Category Archives: ANNOUNCEMENT

>பிப்ரவரி26 முதல் மறியல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது குறித்து முதன்மைகல்வி அலுவலருக்கு முதுகலை மற்றும் தலைமைஆசிரியர்கள் கடிதம் அனுப்பினர்

>

பிப்ரவரி26 முதல் மறியல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது குறித்து முதன்மைகல்வி அலுவலருக்கு முதுகலை மற்றும் தலைமைஆசிரியர்கள் கடிதம் அனுப்பினர்

>மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 9ம் தேதி துவக்கம். 28ம் தேதி வரை கணக்கெடுப்பு பணி நடைபெறும்.

>

"மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு வீடு வீடாக வரும் அலுவலர்களுக்கு, ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தால், சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி: இந்தியா முழுக்க ஒரே காலகட்டத்தில், 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, நாளை (9ம் தேதி) துவங்குகிறது. இந்த மாதம் 28ம் தேதி வரை கணக்கெடுப்பு பணி நடைபெறும். சென்னை மாநகர பகுதியில், மாநகராட்சி கமிஷனர் முன்னிலையில், கணக்கெடுப்பு பணி நடைபெறும். தமிழகம் முழுவதும், 150 நகராட்சிகளில், அந்தந்த நகராட்சி கமிஷனர்களின் பொறுப்பில், கணக்கெடுப்பு பணி நடக்கும். மற்ற இடங்களில், வட்டாட்சியர்களின் மேற்பார்வையில் நடக்கும். ஒட்டு மொத்த கணக்கெடுப்பு பணி, அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் பொறுப்பில் நடைபெறும். முதற்கட்டமாக, கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில், வீட்டுப் பட்டியல், வீடுகள் கணக்கெடுக்கும் பணி முடிக்கப்பட்டது. எங்கெங்கு மக்கள் வசிக்கின்றனர், எவ்வளவு வீடுகள், மின்சார வசதி, குடிநீர் வசதிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறும். 21 நாட்களில் கணக்கெடுப்பு பணி முடிக்க வேண்டும்; கால நீடிப்பு இருக்காது. தமிழகம் முழுவதும், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு, மேற்பார்வையாளர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்கள் என 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுவர்.

Read more »

>PM to launch scheme to keep cell number but switch operator

>

Prime Minister Manmohan Singh will on Thursday unveil a new scheme that will permit mobile phone users to change their service providers without having to forgo their numbers in what in industry jargon is called mobile number portability.
The service is currently available in Haryana but is being extended nationwide in a bid to ensure that people dissatisfied with the quality of service of the existing telecom providers are given a choice while being able to retain their phone numbers.
The event is scheduled at 5pm at the Vigyan Bhavan official convention centre here to be presided over by minister for communications Kapil Sibal in the presence of two ministers of state — Sachin Pilot and Gurudas Kamat.
India currently has over 700 million mobile phone users, making the network the largest in the world after China but ahead of the US. The country has been adding 15-18 million new mobile phone connections to the network every month.
Ahead of the pan-India launch of the scheme, some companies had already started their advertising campaigns to woo dissatisfied customers from other networks. Idea Cellular was the first to start the campaign, followed by Vodafone recently.
The scheme was delayed several times in the past. Initially, it was to be implemented by Dec 31, 2009, in all the metros along with Maharashtra, Gujarat, Andhra Pradesh, Karnataka and Tamil Nadu.
The deadline was changed to March 31, 2010, and then to June 30 and subsequently again to October 31. But these were again deferred as operators were not ready with the infrastructure to provide the service.
On November 25, the scheme was launched in Haryana and Kapil Sibal said it would be made a pan-India offer from Jan 20.
To avail the service, a customer will have to pay a maximum of Rs.19 to the new operator for “porting” the numbers. The customer then has to remain with the new operator for at least three months.
The customer has to send an SMS from the existing phone to 1900. Based on this, a unique porting code will be sent by existing provider. The customer has to file an application then with the new service provider mentioning the code for transferring the connection.
Officials said the maximum waiting period fixed for porting is seven working days. But the number will remain out of service for just two hours.
The technology is widely prevalent in most parts of Europe and North America, and in countries like Singapore, Taiwan and South Korea.

PM to launch scheme to keep cell number but switch operator

>பி.எட்., படிப்பிற்கு 30ம் தேதி முதல் விண்ணப்பம்

>

பி.எட்., படிப்பிற்கு 30ம் தேதி முதல் விண்ணப்பம்

>பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் பொது நூலகங்களில் இலவசமாக பார்க்க ஏற்பாடு

>

பிளஸ் 2 பொதுத் தேர்வை தமிழகத்தில் உள்ள அனைத்துப் பொது நூலகங்களிலும் மாணவ, மாணவியர் இலவசமாகப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பொது நூலக இயக்குநர் அறிவொளி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் பள்ளிக் கல்வித் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.
அனைத்து மாவட்ட நூலக அலுவலர்களும், தங்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து நூலகர்களுக்கும் தக்க அறிவுரைகளை வழங்கி தேர்வு முடிவு வெளியாகும் நாள் தொடங்கி 3 நாள்களுக்கு மட்டும் இலவசமாகத் தேர்வு முடிவுகளைக் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் பொது நூலகங்களில் இலவசமாக பார்க்க ஏற்பாடு

