கடந்த, ஜூலையில் நடந்த, குரூப் – 4 தேர்வு முடிவுகள், திங்கள் மாலை வெளியானது. இதன் வழியாக, தமிழக அரசுப் பணிக்கு, 10 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
கடந்த, ஜூலையில் நடந்த, குரூப் – 4 தேர்வு முடிவுகள், திங்கள் மாலை வெளியானது. இதன் வழியாக, தமிழக அரசுப் பணிக்கு, 10 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர்.இன சுழற்சி வாரியான, “கட்-ஆப்’ மதிப்பெண் விவரம், ஒரு வாரத்தில் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்டுள்ள தேர்வர்கள், தங்களது அசல் சான்றிதழ்களை, “ஸ்கேன்’ செய்து, தேர்வாணைய இணையதளத்தில், “அப்லோட்’ செய்ய வேண்டும்.இதை, இன்று முதல், 17ம் தேதி வரை செய்ய வேண்டும். அதன் பின், சான்றிதழ்களை சரிபார்த்த பிறகே, இன சுழற்சி வாரியாக, “கட்-ஆப்’ மதிப்பெண்களை வெளியிட முடியும். “கட்-ஆப்’ மதிப்பெண் வெளியிட்ட பின், கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிகிறது .