Category Archives: EXAM NEWS

பத்தாம் வகுப்பு மார்ச் தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் 16.12.2011

பழைய பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள், தனித் தேர்வர்களாக இப்போது தேர்வு எழுத விரும்பினால் அவர்கள் சமச்சீர்கல்விக்கான அறிவியல் செய்முறை தேர்வு எழுத வேண்டும்.

தற்போது தமிழகத்தில் பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்துவிட்டது. இதனால், பழைய பாடத்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவர்கள், இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விரும்பினால் அவர்கள் சமச்சீர் கல்வி முறையின் கீழ் உள்ள செய்முறைத் தேர்வை எழுத வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் அனைத்து நேரடித் தனித் தேர்வர்களுக்கும் அறிவியல் பாடத்துக்கான செய்முறை பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டியுள்ளது. இந்த ஆண்டு தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் தங்கள் பெயர்களை பதிவு செய்து, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு சென்று செய்முறை வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும்.
செய்முறை வகுப்புகளில் கலந்து கொண்டவர்கள் மட்டுமே 2012 மார்ச் மாதம் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு தேர்வு எழுத த குதி பெறுகிறார்கள்.

செய்முறை வகுப்புகளில் கலந்து கொள்ளாதவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இது குறித்து மேலும் விவரம் வேண்டுவோர் சம்மந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களில் தொடர்பு கொள்ளலாம். செய்முறைத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணைய தளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இரண்டு நகல்களில் விவரங்களை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரிடம் 16ம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வில்(TET) வெற்றி பெறுபவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

5 முதல், 10ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
 இடைநிலைக் கல்வி ஆசிரியர்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை, பதிவு மூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்விச் சட்டத்தை, அரசிதழில், தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

6 முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்க, இச்சட்டம் வழிவகை செய்கிறது.

கட்டாயக் கல்விச் சட்டப்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, தகுதி தேர்வு நடத்தி தான், மாநில அரசுகள் நியமித்தாக வேண்டும்.

இந்நிலையில், “தமிழகத்தில், மாநில அளவிலான வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்” என, 2008ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பு வரும் வரை, மாநில அளவிலான வேலைவாய்ப்பு, பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படும்.

பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரை, அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, எழுத்துத் தேர்வு அடிப்படையில், நியமனம் செய்யப்படுவர்.

இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி, ஆசிரியர்களை நியமிக்கும் பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும். தேசிய கவுன்சில் வகுத்துள்ள கல்வித் தகுதி உள்ளவர்கள் தான், ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொள்ள முடியும்.
தேர்வு முறை

* தேர்வில், அனைத்து கேள்விகளும், நான்கு பதில்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும், ஒரு மதிப்பெண் அளிக்கப்படும்.

* இரண்டு வகையான தேர்வுகள் நடத்தப்படும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (முதல் தாள்), ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (இரண்டாம் தாள்) இடம்பெறும். எந்த வகுப்பு வேண்டுமானாலும் எடுக்க தயாராக உள்ளவர்கள், இரண்டையும் எழுத வேண்டும்.

* முதல் தாள், மொத்தம் 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் கொண்டதாகவும் இருக்கும்.

* இரண்டாம் தாள், 150 கேள்விகள் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் உள்ளதாகவும் இருக்கும்.

* அறிவியல் ஆசிரியர்களுக்கு, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் இருந்து 60 கேள்விகளும், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, அதில் இருந்து 60 கேள்விகளும் கேட்கப்படும்.

* தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெறுவோர், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். எனினும், பள்ளி நிர்வாகம், அரசு, உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை, ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு, இடஒதுக்கீடு கொள்கையின்படி, சலுகைகள் வழங்கலாம். இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய கல்விச் சட்டப்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலை, கல்வியியல் ஆணையமாக மத்திய அரசு நியமித்துள்ளது. இந்த ஆணையம், அனைத்து மாநிலங்களிலும் தொடக்கக் கல்விக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி தான் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டு, இதற்கான வழிமுறைகளையும் வகுத்துள்ளது.
  
  தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் (1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் ஆசிரியர் பட்டயப் படிப்பை டி.டி.இ.டி., முடித்திருக்க வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர்கள் (6 முதல் 8 வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் பி.எட். படித்திருக்க வேண்டும். அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்விலும் வெற்றி பெற வேண்டும்.

