Category Archives: வேலைவாய்ப்பு

கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு மாநில அளவில் நடத்தப்படும் தகுதித் தேர்வான "ஸ்லெட்’ தேர்வை ஏப்ரலில் நடத்த பாரதியார் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு மாநில அளவில் நடத்தப்படும் தகுதித் தேர்வான "ஸ்லெட்' தேர்வை ஏப்ரலில் நடத்த பாரதியார் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.  
தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு இந்தத் தகுதித் தேர்வை நடத்த பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தகுதித் தேர்வாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் "தேசிய தகுதித் தேர்வு' (நெட்) நடத்தப்படுகிறது. இதுபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் சார்பில் "ஸ்லெட்' என்ற மாநில அளவிலான தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. 
"நெட்' தேர்வு ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும். "ஸ்லெட்' தேர்வு மாநில அரசின் அனுமதியுடன், யுஜிசி ஒப்புதல் பெற்று நடத்தப்படும்.  தமிழகத்தில் சில ஆண்டுகளாக கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான குறைந்தபட்ச தகுதியாக முதுகலை பட்டப்படிப்பு, அது தொடர்பான பாடத்தில் எம்.ஃபில். பட்டமும் பெற்றிருந்தால் போதும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  

Read more »

>கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு மாநில அளவில் நடத்தப்படும் தகுதித் தேர்வான "ஸ்லெட்’ தேர்வை ஏப்ரலில் நடத்த பாரதியார் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

>

கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு மாநில அளவில் நடத்தப்படும் தகுதித் தேர்வான "ஸ்லெட்' தேர்வை ஏப்ரலில் நடத்த பாரதியார் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.  
தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு இந்தத் தகுதித் தேர்வை நடத்த பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தகுதித் தேர்வாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் "தேசிய தகுதித் தேர்வு' (நெட்) நடத்தப்படுகிறது. இதுபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் சார்பில் "ஸ்லெட்' என்ற மாநில அளவிலான தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. 
"நெட்' தேர்வு ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும். "ஸ்லெட்' தேர்வு மாநில அரசின் அனுமதியுடன், யுஜிசி ஒப்புதல் பெற்று நடத்தப்படும்.  தமிழகத்தில் சில ஆண்டுகளாக கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான குறைந்தபட்ச தகுதியாக முதுகலை பட்டப்படிப்பு, அது தொடர்பான பாடத்தில் எம்.ஃபில். பட்டமும் பெற்றிருந்தால் போதும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  

Read more »

அரசு வேலைக்கு அதிகரிக்கும் மோகம்

கால் காசு என்றாலும் கவர்மென்ட் காசு என்பார்கள் அரசு வேலை பார்ப்பவர்கள். அது சம்பளம் குறைவாக இருந்தபோது சொன்னது. இப்போது நிலைமை  அப்படியில்லை. சம்பளம் அதிகமாகவே கிடைக்கிறது. அதனால்தான் 3500 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் 9.5 லட்சம்பேர்  தேர்வு எழுதியுள்ளனர். அரசு வேலைக்கு இன்னமும் மவுசு குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள 3,484 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தியுள்ளது. 1,077 இடங்கள் எஸ்சி, எஸ்டி பிரிவின ருக்கும் மீதியுள்ள 2407 இடங்கள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வேலைகளுக்கு மொத்தம் 10 லட்சத்து 44 ஆயிரம் பேர் விண்ணப்பித்தி ருந்தனர். 
85 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட, 9 லட்சத்து 59 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த  3,456 மையங்களில் 9 லட்சத்து 59 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். சென்னை மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 8,007 பேர் எழுதினர். மாணவ, மாணவிகள்,  இளைஞர்கள், மாற்றுத் திறனாளிகளும் தேர்வில் பங்கேற்றனர். பல பெண்கள் கைக்குழந்தையுடன் வந்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத சென்ற நேரத்தில்,  பால் புட்டியும் கையுமாக குழந்தைகளுடன் கணவன்மார் தேர்வு மையத்துக்கு வெளியே காத்திருந்தனர்.

