Category Archives: AFTER +2

>கால்நடை மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் மே மாதம் 2ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை விநியோகம்.

>

கால்நடை மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் மே மாதம் 2ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை விநியோகம் செய்யப்பட உள்ளது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க கடைசி நாள் ஜூன்7ம் தேதி. ஜூலை 13,14ம் தேதிகளில் கவுன்சிலிங் நடைபெறும் என்று கால்நடை மருத்துவ பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

>28ம் தேதி முதல் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு

>

எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு இம்மாதம் 28ம் தேதி தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
பல மாணவர்கள் மதிப்பெண்களின் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்திருப்பதாலும், செம்மொழி மாநாடு நடைபெறுவதாலும் மாணவர்களின் வசதிக்கு ஏற்ப மருத்துவ கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.சென்னையில் இன்று மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் இவ்வாண்டு மாணவர்களிடமிருந்து 18 ஆயிரத்து 131 விண்ணப்பங்கள் மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்காக பெறப்பட்டன. இவற்றுள் மாணவர்கள் 6123 பேர். மாணவிகள் 11708 பேர். மாணவர்களை காட்டிலும் மாணவிகள் 2 மடங்கு அதிகமாக விண்ணப் பித்துள்ளனர்.
மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ள 13 மாணவகர்கள் அனைத்து பாடங்களிலும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்களில் 6 பேர் மாணவிகள், 7 பேர் மாணவர்கள். அவர்களின் விவரம்:
ஈரோடு பாரதிய வித்யாபவன் மாணவி சி.ஸ்ருதி, அதே பள்ளி மாணவி அபிநயா, ஊத்தங்கரை எஸ்.வி.மந்திர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் கவுதம், ஈரோடு பி.வி.பி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் செல்வமலை முத்துக்குமரன், ராசிபுரம் எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி விஷ்ணுபிரியா, ஊத்தங்கரை எஸ்.வி.மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் தினேஷ், நாமக்கல் குறிஞ்சி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் அமரன், சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.ஜி.ஸ்ருதி, கோவில் பட்டி லட்சுமி மில்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யா, ஒட்டன் சத்திரம் கிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைபள்ளி மாணவர் பிரனேஷ், நாமக்கல் வித்யா விகாஷ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் சஞ்சய் ராம், பழனி அக்ஷயா அகாடமி மாணவி அனுசுயா, ஈரோடு ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரி குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் பார்த்தசாரதி.மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு இம்மாதம் 28ம் தேதி தொடங்கி 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. 2வது கட்ட கலந்தாய்வு ஜூலை மாதம் 3வது வாரத்தில் நடைபெறும்.
முதல் கட்ட கலந்தாய்வானது, தமிழகத்தில் உள்ள 14 அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 1398 எம்பிபிஎஸ் இடங்களுக்கு நடைபெறும். இதில் 433 இடங்கள் இதர சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கானதாகும். 370 இடங்கள் பிற்படுத்தப் பட்டவர்கள். 49 இடங்கள் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள். 280 இடங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள். 210 இடங்கள் தாழ்த்தப்பட்டவர்கள். 42 இடங்கள் அருந்ததியர்கள். 14 இடங்கள் பழங்குடிகள்.
2வது கட்ட கலந்தாய்வு அரசு தொடங்கி உள்ள தர்மபுரி, திருவாரூர் மருத்துவ கல்லூரிகளுக்கும் ஐந்து தனியார் கல்லூரிகளுக்கும் நடைபெறும். பல மாணவர்கள் மதிப்பெண்களின் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்திருப்பதாலும், செம்மொழி மாநாடு நடைபெறு வதாலும் மாணவர்களின் வசதிக்கு ஏற்ப மருத்துவ கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் மருத்துவ கல்லூரிகளான திருவாரூர், தர்மபுரி, விழுப்புரம் மருத்துவ கல்லூரிகளுக்கான அனுமதி பெற வேண்டியதன் காரணமாகவும் கலந்தாய்வுக்கு இந்த காலநீட்டிப்பு செய்யப்பட்டது.
மத்திய அரசின் கமிட்டி விழுப்புரம், திருவாரூர், மருத்துவ கல்லூரிகளின் மறு ஆய்வுக்கு வருகிறார்கள். அவர்கள் கேட்டுள்ள அனைத்து அடிப்படை வசதிகளையும் முழுமையாக பூர்த்தி செய்திருப்பதால் விரைவில் அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம்.

