Category Archives: RMSA

>புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்கள் மே 13ம் தேதிக்கு பிறகே பணி நியமனம்

>

"புதிதாக தேர்வு செய்யப்பட்ட 6,000 பட்டதாரி ஆசிரியர்களும், சட்டசபை தேர்தல் முடிந்த பிறகே பணி நியமனம் செய்யப்படுவர்' என, கல்வித்துறை வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன. பதிவுமூப்பு அடிப்படையில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்திற்காக 1,200 பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்க கல்வித் துறைக்கு 1,155 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறைக்கு 3,665 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 175 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் என, மொத்தம் 6,195 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பட்டியலை, நேற்று முன்தினம் இரவு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.
தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி, நேற்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால், தேர்வான ஆசிரியர்களுக்கு பணி நியமன கவுன்சிலிங் நடத்தாமல், காலியாக உள்ள இடங்களுக்கு நேற்றே பணி நியமனம் செய்து, தபால் மூலம் உத்தரவுகள் அனுப்பப்படுவதாக, தகவல்கள் பரவின. தேர்வானவர்கள், பணி நியமனம் குறித்து, அந்தந்த துறைகளில் கேட்டபடி இருந்தனர். அனைவருக்கும் நேற்றே பணி நியமன உத்தரவுகள் வழங்குவதற்கு, அதிகாரிகள் முயற்சித்தனர். இது தொடர்பாக, அதிகாரிகளுடன் துறை அமைச்சரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. எனினும், நேற்று மாலை, ஏப்ரல் 13ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

Read more »

புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்கள் மே 13ம் தேதிக்கு பிறகே பணி நியமனம்

>ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்திற்கு மத்திய அரசு ரூ. 625 கோடி ஒதுக்கீடு

>

தமிழகத்தில், மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ் (ஆர்.எம். எஸ்.ஏ.,), பல்வேறு திட்டங்களை செயல்படுத்த 625 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 344 புதிய பள்ளிகள் துவங்குதல், 282 நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்துதல், 2,752 ஆசிரியர்கள் நியமனம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டத்தை தொடர்ந்து (எஸ்.எஸ்.ஏ.,), அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,-ராஷ்டிரிய மத்தியமிக் சிக்ஷா அபியான்) அமல் படுத்தப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் எட்டாம் வகுப்பு முடிக்கும் மாணவ, மாணவியரை, தொடர்ந்து 9, 10 ஆகிய வகுப்புகளை முடிக்கும் வகையில், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ், பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள், நடப்பு கல்வியாண்டுக்காக, பல்வேறு திட்டங்களை தீட்டி, திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் குழு விடம் அறிக்கையை சமர்ப்பித்தனர். இதை ஆய்வு செய்த குழு, தமிழகத்தின் பல்வேறு திட் டங்களை ஏற்றுக்கொண்டு, ஒட்டுமொத்தமாக 625 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ள தாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.பாரதிதாசன் பல்கலையுடன் சேர்ந்து, கல்வித்துறை நடத்திய ஆய்வில், தமிழகத்தில் கூடுதலாக 1,944 நடுநிலைப்பள்ளிகள் தேவை என கண்டறிந் துள்ளது. இந்த பள்ளிகளை துவக்கிட, மத்திய அரசின் அனுமதி ஏற்கனவே கோரப்பட்டது.

Read more »

ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்திற்கு மத்திய அரசு ரூ. 625 கோடி ஒதுக்கீடு