Category Archives: கட்டுரைகள்

துள்ளித் திரியும் நேரம்…

சில தினங்களுக்கு முன்பு என் வீட்டுக்கு அருகிலுள்ள நண்பரின் வீட்டில் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது பள்ளி விட்டு வந்த அவருடைய 12 வயது மகன் தந்தையைக் கட்டிப்பிடித்து தொங்கியவாறு, நான் இன்று ரொம்ப சந்தோஷமாக இருக்கேன் என்றான். அவனுடைய இயல்புக்கு மாறான இந்தச் செய்கை எங்களுக்கு வியப்பாக இருந்தது. அதைக் காட்டிக் கொள்ளாத நண்பர், என்ன விஷயம் என்றார் மகனிடம்.

 அதற்கு அவன், எனக்கு நாளையோட “எக்ஸôம்’ முடியுது… ரெண்டு மாசத்துக்கு லீவு என்றான். மிகச் சாதாரண விஷயம்தான். ஆனால், இதன் பின்னணியில் நாம் அறிந்துகொள்ள வேண்டியவை நிறைய உள்ளன.

 விவசாயிக்கு விளைச்சல் பெருகினால் மகிழ்ச்சி. தொழிலதிபருக்கு தடையற்ற உற்பத்தியும், நிறைந்த ஏற்றுமதியும் மகிழ்ச்சி, பணியாளருக்குப் பணி உயர்வும், ஊதிய உயர்வும் மகிழ்ச்சி, வியாபாரிக்கு விற்பனை அதிகரித்து லாபம் கிடைத்தால் மகிழ்ச்சி, தேர்தல் வெற்றியும், பதவியும் அரசியல்வாதிக்கு மகிழ்ச்சி.
 இப்படி ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், பள்ளிக் குழந்தைகளுக்கு விடுமுறைதான் மகிழ்ச்சி.
 குறிப்பாக, சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின்போது, வியாபாரிகள், விவசாயிகள், அலுவலர்கள் என அனைத்துத் தரப்பினரும் பெரும் அவதிக்குள்ளாயினர்.
 ஆனால், அப்போது தொலைக்காட்சிக்கு முன்பாக அமர்ந்து, பள்ளி விடுமுறைக்கான அறிவிப்பு வருகிறதா என்பதைக் கவனித்து, அறிவிப்பு வந்தவுடன் துள்ளிக் குதித்து மகிழ்ந்தவர்கள் பள்ளிக் குழந்தைகள்.
 தின்பண்டங்கள், புத்தாடைகள், விளையாட்டுப் பொருள்களைக் காட்டிலும் விடுமுறையால் கிடைக்கும் சந்தோஷம்தான் அவர்களுக்குப் பெரிது.
 அந்த சந்தோஷம் இப்போது அவர்களுக்குக் கிடைத்தாயிற்று. அதை அவர்கள் முழுமையாக அனுபவிக்க, கொண்டாடி மகிழ பெற்றோர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? இந்த விடுமுறையைக் குழந்தைகள் பயனுள்ளதாகக் கழிக்க பலவிதமான திட்டங்களை அவர்கள் தயாரித்திருப்பார்கள்.
 நம்மால் நம் விருப்பத்துக்குத் தயாரிக்கப்பட்ட இந்தத் திட்டங்கள் குழந்தைகளைச் சந்தோஷப்படுத்துமா என்பதை ஆராய்வது மிக அவசியம்.
 2 மாத விடுமுறையில் தட்டச்சு, கணினி கற்றுக் கொடுப்பது, ஹிந்தி வகுப்புகளுக்கு அனுப்புவது, முழுநேர இசை, நாட்டியப் பயிற்சி, ஆங்கிலப் பயிற்சி வகுப்பு, கணிதத் தேற்றங்களைக் கற்றுக் கொடுப்பது, அடுத்த வகுப்புக்கான பாடங்களை நடத்துவது, பொது அறிவு, நுண்ணறிவு பயிற்சி வகுப்புகள், இல்லையேல், குறிப்பிட்ட சிலர் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
 இப்போதுள்ள பாடத்திட்டங்களினாலோ அல்லது அவற்றைச் செயல்படுத்தும் முறையினாலோ தங்களது விளையாட்டு நேரத்தை பெரும்பாலும் இழந்துவிட்ட இந்தச் சிறார்கள், தாங்கள் சற்று இளைப்பாற நாடுவது தொலைக்காட்சியைத்தான். இதனால், மன, உடல் ஆரோக்கியங்களை இழக்கும் இவர்கள், சிறு வயதிலேயே 25 சதம் பேர் கண்ணாடி அணியும் நிலைக்குச் சென்றுவிட்டனர்.
 இந்தச் சூழ்நிலையில், மீண்டும் அதே திட்டமிட்ட பாடங்கள், வகுப்பறை, வீட்டுப்பாடங்கள் போன்றவற்றை இந்த விடுமுறையிலும் திணிப்பது குழந்தைகளை மன அழுத்தத்தின் உச்சத்துக்குக் கொண்டு சென்றுவிடும். இன்று அதன் பாதிப்பை அவர்கள் உணராவிட்டாலும், எதிர்காலத்தில் இது பெரிய பிரச்னையாக உருவெடுக்கலாம்.
 விடுமுறையில் அவர்களை ஊர் சுற்றவிட்டால் கெட்டுப்போய் விடுவார்களே…. என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. தனியாகவோ, பிறரோடு சேர்ந்து ஊர்சுற்றினால்தானே கெட்டுப் போவார்கள். அதற்குப் பதிலாக, பெற்றோர்களே அவர்களோடு சேர்ந்து ஊர் சுற்றினால் எப்படிக் கெட்டுப்போவார்கள். வியாபாரம், அலுவல் போன்றவற்றில் இருப்பவர்களுக்கும் இது சாத்தியமே. திட்டமிடுதல்தான் முக்கியம்.
 ஏப்ரல் மாதம் தொடங்கியாயிற்று. இதில் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு, தேர்தல் முடிவு என முதல் 15 நாள்களை விட்டு விடுங்கள். மீதமுள்ள 45 நாள்களை 5 அல்லது 6 வாரங்களாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.
 எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும் வாரத்தில் ஒருநாள் விடுமுறை உண்டு. அந்த விடுமுறை தினத்தை உங்கள் குழந்தைகளுடன் ஊர் சுற்றப் பயன்படுத்துங்கள்.
 நாம் செல்லும் இடங்கள் நம் குழந்தைகளுக்குப் பொழுதுபோக்காக அமைவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் அறிவை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும்.
 நம் பகுதியில் இருக்கும் ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பயணம் செய்வது, பயணச்சீட்டு முன்பதிவு செய்வது, பயணத்தின்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அங்குள்ள ரயில்வே போலீஸôரிடம் புகார் செய்வது, ரயில் ஓட்டுநர்களை அறிமுகப்படுத்தி அவர்கள் ரயிலை இயக்கும் முறை போன்றவற்றை விளக்குவது பயனுள்ளதாக இருக்கும்.
 இதேபோல, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், விமான நிலையம் போன்றவற்றையும் அறிமுகப்படுத்தலாம். கோளரங்கத்துக்கு அழைத்துச் சென்று காட்டுவதோடு, அங்கு நடைபெறும் வான் நோக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கச் செய்யலாம். அருங்காட்சியகத்துக்கு சென்று அங்குள்ள அதிசயங்களைக் காட்டலாம்.
 மேலும், நாம் இருக்கும் இடத்துக்கு அருகிலேயே நமக்குத் தெரியாத பல வரலாற்றுச் சின்னங்கள், கல்வெட்டுகள், கலைச் சின்னங்கள் நிச்சயமாக இருக்கும். அதுகுறித்து அறிந்து அங்கு அழைத்துச் செல்லலாம். நீச்சல் கற்றுக் கொடுக்கலாம்.
 நம் ஊரில் இருக்கும் தீயணைப்பு நிலையத்தில் பல விஷயங்கள் உள்ளன. நூலகங்களில் உள்ள என்சைக்ளோபீடியா என அழைக்கப்படும் தகவல் களஞ்சியங்களில் வண்ணப்படங்களுடன் கூடிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதுதானே என நாம் நினைக்கும் பல விஷயங்கள் நம் குழந்தைகளுக்கு அதிசயமாகவும், அறிவுச் செய்திகளாகவும் இருக்கும்.
 நாம் செய்ய வேண்டியது: இந்த 45 நாள்களிலும் நம் குழந்தைகளோடு எவ்வளவு அதிமான நேரத்தைச் செலவழிக்க முடியுமோ அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதுதான். இதைத்தவிர, அந்த இளம் மொட்டுகளுக்கு மகிழ்ச்சி தரக் கூடியது எதுவுமில்லை.
 நான் சந்தோஷமாக இருக்கேன் என்ற வார்த்தையை ஜூன் மாதத் தொடக்கத்தில் அவர்களிடம் இருந்து கேட்க வேண்டுமானால், இந்த 2 மாதங்கள் அவர்கள் சந்தோஷத்துக்கு விட்டுவிடுங்கள். இது அவர்கள் துள்ளித் திரியும் நேரம்…                                                                                                                                                இரா . மகாதேவன் 

