Category Archives: TEACHERS GENERAL COUNSELLING 2013-2014

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு நடைபெற்ற கலந்தாய்வில் மாறுதல் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர்களை தற்சமயம் பணிபுரியும் பள்ளியில் இருந்து உடனடியாக விடுவிக்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு நடைபெற்ற கலந்தாய்வில் மாறுதல் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர்களை தற்சமயம் பணிபுரியும் பள்ளியில் இருந்து உடனடியாக விடுவிக்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2013-14ம் கல்வி ஆண்டில் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.

2013-14ம் கல்வி ஆண்டில் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப  பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 
அதன் படி 
1 20.07.2013  சனிக்கிழமை  காலை 10மணி மாவட்டத்திற்குள்
2 22.07.2013  திங்கட்கிழமை காலை 10 மணி மாவட்டம் விட்டு மாவட்டம்
கலந்தாய்வு நடைபெறும்.
கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகள் :
1. 2013-14ம் கல்வியாண்டில் மே-2013ல் நடைபெற்ற ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல் ஆணை பெற்றவர்கள் இந்த மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்வதற்கு கண்டிப்பாக அனுமதிக்கப்படக்கூடாது.
2. 2013-14ம் கல்வியாண்டில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு பெண் ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படவேண்டும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில்  ஆண் ஆசிரியர்கள் மட்டுமே நியமனம் செய்யப்படவேண்டும். இருபாலர் பயிலும் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு பொது மாறுதல் விதிகளின்படி ஆண் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு மாறுதல் அளிக்கலாம் என அரசு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதனடிப்படையில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் மட்டும், ஆண்கள் பள்ளிகளில் ஆண் ஆசிரியர்கள் மட்டும் மற்றும் இருபாலர் பள்ளிகளில் இருபால் ஆசிரியர்களுக்கும் மாறுதல் வழங்கலாம்.
3. மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர்கள் வழியாக 19.07.2013 மாலை 5 மணிக்குள் பெற்று அரசாணையில் தெரிவித்துள்ள நெறிமுறைகளின்படி முன்னுரிமையினை நிர்ணயம் செய்ய வேண்டும். புதியதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாவட்ட மாறுதலுக்குப்பின் காலிப்பணியிடம் இருப்பின் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வை நடத்தலாம். மாவட்டம் விட்டு மாவட்ட கலந்தாய்விற்கான விண்ணப்பங்களை கலந்தாய்வு அன்று தலைமையாசிரியர் ஒப்பத்துடன் ஆசிரியர்கள் அளித்தால் அதனைப் பெற்று முன்னுரிமை நிர்ணயம் செய்துகொள்ள வேண்டும்.
4. இந்த கலந்தாய்வு  புதியதாக தரம் உயர்த்தப்பட்ட 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு : 2013-14ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர், உடற்கல்வி ஆசிரியர், சிறப்பாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 28.05.2013 மற்றும் 29.05.2013 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

பள்ளிக்கல்வித்துறையில் 2013-14ஆம் ஆண்டிற்கான பட்டதாரி/ஆசிரியர் பயிற்றுநர்/உடற்கல்வி ஆசிரியர்/சிறப்பாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 28.05.2013 அன்று மாவட்டத்திற்குள் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நடைபெறும். 29.05.2013 அன்று மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கோரும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காலை 9.00 மணி முதல் நடைபெறும். மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். table.tableizer-table { border: 1px solid #CCC; font-family: ; font-size: 16px; } .tableizer-table td { padding: 4px; margin: 3px; border: 1px solid #ccc; } .tableizer-table th { background-color: #215D07; color: #FFF; font-weight: bold; }
வ.எண் நாள் நேரம் விவரம் இடம்
1 28.05.13 காலை பட்டதாரி ஆசிரியர்,சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர்,ஆசிரியர் பயிற்றுநர்,இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல்(மாவட்டதிற்குள்) முதன்மை கல்வி அலுவலகம்
1 29.05.13 காலை பட்டதாரி ஆசிரியர்,சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர்,ஆசிரியர் பயிற்றுநர்,இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல்(மாவட்டம் விட்டு மாவட்டம்) முதன்மை கல்வி அலுவலகம்

DSE COUNSELLING SCHEDULE | பள்ளிக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் கால அட்டவணை 2013-2014 (UPDATED ON 18.5.13)

table.tableizer-table { border: 1px solid #CCC; font-family: ; font-size: 12px; } .tableizer-table td { padding: 4px; margin: 3px; border: 1px solid #ccc; } .tableizer-table th { background-color: #A5086E; color: #FFF; font-weight: bold; }

