Monthly Archives: April, 2013

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே.9 ம் தேதியும்,பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே.31ம் தேதியும் வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே.9 ம் தேதி அன்றும்,பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே.31ம் தேதி அன்றும் வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே.9 ம் தேதி அன்றும்,பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே.31ம் தேதி அன்றும் வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் புதிதாக 10 மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்றும், 20 மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி விரிவுபடுத்தப்படும் என்றும் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சி சார்பில் புதிதாக 10 மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்றும், 20 மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி விரிவுபடுத்தப்படும் என்றும் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் சாதாரண மன்ற கூட்டம் மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில்  நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய மன்றக் கூட்டத்திற்கு மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்கினார். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் கேள்வி நேரம் தொடங்கியது.கேள்வி நேரத்தின்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:–
பி.சாந்தி(அ.தி.மு.க): சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுமா?
சைதை துரைசாமி: தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு வகுப்புகள் மாலை நேரங்களில், அதாவது பள்ளி முடிந்த பிறகு பயிற்றுவிக்க பரிசீலனை செய்யப்படும்.
இவ்வாறு விவாதம் தொடர்ந்து நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து மேயர் சைதை துரைசாமி மன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவோடு 133 தீர்மானங்களை நிறைவேற்றினார். அவற்றில் முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு:–
* சென்னையில் 30 மழலையர் பள்ளிகள் நல்லமுறையில் இயங்கி வருகின்றது. 2013–14–ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்படி வரும் கல்வியாண்டில் திருவொற்றியூர், அரும்பாக்கம், திரு.வி.க.நகர், எம்.ஜி.ஆர்.நகர், திருவல்லிக்கேணி உள்பட 10 இடங்களில் புதிதாக மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும்.
* 2013–2014–ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்படி, வரும் கல்வியாண்டில் கொளத்தூர், கோபாலபுரம், இந்திரா நகர், வியாசர்பாடி, சின்னாண்டி மடம், அமைந்தகரை உள்பட 20 மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி விரிவுபடுத்தப்படும்.
மேற்கொண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

யு.ஜி.சி. ‘நெட்’ தேர்வைப் போன்று மாநில அளவிலான ‘ஸ்லெட்’ தகுதித்தேர்வையும் இனி ஆண்டுக்கு இரண்டு தடவை நடத்த தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது.அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1,063 உதவி பேராசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியிடப்பட இருக்கிறது.

யு.ஜி.சி. ‘நெட்’ தேர்வைப் போன்று மாநில அளவிலான ‘ஸ்லெட்’ தகுதித்தேர்வையும் இனி ஆண்டுக்கு இரண்டு தடவை நடத்த தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது. யு.ஜி.சி. என்று அழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் புதிய விதிமுறையின்படி, கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால். ‘நெட்’ அல்லது ’ஸ்லெட்’ தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பி.எச்டி. பட்டதாரிகளுக்கு மட்டும் இதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. அகில இந்திய அளவிலான ‘நெட்’ தகுதித்தேர்வினை யு.ஜி.சி. நடத்துகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் இந்தியாவில் உள்ள எந்த பல்கலைக்கழகத்திலும், எந்த கல்லூரியிலும் உதவி பேராசிரியர் பணியில் சேரலாம். ‘ஸ்லெட்’ தகுதித்தேர்வில் வெற்றிபெற்றால் அந்த மாநிலத்தில் மட்டும்தான் பணியாற்ற முடியும். ஸ்லெட் தேர்வை நடத்த மாநிலத்தில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கப்படும். தமிழ்நாட்டில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்லெட் தேர்வை நடத்தியது. அதன் முடிவுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. யு.ஜி.சி.யின் நெட் தேர்வு ஆண்டுக்கு 2 தடவை (ஜூன் மற்றும் டிசம்பர்) நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு திட்டமிட்டபடி தேர்வு தொடங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன் வெளியிடப்படும். நெட் தேர்வு ஆண்டுதோறும் கண்டிப்பாக நடத்தப்படுவதால், அதற்கு தயாராவோர் நன்கு திட்டமிட்டு படிக்க முடியும். ஆனால், ஸ்லெட் தேர்வு அப்படி அல்ல. 2 ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ, இஷ்டம்போல் நடத்தப்பட்டு வந்தது. இதனால், ஸ்லெட் தேர்வு எப்போது நடத்தப்படும்? என்று மாணவ–மாணவிகளால் யூகிக்கக்கூட முடியவில்லை. இந்த நிலையில், இப்பிரச்சினை குறித்து, அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில், யு.ஜி.சி. நெட் தேர்வைப் போன்று ஸ்லெட் தேர்வையும் இனிமேல் ஆண்டுக்கு 2 தடவை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதாக உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1,063 உதவி பேராசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியிடப்பட இருக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நெட் அல்லது ‘ஸ்லெட்’ தேர்ச்சி அவசியம். பி.எச்டி. பட்டம் பெற்றவர்களாக இருந்தால் ஸ்லெட், நெட் தேர்ச்சி தேவையில்லை

