Category Archives: பத்தாம் வகுப்பு தக்கல் 2012

MARCH 2012 | பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் பொதுத்தேர்வை எழுத, 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை, "தத்கால்’ திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

MARCH 2012 | பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் பொதுத்தேர்வை எழுத, 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை, “தத்கால்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். பழைய கல்வி திட்டத்தில் ஏற்கனவே தேர்வெழுதி தோல்வி அடைந்தவர்கள், பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே பொதுத்தேர்வை எழுதலாம்.
இவர்கள், அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று, சிறப்புக் கட்டணம், 500 ரூபாய் மற்றும் தேர்வுக் கட்டணம், 125 ரூபாய் (எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் ஓ.எஸ்.எல்.சி.,) சேர்த்து, 625 ரூபாய் செலுத்த வேண்டும்.
ஆங்கிலோ இந்திய மாணவர்கள், 585 ரூபாயும், மெட்ரிக் மாணவர்கள், 635 ரூபாயும் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம், ஒரு பாடத்திற்கு மட்டுமே பொருந்தும். அதற்கு மேற்பட்ட பாடங்களாக இருந்தால், சிறப்புக் கட்டணத்துடன் ஒவ்வொரு பாடத்திற்கும் மெட்ரிக் மாணவர்கள் கூடுதலாக, 100 ரூபாயும், ஆங்கிலோ இந்திய மாணவர்கள், 50 ரூபாயும் தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
நேரடியாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வாக எழுதும் (சமச்சீர் கல்வி திட்டம்) தேர்வர்களும், “தத்கால்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான தேர்வுக் கட்டணம், 625 ரூபாய். ஆனால், பள்ளிக் கல்வித்துறை அளித்த செய்முறைத் தேர்வு பயிற்சி வகுப்புகளில், இவர்கள் கலந்து கொண்டிருக்க வேண்டும். செய்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று, எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள், “தத்கால்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட துணை இயக்குனர் அலுவலகங்களில், நேரில் 7ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.