Category Archives: ஆர்.நடராஜ்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யான ஆர். நடராஜ் நியமிக்கப்பட்டு 23.01.2012 காலை பொறுப்பேற்றார்.



* தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யான ஆர். நடராஜ் நியமிக்கப்பட்டு 23.01.2012 காலை பொறுப்பேற்றார்.
* தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு பெரும்பாலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே தலைவர்களாக இருப்பது வழக்கம். ஆனால், ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நியமிக்கப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறை.
வாழ்க்கை பயணம் :
* திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த அவர், இயற்பியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இளங்கலை படிப்பை தனது சொந்த மாவட்டத்தில் படித்தாலும், முதுகலைப் படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் படித்தார்.
* 1975-ல் ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தின் எஸ்.பி.யாக தனது போலீஸ் பணியைத் தொடங்கினார். தென் மாவட்டங்களை கலக்கி வந்த சீவலப்பேரி பாண்டியைப் பிடிப்பதிலும், வீரப்பனைத் தேடும் பணியிலும் முக்கியப் பங்கு வகித்தவர். வீரப்பனைத் தேடி சுட்டுக் கொன்ற அதிரடிப்படையில் கூடுதல் டிஜிபியாக நடராஜ் பணியாற்றினார்.
* இதன் பின், சென்னை மாநகர போலீஸ் ஆணையராக கடந்த 2003 முதல் 2006 வரை பணியாற்றினார். மாநில மனித உரிமைகள் ஆணையம், சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெற்றார்.
* தனது சிறப்பான போலீஸ் பணிக்காக 1993-ல் குடியரசுத் தலைவரின் போலீஸ் பதக்கம் நடராஜுக்கு வழங்கப்பட்டது.
* அவர் 62 வயது வரை தேர்வாணையத்தின் தலைவர் பொறுப்பில் இருப்பார். அவருக்கு நிர்மலா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
*  டி.என்.பி.எஸ்.சி. தலைவராக பொறுப்பேற்று இருக்கும் ஆர்.நடராஜ் காவல்துறை இயக்குனர், சென்னை போலீஸ் கமிஷனர், தீயணைப்பு துறை இயக்குனர் ஆகிய உயர் பதவிகளை வகித்தவர். 36 ஆண்டுகள் காவல் துறையில் திறம்பட பணியாற்றி பெருமை பெற்றவர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பொறுப்பேற்ற பின் நிருபர்களிடம் கூறியதாவது:
*  அரசு என் மீது நம்பிக்கை வைத்து மிக முக்கியமான இந்த பணியை தந்துள்ளது. அதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
*  அரசு பணி என்பது தெய்வீக பணியாகும். அது ஒரு கொடை. அந்த பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை திறமையாக பயன்படுத்துவேன்.
*  அரசு பணியில் சேர திறமை இருக்க வேண்டும். பணியில் சேருபவர்கள் தங்கள் பணியை நிறைவாக பூர்த்தி செய்ய வேண்டும். நேர்மையாக செயல்பட வேண்டும். திறமையும் நேர்மையும் மிக்கவர்கள் அரசு பணியில் சேரும்சூழ்நிலையைஉருவாக்குவேன்.

*  நான் முதலில் செய்யப்போவது நாணயம் பெறாத நாணயமான சேவை.

*  தேர்வாணையத்தில் உடனடியாக நிறைய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு பற்றி ஒரு புகை மண்டலம் சூழ்ந்து நிற்கிறது. அந்த புகை மண்டலம் அகற்றப்படும். வெளிப்படையான நிர்வாகம் செய்யப்படும்.
*  டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடைபெறும் அறைகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.
*  நேர்முகத் தேர்வின்போதும் கேமரா பொருத்தப்படும். ஆட்சேபனை இருப்பவர்கள் அதை பார்வையிட அனுமதி வழங்கப்படும்.

*  ஒவ்வொரு தேர்வும் முடிந்தவுடன் அந்த தேர்வுக்குரிய விடைகள் இணைய தளத்தில் உடனடியாக வெளியிடப்படும். அந்த விடைகள் பற்றி தேர்வு எழுதியவர்கள் குறைபாடுகளை சுட்டிக்காட்டினால் வல்லுனர் குழுவால் பரிசீலிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்ட விடைகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும். தேர்வு எழுதியவர்கள் திருத்தப்பட்ட விடைத்தாள்களை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

*  இணையதளத்தில் மாதிரி வினாத்தாள் அனைத்து தேர்வுகளுக்கும் இது போன்ற கேள்விகள் கேட்கப்படும். எந்தெந்த பாடங்கள் கேட்கப்படும் என்பது பற்றிய பாடத்திட்டங்கள், மாதிரி வினாத்தாள்கள் இணைய தளத்தில் வெளியிடப்படும்.

