Monthly Archives: January, 2012

G.O Ms. No. 388 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 90 வணிகவியல் மற்றும் பொருளியல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தொடர் நீடிப்பு வழங்குதல் – ஆணை

ஆசிரியர் பணியிடப் பற்றாக்குறையைப் போக்கிட 33,681 ஆசிரியர் பணியிடங்களும், 16,549 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்களும், 5,000 ஆசிரியரல்லாத பணியிடங்களும் நடப்பாண்டில் அனுமதிக்கப்பட்டுள்ளன. கற்றல் முறையை எளிதாக்கவும், மாணவர்களின் சுமையைக் குறைக்கவும், 2012-2013 ஆம் கல்வியாண்டு முதல் முப்பருவ முறையை எட்டாம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளிலும் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என சட்ட பேரவையில் ஆளுநர் உரை.

ஆசிரியர் பணியிடப் பற்றாக்குறையைப் போக்கிட 33,681 ஆசிரியர் பணியிடங்களும், 16,549 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்களும், 5,000

Read more »

smartclass.kalvisolai.com

  1. SSLC ENGLISH I PAPER PTA Q WITH ANSWERS 13 PAGES BY R.Anbuselvan,R. Karthikeyan,K.Chinnappan
  2. SSLC SCIENCE DIAGRAM PRACTICE PAPER FOR TAMIL AND ENGLISH MEDIUM STUDENTS.
  3. SSLC SCIENCE 5 SETS PTA MODEL Q.P CONCISE FORM 20 PAGES TAMIL MEDIUM BY C.THIRUVENKADAM
  4. SSLC SCIENCE 5 SETS PTA MODEL QUESTIONS KEY ANSWERS T/M BY BALASUBRAMANIAN.
  5. SSLC SOCIAL ONE MARK MATERIAL TAMIL MEDIUM
  6. SSLC ENGLISH I&II PAPER 5 SETS OF PTA MODEL QUESTION PAPERS(30 PAGES) CONCISE by R.Karthikeyan
  7. SSLC ENGLISH I PAPER STUDY MATERIAL (UPDATED VERSION) BY K.CHINNAPPAN
  8. SSLC ENGLISH II PAPER STUDY MATERIAL (UPDATED VERSION) BY K.CHINNAPPAN
  9. SSLC TAMIL FIRST PAPER 5 SETS OF PTA MODEL QUESTION PAPERS
  10. SSLC TAMIL SECOND PAPER 5 SETS OF PTA MODEL QUESTION PAPERS
  11. SSLC ENGLISH I AND II PAPER 5 SETS OF PTA MODEL QUESTION PAPERS (112 PAGES)
  12. SSLC MATHS 5 SETS OF PTA MODEL QUESTION PAPERS TAMIL MEDIUM
  13. SSLC MATHS 5 SETS OF PTA MODEL QUESTION PAPERS ENGLISH MEDIUM
  14. SSLC SCIENCE 5 SETS OF PTA MODEL QUESTION PAPERS TAMIL MEDIUM
  15. SSLC SCIENCE 5 SETS OF PTA MODEL QUESTION PAPERS ENGLISH MEDIUM
  16. SSLC SOCIAL 5 SETS OF PTA MODEL QUESTION PAPERS TAMIL MEDIUM
  17. SSLC SOCIAL 5 SETS OF PTA MODEL QUESTION PAPERS ENGLISH MEDIUM
  18. SSLC SAMACHEERKALVI TAMIL I PAPER STUDY MATERIAL
  19. SSLC SAMACHEERKALVI TAMIL II PAPER STUDY MATERIAL
  20. SSLC SAMACHEERKALVI ENGLISH I PAPER STUDY MATERIAL
  21. SSLC SAMACHEERKALVI ENGLISH II PAPER STUDY MATERIAL
  22. SSLC SAMACHEERKALVI MATHS STUDY MATERIAL TAMIL MEDIUM
  23. SSLC SAMACHEERKALVI SCIENCE STUDY MATERIAL TAMIL MEDIUM
  24. SSLC SAMACHEERKALVI SOCIAL SCIENCE STUDY MATERIAL TAMIL MEDIUM
  25. SSLC MODEL QUESTION PAPERS RELEASED BY DGE
  26. SSLC MODEL QUESTION PAPERS RELEASED BY DSE
  27. SSLC SCIENCE MODEL QUESTION PAPER POWER POINT PRESENTATION
  28. PLUS TWO ZOOLOGY COMPLETE STUDY MATERIAL TAMIL MEDIUM
  29. +1 ZOOLOGY STUDY MATERIAL TAMIL MEDIUM
  30. +1 ZOOLOGY ONE MARK WITH ANSWER
  31. PLUS TWO COMPUTER SCIENCE TWO MARKS Q&A TAMIL MEDIUM
  32. PLUS TWO ALL GOVT QUESTION PAPERS FOR ALL SUBJECTS
  33. PLUS TWO SEP 2011 ALL SUBJECTS GOVT QUESTION PAPERS
  34. PLUS TWO JUN 2011 ALL SUBJECTS GOVT QUESTION PAPERS
  35. PLUS TWO MAR 2011 ALL SUBJECTS GOVT QUESTION PAPERS
  36. PLUS TWO PHY&CHE ONE MARK MATERIAL ENGLISH MEDIUM BY SURYA GROUP
  37. PLUS TWO PHY&CHE ONE MARK MATERIAL TAMIL MEDIUM BY SUYRA GROUP
  38. PLUS TWO PHYSICS THREE MARK MATERIAL TAMIL MEDIUM
  39. PLUS TWO CHEMISTRY ONE MARK QUESTIONS TAMIL MEDIUM
  40. PLUS TWO BOTANY ONE MARK QUESTIONS WITH ANSWER TAMIL MEDIUM
  41. PLUS TWO BOTANY ONE MARK QUESTIONS WITH ANSWER TAMIL MEDIUM