தமிழகத்தில் 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,823 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மருத்துவ படிப்பிற்கான விண்ணப்ப படிவம் மே 9 முதல் விநியோகிக்கப்பட உள்ளன. விண்ணப்பத்தைப் பெற கடைசி தேதி மே 18. பூர்த்தி செய்யப்பட்ட் விண்ணப்பங்களை மே 20-க்குள் அனுப்ப வேண்டும்.

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப படிவம் மே மாதம் 9–ந் தேதி முதல் வழங்கப்படுகிறது.

பிளஸ்–2 முடித்த மாணவர்கள் தேர்வு முடிவை எதிர்பார்த்தபடி உள்ளனர். பிளஸ்–2 தேர்வு முடிவு மே மாதம் 6–ந் தேதியில் இருந்து 10–ந் தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத்துறை மும்முரமாக உள்ளன. தமிழ்நாட்டில் அரசு பொது மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி உள்ளிட்ட 18 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன.இந்த கல்லூரிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 145 மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியும். இந்த இடத்தில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய அளவில் நடைபெறும் பொதுத்தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு ஒதுக்கப்படும். எனவே மீதம் உள்ள 1,823 இடங்கள் மட்டும் தமிழகத்திற்கு கிடைக்கும்.இந்த இடங்களை நிரப்பவும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பவும் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்ப படிவம், பிராஸ்பெக்டஸ் அச்சடிக்கப்பட்டுள்ளன.
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப படிவம் மே மாதம் 9–ந் தேதி முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்ப படிவம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளில் கிடைக்கும். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 20–ந் தேதி.கவுன்சிலிங் ஜூன் மாதம் 21–க்கு முன்னதாக நடத்தி முடிக்கப்படும்.இப்போது திருவண்ணாமலையில் இந்த கல்வி ஆண்டு முதல் புதிய மருத்துவ கல்லூரி செயல்படத்தொடங்கும். அதன் மூலம் இந்த வருட மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி தொடங்கினால் 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும். அதில் அகில இந்திய இடஒதுக்கீட்டுக்கு 15 இடங்கள் போய்விடும். அதுபோல சென்னை அரசு பொது மருத்துவ கல்லூரியில் இப்போது 165 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இந்த கல்லூரியில் மேலும் 85 மாணவர்களை சேர்க்க அகில இந்திய மருத்துவ கவுன்சிலிடம் சென்னை மருத்துவ கல்லூரி விண்ணப்பித்துள்ளது.சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடங்கள் 150 உள்ளன. மேலும் 100 இடங்கள் கேட்கப்பட்டுள்ளது.
எனவே இந்த வருடம் திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டு, சென்னை மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி ஆகியவற்றிற்கு கூடுதல் இடங்கள் கிடைத்தால் அவற்றில் 85 சதவீத இடங்களாக 242 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக கிடைக்கும் நிலை உள்ளது. அதாவது மொத்தம் தமிழக மாணவர்கள் 2,065 பேர் சேர வாய்ப்பு ஏற்படும் நிலை உள்ளது.

TAMIL NADU ENGINEERING ADMISSIONS – 2013 | தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 4 முதல் வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 4 முதல் வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் அறிவித்துள்ளார். மே 20ஆம் தேதி வரை பொறியியல் படிப்பு விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 20ஆம் தேதி கடைசி நாளாகும்.

TAMIL NADU ENGINEERING ADMISSIONS – 2013 

Schedule of Events for 2013 

1. Issue of notification inviting application for Admission to B.E./B.Tech. 03.05.2013 
2. Issue of application forms 04.05.2013 
3. Last date for issue of application form 20.05.2013 
4. Last date for submission of filled-in applications 20.05.2013 
5. Assigning Random Number 05.06.2013 
6. Publication of Rank list 12.06.2013 
7. Commencement of Counselling 21.06.2013 
8. End of Counselling 30.07.2013 

