Monthly Archives: July, 2013

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி – 01.01.2013 நிலவரப்படி கணிதம் / இயற்பியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வுகான திருத்தப்பட்ட இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு நடைபெற்ற கலந்தாய்வில் மாறுதல் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர்களை தற்சமயம் பணிபுரியும் பள்ளியில் இருந்து உடனடியாக விடுவிக்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு நடைபெற்ற கலந்தாய்வில் மாறுதல் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர்களை தற்சமயம் பணிபுரியும் பள்ளியில் இருந்து உடனடியாக விடுவிக்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறையில் இயக்குநர்கள் மாற்றம் | புதிய பள்ளிக்கல்வி இயக்குநராக திரு ராமேஸ்வர முருகன் அவர்களையும், தேர்வுத்துறை இயக்குநராக திரு தேவராஜன் அவர்களையும் நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் இயக்குநர்கள் மாற்றம் | புதிய பள்ளிக்கல்வி இயக்குநராக திரு ராமேஸ்வர முருகன் அவர்களையும், தேர்வுத்துறை இயக்குநராக திரு தேவராஜன் அவர்களையும் நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கட்டுபாட்டிலுள்ள துறைகளின் இயக்குநர்கள் மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் இயக்குநர்கள் மாற்றம்

652 கணினி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்த நிலையில், புதிதாக 2,000 கணினி ஆசிரியர்களைத் தேர்வு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

“டிஸ்மிஸ்’ செய்யப்பட்ட, 652 கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் கூடுதலாகத் தேவைப்படும் பணியிடங்களை நிரப்ப, 2,000 கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகலாம் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்த கணினி ஆசிரியர்களில், 652 பேரை, பள்ளிக் கல்வித் துறை, “டிஸ்மிஸ்’ செய்தது. மாணவர் நலன் கருதி, புதிய ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் வரை, பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற கல்வித் துறையின் கோரிக்கையையும், சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. 652 பேரையும், உடனடியாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டதால், அனைவரையும் உடனடியாக, “டிஸ்மிஸ்’ செய்து, கல்வித் துறை உத்தரவிட்டது. இதனால், மாணவர்களுக்கு, கணினி பாடம் எடுக்க, ஆசிரியர் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. மாற்று ஏற்பாடு குறித்து, ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என, கூறப்படுகிறது. புதிய ஆசிரியர்களைத் தேர்வு செய்து, 652 பணியிடங்களை நிரப்பவும், கூடுதலாகத் தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், 2,000 கணினி ஆசிரியர்களைத் தேர்வு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில், “அரசு உத்தரவிட்டால், கணினி ஆசிரியர்களைத் தேர்வு செய்ய தயாராக உள்ளோம்; இதுவரை, உத்தரவு வரவில்லை’ என, தெரிவித்தன.

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக விபு நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.இப்பணியிலிருந்த சுர்ஜித் சவுத்ரி, மத்திய அரசுப் பணிக்கு செல்கிறார்.

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக விபு நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.இப்பணியிலிருந்த சுர்ஜித் சவுத்ரி, மத்திய அரசுப் பணிக்கு செல்கிறார்.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், நான்கு பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, அரசு துணைச் செயலர் சிவசண்முக ராஜா, ஆதிதிராவிட நலத்துறை இயக்குனராகவும், அப்பதவியில் இருந்த விஜய ராஜ்குமார், தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் மேலாண் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் மற்றும் நீர் ஆதார மேலாண்மை திட்ட இயக்குனராகப் பணிபுரிந்த விபு நாயர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பணியிலிருந்த சுர்ஜித் சவுத்ரி, மத்திய அரசுப் பணிக்கு செல்கிறார்.வேளாண்மைத் துறை, அரசு சிறப்பு செயலர் அசோக்ரஞ்சன் மொகந்தி, மாநில மனித உரிமை ஆணையச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

"மாநில நல்லாசிரியர் விருதுகளுக்கு ஆசிரியர்கள் தேர்வில், இந்தாண்டு புதிய நடைமுறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,” என, பள்ளிக் கல்வி துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார் .