  42. PLUS TWO ZOOLOGY ONE MARK QUESTIONS TAMIL MEDIUM
  43. PLUS TWO ZOOLOGY THREE MARK MATERIAL TAMIL MEDIUM
  44. PLUS TWO ZOOLOGY PRACTICAL GUIDE TAMIL MEDIUM
  45. PLUS TWO ZOOLOGY HUMAN PHYSIOLOGY ONE MARK BILINGUAL
  46. PLUS TWO ZOOLOGY MICRO BIOLOGY ONE MARK BILINGUAL
  47. PLUS TWO ZOOLOGY IMMUNOLOGY ONE MARK BILINGUAL
  48. PLUS TWO ZOOLOGY MODERN GENETICS ONE MARK BILINGUAL
  49. PLUS TWO ZOOLOGY ENVIRONMENTAL SCIENCE ONE MARK TAMIL MEDIUM
  50. PLUS TWO ZOOLOGY – APPLIED BIOLOGY ONE MARK TAMIL MEDIUM
  51. PLUS TWO ZOOLOGY – THEORIES OF EVOLUTION ONE MARK TAMIL MEDIUM
  52. PLUS TWO ZOOLOGY ONLINE TEST – நுண்ணுயிரியல் TEST-1 TAMIL MEDIUM
  53. PLUS TWO ZOOLOGY ONLINE TEST – நோய் தடைக்காப்பியல் TEST-1 TAMIL MEDIUM
  54. PLUS TWO ZOOLOGY ONLINE TEST – நோய் தடைக்காப்பியல் TEST-2 TAMIL MEDIUM
  55. PLUS TWO ZOOLOGY ONLINE TEST – நவீன மரபியல் TEST-1 TAMIL MEDIUM
  56. PLUS TWO ZOOLOGY ONLINE TEST – HUMAN PHYSIOLOGY TEST-1 ENGLISH MEDIUM
  57. PLUS TWO ZOOLOGY ONLINE TEST- HUMAN PHYSIOLOGY TEST-2 ENGLISH MEDIUM
  58. PLUS TWO ZOOLOGY ONLINE TEST- HUMAN PHYSIOLOGY TEST-3 ENGLISH MEDIUM
  59. PLUS TWO ZOOLOGY ONLINE TEST – MICRO BIOLOGY TEST-1 ENGLISH MEDIUM
  60. PLUS TWO ZOOLOGY ONLINE TEST – IMMUNOLOGY TEST-1 ENGLISH MEDIUM
  61. PLUS TWO ZOOLOGY ONLINE TEST – IMMUNOLOGY TEST-2 ENGLISH MEDIUM
  62. PLUS TWO ZOOLOGY ONLINE TEST – IMMUNOLOGY TEST-3 ENGLISH MEDIUM
  63. PLUS TWO ZOOLOGY ONLINE TEST- MODERN GENETICS TEST-1 ENGLISH MEDIUM
  64. PLUS TWO ZOOLOGY ONLINE TEST – MODERN GENETICS TEST-2 ENGLISH MEDIUM
  65. PLUS TWO ZOOLOGY ONLINE TEST – MODERN GENETICS TEST-3 ENGLISH MEDIUM
  66. PLUS TWO ZOOLOGY ONLINE TEST – MODERN GENETICS TEST-4 ENGLISH MEDIUM
  67. PLUS TWO ZOOLOGY ONLINE TEST- ENVIRONMENTAL SCIENCE TEST-1 ENGLISH MEDIUM
  68. PLUS TWO ZOOLOGY ONLINE TEST – ENVIRONMENTAL SCIENCE TEST-2 ENGLISH MEDIUM
  69. PLUS TWO ZOOLOGY ONLINE TEST – ENVIRONMENTAL SCIENCE TEST-3 ENGLISH MEDIUM
  70. PLUS TWO ZOOLOGY ONLINE TEST – ENVIRONMENTAL SCIENCE TEST-4 ENGLISH MEDIUM
  71. PLUS TWO ZOOLOGY ONLINE TEST – ENVIRONMENTAL SCIENCE TEST-5 ENGLISH MEDIUM
  72. PLUS TWO ZOOLOGY ONLINE TEST – APPLIED BIOLOGY TEST-1 ENGLISH MEDIUM
  73. PLUS TWO ZOOLOGY ONLINE TEST – APPLIED BIOLOGY TEST-2 ENGLISH MEDIUM
  74. PLUS TWO ZOOLOGY ONLINE TEST – APPLIED BIOLOGY TEST-3 ENGLISH MEDIUM
  75. PLUS TWO ZOOLOGY ONLINE TEST – APPLIED BIOLOGY TEST-4 ENGLISH MEDIUM
  76. PLUS TWO ZOOLOGY ONLINE TEST – APPLIED BIOLOGY TEST-5 ENGLISH MEDIUM
  77. PLUS TWO ZOOLOGY ONLINE TEST – APPLIED BIOLOGY TEST-6 ENGLISH MEDIUM
  78. PLUS TWO ZOOLOGY ONLINE TEST – APPLIED BIOLOGY TEST-7 ENGLISH MEDIUM
  79. PLUS TWO ZOOLOGY ONLINE TEST – APPLIED BIOLOGY TEST-8 ENGLISH MEDIUM
  80. PLUS TWO ZOOLOGY ONLINE TEST-THEORIES OF EVOLUTION TEST-1 ENGLISH MEDIUM
  81. PLUS TWO ZOOLOGY ONLINE TEST- THEORIES OF EVOLUTION TEST-2 ENGLISH MEDIUM
  82. PLUS TWO ACCOUNTANCY 5 MARKS Q&A TAMIL MEDIUM BY K.VENKATESA RAVI
  83. PLUS TWO ACCOUNTANCY 12 MARKS Q&A TAMIL MEDIUM BY G.BASKER
  84. PLUS TWO COMMERCE 1 MARK Q&A TAMIL MEDIUM BY T.P.VENKATA PERUMAL,
  85. PLUS TWO COMMERCE 4 MARKS Q&A TAMIL MEDIUM BY K.VENKATESA RAVI & G.BASKER
  86. TRB-MATERIALS AND QUESTION PAPERS WITH KEY ANSWERS
  87. IGNOU M.ED MES-052 – STUDY MATERIAL
  88. IGNOU M.ED MES-053 – STUDY MATERIAL
  89. IGNOU M.ED MES-054 – STUDY MATERIAL
  90. IGNOU M.ED MES-055 – STUDY MATERIAL
  91. IGNOU M.ED MESE-056 – STUDY MATERIAL
  92. IGNOU M.ED MESE-058 – STUDY MATERIAL
  93. IGNOU M.ED MESE-066 – STUDY MATERIAL