பிளஸ்–2 முடித்துவிட்டு என்ஜினீயரிங் சேர முடிவை நோக்கி இருக்கும் மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ்களை இப்போதே பெற்று தயாராக வைத்திருங்கள் என்று அண்ணாபல்கலைக்கழகம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் 552 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். சேர 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் 65 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் ஒற்றைச்சாளர முறையில் அண்ணாபல்கலைக்கழகம் கவுன்சிலிங் நடத்தி மாணவர்களை சேர்க்கிறது.
இந்த கவுன்சிலிங்கை சென்னை கிண்டியில் உள்ள அண்ணாபல்கலைக்கழகம் வருடந்தோறும் நடத்தி வருகிறது. வருடந்தோறும் என்ஜினீயரிங் கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அதுபோல பி.இ. படிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.
பிளஸ்–2 தேர்வு முடிவு மே மாதம் 10–ந்தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. பெரும்பாலும் பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியிடுவதற்கு முன்னதாக பி.இ. படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் அண்ணாபல்கலைக்கழகம் மூலம் தமிழ்நாட்டில் பல்வேறு மையங்களில் விநியோகிப்பது வழக்கம். அதுபோல இந்த வருடமும் பிளஸ்–2 தேர்வு முடிவு வருவதற்கு முன்னதாக விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்பட உள்ளன. ஆனால் அதற்கான தேதியை இன்னும் அண்ணாபல்கலைக்கழகம் வெளியிடவில்லை.
வழக்கமாக என்ஜினீயரிங் சேரும் மாணவர்கள் கவுன்சிலிங்கிற்காக விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு பல்வேறு சான்றிதழ்கள் தேவைப்படுகிறது. மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரியாக இருந்தால் அதற்கான சான்றிதழ் வைத்திருக்கவேண்டும்.
அதுபோல சுதந்திரபோராட்ட வீரர் வாரிசாக இருந்தால் அதற்குரிய சான்று, முன்னாள் ராணுவத்தினர் மகளாக, மகனாக இருந்தால் அதற்குரிய சான்றிதழ், மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான சான்று, சொந்த நாட்டில் வசிப்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருக்கவேண்டும்.
ஆனால் பலர் கவுன்சிலிங் நேரத்தில் சான்றிதழ் கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள். எனவே இப்போதே அந்த சான்றிதழ்களை தேவைப்படுபவர்கள் உரிய அதிகாரிகளிடம் பெற்று தயாராக வைத்திருக்கவேண்டும்.
இந்த அறிவிப்பை அண்ணாபல்கலைக்கழக இணையதளத்தின் மூலம் அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) பேராசிரியர் காளிராஜ், என்ஜினீயரிங் மாணவர்சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் வேண்டுகோளாகவிடுத்துள்ளனர்.
மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்துவதற்காக விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் தயாராக வைக்கப்பட இருக்கின்றன.
இந்த வருடமும் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் என்ஜினீயரிங் படிப்பில்சேர இடம் கிடைக்கும் என்று அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 72 சதவீதத்துடன் 8 சதவீதம் உயர்த்தி 80 சதவீதமாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 8 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 80 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, அடிப்படை சம்பளத்தில் கணக்கிட்டு வழங்கப்படும் அகவிலைப்படி, தற்போது, 72 சதவீதமாக உள்ளது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும் இந்த அகவிலைப்படி, ஜனவரி, 1ம் தேதி முதல் உயர்த்தப்பட வேண்டும். இதற்கான அறிவிப்பு எப்போது வரும் என, ஊழியர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை, 72 சதவீதத்துடன், 8 சதவீதம் உயர்த்தி, 80 சதவீதமாக வழங்க, ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது, ஜனவரி 1ம் தேதி முதல், கணக்கிட்டு வழங்கப்படும். இதனால், மத்திய அரசுக்கு நடப்பு நிதியாண்டில், 10 ஆயிரத்து, 67 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இந்த உயர்வின் மூலம், 50 லட்சம் ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவர். அகவிலைப்படி உயர்வு, 50 சதவீதத்தை தாண்டும்போது, 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும் என்பது நடைமுறை. இதற்காக, ஏழாவது சம்பள கமிஷன் அமைக்க வேண்டும். இவற்றுடன், நேற்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில், எச்.எம்.