Category Archives: MENAKA P.A.NARESH

பெண்கள்தான் பிறவி ஓவியர்கள்-ஓவியர் மேனகா நரேஷ் .

நன்றி : கல்கி வார இதழ் – 05.02.2012

கண்ணைக் கவரும் கலை உலகம் – திருமதி மேனகா நரேஷ் அவர்களின் தினத்தந்தி ஞாயிறு மலர் – நேர்காணல்

அரசு அதிகாரிகள் குடியிருப்பில் அமைந்திருக்கும் அந்த வீட்டுக்குள் நுழைந்தால், கலை உலகத்திற்குள் நுழைந்த பிரமிப்பு.
புன்னகை முகமாய் காட்சி தரும் பெண்ணின் பெரிய ஓவியம், சுவரையே உயிருள்ள சித்திரமாக்கி பேசவைக்கிறது.
-என்னோடு ஒரு நிமிடம் பேச முடியுமா?’ என்று பார்ப்பவரிடம் கேட்பது போல் தோன்றுகிறது, பழக்கூடை சுமந்த இன்னொரு பெண்ணின் ஓவியம்.

திரும்பிய பக்கங்கள் எல்லாம் இப்படி திரும்பிப் பார்க்கவைக்கும் அந்த கலை உலகத்திற்குள் ஓடிக்குதித்து விளையாடிக்கொண்டிருக்கின்றன, இரண்டு உயிர் படைப்புகள். இரண்டும் பெண் குழந்தைகள்!
`அம்மாவை எங்கே?’ நாம் கேட்டு முடிப்பதற்குள், `தனக்கும் அந்த அற்புதமான ஓவியங்களுக்கும் தொடர்பே இல்லை’ என்பது போன்ற எளிமையுடன், கிராமத்து மணம் கலந்த பேச்சுடன் நம்மை வரவேற்கிறார், ஓவியர் மேனகா நரேஷ்.
“உலகிலே தலை சிறந்த ஓவியர் இயற்கைதான். இயற்கை படைத்த வானம், கடல், மலை, அருவி.. எல்லாம் எவ்வளவு அழகாக இருக்கின்றன. அவைகளை காலம் முழுக்க பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதே இயற்கைதான் ஓவியம் வரைய நம்மையும் படைத்திருக்கிறது. அதனால் இயற்கையோடு நாம் இரண்டறக் கலந்து சிந்தித்து, செயல்படத் தொடங்கிவிட்டாலே நமக்கு ஓவியம் வரையும் ஆற்றல் வந்துவிடும்..”- என்று கூறும் இவர், ஓவிய சாதனையாளர். எம்.எஸ்சி, எம்.பில். படித்துள்ளார். மல்டி மீடியா துறையில் முதுகலை டிப்ளமோ படித்துவிட்டு அனிமேஷன் துறையில் 3 டி ஓவியராகவும் திகழ்கிறார்.
எல்லா குழந்தைகளும் சுவரில் கிறுக்குகிறது. அதுவே சிறுமியானதும், கோலமிடு கிறது. வீட்டையும் அலங்காரம் செய்கிறது. இப்படி படைப்பாற்றல் எல்லா பெண்களிடமும் இருந்தும், சிலரால் மட்டும்தானே ஓவியர் ஆக முடிகிறது. அது ஏன்?

“எல்லா குழந்தைகளும் பார்ப்பதை, கேட்பதை ரசிக்கின்றன. தான் ரசிக்கும் அழகில் கற்பனையையும், திறமையையும் கலந்து படைப்பாக வெளிக்கொண்டுவர துடிக்கின்றன. அதன் வெளிப்பாடுதான் குழந்தைகளின் கிறுக்கல். கிறுக்கல்களில் ஆரம்பித்து படிப்படியாக மேம்பட்டு, ஓவியராவது ஒரு வகை. ஓவியத்தைப் பார்த்து, பிரமித்து அதில் ஏற்படும் ஈடுபாட்டால் ஓவியரிடம் பயிற்சி பெற்று, ஓவியராக உருவாகுவது இன்னொரு வகை.

ஒரு பெண் ஓவியராக வெற்றி பெற வேண்டுமென்றால், அவரது குடும்பத்தினர் ஒத்துழைப்பு தரவேண்டும். திருமணத்திற்கு பிறகு கணவர் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அவளால் ஓவியராக நிலைத்து நிற்க முடியும். ஓவியம் வரைய சரியான ஆரம்பம் வேண்டும். தொடர்ந்து நிறைய, நிறைய கற்பனை செய்யவேண்டும். வெளி விஷயங்களிலோ, பொழுதுபோக்கிலோ நேரத்தை செலவிடாமல், அந்த நேரத்தை எல்லாம் ஓவியத்திற்காக அர்ப்பணிக்கவும் வேண்டும். அது எல்லோராலும் முடியாது என்பதால்தான் நிறைய ஓவியர்கள் உருவாவதில்லை..”

