Category Archives: A.P.J.ABDUL KALAM

ஆரம்பக் கல்வியை மேம்படுத்துவதன் மூலம் கல்வியின் தரத்தை உயர்த்தலாம் : அப்துல் கலாம்

அணுசக்தி மின்சாரம் என்பது நமக்குத் தேவையான ஒன்று. விமானங்களில் விபத்து ஏற்படுகிறது. அதனால் விமானங்களை நாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமா?. அணுஉலைகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடைபெறுகிறது. அதில் பாதுகாப்பு விவரங்கள் கிடைக்கும். எனவே

Read more »

கடவுள் எங்கே இருக்கிறார்?

நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளின் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.
“நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?”
“நிச்சயமாக ஐயா..”
“கடவுள் நல்லவரா?”
“ஆம் ஐயா.”
“கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?”
“ஆம்.”
“எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?”
(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)
“உ‎ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?”
“ஆம் ஐயா..”
“சாத்தா‎ன் நல்லவரா?”
“‏இல்லை.”
“எல்லாமே கடவுள் படைப்புத்தா‎ன் என்றால் சாத்தா‎ன் எங்கிருந்து வந்தார்?”
“கடவுளிடமிருந்துதா‎ன்.”
“சரி. இந்த உலகத்தில் கெட்டவை ‏இருக்கின்றனவா?”
“ஆம்.”
“அப்படியெ‎ன்றால் அவற்றை உருவாக்கியது யார்?”
(மா‎ணவர் பதில் சொல்லவில்லை)
“இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏ இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?”
……
“அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?”
…….
“ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?”
“ஆம் ஐயா..”
“நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது ‘கடவுள் ‏ இல்லை’ என்று. ‏ இதற்கு நீ எ‎ன்ன பதில் சொல்லப் போகிறாய்?”
“ஒ‎ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது.”
“ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதா‎ன் இப்போது பிரச்சினையே..” ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.
(‏இப்போது மாணவர் த‎ன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)
“ஐயா.. வெப்பம் அல்லது சூடு எ‎ன்ற ஒ‎ன்று உள்ளதா?”
“நிச்சயமாக உள்ளது.”
“அதேபோல் குளிர்‎ என்ற ஒ‎ன்றும் உள்ளதா?”
“நிச்சயமாக.”
“இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் எ‎ன்ற ஒ‎ன்று இல்லை.”
(வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்கிறது.)
“ஐயா.. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் ‏ இருக்கின்றன. ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் எ‎ன்பது ஓர் ஆற்றல். குளிர் எ‎ன்பது வெப்பத்தி‎ற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே குளிர் எ‎ன்பது. (Absence of heat is the cold). “வெப்பம் ‏இல்லை” என்பதைத்தான்‎ குளிர் எ‎ன்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தா‎‎‎ன். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தா‎ன். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது.”
(குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)
“சரி.. ‏ இருட்டென்றால் எ‎ன்னவெ‎ன்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒ‎ன்று உண்மையிலேயே ‏இருக்கிறதா?”
“ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது.”
“நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. ‏இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பி‎ன்‏ இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி எ‎ன்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தா‎ன் இருட்டு. அதை அளக்க முடியாது. ‏இல்லையா?”
“சரி தம்பி.. நீ எ‎ன்னதான் கூற வருகிறாய்?”
“ஐயா.. நா‎ன் கூறுகிறே‎‎ன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது.”
“பிழை?? விளக்கிக் கூற முடியுமா?”
“ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒ‎ன்று ‏இருந்தால் அதற்கு எதிரிடையான ஒ‎ன்றும் ‏இருக்கிறது எ‎ன்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை எ‎‎ன்ற ஒ‎ன்று உண்டு எ‎ன்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள்.
அறிவியல் மூலம் எண்ணங்கள் எ‎ப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்கமுடியாது. எ‎ண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மி‎ன் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தா‎‎‎�
மின்சாரத்தை அளக்கமுடிந்த உங்களால், காந்தத்த‎ன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களி‎ன் தோற்றத்தை அளக்க முடியவில்லை.
இறப்பு எ‎ன்பதை வாழ்வதி‎ன் எதிர்ப்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் “வாழ்வு இனி இல்லை” என்ற த‎ன்மையே இறப்பு எ‎ன்பதை அறிகிறீர்கள் இல்லை. ‏ ‏
“சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிறீர்களா?”
“”இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான்.” பேராசிரியர் பதிலுரைத்தார்.
“உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?”
(பேராசிரியர் த‎ன் தலையை ‘இல்லை’ என அசைத்தவாறே, பு‎ன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)
“அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே ‘ஒருவகையா‎ன’ அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒ‎‎ன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், ‏ இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?”
(மாணவர்கள் சீட்டி‎ன் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)
“இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?”
(வகுப்பறை ‘கொல்’லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)
“யாராவது பேராசிரியரி‎ன் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது ‏இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா‏? அத‎ன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் எ‎ன்ன சொல்கின்றன?”
“அப்படியெ‎ன்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை எ‎ன்று.”
“மூளையே இல்லாத ‎நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?”
(மாணவரி‎ன் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரி‎ன் முகமோ வெளிறிப்போனது!)
“நீ எனக்கு மூளை இருக்கிறதெ‎ன நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி!”
“அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை.”
இவ்வாறாக, விவாதம் நிறைவுற்றது.
இது ஒரு உண்மைச் சம்பவம். ‏
இறுதிவரைப் பி‎ன்வாங்காமல் விவாதித்த அந்த மாணவர்?
வேறு யாருமல்ல.
டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.

>கடவுள் எங்கே இருக்கிறார்?