பிளஸ் 2 பொதுத் தேர்வை தமிழகத்தில் உள்ள அனைத்துப் பொது நூலகங்களிலும் மாணவ, மாணவியர் இலவசமாகப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பொது நூலக இயக்குநர் அறிவொளி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் பள்ளிக் கல்வித் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.
அனைத்து மாவட்ட நூலக அலுவலர்களும், தங்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து நூலகர்களுக்கும் தக்க அறிவுரைகளை வழங்கி தேர்வு முடிவு வெளியாகும் நாள் தொடங்கி 3 நாள்களுக்கு மட்டும் இலவசமாகத் தேர்வு முடிவுகளைக் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

>தொடக்​கக் கல்வி ஆசி​ரி​யர்​க​ளுக்​கான முன்​னு​ரி​மைப் பட்​டி​யல் வெளி​யீடு

>

ஊராட்சி ஒன்​றிய,​​ நக​ராட்சி,​​ அரசு தொடக்க மற்​றும் நடு​நி​லைப் பள்​ளி​க​ளில் பணி​பு​ரி​யும் ஆசி​ரி​யர்​க​ளுக்கு பதவி உயர்​வுக்​கான முன்​னு​ரி​மைப் பட்​டி​யல் இணை​ய​த​ளத்​தில் வெளி​யி​டப்​பட்​டுள்​ளது.​
​ 2010-11-ம் கல்வி ஆண்​டுக்​கான பொது மாறு​தல்​கள் மற்​றும் பதவி உயர்​வு​கள் கலந்​தாய்வு மூலம் நடை​பெற உள்​ளது.​
​ ​ ஒன்​றி​யம் வாரி​யாக அனைத்து ஆசி​ரி​யர்​க​ளி​டம் இருந்து முன்​னு​ரி​மைப் பட்​டி​ய​லுக்கு உரிய விவ​ரங்​கள் அந்​தந்த ஆசி​ரி​யர்​க​ளி​டம் இருந்தே பெறப்​பட்டு,​​ இணை​ய​த​ளத்​தில் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன.​
​ பதிவு செய்​யப்​பட்ட விவ​ரங்​கள் சரி​பார்க்​கப்​பட்டு மீண்​டும் பதிவு செய்​யப்​பட்​டது.​ அவ்​வாறு பதிவு செய்​யப்​பட்ட விவ​ரங்​க​ளைக் கொண்டு ஒன்​றி​யம் வாரி​யாக அனைத்​துப் பணி​யி​டங்​க​ளுக்​கும் முன்​னு​ரிமை பட்​டி​யல் தயா​ரிக்​கப்​பட்​டுள்​ளது.​
பட்​டி​யல்
என்ற இணை​ய​த​ளத்​தில் வெளி​யி​டப்​பட்​டுள்​ளது.​
பட்​டி​யலை அனைத்து உத​வித் தொடக்​கக் கல்வி அலு​வ​லர்​க​ளும்,​​ அவர்​க​ளின் ஒன்​றி​யங்​க​ளுக்​கு​ரிய முன்​னு​ரி​மைப் பட்​டி​யல்​களை பிரதி எடுத்து அலு​வ​ல​கங்​க​ளில் ஆசி​ரி​யர்​க​ளின் பார்​வைக்கு வைக்க வேண்​டும்.​
பட்​டிய​லில் ஏதே​னும் தவறு இருந்​தால்,​​ அதனை எழுத்​துப் பூர்​வ​மாக சம்​பந்​தப்​பட்ட உத​வித் தொடக்​கக் கல்வி அலு​வ​லர் மூல​மாக மாவட்​டத் தொடக்​கக் கல்வி அலு​வ​ல​ருக்கு அனுப்ப வேண்​டும்.​ ​
தங்​கள் குறை​களை இணை​ய​த​ளத்​தில் உள்ள படி​வத்​தி​லும் பூர்த்தி செய்​ய​லாம்.​ குறை​களை நிவர்த்தி செய்​யும் விண்​ணப்​பம் மே 15-ம் தேதிக்​குள் வந்து சேர வேண்​டும்.
ஆசி​ரி​யர்​க​ளின் குறை​கள் சம்​பந்​தப்​பட்ட மாவட்​டத் தொடக்​கக் கல்வி அலு​வ​லர்​க​ளுக்கு அனுப்​பப்​பட்டு,​​ அவர்​க​ளால் விவ​ரங்​கள் சரி​பார்க்​கப்​பட்டு,​​ அவை சரி​யாக இருப்​பின் உரிய மாற்​றங்​கள் முன்​னு​ரிமை பட்​டியி​லில் மேற்​கொள்​ளப்​ப​டும்.​
திருத்​திய பட்​டி​யல் மே 18-ம் தேதி மேற்​கூ​றிய இணை​ய​த​ளத்​தி​லேயே வெளி​யி​டப்​ப​டும் என தொடக்​கக் கல்வி இயக்​க​கம் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