>துள்ளித் திரியும் நேரம்…

>

>சாலைப் பாதுகாப்பு

>

சமுதாயத்தில் உள்ள எவ்வளவோ பிரச்னைகளில் அன்றாடம் எல்லோரையும் முட்டி மோதுவது போக்குவரத்து நெரிசல் ஒன்றுதான். நாலு வழிச்சாலை நெரிசலை ஓரளவு சீர்செய்தாலும் வேகம் தறிகெட்டுப்போய் உயிர்ப் பலி நாள்தோறும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஈரோடு நெடுஞ்சாலை மூன்று மருத்துவர்களைப் பலி கொண்டது. எவ்வளவு பெரிய இழப்பு இது?
தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 4873 கி.மீ., மாநில நெடுஞ்சாலையின் நீளம் 10,549 கி.மீ. தவிர, மாவட்ட சாலைகள், கிராமச் சாலைகள் உள்ளன. அவற்றின் மொத்த நீளம் 46,252 கி.மீ. வாகனங்களின் எண்ணிக்கை எந்த அளவு பெருகுகிறதோ அந்த அளவு சாலைகளின் வாகனக் கொள்ளளவு வளர்ச்சி அடைவதில்லை.

Read more »

விஞ்ஞான வளர்ச்சியும் ஆபத்தும்

விஞ்ஞான வளர்ச்சி காரணமாக இன்று உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒருவரை அடுத்த சில வினாடிகளில் செல்போனில் தொடர்பு கொள்ளலாம். அந்த அளவுக்கு செல்போன் சேவை இன்றைய சூழலில் அத்தியாவசியமான ஒன்றாக மாறி விட்டது.
விஞ்ஞான வளர்ச்சியால் இணையதளம், செல்போன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்று என்பது மறுக்கப்படாத உண்மை. இணைய தளமோ, செல்போன் சேவையோ ஒருசில நிமிடங்கள் பாதிக்கப்பட்டால் ஏதோ உலகமே துண்டிக்கப்பட்டது போன்ற உணர்வு.
மன்னர் ஆண்ட காலத்தில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குத் தரை வழியாக நடந்து சென்றனர். அதுவே சிறிது காலத்துக்குப் பின் குதிரைச் சவாரி, சாரட் வண்டியைப் பயன்படுத்தி வந்தோம். படிப்படியாக பெட்ரோல், டீசல் மூலம் பயன்படுத்தும் வாகனங்கள் வந்தன. இன்று தரை வழிப் போக்குவரத்து, கடல் வழிப் போக்குவரத்து, வான் வழிப் போக்குவரத்து என போக்குவரத்துகள் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாம் ஓர் இலக்கை அடையக் காத்திருக்க வேண்டியதில்லை.
மின்சாரம் கண்டுபிடிக்கும் முன்னர் மண்ணெண்ணெய் போன்ற எரிபொருள் மூலம் எரியும் விளக்குகளைப் பயன்படுத்தி வந்தோம். காலப்போக்கில் மின்சாரத் தேவையும் அத்தியாவசியமாகிவிட்டது. மின்சாரம் இல்லையெனில், உலகமே இருளில் மூழ்கி விடுகிறது என்பதைவிட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தேக்கம் ஏற்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். மக்கள்தொகை அதிகரித்து வருவதால் விஞ்ஞான வளர்ச்சியும் இன்று எளிதாகத் தோன்றுகிறது.
பத்து, பதினைந்து ஆண்டுகளில் வியப்பைத் தரும் வகையில் மனித சமுதாயம் வளர்ச்சி பெற்றுள்ளது. சைக்கிள் பயன்பாடு குறைந்த இன்று நடுத்தரப் பிரிவினர்கள்கூட மோட்டார் சைக்கிள், கார்களைப் பயன்படுத்தும் அளவுக்கு மாற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
இதேபோல் செல்போன் சேவை என்பது தகவல் தொழில்நுட்பத் துறையின் புரட்சி என்று குறிப்பிடலாம். செல்போன் சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
செல்போன் தயாரிக்கும் தனியார் நிறுவனங்களும், விற்பனை மையங்களும் புற்றீசல்போல் அதிகரித்து வருகின்றன.
இந்தியாவில் 60 கோடிப் பேர் செல்போன் சேவையைப் பயன்படுத்துவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டின் மக்கள்தொகையில் 50 சதவீதத்தினர் இச்சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது ஒருபுறம். செல்போன்களினால் ஏற்படும் பாதிப்புகளும் அதிர்ச்சி அளிக்கிறது. செல்போன் கோபுரங்கள், செயற்கைக்கோள் போன்றவற்றின் கதிர் வீச்சுத் தாக்கம் காரணமாக வெளவால், சிட்டுக்குருவி, தட்டான் போன்ற அரிய வகைப் பறவையினங்கள் அழிந்து வருகின்றன என வன உயிரின வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பறவையினங்கள் அழிந்து வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது.
இதைவிட செல்போன் சேவைக்காக அமைக்கப்பட்டுள்ள கோபுரங்கள் பெரும்பாதிப்பைத் தருவதாகக் கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவையை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. இதன் விளைவாக, செல்போன் சேவைக்கான கோபுரங்கள் குடியிருப்புப் பகுதியில் அதிக அளவில் அமைக்கப்பட்டு வருகின்றன. ஊருக்குள் திரும்பிய திசையெங்கும் செல்போன் கோபுரங்கள் கண்ணில்படுகின்றன.
இந்தக் கோபுரங்கள் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அமைந்திருப்பதால் அதன் கதிர் வீச்சுகளால் மனித உயிர்களுக்கு ஆபத்தைத் தருகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
செல்போன் கோபுரம் நிறுவப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதியில் வசிப்பவர்களுக்கு இதயம் தொடர்புடைய நோய்கள் தாக்குவதாகவும், கர்ப்பிணிப் பெண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
செல்போன் கோபுரங்கள் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில் பிறந்த குழந்தைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். விஞ்ஞான வளர்ச்சி ஒரு நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் நாம் சேவைகளை எளிதில் பெறுகிறோம். வேலைவாய்ப்புகள் பெருகி வருகிறது. மனித வளர்ச்சிக்கு விஞ்ஞான வளர்ச்சி உறுதுணையாக இருக்கிறது. ஆனால், மனித உயிர்களுக்குத் தரும் ஆபத்தையும் நாம் உணரவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.
                                                                                                                                                       சா. ஷேக்அப்துல்காதர்