>

இந்திய பொருளாதாரம்

இந்திய பொருளாதாரம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சி விகிதம் ஒன்பது சதவீதமாக தொடர்ந்து இருந்து வருகிறது. நாம் 10 சதவீதத்தை எட்டி, அதை 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்தால், நாம் வளர்ந்த இந்தியாவை 2020ம் ஆண்டுக்குள் காண முடியும்.இந்தியாவின் மொத்த உற்பத்தித்திறன் ஒரு பில்லியன் டாலர் என்ற இலக்கை எட்டி விட்டது. நம் அன்னியச் செலாவணி கையிருப்பு ஏறக்குறைய 300 பில்லியன் இலக்கை தாண்டியுள்ளது. மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அன்னிய முதலீடுகள் குவிக்கின்றன. இந்தியாவில் வேலைக்கேற்ற தகுதி வாய்ந்த திறமையான மனித வளம் கிடைப்பது அரிதாக உள்ளது. இதன் காரணமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை சமநிலைப்படுத்தி, அதே நிலையில் மேம்படுத்தி கொண்டு செல்லக்கூடிய அச்சம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு எண்ணெய் தூர் வாரும் தனியார் நிறுவனத்தின் பணிகளுக்கு இந்தியாவிலேயே அதற்குரிய மனிதவளம் கிடைக்கவில்லை என்பதால், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்தியாவில் மனித வளத்தை நாம் பதப்படுத்தி பக்குவப்படுத்தாவிட்டால், இந்தியா தனது முகவரியை இழந்து நிற்கும் நிலை ஏற்படும்.இந்தியாவினுடைய வேலைவாய்ப்பு திறன் கொண்ட மொத்த மனித வளம் 45 கோடி. அதில் வரன்முறை படுத்தப்பட்ட மனிதவளம் 8 முதல் 10 சதவீதம் மட்டுமே. மீதமுள்ள 90 சதவீதம் வரன்முறைபடுத்தப்படாத துறைகளிலிருந்து வருகிறது. இதில், விவசாயிகள், கட்டட தொழிலாளர்கள், தினக்கூலிகள், வீட்டு வேலையாட்கள் மற்றும் சுயதொழில் செய்யும் நபர்களும் உள்ளனர். பெரும்பாலானவர்கள் கிராமப்புறத்தில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு 10 சதவீதம் என்று வளர வேண்டும் என்றால், விவசாயம் ஆண்டுக்கு நான்கு சதவீத வளர்ச்சியையும், உற்பத்தி மற்றும் சேவை துறைகள் 11 சதவீதம் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே சாத்தியம்.
விவசாயத் துறையில் குறைந்த வருவாயில் ஈடுபட்டுள்ள மனித வளம், மற்ற துறைகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் அதிகம். அதே சமயம் அவர்களுக்கு தேவையான பயிற்சியும், தேவையான திறமையும் இல்லையென்றால், அவர்களால் எந்தத் துறையிலும் நுழைய முடியாது. இங்கு தான் சவால் ஆரம்பிக்கிறது.இதை சரி செய்வதற்கு அரசு, தனியார் துறைகள், தொழில் துறை, கல்வித்துறை, பல்கலைக் கழகங்கள், தொழில்நுட்ப கல்லூரிகள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்து இதற்கு தீர்வு காண வேண்டும்.
–  அப்துல்கலாம்
இந்தியாவின் அடையாளமான விவசாயம் மறைந்து வருவதால் உணவு பிரச்னை ஏற்படுமா?
விவசாயத்தை பாதுகாக்காவிட்டால் பெரும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. விவசாயத்திற்கான திட்டங்களை கொண்டு வந்து உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும். உணவு பொருட்களை பதப்படுத்தும் முறையை கையாள வேண்டும்.
புவி வெப்ப மயமாவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் சம்பவங்களை தடுக்க வேண்டும். நாம் ஓட்டும் வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகை கூட புவி வெப்பமயமாக காரணமாக உள்ளது. இதற்கு மாற்றாக மரம் வளர்த்து இயற்கையை பாதுகாக்க வேண்டும்.
விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு எப்போது ஏற்பட்டது?
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, வானத்தில் பறவை பறப்பதை பார்த்து அதிசயத்தேன். பறவையால் எப்படி பறக்க முடிகிறது என்பதை ஆசிரியரின் உதவியால் அறிந்தேன். அதன்பின், இயற்பியல் மீது கொண்ட ஆர்வத்தால் விட முயற்சியுடன் படித்து விஞ்ஞானி ஆனேன்.
சந்திரயான் விண்கல ஆய்வு பற்றி…
சந்திரயான் விண்கலம், சந்திரனில் உள்ள நீர் மற்றும் கனிம வளம் பற்றி ஆய்வு செய்கிறது. இந்தியாவில் விவசாயம் செழிக்கும். இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள நதிகள் அனைத்தும் இணைக்கப்படும்.

