Category Archives: 2013 தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்

2013-14ம் ஆண்டில் 8 கலை அறிவியல் கல்லூரிகள் துவக்கப்படும்.

மாணவர்களுக்கு 6 லட்சம் லேப்டாப் வழங்கப்படும் என்றும், இதற்காக 1500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 2013-14ம் ஆண்டில் 8 கலை அறிவியல் கல்லூரிகள் துவக்கப்படும். 2013-14ம் ஆண்டில் முதல்தலை முறை பட்டதாரிகளுக்காக 673 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையில் கூறினார்.

பள்ளி கல்வித்துறை வளர்ச்சிக்காக ரூ.16,965.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறை வளர்ச்சிக்காக ரூ.16,965.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 97.7 லட்சம் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்க ரூ.217.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 86.71 மாணவர்களுக்கு இலவச நோட்டுகள் வழங்க ரூ.110.96 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 24.76 லட்சம் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையாக ரூ.381 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இடைநிலைக் கல்வி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.366.57 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 13 லட்சம் மாணவர்களுக்கு இலவச புத்தக பைகள் வழங்க ரூ.19.77 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் இலவச பேருந்து பயணச்சீட்டுகள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.322 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2013- 2014 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார் | சிறப்பு அம்சங்கள்

* தென் மாவட்ட வளர்ச்சிக்கு பல திட்டங்கள்
* பட்ஜெட் திட்ட ஒதுக்கீடு 37 ஆயிரம் கோடி
* போலீஸ் ஸ்டேஷன்களுக்கு சொந்த கட்டடம் கட்ட 50 கோடி
* நீதி துறை மேம்பாட்டுக்கு 695 கோடி
* நகர்ப்புற வறுமை ஒழிப்புக்கு 200 கோடி
* கல்வி- சுகாதாரத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு
* காய்கறி கழிவு சுத்திகரிப்பு ரூ. 34 கோடி
* 6 லட்சம் இலவச ஆடுகள்; 250 கோடி ஒதுக்கீடு
* கால்நடை துறைக்கு 10 82 கோடி
* 100 கால்நடை மருத்துவமனைகள் தரம் உயர்வு
* கால்நடை மருத்துவமனை சீரமைக்க 25 கோடி
* ஆழ்கடல் மீன் பிடிக்க மானியம் 5 சதம் உயர்வு
* 12 ஆயிரம் கறவை மாடுகள்
* ஈரோடு கால்நடை தீவன உற்பத்தி
* பெண்களுக்கு 12ஆயிரம் கறவை மாடுகள்
* 1.5 லட்சம் பேருக்கு செம்மறி ஆடுகள்
* தூத்துக்குடியில் புதி கப்பல் கட்டும் தளம்
* 17 ஆயிரத்து 138 போலீசார் நியமிக்க திட்டம்
* மீன்வளத்துறை மேம்பாட்டுக்கு 467 கோடி
* மீனவர்கள் படகு வாங்கிட 50 சதம் மானியம்
* கடலூர் முடசலோடையில் மீன் இறங்கு தளம்
* உணவு மானியத்திற்கு 4 ஆயிரத்து 900 கோடி
* மாநில திறன் மேம்பாட்டுக்கு 100 கோடி
* மதுரை – தூத்துக்குடி தொழில் வழித்தடம்
* மதுரை கோரிப்பாளையம்- காளவாசலில் 2 புதிய பாலங்கள்
* சென்னையில் 4 புதிய பாலங்கள்
* கோழி வளர்ப்பை ஊக்குவிக்க 25 கோடி
* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 750 கோடி
* இலவச வேட்டி – சோலை வழங்கிட 362 கோடி
* நெடுஞ்சாலை ஆணையம் * சூரிய ஒžளி மின் திட்டம்
* வல்லூர் மின்உறபத்தி 500 மொ வாட் அக்டோபரில் துவங்கும்
* 21 ஆயிரம் கோடியில் புதிய மின் திட்டங்கள்
* இலவச நோட்டுகள் வழங்கிட 110 கோடி
* மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிட 200. 9 கோடி
* புதிதாக 8 கலைக்கல்லூரிகள் அறிவிப்பு
* இலவச மடிக்கணினி வழங்கிட 1 500 கோடி
* மாணவிகளுக்கு நாப்கின் வழங்கிட 54. 63 கோடி
* சிறைத்துறைக்கு 179 கோடி
* 20 ரூபாய்க்கு வெளிச்சந்தையில் அரிசி
* அணை புனரமைப்புக்கு 390 கோடி
* ஒக்கேனக்கல் திட்டத்திற்கு 500 கோடி
* நெடுஞ்சாலை துறைக்கு 6 ஆயிரத்து 452 கோடி
* சென்னை பெருநகர மேம்பாட்டுக்கு 500 கோடி
* போக்குவரத்து கூடுதல் செலவுக்கு 500 கோடி
* பழங்குடியினருக்கு மிதி வண்டி வழங்கிட 56 கோடி
* 60 ஆயிரம் பசுமை வீடுகள் அமைக்கப்படும்
* தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கூலி 148 ஆக உயர்வு
* 2 லட்சம் வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படும்
* கல்வித்துறை மேம்பாட்டுக்கு 16 ஆயிரத்து 965 கோடி
* இலங்கை தமிழ் அகதிகளுக்கு மருத்துவ காப்பீடு
* இலங்கை தமிழர் நலன் காத்திட 109 . 9 கோடி
* மாற்றுத்திறனாளி நலனுக்கு 263 கோடி
* அரசு ஊழியர் நலன் காத்திட காப்பீட்டு தொலை அதிகரிப்பு
* மாமல்லபுரத்தில் கடல்வாழ் உயிரின பூங்கா
* திருமண உதவி தொகைக்கு 750 கோடி