>விஞ்ஞான வளர்ச்சியும் ஆபத்தும்

>

விஞ்ஞான வளர்ச்சி காரணமாக இன்று உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒருவரை அடுத்த சில வினாடிகளில் செல்போனில் தொடர்பு கொள்ளலாம். அந்த அளவுக்கு செல்போன் சேவை இன்றைய சூழலில் அத்தியாவசியமான ஒன்றாக மாறி விட்டது.
விஞ்ஞான வளர்ச்சியால் இணையதளம், செல்போன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்று என்பது மறுக்கப்படாத உண்மை. இணைய தளமோ, செல்போன் சேவையோ ஒருசில நிமிடங்கள் பாதிக்கப்பட்டால் ஏதோ உலகமே துண்டிக்கப்பட்டது போன்ற உணர்வு.
மன்னர் ஆண்ட காலத்தில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குத் தரை வழியாக நடந்து சென்றனர். அதுவே சிறிது காலத்துக்குப் பின் குதிரைச் சவாரி, சாரட் வண்டியைப் பயன்படுத்தி வந்தோம். படிப்படியாக பெட்ரோல், டீசல் மூலம் பயன்படுத்தும் வாகனங்கள் வந்தன. இன்று தரை வழிப் போக்குவரத்து, கடல் வழிப் போக்குவரத்து, வான் வழிப் போக்குவரத்து என போக்குவரத்துகள் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாம் ஓர் இலக்கை அடையக் காத்திருக்க வேண்டியதில்லை.
மின்சாரம் கண்டுபிடிக்கும் முன்னர் மண்ணெண்ணெய் போன்ற எரிபொருள் மூலம் எரியும் விளக்குகளைப் பயன்படுத்தி வந்தோம். காலப்போக்கில் மின்சாரத் தேவையும் அத்தியாவசியமாகிவிட்டது. மின்சாரம் இல்லையெனில், உலகமே இருளில் மூழ்கி விடுகிறது என்பதைவிட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தேக்கம் ஏற்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். மக்கள்தொகை அதிகரித்து வருவதால் விஞ்ஞான வளர்ச்சியும் இன்று எளிதாகத் தோன்றுகிறது.

Read more »

இந்தியாவில் வறுமை

இந்தியாவில் வறுமையை ஒழிப்பது ஒருபக்கம் இருக்கட்டும்; வறுமையைக் கணக்கிட சரியான அளவுகோல் என்ன? வறுமையாளர்கள் எத்தனை பேர்? இவற்றைக் கணக்கிடுவதிலேயே பல சிக்கல்கள் உள்ளன என்பதுதான் வேதனை.
இதற்கு முக்கியக் காரணம் மத்திய அரசு சார்ந்த புள்ளியியல் துறை, உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரப் பிரிவு எனப் பல அமைப்புகள் வறுமை பற்றிய கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளன என்பதுதான். இந்த அமைப்புகளின் அளவுகோல்கள் வித்தியாசப்படுகின்றன. அதுமட்டுமல்ல, அந்த அமைப்புகளும் தமது அளவுகோல்களை அவ்வப்போது மாற்றி அமைக்கின்றன.
உதாரணமாக, மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான மதிப்பீட்டின்படி 2004-05-ம் ஆண்டில் மக்கள்தொகையில் 28 சதவீதம் பேர் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்கிறார்கள் என அறிவிக்கப்பட்டது. விலைவாசி குறியீட்டின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப ஓரிரு சதவீதம் அதிகரிக்கக்கூடும். ஆக, சமீபகாலம்வரை, இந்தியாவில் கிட்டத்தட்ட 30 கோடி மக்கள் ஏழ்மையில் உழல்கிறார்கள் என்பது மக்கள் மனதில் பதிந்துள்ள விஷயம்.
உலக வங்கி, உலகெங்கும் வறுமையில் வாடும் மக்கள் குறித்த ஆய்வறிக்கையை அவ்வப்போது வெளியிடுகிறது. அந்த அறிக்கைப்படி, உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஏழைகள் இந்தியாவில்தான் வசிக்கிறார்கள். இது ஏற்கெனவே தெரிந்த விஷயம்தான். இரண்டாவதாக, அந்த அறிக்கை தரும் புதிய செய்தி என்னவெனில், உலக வங்கி, மக்களின் வாங்கும் சக்தியை அடிப்படையாகக் கொண்டு, வறுமையின் அளவைக் கணக்கிடுகிறது என்பதுதான்.
உலக வங்கியின் ஆய்வு, நாள் ஒன்றுக்கு, ஒரு நபருக்கு 1.25 டாலர் வருவாய் என்னும் அளவுகோலின்படி வறுமையாளர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, 2005-ம் ஆண்டு விலைவாசி அடிப்படையில், இது நகர்ப்புறங்களில் 21 ரூபாய் 60 பைசா வருவாய்க்குச் சமம். கிராமப்புறங்களில் 14 ரூபாய் 30 பைசா வருவாய்க்குச் சமம்.
இந்த அளவுகோலின்படி, 2005-ல் இந்தியாவில் 42 சதவீத மக்கள் – அதாவது 42 கோடி மக்களுக்கும் அதிகமாக வறுமையில் உள்ளார்கள் என்று ஆகிறது. இது அதிர்ச்சி தரும் செய்தி.
இந்தியாவில் ஏழைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதை மறுக்க இயலாது. அதேநேரம் சில அடிப்படை அம்சங்கள் பரிசீலிக்கத் தக்கவை. எனவே, உலக வங்கியின் ஆய்வு, உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது வியப்பளிக்கவில்லை.
முன்னதாக இருந்த அளவுகோல் என்னவெனில் நாள் ஒன்றுக்கு தலா ஒரு டாலருக்குக் குறைவான வருவாய் உள்ளவர்களே வறுமைக்கோட்டின்கீழ் வந்தார்கள். அதன்படி, 2005-ம் ஆண்டில், இந்தியாவில் 24 சதவீதம் பேர் பரம ஏழைகள் என்று கணிக்கப்பட்டது. இது இந்திய அரசின் கணக்கோடு ஒத்துப்போனது.
இது ஒருபுறம் இருக்க, பொருளாதார வல்லுநர்கள் பலர் உலக வங்கியின் ஆய்வுமுறையைக் குறை கூறியுள்ளனர். பொதுவாக ஆசியாவிலும், குறிப்பாக, இந்தியாவிலும் ஏழ்மை மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்பது அவர்களின் கருத்து. முக்கியமாக, வாழ்க்கைச் செலவுகளின் அடிப்படையில் உலக வங்கியின் ஆய்வு அமைந்திருப்பது நம்பிக்கைக்கு உரியது அல்ல என்பது வல்லுநர்களின் வாதம். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கிராமங்களில் வாழ்கிறார்கள் என்பதால், போதிய அளவு பரவலாக வாழ்க்கைச் செலவுகளைக் கணக்கிடுவது நடைமுறைச் சாத்தியம் அல்ல.
வருவாய் அளவை ஒரு டாலரிலிருந்து 1.25 டாலராக உயர்த்தியிருப்பதன் மூலம், அதிக மக்கள்தொகை உள்ள இந்தியாவில் 25 சதவீதமாக இருந்த ஏழைகளின் எண்ணிக்கை 42 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சரி, இந்தியாவின் அளவுகோல் என்ன? பல்லாண்டுகளாக, இந்தியாவில் அரசு சார்ந்த புள்ளியியல் அமைப்பு பயன்படுத்தும் அளவுகோல், மக்கள் எத்தனை “கேலரி’ சத்துள்ள உணவை உட்கொள்கிறார்கள் என்பதையே வறுமையைக் கணக்கிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