G.O NO 100 AND 141 – Continuation Pay Order for Temporary posts from January 2012

G.O NO : 15 , DATED 23 .01 .2012 – 1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தல் ஆணை

விழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாற்றம் : பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக என்.ஆர்.சிவபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  மாற்றம் : பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக என்.ஆர்.சிவபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளி கல்வித்துறை செயலாளராக திருமதி டி. சபிதா அவர்களையும், உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக திரு ஸ்ரீதர் அவர்களையும் நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளி கல்வித்துறை செயலாளராக திருமதி டி. சபிதா அவர்களையும், உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக திரு ஸ்ரீதர் அவர்களையும் நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

G.O Ms. No. 11 January 18, 2012-அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ/ மாணவியர்களுக்கும் விலையில்லா காலணி வழங்குதல் – ஆணை

G.O Ms. No. 12 January 18, 2012-அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ/மாணவியர்களுக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள், கற்றலுக்குத் தேவையான கணித உபகரணப்பெட்டி, வண்ணப்பென்சில்கள் மற்றும் புவியியல் வரைபடங்கள் வழங்குதல் – ஆணை

G.O Ms.No.2 January 7, 2012-இடைநிலை பள்ளி விடுப்புச் சான்றிதழ் / மேல்நிலை பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் வழங்கி அதற்கான நிபந்தனைகளை வகுத்து ஆணையிடப்பட்டது – திருத்தம் வெளியிடப்படுகிறது.