28ம் தேதி முதல் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு

>சிவில் சர்வீஸ் தேர்வு முறையில் மாற்றம்: சராசரி மாணவர்களும் தேர்ச்சி பெறலாம்

>

வரும் 2011ம் ஆண்டு முதல் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது. சராசரி புத்திசாலித்தனத்துடன், கடின உழைப்பு இருந்தால் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறலாம்,” என வாஜிராம் மற்றும் ரவி ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய இயக்குனர் ரவீந்திரன் கூறினார்.
அவர் கூறியதாவது: சேலத்தில் பி.எஸ்சி.,யும், டில்லி பல்கலையில் எம்.ஏ., – எல்.எல்.பி., படித்தேன். கடந்த 30 ஆண்டுகளாக டில்லியில் வாஜிராம் மற்றும் ரவி ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., பயிற்சி மையம் நடத்தி வருகிறேன். இந்திய அரசியலமைப்புச் சட்டம், பொது அறிவு பாடங்களுக்கும், நேர்முகத் தேர்விற்கும் பயிற்சி அளிக்கிறேன். இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்ற 875 பேரில், 330 பேர் வாஜிராம் மற்றும் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள். இத்தேர்வில் 2, 3, 5, 6, 7, 8 ஆகிய ரேங்க்களை பெற்றவர்கள், எங்கள் பயிற்சி மையத்தில் படித்தவர்கள். கடந்த 1999ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை, பத்து ஆண்டுகளாக அகில இந்திய அளவில் முதல் ரேங்க்கை எங்கள் பயிற்சி மையத்தில் படித்தவர்கள் தான் பெற்று வருகின்றனர்.
தற்போதைய யூ.பி.எஸ்.சி., தேர்வு முறை, 1979ம் ஆண்டு முதல் 32 ஆண்டுகளாக ஒரே மாதிரியாக செயல்பட்டு வருகிறது. இதில் மூன்று கட்டமாக தேர்வுகள் நடைபெறும். முதல்நிலைத் தேர்வில் பொதுஅறிவு மற்றும் ஒரு விருப்பப் பாடம் இடம்பெறும். 21 பாடங்களில் ஏதாவது ஒரு பாடத்தை விருப்பப் பாடமாக தேர்ந்தெடுத்து தேர்வு எழுத வேண்டும். இத்தேர்வு மே மாத மத்தியில் நடைபெறும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மெயின் தேர்வு எழுதலாம். மெயின் தேர்வில், பொது அறிவு(இரண்டு தாள்கள்), முதல் விருப்பப் பாடம்(இரண்டு தாள்கள்), இரண்டாவது விருப்பப் பாடம்(இரண்டு தாள்கள்), கட்டுரை, ஆகியவை இடம்பெறும். இவை முதுநிலை பட்டப் படிப்பு அளவில் இருக்கும். இத்தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண் ரேங்க்கிற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மெயின் தேர்வில் கட்டாய ஆங்கிலம், ஏதாவது ஒரு இந்திய மொழி ஆகிய இரு பாடங்களும் இடம்பெறும். ஆங்கிலம், இந்திய மொழியில் தேர்ச்சி பெற்றால் போதும். இவை பிளஸ் 2 அளவில் இருக்கும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர்.
யூ.பி.எஸ்.சி., 2011ம் ஆண்டிலிருந்து முதல்நிலைத் தேர்வில் மாற்றங்களை கொண்டுவரவுள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து விட்டது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, யூ.பி.எஸ்.சி., வெளியிடவுள்ளது. இதன்படி, முதல்நிலைத் தேர்வின் பெயர், “சிவில் சர்வீஸ் ஆப்டிட்யூட் டெஸ்ட் (சி.எஸ்.ஏ.டி.,)’ என மாற்றப்படும். முதல்நிலைத் தேர்வில் உள்ள பொதுஅறிவுப் பகுதி தொடரும். விருப்பப் பாடத்திற்கு பதிலாக, “ஆப்டிட்யூட்’ டெஸ்ட் இடம்பெறும். இந்த இரண்டு பகுதிகளும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமாக்கப்படும். கேள்வித்தாள், சரியான விடையை தேர்வு செய்யும் முறையில் அமைந்திருக்கும். 2010ம் ஆண்டு முதல்நிலைத் தேர்வு, பழைய முறையிலேயே நடைபெறும். மெயின் தேர்வில் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து, யூ.பி.எஸ்.சி., தலைவர், ஒரு குழுவை அமைத்துள்ளார். அக்குழுவின் பரிந்துரையின்பேரில், மெயின் தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும். ஆனால், 2013ம் ஆண்டில் தான் மெயின் தேர்வில் மாற்றங்கள் வரும் எனத் தெரிகிறது.
கிராமப்புற மாணவர்கள், விருப்பப் பாடத்தில் திறமையானவர்களாக இருந்தனர். “ஆப்டிட்யூட்’ டெஸ்டில் நகர்ப்புற மாணவர்கள் திறமையானவர்கள். முதல்நிலைத் தேர்வில் கொண்டுவரப்படவுள்ள மாற்றங்களால், கிராமப்புற மாணவர்கள் சிரமப்படலாம். அது ஓரிரு ஆண்டுகள் மட்டுமே இருக்கும். அதன்பிறகு, கிராமப்புற மாணவர்களும், “ஆப்டிட்யூட்’ டெஸ்டிற்காக படித்து சிறப்பாக செயல்பட துவங்கிவிடுவர். கிராமப்புற மாணவர்கள் கணிதத்தில் திறமையானவர்களாக இருப்பதால், “ஆப்டிட்யூட்’ டெஸ்டில் திறமையை வெளிப்படுத்தவும் வாய்ப்புள்ளது. அகில இந்திய அளவில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்கள், வெற்றி பெறுபவர்கள் எண்ணிக்கையில், பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் ஆண்டுதோறும் பயிற்சி பெறுபவர்களில் பெண்களில் பங்கு 15 – 20 சதவீதமாக இருந்தது. அது தற்போது 30 – 35 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிராப்புற மாணவர்கள் மற்றும் பெண்களிடம் சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வில் பாடச்சுமை அதிகம் தான். மெயின் தேர்வில், பொதுஅறிவு, இரண்டு விருப்பப்பாடங்கள் ஆகியவை, மூன்று முதுநிலை பட்டங்களுக்கு படிப்பதற்கு இணையானது. தேர்ச்சி பெற கடின உழைப்பு மிகவும் முக்கியம். சராசரி புத்திசாலித்தனத்துடன், கடின உழைப்பு இருந்தால் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறலாம். குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும். ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற மனஉறுதியுடன் இருந்தால் தான், வெற்றி பெற முடியும். மற்ற தேர்வுகளுடன், இதையும் சேர்த்து எழுதலாம் என நினைத்தால் வெற்றி பெற முடியாது. பட்டப்படிப்பு படிக்கும்போதே, சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராக வேண்டும். பொது அறிவை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். செய்தித்தாள்களை வாசிக்காமல், புத்தகத்தைப் போல நினைத்து படிக்க வேண்டும்.
மத்திய அரசு வெளியிடும் யோஜனா, அதன் தமிழ் பதிப்பு திட்டம் ஆகியவற்றை படிக்க வேண்டும். இவற்றில் அரசியல், பொருளாதாரம், சமூகம் குறித்து கட்டுரைகள் இடம்பெறும். “டிவி’ மூலமாகவும் கற்றுக் கொள்ள வேண்டும். ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுடனும், தேர்விற்கு தயாராகும் மாணவர்களுடனும் கலந்துரையாட வேண்டும். என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை படிக்க வேண்டும். அதில் 10 – 12 வரையிலான இந்திய வரலாறு, ஜியாகிராபி புத்தகங்கள், பிளஸ் 1, பிளஸ் 2 இந்திய பொருளாதார புத்தகம், 8 – பிளஸ் 1 உயிரியல், இயற்பியல், வேதியியல் புத்தகங்கள் ஆகியவற்றை படிக்க வேண்டும். தேசிய புத்தக டிரஸ்ட் வெளியிடும், அரசியலமைப்புச் சட்டம், இந்திய சுதந்திரப் போராட்டம் ஆகிய புத்தகங்களை படிக்க வேண்டும்.
பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வை எழுதலாம். பொதுப்பிரிவினர் 21 முதல் 30 வயது வரையும், ஓ.பி.சி., பிரிவினர் 33 வயது வரையும், எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினர் 35 வயது வரையும் தேர்வு எழுதலாம். பொதுப்பிரிவினர் 3, ஓ.பி.சி., 7, எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினர் 14 முறை தேர்வு எழுதலாம். நேர்முகத் தேர்வை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்வில், நேர்மை, பிரச்னைக்கு விரைவாக தீர்வு காணும் முறை, பகுத்தாய்வு செய்யும் முறை ஆகியவை சோதிக்கப்படுகிறது. கடந்த 2001ம் ஆண்டு முதல் தமிழக மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற 875 பேரில், 125 பேர் தமிழக மாணவர்கள். மேலும், தமிழகத்தில் ஓ.பி.சி., – எஸ்.சி., – எஸ்.டி., மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் அதிகரித்து வருகிறது. இவர்கள், அதிகளவில் கிராமப்புறங்களிலிருந்து வருபவர்கள்.
சிவில் சர்வீஸ் தேர்வில், 1993ம் ஆண்டு ஓ.பி.சி., இடஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்பட்டது. ஆனால், தமிழகத்தில் 1930ம் ஆண்டு முதலே, ஓ.பி.சி., இடஒதுக்கீட்டு முறை உள்ளது. இதனால், தமிழகத்தில் படித்த ஓ.பி.சி., மாணவர்கள் அதிகம். அவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் ஓ.பி.சி., இடஒதுக்கீட்டை பயன்படுத்தி தேர்ச்சி பெறுகின்றனர். ஆனால், வடமாநிலங்களில் 1993ம் ஆண்டு தான் ஓ.பி.சி., இடஒதுக்கீட்டு முறை அமலுக்கு வந்தது. தமிழக மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவதைப் பார்த்து, மற்ற மாணவர்களும் உத்வேகத்துடன் படிக்கின்றனர்.
தமிழகத்தில் கல்வியறிவு அதிகம். தமிழக மாணவர்களின் கடின உழைப்பும், அதிகளவிலான பயிற்சி மையங்கள், உதவி செய்பவர்கள், இலவச பயிற்சி ஆகியவையும் சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெறக் காரணம். சிவில் சர்வீஸ் தேர்வில் டில்லி, உத்தரபிரதேசம், பீகார், ஆந்திரா, தமிழகம், பஞ்சாப் ஆகிய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். தமிழ் உட்பட அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் தேர்வு எழுதலாம். தமிழில் எழுதலாம் என்பதும், தமிழகத்தில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற காரணம். இவ்வாறு ரவீந்திரன் கூறினார்.

>இன்ஜினியரிங் கல்லூரி கட்ஆப் குறைப்பு !

>

2010 கல்வி ஆண்டில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்வதற்கான கட் ஆப் ( தகுதி மதிப்பெண் ) குறைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். மாற்றி அமைக்கப்பட்ட விகிதத்தின் அடிப்படையில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இன்ஜினியரிங் கட் ஆப் 55 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டு்ள்ளது. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 45 சதவீதமாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான கட் ஆப் 40 சதவீதமாகவும், எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கான கட் ஆப் 35 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
பொன்முடி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் ‌சேர்க்கைக்கான கட் ஆப் மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என இன்ஜினியரிங் கல்லூரிகளின் நிர்வாகிகள், முதல்வர்கள், சட்டசபை உறுப்பினர்கள் ஆகியோர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி கட் ஆப் மதிப்பெண்ணை குறைத்துள்ளதாக தெரிவித்தார். இதனால் இவ்வாண்டு இன்ஜினியரிங் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரப்பப்படும். மாணவர்களின் விருப்பமும் நிறைவேறும். மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கும். மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச மதிப்பெண் குறைக்கப்பட்டிருப்பதுடன் ஒரு குடும்பத்தின் முதல் பட்டதாரி மாணவருக்குரிய இன்ஜினியரிங் படிப்பு கல்விக் கட்டண தொகையை அரசே செலுத்துவதாலும் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்றார்.

>சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: மனித நேய அகடமியில் 43 பேர் வெற்றி

>

ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றவர்களில் சென்னையைச் சேர்ந்த இரண்டு பேர், முதல் 25 இடங்களுக்குள் தேர்ச்சியடைந்துள்ளனர். நாடு முழுவதும் மாற்றுத் திறனாளிகள் 30 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், முதலிடம் பெற்ற 25 பேரில் சென்னையைச் சேர்ந்த இரண்டு பேர் இடம் பெற்றுள்ளனர். சைதை துரைசாமி மனித நேய ஐ.ஏ.எஸ்., அகடமியில் படித்த 43 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நாடு முழுவதும் மொத்தம் தேர்வாகிய 875 பேரில், 30 பேர் மாற்றுத்திறன் படைத்தவர்கள். தேர்வின் முக்கிய அம்சங்கள்: இந்திய சிவில் பணிகள் தேர்வுக்கு மொத்தம் நான்கு லட்சத்து 9,110 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 91 பேர் முதல் கட்ட தேர்வு எழுதினர். இதில், 12 ஆயிரத்து 26 பேர் முக்கிய எழுத்து தேர்வுக்குத் தகுதி பெற்றனர். இதில் 2,432 பேர் கடந்த மார்ச் – ஏப்ரலில் நடத்தப்பட்ட ஆளுமைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 195 பெண்கள் உட்பட 875 பேர் தேர்வு பெற்றுள்ளனர். ஸ்ரீநகரில் மருத்துவ பட்டம் பெற்ற டாக்டர் ஷாபேசல் முதலிடம் பிடித்தார். இவர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார். டில்லியைச் சேர்ந்த பொறியாளர் பிரகாஷ் ராஜ் புரோகித் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். இது இவரது இரண்டாவது முயற்சி.
பெண்களில், டில்லியைச் சேர்ந்த எம்.ஏ., பட்டதாரி இவா சகாய் முதலிடம் பெற்றுள்ளார். இது இவரின் முதல் முயற்சி. முதலிடம் பெற்ற 25 பேரில், 10 பேர் பெண்கள். முதல் 25 இடம் பெற்றவர்களில் 15 பேர் டில்லியைச் சேர்ந்தவர்கள். சென்னை, மும்பை, திருவனந்தபுரத்தில் இருந்து தலா இரண்டு பேரும், அலகாபாத், சண்டிகர், கட்டாக், ஐதராபாத்தில் இருந்து தலா ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட சிவில் பணிகளுக்கான நியமனத்திற்கு தேர்வு பெற்றுள்ள 875 பேரில் 30 பேர் மாற்றுத்திறன் படைத்தவர்கள்; இதில் ஐந்து பேர் பார்வையற்றவர்கள்.
மனித நேய ஐ.ஏ.எஸ்., கல்வியக மாணவர்கள் சாதனை: சென்னையில் சைதை துரைசாமியின் மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., கல்வியகம் இயங்கி வருகிறது. 2006ம் ஆண்டு முதல் செயல்படும் இந்த கல்வியகத்தில் இதுவரை ஏராளமானோர் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் இங்கு பயிற்சி பெற்ற 42 பேர் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 2009 -10ம் ஆண்டுக்கான நேர்முகத் தேர்வில் இங்கு பயிற்சி பெற்ற 83 பேர் பங்கு பெற்றனர். இதில் 32 மாணவர்களும், 11 மாணவியர் என 43 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் இந்திய அளவில் லலிதா 12வது இடமும், முதன் முறையாக தேர்வெழுதிய சண்முகப் பிரியா 36வது இடமும், சிவகுமார் 38வது இடமும், நிவாஸ் 45 வது இடமும், வினோத்பிரியா 62வது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சிவகுமார் ரயில்வேயிலும், நிவாஸ் டி.எஸ்.பி.,யாகவும், வினோத்பிரியா வங்கியிலும் பணிபுரிகின்றனர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த அமித் குல்வானி போலே என்பவரும், கேரளாவைச் சேர்ந்த சரண் ஜோஸ் என்பவரும் மனித நேய கல்வியகத்தில் பயின்று தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களை மனித நேய அறக்கட்டளைத் தலைவர் சைதை துரைசாமி, பயிற்சி இயக்குனர் வாவூசி, ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் ஆகியோர் பாராட்டினர். இதே போல் சென்னை கணேஷ் ஐ.ஏ.எஸ்., அகடமியில் பயிற்சி பெற்ற 52 பேர் நேர்முகத் தேர்விற்கு சென்று 31 பேர் அதில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் விருதுநகர் மாவட்டம் புதுக்கோட்டையை அடுத்த செவலூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவர் திருப்பூரில் சாதாரண நிலையில் பணி புரிந்து தன் சுய முயற்சியால் தற்போது ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
அரசு மையத்தில் 49 பேர் தேர்வு: சென்னை அண்ணாநகரில் இந்திய ஆட்சிப் பணிக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. அரசு சார்பாக நடத்தப்படும் இப்பயிற்சி மையத்தில் விண்ணப்பம் செய்த ஆயிரக்கணக்கான மாணவர்களில், தேர்வு எழுதி அதில் பெற்ற மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், 300 பேர் மட்டும் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்களில் 200 பேருக்கு, பயிற்சி மையத்திலேயே தங்கும் இடம் மற்றும் உணவு அரசின் சார்பில் இலவசமாக அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி மையத்திலிருந்து, இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வில் 49 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கனகவள்ளி(இந்திய அளவில் 15வது ரேங்க்) நிவாஸ்(45வது ரேங்க்) வினோத் பிரியா(62வது இடம்) விக்ரமன்(இந்திய அளவில் 84வது ரேங்க்) பெற்றனர்.
தேர்வான கனகவள்ளி கூறியதாவது: எனது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி. அப்பா முத்துக்குமார் ஓய்வு தலைமை ஆசிரியர். அம்மா விமலா குடும்பத்தலைவி. வேளாண்மை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். குரூப்-1 பிரிவில் தேர்வாகி, திருச்சியில் உதவி இயக்குனர் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றி வருகிறேன். சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மைத் துறையில் உதவியாளராகவும், வணிகவரித்துறையில் உதவி வணிகவரி அலுவலராக சென்னையில் பணி புரிந்தேன். கடந்த நான்கு ஆண்டுகளாக மூன்று முறை நேர்முகத் தேர்வு வரை சென்று திரும்பினேன். நான்காவது முறையாக பங்கேற்ற கடைசி வாய்ப்பில் வெற்றி பெற்றேன். எனக்கு வரும் 23ம் தேதி நாகர்கோவில் திருமணம் நடக்கிறது. எனது கணவர் தனேஷ், பொறியியல் பட்டதாரி. எனது வெற்றிக்கு காரணம், எனது அக்கா மற்றும் குடும்பத்தினர் தான். அண்ணாநகர் பயிற்சி மையத்தில் நேர்முகத்தேர்வுக்கான ஒத்திகையில் சீனியர் ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர். அது தான் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற உதவியாக இருந்தது. இவ்வாறு கனகவள்ளி கூறினார்.
நிவாஸ் கூறியதாவது: எனது சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவன் நகர். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளேன். மூன்று ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளேன். குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, சென்னை வண்டலூரில் டி.எஸ்.பி., யாக கடந்த ஆறு மாதமாக பயிற்சி பெற்று வருகிறேன். அப்பா ஜனார்த்தனன், அம்மா ஜெயலட்சுமி அரசு பணியில் ஓய்வு பெற்றவர்கள். மனைவி பபிதா தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவ்வாறு நிவாஸ் கூறினார்.