இதனால் உணவு அல்லாத அத்தியாவசியச் செலவுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை என்ற குறைபாடு சுட்டிக்காட்டப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த அணுகுமுறை ஏற்புடையதல்ல என ஐ.நா. வளர்ச்சித் திட்ட அமைப்பு தனது 2003-ம் ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏழு ஆண்டுகள் கழிந்த பிறகும் மத்திய அரசு இதற்கான நடவடிக்கையை எடுக்காதது வருந்தத்தக்கது.
முக்கியமாக, ஆரம்பக் கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டு செலவுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பது ஐ.நா. அமைப்பின் அறிவுரை ஆகும். இதற்கு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படும் விளக்கம், அரசே எளிய மக்களின் கல்விக்கும், சுகாதாரம் மற்றும் மருத்துவத்துக்கும் செலவிடும் என்பதாகும்.
சில மாநிலங்களுக்கு வேண்டுமானால் இது ஓரளவு பொருந்தும். பல மாநிலங்களில், ஏழ்மையில் வாழ்பவர்களுக்கு அரசுத் தரப்பு, கல்வி மற்றும் மருத்துவத்துக்கான ஏற்பாடுகள் தரத்திலோ, அளவிலோ திருப்திகரமாக இல்லை என்பது வெளிப்படை.
மேலும், 6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச, கட்டாயக் கல்வி அளிப்பதற்கான சட்டம் 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்ட பின் அரசின் ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
எனவே, உட்கொள்ளும் உணவின் “கேலரி’யை மட்டும் கணக்கிடுவது போதுமானதல்ல. மருத்துவச் செலவு உள்ளிட்ட வறுமையின் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, உண்மை நிலையை அறியும் வகையில் புதிய அளவுகோலை விஞ்ஞானரீதியில் உருவாக்குவது அவசியம் மட்டுமல்ல, அவசரமும்கூட.
இப்படி மாறுபட்ட கணக்கெடுப்பு முறைகள் அமலில் உள்ள இந்தச் சூழலில், இருண்ட வானில் ஒளிக்கீற்றுபோல், ஐக்கிய நாடுகள் சபையின் 2010-ம் ஆண்டுக்கான பொருளாதார மேம்பாட்டு இலக்குக்கான அறிக்கை அண்மையில் வெளிவந்துள்ளது. இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் 1990-ம் ஆண்டில் 51 சதவீதமாக இருந்த வறுமையாளர்களின் எண்ணிக்கை 2015-ம் ஆண்டில் 24 சதவீதமாக – அதாவது பாதியாகக் குறையும் என எதிர்பார்க்கலாம்.
ஐ.நா. சபை அறிக்கையின்படி இந்தியாவில் 2015-ம் ஆண்டில் பரம ஏழைகளின் எண்ணிக்கை 18 கோடியே 80 லட்சம் பேராக இருப்பார்கள்.
அதேநேரம், இந்தியாவைத் தவிர இதர தெற்காசிய நாடுகளில் வறுமை குறையும் என்றாலும், இந்தியா அளவுக்குக் குறைவதற்கான சாத்தியம் இல்லை என்கிறது ஐ.நா. அறிக்கை. இந்தியாவைத்தவிர, பிற நாடுகளில் வறுமை ஒழிப்பு குறைவாக இருக்கும் என்பதற்கான காரணம், 2008-ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச அளவிலான பொருளாதார நெருக்கடியே.
இந்தியா கடந்த இரண்டு ஆண்டுகளாக 7 சதவீத சராசரி வளர்ச்சியைத் தக்க வைத்துள்ளது. 2011-12-ம் ஆண்டில் 9 சதவீத வளர்ச்சியையும், 2015-ல் 10 சதவீத வளர்ச்சியையும் இந்தியா எட்டும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. இது நம்பிக்கையூட்டும் அம்சம்.
அதேநேரம், வளர்ச்சியின் பலன் கிராமங்களையும் ஏழைகளையும் சென்றடைய வேண்டும் என்பது முக்கியம். இதற்கு கீழ்க்காணும் செயல்திட்டங்களை முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.
முதலாவதாக, மின் உற்பத்தி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பிரம்மாண்டமான பணியை அரசு மட்டும் தனித்துச் செயல்படுத்த முடியாது என்பதால் அரசுத்துறை மற்றும் தனியார் துறை இணைந்து செயல்படுத்த வேண்டும்.
இரண்டாவதாக, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
மூன்றாவதாக, புதிய வேலை வாய்ப்புகளுக்குப் பொருத்தமான வகையில் இளைஞர்களுக்கு முன் பயிற்சி அளிக்க வேண்டும். வேலையில்லாத் திண்டாட்டம் உள்ள அதேநேரத்தில், புதிய வேலைகளுக்குத் திறன் படைத்த நபர்கள் கிடைப்பதில்லை என்பது தொழில்துறையினரின் குறையாக உள்ளது. இந்தக் குறைபாட்டை போக்கும்வகையில் போதிய அளவில் பயிற்சிக் கூடங்களையும் உருவாக்க வேண்டும். நான்காவதாக, வறுமை ஒழிப்புக்கு முக்கியத் தேவை எளிய மக்களின் வாங்கும் சக்தியைப் பெருக்க வேண்டும்.
இதற்கு ஏற்ப பணவீக்கம் மற்றும் விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அண்மைக்காலமாக, உணவுப் பணவீக்கம் 17 சதவீதத்தை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. ஒட்டுமொத்தப் பணவீக்கமும் இரட்டை இலக்கை எட்டிவிட்டது.
இந்நிலையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு மற்றும் பாரத ரிசர்வ் வங்கி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான், வாங்கும் சக்தியை மேம்படுத்த முடியும்.
ஐந்தாவதாக, மிக முக்கியமாக பொருளாதார வளர்ச்சி நாட்டின் அனைத்துப் பாகங்களையும், குறிப்பாக ஏழை, எளிய மக்களையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
மேற்கூறிய திட்டங்கள் வெற்றி அடைந்தால்தான் வறுமை ஒழிப்பு வசப்படும். அது இல்லாமல், 9 சதவீத வளர்ச்சியையோ, 10 சதவீத வளர்ச்சியையோ எட்டினால்கூட, வேலை இல்லாத ஓர் ஏழை இளைஞருக்கு வளர்ச்சியால் என்ன பலன்?
அதேபோல், குறுந்தொழில் மற்றும் சுயதொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உரிய நேரத்தில் வங்கிக் கடனுதவி கிடைக்காவிட்டால், வளர்ச்சியால் அவர்களுக்கு என்ன பலன்?
இந்தக் கேள்விகளுக்கு ஆத்மார்த்தமாகப் பதில் கண்டு, அர்ப்பணிப்பு உணர்வுடன் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தினால் மட்டுமே, வறுமை ஒழிப்பு என்னும் புனித வேள்வி நிறைவு பெறும்.

