Category Archives: EXAMS (SCHOOLS)

எஸ்.எஸ்.எல்.சி, ஓ.எஸ்.எல்.சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தனித் தேர்வர்கள் 26ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி, ஓ.எஸ்.எல்.சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தனித் தேர்வர்கள் நாளை (26ம் தேதி)க்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். வரும் செப்டம்பர் மாதம் நடக்கும் எஸ்.எஸ்.எல்.சி/ஓ.எஸ்.எல்.சி பொது தேர்வுகள் தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அனைத்து அரசு தேர்வுகள் மண்டல துணை
இயக்குனர் அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்களில் இந்த விண்ணப்பங்களை நாளை (26ம் தேதி) வரை பெற்று கொள்ளலாம். தேர்வு கட்டணமாக 125 ரூபாயை அரசு கருவூலங்களில் செலான் மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பம், ஹால் டிக்கெட்டில் பாஸ்போர்ட் அளவு போட்டோக்களை ஒட்டி தங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியரின் சான்றொப்பம் பெற வேண்டும். தேர்வு கட்டணம் செலுத்திய அசல் செலான் சீட்டை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும். அரசு தேர்வுகள் இயக்குனரால் வரும் செப்டம்பர் மாதம் ஹால் டிக்கெட் வினியோகம் குறித்த அறிக்கை வெளியிட்டவுடன் சம்பந்தப்பட்ட மையத்திற்கு சென்று ஹால் டிக்கெட் பெற்று கொள்ளலாம்.

>பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 14 ந்தேதி வெளியாகும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 25 ந்தேதி வெளியிடப்படும்

>

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா,பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 14 ந்தேதி வெளியாகும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 25 ந்தேதி வெளியிடப்படும். பிளஸ் 2 தேர்வு விடைத் தாள் திருத்தும் பணி நிறை வடைந்து விட்டன. எஸ்.எஸ். எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது என்று கூறினார்

>இணையதளத்தில் சமச்சீர்கல்வி 10ம் வகுப்பு பாடப்புத்தகம் : அரசு தகவல்

>

இணையதளத்தில் சமச்சீர்கல்வி 10ம் வகுப்பு ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி பாடப்புத்தகங்கள் ஏப்ரல் 22 அன்று வெளியிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பள்ளிக்கல்வி டாட் இன் என்ற இணையதளத்தில் பாடப்புத்தகங்கள் வெளியிடப்படும் எனவும் அதை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>அரசு பள்ளிகளுக்குஏப்ரல் 22 முதல் கோடை விடுமுறை – கடைசி வேலை நாள் ஏப்ரல் 21ம்தேதி – பள்ளிகள் திறக்கும் நாள் ஜூன் 1ம் தேதி

>

அரசு பள்ளிகளில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தவிர, 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தேர்வுகள் 6ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து, 22ம் தேதி முதல் அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 29,388 தொடக்கப்பள்ளிகள், 8,377 நடுநிலைப் பள்ளிகள், 3,425 உயர்நிலைப்பள்ளிகள், 3,050 மேல்நிலைப்பள்ளிகள், 3,600 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஒரு கோடியே 25 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இந்த ஆண்டின் கடைசி வேலை நாள், ஏப்ரல் 21ம் தேதி என்று திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், அந்த வேலை நாளுக்குள் தேர்வுகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, 22ம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

>தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (28.03.211) தொடங்குகிறது. தனித்தேர்வர்கள் உள்பட 9 1/2 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்

>

தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. தனித்தேர்வர்கள் உள்பட 91/2 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் 3-ந் தேதி வெளியிடப்பட்டது. 
அதன்படி, பிளஸ்-2 தேர்வு கடந்த 2-ந் தேதி தொடங்கி, 27-ந் தேதி வரை நடந்தது. மொத்தம் 71/2 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதற்கிடையில், 10-ம் வகுப்பு மெட்ரிக்குலேஷன் மற்றும் ஆங்கிலோ-இந்தியன் தேர்வுகள் கடந்த 22-ந் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் நாளை (28.03.211) தொடங்குகின்றன.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 6,520 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 56 ஆயிரத்து 956 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 22 ஆயிரத்து 21 பேர். மாணவிகள் 4 லட்சத்து 35 ஆயிரத்து 935 பேர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 2,800 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 1,561 பேர் எழுதுகிறார்கள்.
சென்னையில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வை 272 பள்ளிகளைச் சேர்ந்த 36,148 மாணவ-மாணவிகள் 223 மையங்களில் எழுத உள்ளனர். இவர்களில் மாணவர்கள் 17,124 பேர். மாணவிகள் 19,024 பேர். தனித்தேர்வர்கள் ஒரு லட்சம் பேரையும் சேர்த்தால் மொத்தம் 91/2 லட்சம் பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கலந்து கொள்கிறார்கள்.
தேர்வில் மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுப்பதற்காக 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குனரும், பள்ளிக்கல்வி பொறுப்பு இயக்குனருமான தண்.வசுந்தராதேவி தெரிவித்தார். தேர்வு அட்டவணை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