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: மனித நேய அகடமியில் 43 பேர் வெற்றி

>குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி

>

குடும்பத்தில் முதல் பட்டதாரியான மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும் போது, கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பது தொடர்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தொழிற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் போது, உறுதிமொழிப் படிவம் மற்றும் வருவாய்த் துறையில், ‘குடும்பத்தில் முதல் பட்டதாரி’ என சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அரசு மற்றும் தனியார் பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, கால்நடை, சட்டக் கல்லூரிகளில் கவுன்சிலிங் மூலம் சேரும் மாணவர்களுக்கு, அவர்களது குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகள் இல்லையெனில், தொழிற்கல்வி படிப்பை ஊக்குவிக்க சாதி பாகுபாடின்றி, வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வரும் கல்வியாண்டு முதல் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும்’ என, ஜனவரியில் சட்டசபை கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
உயர்கல்வித் துறை செயலர் கணேசன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: வரும் 2010-11ம் கல்வியாண்டு முதல், பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணச் செலவை அரசே ஏற்கும். கல்விக் கட்டணம், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையும், தனியார் கல்லூரிகளுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையும், பல்கலைக் கழக பாடப் பிரிவுகளுக்கு பல்கலைக் கழகம் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் குறிக்கும். கவுன்சிலிங் முறையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த, பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கே இத்திட்டம் பொருந்தும். முந்தைய ஆண்டுகளில் சேர்ந்து படித்து வரும் மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. குடும்ப நபர்கள் என்பது, தாய், தந்தை, அவர்களது பெற்றோர், மாணவர்களின் உடன்பிறப்புகளை குறிக்கும்.
தங்கள் குடும்பத்தில் பட்டதாரிகளே இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில், மாணவர்கள் வசிக்கும் பகுதியின் வருவாய்த் துறை தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தகுதிக்கு குறையாத அலுவலரிடம் சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும். மாணவர்கள் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது, விண்ணப்பத்துடன் குடும்பத்தில் முதல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் என்ற சான்றிதழையும், உறுதிமொழிப் பத்திரத்தையும் அளிக்க வேண்டும். சான்றிதழ்களை சரி பார்த்து, தவறான சான்றிதழ்கள் அளிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது, மாணவர் எந்த வகையான தொழிற்கல்வி பயில அனுமதிக்கப்பட்டாரோ அதை அனுமதித்த அலுவலர்/அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவரின் கல்விக் கட்டணத்தை கல்வி நிறுவனம் அரசிடமிருந்து பெற, அக்கல்வி நிறுவனம் எந்தத் துறையின் கீழ் வருகிறதோ அந்த துறையின் இயக்குனரகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
‘குடும்பத்தில் பட்டதாரி எவரும் இல்லை’ என்ற சான்றிதழுடன், மாணவரும், பெற்றோரும் கூட்டாக உறுதிமொழி அளிக்க வேண்டும். இந்த உறுதிமொழிச் சான்றிதழ் தவறு என தெரிய வந்தால், தவறான தகவல் அளித்ததற்காக மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர் களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள், மூன்று மடங்காக மாணவர் அல்லது பெற்றோரிடமிருந்து வசூலிக்கப் படும். உறுதிமொழி வரைவுப் படிவம், வருவாய்த் துறையிடம் பெற வேண்டிய சான்றிதழ் படிவம் ஆகியவை தொழிற்கல்விக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவத்துடன் அளிக்கப்படும். இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
40 சதவீதம் பேர் பயனடைவர்: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பொறியியல் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் பெறப்பட்ட விண்ணப் பங்களில், மாணவர்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரியா என்ற விவரமும் கேட்கப்பட்டது. அதன்படி, 40 சதவீத மாணவர்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் என தெரிய வந்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்களிடம் சேகரிக்கப்பட்ட தகவலிலும் 40 சதவீத மாணவர்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் என தெரிய வந்துள்ளது. இதர தொழிற்கல்வி படிப்புகளிலும் இதே நிலையே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, கால்நடை, சட்டம் ஆகிய தொழிற்கல்வி படிப்புகளில் சேருபவர்களில் 40 சதவீதம் பேர் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருப்பர் என்றும், தமிழக அரசின் இச்சலுகை மூலம் ஆண்டுதோறும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மாணவர்கள் பயனடைவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத்தில் முதல் பட்டதாரி என்ற விவரம் ஆவணங்களுடன் கேட்கப்படுவதால், இந்த எண்ணிக்கை சற்று குறையவும் வாய்ப்புள்ளது.

குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி

>நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பற்றாக்குறை: அதிகளவில் தேர்வு செய்ய மத்திய அரசு ஆலோசனை

>

அரசுப் பணிகளில் ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், விரைவில் 150 அதிகாரிகளை தேர்வு செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. கடந்த 1990ல் அமைக்கப்பட்ட கீதாகிருஷ்ணன் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்ந்தெடுப்பது படிப்படியாகக் குறைக்கப்பட்டது. 1980களில் ஆண்டுக்கு 150 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 1990களில் அது 55லிருந்து 60 ஆகக் குறைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து, இப்போது பல்வேறு அரசுப் பணிகளில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் சேவை தேவையிருப்பதால், மீண்டும் அவர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இதுகுறித்து அமைச்சரவைச் செயலர் சந்திரசேகர் கூறியதாவது: இந்த ஆண்டு 150 அதிகாரிகளை தேர்ந்தெடுக்கிறோம். மத்தியில் இயக்குனர் நிலையிலும், மாநிலங்களில் கலெக்டர், சூப்பரன்டென்டெண்ட், டி.ஐ.ஜி., ஆகிய நிலைகளிலும் அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுகிறது. மக்கள் தொகை, அரசு நலத்திட்டங்கள், மக்களின் குறைகள் அதிகரித்துள்ளதற்கு ஏற்ப அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. மேலும், அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட இருக்கின்றன. தற்போது முதன்மைத் தேர்வு, முக்கியத் தேர்வு,நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலைகளில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடக்கின்றன. இதற்கு அடிப்படைத் தகுதியாக பட்டப்படிப்பு வேண்டும்.
நிர்வாக சீர்திருத்த கமிஷன், தற்போது பிளஸ் 2 முடித்தவுடனேயே தேர்வை ஆரம்பித்து விடலாம் என்று ஆலோசனை கூறியிருக்கிறது. அதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இருந்தாலும் அதையும் ஆலோசிப்போம். அதிகாரிகளை மதிப்பிடுவதில் தற்போது பழைய முறைதான் இருக்கிறது. அதையும் மாற்றி புது மதீப்பீட்டு முறை கொண்டுவரப்படும். இவ்வாறு சந்திரசேகர் தெரிவித்தார். இந்த புதிய மாற்றங்கள் அடங் கிய ‘சிவில் சர்வீஸ் -2010’ மசோதா இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் தயாராகி விடும் என்று தகவல்கள் கூறுகின்றன.