*  ஆண்டுதோறும் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள பல்வேறு தேர்வுகள், தேர்வு முடிவுகள், வெளியாகும் உத்தேச தேதி ஆகியவற்றை உள்ளடக்கிய கால அட்டவணை வெளியிடப்படும்.

அரசுப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிப்பொறுப்புகளை கருத்தில் கொண்டு தேர்வுக்கான பாட திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படும்.

*  பணிக்கு வருபவர்களின் பகுத்து அறியும் திறனை ஆராயும் வகையில் தேர்வு முறையில் உரிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். தேர்வாணையம் மூலம் பல்வேறு தேர்வுகள் நடத்தினாலும் கல்வித் தகுதி ஒன்றாகவே இருக்கிறது.எனவே ஒருமுறை விண்ணப்பித்தால் போதும் அவர்களுக்கு ஒரு குறியீடு வழங்கப்படும். அடுத்த பதவிக்கு தேர்வு எழுத அந்த குறியீட்டின் அடிப்படையிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
*  தேர்வாணைய இணைய தளம் புதுப்பிக்கப்படும். அதில் புதிதாக பல தகவல்கள் சேர்க்கப்படும். தேர்வாணையத்தின் செயல்பாடுகள், பணிக்கான விதிகள், பாடமுறை, மாதிரி விடைத்தாள்கள், முந்தைய வருட வினாத்தாள்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெளியிடப்படும்.

*  ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சில சட்ட சிக்கல்கள் இருக்கின்றன. அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தேர்வாணையத்துக்கென்று தனி விதிமுறைகள் உள்ளது. அதை அமுல்படுத்துவோம். அந்த விதிமுறைகளில் மாற்றம் தேவை என்றால் அரசிடம் முறையிட்டு மாற்றம் கொண்டு வரப்படும்.

*  லஞ்சம் கொடுக்காமல் நேர்மையாக அரசுப் பணியில் சேர முடியும் என்ற நம்பிக்கையை இளைஞர் சமுதாயத்துக்கு கொடுப்போம்.

*  நேர்மையாக படித்தால் நல்ல முறையில் தேர்வு எழுதினால் அரசுப்பணியில் சேர வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கையை இளைஞர்களுக்கு கொடுப்பேன். இப்போதுதான் நான் தலைமை பதவி ஏற்றுள்ளேன். எந்த தவறும் நிகழ விடமாட்டேன். தவறுகளை தட்டிக்கேட்பேன்.இவ்வாறு ஆர்.நடராஜ் கூறினார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் சீர்திருத்த அறிவிப்புகள் :
* தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க புதிய முறையை அறிமுகம் செய்துள்ளோம்.
*  இணையதளத்தில் சீர்திருத்தம் செய்து புதிதாக வெளியிட்டுள்ளோம்.
* முதற்கட்டமாக வேலைவாய்ப்புக்கான 12 அறிவிப்புகள் இதில் வெளியிடப்பட்டுள்ளன. 16 பதவிகளுக்கு 158 காலி இடங்களுக்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
* தமிழ்நாடு அரசுப் பணியில் காலியாக உள்ள 8572 பணியிடங்கள் விரைவில் நிரப்ப தேர்வு நடத்தப்படும்.
 *  காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஒரே முறை பதிவு செய்யும் திட்டம் புதிதாக அறிமுகம் செய்துள்ளோம். இதில் ரூ. 50 செலுத்தி இருந்த திட்டத்தில் சேர்ந்து கொண்டால் 5 ஆண்டு களுக்கு விண்ணப்பதாரர்கள் தங்களது தகுதிக்கேற்ப தேர்வு எழுதலாம்.
 *  ஒவ்வொரு தேர்வுக்குரிய தகவல்கள் இந்த இணைய தளத்தில் தெரிவிக்கப்படும்.  
*  தமிழகத்தில் 285 தாலுக்காக்கள் உள்ளன. இங்குள்ள தபால் நிலையங்களில் டி.என்.பி.எஸ்.சி.யின் உதவி மையங்கள் செயல்படும்.
 *  கிராமப்புற மாணவர்கள் எளிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களில் இலவசமாக புகைப்படம் எடுத்து கொள்ளலாம். இந்த உதவி மையங்களில் கம்ப்யூட்டர் வசதி, தடையில்லா மின்சாரம், பிரிண்டர் வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மேலும் 500 உதவி மையங்களும் அமைக்கப்படுகின்றன.
*  இந்த இணையதளத்தில் தேர்வாணைய செயல்பாடு குறித்த தகவல், தேர்வர்களுக்கு வேண்டிய தகவல்கள் கொடுக்கப்படும்.  
*  அரசு ஊழியர்களின் துறை சார்ந்த தேர்வுகள் அதுபற்றிய தகவல்கள், முடிவுகள் வழங்கப்படும்.
*  தேர்வாணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாக இருக்கும்.
 *  முழுமையான அம்சங்களுடன் கூடிய இணையதளம், அறிமுக படுத்தப்பட்டுள்ளது .