G.O Ms.No. 5 January 9, 2012-அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் இயங்கும் மாதிரிப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் செய்ய அனுமதி அளிப்பது- ஆணை

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை.600 006 ந.க.எண். 13368/எல்1/2011, நாள் .1.2012 – 01.06.88க்கு பின்னர் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்த காலத்துடன் சேர்த்து தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியில் தேர்வுநிலை / சிறப்புநிலை அனுமதித்தல்

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 2009-10 கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 831 நடுநிலைப் பள்ளிகளுக்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் வீதம், 831 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 2010-11 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்த்ப்படட 218 நடுநிலைப் பள்ளிகளுக்கு, பள்ளி ஒன்றுக்கு 2 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 436 பட்டத்தாரி ஆசிரியர் பணியிடங்களும், என மொத்தம் 1,267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை இந்த கல்வி ஆண்டிலேயே (2011-12) தோற்றுவிக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

"பகுதிநேர ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வுகள், இம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும். பிப்ரவரி முதல் வாரத்தில், பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படும்,” என, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் முகம்மது அஸ்லம் தெரிவித்தார்.அரசுப் பள்ளிகளில், பகுதி நேர அடிப்படையில், உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவியம், தையல் உள்ளிட்ட கலை ஆசிரியர்கள், 16,549 பேரை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. இம்மாதம், 15ம் தேதிக்குள், நேர்முகத் தேர்வு பணிகளை முடித்து, 27ம் தேதியில் இருந்து, அனைவரும் பணிகளில் சேரும் வகையில், நடவடிக்கை எடுக்க திட்டமிடப் பட்டிருந்தது.ஆனால், பல மாவட்டங்களில், அதிகமானவர்கள் விண்ணப்பித்திருந்ததால், நேர்முகத் தேர்வுப் பணிகள், இம்மாதம் இறுதிவரை நீட்டிக்கப் பட்டுள்ளன.

பள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என அதிகாரிகள் ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி வேண்டுகோள்.டி.பி.ஐ. வளாகம் விரைவில் அனைத்து வசதிகளுடன் புதுப்பொலிவு பெறும் என்றும் தகவல்.

பள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என அதிகாரிகள் ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி வேண்டுகோள்.டி.பி.ஐ. வளாகம் விரைவில் அனைத்து வசதிகளுடன் புதுப்பொலிவு பெறும் என்றும் தகவல்.

பள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் பள்ளிக்கல்வித்துறை அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி வேண்டுகோள்

பள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்  பள்ளிக்கல்வித்துறை அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி  வேண்டுகோள்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி நேற்று அதிகாரிகளைக் கொண்ட ஆய்வுக்கூட்டத்தை நேற்று நடத்தினார். அப்போது, `அதிகாரிகள் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றவேண்டும்’ என்று கூறினார்.
பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய அமைச்சராக பொறுப்பேற்ற அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி நேற்று பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டத்தை சென்னை டி.பி.ஐ.வளாகத்தில் நடத்தினார்.
கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் செயலாளர் ஸ்ரீதர், அனைவருக்கும் கல்விதிட்ட இயக்குனர் முகமது அஸ்லாம், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் அபூர்வ வர்மா மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பல்வேறு இயக்குனர்கள் இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள், மெட்ரிகுலேசன் பள்ளி ஆய்வாளர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி சட்டம் குறித்த கையேட்டை அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி வெளியிட்டார். அதை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் பவானி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 5 பேர் இந்திய அளவில் நடைபெற்ற கல்வி தொடர்பான செயல் நிகழ்ச்சியில் 2-வது பரிசு பெற்றனர். அந்த மாணவிகள் அதே நிகழ்ச்சியை அமைச்சர் முன்னாள் நிகழ்த்திக்காண்பித்தனர். அவர்களை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பாராட்டி பரிசு வழங்கி ஆய்வுக்கூட்டத்தில் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா கல்விக்காக அதிக அக்கறை எடுத்து செயல்படுத்தி வருகிறார். அதனால் தான் கல்விக்காக பட்ஜெட்டில் அதிக நிதியை ஒதுக்கி தேவைக்கு ஏற்ற ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளார் அதற்கான பணி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் கல்வி கற்றோர் விகிதாச்சாரம் 80.33 ஆக உள்ளது. இதில் ஆண்கள் 86.81 ஆகும். பெண்கள் கல்வி விகிதம் 73.86 ஆகும்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2012-13ம் கல்வி ஆண்டு முதல் பள்ளிக்கல்வித்துறையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார். இந்த சலுகைகள் காரணமாக கிராமங்களில் படிக்கும் மாணவர்கள் இடையில் கல்வியை நிறுத்துவதை தவிர்ப்பார்கள்.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைகள் விதிகள் 2011 என்ற புத்தகம் வெளியிடப்படுவதால் தரமான இலவச மற்றும் கட்டாய இலவச கல்வியை உறுதி செய்கிறது.
அனைத்து கல்வித்துறை அதிகாரிகளும், ஊழியர்களும், கல்வியாளர்களும் இந்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி நமது மாநிலத்தை கல்வித்துறையில் முதன்மை மாநிலமாக ஆக்குவதில் ஈடுபடவேண்டும்.
கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் கடமை உணர்வோடும் முழு அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்றவேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி பேசினார். அவரிடம் டி.பி.ஐ. வளாகம் எப்போது புதுப்பொலிவு பெறும் என்று கேட்டதற்கு விரைவில் அனைத்து வசதிகளுடன் புதுப்பொலிவு பெறும் என்று பதில் அளித்தார்.

