Category Archives: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு மார்ச் 1-ந் தேதி தொடங்குகிறது.

சி.பி.எஸ்.இ. என்று அழைக்கப்படும் மத்திய செகண்டரி கல்வி வாரியத்தின் 12-ம் வகுப்பு தேர்வு மார்ச் 1-ந் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, மத்திய பிரதேசம், கோவா, அந்தமான் நிகோபார் தீவுகள், டாமன் டையூ ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 69 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
இவர்களில் 3 ஆயிரத்து 300 பேர் தனித்தேர்வர்களாக தேர்வை எதிர்கொள்கிறார்கள். முதல் நாளில் ஆங்கில தேர்வு நடக்கிறது. இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும். அனைத்து தேர்வுகளும் ஏப்ரல் மாதம் 16-ந் தேதி முடிவடைகின்றன.
தமிழ்நாட்டில் பிளஸ்-2 (மாநில பாடத்திட்டம்) பொதுத்தேர்வு வருகிற 8-ந்தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. 71/2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.