ஓவியத்தில் சிறந்து விளங்குவது ஆணா? பெண்ணா?
“ஓவியர்களில் ஆண், பெண் வித்தியாசம் இல்லை. ஆனால், ஆண் என்றால் நேரங்காலம் பார்க்காமல் தனியாக எந்த இடத்திற்கு சென்றும் வரையலாம். பெண்களால் அது இயலாத காரியம். ஆனால் எந்த ஒரு விஷயத்தையும் கூர்ந்து கவனிப்பது, கவனம் சிதறாமல் வரைவது போன்றவைகளில் ஆண்களை விட பெண்களுக்கு வாய்ப்புகள் அதிக சதவீதத்தில் உள்ளது..”
நீங்கள் ஓவியம் வரையத் தொடங்கிய காலத்தில் அதிகம் கிடைத்தது, பாராட்டா? திட்டா?
“நான் அறியாத வயதில் வரைந்த ஓவியங்களுக்கு பாராட்டைவிட திட்டுகளே அதிகம் கிடைத்தது. அதில் ஒரு திருப்பமாக 10 வயதில், இசைஞானி இளைய ராஜாவின் படம் கிடைத்தது. அந்த இரவே அதை தத்ரூபமாக வரைந்து பெற்றோரிடம் காட்டி பாராட்டு வாங்கிவிட்டேன். அன்றிலிருந்து நான் திட்டு வாங்கவே இல்லை..”
சராசரி பெண்ணும், ஓவியரான பெண்ணும் பிரச்சினைகளை அணுகும் விதத்தில் வித்தியாசப்படுவார்களா?
“ஓவியப் பெண்கள் சராசரி பெண்களைக்காட்டிலும் பொறுமைசாலிகள். பிரச்சினையின் தீவிரத்தை அறிந்து எளிதில் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக, சகிப்புத்தன்மையுடன் அணுகுவார்கள். தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வார்கள். அவர்களின் அணுகுமுறையில் மென்மை எப்போதும் இருக்கும் என்பதால், எந்த பிரச்சினையும் எல்லைமீறி வன்முறையில் போய் முடிந்துவிடாது”
பெண் ஓவியர்கள் எந்த நேரமும் தூரிகையும், கற்பனையுமாக இருந்தால்- யதார்த்த உலகத்திற்கும், அவர்களுக்கும் இடைவெளி விழுந்துவிடும் அல்லவா?
“எந்த பெண்ணாலும் முழுநேர ஓவியராக இருக்கமுடியாது. குடும்பத்திற்காக அவள் தன் கடமைகளை செய்தாகவேண்டும். இந்திய பெண்களின் வெற்றி என்பது அவளது குடும்பத்தோடு கலந்ததாகத்தான் இருக்கும். என் வெற்றிக்கு என் கணவர் காரணம். என்னுடைய இருமகள்களும் மிகுந்த பொறுப்புணர்ச்சி கொண்ட வர்கள். இரண்டாம் வகுப்பு படிக்கும் என் பெரிய மகள் பூஜா பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், அவளது பள்ளி அடையாள அட்டையையும், பெல்ட்டையும் கழற்றி அவளுடைய பையிலே வைத்துக்கொள்வாள். அதனால் அவைகளை மறுநாள் காலையில் தேடி எடுக்கும் நேரம் மிச்சமாகும். யு.கே.ஜி. படிக்கும் சின்ன மகள் ஸ்ரீஜாவும் அப்படித்தான். இருவரும் இப்போதே ஓவியத்திலும், கல்வியிலும் பரிசுகளை குவிக்க ஆரம்பித்து விட்டார்கள்..”
பாடகிகள் தோற்றத்திலும் அழகுணர்ச்சியுடன் காணப்படுகிறார்கள். ஓவியம் வரையும் பெண்களும் அழகாக தோன்றுவது அவசியமா?
“பொதுவாக பாடகிகள் பாடும்போதும், நடன கலைஞர்கள் ஆடும்போதும் அவர்களது தோற்றமும் ரசிகர்களால் கவனிக்கப்படுகிறது. ஆனால் ஓவியரைப் பொறுத்தவரையில் அவரது படைப்பு மட்டுமே பார்க்கப்படுகிறது. ரசிக்கப்படுகிறது. ஆனாலும் ஓவியம் வரையும் பெண்களும் அழகுணர்ச்சி கொண்டவர்கள்தான். அவர்களது நடை, உடை, பாவனையிலும் நேர்த்தியிருக்கும்”
ஒரு ஓவியரின் மிகச்சிறந்த படைப்பு எது?