“மாநில நல்லாசிரியர் விருதுகளுக்கு ஆசிரியர்கள் தேர்வில், இந்தாண்டு புதிய நடைமுறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,” என, பள்ளிக் கல்வி துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.மதுரையில் தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி தலைமை வகித்தார். இயக்குனர் பேசியதாவது: மாநில நல்லாசிரியர் விருதுகளுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவதில் இந்தாண்டு புதிய நடைமுறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சி.இ.ஓ., தலைமையில் டி.இ.ஓ.,க்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மற்றும் இரண்டு தலைமை ஆசிரியர்கள் கொண்ட “தேர்வுக் குழு’ அமைக்கப்படும். 
விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் குறித்து, அவர்கள் பணிபுரியும் பள்ளிகளுக்கு சென்று, அவரது விவரம், மாணவர் மற்றும் சமுதாய மேம்பாட்டிற்காக ஆற்றிய சேவை, செயல்படுத்திய திட்டங்கள், அவரது பணிக்கால பதிவேடுகள் விசாரிக்கப்பட்டு, அறிக்கை தயாரிக்கப்படும். இணை இயக்குனர் அளவிலான நேர்காணலும் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும். இதன்பின், தேர்வுக் குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில், விருதுகளுக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.நடப்பாண்டில் பள்ளிகளில் விளையாட்டிற்காக மட்டும் ரூ.10 கோடி அரசு ஒதுக்கியுள்ளது. கல்வி மாவட்ட, வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை ஆசிரியர்கள் நடத்த வேண்டும். அறிவியல் கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுடன் ஆசிரியர்கள் நல்லுறவை வளர்க்க வேண்டும், பாடம் தவிர்த்து மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஆசிரியர்கள் செயல்பாடு அமைய வேண்டும், என்றார்.அரசு நலத்திட்டங்களை பள்ளிகளுக்கு நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தினர். “கல்வி அதிகாரிகளிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்,’ என இயக்குனர் பதிலளித்தார். 

மூன்றாண்டு பி.எல்., சட்டப் படிப்பிற்கான விண்ணப்ப தேதி, ஆக., 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மூன்றாண்டு பி.எல்., சட்டப் படிப்பிற்கான விண்ணப்ப தேதி, ஆக., 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், மூன்றாண்டு சட்டப் படிப்பிற்கான விண்ணப்ப வினியோகம் நடந்து வருகிறது. இப்படிப்பிற்கு 30ம் தேதி விண்ணப்ப வினியோகம் முடிவடைய உள்ள நிலையில், மாணவர்களின் வேண்டுகோளை அடுத்து, ஆக., 16ம் தேதி வரை, விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், தொலைதூர கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும், சான்றிதழ் மற்றும் பட்டய படிப்பிற்கான விண்ணப்ப தேதி, ஆக., 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் சங்கர் கூறியதாவது: அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் மூன்றாண்டு பி.எல்., சட்டப் படிப்புகளில் உள்ள, 1,262 இடங்களுக்கு, 4,300 விண்ணப்பங்கள்; பி.எல்., (ஹானர்ஸ்) சட்டப் படிப்பில் உள்ள, 60 இடங்களுக்கு, 400 விண்ணப்பங்கள்; எம்.எல்., சட்டப் படிப்பில் உள்ள, 160 இடங்களுக்கு, 118 விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன.இவ்வாறு சங்கர் தெரிவித்தார்.