டி., நிறுவனத்தை புனரமைக்க, 1,083 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்ய பட்டது. மேலும், பீகார் மாநிலத்தில் பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்துவதற்கான சலுகை திட்டத்திற்கு, 12ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு அனுமதி அளித்தது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கான தேர்வு முறை மற்றும் பாடத்திட்டங்கள் கடந்த மார்ச் 12-ம் தேதி மாற்றம் செய்யப்பட்டன. இதில், தமிழ் மொழிப்பாடத்துக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. இப்புதிய முறையை பலரும் விமர்சித்தனர். தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். சட்டசபையிலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்வு முறைகளில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீத கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:- மாற்றம் செய்யப்பட்ட தேர்வு முறைகள் குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்ததால், இது குறித்து தேர்வாணையம் மறு ஆய்வு செய்து, தேர்வின் தரம் குறையாத விதத்திலும், தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்திலும் தேர்வு முறையை திருத்தி அமைத்துள்ளது. குரூப் -1 தேர்வில் மாற்றம் செய்யப்படவில்லை. தற்போதைய நிலையே தொடரும். குரூப் -2 தேர்வில் நேர்காணல் பதவிகள் அடங்கிய தேர்வுக்கு முதல் நிலைத் தேர்வு, நேர்காணல் அல்லாத பதவிகள் அடங்கிய தேர்வு, குரூப்-3, குரூப்-3 அ, குரூப் -4 ஆகிய பதவிகளுக்கான தேர்வு முறையில் 10-ம் வகுப்பு தரத்தில் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் இருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வு முறையில் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 30 வினாக்களுக்குப் பதில் 80 வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவுப் பிரிவில் 75 வினாக்களும், அடிப்படை கிராம நிர்வாகம் 25 வினாக்களும் கேட்கப்படும். திறனறிதேர்வுக்கான 20 வினாக்களில் மாற்றம் செய்யப்படவில்லை. புதிய முறைப்படி பொது அறிவுப் பிரிவில் 75 வினாக்களும், திறனறிதல் பிரிவில் 25 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100 வினாக்களும் கேட்கப்படும். தமிழ், ஆங்கிலத்தில் மாற்றம்: தமிழுக்குரிய பாடத்திட்டம் 10-ம் வகுப்பு தரத்தில் உள்ளது. இப்பாடத்திட்டத்தில் ஏற்கெனவே உள்ள தமிழ் இலக்கணத்துடன், தமிழ் இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்தொண்டும் என மூன்று பகுதிகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆங்கில பாடத் திட்டமானது, ஆங்கில இலக்கணம், ஆங்கில இலக்கியம்,ஆங்கில அறிஞர்களும் அவர்தம் தொண்டும் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. புதிய பகுதி: சில குறிப்பிட்ட பதவிகளுக்கு மட்டும் ஆங்கிலம் அல்லது தமிழில் வரைவு எழுதுதல் (டிராப்டிங்) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. பகுத்தறிதல், தர்க்கத்திறன், பொது விழிப்புணர்வு ஆகிய பிரிவுகளில் திறன் பெற்றவர்களைத் தேர்ந்தெடுக்கும் விதத்தில் பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சிறந்தவர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்கவே இம்மாற்றங்கள் புகுத்தப்பட்டுள்ளன. தரம் குறையாமல், தமிழுக்கான முக்கியத்துவத்தையும் அளித்து இந்த மாற்றங்களை மேற்கொண்டுள்ளோம். காலிப்பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, திறன்மிகு பணியாளர்களைத் தேர்வு செய்ய இம்மாற்றங்கள் உதவும் என்றார் நவநீதகிருஷ்ணன். புதிய தேர்வு முறை மற்றும் பாடத் திட்டங்களை http://www.tnpsc.gov.in/new_syllabus.html என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பிப்ரவரி மாதம் 3–ந் தேதி நடந்த டி.என்.பி.எஸ்.சி. தமிழ்வளர்ச்சி, செய்தித்துறை உதவி பிரிவு அதிகாரி தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளரும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியுமான (பொறுப்பு) மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:– தமிழ் வளர்ச்சி, இந்து அறநிலைய மற்றும் செய்தி தொடர்புத்துறையில் 16 உதவி பிரிவு அதிகாரி (மொழிபெயர்ப்பு) பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 3–ந் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீடு, காலி பணி இடங்களின் எண்ணிக்கை மற்றும் பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்ட 48 விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் www.tnpsc.gov.in  வெளியிடப்பட்டு உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு பணி வருகிற 26–ந் தேதி அன்று சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெறும். இதற்கான அழைப்பு கடிதம் தேர்வர்களுக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்படும். இவ்வாதன்று விஜயகுமார் கூறி உள்ளார்.