>இந்தியாவில் வறுமை

உடற்பயிற்சிக்கு ஓய்வளிக்கலாமா?

நோயற்ற வாழ்வு என்னும் குறைவற்ற செல்வத்தைப் பெறுவது இப்போது மிகவும் அரிதாகிவிட்டது. சத்தில்லா உணவு, சுகாதாரமற்ற வாழ்விடம் எனப் பல்வேறு காரணங்களுக்கிடையே ஆரோக்கியமற்ற வாழ்வுக்கு உடற்பயிற்சிப் புறக்கணிப்பும் முக்கியக் காரணம்.
“வாழ்நாள் முழுவதும் மருத்துவரிடம் செல்லாமல் இருக்க ஒரு மருந்து சொல்லுங்கள்’ என்றால் உடனே உடற்பயிற்சி என்று சொல்லி விடலாம். ஆனால், கண்கெட்ட பின்பு சூரியநமஸ்காரம் என்பதைப் போல நோய்களின் ஆதிக்கம் உடலில் அரங்கேறிய பின்புதான் கசக்கும் மருந்துகளுடன், வியர்க்கும் உடற்பயிற்சியின் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்புகிறார்கள் பலர்.
சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை உடற்பயிற்சிக்காகத் தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. ஏனென்றால், எந்திரங்களின் பயன்பாடு குறைந்திருந்த அந்தக் காலத்தில் தொழில் முதல் விவசாயம் வரை அனைத்துக்கும் உடல் உழைப்பே பிரதானம். உணவுக்காக உழைக்கும்போதே உடற்பயிற்சியும் கிடைக்கப்பெற்று ஆரோக்கியம் பெருகியது.
ஆறுகளின் தேன்சுவை நீருக்கும், தென்றல் உறவாடும் காற்றுக்கும் இப்போதைய நகரங்களில்கூட அன்று தட்டுப்பாடில்லை. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தாமல் எந்த வேலையையும் முடிக்க முடியாது என்பதால் உடலும் அதற்கேற்ப வளைக்கப்பட்டது.
இதனுடன் “வீரம்’ என்னும் போதையூட்டி இளைஞர்களுக்கு சிலம்பம், வாள்வீச்சு போன்ற வழிகளிலும் உடல் மேலும் வலுவூட்டப்பட்டது. சில பகுதிகளில் பல கிலோ எடை கொண்ட “திருமண கல்’-என்ற கல்லை தூக்கிப் போட்டால் மட்டுமே பெண் கொடுக்கும் வழக்கம் கூட இருந்தது.
காலத்தின் வேகத்தில் அறிவியல் கடவுளின் வரத்தால் ஏராளமான இயந்திரங்கள் பெருகிவிட்டன. இன்று படுக்கையில் இருந்தபடியே வீட்டுக் கதவுகளை “ரிமோட் கன்ட்ரோல்’ மூலம் திறந்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உடற்பயிற்சி வெகுதூரத்துக்குச் சென்றுவிட்டது.
கணினியோடு உறவாடி உழைக்கும் இன்றைய பல இளைஞர்களின் கைகள் கூட மகளிரைப் போல மென்மையாகிவிட்டது என்பதே உண்மை.
கருப்பட்டியையும், கம்பஞ்சோற்றையும் அருங்காட்சியகத்தில் இருக்கும் உணவுப் பொருளாகப் புறந்தள்ளிவிட்டு, துரித உணவுகளால் வயிற்றை நிரப்பிக் கொள்ளும் இளைஞர்களை உடல் பருமனும், நோய்களும் எட்டிப்பிடிப்பது எளிதாகி வருகிறது.
ராணுவம், போலீஸ் போன்ற பணிகளுக்குச் சென்றால் மட்டுமே கட்டான உடல்வாகு தேவை என்பதும், படிப்பு, பணிகளுக்காக உடற்பயிற்சியை மறப்பதும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
பொலிவான முகத் தோற்றத்துக்காக பலவித “க்ரீம்’களை வாங்க பணத்தில் தாராளம் காட்டும் வேளையில், உடலை மிடுக்காக்கி ஆரோக்கியத்தைப் பரிசளிக்கும் உடற்பயிற்சிகளுக்காகச் செலவிட மட்டும் தயக்கம் காட்டுவது தவறானதாகும்.
இளைஞர்கள் உடற்பயிற்சிக்கு ஓய்வளிக்கும் போக்கு உகந்ததல்ல. உடற்பயிற்சியின் உன்னதத்தை சிறுவயது வகுப்புகளிலேயே அறிந்திருந்தும் அதன்பக்கம் புறமுதுகிடுவதால்தான் ஆரோக்கியத்துக்காக மருந்தகங்களில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொடக்கப் பள்ளிகள் முதல் மேல்நிலைக் கல்வி வரை வாரத்தில் ஒருசில மணி நேரம் மட்டுமே விளையாட்டுப் பாடவேளையாக உள்ளது. இந் நேரத்திலும் சில ஆசிரியர்கள் தமது பாடத்தைப் படிக்க ரகசிய உத்தரவுகளைப் பிறப்பிப்பதும் உண்டு.
அனைத்து மாணவர்களும் ஏதேனும் ஒரு விளையாட்டு அணியில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று வற்புறுத்தல் இல்லை. இதனால் விளையாட்டுப் பாடவேளையை வெட்டிக்கதை நேரமாக மைதானத்தில் மண்ணில் கோலமிட்டு கழிக்கும் மாணவர்கள் ஏராளம்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பர். அந்தப் பழமொழிக்கு ஏற்ப பள்ளிப் பருவத்திலேயே விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியைக் கட்டாயப்படுத்த வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்குத் தினந்தோறும் மாலை இறுதி பாடவேளையை விளையாட்டுக்காக ஒதுக்க வேண்டும். இந்த நேரத்தில் சிலம்பம், அந்நிய நாட்டு வரவான கராத்தே உள்பட உடற்பயிற்சியோடு தொடர்புடைய வீர விளையாட்டுகளைச் சேர்ப்பது தவறில்லை.
அரசுப் பணிகளில் சேருவதற்கு விளையாட்டுச் சான்றிதழ்களின் அவசியத்தை அதிகப்படுத்த வேண்டும். உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்பட சுகாதாரத் துறையினர் புதிய யுக்திகளை சிந்தித்து செயல்படுத்த வேண்டும்.
தமிழக அரசு, இளைஞர்களிடம் உடற்பயிற்சி மோகத்தைத் தூண்ட அனைத்து ஊர்களிலும் பல்வேறு வசதிகள் கொண்ட நவீன உடற்பயிற்சி கூடங்களை குறைந்த கட்டணத்தில் திறக்க புதிய திட்டத்தை உருவாக்குவது அவசியம்.
வருங்கால இந்திய இளைஞர்கள் வலுவானவர்களாக மாறினால்தான் நாட்டின் ஏற்றம் எளிதாகும் என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியாததல்ல.

>உடற்பயிற்சிக்கு ஓய்வளிக்கலாமா?

>இந்திய ஏழைகள் எண்ணிக்கை 40 கோடியாக எகிறும்

>

நாட்டில் வரும் 2011ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏழைகளின் எண்ணிக்கை 40 கோடியாக அதிகரிக்கும், எனவே உணவு தானிய உற்பத்தியை பெருக்க வேண்டுமென மத்திய திட்டக்கமிஷன் தெரிவித்துள்ளது.
உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதற்காக அமைக் கப்பட்ட மத்திய அமைச்சர் களை கொண்ட குழுவின் கூட் டம், கடந்த வாரம் நடந்தது. இக்கூட்டத்திற்கு, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை வகித்தார்.இதில் உணவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்துவது குறித்து, ஆராய அமைக்கப் பட்ட சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டி, அறிக்கை தாக்கல் செய்து சில பரிந்துரைகளை தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கைபடி, நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை, கடந்த 2005ம் ஆண்டு 37 கோடியாக இருந்தது. ஆனால் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை உயர்ந்து, 40.5 கோடியாக இருக்கும். இதன்படி நடப்பு ஐந்தாண்டு திட்டத்தின் முடிவில், ஏழைகளின் எண்ணிக்கை 3.5 கோடி உயர்ந்துவிடும். எனவே உணவு தானிய தேவைகளும் பன்மடங்கு உயரும்.நாட்டிலுள்ள ஏழைகள் கணக் கெடுப்பு அடிப்படையில், ஆண்டுக்கு 34 மில்லியன் டன் உணவு தானியங்கள் தேவைப்படுகின்றன. இதற்காக மத்திய அரசு,மாநில அரசுகளுக்கு 54 ஆயிரம் கோடி ரூபாயை மானியமாக அளிக்கிறது.2005ம் ஆண்டின் ஏழைகள் கணக்கெடுப்பின்படி வழங்கப் பட்ட மானியத்தை விட, 6 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாகும். 2010-11ம் ஆண்டில் உணவு மானியம் 55 ஆயிரம் கோடி ரூபாயாக அரசு அறிவித்துள் ளது.தற்போதைய ஏழைகளின் கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த தொகை மிகக்குறைவு என்பதுதான் உண்மை.
எனவே ஏழைகளுக்கு அளிக் கப்படும் உணவு மானிய தொகையை தோராயமாக கணக் கிட்டு, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஒவ்வொருவருக்கும் 6 கிலோவும், ஒரு குடும்பத் திற்கு மாதம் 35 கிலோ உணவு தானியம் கிடைக்கும் வகையில், மானியம் வழங்க வேண்டுமென கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.இதனை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சரவை குழு ஏற்றுக் கொண்டது.மேலும் ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதிலுள்ள, நடைமுறை சிக்கல் களை கருத்தில் கொண்டு, அதில் சில மாறுதல்களை செய்யுமாறு, காங்கிரஸ் தலைவர் சோனியா, அரசுக்கு விடுத்த வேண்டுகோளையும் அமைச்சரவை குழு ஏற்றது.
மேலும் கமிட்டி அளித்துள்ள மற்றொரு பரிந்துரையில், மாநில அரசுகள் பொது வினியோக திட்டத்தை முறைபடுத்த வேண்டும்.மத்திய அரசு அளிக்கும் மானியம் பயனாளிகளை நேரடியாக செல்லும் வகையில், பொது வினியோக முறை இருக்க வேண்டும்.இதற்காக பொது வினியோக முறை திட்டத்தை, தேசிய அடையாள அட்டை திட்டத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுத்த வேண்டும் அல் லது டில்லி மற்றும் சண்டிகர் நகரங்களில் செயல்படுத்தப் பட்டுள்ள முன்னோடி திட்டம் போன்று,வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கி, பொது வினியோக திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.இந்நிலையில் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, நாட்டில் வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள 11.52 கோடி குடும் பங்களை பொதுவினியோக திட்டத்தில் சேர்ப்பது குறித்து, அமைச்சரவை குழு முடிவு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஏழைகள் எண்ணிக்கை 40 கோடியாக எகிறும்