இந்தியாவில் இன்னும் ஓராண்டில் ஐந்து லட்சம் வேலைவாய்ப்பு

இந்த நிதியாண்டில், ஐ.டி., டெலிகாம் உள்ளிட்ட பல துறைகளிலும், ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் இருப்பதாக, சர்வதேச வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.எர்னஸ்ட் அண்டு யங், கெல்லி சர்வீசஸ் நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில், 2010-11 நிதியாண்டில், பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
வங்கி, டெலிகாம், ஐ.டி., ஆகிய மூன்றும் தான், இதில் முன்னணியில் இருக்கின்றன. ஐ.டி., மற்றும் அதன் தொடர்புடையவற்றில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உள்ளன’ என்கிறார் கெல்லி சர்வீசஸ் நிர்வாக இயக்குனர் கமல் கரந்த்.டெலிகாம் துறையில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளும், உடல் நலம் மற்றும் வங்கித் துறைகளில் முறையே இரண்டு லட்சத்து 50 ஆயிரம் மற்றும் 40 ஆயிரம் வேலைவாய்ப்புகளும் இருப்பதாக கெல்லி மற்றும் எர்னஸ்ட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
‘இவை தவிர, மருத்துவம், அதிகளவில் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள், கல்வி ஆகிய துறைகளிலும், கணிசமான அளவுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன’ என்கிறார் எர்னஸ் அண்டு யங் நிறுவனத்தின் தலைவரும் பங்குதாரருமான என்.எஸ்.ராஜன். ரியல் எஸ்டேட், சில்லரை வணிகம், உற்பத்தித் துறைகளிலும் வேலைவாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

>இந்தியாவில் இன்னும் ஓராண்டில் ஐந்து லட்சம் வேலைவாய்ப்பு

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் ஏப்., 29 க்குள் விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் பொது இடமாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்போர், ஏப்., 29க்குள் விண்ணப்பிக்க வாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளது. ஆண்டுதோறும் மே மாதம், ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக் கான பட்டதாரி ஆசிரியர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், தொழிற்கல்வி ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடக்க உள்ளது. இடமாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்கள் வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண் டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல், மாவட்டத்திற்குள்ளான இடமாறுதல் வேண்டுவோர் உடனடியாக விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் முதன்மை கல்வி அலு வலகங்களில் உள்ளன. விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வரும் 29ம் தேதிக்குள் மீண்டும் முதன்மை கல்வி அலுவலகத்திலேயே ஒப்படைக்க வேண்டும்.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்., 20ல் நிறை வடைய உள்ளன.இதை தொடர்ந்து, தொகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.இந்த பணிகள் நிறை வடைந்த பின்,தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.கடந்த ஆண்டு மே மாதம் 16ல் தேர்வு முடிவு வெளியானது. இந்த ஆண்டு முன்கூட்டியே தேர்வு முடிவை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஆசிரியர் இட மாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படும்

>ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் ஏப்., 29 க்குள் விண்ணப்பிக்கலாம்

6 வயது முதல் 14 வயது வரை அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி புதிய சட்டம் இன்று முதல் அமல்

