதி முதல், 31ம் தேதி வரை பதிவு செய்யலாம்.

நேரடியாக, பத்தாம் வகுப்பு தனி தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியர், அறிவியல் பாடத்தில், செய்முறை தேர்வை செய்ய வேண்டும். இதற்கு வசதியாக, செய்முறை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கு பதிவு செய்ய, ஏற்கனவே பலகட்ட வாய்ப்புகள் தரப்பட்டன. எனினும், கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன. இதை ஏற்று, அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகளில், மாணவ, மாணவியர் பங்கேற்க வசதியாக, இம்மாதம், 15ம் தேதி முதல், 31ம் தேதி வரை பதிவு செய்யலாம்; இதுவே, இறுதி வாய்ப்பு. தேர்வுத்துறை இணையதளங்களில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து, சம்பந்தபட்ட மாவட்ட கல்வி அலுவலர்களிடம், 31ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

TNPSC GROUP II COUNSELLING | குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான கவுன்சிலிங் 15-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி, 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

நடப்பு கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு வரை உள்ள முப்பருவ கல்வி முறை அடுத்த ஆண்டில் ஒன்பதாம் வகுப்பிற்கும் நீட்டிக்கப்படுகிறது.

குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தாங்கள் விரும்பும் பதவி மற்றும் பணிபுரிய விரும்பும் இடம் ஆகியவற்றை தேர்வு செய்வதற்கான கவுன்சிலிங் 15-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி, 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, உதவி வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், வருவாய்த்துறை உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 6,695 காலி இடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஜுலை மாதம் 30-ந்தேதி குரூப்-2 தேர்வு நடத்தப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி. நடத்திய இந்த தேர்வை 31/2 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த ஜுன் மாதம் 8-ந் தேதி வெளியிடப்பட்டது.

எழுத்துத்தேர்வில் 6,949 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு ஜுன் 20-ந் தேதி முதல் ஜுலை 27-ந் தேதி வரை சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. அவர்களின் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண் பட்டியல் ஆகஸ்ட் மாதம் 2-ந் தேதி டி..என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டது.இதைத்தொடர்ந்து, விண்ணப்பதாரர்களின் ரேங்க் பட்டியல்படி, நேர்காணல் தேர்வில் அடங்கிய பதவிகளுக்காக 3,472 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டு அவர்களின் பட்டியல் 9-ந்தேதி டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், தேர்வில் வெற்றிபெற்றவர்கள் தாங்கள் விரும்பும் பதவி, பணிபுரிய விரும்பும் இடம் ஆகியவற்றை தேர்வு செய்வதற்கான கவுன்சிலிங் 15-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் டி.உதயச்சந்திரன் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

குரூப்-2 தேர்வில் நேர்காணல் அடங்கிய பதவிகளுக்கான ஊழியர்களை தேர்வுசெய்யும் பொருட்டு 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும். சென்னை பிராட்வே அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் கோட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள டி.என்.பி.எஸ்.சி. புதிய அலுவலக கட்டிடத்தில் கவுன்சிலிங் நடத்தப்படும்.விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான கவுன்சிலிங் நாள், நேரம் ஆகிய விவரங்கள் அடங்கிய படிவத்தை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில்  இருந்து டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். கவுன்சிலிங்கிற்கு வராதவர்கள் தங்கள் ரேங்க் வரிசையையும் பதவி ஒதுக்கீட்டுக்கான முன்னுரிமையையும் இழப்பார்கள். அவர்களுக்கு கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள மறுவாய்ப்பும் வழங்கப்பட மாட்டாது.நேர்காணல் பதவி அடங்கிய பதவிகளுக்கான தெரிவு முடிந்த பின்னரே, நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான (3,220) கவுன்சிலிங் நடைபெறும்.இவ்வாறு உதயச்சந்திரன் கூறியுள்ளார்.

அக்., 14 ல் நடக்க உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு, முறைகேடின்றி நடத்தப்படும்,” என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி கூறினார்.

அக்., 14 ல் நடக்க உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு, முறைகேடின்றி நடத்தப்படும்,” என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி கூறினார். ஏற்கனவே நடந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு, மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், தகுதித் தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து, அவர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு நடத்தினார். சிவகங்கையில் அவர் கூறுகையில், “”ஏற்கனவே நடந்த தகுதி தேர்வில் வாய்ப்பு இழந்த, 6 லட்சத்து 55 ஆயிரத்து 243 பேர், புதிதாக விண்ணப்பித்த 20 ஆயிரத்து 43 பேர் தேர்வு எழுத உள்ளனர். குறைபாடு, முறைகேடின்றி தேர்வை நடத்த கல்வி அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம்,” என்றார். முதன்மைக் கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.

அடுத்த கல்வி ஆண்டில், முப்பருவ கல்வி முறையின் கீழ், ஒன்பதாம் வகுப்பும் வருகிறது.

அடுத்த கல்வி ஆண்டில், முப்பருவ கல்வி முறையின் கீழ், ஒன்பதாம் வகுப்பும் வருகிறது. இவ்வகுப்பிற்கு, பருவத்திற்கு, மூன்று புத்தகங்கள் வீதம் வினியோகிக்க, பாட நூல் கழகம் திட்டமிட்டுள்ளது.

நடப்பு கல்வி ஆண்டில், எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டம் அமலில் உள்ளது. அடுத்த ஆண்டில், ஒன்பதாம் வகுப்பிற்கும் நீட்டிக்கப்படுகிறது. அதற்காக, ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகங்களை, மூன்று பருவங்களுக்கு ஏற்ப பிரிக்கும் பணி, கல்வித் துறையில் தற்போது நடந்து வருகிறது. இதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள் மேற்பார்வையில், பணிகளை முடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. பாடப் புத்தகங்களில் உள்ள பிழைகளை சரி செய்யும் பணியும், வேகமாக நடந்து வருகிறது. அனைத்துப் பணிகளையும் முடித்து, மாத இறுதிக்குள், மூன்று பருவத்திற்கான பாடப் புத்தக பகுதிகளை, பாட நூல் கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட நூல் வட்டாரம் கூறியதாவது: ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி, நவம்பரில் துவங்கும். தற்போது, எட்டாம் வகுப்பு வரை, பருவத்திற்கு, இரு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. ஒன்பதாம் வகுப்பில், பாடத் திட்டங்கள் அதிகம். எனவே, ஐந்து பாடப் புத்தகங்களை, பருவத்திற்கு, மூன்று புத்தகங்களாக வழங்க திட்டமிட்டுள்ளோம். எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, மூன்றாம் பருவத்திற்கான பாடப் புத்தகங்களை அச்சிட, 140 அச்சகங்களுக்கு, தற்போது, “ஆர்டர்’ வழங்கி வருகிறோம். இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.