>ஆடைதரும் உறவு

>

நம்முடைய வாழ்க்கையில் உடல் தூய்மையும், உள்ளத்தூய்மையும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதை நம்முடைய வெளித்தோற்றமே காட்டிவிடும்.
உள்ளம் தெளிவாக இருப்பின் உடலின் தோற்றமும் கம்பீரமாகக் காட்சி அளிக்கும். நல்ல உடை நம்முடைய ஒழுக்கம் பண்பு செயல்திறன், புத்துணர்ச்சி ஆகியவற்றை நிச்சயமாக உருவாக்கித் தரும்.
அழகாக ஆடை, அணிந்த பின்பு அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து இருக்க முடியாது. துடிப்பாகச் செயலைச் செய்ய மனம் தூண்டுதல் செய்யும். சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். மனம் தெளிவுடன் இருக்கும்.
இங்கு இயங்கும் தன்மை தான் செயலை வெற்றிகரமாக அமைக்க வழிவகுக்கும். உன்னுடைய தோற்றமே உன் வருங்காலத்தை முடிவு செய்கிறது என்கிறார் எல்லன் ஹாப்பர் என்ற அறிஞர்.
நம்முடைய தோற்றத்தைப் பார்த்து தான் மற்றவர்கள் மதிப்பீடு செய்வார்கள். இந்த மதிப்பீடு தான் நம்முடன் நட்புறவு கொள்ளவும் தொழில் துறையில் இணைந்து பணியாற்றவும், பொருள் உதவி செய்யவும் உதவி செய்யும் துணை புரியும்.
நம்முடைய தோற்றம் சரியாக இல்லா விட்டால் யாரும் நம்முடன் தொடர்பும் உறவும் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.
ஜெர்மனியில் புகழ் பெற்ற அறிஞராக இருந்தவர் ஹொ ரோஸ். இவர் வீட்டிற்கு வந்தவுடன் நல்ல ஆடைகளைக் களைந்துவிட்டு மிகவும் எளிய ஆடைகளை அணிந்து கொள்வார்.
தான் வளர்த்து வந்த பறவைகளுக்காக தெருவில் உள்ள குப்பைத் தொட்டியில் புழுக்களைத் தேடிக் கொண்டிருந்தார்.
அந்த வழியே சென்ற ஒருவர் இவருடைய செயலைப் பார்த்து இவர் ஒரு பிச்சைக்காரர் போலும். எச்சில் உணவைத் தேடிக் கொண்டிருக்கிறார் என்று எண்ணிக் கொண்டு அறிஞரிடம் சில நாணயங்களைக் கொடுத்தார்.
அறிஞரைப் பிச்சைக்காரன் என்று எண்ண வைத்தது அவருடைய தோற்றம் தானே! அதனால் நம்முடைய தகுதிக்கேற்ப நல்ல உடைகளை அணிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
நாடகத்தில் அரசராக நடிப்பவர் அரசரைப் போன்றே ஆடை அணிய வேண்டும் அல்லவா? ஆண்டியை போல ஆடை அணிந்தால் அவரை அரசராக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் இல்லையா!
இதே போன்று உலகமாகிய நாடக மேடையில் நாம் ஒவ்வொருவரும் விதவிதமான பாகத்தை கொண்டிருக்கிறோம். அதற்கு ஏற்றவாறு நம்முடைய உடை இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமாகும்.
நீதி மன்றம் என்பது எல்லோருக்கும் நீதி வழங்கும் இடம். நீதிபதிகளும் வழக்கறிஞர் அங்கு கம்பீரமாக வீற்றிருப்பதைப் பார்க்கிறோம். இதற்குக் காரணம் என்ன?
நீதி என்பது உயர்வானது அதனை வழங்குபவர்களும் உயர்வானவர்களாக உன்னதமானவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் எளிய தன்மையுடன் இருப்பதாக நாமே எண்ணிக் கொண்டு பிறரை ஏமாற்றக் கூடாது.
ஹட்சன் என்ற காரை உற்பத்தி செய்யும் தொழில் அதிபரைச் சந்திக்க ஒரு செல்வந்தர் அழைத்து வரப்பட்டார். அந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர்கள் அந்த செல்வந்தர் பல கோடிகளுக்கு அதிபதி என்று கூறினார்கள்.
ஆனால் அந்த செல்வந்தர் மிகவும் எளிய உடையை அணிந்து வந்தார். இவரை பார்த்த ஹட்சன் கார் முதலாளி, அவருடன் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் தன்னுடைய தொழிற்சாலைக்குப் போய்விட்டார்.
அவரிடம் சென்று ஏன் செல்வந்தரிடம் பேசாமல் போய்விட்டீர்கள் என்று கேட்டனர். அந்தச் செல்வந்தர் தன்னுடைய தகுதிக்குத் தக்கபடி உடை அணிந்து வரவில்லை.
இப்படி அவர் போலி வேடம் போட்டு தன்னையே ஏமாற்றிக் கொள்வதோடு பிறரையும் ஏமாற்றுகிறார். அதனால் அவர் ஒரு ஏமாற்றுப் பேர்வழி. உண்மையானவர் அல்ல. அப்படிப்பட்டவரிடம் நான் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றார் கார் முதலாளி.
நம்மை மற்றவர்கள் எவ்விதம் எண்ண வேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்குத் தக்கபடி உடை அணிந்து கொள்ள வேண்டும். அப்படி நாம் செய்யவில்லை என்றால் நமக்கு நாமே தீங்கும் துரோகமும் செய்து கொள்கிறோம்.
உனக்காக நீ உணவு சாப்பிட வேண்டும். பிறருக்காக நீ உடை அணிய வேண்டும். ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழி இருக்கிறது. வீட்டில் எளிய உணவாக இருந்தாலும் பரவாயில்லை. அதை மற்றவர்கள் அறியமாட்டார்கள்.
ஆனால் நாம் அணியும் ஆடை ஒழுங்கானதாகவும் தூய்மையானதாகவும் அழகாகவும் இருக்க வேண்டும்.
இப்படி இல்லாவிட்டால் பிறர் நமக்கு மதிப்பை தரமாட்டார்கள். நாம் சொல்லும் வார்த்தைக்கு ஒரு அந்த …ஏற்படாது. அதற்காக படாடோபமான ஆடம்பரமான ஆடைகளை அணிய வேண்டியது இல்லை.
நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எந்த வித உடை அணிந்து கொண்டிருக்கிறார்களோ அந்த ஆடையை அணிந்து கொண்டால் போதும். ரோமில் இருக்கும் போதும் ரோமான்யர்கள் போன்று இருக்க வேண்டும் என்ற பழமொழியை எப்பொழுதும் நினைவில் வைக்க வேண்டும்.
அதே நேரத்தில் அணியும் ஆடை நம்முடைய வருமானத்திற்கு தக்கபடி இருக்க வேண்டுமே தவிர அதற்கு அப்பாற்பட்டதாக இருக்கக்கூடாது.
நாம் ஒழுங்கான உடைகளை அணிந்திருப்பதைப் பார்த்து மற்றவர்கள் நம்மைப் புகழ வேண்டுமே தவிர இகழக்கூடாது.
“மகனே நீ எங்கு இருக்கின்றாயோ அங்குள்ள சமகாலத்து அறிவாளிகள் எவ்விதம் உடை உடுத்திக் கொண்டிருக்கிறார்களோ அவ்விதமே நீயும் அவர்களைப் போன்ற உடை அணிய வேண்டும். உன்னுடைய தகுதிக்கு மீறிய ஆடையை அணியாதே என்று செஸ்டர் பீல்டு தன் மகனுக்கு தெரிவித்தார்.
“உன்னுடைய பணப்பையால் வாங்கும் அளவுக்கு உடைகள் இருக்க வேண்டும். அலங்காரத்திற்காக இருக்கக்கூடாது. உயர்தர ஆடையாக இருந்தாலும் பரவாயில்லை. பகட்டுடன் இருக்கக்கூடாது. உடையே ஒருவரை வெளிப்படுத்திக் காட்டும்” என்கிறார் சேக்ஸ்பியர்.
தூய்மையுடன் ஒழுங்குடனும் உடை அணிந்து இருக்கிறோம் என்ற எண்ணமே நமக்கு நன் மதிப்பையும் தன்னம்பிக்கையையும் கம்பீரத்தையும் அளிக்கும்.
இதன் காரணமாக நமக்குப் பலரும் மரியாதை தருவார்கள். அதுவே நாமும் பலருடன் பழகி நம்முடைய அந்தஸ்த்தை உயர்த்திக் கொள்ள துணை புரியும்.

