Category Archives: SSLC RESULT 2013

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு – 9 பேர் மாநிலத்தில் முதலிடம்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், எப்போதும் இல்லாத வகையில், 498 மதிப்பெண்கள் பெற்று, மொத்தம் 9 பேர் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் 27ம் தேதி தொங்கி, ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சேர்த்து, மொத்தம் 10 லட்சத்து 68 ஆயிரத்து 838 பேர் எழுதினர். அவர்களில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 686 பேர் மாணவியர். மொத்தம் 3012 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 
            
500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று  9 பேர் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.
  1. எஸ்.அனுஷா – கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை 
  2. தீப்தி – புஸ்கோ மெட்ரிக் பள்ளி, அண்ணாநகர், மதுரை 
  3. எம்.காயத்ரி – மவுன்ட் போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி 
  4. டி.மார்ஷியா ஷெரின் – மவுன்ட் போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி 
  5. கே.ஆர்.பொன்சிவசங்கரி – இ.எச்.கே.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு 
  6. சி.எஸ்.சாருமதி – சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர் 
  7. பி.சோனியா – எஸ்.ஜே.எஸ்.ஜே.யு.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி 
  8. ஆர்.ஸ்ரீதுர்கா – வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் 
  9. எஸ்.வினுஷா – ஆக்சிலியம் மகளிர் மேல்நிலைப்பள்ளி, வேலூர் 
500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று  52 பேர் மாநிலத்தில் இரண்டாமிடம் பெற்றுள்ளனர்.

500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று  137 பேர் மாநிலத்தில் மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு | 100க்கு 100

மே 31ம் தேதி வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், அதிகளவிலான மாணவர்கள் முழு மதிப்பெண்கள்(100/100) பெற்றுள்ளனர். அதன் விபரம் வருமாறு;

* அறிவியல் – 38,154 பேர்

* கணிதம் – 29,905 பேர்

* சமூக அறிவியல் – 19,680 பேர்

* ஆங்கிலம் – 17 பேர்

* தமிழ் – இல்லை

கடந்த 2012ம் ஆண்டில் 100/100 பெற்றோர் எண்ணிக்கை

* கணிதம் – 1,141 பேர்

* அறிவியல் – 9,237 பேர்

* சமூக அறிவியல் – 5,305 பேர்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு | மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் ஜூன் 20ம் தேதி வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் ஜூன் 20ம் தேதி வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும், தனி ‌தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.
 
பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், ஜூன் மற்றும் ஜூலையில் நடக்கும் உடனடித் தேர்வில் பங்கேற்கலாம். http://www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலம் உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூன் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம் எனவும், தேர்வு கட்டணத்தை எஸ்.பி.ஐ., வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் வரும் 6ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 
மார்ச் தேர்வை, தனித்தேர்வாக எழுதி, மீண்டும் தோல்வி அடைந்‌த தேர்வர்கள், விண்ணப்பத்தை, தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் ஜூன்10ம் தேதிக்குள் நேரில் சமர்பிக்க வேண்டும். உடனடித் தேர்வுகள் ஜூன் 24ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதி வரை நடக்கும்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு – ஒட்டுமொத்த தேர்ச்சி 89%

1. இந்த 2013ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, பள்ளிகள் மூலமாக, மொத்தம் 10 லட்சத்து 51 ஆயிரத்து 62 பேர் எழுதினர். அவர்களில், மாணவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 794. மாணவிகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 268 பேர்.
2. இவர்களில், ஒட்டுமொத்த அளவில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 35 ஆயிரத்து 215 பேர். அதன் தேர்ச்சி விகிதம் 89%.
3. மாணவர்களில், 4 லட்சத்து 57 ஆயிரத்து 250 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் தேர்ச்சி விகிதம் 86%.
4. மாணவிகளில், 4 லட்சத்து 77 ஆயிரத்து 965 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் தேர்ச்சி விகிதம் 92%.
5. இவற்றில் 60%க்கும் மேலாக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 14 ஆயிரத்து 522 பேர்.
6. கடந்தாண்டு(2012) பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், 86.20% அளவே தேர்ச்சி விகிதம் இருந்தது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம் விவரம். முதலிடத்தில் கன்னியாகுமரி மாவட்டம் .

table.tableizer-table { border: 1px solid #CCC; font-family: ; font-size: 16px; } .tableizer-table td { padding: 4px; margin: 3px; border: 1px solid #ccc; } .tableizer-table th { background-color: #065D08; color: #FFF; font-weight: bold; }

PLACE DISTRICT APPEARED PASSED NO OF SCHOOLS PERCENTAGE
1 கன்னியாகுமரி 27725 26974 384 97.29%
3 தூத்துக்குடி 24450 23330 273 95.42%
2 ஈரோடு 31040 29601 329 95.36%
4 திருச்சி 38926 37036 391 95.14%
5 விருதுநகர் 27891 26519 325 95.08%
6 சென்னை 58491 55338 591 94.61%
7 கோவை 45859 43164 496 94.12%
8 மதுரை 44765 41828 438 93.44%
9 நாமக்கல் 26418 24627 290 93.22%
10 திருப்பூர் 29023 27011 295 93.07%
11 திருநெல்வேலி 44918 41713 438 92.86%
12 சிவகங்கை 20844 19327 253 92.72%
13 கரூர் 14003 12704 176 90.72%
14 பெரம்பலூர் 9275 8383 121 90.38%
15 ராமநாதபுரம் 19578 17675 225 90.28%
16 தேனி 19218 17264 181 89.83%
17 உதகை 10749 9654 173 89.81%
18 சேலம் 49610 44116 464 88.93%
19 தஞ்சாவூர் 38181 33895 389 88.77%
20 கிருஷ்ணகிரி 28070 24876 348 88.62%
21 திண்டுக்கல் 30705 27190 308 88.55%
22 காஞ்சிபுரம் 55045 47813 562 86.86%
23 திருவள்ளூர் 51282 44539 575 86.85%
24 புதுக்கோட்டை 23631 20261 286 85.74%
25 தர்மபுரி 25333 21663 279 85.51%
26 திருவாரூர் 19286 16035 197 83.14%
27 வேலூர் 57171 47501 559 83.09%
28 அரியலூர் 11841 9758 149 82.41%
29 விழுப்புரம் 48081 39424 518 81.99%
30 நாகப்பட்டிணம் 26325 20935 258 79.53%
31 திருவண்ணாமலை 34507 27225 441 78.90%
32 கடலூர் 40220 30264 372 75.25%

KALVISOLAI | SSLC RESULT 2013