ஜூன் மாதம் நடைபெற உள்ள இடைநிலை ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வுக்கான விண்ணப்ப படிவங்களை தேர்வுத்துறையின் www.tn.gov.in/dge இணையதளத்தில் டவுன்லோடு செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 29–ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஜூன் மாதம் நடைபெற உள்ள இடைநிலை ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு (இடைநிலை ஆசிரியர் கல்வி தேர்வு) தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வுக்கான விண்ணப்ப படிவங்களை தேர்வுத்துறையின் இணையதளத்தில் www.tn.gov.in/dge இன்று (வியாழக்கிழமை) முதல் 29–ந் தேதி வரை பக்கம் 1 முதல் 6 வரை டவுன்லோடு செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை (பக்கம் 1 முதல் 4 வரை) தாங்கள் வசிக்கும் மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 29–ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளார்.

தமிழகம் முழுவதும் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்தது. மே 10–ந்தேதிக்குள் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழகம் முழுவதும் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்தது. மே 10–ந்தேதிக்குள் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழகம் முழுவதும் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்தது. மே 10–ந்தேதிக்குள் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வுகள் கடந்த மாதம் 1–ந்தேதி தொடங்கி 27–ந்தேதி முடிந்தது. மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 மாணவ, மாணவிகள் பிளஸ்–2 தேர்வினை எழுதினார்கள். இது தவிர தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 786 பேர் தேர்வு எழுதியுள்ளனர். மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 66 மையங்களில் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது. பெரும்பாலான மாவட்டங்களில் நேற்றுடன் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து விட்டது. அனைத்து மாவட்டங்களிலும் இதுவரை திருத்தி முடிக்கப்பட்ட பிளஸ்–2 விடைத்தாள்களின் மதிப்பெண்கள் உள்ளிட்ட விவரங்கள் அந்தந்த மையங்களில் இருந்து சி.டி.க்களில் பதிவு செய்யப்பட்டு தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. எல்லா தேர்வு மையங்களில் இருந்தும் விடைத்தாள் திருத்தி முடிக்கப்பட்ட மதிப்பெண்கள் விவரம் அடங்கிய சி.டி.க்கள் சென்னையில் உள்ள தேர்வுத்துறைக்கு வந்தபிறகு டம்மி எண்கள் நீக்கப்பட்டு, மாணவர்களின் உண்மையான பதிவு எண்கள்படி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கும். இந்த பணிகள் முடிவதற்கு 20 நாட்கள் ஆகும் என்பதால் மே 10–ந் தேதிக்குள் பிளஸ்–2 தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத்துறை முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்றுடன் முடிந்துவிட்டது. மதிப்பெண் பட்டியல் தயாரித்து முடிந்ததும் பிளஸ்–2 தேர்வு முடிவுகளை எப்போது வெளியிடலாம் என்று தேர்வுத்துறை தான் முடிவு செய்யும் என்றனர்.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திறந்த புத்தக தேர்வு முறையை வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைபடுத்த உள்ளது.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திறந்த புத்தக தேர்வு முறையை வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைபடுத்த உள்ளது. மனப்பாடம் செய்து பாடம் படிக்கும் நடைமுறைக்கு ஓரளவு தீர்வு காணும் வகையில் சிபிஎஸ்இ இந்த புதிய முறையை திட்டமிட்டுள்ளது. திறந்த புத்தக தேர்வு முறை 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் அறிமுகப்படுத்த உள்ளது. அடுத்த ஆண்டு முதல் +2 மாணவர்களுக்கு இந்த முறையை சிபிஎஸ்இ கொண்டு வர உள்ளது. மாணவர்கள் தேர்வு நேரத்தில் அனைத்து பாடங்களையும் படித்து குழம்புவதை விட, தேர்வுக்கு எந்தெந்த பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும் என்று 4 மாதங்களுக்கு முன்பே மாணவ, மாணவியருக்கு தெரிவிக்கப்படும். தேர்வுக்கு அதனை மட்டும் படித்தால் போதும், இதனால் மாணவர்களின் மன அழுத்தம் குறைவதோடு, பயமின்றி தேர்வு எழுதவும் முடியும். இதனால் சிறந்த புத்தக தேர்வு முறை மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு அரசு இணையதளங்களில் மட்டுமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு அரசு இணையதளங்களில் மட்டுமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி அனுப்பியுள்ள கடிதத்தில், இதுவரை அரசு தேர்வுத் துறை ஆண்டு தோறும் நடத்தும் மேல்நிலை மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் அரசு இணையதளம் மூலமாகவும், தனியார் இணையதளங்கள் மூலமாகவும் வெளியிட்டு வந்தது. ஆனால், தற்போது அரசு வெளியிட்டுள்ள உத்தரவின் அடிப்படையில், அரசு இணையதளங்களில் மட்டும் தேர்வு முடிவுகளை வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தனியார் இணையதளங்களில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவது நிறுத்தப்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் மாற்றப்பட்டுள்ளார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முறை கேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து பல்கலை கழகத்தை நிர்வகிக்க அங்கு அரசு நிர்வாக அதிகாரியாக ஷிவதாஸ் நியமிக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து பல்கலைகழக துணைவேந்தர் ராமநாதன் பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் பல்கலை கழகத்தை அரசே ஏற்று நடத்த சட்டசபை மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பல்கலைகழக பதிவாளர் மீனாட்சி சுந்தரம் திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு 58 ஓய்வு வயது ஆகிவிட்டதால் அவர் பதிவாளர் பதிவியிலிருந்து விடு விக்கப்பட்டுள்ளதாக நிர்வாக அதிகாரி ஷிவதாஸ் மீனா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் புதிய பதிவாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீனாட்சி சுந்தரம் ஏற்கனவே பொருளாதார துறையில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். அவர் அந்த துறைக்கு மீண்டும் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறுகிறது.

அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்று அஞ்சல் துறை (தமிழ்நாடு) தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி நாளிதழ்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் பட்டியல் www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறுகிறது. சென்னை, திருச்சி, புதுச்சேரி, மதுரை மற்றும் கோவை ஆகிய 5 மையங்களில் தேர்வு நடைபெறும். தேர்வுக்கான அனுமதி கடிதங்கள் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அனுமதி கடிதங்களை இணையதளத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 22.04.2013 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

TNPSC துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 22.04.2013 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

TNPSC துறைத் தேர்வுகளுக்கான கடைசி தேதி 15.04.2013 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இது குறித்து கடந்த 2 நாட்களாக துறைத் தேர்வுகளுக்கான கடைசி தேதி மேலும் 7 நாட்கள் நீடிக்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டிருந்த நிலையில் TNPSC இன்று அதிகாரபூர்வமாக 15.04.2013 நாள் முதல் மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்து உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் துறைத் தேர்விற்கு 22.04.2013 அன்று மாலை 5.45 மணி வரை விண்ணபித்துக் கொள்ளலாம்.

சென்னை பல்கலை தொலைநிலை கல்வியில் வழங்கப்படும், முதுகலை பட்ட படிப்பு தேர்வுக்கு, வரும், 29ம் தேதிக்குள், விண்ணப்பிக்க வேண்டும் என,அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலை தொலைநிலை கல்வியில் வழங்கப்படும், முதுகலை பட்ட படிப்பு தேர்வுக்கு, வரும், 29ம் தேதிக்குள், விண்ணப்பிக்க வேண்டும் என,அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை பல்கலைக்கழக தொலைநிலை கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வியில் வழங்கப்படும், எம்.ஏ.,-எம்.காம்., – எம்.எஸ்சி., உள்ளிட்ட, முதுகலை படிப்புகளுக்கு, ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடக்க உள்ளன. இத்தேர்வுகளுக்கு, வரும், 29ம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க தவறி மாணவர்கள், அபராத கட்டணத்துடன், மே, 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவங்களை, http://www.ideunom.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஜூன் 8ம் தேதி முதல், முதுகலை பட்ட படிப்புகளுக்கான தேர்வுகள் துவங்குகின்றன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அரசாணை வெளியிட்டும், தேர்வு பணிகள் துவங்குவதில், தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அரசாணை வெளியிட்டும், தேர்வு பணிகள் துவங்குவதில், தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
அரசு கல்லூரிகளில், 1,093 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், 1,025 பணியிடங்களை நிரப்ப, 2011 செப்., 13ம் தேதியும், 68 பணியிடங்களை நிரப்ப, 2012 மார்ச், 5ம் தேதியும் அரசு அரசாணை வெளியிடப்பட்டது. போட்டி தேர்வுகள் மூலம் தேர்வு நடத்தாமல், பணி அனுபவம், நேர்முக தேர்வு மூலம் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வாணையத்துக்கு – டி.ஆர்.பி., அரசு பரிந்துரை செய்தது. 
பணி அனுபவத்துக்கு, அதிகபட்சமாக, 15 மதிப்பெண்கள், நேர்முக தேர்வுக்கு, 10 மதிப்பெண்கள், பிஎச்டி., பட்டத்துக்கு, 9 மதிப்பெண்கள் என, ஏற்கனவே இருந்த முறையை, அப்படியே பின்பற்ற முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில், பி.எச்டி., பட்டம் பெறாமல், எம்.பில்., பட்டத்துடன் ஆசிரியர் தகுதி தேர்வுகளில் – நெட், ஸ்லெட் தேர்ச்சி பெற்றிருந்தால், 6 மதிப்பெண்களும், முதுகலை பட்டத்துடன், தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால், 3 மதிப்பெண்களும் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. புத்தகங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற துறை வெளியீடுகளில், கட்டுரை வெளியாகி இருந்தால், மதிப்பெண்கள் அளிப்பது நீக்கப்பட்டது. 
இதற்கான பரிந்துரையை, டி.ஆர்.பி.,க்கு, உயர்கல்வித் துறை அளித்துள்ளது. பணியிடங்களை நிரப்புவதற்கான உத்தரவு, தேர்வு முறைக்கான, மதிப்பெண்கள் வழங்கும் முறைக்கு பரிந்துரை ஆகியவற்றை, அரசு வெளியிட்டும், ஒன்றரை ஆண்டுகளாக, கல்லூரி உதவி பேராசிரியர்கள் தேர்வுக்கு எந்த அறிவிப்பையும், டி.ஆர்.பி., இதுவரை, வெளியிடவில்லை.
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக பொதுச் செயலர் பிரதாபன் கூறுகையில், “”உதவி பேராசிரியர் தேர்வு பணிகளை துவங்கினால் தான், வரும் கல்வியாண்டு துவக்கத்தில், பணியிடங்களை நிரப்ப முடியும். புதிதாக, 51 கலை, அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படுகின்றன. இதில், 827 புதிய உதவி பேராசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இவர்களுக்கான தேர்வுகளையும், இத்துடன் இணைத்து நடத்த வேண்டும்,” என்றார். கல்லூரி கல்வி இணை இயக்குனர் தேவதாஸ் கூறுகையில், “”தேர்வுக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. விரைவில், இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்,” என்றார்.

டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என தெரிகிறது

“டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, இம்மாத இறுதிக்குள் வெளியாகும்’ என, துறை வட்டாரங்கள், நேற்று தெரிவித்தன. பள்ளி கல்வித்துறையில், 20 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்தும், இந்த இடங்களை பூர்த்தி செய்ய, இன்னும், டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு வெளி வராதது குறித்தும், “தினமலர்’ நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து, கல்வித்துறை அதிகாரிகளுடன், டி.ஆர்.பி., அதிகாரிகள், நேற்று ஆலோசனை நடத்தினர். ஆசிரியர் காலி இடங்கள் எண்ணிக்கை மற்றும் எப்போது தேர்வு நடத்தலாம் என்பது உள்ளிட்ட, பல்வேறு அம்சங்கள் குறித்து, கல்வித்துறை அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில்,”டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, இன்னும், 10 நாட்களுக்குள் வெளிவரும்’ என, தெரிவித்தன. அறிவிப்பு வெளியானதும், ஒன்றரை மாத இடைவெளிக்குப்பின், தேர்வு நடக்கும் என, தெரிகிறது. எனவே, ஜூன் இறுதியில், தேர்வு நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. “அப்ஜக்டிவ்’ முறையிலான விடைகள் என்பதால், மதிப்பீடு செய்யும் பணி அனைத்தும், கம்ப்யூட்டர் மூலமாகவே நடக்கின்றன. எனவே, தேர்வு முடிவை, விரைவாக வெளியிட்டு, ஜூலை இறுதிக்குள், புதிய ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என, கூறப்படுகிறது.

பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில், "புளு பிரின்ட்’ அடிப்படையில் கேள்விகள் அமையாததால், மாணவர்களுக்கு, 10 சிறப்பு மதிப்பெண் வழங்க, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில், “புளு பிரின்ட்’ அடிப்படையில் கேள்விகள் அமையாததால், மாணவர்களுக்கு, 10 சிறப்பு மதிப்பெண் வழங்க, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஐந்து மதிப்பெண் பகுதியில், “தொடர்கள் – தொடர்வரிசை’ பாடத்தில், இரு கேள்விகள் இடம் பெற வேண்டும்; ஆனால், ஒரு கேள்வி மட்டுமே கேட்கப்பட்டது. “இயற்கணிதம்’ பாடத்தில், மூன்று கேள்விகளுக்கு பதில், இரு கேள்வியும்; “அணிகள், முக்கோணவியல்’ பாடங்களில், ஒரு கேள்விக்கு பதில், இரண்டு கேள்விகளும் கேட்கப்பட்டன. அதேபோல், “கணங்களும் சார்புகளும்’ பாடப் பகுதியில், இரண்டு கேள்விகளும், “சார்புகள்’ பகுதியில் இருந்து மட்டும் இடம்பெற்றன. அதிலும் ஒன்று, “கிரியேட்டிவ்’ கேள்வியாக அமைந்திருந்தது. இக்கேள்வி அமைப்பால், கிராமப்புற மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிப்பது மட்டுமின்றி, பல மாணவர்களின், நூற்றுக்கு நூறு கனவும் தகரும் என, கருத்து எழுந்தது.
இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் அனைத்து மைய கண்காணிப்பாளர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை அனுப்பிய உத்தரவு: பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு பிரிவு, 3ல் உள்ள, அணிகள், முக்கோணவியல் பாடப்பகுதியில், ஒரு வினாவிற்கு பதில் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டதால், பிரிவு 3ல் உள்ள அனைத்து வினாக்களையும் மதிப்பீடு செய்து, அதில், மிகக் குறைவாக மதிப்பெண் பெற்ற, இரு வினாக்களை தேர்வு செய்து, அந்த வினாக்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க, மாநில பொதுச்செயலர் சாமி சத்தியமூர்த்தி, பட்டதாரி ஆசிரியர் கழக, மதுரை மாவட்ட செயலர் முருகன் கூறியதாவது: கணிதத் தேர்வு முடிந்ததும், இப்பிரச்னை குறித்து பள்ளிக் கல்வித் துறை கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் பாதிப்படைவர் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். இதற்கு மதிப்பளித்து, அரசு எடுத்த நடவடிக்கையை வரவேற்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