>சேர்க்கை 2010 – 2011

>

எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர மே 17 முதல் விண்ணப்பம்

பொறியியல் சேர்க்கை 2010 – 2011

கால்நடை மருத்துவ சேர்க்கை 2010 – 2011

தொழில் நுட்பக் கல்வி இரண்டாம் ஆண்டு சேர்க்கை 2010 – 2011

வேளாண் பல்கலைக் கழகம் – சேர்க்கை 2010 – 2011
மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் 2010 -2011

சேர்க்கை 2010 – 2011

>மாணவர்களுக்கு ‘அட்வைஸ்’ – (2)

>

சிறந்த பல்கலையை தேர்வு செய்வது எப்படி : வெளிநாட்டு கல்வி ஆலோசகர் ஆலோசனை
‘கல்வி, திறமையை பொறுத்து தான் சிறந்த பல்கலைக் கழகங் களை தேர்வு செய்ய முடியும்’ என வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிறுவனர் டாக்டர் பால் செல்வகுமார் பேசினார். தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் ‘வெளி நாடுகளில் சென்று படிப் பது எப்படி?’ என்ற தலைப்பில் வெளிநாட்டுக் கல்வி ஆலோசனை நிறுவனம் நடத்தி வரும் டாக்டர் பால் செல்வகுமார் பேசியதாவது: வெளிநாட்டு உயர் கல்வி என்பது இந்தியாவில் சாதாரண காரியமல்ல. வெளி நாடுகளில் படிக்கும் சதவீதம் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபட்டுள்ளது. அரசியல் தலைவரான மன்மோகன்சிங் வெளி நாட்டில் படித்தவர்தான். அம்பானியும் வெளிநாட்டில் படித்தவர்தான்.
அமெரிக்காவில் 4,000 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்தியாவில் 400 பல்கலைக் கழகங்கள் மட்டுமே உள்ளன. தனிப்பட்ட மனிதன் கல்வி, திறமையை பொறுத்து தான் உலகத்தில் உள்ள சிறந்த பல்கலைக் கழகங்களில் தேர்வு செய்து படிக்க முடியும். என்ன படிப்பது என்பது முக்கியம் கிடையாது. எங்கு படிக்கிறோம் என்பது தான் முக்கியமான ஒன்று. அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், கனடா போன்ற பல்கலைக் கழகங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஒரு நாட்டிற்குச் செல்லும் போது, அந்நாட்டு மொழி முக்கியம். ஒரு கல்லூரியில் சேரும் போது, அந்த கல்லூரி கட்டமைப்பு வசதிகள் மிக முக்கியமானது. வெளி நாட்டில் உள்ள தனியார் பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்கள் வெளியில் வேலை பார்க்கக் கூடாது என்ற நிலை பல இடங்களில் உள்ளது.
கடந்த 2, 3 ஆண்டுகளில் பாஸ்டர் டிசைனிங் படிப்பிற்கு அதிகம் பேர் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். பிளஸ் 2 மாணவர்கள் விமானத் துறையையும் தேர்வு செய்து படிக்கலாம். இந்த துறை எதிர்காலத்தில் நல்ல நிலைமையை ஏற்படுத்திக் கொடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
கப்பல் துறையில் வேலை வாய்ப்புகள் ஏராளம்: கேப்டன் சுரேஷ் பேச்சு
‘கப்பல் அதிகாரியாக பணியாற்றினால் 8 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்’ என, மதுரை ஆர்.எல்.இன்ஸ்டியூட் ஆப் நாட்டிகல் சயின்ஸ் பேராசிரியர் கேப்டன் சுரேஷ் பேசினார். புதிய தலைமுறை, தினமலர் நாளிதழ், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் இணைந்து நடத் தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, புதுச்சேரி சுப லட்சுமி மகாலில் துவங்கி நடந்து வருகிறது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியான நேற்று கடல்சார் படிப்புகளைப் படித்தவர்களுக்கு காத்திருக்கும் வேலை வாய்ப்புகள் குறித்து மதுரை ஆர்.எல். இன்ஸ்டியூட் ஆப் நாட்டிகல் சயின்ஸ் பேராசிரியர் கேப்டன் சுரேஷ் பேசியதாவது: கப்பல் துறை தற்போது வளர்ந்து வருகிறது. கடல் வாணிபத்தை யாராலும் அழிக்க முடியாது. கப்பல் மூலம் ஏராளமான பொருட்களை கடல் வழியாக எடுத்துச் செல்கிறோம். கடந்த நூறு ஆண்டிற்கு முன்பு சொல்லும் அளவிற்கு கப்பல்கள் கிடையாது. தற்போது 50 ஆயிரம் கப்பல்கள் உலகம் முழுவதும் செல்கின்றன. கப்பலில் பணியாற்ற பயிற்சி தேவை.
தற்போது பிளஸ் 2 முடித் துள்ள மாணவர்கள் சிந் தித்து, படிப்பை தேர்வு செய்ய வேண்டும். கப் பல் துறையை நம்பிக்கையாக தேர்வு செய்யலாம். கப்பல் பணி என்பது சிறப்பான பணி. கப்பலில் அதிகாரியாகவும், பொறியாளராகவும், மாலுமியாகவும் செல்லலாம். குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும். மார்க்கெட்டிங் நிலவரப்படி கப்பல் அதிகாரிகள் அதிகபட்சமாக 7 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். கப்பல் துறையில் வரும் 5 ஆண்டுகளுக்குள் 2 லட்சம் கப்பல் பணியாளர்கள் தேவைப் படுவர். இந்த பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிக அளவில் கப்பல் படிப்புக்கான இன்ஸ்டிடியூட்கள் உள்ளன. புதுச்சேரியிலும் இன்ஸ்டிடியூட் உள்ளது. சென்னையில் அதிக அளவில் இந்த இன்ஸ்டியூட்கள் உள்ளன. எஸ்.எஸ்.எல்.சி., படித்தவர்களும் கப்பலில் மாலுமி வேலைக்கு செல்லலாம். தற்போது கப்பலில் பெண் அதிகாரிகள் அதிக அளவில் பணியாற்றும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கப்பலில் உலகத்தைச் சுற்றி பார்ப்பதோடு, நாட்டுக்கு உழைக்கும் ஒரு வாய்ப்பு கிடைத் துள்ளது. கப்பலில் சுற்றுச்சூழல் மாசுபாடு இருக்காது. அனைத்து விதமான பாதுகாப்பும் கிடைக்கிறது. இதை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் கூடுதல் வேலை வாய்ப்புகள் : கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி தகவல்
‘தகவல் தொழில்நுட்பத் துறையில் கூடுதல் வேலை வாய்ப்புகள் உள்ளன’ என, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறினார். புதுச்சேரி முத்தியால் பேட்டை சுபலட்சுமி மகாலில் தினமலர் நாளிதழ், புதிய தலைமுறை மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் வழிகாட்டி நிகழ்ச்சியில், எந்த படிப்பை தேர்வு செய்யலாம், எதற்கு நல்ல வேலை வாய்ப்பு என்பது குறித்து கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியதாவது: ஐ.டி., துறையில் வேலை வாய்ப்பு கிடைக்காது என்று பலர் தவறான ஆலோசனைகளை தெரிவித்து வருகின்றனர். ஐ.டி., துறை சரிவு என்று சொல் வது பெரிய முட்டாள்தனமானது. 97 சதவீத வேலை வாய்ப்பை ஐ.டி., துறைதான் நிரப்பி வருகிறது. தற்போதுள்ள காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் தொடர் பான படிப்பிற்கு கூடுதல் வேலை வாய்ப்பு உள்ளது. ஐ.டி., படித்த 90 சதவீதம் பேருக்கு அமெரிக்கா வேலை வாய்ப்பு அளிக்கிறது. எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் படிப் பிற்கு குறைவான வாய்ப்புதான் உள்ளது. மாணவர்கள் வேலை வாய்ப்பு பற்றி தெரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு கோர்சை தேர்வு செய்ய வேண்டும்.