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்விற்கான TENTATIVE ANSWER KEY இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்விற்கான TENTATIVE ANSWER KEY இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர் , உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1) பணி இடங்களை நிரப்ப கடந்த 21-ம் தேதி போட்டி தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதினார்கள். தேர்வு எழுதிய அனைவருக்கும் அவர்களின் விடைத்தால் நகலும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், தேர்வுக்கான ‘கீ ஆன்சர்’-ஜ ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வினா வகை (ஏ,பி,சி,டி) வாரியாக தெரிந்து கொள்ளலாம். தேர்வு எழுதிய ஆசிரியர்கள் தங்கள் விடைத்தால் நகலை பார்த்து தங்கள் மதிப்பெண்ணை துல்லியமாக அறிய முடியும். தேர்வு முடிவை ஒரு மாதத்தில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவையடுத்து, தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்த, 652 கணினி ஆசிரியர்களை, தமிழக அரசு பணி நீக்கம் செய்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவையடுத்து, தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்த, 652 கணினி ஆசிரியர்களை, தமிழக அரசு பணி நீக்கம் செய்தது. இதனால், ஏழு ஆண்டுகளாக, கணினி ஆசிரியர்கள் பணியில் நிலவி வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
தமிழகத்தில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 1999ம் ஆண்டு, 2,324 கணினி ஆசிரியர்கள், 1,500 ரூபாய் சம்பளத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். பின், 2004ல், 2,000 ரூபாய் தொகுப்பூதியத்திற்கு மாற்றப்பட்டனர்.இதையடுத்து, பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து, 2006ம் ஆண்டு, 1,850 கணினி ஆசிரியர் பணியிடங்களை புதிதாக தோற்றுவித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த, அரசு உத்தரவிட்டது.இத்தேர்வில், கணினி ஆசிரியர்கள், 1,714 பேர் தேர்வு எழுதினர். முதலில், தேர்வு பெற, 50 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும் என, அரசு அறிவித்தது. பின், இத்தேர்வு மதிப்பெண்ணில் விலக்கு அளித்து, 35 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும் என, அறிவித்தது. இதன்படி, 35 சதவீத மதிப்பெண் பெற்ற, 1,686 கணினி ஆசிரியர்கள், தேர்வில் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், பி.எட்., முடித்த கணினி பட்டதாரி ஆசிரியர் சங்கம், தேர்ச்சி மதிப்பெண்ணை, 50 சதவீதத்தில் இருந்து, 35 சதவீதமாக அரசு குறைத்ததை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், 894 பேர் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர்.தொடர்ந்து, 35 சதவீதம் முதல், 50 சதவீதம் வரை பெற்ற 792 ஆசிரியர்கள், மறுதேர்வு எழுத வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த 2010, ஜனவரி 24ம் தேதி, 792 பேருக்கு மறுதேர்வு நடத்தியது.
அதில், 125 பேர் தேர்வு பெற்றனர்; மீதமுள்ள 667 பேர், தேர்வில் தோல்வியடைந்தனர். “வினாத்தாள் குளறுபடியால், தேர்வில், அதிகளவில் தோல்வியடையும் நிலை ஏற்பட்டது. எனவே, கேள்வித்தாளை சரிபார்க்க வேண்டும்’ என, ஐகோர்ட்டில், மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது.இதை விசாரித்த ஐகோர்ட், வினாத்தாள் ஆய்வு செய்ய, ஐ.ஐ.டி., கணினி ஆசிரியர் குழுவை அமைத்தது. இக்குழு, 150 கேள்விகளில், 20 கேள்விகள் தவறு என்றும், ஏழு கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க முடியவில்லை எனவும் அறிக்கை சமர்ப்பித்தது. இதையடுத்து, ஐகோர்ட், தேர்வெழுதிய, 667 பேரில், 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்களை தேர்வு செய்ய உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், 667 ஆசிரியர்களில் இருந்து, 15 பேர் மட்டுமே தேர்வு பெற்றனர். இதையடுத்து, பி.எட்., ஆசிரியர் சங்க வழக்கின் அடிப்படையில், தகுதியில்லாத, 652 பேரை பணி நீக்கம் செய்ய, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தொடர்ந்து, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வந்த, 652 கணினி ஆசிரியர்களை, பள்ளிக் கல்வித் துறை  பணி நீக்கம் செய்தது.
இதுகுறித்து, மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம், மாநிலத் தலைவர் செல்வகுமார் கூறுகையில், “”டி.ஆர்.பி.,யின் குளறுபடியான கேள்வித்தாள், அதிகளவிலான ஆசிரியர்கள் தோல்விக்கு காரணம். பணி நீக்கம் செய்யப்பட்ட, 652 கணினி ஆசிரியர்களும், இப்பணிக்குரிய அனைத்து கல்வித் தகுதிகளையும் பெற்றுள்ளவர்கள். எனவே, கருணை அடிப்படையில், பணி வழங்க அரசு முன்வர வேண்டும்,” என்றார்.