வ.எண் நாள் நேரம் விவரம் இடம்
1 20.05.13 காலை 9.00 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் (மாவட்டதிற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்) முதன்மை கல்வி அலுவலகம்
2 21.05.13 காலை 9.00 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பதவி உயர்வு) முதன்மை கல்வி அலுவலகம்
3 22.05.13 காலை 9.00 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் (மாவட்டதிற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்) முதன்மை கல்வி அலுவலகம்
5 23.05.13 காலை 9.00 முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டதிற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்) முதன்மை கல்வி அலுவலகம்

DEE COUNSELLING SCHEDULE | 2013-2014 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு செய்திகள் | தொடக்கக்கல்வித்துறை பொது மாறுதல் கால அட்டவணை (UPDATED ON 17.5.2013)

table.tableizer-table { border: 1px solid #CCC; font-family: ; font-size: 12px; } .tableizer-table td { padding: 4px; margin: 3px; border: 1px solid #ccc; } .tableizer-table th { background-color: #8C1021; color: #FFF; font-weight: bold; }

வ.எண் நாள் நேரம் விவரம் இடம்
1 13.05.13 – 17.05.13 காலை முதல் உதவி தொடக்க்க்கல்வி அலுவலரிடம் விண்ணப்பம் ஒப்படைப்பு
2 18.05.13 காலை முதல் PANEL VERIFICATION
3 20.05.13 காலை முதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரிடம் ஒப்படைப்பு
4 21.05.13 – 22.05.13 காலை முதல் மாவட்ட தொடக்கக்கல்விஅலுவலர்கள் ABC படிவங்கள் தயார் செய்தல்
5 23.05.13 காலை முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களுக்கு மாவட்ட தொடக்கக்கல்விஅலுவலர்கள் அனுப்புதல்
6 24.05.13 காலை  உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் சென்னை
7 25.05.13 காலை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து உ.தொ.க.அலுவலராக பணி மாறுதல் சென்னை
8 28.05.12 காலை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல்
9 28.05.13 காலை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு
10 28.05.13 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (ஒன்றியத்திற்குள்)
11 29.05.13 காலை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல்
12 29.05.13 பிற்பகல் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு
13 30.05.13 காலை இடைநிலை ஆசிரியர் மாறுதல்  (ஒன்றியத்திற்குள்)
14 30.05.13 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் மாறுதல் மாவட்டதிற்குள்   (ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல்)
15 31.05.13 காலை இடைநிலை ஆசிரியர் மாறுதல்(மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்)

2013-2014ம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் இணைய தளத்தின் மூலமாக நடத்தப்படுகிறது. உரிய விண்ணப்ப படிவத்தில் சார்ந்த விவரங்களை சரியாக பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக 14.05.2013 முதல் 18.05.2013 முடிய ஒப்படைக்க வேண்டும்.

# தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின்   செயல்முறைகள், சென்னை-600 006. ந.க.எண்  183 /ஏ1/இ2/2013 நாள்:11 .05.2013 ன் படி பள்ளிக்கல்வித்துறை அரசு/நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள்/ தலைமை ஆசிரியர்களுக்கு 2013-2014ம் கல்வியாண்டில் பொதுமாறுதலுக்கான விண்ணப்பங்கள் பெறுதல் சார்ந்தான அறிவுரை கிழ்கண்டவாறு வழங்கப்பட்டுள்ளது . 
# 2013-2014ம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு 2013-2014ம் கல்வியாண்டில் பொது மாறுதல் இணைய தளத்தின் மூலமாக  வழங்க வேண்டும்.
# 2013-2014ம் கல்வியாண்டின் பொதுமாறுதலுக்கான அரசாணை (1டி) எண். 129  பள்ளிக் கல்வி (இ1) துறை நாள்:09 .05.2013 வெளியிடப்பட்டுள்ளது.
# ஆசிரியர் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்குமுறை மற்றும் மேல்முறையீடு) விதிகள்  17 (a), 17 (b),ன் கீழ் ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளதா என்பதையும், நீண்டகால விடுப்பில் உள்ளவராயின் அதன் விவரம், தற்காலிகப் பணிநீக்கத்தில் உள்ளவராயின் அதன் விவரம், ஒழுங்கு நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டவராயின் அதன் விவரம், நிர்வாக நலன் கருதி மாறுதல் அளிக்கப்பட்டிருப்பின் அதன் விவரம் போன்ற விவரங்களைத் தெளிவாக அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள கலத்தில் தலைமையாசிரியரால் குறிப்பிடப்பட வேண்டும்.  
# மாவட்டத்திற்குள்/மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்  கோரும்   தலைமையாசிரியர்கள் உரிய விண்ணப்ப படிவத்தில் சார்ந்த விவரங்களை சரியாக பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக 14.05.2013 முதல் 18.05.2013 முடிய  ஒப்படைக்க வேண்டும்.  
# முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்காண் மாறுதல் விண்ணப்பங்களை இணைய தளத்தில் விண்ணப்பதாரர்/அவர்கள்  பிரதிநிதி முன்னிலையில் பதிவு செய்திட வேண்டும். இணைய தளத்தில் பதிவு செய்த பின் பதிவு செய்த விவரங்கள் சரியாக உள்ளது என்பதை விண்ணப்பதாரர்/அவர்கள் பிரதிநிதியிடம்  உறுதி செய்து கொள்ள வேண்டும்.  அதன் பின்னர் அவர்களது விண்ணப்பத்தினை இருநகல்கள் எடுத்து விண்ணப்பதாரர்/அவர்கள் பிரதிநிதியிடம் கையொப்பம் பெற்று ஒரு நகல் முதன்மைக் கல்வி அலுவலர் கோப்பில் பராமரிக்க வேண்டும். மற்றொரு நகலினை விண்ணப்பதாரருக்கு வழங்க வேண்டும். 
# மாவட்டத்திற்குள் /மாவட்டம் விட்டு மாறுதல் கோரும்  அனைத்துவகை ஆசிரியர்கள்,  உரிய விண்ணப்ப படிவத்தில் சார்ந்த விவரங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பித்து மேலொப்பம் பெற வேண்டும். பொது மாறுதல் கோரும் விண்ணப்பப் படிவத்தில் உள்ள அனைத்து கலங்களும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்து தலைமையாசிரியரால் ஒப்பமிடப்பட வேண்டும்.  சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாறுதல் கோரும் ஆசிரியர்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக 14.05.2013 முதல் 18.05.2013 முடிய  ஒப்படைக்க வேண்டும்.   
# முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்காண் மாறுதல் விண்ணப்பங்களை இணைய தளத்தில் விண்ணப்பதாரர்/அவர்கள்  பிரதிநிதி முன்னிலையில் பதிவு செய்திட வேண்டும். இணைய தளத்தில் பதிவு செய்த பின் பதிவு செய்த விவரங்கள் சரியாக உள்ளது என்பதை விண்ணப்பதாரர்/அவர்கள் பிரதிநிதியிடம்  உறுதி செய்து கொள்ள வேண்டும்.  அதன் பின்னர் அவர்களது விண்ணப்பத்தினை இருநகல்கள் எடுத்து விண்ணப்பதாரர்/அவர்கள் பிரதிநிதியிடம் கையொப்பம் பெற்று ஒரு நகல் முதன்மைக் கல்வி அலுவலர் கோப்பில் பராமரிக்க வேண்டும். மற்றொரு நகலினை விண்ணப்பதாரருக்கு வழங்க வேண்டும். 
# மாறுதல் கோரும் விண்ணப்பங்களை இணைய தளத்தில் பதிவு செய்யும் போது இணையத் தளத்தில் ஏற்கனவே  உள்ள பள்ளி முகவரியை மாற்றாமல்   தட்டச்சு செய்திட வேண்டும். புதிதாக  திருத்தங்கள் ஏதும் செய்தல் கூடாது. 
# முதன்மைக் கல்வி அலுவலக  பிரிவு உதவியாளர் விண்ணப்பங்களை  பதிவு செய்த அன்றே தகுதியுள்ள விண்ணப்பம் / தகுதியில்லா விண்ணப்பம்,  நிராகரிக்கப்பட வேண்டியது என வகைப்படுத்தி  A மற்றும் B பதிவேடுகள் தயார் செய்து அவற்றைப் பதிந்து முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்பம் பெற்று பராமரிக்க வேண்டும்.
# மேற்படி மாறுதல் விண்ணப்பங்களில் மாவட்டத்திற்குள் மாறுதல் கோருபவர்களின்    விண்ணப்பங்களை, தனியாகவும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோருபவர்களின் விண்ணப்பங்களை இணைய தளத்தில் தனியாக தொகுத்து பதிவு செய்ய வேண்டும். 
# ஒவ்வொரு ஆசிரியர்  /தலைமை ஆசிரியர்  மாறுதல் கோரும் விண்ணப்பத்திற்கு தனித்தனியாக  எண் வழங்கப்பட வேண்டும். மாறுதல் வழங்கும் நாளன்று இணையதள பதிவு நகலுடன் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு காலை 9.00 மணிக்கு வருகை புரிய வேண்டும்.    
# உள்ளூர் மாவட்டங்களில் பணி மாறுதல் கோரியவர்களுக்கான கவுன்சிலிங் முடிந்தவுடன் வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் கோரியுள்ளவர்களுக்கு மாறுதலுக்கான கவுன்சிலிங் தொடங்கப்படும்.  எனவே, சார்ந்த தலைமையாசிரியர்கள் உரிய தகவல்களை அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும். 
# விண்ணப்ப படிவம் கல்விச்சோலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது .இங்கே கிளிக் செய்யவும்.

2013-2014 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு செய்திகள் , விண்ணப்பங்கள் , செயல்முறைகள் மற்றும் அரசாணைகள் ஒரே இடத்தில் ..