“என்னைப் பொறுத்தவரையில் தினமும் எனது ஒவ்வொரு செயலையும் சிறந்த படைப்புபோல் ஆழ்ந்து கவனித்துதான் செய்கிறேன். ஓவியத்திற்கு அப்பால், என் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதும், என் குழந்தைகளுக்காக சமைப்பதும், கணவருக்கு தேவையானதை செய்வதும் என் கனிவான படைப்புதான். ஓவியர்களின் வாழ்க்கையே படைப்பு மாதிரி முழுமையுடன் அழகாக ஜொலிக்கும்..”
மாநில அளவில் உங்களுக்கு முதன்முத லில் பரிசு வாங்கித் தந்த ஓவியம் எது?
“அழகு என்ற தலைப்பில் முகத்தில் வரைந்த `பேஸ் பெயிண்டிங்’ எனக்கு மாநில அளவில் பரிசு பெற்றுத்தந்தது. ஒரு பெண் முகத்தின் பாதியில் அவளது 20 வயது தோற்றத்தையும், மறுபாதியில் அவளது 80 வயது தோற்றத்தையும் வரைந்தேன். அழகு நிரந்தரமல்ல என்ற என் ஓவியக் கருத்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது..”
எத்தனை வகையான ஓவியங்கள் உங்களுக்கு தெரியும்?
“பேஸ் பெயிண்டிங் செய்வேன். மீள் உருவாக்கத்திலும் நிறைய படைத்துள்ளேன். மீள் உருவாக்கம் என்பது உலகப்புகழ் பெற்ற ஓவியர்களின் படைப்புகளை அதுபோல் அப்படியே பார்த்து வரைவது. லியானோ டோ டாவின்சி, லொரெய்ன், ஜான் கான்ஸ்டபிள், ராஜா ரவி வர்மா போன்ற பல உலகப் பிரபலங்களின் படைப்புகளை மீண்டும் உருவாக்கியுள்ளேன். ஒரே நிமிடத்தில் பூக்களை வரையக்கூடிய `ஒன் ஸ்டோக் பெயிண்டிங்’, பேப்பரில் செய்யும் கலைவடிவங்கள், சில்க் ரிப்பனில் பூக்கள் தயாரித்தல், ரங்கோலி, களிமண்- சோப்பில் சிற்பங்கள் செய்தல் போன்றவைகளும் எனக்கு தெரியும். அதை எல்லாம் குழந்தைகளுக்கு இப்போது கற்றுக்கொடுக்கிறேன். என்னிடம் கற்ற பல குழந்தைகள் பள்ளிகளில் ஓவியப் பரிசுகளை வென்றுள்ளனர்”
நீங்கள் தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொண்டது எப்படி?
“நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு கணினி அறிவியல் படித்தேன். அங்கு வருடத்திற்கு ஒருமுறை கலாசார விழா நடக்கும். அதில் 8 போட்டிகளில் வெல்பவர்களில் 2 பேரை சிறந்த ஓவியராக தேர்ந்தெடுத்து தேசிய போட்டிக்கு அனுப்புவார்கள். நானும் 8 போட்டிகளில் தேர்வாகி, தேசிய போட்டியில் கலந்துகொண்டேன்”
அனிமேஷன் கல்வியையும் கற்றிருக்கிறீர்கள். அதை எப்படி மக்களுக்கு பயனுள்ளதாக்குகிறீர்கள்?
“சிக்கலான அறிவியல் விஷயங்களை எளிமைப்படுத்துவதற்கும், சமூக பிரச்சினைகளை மக்களுக்கு எளிதில் புரிய வைப்பதற்கும் அனிமேஷன் உதவுகிறது. ஒரு நல்ல ஓவியரால்தான் சிறந்த அனிமேட்டராக முடியும். அனிமேஷன் மூலம் பெண் சிசுக்கொலை, தண்ணீர் சேமிப்பு, கண் தானம் போன்ற பல சமூக விஷயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன். மகாபலிபுரத்தில் உள்ள சிற்பங்களையும் அனிமேஷனில் புதுமையான முறையில் விளக்குகிறேன்”
மேனகா நரேஷ் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர். பெற்றோர்: கண்ணன்- எழிலரசி. இவரது கணவர் நரேஷ் தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் துறை இணை இயக்குனராக பணியாற்றுகிறார். இவர்கள் சென்னை அரசினர் தோட்டத்தில் வசித்து வருகிறார்கள்.