பிளஸ் 2 வகுப்பிற்கு, 2016-17ம் கல்வி ஆண்டில் தான், புதிய பாடத் திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது .

ஐ.ஐ.டி., பாடத் திட்ட தரத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. தயார் செய்யப்பட்டுள்ள வரைவு பாடத் திட்டம், வரும், 24ம் தேதி நடக்கும் அதிகாரிகள் கூட்டத்தில், இறுதி செய்யப்படுகிறது.
தற்போதுள்ள பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆறு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. எனவே, தற்போதைய காலத்திற்கு ஏற்றார் போல், புதிய பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டது.இதற்காக, சென்னை, ஐ.ஐ.டி.,யின் ஓய்வு பெற்ற பேராசிரியர் நாகபூஷணம் தலைமையில், பாட வாரியாக, நிபுணர் குழு அமைக்கப்பட்டு, வரைவு பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இயக்குனரகத்தின் மேற்பார்வையில், பாடத் திட்டம் தயாரிக்கும் பணி, நடந்து வருகிறது.பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய, இரு வகுப்புகளுக்கும், தலா, 24 பாடத் தலைப்புகளில், வரைவு பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, சமீபத்தில், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
வரைவு பாடத் திட்டம் குறித்து, 500க்கும் மேற்பட்டோர், பல்வேறு கருத்துகளை தெரிவித்திருப்பதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டு, தரமான கருத்துகள், பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும், துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 மாணவர்கள், ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வை எழுதி, வெற்றி பெறும் வகையில், தரமான பாடத் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளன என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில், “”ஐ.ஐ.டி., கணித பாடத் திட்டங்களை பின்பற்றி, இவர்களின் பாடத்தை உருவாக்கி உள்ளோம். பிளஸ் 2 மாணவர்கள், புதிய கணிதத்தை படிக்கும்போது, ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான தகுதியை பெற முடியும்,” என, தெரிவித்தார்.
வரைவு பாடத் திட்டம், தற்போது இறுதி செய்யப்பட்டு உள்ளது. வரும், 24ம் தேதி காலை, 10:00 மணிக்கு, பாடநூல் கழக அலுவலகத்தில் நடக்கும், அரசு உயர்மட்ட கூட்டத்தில், வரைவு பாடத் திட்டம் இறுதி செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது. அரசின் ஒப்புதல், மிக விரைவில் கிடைத்துவிடும் என, கல்வித் துறை எதிர்பார்க்கிறது.
அரசின் அனுமதி கிடைத்ததும், பாடப் புத்தகம் எழுதும் பணி துவங்கும். புத்தகம் எழுதுவதற்கு, ஒரு ஆண்டு வரை ஆகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வரும் கல்வி ஆண்டில் (2014-15), பிளஸ் 1 வகுப்பிற்கு அறிமுகப்படுத்த இருந்த, புதிய பாடத் திட்டம், அதற்கு அடுத்த கல்வி ஆண்டில் (2015-16) அமல்படுத்தப்படுகிறது.இதனால், பிளஸ் 2 வகுப்பிற்கு, 2016-17ம் கல்வி ஆண்டில் தான், புதிய பாடத் திட்டம் அமலுக்கு வரும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2013–2014) பி.எட். பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும் என தெரிகிறது.