>மார்ச் 17 முதல் +2 விடைத்தாள் திருத்தும் பணி

>

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்பணி வருகிற 17 ந்தேதி தொடங்குகிறது. கவனமாக திருத்தும்படி ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை 8 லட்சம் மாணவ மாணவிகள் எழுதி வருகிறார்கள்.
தமிழ் முதல் தாள், தமிழ் 2 வது தாள், ஆங்கிலம் முதல் தாள், ஆங்கிலம் 2 வதுதாள், இயற்பியல் ஆகிய தேர்வுகள் முடிந்துவிட்டன. வருகிற 17 ந் தேதி விடைத்தாள் திருத்தும்பணி தொடங்க உள்ளது.
இதற்காக உயர்மட்டத்தில் 43 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 32 பேர் முதன்மை கல்வி அதிகாரிகள், 4 பேர் அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மற்றவர்கள் மாவட்ட கல்வி அதிகாரிகள்.
இதைமுன்னிட்டு அரசு தேர்வுத்துறை இந்த வருடம் நல்ல முறையில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான அறிவுரைகள் வழங்கும் கூட்டத்தை அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி தலைமையில் நடைபெற்றது. இணை இயக்குனர் கருப்பசாமி முன்னிலையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களுக்கும் அதிகாரிகள் கூறிய ஆலோசனைகள் வருமாறு:
மாணவர்கள் நலன் கருதி விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யுங்கள். நாங்கள் கொடுத்த விடையையும் மாணவர்கள் எழுதிய விடையையும் ஒப்பிட்டு பார்த்து மதிப்பெண் வழங்குங்கள். யாரிடமும் பேசிக்கொண்டு திருத்தாதீர்கள். திருத்திய விடைத்தாள்களை கண்காணிப்பு அதகாரி எஸ்.ஓ. சரிபார்க்கவேண்டும். கூட்டலையும் சரிபார்க்கவேண்டும். அத்தனையையும் முதன்மை அதிகாரி பார்க்கவேண்டும். ஒவ்வொரு விடைக்கும் உரிய மதிப்பெண்ணை அதற்கு ஒதுக்கிய இடத்தில் குறிப்பிடவேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் கூட்டி மதிப்பெண் போடவேண்டும். கூட்டும்போது ஒரு முறைக்கு இருமுறை சரிபாருங்கள்.
கடந்த ஆண்டு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத ஆசிரியர்களை அழைத்து எச்சரித்து உள்ளோம். எனவே மாணவர்கள் நலன் கருதி சரியாக மதிப்பீடு செய்யுங்கள். சரியாக மதிப்பீடு செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு வசுந்தரா தேவி அறிவுரைகள் வழங்கி உள்ளார்.

>தொடங்கியது +2 தேர்வு! 7 லட்சத்து 80 ஆயிரத்து 631 பேர் எழுதுகிறார்கள்!

>

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ந் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி பிளஸ் 2 தேர்வு இன்று தமிழ் முதல் தாளுடன் தொடங்கியது.
பிளஸ் 2 தேர்வை 7 லட்சத்து 80 ஆயிரத்து 631 பேர் எழுதுகிறார்கள். அவர்களில் 5477 பள்ளிகளை சேர்ந்த 7 லட்சத்து 23 ஆயிரம் மாணவ மாணவிகள் எழுதுகிறார்கள். அவர்களில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 443 பேர் மாணவர்கள். 3 லட்சத்து 87 ஆயிரத்து 102 பேர் மாணவிகள்.
சென்னை மாநகரில் 445 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 49 ஆயிரத்து 8 மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகிறார்கள்.
புதுச்சேரியில் 31 தேர்வு மையங்களில் 95 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 517 பேர் தேர்வு எழுதுகிறார்கள். அவர்களில் 5 ஆயிரத்து 212 பேர் மாணவிகள். 6 ஆயிரத்து 305 பேர் மாணவர்கள். மொத்தத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வுக்காக 1,890 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பள்ளிக்கூட மாணவர்களை தவிர தனித்தேர்வர்களாக 57 ஆயிரத்து 86 பேர் எழுதுகிறார்கள்.