>இந்திய பொருளாதாரம்

சூரியசக்தியை பயன்படுத்துவதில் புதிய முறைகளை கண்டறிய வேண்டும்: அப்துல் கலாம்

மாணவ, மாணவியருடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மிக்க மகிழ்ச்சி. அணுக்களின் பரிமாற்றம் குறித்து “பாஞ்சாலி சபதம்’ எனும் நூலில் பாரதியார் குறிப்பிட்டுள்ளார்; அவரை ஒரு விஞ்ஞானி எனக் கூறலாம். சூரியன் பூமியை சுற்றி வருவது போல, வாழ்க்கையில் நாம் நிலைத்து நிற்க, விடாமுயற்சியுடன் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். கல்லூரி வாழ்க்கை பருவம், ஒரு முக்கியமான கட்டமாகும். அப்போது நாம் கற்கும் கல்வியே, வாழ்க்கையில் முன்னேற வழிவகுக்கும். ஒருவரது வாழ்க்கையின் 20 வயதுக்குள் பெற்றோர், ஆரம்ப கல்வி கற்றுத் தந்த ஆசிரியர் ஆகியோர், எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நல்லறிவு, நல்நோக்கம், கடின உழைப்பு இருந்தால் வெற்றி நிச்சயம். புதிய கண்டுபிடிப்புகளுக்கான தேடல் மிக முக்கியம். சிந்தனை, நல்லறிவு ஆகியவையே ஒருவரை மகானாக திகழச் செய்யும். நாம் செய்யும் பணியில் ஈடுபாடும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றி எளிதாகும். ஒரு செயலை மேற்கொள்ளும்போது ஏற்படும் தடைகளை கடந்து, வெற்றி பெறும் மனப்பக்குவத்தை வளர்க்கவேண்டும். நாம் பிறந்தோம், வளர்ந்தோம் என்றில்லாமல், நாம் மறைந்த பிறகும் நமது பெயர் நிலைத்திருக்கும் விதத்தில் நமது செயல் இருக்கவேண்டும்; நாட்டின் வளர்ச்சிக்கு அவை உதவவேண்டும்.
பூமி வெப்பமயமாதல், தட்பவெப்ப மாற்றம் ஆகியவற்றை நாம் உணர்ந்து, அவற்றை தடுக்கும் வழி முறைகளை ஆராயவேண்டும். மாணவ பருவத்தில், ஆராய்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது; ஒரு நாட்டின் முன்னேற்றத்திலும் இதுவே முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு அடித்தளம் கல்லூரி வாழ்க்கை. ஒவ்வொரு கல்லூரியும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மாணவர்களுக்கு முழுமையாக உதவவேண்டும். இதன்மூலம் கண்டுபிடிப்புத்திறன் அதிகரிக்கிறது. வேளாண், வேளாண் உற்பத்தி அதிகரிக்கவேண்டும். இன்ஜி., மற்றும் ஐ.டி., தொழில்நுட்பத்தில் அதிக முன்னேற்றம் ஏற்படவேண்டும். இதில், மாணவ, மாணவியரின் பங்கு முக்கியமானது. எதிர்கால தேவையை உணர்ந்து இளைய தலைமுறை செயல்படவேண்டும். வான்வெளி ஆராய்ச்சிதுறையில் வரும் 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் மிகப்பெறும் வளர்ச்சி ஏற்படும். சூரிய சக்தியை பயன்படுத்துவதில் புதிய முறைகளை கண்டறியவேண்டும். கண்டுபிடிப்புத் திறன் மிக முக்கியம். வரும் 2020ம் ஆண்டுக்குள் சோலார் மற்றும் அணுசக்தி பயன்பாடு மிக அதிகமாகும். இதற்காக “சோலார் பவர் சேட்டிலைட்’ அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் எனது பங்கும் உள்ளது. இவ்வாறு அப்துல்கலாம் பேசினார்.
மாணவ, மாணவியரின் கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தனது கல்லூரி வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார். “கல்லூரி பேராசிரியர் சீனிவாசன் என்பவர், குறைந்த உயரத்தில் பறக்கும் விமானத்தை கண்டுபிடிக்கும் திட்டத்தை கொடுத்தார். ஆறு மாத காலத்தில் ஏழு பேர் கொண்ட குழுவாக நாங்கள் செயல்பட்டு வடிவமைத்தோம். பேராசிரியரிடம் காண்பித்தபோது, அதனை ஏற்றுக் கொள்ளவில்லை; மூன்று நாட்கள் மட்டும் அவகாசம் கொடுத்து மாற்றி வடிவமைக்குமாறு தெரிவித்தார். மூன்று நாட்களில் அதை வெற்றிகரமாக செய்து முடித்தோம். அப்போதுதான் நேரத்தின் அருமை குறித்து உணர்ந்தேன். மேலும், மன அழுத்தத்தை எவ்வாறு எதிர்கொள்வது எனவும் தெரிந்தது. அதுபோல, இளைதலைமுறையினர் நேரம் தவறாமையை கடைபிடிக்கவேண்டும்’ என்றார் அப்துல் கலாம்.

>சூரியசக்தியை பயன்படுத்துவதில் புதிய முறைகளை கண்டறிய வேண்டும்: அப்துல் கலாம்

தலைமைப்பண்பில் நேர்மையும் அறமும் தேவை..

ஒருநல்ல தலைவனுக்கு ஒரு நல்ல தீர்மானத்தை எடுத்து அதைச் செயல்படுத்த வேண்டிய மனோதைரியமும் துணிச்சலும் இருக்க வேண்டும்’என்பது. இதற்கு நான் உதாரணம் காட்ட வேண்டும் என்றால் உடனடியாக என் நினைவுக்கு வருவது இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல்தான்.
அவர் மட்டும் அன்று ஒன்றுபட்ட இந்தியாவை உரு வாக்க வேண்டும் என்று தீர்மானித்து , அதை இரும்புக்கரம் கொண்டு செயல்படுத்தியிராவிட்டால் இன்று இந்தியா எத்தனையோ குட்டி குட்டி நாடுகளாக, சமஸ்தானங்களாகச் சிதறுண்டு போயிருக்கும். அவரை விமர்சித்தவர்களும் வாயடைத்துப் போனார்கள். இந்த டிஸிஷன் மேக்கிங் பண்பு ஒரு தலைவனுக்கு மிகவும் தேவையானது.
“தலைமைப்பண்பில் நேர்மையும் அறமும் தேவை..’ஒரு அமைப்புக்கு லாபம் என்பது குறிக்கோளாக இருக்கலாம், ஆனால் அது நேர்மையையும் அறத்தையும் விலை கொடுத்து வாங்குவதாக இருக்கக் கூடாது. அதே போல் ஒரு தலைவன் தன் பணிகளில் அறத்தைப் பேணுவதில் அக்கறை காட்ட வேண்டும்.
“ஒரு தலைவனின் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்..’இது இன்றைய காலகட்டத்துக்கு மிக முக்கியமான ஒன்று. எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டதை நாம் காண்கிறோம். பொது வாழ்க்கைக்கு மட்டுமின்றி ஒரு அமைப் புக்குத் தலைவனாக இருப்பவனும் தன்னைப் பற்றிய நடவடிக்கைகளை வெளிப் படையாக வைத்திருக்க வேண்டும். அந்தத் தலைவனை உதாரணமாகக் கொண்டு தான் கோடிக்கணக்கான தொண்டர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு வழி காட்டு வது போல் அந்தத் தலைவனின் நடவடிக்கைகள் கிளீன் ஸ்லேட்டாக இருக்க வேண்டும்.
நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி இந்த வெளிப்படையான தன்மைக்கு ஒரு உதாரண புருஷர். அவர் மக்களுக்கு எதையுமே மறைத்ததில்லை. தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த விஷயங்களைக் கூட அவர் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக அறிவித்தார். அவருடைய ஆசிரமத்தில் எப்போதும் பஜன் நடக்கும். அதில் கலந்து கொள்பவர்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் காணிக்கை அளித்து விட்டுக் கலந்து கொள்ளலாம். அதில் வசூலாகும் தொகை நல்ல விஷயங்களுக்குச் செலவிடப்படும்.
தினமும் அந்த வசூலில் சேரும் ஒரு ரூபாய்கள் மொத்தமாக கணக்கிடப்படும். ஒருநாள் அந்தக் கணக்கில் சிறு தவறு நேர்ந்து விட்டது. சிறு தவறு தான். அதாவது ஒரே ஒரு ரூபாய் கணக்கு இடித்தது. மகாத்மா காந்தி கடுங்கோபம் கொண்டு விட்டார். அந்த ஒரு ரூபாய்க்கு சரியான கணக்கு வரும்வரை நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்லி உண்ணா விரததத்தில் இறங்கி விட்டார். மூன்று நாட்கள் அந்த உண்ணாவிரதம் நீடித்தது. பிறகு அந்த ஒரு ரூபாய்க்கான கணக்கு சரியாகக் காட்டப்பட… உண்ணா விரதம் ஒரு முடிவுக்கு வந்தது. ஒரு ரூபாயாக இருந்தாலும் பொது மக்களுக்கு அந்தக் கணக்கு சரியாகத் தெரியவேண் டும் என்பதில் உறுதியாக இருந்தார் அந்த தேசப்பிதா.
வேலை செய்வதிலும் செய்து முடிப்பதில் ஒரு தலைவனுக்கு நம்பகத்தன்மையும் ஒற்றுமையுணர்வும்  வேண்டும்.’நான் இந்தக் கருத்தைப் பல மீட்டிங்குகளில் சொல்வதுண்டு. இதை ஒப்புக் கொள்பவர்கள் கை தூக்குங்கள்’’ என்று சொல்வேன். குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள் போன்றவர்கள் கை உயர்த்துவார்கள். ஆனால் பெரியவர்கள் கை உயர்த்த மாட்டார்கள். சமீபத்தில் நான் அமெரிக்கா சென்றிருந்த போது ஒரு மீட்டிங்கில் இதே கேள்வியைக் கேட்டு கையை உயர்த்தச் சொன்னேன். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒருவர் கூட கை தூக்கவில்லை. ஆனால் இந்தத் தகுதியை ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய அடிப்படை தகுதியாக நான் கருதுகிறேன்.
இந்த எட்டு அடிப்படை தகுதிகளுடன் ஒரு தலைவன் உருவாகும் போது, அது எந்தக் கட்சியில் அல்லது அமைப்பில் இருந்தாலும் சரி, அந்த தலைவனால் பெரிய மாற்றங்கள் உருவாகும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த எல்லா அடிப்படைத் தகுதி களையும் ஒரே வார்த்தையில் அடக்குவதைத்தான் நான் “கிரியேட்டிவ் லீடர்ஷிப்’’ என்று குறிப்பிட்டேன்.
இளைஞர்களிடம்தான் இந்த படைப்பாற்றல் மிக்க தலைமை இருக்கப் போகிறது. இது இளைஞர்கள் காலம். முழுமூச்சுடன் அவர்கள் பணியாற்றப் போகும் காலம். இந்த நாட்டில் உள்ள 540 மில்லியன் இளைஞர்களின் பொறுப்பில்தான் தேசத்தின் எதிர்காலமே இருக்கிறது. அவர்கள் சரியான நேரத்தில் சரியான வேலையைச் செய்ய வேண்டுமே தவிர, தேவையற்ற வேலைகளில் கவனத்தைச் சிதற விடக்கூடாது.
நான் எம்.ஐ.டியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு மிகப் பெரும் தலைவரைச் சந்தித்தேன். அவர் அப்போது எனக்கு கொடுத்த தங்கமான அறிவுரை. “”இப்போதைக்கு படிப்பில் மட்டுமே உன் கவனம் இருக்க வேண்டும். அரசியல் அது இது என்று கவனத்தைத் திருப்பாதே..உன் படிப்புதான் உன்னையும் இந்த சமூகத்தையும் உயர்த்தும்…”’என்றார்.
அவர்- தந்தை பெரியார்!