*   ஒவ்வொரு முறையும் விண்ணப்பிக்க கட்டணம் தேவை இல்லை
* டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கு இந்தியாவிலேயே முதன் முறையாக ஆன்லைனில் நிரந்தர பதிவு செய்யும் முறையை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்தியுள்ளது.
* தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் தற்போது புது பொலிவுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து தரப்பினருக்கும் வேண்டிய அனைத்து தகவல்களையும் இடம் பெற செய்திருக்கிறோம். இனி வரும் காலங்களில் டி.என்.பி.எஸ்.சி.க்கு விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
* நிரந்தரமாக பதிவு 5 ஆண்டுக்கு நீடிக்கும். இணையதளத்தில் பதிவு செய்தவுடன் விண்ணப்பதாரர்களுக்கு தனித்துவ அடையாள எண் மற்றும் பாஸ்வேர்டு வழங்கப்படும். அவ்வப்போது டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வெளியிடப்படும் அறிவிப்புகள் குறித்த விவரங்கள் அவர்களுக்கு குறுந்ததகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்படும். மெயிலிலும் அனுப்பி வைக்கப்படும்.
* பதிவு செய்வது எப்படி? இணையதளத்தில் நிரந்தர பதிவு செய்வதற்கு இணைய விண்ணப்பத்தில் பதிவுக்கட்டணம் ரூ.50-யை இணைய வங்கி முறையிலும் (நெட் பேங்கிங், டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு), இந்தியன் வங்கி கிளைகளிலும், 500 குறிப்பிட்ட அஞ்சலகங்களிலும் கட்டலாம். பதிவுக்கட்டணம் செலுத்தப்பட்டால் மட்டுமே பதிவு முறையானதாக கருதப்படும்.
* அதே நேரம் இந்த பதிவு எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாகவும் கருதப்படாது. தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணைய வழி விண்ணப்பத்தினை பயன்படுத்தியும், வரையறுக்கப்பட்ட தேர்வு கட்டணத்தை செலுத்தியும் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: நிரந்தர பதிவு முறையில் பதிவு செய்து தனித்துவ அடையாள எண்ணை பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. அவர்கள் தேர்வு கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.
இது போன்று நிரந்தர பதிவு முறையை கொண்ட விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தனித்துவ அடையாள எண் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி அறிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணத்தை இணையம் வழியாகவும் செலுத்தலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது வேலை எளிதாக இருக்கும். தவறுகளும் நடக்காமல் இருக்கும். இணையதள வழியில் பதிவு செய்பவர்கள் கேட்கும் போது உண்மை நகல்களை காண்பிக்க வேண்டும். உண்மை நகலின் குறியீட்டு எண்களையும் இணைய விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
* பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களையோ, சான்றிதழ்களின் படிம நகல்களையோ, கட்டணம் செலுத்தியதற்கான ஆவணச்சான்றுகளையோ தேர்வாணைய அலுவலகத்திற்கு அனுப்ப தேவையில்லை. விண்ணப்பங்கள் வந்து சேர்ந்ததற்கான ஒப்புகை உடனடியாக விண்ணப்பதாரர்களின் இ-மெயில் மற்றும் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். இது போன்ற புதிய முறை எந்த மாநிலத்திலும் இதுவரையில் அமல்படுத்தவில்லை. இந்தியாவில் முதல் முறையாக அமல்படுத்தியிருக்கிறோம்.
* கிராமப்பகுதி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் தாலுகா பகுதிக்கு இரண்டு மையங்கள் என 500 உதவி மையங்களை ஏற்படுத்த இருக்கிறோம். கணினி, அச்சு எந்திரம், இணைய ஒளிப்பதிவு கருவிகள் வசதியுடன் இந்த மையம் செயல்படும். இங்கு இளைஞர்கள் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பூர்த்தி செய்து அனுப்பலாம். தேவைக்கேற்ப கூடுதல் உதவி மையங்களை திறப்பதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
* இங்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய உதவி மையங்களை அணுகலாம். இதற்கு அவர்கள் தனியாக கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ளலாம். இணையத்தின் மூலமே ஹால்டிக்கெட்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.