G.O Ms. No. 10 Dt : January 19, 2012-Thane Cyclone – December 2011 – Disaster caused – Voluntary contribution to chief Ministers Public Relief Fund for Relief and Rehabilitation measures to the affected people – One day salary contribution by Government Employees Associations / Unions – Procedures – Orders – Issued.

தமிழக அமைச்சர்களை மாற்றியமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அமைச்சர்களை மாற்றியமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்ற தேர்வு செய்யப்படும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களின் பட்டியலை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பள்ளிக் கல்வி இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்ற தேர்வு செய்யப்படும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களின் பட்டியலை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பள்ளிக் கல்வி இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

SUN NEWS LIVE TV

//

கண்ணைக் கவரும் கலை உலகம் – திருமதி மேனகா நரேஷ் அவர்களின் தினத்தந்தி ஞாயிறு மலர் – நேர்காணல்

அரசு அதிகாரிகள் குடியிருப்பில் அமைந்திருக்கும் அந்த வீட்டுக்குள் நுழைந்தால், கலை உலகத்திற்குள் நுழைந்த பிரமிப்பு.
புன்னகை முகமாய் காட்சி தரும் பெண்ணின் பெரிய ஓவியம், சுவரையே உயிருள்ள சித்திரமாக்கி பேசவைக்கிறது.
-என்னோடு ஒரு நிமிடம் பேச முடியுமா?’ என்று பார்ப்பவரிடம் கேட்பது போல் தோன்றுகிறது, பழக்கூடை சுமந்த இன்னொரு பெண்ணின் ஓவியம்.

திரும்பிய பக்கங்கள் எல்லாம் இப்படி திரும்பிப் பார்க்கவைக்கும் அந்த கலை உலகத்திற்குள் ஓடிக்குதித்து விளையாடிக்கொண்டிருக்கின்றன, இரண்டு உயிர் படைப்புகள். இரண்டும் பெண் குழந்தைகள்!
`அம்மாவை எங்கே?’ நாம் கேட்டு முடிப்பதற்குள், `தனக்கும் அந்த அற்புதமான ஓவியங்களுக்கும் தொடர்பே இல்லை’ என்பது போன்ற எளிமையுடன், கிராமத்து மணம் கலந்த பேச்சுடன் நம்மை வரவேற்கிறார், ஓவியர் மேனகா நரேஷ்.
“உலகிலே தலை சிறந்த ஓவியர் இயற்கைதான். இயற்கை படைத்த வானம், கடல், மலை, அருவி.. எல்லாம் எவ்வளவு அழகாக இருக்கின்றன. அவைகளை காலம் முழுக்க பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதே இயற்கைதான் ஓவியம் வரைய நம்மையும் படைத்திருக்கிறது. அதனால் இயற்கையோடு நாம் இரண்டறக் கலந்து சிந்தித்து, செயல்படத் தொடங்கிவிட்டாலே நமக்கு ஓவியம் வரையும் ஆற்றல் வந்துவிடும்..”- என்று கூறும் இவர், ஓவிய சாதனையாளர். எம்.எஸ்சி, எம்.பில். படித்துள்ளார். மல்டி மீடியா துறையில் முதுகலை டிப்ளமோ படித்துவிட்டு அனிமேஷன் துறையில் 3 டி ஓவியராகவும் திகழ்கிறார்.
எல்லா குழந்தைகளும் சுவரில் கிறுக்குகிறது. அதுவே சிறுமியானதும், கோலமிடு கிறது. வீட்டையும் அலங்காரம் செய்கிறது. இப்படி படைப்பாற்றல் எல்லா பெண்களிடமும் இருந்தும், சிலரால் மட்டும்தானே ஓவியர் ஆக முடிகிறது. அது ஏன்?

“எல்லா குழந்தைகளும் பார்ப்பதை, கேட்பதை ரசிக்கின்றன. தான் ரசிக்கும் அழகில் கற்பனையையும், திறமையையும் கலந்து படைப்பாக வெளிக்கொண்டுவர துடிக்கின்றன. அதன் வெளிப்பாடுதான் குழந்தைகளின் கிறுக்கல். கிறுக்கல்களில் ஆரம்பித்து படிப்படியாக மேம்பட்டு, ஓவியராவது ஒரு வகை. ஓவியத்தைப் பார்த்து, பிரமித்து அதில் ஏற்படும் ஈடுபாட்டால் ஓவியரிடம் பயிற்சி பெற்று, ஓவியராக உருவாகுவது இன்னொரு வகை.