தகவல் தொழில்நுட்பத்தில் பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பிற்கு வேலை வாய்ப்பு உடனடியாக கிடைக்கும். கடந்த ஆண்டு மட்டும் 1,000 பேருக்கு மேல் ஐ.டி., துறையில் வேலை கிடைத்துள்ளது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களில் 100ல் 20 பேருக்கு மட்டுதான் வேலை கிடைக்கிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கல்லூரியில் சேர்ப்பதற்கு முன் சம்பந்தப் பட்ட கல்லூரிக்கு நேரில் சென்று, அங்கு ஏற்கனவே படிக்கும் மாணவர்களிடம் கலந்தாலோசித்த பிறகு சேர்க்க வேண்டும். பெற்றோர்கள், பிள்ளைககள் மொபைல்போன் வைத்திருப்பதை தடை செய்ய வேண்டாம். அவர்களுக்கு பிரி பெய்டு இல்லாமல் போஸ்ட் பெய்டு திட்டத்தில் மொபைல் போன் வாங்கிக் கொடுங்கள்.
தமிழகத்திலுள்ள 171 பொறியியல் கல்லூரிகள் மூலம் ஆண் டிற்கு 7,500 பேர் வெளியே வருகின்றனர். இதில் 1,500 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. இதில் 1,000 பேர் ஐ.டி., துறையில் சேர்கின்றனர். வரும் 2014ம் ஆண்டு மட்டும் 28 ஆயிரத்து 800 பேர் படித்துவிட்டு வெளியேறுகின்றனர். இதில் 3,000 பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கும். மீதமுள்ள 26 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக் காத நிலை ஏற்படும். இவர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்க 1,500 தொழிற்சாலைகளை நிறுவ வேண்டும்.
மாணவர்கள் தங்கள் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பி.இ., (கம்ப்யூட்டர் சயின்ஸ்) முதலாவது விருப்பமாக எடுத்துக் கொள்ள வேண் டும். தொடர்ந்து இ.இ.இ., சிவில் இன்ஜினியரிங் (எர்த், கட்டடப் பிரிவு, கடல்சார் பிரிவு), மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட் ரானிக் கம்யூனிகேஷன் என வரிசையாக முன்னுரிமை கொடுக்க வேண்டும். பி.இ., கம்ப்யூட்டர் சயின்சில் டேட்டா ஸ்டோரேஜ் பிரிவிற்கு கூடுதல் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
கடந்த ஆண்டு கவுன்சிலிங்கிற்கு பிறகு 50 ஆயிரம் சீட் காலியாக இருந்தன. இந்த ஆண்டு 70 ஆயிரமாக உயர வாய்ப்பு உள்ளது. கவுன்சிலிங் செல்லும் மாணவர்கள் தனியாக செல்ல வேண்டும், பெற்றோர் களை அழைத்துச் சென்றால் அவர்கள் கருத்தை உங்கள் மீது திணித்து விடுவார்கள்.
பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் ஒரு ஆண்டு மட்டும் நன்றாக படித்தால் 50 ஆண்டுகள் நன்றாக வாழலாம். அந்த ஒரு ஆண்டு படிக்கவில்லையென் றால் 50 ஆண்டுகள் கஷ்டப்பட வேண்டும். பிளஸ் 2 ரிசல்ட் வந்த பிறகு தினமலர் சார்பில் விழுப்புரத்தில் உன்னால் முடியும் நிகழ்ச்சி நடத்தப் போகிறோம். கல்வி தொடர்பான அனைத்து விளக் கங்களையும் தினமலரின் கல்வி மலர் டாட் காம் மூலம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு ஜெயப்பிரகாஷ் காந்தி பேசினார்
மாணவர்கள் விரும்பும் படிப்பை தேர்வு செய்ய பெற்றோர் உதவ வேண்டும் : பேராசிரியர் கண்ணன் அட்வைஸ்
‘நடைமுறைக்கு ஒத்துவராத படிப்பை படிக்கச் சொல்லி வற்புறுத்தக் கூடாது’ என, பேராசிரியர் கண்ணன் கூறினார். மாணவர்களின் திறமைகளை வளர்த் துக் கொள்ளும் தன்னம் பிக்கை குறித்து மதுரை பேராசிரியர் கண்ணன் பேசியதாவது: பெற்றோர்கள், மாணவர்களின் விருப்பப்படி படிப்பை தேர்வு செய்ய உதவ வேண்டும். நம்முடைய காலத்தில் ‘டிவி’ இல்லை, 20:20 கிரிக்கெட் மேட்ச் இல்லை. இந்த சூழ்நிலையிலும் மாணவர் கள் அதிகம் மார்க் வாங்குகின்றனர். மாணவர்களின் விருப்பத்திற்கு மாறான கோர்சில் சேர்த்துவிட்டால் அவர் கள் கஷ்டப்பட்டு, மனச்சிதறல் ஏற் பட வாய்ப்புண்டு.
மாணவரும், பெற்றோரும் கலந்து பேசி, படிப்பு பற்றி முடிவு செய்ய வேண்டும். மாணவரின் ஒத்துழைப்பின்றி அவர்கள் மீது படிப்பை திணிக்கக் கூடாது. நடைமுறைக்கு ஒத்துவராத படிப்பை படிக்கச் சொல்லி வற்புறுத்தக் கூடாது. பெற்றோர்கள், மாணவர்களிடம் கடிந்து கொள் ளாமல் விட்டுக் கொடுத்து வழி விடுங்கள். மாணவர்களும் பெற் றோர்களின் கஷ்டத்தையும், சிரமத்தையும் உணர்ந்து படிக்க வேண்டும். காலம் கடந்து யோசிக்கக் கூடாது.
பெற்றோர்கள் தற்போதுள்ள நேரத்தில் மாணவர்களின் பாஸ் போர்ட் அளவு புகைப்படம், சாதி சான்றிதழ், டி.சி., பாஸ் போர்ட் ஆகியவற்றை முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தினமலர் நடத்தும் வழிகாட்டி நிகழ்ச்சியை மாணவர்கள் நன்கு உபயோகிப்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும். இவ்வாறு பேராசிரியர் கண்ணன் பேசினார்.
மீடியா துறையில் வேலை வாய்ப்பு அதிகரித்து வருகிறது : எஸ்.ஆர்.எம். பல்கலை பேராசிரியர் பேச்சு
மீடியா துறையில் வேலை வாய்ப் புகள் அதிகரித்து வருகிறது என எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பேரா சிரியர் பார்த்தசாரதி பேசினார். மீடியா துறையில் பெருகி வரும் வேலை வாய்ப்புகள் குறித்து எஸ். ஆர்.எம். பல்கலைக்கழக பேராசிரியர் பார்த்தசாரதி பேசியதாவது: மீடியா என்பது சினிமா மட்டும் என்று தான் நாம் நினைக்கிறோம். அவ்வாறு நினைக்கக் கூடாது. மீடியா துறையில் வேலை வாய்ப் புகள் அதிகரித்து வருகிறது. இந்த துறையை தேர்வு செய்து படித்தால், பல் வேறு விதமான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மக்களுக்கு செய்திகளை சென்று சேர்ப்பதே மீடியா துறை தான். பல நாட்டு செய்திகளையும் மீடியா தான் பரப்பி வருகிறது. ஒரு நாடு வளர வேண்டுமானால், மீடியா வளர வேண்டும். அப் போது தான் நாடு வளரும்.
மீடியாவில் என்ன படிக்கலாம் என, தேர்வு செய்து படிக்க வேண்டும். 2013ல் 14.5 சதவீதம் வரை வேலை வாய்ப் புகள் அதிகரிக்கும். வியாபார நிறுவனங்கள் அதிகரித்து வரும் வேளையில், மீடியாக்களில் விளம்பரங்களும் அதிகரிக்கின் றன. இவ்வாறு அதிகரிக் கும் போது வேலை வாய்ப்புகளும் அதிகம் உருவாகும் சூழ்நிலை உள்ளது.
வெளி நாடுகளில் ஏராளமான சேட்டலைட் சேனல்கள் உள்ளன. இந்தியாவில் 100 சேட்டலைட் சேனல்கள் வர உள்ளன. மீடியாவில் டெலிவிஷன் பிரிவில் டைரக் டர், தயாரிப்பாளர் வரலாம். போட் டோகிராபர் பிரிவில் விளம்பர போட்டோகிராபர், விலங் குகளை படம் பிடிக்கும் போட்டோகிராபர், பேஷன் போட்டோகிராபர் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள் ளன. அச்சு ஊடகத்தில் இதழியல், போட்டோகிராபர், லே அவுட் ஆர்டிஸ்ட் போன்ற பிரிவுகள் உள் ளன. இந்த மீடியா துறையை தேர்வு செய்து படித்தால் ஏராளமான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