Read more »

>பத்தாம் வகுப்பு, ஓஎஸ்எல்சி வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள்-தனித் தேர்வர்களுக்கும் மார்ச் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ஹால் டிக்கெட் வினியோகம் செய்யப்படும்

>

சென்னை:அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பத்தாம் வகுப்பு, ஓஎஸ்எல்சி வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 28-ல் தொடங்கி ஏப்ரல் 11ம் தேதி வரை நடக்கிறது. மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் வகுப்பு தேர்வுகள் மார்ச் 22-ல் தொடங்கி ஏப்ரல் 11 வரை நடக்கிறது. இந்த தேர்வுகளை எழுத விண்ணப்பித்த அனைத்து தனித் தேர்வர்களுக்கும் மார்ச் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ஹால் டிக்கெட் வினியோகம் செய்யப்படும். ஹால் டிக்கெட்டுகளை சம்பந்தப்பட்ட மண்டலத் துணை இயக்குநர்களால் அறிவிக்கப்படும் வினியோக மையங்களில் பெற்றுக் கொள்ளலாம். ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட மண்டல அரசுத் தேர்வுகள் துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். ஆங்கிலோ இந்தியன் தேர்வை எழுத உள்ளவர்கள் சென்னையில் உள்ள அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தேர்வுகளுக்கு இதுவரை விண்ணப்பிக்காமல் உள்ளவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இவ்வகை தேர்வர்கள் தேர்வுக் கட்டணம் ரூ.125 உடன், கூடுதல் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 16ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு அதே நாளில் ஹால்டிக்கெட் வழங்கப்படும்.

>பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு நாளை முதல், "ஹால் டிக்கெட்’

>

பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு, நாளை முதல், 11ம் தேதி வரை, “ஹால் டிக்கெட்’ வழங்கப்படுகிறது. தேர்வுத்துறை அறிவிப்பு: மார்ச் மாதம் நடக்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வை, தனித்தேர்வாக எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, 9ம் தேதி(நாளை) பிற்பகல் முதல், 11ம் தேதி வரை, “ஹால் டிக்கெட்’ வழங்கப்படும். “ஹால் டிக்கெட்’டை பெற்றதும், அதில் உள்ள அனைத்து விவரங்களும் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். அதில், ஏதேனும் பிழை இருந்தால், உடனடியாக கூடுதல் செயலரை (மேல்நிலை) அணுகி, சரி செய்து கொள்ளலாம். “ஹால் டிக்கெட்’ கிடைக்காத மாணவர்கள், உரிய காலத்தில் விண்ணப்பம் செய்ததற்கான ஆதாரங்களுடன், கூடுதல் செயலரை அணுகலாம். கல்வி மாவட்ட வாரியாக, 64 கல்வி மாவட்டங்களிலும், “ஹால் டிக்கெட்’ வினியோக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

>பிளஸ் 2 தேர்வு மார்ச் 2 ல் ஆரம்பம், மார்ச் 28ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள்

