சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் பி.எட்., பட்டம் தமிழ்நாட்டில் இதர பல்கலைக் கழங்களால் வழங்கப்படும் பி.எட்., பட்டப்படிப்பிற்கு இணையானது.

சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் பி.எட்., பட்டம் தமிழ்நாட்டில் இதர பல்கலைக் கழங்களால் வழங்கப்படும் பி.எட்., பட்டப்படிப்பிற்கு இணையானது என தமிழக அரசு தற்பொழுது ஆணை வழங்கியுள்ளது.  சாஸ்த்ரா பல்கலைக் கழகம் வழங்கும் பி.எட். பட்டம் சார்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் சென்ற ஆண்டில் அப்பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற சிலருக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.   தற்பொழுது சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் பி.எட்., பட்டப்படிப்பு அரசால் அங்கீகரிக்கப்பட்டு அரசாணை பெறப்பட்டுள்ளதால் இப்பல்கலைக் கழகத்தில் பி.எட்., பட்டம் பெற்று 1-1-2011 நிலவரப்படி முன்னுரிமைப் பட்டியலின் இறுதித் தேதிக்குள் தகுதி பெற்றுள்ள தகுதியான நபர்கள் எவரேனும் இருப்பின் அவர்கள் உடனே முதன்மைக் கல்வி அலுவலகத்தை அணுகவேண்டும்.

Leave a comment