இதுதவிர, இவர்கள் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆணையம் வகுத்துள்ள குறைந்தபட்ச தகுதி இல்லாத ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள், அந்த தகுதியை பெற வேண்டும்.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க தகுதித் தேர்வு நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

34 உதவி தொடக்க கல்வி அலுவலர் நியமனம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம் , போட்டித் தேர்வு மூலம் 34  உதவி தொடக்க கல்வி அலுவலர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பம் வழங்கும் தேதி 04.11.2011, விண்ணப்பிக்க கடைசி தேதி 19.11.2011, தேர்வு நாள் :08.01.2012. விண்ணப்பக்கட்டணம் ரூபாய் 50. விண்ணப்பம் வழங்கப்படும் இடம் அனைத்து மாவட்ட CEO அலுவலகம் .

1. Advertisement / Notification

2. Prospectus

தொடக்க கல்வித் துறையில் காலியாக உள்ள 34 உதவித் தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்களில் நேரடியாக பட்டதாரிகள் நியமிக்கப்படுகின்றனர். மேற்கண்ட அலுவலர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தொடக்க கல்வி துறையில் 34 உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். தமிழ்3, ஆங்கிலம்4, கணக்கு 3, இயற்பியல்3, வேதியியல் 6, தாவரவியல்4, விலங்கியல் 4, வரலாறு 3, புவியியல் 4 பட்டதாரிகள் நியமிக்கப்படுகின்றனர். பி.ஏ, பிஎஸ்சி மற்றும் பி.எட் படித்த 35 வயதுக்குட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். எழுத்து தேர்வு 3 மணி நேரம் நடக்கும். முதன்மைப் பாடம் 110 மதிப்பெண், கற்பித்தல் முறை 30, பொது அறிவு 10 மதிப்பெண் என மொத்தம் 150 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 45 மதிப்பெண்ணும், இதர மாணவர்கள் 60 மதிப்பெண்ணும் எடுத்தால் தேர்ச்சி பெற்றவர் ஆவார்.
தேர்வு மையங்கள் 32 மாவட்ட தலைநகரங்களில் அமைக்கப்படும். ஒரு பதவிக்கு ஒருவர் என்ற விகிதாசாரத்தில் சான்று சரிபார்ப்பு நடத்தி பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அப்போது இன சுழற்சி முறையும் கடைபிடிக்கப்படும். தேர்வுக் கட்டணமாக ரூ. 300 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.150 செலுத்த வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை என்ற பெயரில் டிடி எடுத்து அனுப்ப வேண்டும்.
ஸ்டேட் பாங்க, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கார்ப்ரேஷன் வங்கி ஆகியவற்றில் ஏதாவது ஒரு வங்கியில் டிடி எடுக்க வேண்டும். பாஸ்போர்ட் போட்டோ, டிடி ஆகியவை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மேற்கண்ட தேர்வுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 4ம் தேதி முதல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் ரூ. 50 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நவம்பர் 19ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் நடைபெற உள்ள, எஸ்.எஸ்.எல்.சி.,-ஓ.எஸ்.எல்.சி., தனித்தேர்வுக்கான அட்டவணைகளை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

அக்டோபர் மாதம் நடைபெற உள்ள, எஸ்.எஸ்.எல்.சி.,-ஓ.எஸ்.எல்.சி., தனித்தேர்வுக்கான அட்டவணைகளை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.இத்தேர்வுகள் அனைத்தும், காலை 10.15க்கு துவங்கி, 12.45க்கு முடிவடையும் என்றும், முதல் 15 நிமிடம் வினாத்தாள் படிக்கவும், விடைத்தாளில் உள்ள விவரங்களை பதிவு செய்யவும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Last Date for submission of the form for NATIONAL TALENT SEARCH EXAMINATION – 201231st August 2011


NATIONAL TALENT SEARCH EXAMINATION-2012

  • ELIGIBILITY:Students Studying in Class VIII
  • APPLICATION FORM: CLICK HERE
  • Examination fee :Rs 50(to be paid in Treasury/sub Treasury only)
  • Last Date for submission of the form :31st August 2011
  • ADDRESS:Director of Govt. Exams. Chennai – 600 006.
  • SCHOLARSHIP : Rs.500/- per month
  • Date of Examination : 20.11.2011
  • Time : MAT : 9.30 a.m to 11.00 a.m SAT : 11.30 a.m to 1.00 p.m
  • You have to take the examination in TWO PARTS
  • Part I is confined to Mental Ability Test (MAT) consisting of 90 compulsory question.
  • Part II is confined to Scholastic Aptitude Test (SAT) consisting of 90 compulsory questions.
  • Time for Part I is 90 minutes and for Part II is 90 minutes.Each question carries 1 (one) mark.All questions in the booklets are objective type.