6 வயது முதல் 14 வயது வரை

அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி

புதிய சட்டம் இன்று முதல் அமல்
6 வயது முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் கல்வி பெறுவது அவர்களின் அடிப்படை உரிமை என்று கடந்த 2002-ம் ஆண்டு மத்திய அரசு சட்டத் திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது.
86-வது சட்ட விதியில் செய்யப்பட்ட இந்த திருத்தம் காரணமாக எதிர் காலத்தில் ஒவ்வொரு இந்தியனும் கல்வி அறிவுப் பெற்றவராக இருப்பார்கள் என்பது குறிப் பிடத்தக்கது. பாராளுமன் றத்தில் இந்த சட்டத்திருத்தத் துக்கு கடந்த ஆண்டு ஒப்பு தல் பெறப்பட்டது.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏற்கனவே தகவல் அறியும் உரிமைச் சட்டம், தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டத் திருத்தம் ஆகியவற்றை கொண்டு வந்து சாதனை படைத்துள்ளது.
அந்த வரிசையில் அனைத் துக் குழந்தைகளுக்கும் கட் டாய இலவச கல்வி கொடுக் கும் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சட்டத் திருத்தம் செய்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அடிப்படை உரிமை சட்டம் அமலுக்கு வந்துள்ளது குறிப் பிடத்தக்கது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த சட்டத்திருத்தம் மூலம் இந்தியா முழுவதும் சுமார் 1 கோடி குழந்தைகள் பயன்பெறுவார்கள். அதற் காக 14 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளை யும் பள்ளிக்கு அனுப்புவதை மாநில அரசுகள் மற்றும் உள் ளாட்சி அமைப்புகள் உறுதி செய்து கொள்ள உத்தர விடப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் 6 வயது முதல் 14 வயதுக்குட் பட்டவர்கள் சுமார் 22 கோடி பேர் உள்ளனர். இவர் களில் சுமார் 1 கோடி குழந் தைகள் பல்வேறு காரணங் களால் கல்வியை பாதியில் கைவிட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் புதிய சட்டம் மூலம் இலவசமாக, கட்டாய மாக கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஒவ்வொரு ஊரிலும் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்-சிறுமிகளில் யார், யார்? பள்ளிக்கு செல்ல வில்லை என்பதை அந்தந்த பகுதி பள்ளிக் கூடங்களும், உள்ளாட்சி அமைப்புகளும் கணக்கெடுப்பு நடத்தி கண்டு பிடிக்கும். பிறகு சிறுவர்கள், அவர்கள் வயதுக்கு ஏற்ப உரிய வகுப்புகளில் சேர்க் கப்படுவார்கள். இதற்காக சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்படும்.
இது தவிர கல்வி பெறு வதை அடிப்படை உரிமை யாக்கும் சட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களின் சேவைக்கும் சில அம்சங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி பொருளாதாரத் தில் மிகவும் பின்தங்கியவர் களுக்கு தனியார் பள்ளி களில் 25 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இதனால் கிரா மங்களில் வாழும் ஏழை- எளியவர்களின் குடும் பத்து குழந்தைகள் கல்வி பெறுவது 100 சதவீதம் உறுதிப் படுத் தப்பட்டுள்ளது.
இந்த 25 சதவீத இட ஒதுக் கீட்டை எதிர்த்து சில தனியார் பள்ளிகள், மானியம் பெறாத பள்ளிகள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. பள்ளிகளின் அடிப்படை உரிமையை பாதிக்கும் வகை யில் இந்த சட்டம் இருப்பதாக தனியார் பள்ளிகள் தங்கள் மனுவில் கூறி உள்ளன. என்றாலும் இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் எந்த சட்டச் சிக்கலும் வராது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி கபில்சிபல் கூறினார்.
2010-11ம் கல்வி ஆண்டுக் கான சேர்க்கைகள் நாடெங் கும் பெரும்பாலும் நடந்து முடிந்து விட்டது. எனவே தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகள் கல்வி பெற 25 சதவீத இடம் ஒதுக் குவது அடுத்த கல்வி ஆண்டு (2011-12) முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.
ஆண், பெண் வித்தியாச மின்றி அனைத்து சிறுவர்- சிறுமி களும் பயன் பெறும் இந்த திட்டத்துக்கான மொத்த செலவில் 55 சதவீ தத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும். மாநில அரசுகள் 45 சதவீத செலவை ஏற்கும் மாநில அரசுகள் இந்த சட்டத்தை இடையூறின்றி நிறைவேற்றுவதற்காக மத்திய நிதிக் கமிஷன் ரூ.25 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளது.
மத்திய அரசின் கணக் கீட்டுப்படி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு குழந்தை களுக்கு கட்டாய, இலவச கல்வி கொடுக்க 1.71 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று தெரிய வந்துள்ளது. நாடெங்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவச கல்வி கொடுத்தே தீர வேண்டும் என்று அரசு தீவிரமாக உள்ளதால் 1.71 லட்சம் கோடி நிதியை திரட்டி விட்டதாக மத்திய மந்திரி கபில்சிபில் கூறினார்.
கல்வி உரிமைச் சட்டத்தின் படி எந்த ஒரு பள்ளியும் 6 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமி களை சேர்க்க இயலாது என்று சொல்ல முடியாது. மேலும் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்க பயிற்சி பெற்ற திறமையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஒரு வேளை திறமையான ஆசிரியர்கள் இல்லை யெனில் 3 ஆண்டு களுக்குள் நியமித்து விட வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது.
மேலும் எல்லா பள்ளிக் கூடங்களிலும் போதுமான அளவுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் விளையாடு வதற்கு ஏற்ற மைதானம் மற்றும் கட்டமைப்புகள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற விதிகளை அந் தந்த மாநில அரசுகள் உரு வாக்கிக் கொள்ள மத்திய அரசு கூறியுள்ளது. சில மாதிரி விதிகளையும் மத்திய அரசு உருவாக்கி, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத் துள்ளது.
யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிகளுக்கு என தனி விதிமுறைகளை மத்திய அரசு தயாரித்துள்ளது. அந்த விதிகளை சட்ட அமைச்சகம் அடுத்த வாரம் வெளியிட உள்ளது.
புதிய மாதிரி விதிப்படி, உள்ளாட்சி அமைப்புகள், ஒவ்வொரு வீட்டிலும் சர்வே செய்து 6 முதல் 14 வயது வரை குழந்தைகள் பற்றி தக வல்கள் சேகரிக்கும். பிறகு அருகில் உள்ள பள்ளிக் கூடம் மற்றும் அதில் உள்ள இட வசதிகளை ஆய்வு செய் யும். இதன் மூலம் அனைத் துக் குழந்தைகளும் பள்ளிக்கு செல்வது உறுதிப்படுத் தப்படும்.
சாதி, மதம், ஆண், பெண் போன்ற பேதங்கள் பார்க் காமல் குழந்தைகள் அனை வரும், பள்ளிக்கு செல்வது கட்டாயமாக்கப்படும்.
25 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்று தனியார் பள்ளிகளில் சேரும் குழந்தைகள், பிரித்து விட்டவர்கள் போல தனி யாக நடத்தப்பட கூடாது என்பதை உறுதி செய்ய வும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது. மேலும் எல்லா குழந்தைகளுக்கும் ஏனோ, தானோ என் றில் லாமல் தரமான கல் வியை பெற வேண்டும் என்று புதிய சட்டத்தில் வலியுறுத்தப்பட் டுள்ளது.
இவை தவிர ஏழைக் குழந்தைகள் நடந்து செல்லும் தூரத்துக்குள் பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது. 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் நடந்து சென்று படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏழை-எளியவர்களின் எதிர்கால வாழ்வில் ஒளி யேற்றப் போகும் இந்த புதிய சட்டம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு குறும்படம் தயாரித்துள்ளது. இந்த குறும் படங்கள் தனியார் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளது.