>தலைமைப்பண்பில் நேர்மையும் அறமும் தேவை..

நதிகளை இணைக்க முடியும்!

நதிநீர்இணைப்பு’’ பற்றிய பேச்சு நம் நாட்டில் அடிக்கடி எழுகிறது. அது சாத்தியம் என்றும் சாத்தியமில்லை என்றும், நாட்டின் பல பிரச்னை களுக்கு அது தீர்வாக இருக்கும் என்றும் இல்லை இல்லை சுற்றுச்சூழலை அது கெடுக்கும் என்றும் இரண்டு விதமான கருத்துகள் அவை. எந்த ஒரு திட்டத்துக்குமே இரண்டு வகையான கருத்துக்கள் இருக்கவே செய்யும்.
அதுவும் இந்தியாவைப் போன்ற மிகப்பெரும் ஜன நாயக நாட்டில் பல்வேறு கருத்துக்கள் முட்டி மோது வதில் ஆச்சர்யமில்லை. அவற்றையெல்லாம் நமது சுய விமர்சனங்களாகவே எடுத்துக் கொண்டு விவாதம் செய்து பார்த்தால்தான் உண்மை எது என்பது விளங்கும். “நாடு முழுவடும் உள்ள நதிகளை இணைப்பது என்பது சாத்தியமே இல்லை.. அது ஒரு மிகப்பெரிய சவால்…’’என்கிறார்கள் சிலர்.
நான் சொல்வது, இப்படி சாத்தியமே இல்லை என்று பேசுவதை முதலில் விட்டு விடுவோம் என்பதுதான். நதி நீர் இணைப்பு ஏன் சாத்தியமில்லை? மனிதனால் முடியாதது என்று ஒன்று உண்டா? வரலாற்றில் அவன் புரிந்திருக்கும் சாதனைகள் எல்லாம் ஒன்றா, இரண்டா?
கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை பிறந்திருக்காது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்று காந்தியடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களும் நினைத்திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது.
சி.சுப்பிரமணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன் னிறைவு அடைந்து இருக்காது. வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியை அடைந்து இருக்காது. விக்ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று சந்திரனுக்கு செயற்கைக்கோளை இந்தியா ஏவியிருக்க முடியாது.
7 முறை அமெரிக்காவால் சந்திரனை சுற்றி வர இயலவில்லை, சீனாவாலும், ஜப்பானாலும் சந்திரனில் சாதிக்க முடியாததை இந்தியாவின் கன்னி முயற்சியிலேயே நமது விஞ்ஞானிகள் சாதித்து காட்டியிருக்கிறார்கள். அயர்லாந்தில், சுவிட்ச்சர்லாந்தில், நெதர்லாந்தில் அமெரிக்காவில் (பனாமா கால்வாய்), ஆப்பிரிக் காவில் (நைல் நதிகளை) இணைத்து சாதித்து காட்டியிருக் கிறார்கள். இப்படி பல்வேறு நாடுகளில், அதன் தலைவர்கள், இயற்கையை மாற்றி, நதிகளை இணைத்து நாட்டை வளமாக்கி காட்டி இருக்கிறார்கள்.
அவ்வளவு ஏன் இந்தியாவிலே அதற்கு பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. உத்திரபிரதேசம், கோவா, ஆந்திரா, கேரளாவிலே நதிகள் இணைக்கப்பட்டி ருக்கிறது. இந்தியாதான் இயற்கை வளத்திலும் சுற்றுப்புற சூழல் வளத்திலும் சிறந்த நாடு. தண்ணீரே இல்லாத பாலைவனத்தை சோலைவனமாக துபாய், இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் மாற் றிக்காண்பிக்கவில்லையா? “என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’ என்ற பாடல் வரிகள் முடியும் என்பதைத்தானே உணர்த்துகின்றன?
முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிக மாக உள்ளது. இப்பொழுது சில இளைஞர்களையும் அது தொற்றிக்கொண்டு விட்டது. முடியும் என்று நம்பும் மனிதனால் தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது.
எனவே நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்ட 54 கோடி இளைஞர்கள்தான், இந்திய நதிகளை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்ட இளைஞர்கள்தான் அனுபவம் கொண்டோரின் துணை கொண்டு வெற்றியை காண முடியும். நதிகளை இணைக்க என்ன வேண்டும். தைரியமும், நம்மால் முடியும் என்ற நம்பிக்கையும்தான் வேண்டும்.
தைரியம் என்று சொன்னேனே, எப்படிப்பட்ட தைரியம் வேண்டும்?
இமயமலையையே புரட்டிப் போடுகிற தைரியம்.
புதுமையாக சிந்திக்கக் கூடிய தைரியம்!
படைப்பாற்றலை வெளிப்படுத்தக்கூடிய தைரியம்!
கண்டு பிடிக்கப்படாத பாதைகளை உருவாக்கி அதில் நடந்து சாதித்துக்காட்டக்கூடிய தைரியம்.
புதிய பாதைகளில் பயணித்து புதுப்புது விஷயங்களைக் கண்டுபிடிக்கக் கூடிய தைரியம்!
இளைஞர்களுக்கு அந்த தைரியம் உண்டு. எந்தப் பிரச்னைகளையும் தைரியமாக எதிர் கொண்டு, பிரச்சினைகளை வெற்றி கொள்ளும் அவற்றைத் தவிடு பொடி ஆக்கும் தைரியம் அவர்களிடம் உண்டு!
இப்படிப்பட்ட இளைய சமுதாயம் ஒன்றுபட்டு எழுந்தால் நதிநீர் இணைப்பு என்பது சாத்தியம்தான் !
சீனாவில் அதன் நடுப்பகுதியிலிருந்து, திபெத் வரை பனிநிலத்தில் உலகிலேயே உயரமான ரயில் பாதையை அமைத் திருக்கிறார்கள். மலைக்க வைக்கும் உழைப்பு அது. அது சாத்தியம் என்றால் நதி நீர் இணைப்பும் சாத்தியம் தான்.
ஏற்கனவே, உலக வெப்பமயமாதல் மற்றும் வேறு சில பிரச்னைகளால் பருவ மழையே பொய்த்து வருகிறது. 2020-ம் வருட அளவில், நாளுக்குநாள் கிடுகிடுவென்று உயர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கத் தால், 400 மில்லியன் டன் உணவுப் பொருட் களை நாம் அதிகமாக உற்பத்தி செய்தாக வேண்டும். அதற்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்று யோசித்துப் பாருங்கள்!