நன்றி : தினத்தந்தி ஞாயிறு மலர் தேதி :14.01.2012

>விநாயகரின் வாழ்த்து செய்தி

>

கல்விசோலை பார்வையாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.நீங்கள் அனைத்து வளங்களையும் பெற தினந்தோறும் என்னை இங்கே வந்து வணங்குங்கள்
ஓவியம் :திருமதி  மேனகாநரேஷ்

விநாயகரின் வாழ்த்து செய்தி

கல்விசோலை பார்வையாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.நீங்கள் அனைத்து வளங்களையும் பெற தினந்தோறும் என்னை இங்கே வந்து வணங்குங்கள்
ஓவியம் :திருமதி  மேனகாநரேஷ்

தூரிகை தொட்ட மேனகை !

(click the image to enlarge)

நன்றி :தேவதை மாத இதழ்

>தூரிகை தொட்ட மேனகை !

>

(click the image to enlarge)

நன்றி :தேவதை மாத இதழ்

உங்கள் விரல் வழி ஓவியமாய் கசிய வேண்டும்…

எடுத்த எடுப்பிலேயே எனக்கு ஓவியம் குறித்து எதுவும் தெரியாது என்பதை சொல்லிவிடுவதுதான் சரி என்று படுகிறது. எதற்கு தேவை இல்லாமல் ஒரு எதிர்பார்ப்பை உங்களுக்குள் வளரவிடும் குற்றத்தை செய்துகொண்டு? எதோ நல்ல ஓவியங்களை கொஞ்சம் ரசிக்கத் தெரியும் என்பதோடு சரி. நான் ரசிப்பவை எல்லாம் நல்லவைதானா என்பதும் கூட எனக்குத் தெரியாது. நான் நின்று நேரமெடுத்து ரசிக்காதவை நல்லவைகள் அல்ல என்றும் சொல்ல முடியாது. இப்படி ரசிப்பதற்கும் தள்ளிவிடுவதற்கும் எனக்குள் எந்த அளவு கோளும் இல்லை. ஏதோ என்னளவில் என்னை ஈர்க்கும் எதையும் அவசியம் ரசிக்கவே செய்கிறேன். இந்த அளவிற்கு எனக்கு ஒரு மிக சன்னமான அளவிற்கு ஓவியத்தின் மேல் ஈர்ப்பும் ரசனையும் வருவதற்கு கூட அய்யா வைகரை அவர்களும் யுகமாயினி சித்தன் அவர்களும்தான் காரணம் என்பதையும் அவசியம் பதியா விட்டால் நான் நன்றி கொன்றவனாவேன்.
இவர்கள் இருவரின் அதிலுங்குறிப்பாக வைகரை அவர்களின் தொடர்பு கிடைக்கும் வரை எழுத்திலக்கியத்திற்கான ஒரு துணைக் கருவி என்றும் எழுத்திலக்கியம் மட்டுமே தனித்து நிற்கும் அளவில் உசத்தியானது என்ற திமிர் என்று சொல்ல முடியாவிட்டாலும் அதை ஒட்டிய அளவில் அது போல ஏதோ ஒன்றோடும் இருந்தவன். ஏதோ ஒரு முறை ஏதோ ஒரு வேலையாக சென்னைக்கு வந்திருந்த போது வைகரை அய்யா அவர்கள் என்னை மருதுவின் ஓவியக் கண்காட்சிக்கு அழைத்துப் போனார். அதுதான் நான் பார்த்த முதல் ஓவியக் கண்காட்சி. அதுதான் முதல் என்பதற்காக ஏதோ அதன் பிறகு நிறைய ஓவியக் கண்காட்சிகளைப் பார்த்திருக்கிறேன் என்றும் பொருள் அல்ல. மருதுவின் கண்காட்சிக்குப் பிறகு இதுதான் என்ற வகையில் இரண்டாவது கண்காட்சி இது. என்றாலும் இந்த இரண்டு கண்காட்சிகளுக்கு மிடையில் எனது ஓவியம் குறித்த பார்வை கொஞ்சம் மாறி இருந்தது என்னவோ உண்மைதான். ஓவியம் மற்ற படைப்பிலக்கியங்களப் போலவே தனித்து நின்று இயங்கி உணர்த்தும் என்ற அளவுக்கு இப்போது எனக்கு புரிதல் உண்டு.
இப்போதும் சென்னைக்குத்தான் வந்திருக்கிறேன். இந்த முறை “தமிழ் நாடு பாட நூல் கழகம்” பள்ளிக் குழந்தைகளுக்கான பாடப் புத்தகங்களைத் தயாரிக்கும் முகாமின் ஒரு ஊழியனாக.