மாணவர்களுக்கு ‘அட்வைஸ்’ – (2)

>மாணவர்களுக்கு ‘அட்வைஸ்’ – (1)

>

பயோ டெக்னாலஜி தேர்ந்தெடுத்தால் படிக்கும் போதே சம்பாதிக்கலாம்: பரணி
 ”கடுமையான உழைப்பும், நம்மால் எது முடியும், எந்த துறையில் ஆர்வமுள்ளது என்று தேர்ந்தெடுத்து படித்தால், அது வாழ்வின் வெற்றிக்கு உறுதுணையாக அமையும்,” என எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக, ‘பயோ டெக்னாலஜி’ துறையின் தலைவர் பரணி பேசினார்.
சென்னையில்  நடந்த, ‘வழிகாட்டி’ நிகழ்ச்சியில், பயோ டெக்னாலஜி துறையில் பயில்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறித்து பரணி பேசியதாவது: பயோ டெக்னாலஜி படித்தால், குளிர் பிரதேசங்களில் வாழும் பிராணிகளின் செயல்பாடு, தாவரங்களின் ஜீவன வளர்ச்சி, மக்கும் பொருட்களிலிருந்து பெட்ரோல் தயாரிப்பது, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, உணவுப் பொருட்கள் ஆராய்ச்சி, உயிரினங்களின் பரிணாமம் குறித்த ஆராய்ச்சி, மரபணு மாற்றங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் பாடங்களை படிக்க முடியும்.
இன்று பயோ டெக்னாலஜி துறை முன்னேறியுள்ளது. நாம் கொடுத்து வைத்தவர்கள். ஒருவருடைய தலைமுடியை வைத்து அவர் யார், எப்படிப்பட்டவர், நடை, உடை, பாவனை என அனைத்தையும் பயோ டெக்னாலஜி படித்து தெரிந்து கொள்ள முடியும். பயோ டெக்னாலஜியை பயன்படுத்தி உயிர் காக்கும் மருந்துகளை தயாரிக்க முடியும்.
‘ஸ்டெம் செல் தெரபி’ முறையை பயன்படுத்தி, புதிய உறுப்புகளை உருவாக்க முடியும். ‘ஜீன் தெரபி’யை பயன்படுத்தி, நோய் தாக்காமல் இருக்குமாறு செய்யலாம். பயோ டெக்னாலஜி முடித்தவர்கள், படித்துக் கொண்டே சம்பாதிக்கும் வகையில் நிறைய படிப்பு பிரிவுகள் உள்ளன.
இந்தப் படிப்பை முடித்தவர்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் பயோ முதலீடு உள்ள நிறுவனங்கள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், உணவுப் பொருட்கள் ஆராய்ச்சி உள்ளிட்ட இடங்களில் பணியாற்றலாம். கல்வி நிறுவனங்களில் பேராசிரியராக எம்.டெக்., முடித்திருக்க வேண்டும். இவ்வாறு பரணி பேசினார்.
”பிளஸ் 2விற்கு பிறகு எந்தப் படிப்பை தேர்ந்தெடுப்பது
”பிளஸ் 2விற்கு பிறகு எந்தப் படிப்பை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து, மாணவர்களும் பெற்றோரும் உட்கார்ந்து பேசி முடிவு செய்ய வேண்டும்,” என ரமேஷ் பிரபா தெரிவித்தார்.
‘தினமலர்’ நாளிதழ், புதிய தலைமுறை மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகம் இணைந்து வழங்கும், ‘வழிகாட்டி’ நிகழ்ச்சியில், ’60 சதவீதம் முதல் 80 சதவீதம் மதிப்பெண் பெறுபவர்களுக்கு வழிகாட்டுதலை’ வழங்கி ரமேஷ் பிரபா பேசியதாவது: தற்போது உங்களுக்கு முன் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை முன்கூட்டியே அறிய வாய்ப்புள்ளது. முன்பு இந்த வாய்ப்புகள் இல்லை. இளைய தலைமுறையினரை தூக்கி நிறுத்தினால் தான், இந்தியா முன்னேற்றமடையும் என்ற எண்ணத்தில், ‘தினமலர்’ நாளிதழ், தேர்வுக்கு முன் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியையும், தேர்வுக்குப் பின், ‘வழிகாட்டி’ நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறது.
பிளஸ் 2விற்கு பிறகு எந்தப் படிப்பை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து, மாணவர்களும் பெற்றோரும் உட்கார்ந்து பேசி முடிவு செய்ய வேண்டும். பெற்றோர் தங்களது விருப்பத்தை பிள்ளைகளிடம் திணிக்கக்கூடாது. நண்பர்கள் ஒரு பாடப்பிரிவை எடுக்கின்றனர் என்பதற்காக, நாமும் குறிப்பிட்ட பாடப்பிரிவை எடுக்கக்கூடாது. உயர்கல்வியில் உள்ள எல்லா வாய்ப்புகள் பற்றியும் தெரிந்து கொண்டு, பிடித்த பாடத்தை தேர்வு செய்ய வேண்டும். படிப்பு தவிர, இதர திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஓவியம், இசைத் துறைகளிலும் வாய்ப்புகள் உள்ளன. மருத்துவத்தில் இந்திய மருத்துவம், சித்த மருத்துவம், பல் மருத்துவம், பார்மசி, பிசியோதெரபி, கண் மருத்துவம் என பல பிரிவுகள் உள்ளன. நர்ஸ் படிப்பு பெண்களுக்கு மட்டுமானது அல்ல; ஆண்களும் இப்படிப்பில் சேரலாம். கவனச் சிதறல்கள் வரும்போது, குடும்பத்தை நினைத்துக் கொண்டால், திசை திரும்ப மாட்டோம். தனியாக இருப்பதை தவிர்த்து, நல்ல நண்பர்களுடன் பழக வேண்டும். இவ்வாறு ரமேஷ் பிரபா பேசினார்.
ஐ.டி.,யை விட சிவில் சர்வீஸ் பணியில் அதிக சம்பளம்: மாணவர்களுக்கு கூடுதல் கமிஷனர் ரவி ‘அட்வைஸ்’
”சிவில் சர்வீஸ் தேர்வெழுதி, அப்பணியில் சேர்ந்தால் ஐ.டி., துறையை விட அதிக சம்பளம் பெற முடிவதுடன், பொதுமக்களுக்கும் சேவை செய்ய முடியும்,” என சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் ரவி தெரிவித்தார்.
‘தினமலர்’ நாளிதழ், புதிய தலைமுறை மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகம் இணைந்து வழங்கும், ‘வழிகாட்டி’ நிகழ்ச்சியில், ‘எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., பணிகள்’ குறித்து சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் ரவி, மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அவர் பேசியதாவது: சிவில் சர்வீஸ் தேர்வெழுத ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருந்தால் போதும். தொலைதூரக் கல்வி மூலமாகக் கூட பட்டம் பெற்றிருக்கலாம். இத்தேர்வு மூலம் ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., என பல துறைகளுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். எம்.எஸ்சி., அக்ரி முடித்த நான், ஐந்தாண்டுகள் சிண்டிகேட் வங்கியில் பணிபுரிந்தேன். டில்லியில் பணிபுரிந்த போது, இத்தேர்வு குறித்து தெரிய வந்ததால், பணிபுரிந்து கொண்டே இத்தேர்வுக்காக படித்தேன். அப்போது, இத்தேர்வு குறித்து வழிகாட்ட யாரும் இல்லை. இத்தகைய, ‘வழிகாட்டி’ நிகழ்ச்சிகள் இருந்திருந்தால், படித்து முடித்ததுமே சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியிருப்பேன்.
கடந்த 1992ம் ஆண்டு தேர்வு எழுதி, 12 ஆண்டுகளாக போலீசில் பணிபுரிந்து வருகிறேன். கடின உழைப்பு, விடா முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவை, வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான உத்திகள். சிவில் சர்வீஸ் தேர்வை எழுதிப் பார்த்தால் தான், அது எவ்வளவு எளிமையான தேர்வு என்பது தெரியும். எல்லா துறையினரும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுத வேண்டும். டாக்டர், இன்ஜினியர், சி.ஏ., முடித்தவர்களும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுகின்றனர். தொழில்நுட்ப அறிவு படைத்தவர்கள், சிவில் சர்வீஸ் பணிக்கு தேவைப்படுகின்றனர். சைபர் கிரைம் குற்றங்களை கண்டுபிடிக்க, தொழில் நுட்ப வல்லுனர்கள் தேவை.
கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக ஐ.டி., துறையை விட, ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., ஆகிய சிவில் சர்வீஸ் பணிகளில் சம்பளம் அதிகம். மேலும், இத்துறையில் பொதுமக்களுக்கு சேவை செய்ய வாய்ப்புகள் அதிகம். மனிதனாக பிறந்தால், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; மற்றவர்களுக்கு உதவ வேண்டும். இந்த இரண்டும் சிவில் சர்வீஸ் பணியில் முடியும். சினிமா, ‘டிவி’யில் காட்டப்படுவதை வைத்து, போலீசாரை தவறாக நினைக்கின்றனர்; அது தவறு. போலீசார் எவ்வளவு சிரமப்படுகின்றனர்; சமுதாயத்திற்காக பாடுபடுகின்றனர் என்பது தெரிவதில்லை. எந்த விஷயத்திலும் யோசனை செய்து செயல்பட்டால், வாழ்க்கையில் வெற்றி பெறலாம். நம் நாட்டிலேயே சிறந்தது, சிவில் சர்வீஸ் துறை தான். இத்தேர்வில் தேர்ச்சி பெறும் அதிகாரிகள் தான் நாட்டையே நடத்துகின்றனர். மாணவர்கள் இத்தேர்வு எழுத, தினமலர் ‘வழிகாட்டி’ நிகழ்ச்சி விழிப்புணர்வு தரும். சிவில் சர்வீஸ் தேர்வை தமிழிலும் எழுதலாம். வாழ்க்கையில் வெற்றி பெறுவது உங்கள் கையில் தான் உள்ளது. இவ்வாறு ரவி பேசினார்.
மாணவிக்கு பாராட்டு: ‘வழிகாட்டி’ நிகழ்ச்சியில், மாணவர்களிடையே பேசிய சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் ரவி, ”கறிக்கடைக்கு செல்லும் ஒருவன், கடைக்காரருக்கு தெரியாமல் 50 ரூபாய் பணத்தை எடுத்து விடுகிறான். கடைக்காரரிடம் ஒரு கிலோ கறி எவ்வளவு எனக் கேட்ட போது, கடைக்காரர் 32 ரூபாய் என்கிறார். உடனே ஒரு கிலோ கறி வாங்கி, 50 ரூபாய் கொடுக்கிறான். கடைக்காரர் ஒரு கிலோ கறியையும், மீதிப் பணம் 18 ரூபாயையும் திருப்பிக் கொடுக்கிறார். சிறிது தூரம் சென்ற நபர், பணத்தை திருடியது தவறு என நினைக்கிறான். பணத்தை திருப்பித் தர கடைக்கு வந்தான் அவன்,” என்று கூறிய ரவி, ‘எவ்வளவு பணத்தை அவன் திருப்பித் தர வேண்டும்’ என்று மாணவர்களை பார்த்து கேட்டார். அப்போது பல மாணவர்கள், 100, 82, 68 என பல பதில்களை தெரிவித்தனர். ஜானகிபிரியா என்ற மாணவி, 50 ரூபாய் என்றார். சரியான பதிலைக் கூறிய அம்மாணவிக்கு, போலீஸ் கூடுதல் கமிஷனர் ரவி பணப்பரிசு வழங்கி, ‘சிவில் சர்வீஸ் தேர்வில், நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்’ எனப் பாராட்டினார்.
வங்கி, காப்பீட்டுத் துறையில் 2 லட்சம் வேலைவாய்ப்பு: ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் முதல்வர் தகவல்
வல்லரசாக வேண்டும் என்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவை மெய்பிக்க, அனைத்து துறைகளிலும் இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்,” என ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் முதல்வர் சீனிவாசன் கூறினார்.
சென்னையில் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் சீனிவாசன் பேசியதாவது: மாணவர்கள் எந்த படிப்பை தேர்ந்தெடுப்பது என்பதில் தெளிவில்லாமல் இருக்கின்றனர். மாணவர்கள் வேலைவாய்ப்பை எளிதாகப் பெறும் படிப்புகளில் கவனம் செலுத்துவது அவசியம். பன்னாட்டு வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் நம் நாட்டில் கிளைகளை திறந்து வருகின்றன. வரும் 2011-12ம் வருடத்தில் மட்டும், வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன. பிளஸ் 2 படிப்பில் பொருளாதாரம், கணக்கு பதிவியல் துறை பிரிவுகளைப் படித்தவர்கள், பி.காம்., படிப்பில், ‘வங்கி மற்றும் காப்பீட்டு’ பிரிவைத் தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
இந்தத் துறைகளில் மேலும் சிறப்பாகச் செயலாற்ற, ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறன் மற்றும் மற்றவர்களிடம் சமமாக பேசும் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்தத் துறையானாலும் தொழில் நுட்ப அறிவு பெற்றிருந்தால், எளிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும். இன்றைய ‘இன்டர்நெட்’ யுகத்தில் கம்ப்யூட்டர் படிப்பை பயிற்றுவிக்கும் ஆசிரியரை விட, கற்கும் மாணவர்கள் சிறப்பாகச் செயல்படுகின்றனர். இவ்வாறு சீனிவாசன் பேசினார்.