ஆடைதரும் உறவு

>அனைவருக்கும் கல்வி

>

ஒவ்வொரு மனிதனுக்கு தனது வாழ்வை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் இருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக, இன்றைய உலகில் மிகப்பல குழந்தைகள் இந்த வாய்ப்பு ஏதும் இன்றி வளருகின்றன. ஏனெனில் அவர்களது அடிப்படை உரிமையான ஆரம்பக் கல்வி கூட அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. கல்வித் திட்டங்கள் பலவற்றின் காரணமாக, 2000ம் ஆண்டின் முடிவிற்குள் இந்திய கிராம ஜனத்தொகையின் 94% பேர்களுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள்ளாக ஆரம்பக் கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டு விட்டன. 84% மக்களுக்கு நடுநிலைப் பள்ளிகள் 3 கி.மீ. தூரத்திற்குள் உருவாக்கப்பட்டு விட்டன. எஸ்.சி/எஸ்.டி பிரிவினரையும், பெண் குழந்தைகளையும் பள்ளிகளிள் சேர்க்க சிறப்பு மிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் ஐந்தாண்டு திட்ட காலகட்டத்திலிருந்தே ஆரம்பக் கல்வி மற்றும் நடுநிலைப் பள்ளிகள் கல்வி நிலையங்களில் குழந்தைகள் சேர்ப்பு குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்துள்ளது.
அதேபோல ஆரம்பக் கல்வி நிலையங்களுக்கும், அதற்கு அடுத்த கட்ட கல்விச் சாலைகளும் எண்ணிக்கையில் பெருகிவிட்டன. 1950-51 ஆண்டில் ஆரம்பக் கல்விக்கான பள்ளிகளில் 3.1 மில்லியன் மாணவர்கள் மட்டும் சேர்ந்தனர். 1997-98 ஆண்டைய கணக்கின்படி இந்த எண்ணிக்கை 39.5 மில்லியனாக உயர்ந்தது. ஆரம்பப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் ஆகியன 1950-51ம் காலகட்டத்தில் 0.223 மில்லியன்கள். இந்த எண்ணிக்கை 1996-97-ல் 0.775 மில்லியன்களாக உயர்ந்தது. 2002-2003 ஆண்டில் 6-14 வயதுள்ள குழந்தைகளில் 82% பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்குள், இதை 100% ஆக ஆக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
உலக மக்களின் வறுமையை முடிவுக்குக் கொண்டுவரவும், அமைதியும் பாதுகாப்பும் உள்ள வாழ்க்கையை மக்கள் வாழ்வதற்கும், ஒவ்வொரு நாட்டிலுள்ள குடிமக்கள், நலம் பயக்கும் முடிவுகளை தங்களுக்கும் தங்களது குடும்பங்களுக்கும் தேர்ந்தெடுக்க அவர்கள் திறனை மேம்படுத்துதல் அவசியம். இந்த நிலையை அடையவேண்டும் என்றால், உலகத்திலுள்ள அனைத்துக் குழந்தைகளும் தங்களின் ஆரம்பக் கல்வியையாவது, உயர் தரமுள்ள கல்வி கற்கும் சூழ்நிலை உள்ள பள்ளிகளில் பயில வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும
அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.)
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 86ஆவது பிரிவில் “6-14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி அவர்களுடைய அடிப்படை உரிமை” என்று கூறப்பட்டிருக்கிறது. இதை நிறைவேற்றும் வகையில் குறிப்பிட்ட கால வரையரைக்குள் இந்திய அரசு தனது முதன்மையான திட்டமாகிய “சர்வ சிக்ஷா அபியான் – எஸ்.எஸ்.ஏ.’ என்கிற (எல்லோருக்கும் கல்வி’) திட்டத்தின் மூலம் ஆரம்பக்கல்வியை அனைவருக்கும் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அனைத்து மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் மூலம் 11 லட்சம் கிராமங்களைச் சார்ந்த 192 மில்லியன் குழந்தைகளின் கல்வித்தேவைகள் பூர்த்தியாகும்.
இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள்:
•பள்ளிக்கூட வசதியற்ற இடங்களில் பள்ளிக்கூடங்களை ஏற்படுத்துதல்;
•பள்ளிக்கூடம் இருக்கும் இடங்களில் கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், குடிநீர், பராமரிப்பு நிதி உதவி ஆகியவற்றை அளித்து பள்ளி மேம்பாட்டிற்கும் நிதி வழங்குதல்;
•ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்களை நியமித்தல் மற்றும் ஏற்கனவே உள்ள ஆசிரியர்களின் திறனை அதிகரிக்கும் விதமாக அவர்களுக்கு அனைத்துத் துறைகளிலும் பயிற்சி அளித்தல்;
•ஆசிரியர்-பயிற்சி உபகரணங்களை மேம்படுத்த மானியம் அளித்தல் மற்றும் கிராம, மண்டல மற்றும் மாவட்ட அளவில் கல்வி உதவிக் கட்டமைப்பைப் பலப்படுத்துதல்;
•வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களுடன் கூடிய தரமான ஆரம்பக்கல்வி அளித்தல்;
•பெண்கள் மற்றும் சிறப்புத் தேவைகள் தேவைப்படும் குழந்தைகளின் கல்விக்கு முன்னுரிமை அளித்தல்;
•நகர மற்றும் கிராமப்புறக் கல்வித்திட்ட இடைவெளியைக் குறைக்கும் வண்ணம் கம்ப்யூட்டர் கல்வியைப் பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளுதல்
சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் நிதி நெறிமுறைகள்
•சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உதவி ஒன்பதாவது ஐந்தாண்டுத்திட்ட காலத்தில் 85:15 என்ற விகிதத்திலும், பத்தாவது ஐந்தாண்டுத்திட்ட காலத்தில் 75:25 என்ற விகிதத்திலும், அதன்பின் வரும் காலங்களில் 50:50 என்ற விகிதத்திலும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பகிர்ந்து கொள்ளப்படும்.
•சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கான சம்பளத் தொகையும் ஒன்பதாவது ஐந்தாண்டுத்திட்ட காலத்தில் 85:15 என்ற விகிதத்திலும், பத்தாவது ஐந்தாண்டுத்திட்ட காலத்தில் 75:25 என்ற விகிதத்திலும், அதன்பின் வரும் காலங்களில் 50:50 என்ற விகிதத்திலும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பகிர்ந்து கொள்ளப்படும்.
• ‘மஹிலா சமக்யா’, தேசிய பால பவன் மற்றும் என்.ஸி.டி.ஈ. எனப்படும் தேசிய தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவை தவிர மத்திய கல்வித்துறையின் அனைத்துத் திட்டங்களும் ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்திற்குப் பின் ஒன்றிணைக்கப்படும். ஆரம்பக் கல்விக்கென சத்துணவு வழங்கும் தேசியத் திட்டம் (மதிய உணவுத் திட்டம்) மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும்; இத்திட்டத்திற்கான உணவு தானியம் மற்றும் போக்குவரத்துச் செலவுகளை மத்திய அரசும், சமைக்கப்படும் உணவிற்கான செலவை மாநில அரசுகளும் ஏற்றுக்கொள்ளும்.