“தமிழ் நாடு பாட நூல் கழகம்” சமச்சீர் கல்விக்கு ஏற்ப நமது பள்ளிக் குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்களைத் தயாரிக்கும் பணியினைத் துவக்கியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் முகாம்கள் அமைக்கப் பட்டு பாடப் புத்தகங்கள் தயாரிக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள முகாமில் அதிகாலை தொடங்கி பின்னிரவு வரை பணி நீள்வது உடலையும் மனதையும் சற்று பாதிக்கவே செய்கிறது என்ற போதிலும் நண்பர்கள் சரவணன், சிவா, ஏழுமலை, அண்ணன் முத்து, அண்ணன் ஸ்டீபன்ராஜ், தோழர் லட்சுமி, அண்ணன் சேலம் சுப்பிரமணி, அண்ணன் மோனோ காசி, நண்பன் சேகர், தம்பி தேவதாஸ், தம்பி அறச்செல்வன் ஆகியோரோடான பணி என்பது ஒரு சுகமான அனுபவமாகவே உள்ளது.
அதிலும் தம்பி தேவதாஸோடு என்றால் இருபத்தி நான்கு மணி நேரமும் விழித்திருந்து வேலை பார்க்கலாம். எதை எது விரட்டுகிறது என்றே தெரியாமல் நேரமும் வேலையும் போட்டி போட்டுக் கொண்டு ஒன்றை ஒன்று விரட்டிக் கொண்டு ஓடும். அதிலும் தம்பி தேவதாஸோடு எப்போதும் இணைந்திருக்கவே எனக்கு விருப்பமாய் இருக்கிறது. காரணம் இதுதான். தான் எப்போதும் சாலமோன் பாப்பையாவோடு இருப்பதையே விரும்புவதாக வைரமுத்து ஒரு முறை சொன்னாராம். ஏனென்று கேட்ட போது பாப்பையாவோடு இருந்தால்தான் தான் கொஞ்சம் சிவப்பாகத் தெரிவதாகவும் சொன்னாராம். எனக்கும் தம்பிக்குமான வண்ண இடைவெளி ரொம்ப சன்னம்தான் என்றாலும் அந்த சன்னமான வித்தியாச்திற்காகவே அவரோடு கூட இருக்கச் சொல்லி என் உள் மனது என்னை கட்டாயப் படுத்துகிறது.
ஒரு புதன் மாலை “இன்று இத்தோடு எல்லோரும் வேலையை முடித்துக் கொண்டு ஒரு முக்கியமான இடத்துக்குப் போகலாம்,கிளம்புங்க,” என்று அவசரப் படுத்தினார்.
முகாமிற்குள்ளேயே அடைந்து கிடந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கும் எந்த இடமாக இருந்தாலும் பரவாயில்லை. காலார, மனதார வெளியே போய் வந்தால் பரவாயில்லை என்று படவே எங்கே என்று கூட கேட்கவில்லை. குளித்து உடை மாற்றிக் கொண்டு கிளம்பினால் நாங்கள் வெளியே வருவதற்குள் இரண்டு ஆட்டோக்களை ஏற்பாடு செய்திருந்தார். ஆட்டோ நகரத் தொடங்கியதும் கேட்டேன்
“ஆமாம் தேவா எங்க போறோம்?”
“வாங்க சொல்லாமலா போய்டுவேன்?” என்று சமாளித்துக் கொண்டே வந்தவர் ஒரு வழியாய் இரக்கப்பட்டு சொன்னார் ” நாம இப்ப ஆழ்வார்பேட்டைல நடக்கிற ஒரு ஓவியக் கண்காட்சிக்கு போகிறோம். போதுமா?”
“ஆஹா!, யாரோடது?”
“நம்ம மேனகா மேடத்தோடது”
பொதுவாகவே ஓவியர்கள் குறித்து ஒன்றும் தெரியாதுதான் ஆனாலும் நமக்குத் தெரிந்த வட்டத்திற்குள் மேனகா அகப்படாமல் போகவே
“எந்த மேனகா?”
“நம்ம நரேஷ் சார் வொய்ஃப்.”
புரிந்தது. கல்வித் துறை பெற்றிருந்த ஆகச் சிறந்த, ஆக யோக்கியமான, இரண்டு கை விரல்களின் எண்ணிக்கைக்குள் அகப்படும் அதிகாரிகளுள் நரேஷும் ஒருவர். எங்கு போனாலும் மனிதர்களை தரம் பிரிக்கும் சல்லடைகளோடே போகும் எனது நல்ல நண்பர்க்ளில் பலர் சொன்னதை வைத்துப் பார்க்கும் போது, நான் என் வாழ்நாளின் பெரும் பயனாக கருதக் கூடிய பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் கார்மேகம் சார் அவர்களோடு நான் பொருத்திப் பார்க்கிற தகுதி வாய்ந்த இளைஞர். என் ஊர்தான் இவருக்கும். நூலகத் துறைக்குப் போயிருக்கிறார். என்னை விட குறைந்தது பத்து ஆண்டுகளாவது இளையவர். அந்த வகையில் நான் ஓய்வு பெற இருக்கும் இன்னுமொரு பதினோரு ஆண்டு கால இடைவெளிக்குள் மீண்டும் கல்வித் துறைக்குள் வந்து அவருக்கு கீழ் பணியாற்றும் வாய்ப்பினை எனக்குத் தருவார் என்பதேகூட இனிப்பான நம்பிக்கைதான்.