ஆசிரியர் தகுதி தேர்விற்கு பயன்படும் சூர்யா பதிப்பகத்தின் வினா வங்கி புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆசிரியர் தகுதி தேர்விற்கு பயன்படும் சூர்யா பதிப்பகத்தின் வினா வங்கி புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2013–2014) பி.எட். பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும் என தெரிகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2013–2014) பி.எட். பட்டப் படிப்புக்கான ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் மூலமாக நடைபெற உள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவன முதல்வரும், தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளருமான பேராசிரியை ஜி.பரமேஸ்வரி அறிவித்துள்ளார்.

TNTET SURYA STUDY MATERIALS AND QUESTION BANK

S.NO
DISTRICT
STOCKISTS
PHONE NUMBER
1. CHENNAI 
Surya Publications
4, Murthy Street,
West Mamblam,
Chennai
044-24893363,                 9442558484
2. CHENNAI 
M.K.Stores
64, Bundar Street, 
Chennai – 1.

044 – 25386955, 25386143, 25390409  


3. CHENNAI 
Bismi Book Centre
187, N.S.C. Bose Road, 
Chennai -1.

044 – 25380666, 25363375. 


4. TRICHY 
Sumathy Publications
3, Tamil Sangam Building, 
W.B. Road, Tiruchy.

0431 – 2703230,                        98424-88555.


5. TRICHY
Rasi Publications
1,2 Tamil Sangam Building, 
W.B. Road, Tiruchy.

0431 – 2703692,                           9443888564. 


6. TIRUNELVELI
Sri Shyamala Puthaga Nilayam,
50, T.M. Building 
Tirunelveli Junction.
0462 – 2322277, 2338899
9443158484,9442158484
7. TIRUNELVELI
Sri Shyamala Book Shop,
61, North Car Street, 
Tirunelveli Town.
0462 – 2338800, 9443158484, 9442158484
8. KANYAKUMARI
Komala Stores,
67, W.C. College Road, 
Nagercoil. 

04652 – 233519, 227018,     9443360928


9. MADURAI
Mano Book Centre
15, Pudu Mandapam, 
Madurai. 
0452 – 2621577,            9443321577.
10. MADURAI
Jeyam Book Centre
25, Pudu Mandapam, 
Madurai.
0452 – 2623636,           9894658036. 
11. COIMBATORE
Radhamani Stores
137, Raja Street, 
Coimbatore – 1.
0422 – 2392122, 2393532
12. COIMBATORE
Cheran Book House,
238, Big Bazaar Street, 
Clock Tower Circle,             Coimbatore. 
0422 – 2396623,           9842290126
13. SALEM
A.K.Chandriah Chettiar & Sons
252/161B, Cherry Road, 
Salem – 636 001.

0427 – 2410096,           9787552233.


14. SALEM
Sri Vignesh Book Centre
224, Main Road, Shevapet, 
Salem.
0427 – 2223304,            9942010233.
15. ERODE
Selvam Book Centre
11C, Gandhiji Road, 
Near Central Theatre, Erode. 

0424 – 2257027, 2252176. 


16. ERODE
Senthil Book Palace
123, Prakasam Road, 
Erode.
0424 – 2214886,  9443035775
17. CUDDALORE
Cuddalore Emporium
5, Lawrence Road, 
Cuddalore.
04142 – 235429,           9443882028. 
18. CUDDALORE
Manivasagar Noolagam
12,13 West Sannathi, 
Chidambaram -1.

04144 – 222856. 