நதிநீர்இணைப்பு சாத்தியமில்லை என்று சில அரசியல் தலைவர்களும் மந்திரி பொறுப்பில்உள்ளவர்களும் பேசுவதை இப்போதும் கேட்கிறோம். நாம் வானத்தை வில்லாகவளைக்கச் சொல்லவில்லை, வானவில்லையும் நேராக்கச் சொல்லவில்லை. நம்கண்ணெதிரே இருக்கக் கூடிய ஒரு விஷயத்தைச் சரி செய்யுங்கள் என்றுதான்கேட்கிறோம்.

தமிழ்நாடு வாட்டர்வேஸ் பிராஜக்ட் ஒரு மிகப் புதுமையான திட்டம். வெள்ளத்தைக் கட்டுப் படுத்துவது மட்டுமின்றி உபரிநீரைச்சேமிக்கவும் வைக்கக்கூடிய திட்டம். இரண்டு வழிகளில் நீர் செல்லக்கூடியஒன்று. மேட்டூர், சாத்தனூர், பவானி, வைகை, மணிமுத்தாறு, பேச்சிப்பாறை,சோலையாறு, பாபநாசம், சேர்வலாறு இவற்றோடு பூண்டி, சோழவரம், ரெட் ஹில்ஸ்,செம்பரம்பாக்கம், வீராணம் போன்ற எண்ணற்ற ஏரிகள், குளங்களை இணைக்கக் கூடியஅற்புதமான திட்டம்.
தமிழ்நாட்டில்மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாயக்கூடிய முக்கியமான நதிகளை ஒருபொதுவான வழியின் மூலம் இணைக்கக் கூடிய அத்தனை வரைத் திட்டங்களும் அதில்இருக்கின்றன. இந்தத் தண்ணீர் வழிகள் அனைத்தும் கடல் மட்டத்திலிருந்து 300மீட்டர் உயரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்றால் எவ்வளவு ஆழமானஆராய்ச்சிக்குப் பிறகு இவை தீட்டப்பட்டிருக்கும் என்பது உங்களுக்குப்புரியும்.

இது என்னுடையகனவுத் திட்டம். இந்த தண்ணீர் வழிகளின் வழியே தமிழ்நாட்டின் அத்தனைஆறுகளும் இணைக்கப்பட்டு தமிழகத்தின் எல்லா ஆறுகளும், ஏரிகளும்,குளங்களும், கால்வாய்களும், இணைக்கப்பட்டு எல்லாவற்றிலும் ஆண்டு முழுவதும்கற்கண்டுத் தண்ணீர் தளும்பி நின்று விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும்,தொழிற்சாலைகளுக்கும் எப்போதும் தாகம் தீர தண்ணீர் கிடைக்கக் கூடிய அந்தஅற்புதக்காட்சி எப்போதும் என் கனவுகளில் வருவது உண்டு. அந்தக் கனவுமட்டும் நிறைவேறிவிட்டால் தமிழ்நாடே சொர்க்கபுரி ஆகிவிடாதா என்ன?

ஒவ்வொருநதியும் ஒவ்வொரு இடத்தில் இருப்பது போல் மேம்போக்காகப் பார்க்கும் போதுநம்மை பிரமிக்க வைக்கும். ஆனால் தேர்ந்த வரைபடத் திட்டங்களின் முலம் இவைஎத்தனை அழகாக இணைக்கப்படக்கூடியவை என்கிற உண்மை புரியும்.

இதுஏதோ வரைபடத்தில் மட்டுமே உள்ள, நிதர்சனத்தில் சாத்தியமே இல்லாத பகல்கனவுதிட்டம் அல்ல. ஐந்து கட்டங்களில் நிறைவேற்றப்படக் கூடிய பிராக்டிகலானதிட்டம்.