அவரது மனைவிதான் மேனகா எனில் இன்னும் இளைய பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். எனில் முப்பதை நெருங்கிய அல்லது முப்பதை சற்றே தாண்டிய, ஓவியக் களத்தில் இன்னும் குறைந்த பட்சம் நாற்பது ஆண்டுகளையாவது சேமிப்பில் வைத்திருக்கிற ஒரு குட்டிப் பெண்ணின் ஓவியக் கண்காட்சிக்குப் போகிறோம் என்ற உணர்வே ஏற்கனவே செலவு செய்திருந்த காலண்டர்களில் ஒரு நான்கைந்தையாவது என்னிடம் திருப்பிக் கொண்டு வந்து விட்டது.ஆட்டோவிலிருந்து இறங்குவதற்குள் நான் நான்கைந்து ஆண்டுகள் குறைந்து போனேன்.
உள்ளுக்குள் நுழைந்தோம். அப்போதுதான் நடிகர் சிவக்குமார் அங்கிருந்து கிளம்பிப் போனதாக சொன்னார்கள்.
நுனி நாக்கு ஆங்கிலமும் அடிக்கப் பட்ட திரவத்தின் நறு மணமும் கம கமக்க அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த மேல் மட்டத்து சனங்களும் திருச்சிக்கும் தஞ்சைக்கும் இடையே ஊடாடி, நான் பெரிதும் ரசித்து மதிக்கிற மொழியைப் பேசுகிற, எளிமையையும் ஈரத்தையும் மட்டுமே தங்களது முகவரியாயும் இதயமாகவும் கொண்டிருக்கிற என் சனங்களையும் பார்க்க முடிந்தது.
நூறுக்கு சற்று ஒட்டிய எண்ணிக்கையில், சிறிதாய், பெரிதாய், வண்ண வண்ணமாய் ஓவியங்கள் ஒரு அழகான, நேர்த்தியான வரிசையில் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன. மரபு சார்ந்த, நவீன ,இன்னும் என்னென்ன வகைகள் உண்டோ அத்தனை வகை ஓவியங்களையும் அங்கே பார்க்க முடிந்தது. ஒரு சின்ன இலையிலிருந்து ஒரு மிகப் பிருமாண்டமான மரம் வரைக்கும், ஒரு எளிய ஓலைக் குடிசையிலிருந்து அதி நவீன மாட மாளிகைகள் வரைக்கும், ஒரு சிரிய தோப்பிலிருந்து ஒரு பெரிய காட்சி வரைக்கும் என்று வாழ்வின் சகல நிலைகளிலும் உள்ள இரண்டு முனைகளையும் சரியாய் உள்வாங்கி சரியாய் வெளிப்படுத்தும் பாங்கு நிசத்துக்குமே அலாதியானதுதான்
நவீன ஓவியங்களைப் பார்த்து வாயைப் பிளந்தவாறு நின்றுகொண்டிருந்தவர்களைப் பார்க்க முடிந்தது. பொதுவாகவே நவீன ஓவியங்களின் மீது ஏகத்துக்கும் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. சிலர் வறட்டுத் தனமாக நவீன ஓவியங்களின் புரியாமயைக் காரணம் காட்டி அவற்றை நிராகரிப்பதை ஏற்க இயலாது.அதை அப்படித்தான் ஏற்க வேண்டுமெனில் பின் நவீனப் படைப்புகளையும், இருன்மை மற்றும் படிமம் சார்ந்து புனையப்படும் படைப்புகளையும் நாம் நிராகரித்து இழக்க வேண்டி வரும். நல்லது கெட்டது என்ற வகையில் வரும் விமர்சனங்களை மட்டுமே எதிர் கொண்டு மற்றவற்றை நிராகரிப்பதே சரியெனப் படுகிறது.
நுண்கலை வகையை சார்ந்த ஓவியங்களையும் ரசிக்க ஒரு திரள் இருந்தது. இரண்டையும் ரசிக்கும் திரள்தான் அந்த அரங்கில் பெரும்பான்மை என்பதுதான் மிகுந்த ஆரோக்கியமான விஷயமே. நம்மைப் பொறுத்தவரை புனைவும் பின் நவீனத்துவமும் கைவரப் பெற்றவரால் மட்டுமே நவீன ஓவியங்களை படைக்க முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.