TET முதல் இரு தேர்வு முடிவுகள்-ஒரு பார்வை

TET முதல் இரு தேர்வு முடிவுகள்-ஒரு பார்வை
முதல் தேர்வு (ஜூலை, 2012)
முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்)
எழுதியோர்-2,83,817
தேர்ச்சி-1,735
சதவீதம்-0.55
இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்)
எழுதியோர்-3,83,666
தேர்ச்சி-713
சதவீதம்-0.17
இரண்டாவது தேர்வு (அக்., 2012)
முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்)
எழுதியோர்-2,78,725
தேர்ச்சி பெற்றோர்-10,397
சதவீதம்-3.73
இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்)
எழுதியோர்-3,77,973
தேர்ச்சி பெற்றோர்-8,849
சதவீதம்-2.34

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை அரசே ஏற்று நடத்துவதற்கான மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

வரலாற்று பெருமை வாய்ந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், சம்பளத்தை குறைக்கவும் முடிவு செய்திருப்பதாக வெளியான தகவலையடுத்து கடந்த ஆண்டு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். இதனால் பல்கலைக்கழகம் காலவரையிண்றி மூடப்பட்டது. மேலும் இருப்பினும் நிர்வாக குளறுபடி மற்றும் முறைகேடுகள் இருப்பதால் பல்கலைக்கழகதை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வந்தது. இந்நிலையில் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்தை கவனிக்க அரசு சார்பில் ஷிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டார். மேலும் பல்கலைக் கழகத்தின் நிதி முறைகேடுகள் தொடர்பாக ஆராய்ந்த சிறப்பு விசாரணைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அதன் துணைவேந்தர் ராமநாதன் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்துவதற்கான மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் சட்டசபையில்தாக்கல் செய்தார். இதனால் பல்கலைக் கழகத்திற்கு அரசு அளிக்கும் சிறப்பு அதிகாரங்கள் இனி வழங்கப்பட மாட்டாது என தெரிகிறது.

ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான கருத்தாய்வுக் கூட்டம் ஏப்.,17ல் துவங்குகிறது என தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான கருத்தாய்வுக் கூட்டம் ஏப்.,17ல் துவங்குகிறது என தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில், விரைவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான கருத்தாய்வுக் கூட்டம் ஏப்.,17ல் துவங்குகிறது,” என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் கூறினார்.மதுரையில் நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:தமிழகத்தில், ஆசிரியர் கல்வி பாடத்திட்டங்கள் 5 ஆண்டுகளுக்கு பின் மாற்றியமைக்க படவுள்ளது. புதிய பாடத்திட்டங்கள், தற்கால கல்வி முறைக்கு ஏற்ப மாற்றப்படும். இதற்காக கல்வியாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் சென்னையில் ஏப்.,17 முதல் 19 வரை நடக்கிறது. அடிப்படை வசதிகள் இல்லாத பி.எட்., கல்லூரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதில், சில கல்லூரிகள் மட்டுமே பதில் அளித்துள்ளன. அனைத்து கல்லூரிகளும் பதில் அளித்தவுடன், என்ன வகையானநடவடிக்கை எடுப்பது குறித்து “சிண்டிகேட்’ கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும், என்றார்.

நந்தன ஆண்டு நிறைவுபெற்று வெற்றிகரமான விஜய தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது.கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

நந்தன ஆண்டு நிறைவுபெற்று வெற்றிகரமான விஜய தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது.கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

நந்தன ஆண்டு நிறைவுபெற்று வெற்றிகரமான விஜய தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது.கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் இனிய  தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!