""பிளஸ் 2 தனி தேர்வர்களுக்கான பொது தேர்வு, செப்., 21ல் துவங்குகிறது” என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்தார்.

பிளஸ் 2 தனித் தேர்வர்கள் வரும் செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள தேர்வுக்கு ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 12 வரை விண்ணப்பிக்கலாம் என தேர்வுத் துறை அறிவிப்பு.


 

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற தவறிய பாடங்களை மீண்டும் தேர்வு எழுத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் எச் வகை விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் ஒரு பாடத்துக்கு தேர்வு கட்டணமாக ரூ. 50-ம் இதரக்கட்டணமாக ரூ. 35-ம் செலுத்த வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டு இடைவெளியும் 1.9.2011 அன்று பதினாறரை வயது பூர்த்தி அடைந்தவர்களும் பிளஸ் 2 நேரடி தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம். இவர்கள் எச்.பி. வகை விண்ணப்பத்தினை பயன்படுத்த வேண்டும். இவர்கள் தேர்வுக் கட்டணமாக ஒரு 
பாடத்துக்கு ரூ. 150, இதரக் கட்டணம் ரூ. 35, கேட்டல், பேசுதல் திறன் தேர்வு ரூ. 2 என மொத்தம் ரூ. 187 செலுத்த வேண்டும். சென்னை மாவட்ட தனித் தேர்வர்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கேட்புக் காசோலை அல்லது வங்கிக் காசோலே மூலமாக “அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை – 600 006′ என்ற பெயரில் எடுக்க வேண்டும். மற்ற மாவட்ட மாணவர்கள் அரசுக் கருவூலங்களில் கருவூலச்சீட்டு மூலமாக மட்டும் செலுத்த வேண்டும். தொழில்கல்விப் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால், மார்ச் 2011 மற்றும் அதற்கு முந்தைய பருவங்களில், தொழில்கல்வி பாடங்களில் தோல்வியுற்றோர், பழைய பாடத் திட்டத்தின்படி தேர்வெழுத செப். 2011, மார்ச் 2012 ஆகிய இரு பருவங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முதன் முதலாக தேர்வு எழுதுபவர்கள் 2005-2006-ம் கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட பாடத் திட்டத்தின்படி தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். விண்ணப்பப் படிவங்களை ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 12 வரை அலுவலகப் பணி நாள்களில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், இணை இயக்குநர் (கல்வி), புதுச்சேரி, அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்கள் (திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோவை, கடலூர், வேலூர், சென்னை) பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் பதிவஞ்சல் மூலமாகவோ, நேரடியாக வந்தோ மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். சென்னையில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக தலைமை அலுவலகத்துக்கு அனுப்பக் கூடாது. குறிப்பிட்ட நாளுக்கு பின்பு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




பத்தாம் வகுப்பு மெட்ரிக் சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள், தத்கலில் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

பத்தாம் வகுப்பு மெட்ரிக் சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள், தத்கலில் இன்று முதல், வரும் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கட்டணம்: ஒரு பாடத்திற்கு 135 + 500 என மொத்தம் ரூ.635, இரண்டு பாடங்களுக்கு 235 + 500 மொத்தம் ரூ.735, மூன்று பாடங்கள் 335 + 500 ஆகமொத்தம் ரூ.835 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்குனர், சென்னை -600 006 என்ற பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், சென்னையில் மாற்றத்தக்க வகையில் “டிமாண்ட் டிராப்ட்’ எடுத்து, விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகம், 4, ஹக்கீம் அஜ்மல்கான் ரோடு, சின்னசொக்கிகுளம், மதுரை-625 002ல், ஜூன் 22 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின், “ஹால்டிக்கெட்’கள் வழங்கப்படும். இதன்கீழ், மதுரை மையத்தில் மட்டும் தேர்வு எழுத மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என, மண்டல துணை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.