ஆங்காங்கே கொத்துக் கொத்தாக நின்று சிலாகித்துக் கொண்டும் விமர்சித்துக் கொண்டும் இருந்தார்கள்.சிலரோ அங்கு வைக்கப் பட்டிருந்த குறிப்பேட்டில் எழுதிக் கொண்டிருந்தார்கள். அந்த இரண்டுக்குமே நமக்கு ஞானம் போதாது என்பதால் அதற்குள் நான் நுழைய வில்லை. நானும் கொஞ்சம் சொக்கித்தான் போயிருந்தேன். மருதுவின் கண்காட்சியின் போது நான் முற்றிலுமாக அதனோடு ஒட்ட இயலாமல் கொஞ்சம் அந்நியப்பட்டுக் கிடந்தேன். காரணம் அப்போது வந்திருந்தவர்களில் பெரும்பான்மையோர் ஒவியத்தில் அதிகம் புலமை பெற்றிருந்தவர்கள். அதில் அதிகமானோர் ஓவியம் குறித்து பல கருத்தரங்குகளில் மணிக் கணக்காக பேசிக் கொண்டிருப்பவர்கள். ரப்பர் பந்து கிரிக்கெட்டைக்கூட தூர இருந்தே ரசித்துப் பழக்கப் பட்டிருந்த எனக்கு தெண்டுல்கர் மற்றும் தோனியின் அருகிருந்து பாக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது ஏற்படும் படபடப்பும் அந்நியத் தன்மையுமே எனக்கன்று இருந்தது. அன்றிருந்த மிரட்சி இல்லை என்பதால் இந்த ஓவியங்களுக்கு நெருங்கிப் போவது ஒன்றும் கடினமாக இல்லை.
முடிந்து ஏறத்தாழ மூன்று வாரங்கள் ஆன நிலையிலும் அதிலிரண்டு படங்கள் வழக்கமாக எடுத்தக் காரியத்தில் குவிந்துவிடும் என் கவனத்தை சலனப் படுத்திக் கொண்டே இருக்கின்றன.
அதிலொன்று, ஒரு ஓலைக் குடிசைக்கு முன்னால் சகல சக்திகளாலும் சக்கையாய் சுரண்டப் பட்டு எலும்பும், ஏதோ அரைக் கிலோ சதையும், கொஞ்சம் தோளும் என்று இருக்கும் நிலையிலும் நம்பிக்கையின் கங்கை இன்னமும் கண்களில் தேக்கி வைத்து குதிக் காலிட்டு குந்தியிருக்கும் கிழவியின் படம். “காட்டம்மா” என்று கத்த இருந்தவன் படாத பாடு பட்டு அடக்கிக் கொண்டேன். யாருக்கும் தெரியாமல் கசிவை துடைத்துக் கொண்டேன். வெளிப்படையாய் அழுவதுகூட சகிக்கமுடியாத பெருங்குற்றம் என்பதைதான் இந்த பாழாய்ப் போன நாகரீகமும் படிப்பும் கற்றுத் தந்திருக்கிறதே.
களை வெட்டி, நாற்று நட்டு, சித்தாள் வேலை பார்த்து, கிடைக்கும் ஓய்வு நேரங்களில் எருமை மேய்த்து என்பதாய் உழைத்து உழைத்தே தேய்ந்து போன நிலையிலும், எண்பதுகளின் மத்தியிலும் யார் தயவும் இன்றி மைல் கணக்காய் நடக்கும் என் அம்மாயி “காட்டம்மா ” குதிக் காலிட்டு குந்தியிருப்பதாகவே பட்டது எனக்கு. அவ்வளவு தத்ரூபம். இருபது நிமிடங்களாவது அந்தப் படத்தின் முன் நின்றிருப்பேன். கொஞ்சம் கட்டுப் படுத்த முடியாதபோது கழிப்பறைக்குள் சென்று ஒரு ஏழெட்டு சொட்டு அழுதுவிட்டுத்தான் வந்தேன் .
ஒன்று சொல்ல வேண்டும் , அந்தக் கிழவியின் சோகத்தில், முற்றாய் முழுதாய் சுரண்டப்பட்ட எங்கள் கிழவியின் வாழ்க்கையில் ஒரு அரசியல் ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ, அதுதான் உண்மை . அது வர்ணமாய், வர்க்கமாய் விரிந்து பரந்து கிடக்கிறது . இந்த உண்மையும் அதற்குள் மிகக் கவனமாக தன்னை ஒளித்துக் கொண்டு தன்னைப் பாதுகாத்து வரும் அரசியலும் உங்களுக்குள் பிடிபட்டு உங்கள் விரல் வழி கசியும் போது மேனகாவின் படைப்புகள் இன்னுமும் மெருகு பெரும்.
அடுத்ததாய் ஒரு இரண்டு மைல் தொலைவை மிகத் தத்ரூபமாக வரைந்திருந்தார். மலைகளும், மரங்களும், கசியும் வெளிச்சமும் , மக்களும் , பறவைகளும் என்று மிகச் சரியான ஓவியம்.வெளிச்சத்தை சரியானபடி வித்தியாசப் படுத்தி காட்டி இருந்தது சொக்க வைத்தது. அதே போல கல்லை வெட்டி, சுமந்து, செதுக்கி சிலையாக்கியவனெல்லாம் இன்னமும் இரண்டு மூன்று மைல்களுக்கப்பால் நின்றுதான் தரிசனம் பெற முடியும் என்ற உண்மை தரும் கோவமும் மேனகா விரல் வழி ஓவியமாய் கசிய வேண்டும். இது நடக்கும் என்றே நம்புகிறேன்.
என் அம்மாயி பார்த்தால் இப்படித்தான் சொல்லும் “அச்சு அசலா என்ன மாதிரியே வரஞ்சிருக்காளே. என்ன எங்கடா பாத்தா இந்தக் குட்டி?” இதுதான் உங்கள் வெற்றி மேனகா.