மாணவர்களுக்கு ‘அட்வைஸ்’ – (1)

>எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர மே 17 முதல் விண்ணப்பம்

>

எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர மே 17 முதல் விண்ணப்பம்

எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர மே 17 முதல் விண்ணப்பம்

எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர மே 17 முதல் விண்ணப்பம்

>50 புதிய பொறியியல் கல்லூரிகள்: 12 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கும்

>

புதிதாக பொறியியல் கல்லூரிகள்

”தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக பொறியியல் கல்லூரிகள் துவங்க 50 பேர் விண்ணப்பித்துள்ளனர். இக்கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்தால், 12 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கக்கூடும்,” என, ஏ.ஐ.சி.டி.இ., தென்மண்டல தலைவர் மன்னர் ஜவகர் தெரிவித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தரும், அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) தென்மண்டல தலைவருமான மன்னர் ஜவகர் கூறியதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புதிதாக பொறியியல் கல்லூரிகள் மற்றும் எம்.பி.ஏ., படிப்பு துவங்க, 94 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 90 பேர் தமிழகத்திலும், நான்கு பேர் புதுச்சேரியிலும் கல்லூரியை துவங்க விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் புதிதாக பொறியியல் கல்லூரிகள் துவங்க, 50 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் எம்.பி.ஏ., படிப்பிற்கு 25 பேரும், ஒருங்கிணைந்த வளாகத்திற்கு 13 பேரும், ஆர்கிடெக்சர் படிப்பு மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்பிற்கு தலா ஒருவரும் விண்ணப்பித்துள்ளனர். புதுச்சேரியில் மூன்று பேர் பொறியியல் கல்லூரி துவங்கவும், ஒருவர் எம்.பி.ஏ., கல்லூரி துவங்கவும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி, ஏப்ரல் 5ம் தேதி முதல் நடக்கவுள்ளது. அதன்பிறகு, மூன்று பேர் கொண்ட குழு, இக்கல்லூரிகளுக்கு நேரில் சென்று வசதிகளை ஆய்வு செய்யும். அப்பணி ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 15ம் தேதி வரை நடைபெறும். அதன்பிறகு தகுதியுள்ள கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் வழங்கப்படும். தமிழகத்தில் தற்போது 440 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. புதிதாக பொறியியல் கல்லூரிகள் துவங்க விண்ணப்பித்துள்ள 50 பேருக்கும் அனுமதி கிடைத்தால், 12 ஆயிரம் இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.
இதுமட்டுமின்றி, பழைய கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் மற்றும் புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்படுவதால் மொத்த இடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். ஏற்கனவே உள்ள கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. இனிமேல் ஒரு கல்லூரிக்கு அதிகபட்சமாக 540 இடங்கள் வரை மட்டுமே மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கப்படும். இதற்கு கல்லூரிகளில் வழங்கப்படும் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் என்.பி.ஏ., தரச்சான்று பெற்றிருக்க வேண்டும். என்.பி.ஏ., தரச்சான்று பெறாவிட்டால், அதிகபட்சமாக 420 இடங்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்படும். இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார்.

50 புதிய பொறியியல் கல்லூரிகள்: 12 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கும்