19. CUDDALORE
Vetri Book Centre
83, West Car Street, 
Chidambaram.
04144 – 222648 , 9443222648
20. DINDIGUL
Ayyanar Book Centre
14, Dudley School Building,
Dindigul

0451-2426561, 
9486208869
21. KRISHNAGIRI
Vijaya Book Centre
2, First Floor,                      D.D.D.C. Building
Old Sub-Jail Road,  Krishnagiri
9443812533
22. DHARMAPURI
Sri Krishna School Needs
22, Mohammed Ali Club Road,
Near Bus Stand, Dharmapuri,
91500 70035,                9150070034
23. THANJAVUR
Arasu Paper Stores
Big Street, 
Pattukottai.
04373-257507,  9442890053,                       9791950463
24. THANJAVUR
Sri Murugan Publications
Raja Rajan Vaniga Valaga Arangam, 
Thanjavur.
04362 – 2272922, 2272168, 
25. THANJAVUR

Markendeya Book Depot.
48, Kumbeswarar Sannathi, 
Kumbakonam – 1.

0435 – 2420750, 2425539. 
26. NAGAPATTINAM

Mayura Books
32, Kamarajar Bus Stand, 
Mailaduthurai -1.

04652-227292
27. TIRUPUR
Chola Book House
70, G.G. Towers,                  Opp. to Town Hall,
Kumaran Road, Tirupur
04651-270916
28. THIRUVANNAMALAI
A.Pitchandi Mudaliyar
A.P.M Stores
47/A-250,Thiruvoodal St, 
Thiruvannamalai.
94432 14725,                    94864 66665,                      94431 66665,                           04175 – 223854, 224725                          
29. VILLUPURAM
Sabarinathan Bros.
89C, Thiru-vi-ka Road, 
Villupuram – 605 602.
04146 – 224190, 222581,  9443425972
30. VILLUPURAM
Arunagh Traders
59, Salem Main Road, 
Kallakurichi.
98427 -22381.
31. VILLUPURAM Balu Xerox & Books,               BAM Complex                        Near Bus Stand                     Gingee 9994622199
32. TIRUVARUR Jshree Agencies,                 6,Kamarajar St        Kidaramkodan(Near Thiru-Vi-Ka Govt Arts college )   Tiruvarur-3 9486259870,                8925345718
33. CHENNAI Success Book House         No:2137,L Block,                      7th Street,12th Main Road Anna Nagar, Chennai-40  044.42612214,                 9884912274
34.

மூன்று நபர் ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் இதுவரை 88 அரசாணைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மூன்று நபர் ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் இதுவரை 88 அரசாணைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மூன்று நபர் ஊதியக் குழு – பட்டதாரி இளநிலை உதவியாளர் மற்றும் நேரடி நியமிக்கப்படும் உதவியாளர் பதவிக்கு இடையே உள்ள ஊதிய வித்தியாசத்தை "தனி ஊதியம்" ஆக வழங்க தமிழக அரசு உத்தரவு

மூன்று நபர் ஊதியக் குழு – பட்டதாரி இளநிலை உதவியாளர் மற்றும் நேரடி நியமிக்கப்படும் உதவியாளர் பதவிக்கு இடையே உள்ள ஊதிய வித்தியாசத்தை “தனி ஊதியம்” ஆக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.G.O.Ms.No.241 Dt: July 22, 2013 Download  

RE – OPTION அளிக்கும் வாய்ப்பு – G.O.Ms.No.240 Dt: July 22, 2013

1.1.2006-31.5.2009 இக்கு இடைப்பட்ட காலத்தில் தேர்வு / சிறப்பு நிலை எய்தியவர்கள் , ஆறாவது ஊதிய குழு ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளும் போது தேர்வு / சிறப்பு நிலையில் ஊதியம் பெற்று கொண்ட பின்னர் புதிய ஊதிய விகத்தில் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்ள ஏற்கனவே வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது . உதாரணமாக பழைய ஊதிய விகிதத்தில் 1.7.2008 இல் ஒருவர் தேர்வு நிலை பெற்றிருந்தால் , அவர் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்யும்போது , 1.1.2006 லேயே புதிய ஊதிய விகிதத்தில் ஊதியம் நிர்ணயம் செய்துகொள்ளாமல் , 1.7.2008 வரை பழைய ஊதிய விகிதத்தில் இருந்து விட்டு தேர்வு நிலை பெற்ற பின்னர் புதிய ஊதிய விகிதத்தில் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்ள OPTION கொடுக்க முன்னரே வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது . அதாவது தேர்வுநிலை பெற்ற பின்னர் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்வதால் 9300 இல் ஊதிய நிர்ணயம் செய்துகொண்டு தர ஊதியம் 4300 பெறலாம் . இந்த வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது .G.O.Ms.No.240 Dt: July 22, 2013 Download