முதல் கட்டத்தில் வைகையையும் மேட்டூரையும் இணைக்கும் திட்டம். இது 350 கிலோ மீட்டர் நீளமானது.

இரண்டாவது கட்டம் மேட் டூரையும் பாலாறையும் இணைப்பது, இது 270 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.

150 கிலோ மீட்டர் நீளம் கொண்ட வைகை – தாமிரபரணி இணைப்பு அடுத்த கட்டத்தில் உள்ளது.

நான்காவது கட்டத்தில் 130 கிலோமீட்டர் நீள முள்ள தாமிரபரணி – பெருஞ்சாணி இணைப்பு வருகிறது.

ஐந்தாவதுகட்ட மாக இந்த நதிகளை இணைப்பு மூலம் கிடைக் கக்கூடிய உபரி நீரை ஆங்காங் கேஉள்ள குளம், குட்டை, ஏரிகளில் இணைக்கக்கூடிய சப்சிடியரி கால்வாய்திட்டங்கள்.

இப்படி நதிகளைஇணைப்பது மூலம் தண்ணீர் அற்ற நதிகளுக்குத் தண்ணீர் கிடைப்பது மட்டுமன்றி,இதர தண்ணீர் நிலைகளுக்கு அதன் உபரித்தண்ணீரும் திறந்து விடப்படுவதால்நாடெங்கும் தண்ணீர் திரண்டு நிற்கக்கூடிய அற்புதமான நிலையை நம்மால் காணமுடியும். செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல வேண்டியதைப் போன்ற மலைக்கவைக்கும் திட்டம் அல்ல இது. பத்தே வருடங்களில் செய்து முடிக்கக் கூடியபிராக் டிகலான திட்டம்.
இதனுடைய பலா பலன்களும் திட்டவரைவில் தெளிவாகவே சுட்டிக்காட் டப்பட்டிருக்கின்றன.

முதல்கட்டமாக வெள்ள அபாயத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது இந்தத் திட்டம்,உபரியாக, 7.5. மில்லியன் ஏக்கர் அளவு விவசாய நிலத்துக்குப் பாசன நீரைஅளிக்கும்.
150 மெகாவாட்மின்சாரத்தை ஹைட்ரோ பவர் மூலம் உற்பத்தி செய்யும். நிலத்தடி நீர் அளவைஅதிகரிப்பதின் மூலம் மின்சார உபயோகத்தை 1350 மெகாவாட் அளவு குறைக்கும்.

10மீட்டர் ஆழமும் 120 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு அருமையான நீர்வழிப்பாதையைஇந்தத் திட்டம் ஏற்படுத்தித் தரும். தண்ணீர் போக்கு வரத்து, சுற்றுலாபோன்ற வற்றின் மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும்.
சாலைப் போக்குவரத் தைக் காட்டிலும் 90 சதவீத எரிபொருள் சேமிப்பு இந்தத் தண்ணீர்வழிப் போக்கு வரத்தின் மூலமாகக் கிடைக் கும்.

ஐம்பது மில்லியன் பொது மற்றும் தொழிற் சாலை சார்ந்த மக்களுக்கு இந்தத் தண்ணீர் மூலம் பயன் கிடைக்கும்.

புதிய மின் உற்பத்திக் கான வழிகள் இந்தப் புதிய தண்ணீர் சாலைகளின் வழியே ஏற்படும்.

சிந்தித்துப்பாருங்கள். இந்தப் புதிய தண்ணீர் வழிகள் தமிழ்நாட்டின் தலைவிதியையே மாற்றிவிடாதா? அசோகர் சாலை இருமருங்கிலும் மரங்களை நட்டார், ஏரி, குளங்களைஏற்படுத்தினார் என்று இன் றைய சரித்திரத்தில் படிக்கி றோமே, அதே போல்நாளைய வரலாற்றில், தமி ழகத்தில் நதிகளை இணைத் தார்கள், அதன் மூலம்தமிழ்நாடு வளம்பெற்றது என்று எழுதப் பட வேண்டாமா? அது நம் கையில்தானேஇருக்கிறது?

நதிநீர் இணைப்பு அது காலத்தின் கட்டாயம்! நனவாகக் கூடிய கனவு!

…… அப்துல் கலாம்

>நதிகளை இணைக்க முடியும்!

ஒரு தலைவன் யாரும் பயணிக்காத பாதையில் பயணம் செய்ய அறிந் திருக்க வேண்டும்.