>6 வயது முதல் 14 வயது வரை அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி புதிய சட்டம் இன்று முதல் அமல்

>’கல்வி அடிப்படை உரிமை மற்றும் கட்டாயக் கல்வி’ -வரலாற்று சட்டம் இன்று அமல்

>

‘கல்வி அடிப்படை உரிமை மற்றும் கட்டாயக் கல்வி’ சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

வரலாற்று சிறப்புமிக்க சட்டமான, ஆறிலிருந்து 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு ‘கல்வி அடிப்படை உரிமை மற்றும் கட்டாயக் கல்வி’ சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

நாடு முழுவதும், ஆறு வயதிலிருந்து 14 வயது வரை 22 கோடி குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களில் 92 லட்சம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை அல்லது பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டிருக்கின்றனர்.இந்நிலையில், ஆறிலிருந்து 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அடிப்படை உரிமையாக கல்வி அமையும் என்று வலியுறுத்துகிறது. இச்சட்டம், இவர்களுக்கு கல்வி கிடைப்பதையும், மாநில அரசு இவர்களுக்கு கல்வி வழங்குவதையும் உறுதி செய்கிறது.கடந்த 2002ல் அரசியல் சாசனத்தில் செய்யப்பட்ட 86வது திருத்தத்தின் படி, கல்வி அடிப்படை உரிமை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. பின், 2009ல் இச்சட்டம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள பல்வேறு பிரச்னைகளையும் கலந்து ஆலோசித்த பின், மத்திய அரசும், மாநில அரசுகளும் 55:45 என்ற வீதத்தில் இதற்காகும் செலவை ஏற்றுக் கொள்வது என்று முடிவு செய்தபின், மாநில அரசுகள் இச்சட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளன.
தனியார் கல்வி நிறுவனங்கள், சமூகத்தின் பின்தங்கிய பிரிவின் குழந்தைகளுக்கு 25 சதவீதம் ஒதுக்க இச்சட்டம் வகை செய்கிறது. இச்சட்டத்தை நிறைவேற்ற, 25 ஆயிரம் கோடி ரூபாயை மாநில அரசுகளுக்கு நிதிக் கமிஷன் ஏற்கனவே ஒதுக்கியுள்ளது.அடுத்த ஐந்து ஆண்டுகளில் இச்சட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டுமானால், ஒரு லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாக அரசின் திட்ட மதிப்பீடு கூறுகிறது.இச்சட்டத்தை எதிர்த்து சில பள்ளிகள், ‘இது அரசு நிதியுதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையில் தலையிடுவதாகும்’ என்று சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் இருக்கிறது. இதனால், இச்சட்ட அமலாக்கத்தில் எவ்வித தொய்வும் ஏற்படாது என்று மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

‘கல்வி அடிப்படை உரிமை மற்றும் கட்டாயக் கல்வி’ -வரலாற்று சட்டம் இன்று அமல்

>50 புதிய பொறியியல் கல்லூரிகள்: 12 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கும்