பள்ளிக்கல்வி – மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள தமிழ் பண்டிட், தொழிற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர் கிரேடு – I / II, இளநிலை விரிவுரையாளர், TTI முதல்வர், DIET விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தர ஊதியம் மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வி – மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள தமிழ் பண்டிட், தொழிற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர் கிரேடு – I / II, இளநிலை விரிவுரையாளர், TTI முதல்வர், DIET விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தர ஊதியம் மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. G.O.Ms.No.263 Dt: July 22, 2013 -Download

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலைக்கு கூடுதலாக ஒரு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு

மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் பேரில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண். 237 நாள்.22.07.2013ல் தேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு கூடுதலாக ஒரு ஊதிய உயர்வு 01.01.2006 தேதி முதல் நடைமுறைப்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது(அதாவது 3% + 3%). பணப்பலன் 01.04.2013 முதல் வழங்கப்படும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது (Selection Grade and Special Grade Notional Effect from 01.01.2006 and Monetary Effect from 01.04.2013). 01.01.2006 முதல் 31.05.2009 வரை தேர்வு நிலை / சிறப்பு நிலை முடித்தோற்கு ஊதிய விகிதம் மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆனால், 01.06.2009க்கு பின் தேர்வு நிலை / சிறப்பு நிலை முடித்தோற்கு ஊதிய விகிதம் மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை, மாறாக அவர்களுக்கு 3% ஊதிய உயர்வு மட்டுமே வழங்கப்பட்டது. அது தற்போது 01.01.2006 முதல் நடைமுறைப்படுத்தி இந்த ஆணை அமுலுக்கு வருவதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலன் பெறுவர்.G.O.Ms.No.237 Dt: July 22, 2013 Download 

பள்ளிக் கல்வித்துறையில், 16 மாவட்ட கல்வி அலுவலர்களை, முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும், 10 முதன்மை கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்கியும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறையில், 16 மாவட்ட கல்வி அலுவலர்களை, முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும், 10 முதன்மை கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்கியும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறையில், 16 மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்களாக, பதவி உயர்வு பெற்றுள்ளனர். கல்வித்துறையில், மாவட்ட கல்வி அலுவலர்(டி.இ.ஓ.,) மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) பணியிடங்கள், அதிக அளவில் காலியாக இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம், 45 தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களாக, பதவி உயர்வு பெற்றனர். அதுபோல், மாவட்ட கல்வி அலுவலர்களாக உள்ள, 16 பேர், முதன்மை கல்வி அலுவலர்களாக, பதவி உயர்வு பெற்றனர். இதற்கான உத்தரவை, பள்ளிக் கல்வித்துறை நேற்று வெளியிட்டது. DOWNLOAD

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 49 பேர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,), மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 49 பேர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,), மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 49 பேர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,), மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டு உள்ளனர். பள்ளி கல்வித் துறையில், மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள், அதிகளவில், பல மாதங்களாகக் காலியாக இருந்து வந்தன. இந்தப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் குரல் கொடுத்தன. இந்நிலையில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 49 பேருக்கு, பதவி உயர்வு வழங்கி, கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த வாரத்திற்குள், காலியாக உள்ள, 17 முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும், பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின், இணை இயக்குனர்கள் பதவி உயர்வு, இயக்குனர் பதவி உயர்வு உத்தரவுகளும் வெளியாகும் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.DEO LIST

மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வுகள் முடிவுகள் இன்று வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது.

மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வுகள் முடிவுகள் இன்று வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது.

ஜூன் 19 முதல் ஜூலை 01, 2013 தேதி வரை நடைபெற்ற மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வினை எழுதிய 83,510 தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் நாளை 25.07.2013 நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் 30.07.2013 அன்று மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். விடைத்தாள் நகல் மற்றும் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் விரைவில் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. செய்முறை அடங்கிய பாடத்தினை தேர்வு எழுதிய சில தனித்தேர்வர்கள் செய்முறை குறித்த ஆவணத்தை ஆன்-லைன் விண்ணப்பத்துடன் இணைந்து சமர்பிக்காததால், அவர்களது தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சில தனித்தேர்வர்களின் மார்ச் 2013 பருவத் தேர்வெழுதிய பதிவெண் தேர்வுத்துறை அலுவலக ஆவணத்துடன் tally ஆகாததால், அவர்களுடைய தேர்வு முடிவுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தகைய தனித்தேர்வர்கள் உடனடியாக அவர்கள் வருவாய் மாவட்டத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு மார்ச் 2013 மேல்நிலைத் தேர்வெழுதிப் பெற்ற மதிப்பெண் சான்றிதழினை ஒப்படைக்க வேண்டும் என தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது. அதன் பிறகு தான் அவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மார்ச் 2013 -ல் நடைபெற்ற பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளி மற்றும் ஆசிரியர்களுக்கும் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களுக்கும் பாராட்டு விழா.

பிளஸ்–2 தேர்வில் பெயிலாகி துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு என்ஜினீயரிங் கலந்தாய்வு 28–ந்தேதி நடக்கிறது

பிளஸ்–2 தேர்வில் பெயிலாகி துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு என்ஜினீயரிங் கலந்தாய்வு 28–ந்தேதி நடக்கிறது. ஆனால் அவர்கள் 27–ந்தேதி நேரடியாக விண்ணப்பிக்கவேண்டும். அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ராஜாராம் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
என்ஜினீயரிங் கலந்தாய்வு 26–ந்தேதி மாலை முடிவடைகிறது. அப்போது காலியாக உள்ள பி.இ. இடங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான மற்றொரு கலந்தாய்வு 28–ந்தேதி நடத்தப்படுகிறது. இதில் பிளஸ்–2 தேர்வில் தேர்ச்சி பெயிலாகி இருந்த மாணவர்கள் சமீபத்தில் நடைபெற்ற சிறப்பு துணைத்தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று தகுதி படைத்தவர்கள் கலந்துகொள்ளலாம்.
ஆனால் அந்த மாணவ–மாணவிகள் 27–ந்தேதி அண்ணாபல்கலைக்கழகத்திற்கு வந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அன்றே ஒப்படைக்கவேண்டும். அந்த மாணவர்கள் பிளஸ்–2 மதிப்பெண் சான்று, தேர்வு எழுதிய அனுமதி கடிதம் (ஹால்டிக்கெட்), 10–வது வகுப்பு மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்று சான்றிதழ், நிரந்தர சாதி சான்றிதழ், முதல் பட்டதாரிகளுக்கான சான்று மற்றும் உறுதி அளிப்பு படிவம், புகைப்படம் ஆகியவற்றுடன் 27–ந்தேதி வரவும். விண்ணப்பத்தொகை ரூ.500. ஆதிதிராவிடர், அருந்ததியினர், பழங்குடியினர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 மட்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு | ஒரு வாரத்திற்குள் "கீ-ஆன்சர்’ வெளியீடு | 20 நாட்களுக்குள் தேர்வு முடிவு | பல்வேறு எழுத்துப் பிழைகளுடன் இருந்த வணிகவியல் மற்றும் தமிழ்க்கேள்வித்தாளால் தேர்வர்கள் பாதிக்காத வகையில் உரிய முடிவு எடுக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரித்துள்ளது.