ஒரு பெண் ஓவியராக வெற்றி பெற வேண்டுமென்றால், அவரது குடும்பத்தினர் ஒத்துழைப்பு தரவேண்டும். திருமணத்திற்கு பிறகு கணவர் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அவளால் ஓவியராக நிலைத்து நிற்க முடியும். ஓவியம் வரைய சரியான ஆரம்பம் வேண்டும். தொடர்ந்து நிறைய, நிறைய கற்பனை செய்யவேண்டும். வெளி விஷயங்களிலோ, பொழுதுபோக்கிலோ நேரத்தை செலவிடாமல், அந்த நேரத்தை எல்லாம் ஓவியத்திற்காக அர்ப்பணிக்கவும் வேண்டும். அது எல்லோராலும் முடியாது என்பதால்தான் நிறைய ஓவியர்கள் உருவாவதில்லை..”


ஓவியத்தில் சிறந்து விளங்குவது ஆணா? பெண்ணா?
“ஓவியர்களில் ஆண், பெண் வித்தியாசம் இல்லை. ஆனால், ஆண் என்றால் நேரங்காலம் பார்க்காமல் தனியாக எந்த இடத்திற்கு சென்றும் வரையலாம். பெண்களால் அது இயலாத காரியம். ஆனால் எந்த ஒரு விஷயத்தையும் கூர்ந்து கவனிப்பது, கவனம் சிதறாமல் வரைவது போன்றவைகளில் ஆண்களை விட பெண்களுக்கு வாய்ப்புகள் அதிக சதவீதத்தில் உள்ளது..”
நீங்கள் ஓவியம் வரையத் தொடங்கிய காலத்தில் அதிகம் கிடைத்தது, பாராட்டா? திட்டா?
“நான் அறியாத வயதில் வரைந்த ஓவியங்களுக்கு பாராட்டைவிட திட்டுகளே அதிகம் கிடைத்தது. அதில் ஒரு திருப்பமாக 10 வயதில், இசைஞானி இளைய ராஜாவின் படம் கிடைத்தது. அந்த இரவே அதை தத்ரூபமாக வரைந்து பெற்றோரிடம் காட்டி பாராட்டு வாங்கிவிட்டேன். அன்றிலிருந்து நான் திட்டு வாங்கவே இல்லை..”
சராசரி பெண்ணும், ஓவியரான பெண்ணும் பிரச்சினைகளை அணுகும் விதத்தில் வித்தியாசப்படுவார்களா?
“ஓவியப் பெண்கள் சராசரி பெண்களைக்காட்டிலும் பொறுமைசாலிகள். பிரச்சினையின் தீவிரத்தை அறிந்து எளிதில் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக, சகிப்புத்தன்மையுடன் அணுகுவார்கள். தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வார்கள். அவர்களின் அணுகுமுறையில் மென்மை எப்போதும் இருக்கும் என்பதால், எந்த பிரச்சினையும் எல்லைமீறி வன்முறையில் போய் முடிந்துவிடாது”
பெண் ஓவியர்கள் எந்த நேரமும் தூரிகையும், கற்பனையுமாக இருந்தால்- யதார்த்த உலகத்திற்கும், அவர்களுக்கும் இடைவெளி விழுந்துவிடும் அல்லவா?
“எந்த பெண்ணாலும் முழுநேர ஓவியராக இருக்கமுடியாது. குடும்பத்திற்காக அவள் தன் கடமைகளை செய்தாகவேண்டும். இந்திய பெண்களின் வெற்றி என்பது அவளது குடும்பத்தோடு கலந்ததாகத்தான் இருக்கும். என் வெற்றிக்கு என் கணவர் காரணம். என்னுடைய இருமகள்களும் மிகுந்த பொறுப்புணர்ச்சி கொண்ட வர்கள். இரண்டாம் வகுப்பு படிக்கும் என் பெரிய மகள் பூஜா பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், அவளது பள்ளி அடையாள அட்டையையும், பெல்ட்டையும் கழற்றி அவளுடைய பையிலே வைத்துக்கொள்வாள். அதனால் அவைகளை மறுநாள் காலையில் தேடி எடுக்கும் நேரம் மிச்சமாகும். யு.கே.ஜி. படிக்கும் சின்ன மகள் ஸ்ரீஜாவும் அப்படித்தான். இருவரும் இப்போதே ஓவியத்திலும், கல்வியிலும் பரிசுகளை குவிக்க ஆரம்பித்து விட்டார்கள்..”
பாடகிகள் தோற்றத்திலும் அழகுணர்ச்சியுடன் காணப்படுகிறார்கள். ஓவியம் வரையும் பெண்களும் அழகாக தோன்றுவது அவசியமா?
“பொதுவாக பாடகிகள் பாடும்போதும், நடன கலைஞர்கள் ஆடும்போதும் அவர்களது தோற்றமும் ரசிகர்களால் கவனிக்கப்படுகிறது. ஆனால் ஓவியரைப் பொறுத்தவரையில் அவரது படைப்பு மட்டுமே பார்க்கப்படுகிறது. ரசிக்கப்படுகிறது. ஆனாலும் ஓவியம் வரையும் பெண்களும் அழகுணர்ச்சி கொண்டவர்கள்தான். அவர்களது நடை, உடை, பாவனையிலும் நேர்த்தியிருக்கும்”