>

புதிதாக பொறியியல் கல்லூரிகள்

”தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக பொறியியல் கல்லூரிகள் துவங்க 50 பேர் விண்ணப்பித்துள்ளனர். இக்கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்தால், 12 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கக்கூடும்,” என, ஏ.ஐ.சி.டி.இ., தென்மண்டல தலைவர் மன்னர் ஜவகர் தெரிவித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தரும், அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) தென்மண்டல தலைவருமான மன்னர் ஜவகர் கூறியதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புதிதாக பொறியியல் கல்லூரிகள் மற்றும் எம்.பி.ஏ., படிப்பு துவங்க, 94 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 90 பேர் தமிழகத்திலும், நான்கு பேர் புதுச்சேரியிலும் கல்லூரியை துவங்க விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் புதிதாக பொறியியல் கல்லூரிகள் துவங்க, 50 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் எம்.பி.ஏ., படிப்பிற்கு 25 பேரும், ஒருங்கிணைந்த வளாகத்திற்கு 13 பேரும், ஆர்கிடெக்சர் படிப்பு மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்பிற்கு தலா ஒருவரும் விண்ணப்பித்துள்ளனர். புதுச்சேரியில் மூன்று பேர் பொறியியல் கல்லூரி துவங்கவும், ஒருவர் எம்.பி.ஏ., கல்லூரி துவங்கவும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி, ஏப்ரல் 5ம் தேதி முதல் நடக்கவுள்ளது. அதன்பிறகு, மூன்று பேர் கொண்ட குழு, இக்கல்லூரிகளுக்கு நேரில் சென்று வசதிகளை ஆய்வு செய்யும். அப்பணி ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 15ம் தேதி வரை நடைபெறும். அதன்பிறகு தகுதியுள்ள கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் வழங்கப்படும். தமிழகத்தில் தற்போது 440 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. புதிதாக பொறியியல் கல்லூரிகள் துவங்க விண்ணப்பித்துள்ள 50 பேருக்கும் அனுமதி கிடைத்தால், 12 ஆயிரம் இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.
இதுமட்டுமின்றி, பழைய கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் மற்றும் புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்படுவதால் மொத்த இடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். ஏற்கனவே உள்ள கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. இனிமேல் ஒரு கல்லூரிக்கு அதிகபட்சமாக 540 இடங்கள் வரை மட்டுமே மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கப்படும். இதற்கு கல்லூரிகளில் வழங்கப்படும் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் என்.பி.ஏ., தரச்சான்று பெற்றிருக்க வேண்டும். என்.பி.ஏ., தரச்சான்று பெறாவிட்டால், அதிகபட்சமாக 420 இடங்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்படும். இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார்.

50 புதிய பொறியியல் கல்லூரிகள்: 12 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கும்

>எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு – 2010

>

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 2,791 தேர்வு மையங்களில் 6,493 பள்ளிகளை சேர்ந்த 8,56,956 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதில் 4,22,523 பேர் மாணவர்கள். 4,34,443 பேர் மாணவிகள்.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தனித் தேர்வர்களும் இந்தத் தேர்வை எழுதவுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 14,618 பேர் கூடுதலாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகி்ன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல மெட்ரிகுலேஷன் 10ம் வகுப்பு தேர்வை 1,476 மையங்களில் 3,138 பள்ளிகளைச் சேர்ந்த 1,30,020 பேர் எழுதுகின்றனர். இவர்களில் 71,714 பேர் மாணவர்கள். 58,256 பேர் மாணவிகள்.
ஆங்கிலோ-இந்தியன் தேர்வை 4,492 பேரும், ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 1,593 பேரும் எழுதுகின்றனர்.
எஸ்.எஸ்.எல்.சி, ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் ஏப்ரல் 7ம் தேதி முடிவடைகின்றன. மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ-இந்தியன் தேர்வுகள் ஏப்ரல் 9ம் தேதியும் முடிவடைகின்றன.
கால அட்டவணை
மாநில பாடத்திட்டம்
23 .03 .2010 – தமிழ் முதல் தாள்
24 .03 .2010 – தமிழ்  இரண்டாம்  தாள்
26 .03 .2010 – ஆங்கிலம் முதல் தாள்
29 .03 .2010 – ஆங்கிலம் இரண்டாம் தாள்
01 .04 .2010 – கணிதம்
05 .04 .2010 – அறிவியல்
07 .04 .2010 – சமுக அறிவியல்
மெட்ரிக்   பாடத்திட்டம்
23 .03 .2010 – தமிழ் முதல் தாள்
24 .03 .2010 – தமிழ் இரண்டாம் தாள்
25 .03 .2010 – ஆங்கிலம் முதல் தாள்
26 .03 .2010 – ஆங்கிலம் இரண்டாம் தாள்
29 .03 .2010 – கணிதம் முதல் தாள்
30 .03 .2010 – கணிதம்  இரண்டாம் தாள்
01 .04 .2010 – அறிவியல் முதல் தாள்
05 .04 .2010 – அறிவியல் இரண்டாம் தாள்
07 .04 .2010 – வரலாறு
09 .04 .2010 – புவியியல்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு – 2010

>வினாத்தாள் குழப்பம்-பாதிப்பு வராமல் பார்த்து கொள்ளவோம்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