தண்ணீரும், எரிசக்தியும்தான் எதிர்காலத்தில் நாம் சந்திக்க வேண்டிய இருபெரும்சவால்கள் . நதிநீர்இணைப்பு, புதிய தண்ணீர் வழிச் சாலைகள் அமைப்பது இந்த இரண்டு தீர்வுகள்தான் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்து வைக்கும். அதே போல் கச்சா பெட்ரோல்எண்ணெய்க்கான மாற்று எரிசக்திகளைக் கண்டறிவது எரிசக்திப் பிரச்னையைத்தீர்க்கும். ஆனால் இவற்றை சாதிப்பது சாதாரண விஷயமில்லை.
கடும்உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, புதுமை படைக்கும் எண்ணம், இவற்றோடு கூடியஒருங்கிணைந்த சக்தி அதற்குத் தேவைப்படும். முக்கியமாக இந்த சக்திக்குத்தேவை ஒரு கிரியேட்டிவ்வான தலைமை. கற்பனைத் திறன் மிக்க ஒரு தலைமைஇருந்தால் எந்தக் காரியமும் சாத்தியமாகும்.
இந்தபடைப்புத் திறன் மிக்க தலைமை என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை நான்மூன்று கனவுகள் நனவான அற்புதத்தில் கண் ணெதிரே கண்டேன். விண்வெளித் திட்டம்,  அக்னி ஏவுகணைத் திட்டம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளுக்கு நகரத்தின் வசதிகளை அளிக்கும் திட்டம் இந்த மூன்று பிரம்மாண்ட கனவுகள் நனவானதைத்தான் நான் குறிப்பிடுகிறேன்.
ஒரு நல்ல தலைவனுக்கு இருக்க வேண்டிய தலைமைப்பண்புகளை பார்க்கலாம்.
ஒரு தலைவனுக்கு தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும்.
தொலைநோக்குப் பார்வை என்பது எதிர்காலத்தில் என்ன தேவைப்படும் என்பதை இப்போதே சரியாக கணித்து அதை நிறை வேற்றுவது. இதற்கு உதாரணமாக இந்தியாவின் ராக்கெட்தொழில் நுட்பத் துறையின் தந்தையாகப் போற்றப்படும் பேராசிரியர் விக்ரம்சாராபாயைச் சொல்வேன். இந்தத் தொழில்நுட்பம் உலக அளவில் பரவிக் கொண்டிருந்தகால கட்ட மான 1960-களில் இந்தியாவுக்கான அதன் அவசியத்தை உணர்ந்தார் விக்ரம்சாராபாய். இந்திய ராக்கெட் செயற்கைக் கோள் தொழில் நுட்பத் திட்டத்துக் கானதேவையை முன் கூட்டியே உணர்ந்து அரசாங்கத்துக்கு சில திட்டங்களைப்பரிந்துரை செய்தார். ஒரு மாபெரும் படைப்புத் திறன் கொண்ட தலைமைப்பண்புஅவருக்கு இருந்தது என்றால் அதற்குத் தோள் கொடுக்க ஜவஹர்லால் நேரு போன்ற மகத்தான தலைவரும் அப்போது இருந்தார்.
பண்டிதஜவஹர்லால் நேருவும் விஞ்ஞானி விக்ரம் சாராபாயும், இந்தியாவின் எதிர்காலப்பாதுகாப்புக்கு ராக்கெட் தொழில் நுட்பம் அவசியம் தேவை என்பதைஉணர்ந்திருந்தார்கள். நாட்டில் வறுமை, பசி, பஞ்சம் உள்பட எத்தனையோபிரச்னைகள் இருக்கும் போது இந்த ராக்கெட் ஆராய்ச்சி எல்லாம் தேவையா என்றுபலத்த விமர்சனங்கள் எழுந்த காலகட்டத்தில் தங்கள் எண்ணத்தில் உறுதியாகஇருந்தார்கள் இருவரும். அவர்கள் தொடங்கி வைத்த படைப்புத்திறன் மிக்கதிட்டத்தினால்தான் நாம் உலக அரங்கில் செயற்கை கோள் விஞ்ஞானத்தில்பின்னாளில் பிரகாசிக்க முடிந்தது.
இன்றைக்குஉலகமே நம்முடைய செயற்கை கோள் மற்றும் ராக்கெட் துறை முன்னேற்றங்களைக்கண்டு பிரமிப்புடன் வியக்கிறது. நான் சமீபத்தில் அமெ ரிக்கா சென்றிருந்தபோது நாசாவில் உள்ள விஞ் ஞானிகள் “”சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை உங்களுடைய சந்திராயன் கண்டுபிடித்திருக் கிறது. பல வருடங்களாகநாங்கள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும் எங்களுக்குக் கிடைக்காதவெற்றி உங்களுக்குக் கிடைத்திருக்கிறது…”’என்று பாராட்டி னார்கள்.

விக்ரம் சாராபாய் தொலைநோக்குடன் கண்ட கனவுதான் இப்போது நனவாகி இருப்பதாகஎனக்குத் தோன்றியது. இன்று இந்தியா அனுப்பியிருக்கும் ரிமோட் சென்சிங்மற்றும் தகவல் தொடர்பான செயற்கை கோள் டிரான்ஸ்பாண்டர்கள் மொத்தம் 180விண்ணில் வெற்றிகரமாக வலம் வருகின்றன. இந்தியா முழுக்க 30,000கல்விக்கூடங்களும் 375 ஸ்பெஷா லிட்டி மருத்துவமனைகளும் செயற்கை கோள்மூலமாக இணைக்கப்பட்டிருக் கின்றன. இந்த அற்புதங்களுக்கு அடிப்படை, விக்ரம்சாராபாயின் தொலைநோக்குப் பார்வைதான்.

தொலைநோக்குப்பார்வை இருந்தாலும் அதை நிஜமாக்க செயலாற்றும் ஆற்றல் தலைவனுக்குகண்டிப்பாக இருக்க வேண்டும். விஞ்ஞானம் மட்டுமின்றி வேறு பல துறைகளிலும்இதைப் போன்ற தொலைநோக்கு கொண்ட தலைவர்கள் இருக் கிறார்கள். ஆனால் பலகனவுகள் நனவானது எப்படி? அந்தக் கனவை நனவாக்கும் செயல் வீரர்கள்தலைவர்களாக இருந்ததுதான் அந்த வெற்றிகளுக்குக் காரணம்.
1950-களில்அமெரிக்காவில் இருந்து கோதுமைக் கப்பல் வந்தால்தான் நமக்கு உணவேகிடைக்கும் என்கிற மோசமான நிலை உருவான போதுதான் சி. சுப்ரமணியம் என்கிறஅரசியல் மேதை தொலைநோக்குடன் பசுமைப் புரட்சித் திட்டத்தைக் கொண்டுவந்தார். அது அவருடைய தொலைநோக்குப் பார்வை. அதை எப்படிச் செயல்படுத்தவேண்டும் என்பதும் அந்தத் தலைவருக்குத் தெரிந்திருந்தது.

சிவராமன்ஐ.ஏ.எஸ், வேளாண் விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் போன்ற மிகச் சிறந்ததலைவர் கள் அவருக்குக் கரம் கொடுத்தார்கள். அவர்களின் திறமைகளை திரு சி.எஸ். பயன் படுத்திக் கொண்டார். நாட்டில் உணவுப் பஞ்சம் நீங்கியது. அதேபோல் வர்கீஸ் குரியனின் தொலைநோக்குப் பார்வை மற்றும் செய லாற்றும் திறனால்தான் இங்கே பால் உற்பத்தியில் வெண் மைப் புரட்சி ஏற்பட்டது.

>ஒரு தலைவன் யாரும் பயணிக்காத பாதையில் பயணம் செய்ய அறிந் திருக்க வேண்டும்.

>பொறியியலும் மருத்துவமும் இணைவது அவசியம்தான்: கலாம்

>சென்னை: மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிக்கும்போதே ஆராய்ச்சிகளிலும் ஈடுபட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் அவர் கூறியதாவது:

சென்னை மருத்துவக் கல்லூரி 175வது ஆண்டை கொண்டாடி வருகிறது. அப்படியென்றால் இந்தக் கல்லூரி சூரியனை 175 ஆண்டுகள் சுற்றி வந்துவிட்டது என்று அர்த்தம்.

மாணவர்களுக்கு கற்பனைத் திறன், நேர்மை, பொறுமை, ஈடுபாடு, தைரியம் அனைத்தும் அவசியம். வாழ்க்கையின் இறுதி வரை எதையாவது கற்றுக் கொண்டே இருங்கள்.