நடைமுறைக் கோட்பாடுகள்:
ஆசிரியர்
•ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்
•ஒவ்வொரு ஆரம்பப்பள்ளியிலும் குறைந்தபட்சம் 2 ஆசிரியர்கள்
•நடுநிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் குறைந்தபட்சம் ஒரு ஆசிரியர்
2. பள்ளிகள் / மாற்றுப் பள்ளிக்கூட ஏற்பாடுகள்
•வசிக்கும் இடங்களிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குள் இருக்க வேண்டும்;
•சேவை சென்றடையாத இடங்களில் மாநில அரசின் கோட்படுகளுக்குட்பட்டு ஈ.ஜி.எஸ். எனப்படும் பள்ளிகளையோ அல்லது புதிய பள்ளிகளையோ அமைப்பதற்கான வாய்ப்பு இருத்தல்;
3. நடுநிலைப்பள்ளிகள்
ஆரம்பப்பள்ளிவரை பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் தேவைக்கேற்பவும் இரண்டு ஆரம்பப் பள்ளிகளுக்கு ஒரு நடுநிலைப் பள்ளியோ/வகுப்போ அமைத்தல்
4. வகுப்பறைகள்
•ஆரம்பப் பள்ளியிலேயோ/நடுநிலைப் பள்ளியிலேயோ, எது குறைவாக இருக்கிறதோ, அவற்றில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் அல்லது வகுப்பு/பிரிவுக்கும் ஒரு அறை இருக்கவேண்டும்; குறைந்தபட்சம் இரண்டு ஆசிரியர்களைக் கொண்ட அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் குறைந்தபட்சம் இரண்டு வகுப்பறைகள் மற்றும் வராந்தா ஆகியன அமையுமாறு பார்த்துக்கொள்ளுதல்
•நடுநிலைப் பள்ளி/வகுப்புகளில் தலைமை ஆசிரியருக்கு ஒரு அறை அளித்தல்
5. இலவசப் பாடப் புத்தகங்கள்
•ஆரம்ப / நடுநிலைப் பள்ளிகளில் அனைத்துப் பெண்கள்/ஆதிதிராவிட/பழங்குடி இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு தலா அதிகபட்சம் ரூ.150 வரை பணவுதவி அளித்தல்
•தற்பொழுது வழங்கிவரும் இலவசப் பாடப்புத்தகங்களுக்கான செலவை மாநில அரசின் வரவு/செலவுத் திட்டத்திலிருந்தே சமாளித்துக் கொள்ளுதல்
•ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் பாடப்புத்தகங்களுக்கு மாநில அரசு சிறிது மானியம் அளிக்குமேயானால், சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திநபன் கீழ் வழங்கப்படும் உதவியானது, குழந்தைகளால் வாங்கப்படும் பாடப்புத்தகங்களின் விலையோடு நிறுத்தப்படும்.
6. கட்டுமானப்பணிகள்
•இத்திட்டத்திற்காக 2010ஆம் ஆண்டுவரை வரையப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் கட்டுமானத்திற்கான செலவுகளுக்காக பி.ஏ.பி.-யால் அங்கீகரிக்கப்பட்ட தொகையானது மொத்த்த் திட்டச் செலவின் 33 சதவீத்த்தை மிஞ்சக்கூடாது. கட்டிடத்தைப் பராமரிக்க மற்றும் பழுதுபார்க்க ஆகும் செலவு இந்த 33 சதவீதத் தொகையில் அடங்காது.
•ஆயினும், 33 சதவீத எல்லையைத் தாண்டாமல் கட்டுமானப் பணிகளுக்கென வருடாந்தரத் திட்டத்தின் 40 சதவீதம் வரை அந்த குறிப்பிட்ட ஆண்டின் திட்ட முன்னுரிமைகளுக்கேற்றவாறு செலவு செய்யலாம்.
7. பள்ளிக் கட்டிடங்களைப் பராமரித்தல் மற்றும் பழுதுபார்த்தல்
•வி.ஈ.ஸி. எனப்படும் கிராமக் கல்விக் குழுக்கள்/பள்ளி நிர்வாகக் குழுக்களால்தான் செய்யப்பட வேண்டும்;
•பள்ளி நிர்வாகக் குழுவின் தீர்மானத்தைப் பொறுத்து ஆண்டொன்றுக்கு ரூ.5000 வரை;
•சமூகப் பங்கீட்டின் அம்சங்களையும் இப்பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்;
•கட்டிடத்தைப் பராமரிக்க மற்றும் பழுதுபார்க்க ஆகும் செலவு கட்டுமானப் பணிக்கென ஒதுக்கப்பட்ட 33 சதவீத எல்லைக்குள் அடங்காது;
•தங்களது சொந்தக் கட்டிடத்தில் பள்ளி நடத்தும் பள்ளிகளுக்கே மேற்சொன்ன மானியம் வழங்கப்படும்.
8. பள்ளிகளுக்கான மானியம்
•பள்ளியிலிருக்கும் செயல்படாத உபகரணங்களுக்குப் பதில் வேறு உபகரணங்கள் வாங்குவதற்காக ஆரம்ப/ நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.2000 கிடைக்கும்.
•இச்செலவு வி.ஈ.ஸி. எனப்படும் கிராமக் கல்விக் குழுக்கள்/பள்ளி நிர்வாகக் குழுக்களால்தான் செய்யப்பட வேண்டும்.
9. ஆசிரியர்களுக்க்கான மானியம்
ஆரம்பப் பள்ளிகளிலும் நடுநிலைப் பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.100 வீதம்.
10. ஆசிரியர் பயிற்சி
அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆண்டொன்றுக்கு 20 நாட்கள் வேலையுடன் கூடிய பயிற்சி அளித்தல், பயிற்சி பெறா விட்டாலும் ஏற்கனவே ஆசிரியர்களாகப் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 60 நாள் மதிப்பீட்டுப் பயிற்சி அளித்தல் மற்றும் புதிதாகப் பணியில் சேர்பவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.70/- உதவித்தொகையாக அளித்து பள்ளியிலேயே பயிற்சி அளித்தல்
11. சமூகப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தல்
ஒவ்வொரு கிராமத்திலும் அதிகபட்சம் எட்டுப் பேர்களுக்கு – கூடியவரை பெண்களுக்கு – வருடத்தில் இரண்டு நாட்களுக்கு நபர் ஒன்றுக்கு நாளொன்றுக்கு ரூ.30/- அளித்துப் பயிற்சி அளித்தல்
12. உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கான சலுகைகள்
குழந்தை ஒன்றுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1200/- வீதம் அளித்து அத்தகைய குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துக்கொள்ளுதல்
13. பள்ளிக்குச் செல்வதைப் பாதியிலேயே நிறுத்திவிட்டவர்களுக்கான நிவாரணஙகள்
•சேவை வசதி சென்றடையாத இடங்களில் கல்வி உத்தரவாத மையங்களை (ஈ.ஜி.ஸி.) அமைத்தல்;
•வேறு மாதிரியான மாற்றுப் பள்ளிக்கூட மாதிரிகளை அமைத்தல்;
•இடைவெளியைக் குறைக்கும் பயிற்சிகள், தீர்வுக்கு உதவும் பயிற்சிகள், பள்ளிக்குச் செல்வதைப் பாதியிலேயே நிறுத்திவிட்ட குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்தும் முகாம்கள்

அனைவருக்கும் கல்வி