ஒரு ஓவியரின் மிகச்சிறந்த படைப்பு எது?
“என்னைப் பொறுத்தவரையில் தினமும் எனது ஒவ்வொரு செயலையும் சிறந்த படைப்புபோல் ஆழ்ந்து கவனித்துதான் செய்கிறேன். ஓவியத்திற்கு அப்பால், என் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதும், என் குழந்தைகளுக்காக சமைப்பதும், கணவருக்கு தேவையானதை செய்வதும் என் கனிவான படைப்புதான். ஓவியர்களின் வாழ்க்கையே படைப்பு மாதிரி முழுமையுடன் அழகாக ஜொலிக்கும்..”
மாநில அளவில் உங்களுக்கு முதன்முத லில் பரிசு வாங்கித் தந்த ஓவியம் எது?
“அழகு என்ற தலைப்பில் முகத்தில் வரைந்த `பேஸ் பெயிண்டிங்’ எனக்கு மாநில அளவில் பரிசு பெற்றுத்தந்தது. ஒரு பெண் முகத்தின் பாதியில் அவளது 20 வயது தோற்றத்தையும், மறுபாதியில் அவளது 80 வயது தோற்றத்தையும் வரைந்தேன். அழகு நிரந்தரமல்ல என்ற என் ஓவியக் கருத்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது..”
எத்தனை வகையான ஓவியங்கள் உங்களுக்கு தெரியும்?
“பேஸ் பெயிண்டிங் செய்வேன். மீள் உருவாக்கத்திலும் நிறைய படைத்துள்ளேன். மீள் உருவாக்கம் என்பது உலகப்புகழ் பெற்ற ஓவியர்களின் படைப்புகளை அதுபோல் அப்படியே பார்த்து வரைவது. லியானோ டோ டாவின்சி, லொரெய்ன், ஜான் கான்ஸ்டபிள், ராஜா ரவி வர்மா போன்ற பல உலகப் பிரபலங்களின் படைப்புகளை மீண்டும் உருவாக்கியுள்ளேன். ஒரே நிமிடத்தில் பூக்களை வரையக்கூடிய `ஒன் ஸ்டோக் பெயிண்டிங்’, பேப்பரில் செய்யும் கலைவடிவங்கள், சில்க் ரிப்பனில் பூக்கள் தயாரித்தல், ரங்கோலி, களிமண்- சோப்பில் சிற்பங்கள் செய்தல் போன்றவைகளும் எனக்கு தெரியும். அதை எல்லாம் குழந்தைகளுக்கு இப்போது கற்றுக்கொடுக்கிறேன். என்னிடம் கற்ற பல குழந்தைகள் பள்ளிகளில் ஓவியப் பரிசுகளை வென்றுள்ளனர்”
நீங்கள் தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொண்டது எப்படி?
“நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு கணினி அறிவியல் படித்தேன். அங்கு வருடத்திற்கு ஒருமுறை கலாசார விழா நடக்கும். அதில் 8 போட்டிகளில் வெல்பவர்களில் 2 பேரை சிறந்த ஓவியராக தேர்ந்தெடுத்து தேசிய போட்டிக்கு அனுப்புவார்கள். நானும் 8 போட்டிகளில் தேர்வாகி, தேசிய போட்டியில் கலந்துகொண்டேன்”
அனிமேஷன் கல்வியையும் கற்றிருக்கிறீர்கள். அதை எப்படி மக்களுக்கு பயனுள்ளதாக்குகிறீர்கள்?
“சிக்கலான அறிவியல் விஷயங்களை எளிமைப்படுத்துவதற்கும், சமூக பிரச்சினைகளை மக்களுக்கு எளிதில் புரிய வைப்பதற்கும் அனிமேஷன் உதவுகிறது. ஒரு நல்ல ஓவியரால்தான் சிறந்த அனிமேட்டராக முடியும். அனிமேஷன் மூலம் பெண் சிசுக்கொலை, தண்ணீர் சேமிப்பு, கண் தானம் போன்ற பல சமூக விஷயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன். மகாபலிபுரத்தில் உள்ள சிற்பங்களையும் அனிமேஷனில் புதுமையான முறையில் விளக்குகிறேன்”
மேனகா நரேஷ் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர். பெற்றோர்: கண்ணன்- எழிலரசி. இவரது கணவர் நரேஷ் தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் துறை இணை இயக்குனராக பணியாற்றுகிறார். இவர்கள் சென்னை அரசினர் தோட்டத்தில் வசித்து வருகிறார்கள்.