மருத்துவ மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பின்போதே ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும். ஏழைகளும், கிராமப்புற மக்களும் பயனடையும் வகையில் குறைந்த செலவில் நவீன மற்றும் தரமான மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும்.

நோயால் வேதனைப்பட்டு வரும் மக்களிடம் சரியான முறையில் நோயைக் கண்டறியுங்கள். அந்த சோதனை, இந்த சோதனை என அவர்களின் வேதனையை அதிகரிக்காதீர்கள்.

ஐ.ஐ.டியில் மருத்துவப் படிப்பு அறிமுகப்படுத்தப்படுவது நல்ல விஷயம் தான். வாழ்க்கை அறிவியலின் தேவைக்கு பொறியியலும் மருத்துவமும் இணைவது அவசியம்தான்.

வாழ்க்கையில் எழும் பிரச்சனைகளுக்கு நீங்கள் தலைவராக இருங்கள். பிரச்சனைகளை உங்களுக்கு தலைவராகாமல் பாரித்துக் கொள்ளுங்கள் என்றார் கலாம்.

பொறியியலும் மருத்துவமும் இணைவது அவசியம்தான்: கலாம்

சென்னை: மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிக்கும்போதே ஆராய்ச்சிகளிலும் ஈடுபட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் அவர் கூறியதாவது:

சென்னை மருத்துவக் கல்லூரி 175வது ஆண்டை கொண்டாடி வருகிறது. அப்படியென்றால் இந்தக் கல்லூரி சூரியனை 175 ஆண்டுகள் சுற்றி வந்துவிட்டது என்று அர்த்தம்.

மாணவர்களுக்கு கற்பனைத் திறன், நேர்மை, பொறுமை, ஈடுபாடு, தைரியம் அனைத்தும் அவசியம். வாழ்க்கையின் இறுதி வரை எதையாவது கற்றுக் கொண்டே இருங்கள்.

மருத்துவ மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பின்போதே ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும். ஏழைகளும், கிராமப்புற மக்களும் பயனடையும் வகையில் குறைந்த செலவில் நவீன மற்றும் தரமான மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும்.

நோயால் வேதனைப்பட்டு வரும் மக்களிடம் சரியான முறையில் நோயைக் கண்டறியுங்கள். அந்த சோதனை, இந்த சோதனை என அவர்களின் வேதனையை அதிகரிக்காதீர்கள்.

ஐ.ஐ.டியில் மருத்துவப் படிப்பு அறிமுகப்படுத்தப்படுவது நல்ல விஷயம் தான். வாழ்க்கை அறிவியலின் தேவைக்கு பொறியியலும் மருத்துவமும் இணைவது அவசியம்தான்.

வாழ்க்கையில் எழும் பிரச்சனைகளுக்கு நீங்கள் தலைவராக இருங்கள். பிரச்சனைகளை உங்களுக்கு தலைவராகாமல் பாரித்துக் கொள்ளுங்கள் என்றார் கலாம்.

>2020 ல் இந்தியா வல்லரசு ஆகுமா?

>சென்னை : “”தங்கள் தனித்திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம், இளைஞர்கள் சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்ற முடியும்,” என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.

சென்னை எழும்பூர் எத்திராஜ் மகளிர் கல்லூரியில், புதிய கட்டட திறப்பு விழா நேற்று நடந்தது. கட்டடத்தை திறந்துவைத்து, அப்துல் கலாம் பேசியதாவது: தீவிரவாதம் இன்று நமக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதை தடுக்க, குடிமக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவது, தீவிரவாத தடுப்பு சட்டங்களை கடுமையாக செயல்படுத்துவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் சேவை மனப்பான்மை, நேர்மை குணத்துடன் செயல்பட்டால் தான் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க முடியும்.

இளைஞர்கள், தங்களின் தனித்திறனை கண்டறிந்து அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள்,தொழில் முனைவோர் என பன்முக திறமைக் கொண்ட சமுதாயத்தை உருவாக்கலாம். நகர்ப்புற கல்லூரி மாணவ, மாணவியர் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள கிராமங்களை தத்தெடுத்து, அம்மக் களுக்கு கல்வியறிவு வழங்க வேண்டும். இதன் மூலம், கிராம பொருளாதார முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைக்கலாம். இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.

விழாவில், மாணவியரின் கேள்விகளுக்கு அப்துல் கலாம் அளித்த பதில்கள்:

இந்தியாவின் நீர்வள ஆதாரம், எரிபொருள் பயன்பாடு பற்றி?

ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை சரியாக பராமரிப்பது, கால்வாய்களை முறையாக தூர்வாருவது மற்றும் நதிகளை இணைப்பதன் மூலம் நீர்வள ஆதாரத்தை பாதுகாத்துக் கொள்ளலாம். வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் மாசுப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, சூரிய எரிசக்தி, “பயோ காஸ்’ போன்றவற்றின் பயன்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.

விண்வெளி துறையில் இந்தியாவின் செயல்பாடு குறித்து?

செவ்வாய் கிரகத்தை ஆராயும் அளவிற்கு இந்திய விண்வெளி துறை முன்னேற்றம் அடைந்துள்ளது. எதிர்காலத்தில் செவ்வாய்க்கு செயற்கை கோள் அனுப்பும் திட்டம் உள்ளது.

இளைஞர்கள் அரசியலில் சாதிக்க முடியுமா?

நிச்சயம் சாதிக்க முடியும். அதற்கு முதலில், இளைஞர்கள் பொதுவாழ்விற்கு விரும்பி வரவேண்டும். பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்காக தான், “பார்லிமென்ட்’டில் அவர்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முயற்சிகள் நடைபெறுகிறது. பெண் களுக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம், ஈடுபாடு குறைவாக தான் உள்ளது.

சமச்சீர் கல்வி திட்டம் பற்றி?

நல்ல திட்டம். இதன் மூலம் கிராமப்புற மாணவர்களுக்கும் சிறந்த கல்வி கிடைக்கும்.

2020 ல் இந்தியா வல்லரசு ஆகுமா?

தற்போது நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி 10 சதவீதமாக உள்ளது. இந்நிலை தொடர்ந்து நீடித்தால், 2020ல் இந்தியா நிச்சயம் வல்லரசாகும். இவ்வாறு அப்துல் கலாம் பதிலளித்தார்.

2020 ல் இந்தியா வல்லரசு ஆகுமா?

சென்னை : “”தங்கள் தனித்திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம், இளைஞர்கள் சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்ற முடியும்,” என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.