>

 பத்தாம் வகுப்பு, மெட்ரிகுலேஷன் தேர்வில் வினாத்தாள் மாற்றிக் கொடுக்கப்பட்டதால் பாதிப்படைந்த மாணவர்களின் விடைத்தாள்கள், பாதிப்பு இல்லாத வகையில், திருத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
காஞ்சீபுரத்தில் மட்டும்தான் 20 மாணவர்கள் வினாத்தாள்களை மாற்றி கடைசிவரை எழுதி உள்ளனர். மொத்தத்தில் தமிழ்நாட்டில் 30 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக மீண்டும் தேர்வு நடத்துவது சரியாக இருக்காது. ஆனால் 30 மாணவர்களின் விடைத்தாள்களை தனியாக வைத்து மதிப்பீடு செய்ய உத்தரவிட்டுள்ளேன்.
எந்த வகையிலும் அந்த மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். கேள்வித்தாள் மாற்றிக்கொடுத்த ஆசிரியர்கள் மீது துறைவாரியான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றார்.
இதற்கிடையே, பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் குற்றாலிங்கம் அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவியை அழைத்து கேள்வித்தாள் மாற்றம் நடந்தது குறித்து கேட்டறிந்தார். மேலும் கேள்வித்தாள் மாற்றத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் முதல் தாளில் கேட்கப்பட்ட கேள்விகளையும், மெட்ரிகுலேஷன் தமிழ் முதல் தாளில் கேட்கப்பட்ட கேள்விகளையும் சரிபார்த்து இரண்டிலும் பொதுவாக கேட்கப்பட்ட கேள்விகள் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள உள்ளனர்.
இதற்காக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மெட்ரிகுலேஷன் தமிழ் ஆசிரியர்களை அழைத்து இந்த பிரச்சினைக்கு தேர்வுத்துறை தீர்வு காண உள்ளது.
ஆசிரியர்கள் மீது நடவடிக்கை…
இந்த நிலையில், வினாத்தாள் மாற்றி வழங்கிய விவகாரம் தொடர்பாக அறிக்கை பெறப்பட்ட பிறகு தவறுக்குப் பொறுப்பான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் கூறுகையில்,​முதல்கட்டமாக மெட்ரிக் பள்ளிக்குரிய வினாத்தாள்கள்,​​ மாநிலப் பள்ளிக்குரிய வினாத்தாள்கள் ஒப்பிட்டு பார்க்கப்படும்.​ அதில் எத்தனை வினாக்கள் பொதுவாக உள்ளது என்பது பற்றி ஆய்வு செய்யப்படும்.​ அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும்.
வினாத்தாள்களை மாற்றி வழங்கியது தொடர்பாக கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.​ இதர பள்ளிகள்,​​ ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் வருவதால்,​​ அத்துறை சார்ந்த அதிகாரிகள்தான் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஞ்சிபுரம்,​​ திருநெல்வேலி,​​ கன்னியாகுமரியில் சுமார் 30 மாணவர்கள் வினாத்தாள் மாற்றி தேர்வு எழுதியுள்ளனர்.​ இதற்குப் பொறுப்பான ஆசிரியர்கள்,​​ தலைமை ஆசிரியர்கள் தேர்வுப் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.​ அவர்கள் மீதான அறிக்கை பெறப்பட்ட பிறகு தவறுக்குப் பொறுப்பான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
வினாத்தாள் மாற்றி தேர்வு எழுதிய மாணவர்கள் பயப்படத் தேவையில்லை.​ ஆய்வுக்குப் பிறகு அவர்களுக்குஉரிய மதிப்பெண் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

>விழுப்புரம் மாவட்ட பிளஸ் டூ விடை தாள் திருத்தும் பணி ஆரம்பிக்கப்படும் நாட்கள் விவரம்

விடை தாள் திருத்தும் மையம் :
ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி
விழுப்புரம்

மொழி பாடங்கள்

1 . முதன்மை தேர்வாளர் மற்றும்
     கூர்ந்தாய்வு அலுவலர் –  27 /03 /2010

2 . உதவி தேர்வாளர் – 29 /03 /2010

டம்மி தாள்கள் :

1 . முதன்மை தேர்வாளர் மற்றும்
     கூர்ந்தாய்வு அலுவலர் –  03 /04 /2010
2 . உதவி தேர்வாளர் – 05 /04 /2010

விழுப்புரம் மாவட்ட பிளஸ் டூ விடை தாள் திருத்தும் பணி ஆரம்பிக்கப்படும் நாட்கள் விவரம்

>மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 8% அதிகரிப்பு

>

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 8சதவீதம் அதிகரிக்கப் படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய அகவிலைப்படி உயர்வு 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு, விலைவாசி உயர்விற்கு ஈடு செய்யும் வகையில் வழங்கப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கால் வெளியிடப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 8% அதிகரிப்பு

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 8சதவீதம் அதிகரிக்கப் படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய அகவிலைப்படி உயர்வு 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு, விலைவாசி உயர்விற்கு ஈடு செய்யும் வகையில் வழங்கப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கால் வெளியிடப்பட்டது.