அனுபவ பகிர்வு : இரா. எட்வின்

>உங்கள் விரல் வழி ஓவியமாய் கசிய வேண்டும்…

நன்றி : http://www.eraaedwin.blogspot.com/

>ஓவியர் மேனகா

>

தஞ்சை அருகில் பூதலூர்தான் என் சொந்த ஊர். எப்போதும் பசுமையாக காட்சி தரும் எங்க ஊர். அப்பவே களிமண்னைப் பிசைஞ்சு, எனக்குத் தேவையான விளையாட்டு சாமான்களை நானே செஞ்சுக்குவேன்.அங்கிருந்து, அப்பாவின் வேலையால், திருச்சி பெல் சிட்டி போனோம். அங்கு போனாலும், என் ஊரின் பசுமையான நினைவுகள் வந்து போகும். அந்த செடி கொடிகள், மூங்கில் குத்து, ஆத்தங்கரை, இப்படி எல்லாவற்றையும் மனசுக்குள் ஓட விட்டுக்கிட்டே இருப்பேன். அதை அப்படியே கிறுக்க ஆரம்பிச்சேன்.அந்த சமயம், ஆசிரியர் யானை எழுதச் சொல்ல, அதை நான் படமாக வரைந்தேன். அன்று என் மேல் கோபப்படாமல், ஈஸ்வரி டீச்சர் கொடுத்த ஊக்கம் தான், என்னை ஓவியரா உருவாக்கியிருக்கு. ஓவியத்திற்காக பள்ளி, கல்லூரிகளில் பல பரிசுகளைக் குவிச்சிருக்கேன்.
ஆனா, இதுவரை முறையா யாரிடமும் ஓவியம் வரைய கற்றுக் கொள்ளவில்லை.ஆனா, இன்னும், நல்லா ஓவியம் வரையணும்னா, உலகப் புகழ் பெற்ற ஓவியர்களான லியனார்டோ டாவின்சி, கான்ஸ்டபிள் போன்றவர்களின் ஓவியங்களைத் தேடிப் பிடிச்சுப் பார்த்தேன்; அதை மீள் உருவாக்கம் செய்ய ஆரம்பித்தேன்.என் முதல் ஓவியக் கண்காட்சி, விழுப்புரத்தில் நடந்தது. அதில் எனக்கு, “கலைரத்னா’ விருது கொடுத்தாங்க.
  என் கணவர் நரேஷ், குழந்தைகள் பூஜா, ஸ்ரீஜா இவர்களின் தூண்டுதலால், சமீபத்தில் சென்னையில், ஓவியக் கண்காட்சி நடத்தினேன். மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.இன்னும் நிறைய ஓவியங்கள் வரைய வேண்டும்… இந்த ஓவியங்கள் அனைத்தும், என்னை ஊக்குவித்த ஈஸ்வரி டீச்சருக்கும், என்னை வளர்த்த சித்திக்குமே அர்ப்பணம்
நன்றி : தினமலர்

ஓவியர் மேனகா

>ஓவியக்கண்காட்சி

>

நடிகர் சிவக்குமார் அவர்கள் திறந்து வைத்த திருமதி மேனகா நரேஷ் அவர்களின் ஓவியக்கண்காட்சி துளிகள்

ஓவியக்கண்காட்சி

நடிகர் சிவக்குமார் அவர்கள் திறந்து வைத்த திருமதி மேனகா நரேஷ் அவர்களின் ஓவியக்கண்காட்சி துளிகள்

>ஓவிய கண்காட்சி

>

திருமதி மேனகாநரேஷ் அவர்களின் ஓவிய கண்காட்சி
துவக்க விழா:
18.08.2010, மாலை 6.00 மணிக்கு
துவக்கி வைப்பவர்:
நடிகர் சிவக்குமார் அவர்கள்

கண்காட்சி நடைபெறும் நாட்கள்
19.08.2010 முதல்  22.08.2010 வரை
10.00 am – 8.00 pm
தலைப்பு :
“ EVES AND BUDS ” and “ GO GREEN ”
இடம் :
CP ART CENTRE, 1,ELDEMS ROAD,ALWARPET,CHENNAI – 600018
அனைவரும் வாரீர்… அனுமதி இலவசம்…
இதோ அழைப்பிதழ்…

ஓவிய கண்காட்சி

>பெண் சிசுவை காப்போம் – அனிமேஷன் வீடியோ

>

பெண் சிசுவை காப்போம் – அனிமேஷன் வீடியோ
இயக்கம் : திருமதி மேனகாநரேஷ்
3D MAYA ARTIST

பெண் சிசுவை காப்போம் – அனிமேஷன் வீடியோ

பெண் சிசுவை காப்போம் – அனிமேஷன் வீடியோ
இயக்கம் : திருமதி மேனகாநரேஷ்
3D MAYA ARTIST

>MRS MENAKANARESH’S ANIMATIONS – 2

>http://www.youtube.com/get_player

MRS MENAKANARESH’S ANIMATIONS – 2

http://www.youtube.com/get_player

>MRS MENAKANARESH’S ANIMATIONS – 1

>http://www.youtube.com/get_player

MRS MENAKANARESH’S ANIMATIONS – 1

http://www.youtube.com/get_player

>MENAKA P.A.NARESH ‘S shore temple at mamallapuram in maya animation

>http://www.youtube.com/watch?v=D9ccvwRZyrs

MENAKA P.A.NARESH ‘S shore temple at mamallapuram in maya animation

http://www.youtube.com/watch?v=D9ccvwRZyrs

>MENAKA P.A.NARESH PAPER NEWS

>

MENAKA P.A.NARESH PAPER NEWS

>MENAKA P.A.NARESH’S REPRODUCTION ARTS & ANIMATION

>http://www.youtube.com/watch?v=R0ALtwuyENU (REPRODUCTION ARTS)

http://www.youtube.com/watch?v=eO7Lzd_OVng ( 3D MAYA PROJECT)

MENAKA P.A.NARESH’S REPRODUCTION ARTS & ANIMATION

http://www.youtube.com/watch?v=R0ALtwuyENU (REPRODUCTION ARTS)