நன்றி : தினத்தந்தி ஞாயிறு மலர் தேதி :14.01.2012

…..

தைத்திருநாளாம் இப்பொங்கல் நன்னாளில் உங்கள் இல்லங்களில் பொங்கும் உற்சாகமும் மகிழ்வும் வருடம் முழுவதும் நிலைத்திருக்க, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் கல்விச்சோலையின் இனிய தமிழர்த் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

தைத்திருநாளாம் இப்பொங்கல் நன்னாளில் உங்கள் இல்லங்களில் பொங்கும் உற்சாகமும் மகிழ்வும் வருடம் முழுவதும் நிலைத்திருக்க, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் கல்விச்சோலையின்  இனிய தமிழர்த் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

பள்ளிக் கல்வித் துறை- அரசு / நகராட்சி உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

சமச்சீர்கல்வி பாடத்திட்டத்தின் படி ஏப்ரல் 2012 – பத்தாம் வகுப்பிற்கான புதிய மாதிரி வினாத்தாள், தமிழ்நாடு பள்ளிக்கல்வி – அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் அனைத்து பாடங்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளன.

சமச்சீர்கல்வி பாடத்திட்டத்தின் படி ஏப்ரல் 2012 – பத்தாம் வகுப்பிற்கான  புதிய  மாதிரி வினாத்தாள், தமிழ்நாடு பள்ளிக்கல்வி – அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் அனைத்து பாடங்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளன.

சமச்சீர்கல்வி பாடத்திட்டத்தின் படி ஏப்ரல் 2012 – பத்தாம் வகுப்பிற்கான புதிய மாதிரி வினாத்தாள், தமிழ்நாடு பள்ளிக்கல்வி – அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் அனைத்து பாடங்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளன.

சமச்சீர்கல்வி பாடத்திட்டத்தின் படி ஏப்ரல் 2012 – பத்தாம் வகுப்பிற்கான  புதிய  மாதிரி வினாத்தாள், தமிழ்நாடு பள்ளிக்கல்வி – அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் அனைத்து பாடங்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளன.
(NEW)

Restricted Holidays – 2012

Letter No. 14483 / CMPC / 2011—1, dated: 05–01—2012-Tamil Nadu Revised Scales of Pay, 2009 – Revision of scale of pay of certain categories of Teachers — Fixation of pay in the Selection Grade / Special Grade – Clarification – Issued.

1-1-2010-ன்படி 495 அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் முன்னுரிமைப் பட்டியலின்படி பணிவரன்முறை செய்யப்பட்டவர்கள் விவரம்

29–வது பாரதியார் தின விளையாட்டுப்போட்டிகள் – துவக்க விழா காட்சிகள்

8-ம் தேதி நடக்க இருந்த, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவிகளுக்கான போட்டித் தேர்வு, பிப்., 19-ம் தேதிக்கு தள்ளி வைத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.தொடக்க கல்வித் துறையில், 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் (ஏ.இ.இ.ஓ.,), போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.

8-ம் தேதி நடக்க இருந்த, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவிகளுக்கான போட்டித் தேர்வு, பிப்., 19-ம் தேதிக்கு தள்ளி வைத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.தொடக்க கல்வித் துறையில், 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் (ஏ.இ.இ.ஓ.,), போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக மாநில அளவிலான 29–வது பாரதியார் தின விளையாட்டுப்போட்டிகள் 06.01.2012 முதல் 08.01.2012 வரை விழுப்புரம், ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக மாநில அளவிலான 29–வது பாரதியார் தின விளையாட்டுப்போட்டிகள் 06.01.2012 முதல் 08.01.2012 வரை விழுப்புரம், ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. விழா தலைமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திருமதி கா.த.மணிமேகலை அவர்கள், முன்னிலை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முனைவர் தி.ஸ்ரீ.ஸ்ரீதர் அவர்கள், பாரதியார் தின விளையாட்டுப்போட்டிகளைத் துவக்கி வைத்து விழாப் பேருரை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை, சட்டத்துறை அமைச்சர் திரு சி.வி.சண்முகம் அவர்கள், வரவேற்புரை பள்ளிக்கல்வி இயக்குனர் முனைவர் ப.மணி அவர்கள், நன்றியுரை விழுப்புரம், முதன்மைக்கல்வி அலுவலர் திரு. பெ.புண்ணியகோட்டி அவர்கள். அனைவரும் வருக. 

விழா சிறக்க கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்.