Read more »

>அரசு வேலைக்கு அதிகரிக்கும் மோகம்

உலக அளவில் வேலை இல்லாதவர்கள் 20.50 கோடி

உலக அளவில், 20 கோடியே 50 லட்சம் பேர் வேலையில்லாமலும், இந்தியாவில், ஆறு கோடிக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையும், படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுமே இந்நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை ஏற்பட்டது. இதனால், உலகில் உள்ள எல்லா நாடுகளும் பாதிக்கப்பட்டன. அதன் பின், பொருளாதார மந்த நிலை சிறிது சிறிதாக மாறி வருகிறது. இதனால் பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சி சிறந்த முறையில் வளர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு வரை உலகில் வேலை இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 20 கோடியே 50 லட்சம் பேர். இது 6.1 சதவீதமாகும். இதில், 7 கோடியே 80 லட்சம் பேர் இளைஞர்கள். கடந்த 2007ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 7 கோடியே 35 லட்சமாக இருந்தது. உலக தொழிலாளர் நிறுவனம் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே, இந்த ஆண்டு வேலை இல்லாத தொழிலாளர்களின் எண்ணிக்கை உலகில் 20 கோடியே 33 லட்சமாக குறையும் என்று உலக தொழிலாளர் நிறுவனம் கூறியுள்ளது.

Read more »

>உலக அளவில் வேலை இல்லாதவர்கள் 20.50 கோடி

ஆசிரியர் பணியிடங்களுக்கு பரிந்துரை பட்டியல் வெளியீடு

இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் 2,030 மற்றும் கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடங்கள் 175 ஆகியோருக்கான சான்றிதழ் சரிபார்த்தலுக்கான வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரைப் பட்டியலை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில வழியிலான இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் 1,961, தெலுங்கு பிரிவில் 45 பணியிடங்கள், கன்னட பிரிவில் எட்டு பணியிடங்கள், மலையாள பிரிவில் நான்கு பணியிடங்கள் மற்றும் உருது பிரிவில் 12 பணியிடங்கள் என, மொத்தம் 2,030 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், விரைவில் நிரப்பப்பட உள்ளன. மாநில அளவிலான வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம், சான்றிதழ் சரிபார்த்தலுக்கு வேலை வாய்ப்பு இயக்குனரகம் பரிந்துரை செய்துள்ளது. இதற்கான முழு விவரங்கள், தமிழக அரசு இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன. அதேபோல், 175 கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடங்களுக்கான பரிந்துரைப் பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் விரைவில் சான்றிதழ் சரிபார்த்தல் நிகழ்ச்சியை நடத்தி, இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது

>ஆசிரியர் பணியிடங்களுக்கு பரிந்துரை பட்டியல் வெளியீடு

>தமிழகம் முழுவதும் 62 லட்சம் பேர்,அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர்.

>

தமிழகம் முழுவதும் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 62 லட்சம் பேர், தங்கள் கல்வித் தகுதிகளை பதிவு செய்துவிட்டு, அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் இந்த திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில், பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கல்வித்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை ஆகிய துறைகளில் அதிகளவில் புதிய பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. தி.மு.க., அரசு அமைந்தபின், கடந்த நான்கரை ஆண்டுகளில் ஐந்து லட்சம் பேருக்கு அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அப்படியிருந்தும், வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை மள மளவென உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு வரை, வேலை வாய்ப்புக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை 55 லட்சத்திற்குள் இருந்தது. ஆனால், கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 62 லட்சமாக உயர்ந்து உள்ளது. இதில், பெண்கள் எண்ணிக்கை மட்டும் 29 லட்சமாக உள்ளது. மார்ச் மாதத்திற்குப் பின், மே மாதத்தில் பள்ளி பொதுத்தேர்வு முடிவுகள், அதன்பின் ஆசிரியர் தேர்வு முடிவுகள் என, பல்வேறு படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில், எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்பர். ஆனால், இந்த விவரங்கள் அரசின் புள்ளி விவரத்தில் சேர்க்கப்படவில்லை. மார்ச் 31ம் தேதி வரையான புள்ளி விவரங்களை மட்டும், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. ஆதிதிராவிடர் பிரிவில், இன்ஜினியரிங் பட்டதாரிகள் மட்டும் 12 ஆயிரத்து 449 பேர், அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். பழங்குடியினர் பிரிவில் 186 இன்ஜினியரிங் பட்டதாரிகளும் அரசு வேலைக்காக காத்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

>நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பற்றாக்குறை: அதிகளவில் தேர்வு செய்ய மத்திய அரசு ஆலோசனை

>

அரசுப் பணிகளில் ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், விரைவில் 150 அதிகாரிகளை தேர்வு செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. கடந்த 1990ல் அமைக்கப்பட்ட கீதாகிருஷ்ணன் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்ந்தெடுப்பது படிப்படியாகக் குறைக்கப்பட்டது. 1980களில் ஆண்டுக்கு 150 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 1990களில் அது 55லிருந்து 60 ஆகக் குறைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து, இப்போது பல்வேறு அரசுப் பணிகளில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் சேவை தேவையிருப்பதால், மீண்டும் அவர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இதுகுறித்து அமைச்சரவைச் செயலர் சந்திரசேகர் கூறியதாவது: இந்த ஆண்டு 150 அதிகாரிகளை தேர்ந்தெடுக்கிறோம். மத்தியில் இயக்குனர் நிலையிலும், மாநிலங்களில் கலெக்டர், சூப்பரன்டென்டெண்ட், டி.ஐ.ஜி., ஆகிய நிலைகளிலும் அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுகிறது. மக்கள் தொகை, அரசு நலத்திட்டங்கள், மக்களின் குறைகள் அதிகரித்துள்ளதற்கு ஏற்ப அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. மேலும், அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட இருக்கின்றன. தற்போது முதன்மைத் தேர்வு, முக்கியத் தேர்வு,நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலைகளில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடக்கின்றன. இதற்கு அடிப்படைத் தகுதியாக பட்டப்படிப்பு வேண்டும்.
நிர்வாக சீர்திருத்த கமிஷன், தற்போது பிளஸ் 2 முடித்தவுடனேயே தேர்வை ஆரம்பித்து விடலாம் என்று ஆலோசனை கூறியிருக்கிறது. அதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இருந்தாலும் அதையும் ஆலோசிப்போம். அதிகாரிகளை மதிப்பிடுவதில் தற்போது பழைய முறைதான் இருக்கிறது. அதையும் மாற்றி புது மதீப்பீட்டு முறை கொண்டுவரப்படும். இவ்வாறு சந்திரசேகர் தெரிவித்தார். இந்த புதிய மாற்றங்கள் அடங் கிய ‘சிவில் சர்வீஸ் -2010’ மசோதா இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் தயாராகி விடும் என்று தகவல்கள் கூறுகின்றன.

>இந்தியாவில் இன்னும் ஓராண்டில் ஐந்து லட்சம் வேலைவாய்ப்பு

>

இந்த நிதியாண்டில், ஐ.டி., டெலிகாம் உள்ளிட்ட பல துறைகளிலும், ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் இருப்பதாக, சர்வதேச வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.எர்னஸ்ட் அண்டு யங், கெல்லி சர்வீசஸ் நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில், 2010-11 நிதியாண்டில், பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
வங்கி, டெலிகாம், ஐ.டி., ஆகிய மூன்றும் தான், இதில் முன்னணியில் இருக்கின்றன. ஐ.டி., மற்றும் அதன் தொடர்புடையவற்றில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உள்ளன’ என்கிறார் கெல்லி சர்வீசஸ் நிர்வாக இயக்குனர் கமல் கரந்த்.டெலிகாம் துறையில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளும், உடல் நலம் மற்றும் வங்கித் துறைகளில் முறையே இரண்டு லட்சத்து 50 ஆயிரம் மற்றும் 40 ஆயிரம் வேலைவாய்ப்புகளும் இருப்பதாக கெல்லி மற்றும் எர்னஸ்ட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
‘இவை தவிர, மருத்துவம், அதிகளவில் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள், கல்வி ஆகிய துறைகளிலும், கணிசமான அளவுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன’ என்கிறார் எர்னஸ் அண்டு யங் நிறுவனத்தின் தலைவரும் பங்குதாரருமான என்.எஸ்.ராஜன். ரியல் எஸ்டேட், சில்லரை வணிகம், உற்பத்தித் துறைகளிலும் வேலைவாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

இந்தியாவில் இன்னும் ஓராண்டில் ஐந்து லட்சம் வேலைவாய்ப்பு