>

பிளஸ் 2 , பத்தாம் வகுப்பு மற்றும் மெட்ரிக்குலேஷன் பொதுத் தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம்  வெளியிட்டது. மார்ச் 2ம் தேதி பிளஸ் 2 தேர்வுகள் ஆரம்பமாகிறது. மார்ச் 28ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குகின்றன.
கடந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்கி 22ம் தேதி முடிந்தன. கடந்த ஆண்டு தேர்வில் தமிழகம் புதுச்சேரியை சேர்ந்த 5233 பள்ளிகளை சேர்ந்த 6,82,607 மாணவ மாணவியர் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதினர். அதில் மாணவர்கள் 81.9 சதவீதமும், மாணவிகள் 88 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். தேர்வு எழுதிய மொத்த மாணவ மாணவியரில் 392747 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.
பிளஸ் 2 தேர்வைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் மெட்ரிக்குலேஷன் தேர்வுகள் கடந்த மார்ச் 23ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி முடிந்தன. கடந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்பு தேர்வை 844280 மாணவ மாணவியர் எழுதினர்.
மொத்த தேர்ச்சி வீதம் 82.5. அதில் மாணவர்கள் 79.4 சதவீதமும், மாணவியர் 85.5 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். 417371 பேர் பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தனர். திருநெல்வேலியை சேர்ந்த மாணவி
ஜாஸ்மின் மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார்.
மெட்ரிக்குலேஷன் தேர்வில் 129145 மாணவ மாணவியர் எழுதினர். மொத்த தேர்ச்சி வீதம்93.2 சதவீதம். மாணவியர் 96.4 சதவீதமும், மாணவர்கள் 93.2 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். 12045 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு மெட்ரிக்குலேஷன் தேர்வில் சத்தியமங்கலம் மாணவி பவித்ரா மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருந்தார்.
இந்நிலையில் , 2011ம் ஆண்டு மார்ச் மாதம் நடக்க உள்ள பிளஸ்2, பத்தாம் வகுப்பு, மெட்ரிக்குலேஷன், ஓ.எஸ்.எல்.சி மற்றும் ஆங்கிலோ இந்தியன் தேர்வுகளுக்கான அதிகாரப் பூர்வ தேர்வு அட்டவணை  வெளியிடப்பட்டது.
இதன்படி பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி முடிகின்றன. பத்தாம் வகுப்பு, ஓ.எஸ்.எல்.சி தேர்வுகள் மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 11ம் தேதி முடிகின்றன. மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் மார்ச் 22ம் தேதி தொடங்கி ஏப்ரல் 11ம் தேதி முடிகின்றன. பிளஸ் 2 வில் எட்டு லட்சம் பேர் உட்பட இந்த தேர்வுகளில் மொத்தம் 20 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

>10ம் வகுப்பு தனித்தேர்வு டிச., 1 முதல் விண்ணப்பம்

>

“எஸ்.எஸ்.எல்.சி., – ஓ.எஸ்.எல்.சி., – மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தனித்தேர்வுகளுக்கு, டிசம்பர் முதல் தேதியில் இருந்து விண்ணப்பிக்கலாம்’ என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு:வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில், 10ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடக்கிறது. இதை, தனித்தேர்வாக எழுத விரும்பும் மாணவர்களுக்கு, டிசம்பர் 1ம் தேதி முதல், 15ம் தேதி வரை தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். எஸ்.எஸ்.எல்.சி., – ஓ.எஸ்.எல்.சி., மாணவர்கள், தேர்வு கட்டணமாக 125 ரூபாய் செலுத்த வேண்டும்.மெட்ரிக் மாணவர்கள், ஒரு பாடத்திற்கு 135 ரூபாய் வீதமும், ஆங்கிலோ இந்திய மாணவர்கள், ஒரு பாடத்திற்கு 85 ரூபாய் வீதமும் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.சென்னை நகரில் வசிப்பவர்கள், “அரசு தேர்வுகள் இயக்குனர், சென்னை-6′ என்ற முகவரிக்கு, சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி., எடுத்து, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
மற்ற மாவட்ட மாணவர்கள், அரசு கருவூலகங்களில் தேர்வு கட்டணத்தை செலுத்தி, அதன் ரசீதை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். டி.டி., மற்றும் கருவூல செலுத்துச்சீட்டின் ரசீதின் பின்புறம், மாணவர்கள் பெயர், தேர்வெழுதும் பாடம் ஆகிய விவரங்களை குறிப்பிட வேண்டும்.இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

>பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கல்

>

பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மார்ச் 2011ல் நடக்கவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வை தனித் தேர்வாக எழுத விரும்பும் தனித் தேர்வர்களுக்கான விண்ணப்பங்கள் 24ம் தேதி முதல் வரும் மாதம் 6ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும். தேர்வெழுத விரும்புவோர் விண்ணப்பப் படிவங்களை அண்ணா நகரில் உள்ள காமராஜர் நூற்றாண்டு கல்வி வளாக கல்வி வாரிய பி-பிளாக் 4வது மாடியில் முந்தைய தேர்வு மதிப்பெண் பட்டியலை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம் செலுத்திய கருவூல ரசீதுடன் பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ வரும் 6ம் தேதிக்குள், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகம், எண்.9/8. ஆற்றங்கரை வீதி, புதுப்பாளையம், கடலூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். காலக்கெடுவிற்குப் பிறகு வந்து சேரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படாது.