>46 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்த ஏற்பாடுகள் தயார்

>

பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி, 46 மையங்களில் நடக்கின்றன. முக்கியப் பாடங்களுக்கு, “டம்மி’ எண்கள் கொடுக்கும் பணி, வரும் 20ம் தேதி துவங்குகிறது. அப்பணி முடிந்ததும், ஏப்ரல் 3ம் தேதியில் இருந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறும்.
கடந்த முதல் தேதி, பிளஸ் 2 பொதுத் தேர்வு ஆரம்பித்தது. மொழிப்பாட தேர்வுகள், இயற்பியல், பொருளியில், வேதியியல், கணக்குப் பதிவியல், புள்ளியியல், கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி ஆகிய தேர்வுகள் முடிந்து விட்டன. இன்று கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி ஆகிய தேர்வுகள் நடக்கின்றன.நாளை மறுதினம் உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம் ஆகிய தேர்வுகளும், இறுதியாக 22ம் தேதி வணிகவியல், புவியியல், “ஹோம் சயின்ஸ்’ தேர்வுகளுடன், பிளஸ் 2 தேர்வுகள் நிறைவு பெறுகின்றன.
23ம் தேதியில் இருந்து, பத்தாம் வகுப்பு தேர்வுகள் துவங்குகின்றன.பிளஸ் 2வில் பெரும்பாலான தேர்வுகள் முடிந்ததையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 20ம் தேதி துவங்குகிறது. தொழிற்கல்விப் பாடங்கள் அல்லாத பாடங்கள் 44 மையங்களிலும், தொழிற் கல்விப் பாடங்கள் இரண்டு மையங்களிலும் திருத்தப் படுகின்றன. முதலில், அறிவியல், கணிதம் உள்ளிட்ட முக்கியப் பாடங்களுக்கு, “டம்மி’ எண்கள் கொடுக்கும் பணி நடைபெறும்.
அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 3ம் தேதியில் இருந்து விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது.ஒரு மையத்திற்கு 350 பேர் வீதம், 46 மையங்களில் 16 ஆயிரத்து 100 ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு பாடத் தேர்வுக்கும், “கீ-ஆன்சர்’ தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த, “கீ-ஆன்சரில்’ சம்பந்தப் பட்ட பாடங்களின் கேள்விகள், அதற்கான விடைகள் ஆகியவை தரப்பட்டிருக்கும்.
இதில் உள்ள விடைகளின்படி, ஆசிரியர்கள் விடைத்தாளை திருத்துவர். கணக்குப் பதிவியல், கணிதம் ஆகிய தேர்வுகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். வேதியியலில் ஒரு மதிப்பெண் கேள்வி பகுதியில், ஒரு கேள்விக்கு சரியான பதிலை தராதது, பத்து மதிப்பெண் கேள்வியில், ஐந்து மதிப்பெண்களுக்கான துணைக் கேள்வியில் தவறு போன்ற குளறுபடிகள் இடம் பெற்றன.

>எஸ்.எஸ்.எல்.சி தேர்வு (தக்கல்) 2010

>இந்த மாதம் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இந்தியன் தேர்வுகளுக்கு தனித் தேர்வராக தேர்வு எழுத கடைசி தேதி வரை விண்ணப்பிக்காதவர்களுக்கு உடனடி அனுமதி திட்டத்தின் படி (தக்கல்) விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.

தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் வருகிற 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை தக்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் கிடைக்கின்றன.

எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ். எஸ்.எல்.சி. தனித் தேர்வர்களுக்கு உடனடி அனுமதித் திட்டத்துக்கான கட்டணம் ரூ.500 ஆகும். தேர்வுக்கட்டணம் ரூ.125.

மெட்ரிக்குலேசன் தனித்தேர்வர்களுக்கு தக்கல் முறை கட்டணம் ரூ.500. தேர்வு கட்டணம் பாடம் ஒன்றுக்கு ரூ.100 மற்றும் ரூ.35. ஆங்கிலோ இந்தியன் தனித்தேர்வர்களுக்கு தக்கல் முறை கட்டணம் ரூ.500. தேர்வு கட்டணம் பாடம் ஒன்றுக்கு ரூ.50 மற்றும் ரூ.35.

இக்கட்டணம் தேசிய மயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் ஒரே கேட்புகாசோலையாக (டி.டி.) அரசுத் தேர்வுகள் இயக்குனர் என்ற பெயரில் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தொடர்புடைய அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பதாரரே நேரில் ஒப்படைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரில் ஒப்படைக்க கடைசிநாள் 12-ந்தேதி மாலை 5 மணி.

விண்ணப்பம் மற்றும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் ஒட்டப்படும் புகைப்படத்தில் இறுதியாக பயின்ற பள்ளித்தலைமை ஆசிரியரிடம் மட்டு«ம் சான்றொப்பம் பெற்றிருக்க வேண்டும். நேரடி தனித்தேர்வராக விண்ணப்பிப்பவர்கள் அருகில் உள்ள உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் சான்றொப்பம் பெற வேண்டும்.

மேற்கண்ட தகவலை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.