Category Archives: ஆய்வுகள்

கிராமங்களில் 70 சதவீத மக்கள் : சமீபத்திய கணக்கெடுப்பில் தகவல்

இந்தியாவில் 70 சதவீதம் பேர் கிராமப் பகுதிகளில்தான் வாழ்கின்றனர். அதேநேரம், ஒட்டு மொத்த மக்கள் தொகை வளர்ச்சி, இந்திய விடுதலைக்குப் பின், முதன் முதலாக குறைந்துள்ளதுஎன, சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. “இந்தியாவின் 2011 தற்போதைக்கான கிராம – நகர மக்கள் தொகைக் கணக்கெடுப்புஅறிக்கையை நேற்று மத்திய உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங் வெளியிட்டார். 

இதன்படி, ஒட்டு மொத்த மக்கள் தொகையான 121 கோடி பேரில், 37.7 கோடி பேர் தான் நகர்ப் பகுதிகளில் வாழ்கின்றனர். மீதமுள்ள 70 சதவீதம் பேர், கிராமப் பகுதிகளில் வசிக்கின்றனர். அதே நேரம், நாடு விடுதலை அடைந்தபின் முதன் முறையாக, கிராமப் பகுதிகளை விட, நகர்ப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. நகர்ப் பகுதிகளில், 2001ல் மக்கள் தொகை 27.81 சதவீதம் இருந்தது. கிராமப் பகுதிகளில் 72.19 சதவீதம் இருந்தது.உத்தர பிரதேசத்தில் தான் மிக அதிகளவாக 15.5 கோடி பேர், கிராமங்களில் வசிக்கின்றனர். நகரங்களில், மும்பையில் மிக அதிகபட்சமாக ஐந்து கோடி பேர் உள்ளனர். கடந்த 2001ல், கிராமங்களில் 1,000 ஆண்களுக்கு 946 பெண்கள் என்ற அளவில் இருந்தனர்.

 தற்போது அது 947 ஆக அதிகரித்துள்ளது. நகரங்களில், 2001ல் 900 ஆக இருந்த பெண்கள் எண்ணிக்கை தற்போது 926 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம், கேரளா மற்றும் டில்லி உள்ளிட்ட 10 மாநிலங்களில், நகர்ப்பகுதி பாலியல் விகிதம், கிராமத்தை விட அதிகரித்துக் காணப்படுகிறது.

இந்தியாவின் அயல் வணிகப் பணித் துறைக்கு அச்சுறுத்தல்: அசோசம் ஆய்வறிக்கை

பணித் திறன் கொண்டோர் எண்ணிக்கை குறைந்து வருவதும், பணியாளர்கள் வேலையை விட்டு வேலைக்கு தாவுவதும் இந்தியாவின் அயல் வணிகப் பணி (Business Process Outsourcing – BPO) நிலையை பன்னாட்டு போட்டியில் பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதென இந்திய தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பு (Associated Chambers of Commerce and Industries of India – ASSOCHAM)கூறியுள்ளது.

அயல் வணிகப் பணி செய்யும் நிறுவனங்களில் அசோசம் அமைப்பு நடத்திய ஆய்வில், பணியாளர்கள் அடிக்கடி வேலை விட்டு விலகி வேறு இடத்தில் வேலைக்கு அமர்வது 55 விழுக்காடு அளவிற்கு கடந்த ஆண்டில் இருந்தது தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளது.
அசோசம் நடத்திய ஆய்வு பற்றி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அசோசம் அமைப்பின் பொதுச் செயலர் டி.எஸ்.ரவாத், “ஆரம்பத்தில் மிகவும் கவர்ச்சியான வேலை வாய்ப்பாக விளங்கிய அயல் வணிகப் பணித் துறை, ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கியது மட்டுமின்றி, மிகப் பெரும் எண்ணிக்கையில் திறன் பணியாளர்களையும் உற்பத்தி செய்தது. ஆனால், இப்போது பணியிடம் மாற்றிக்கொள்ளும் பணியாளர்களின் எண்ணிக்கையும், திறன் பணியாளர் எண்ணிக்கை குறைவும் இத்துறைக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன” என்று கூறியுள்ளார்.
அயல் வணிகப பணியுடன், தகவல் தொழில் நுட்ப சேவைத் துறையையும் (ITes) இணைத்தால், கடந்த 2 ஆண்டுகளில் வேலை மாறிய பணியாளர்களின் எண்ணிக்கை 65 விழுக்காடாக இருக்கிறது என்று கூறியுள்ள அசோசம் அறிக்கை, வங்கிகள், நிதி சேவைகள், காப்பீடு ஆகிய துறைகளுக்கு அயல் வணிகப் பணி செய்துவரும் நிறுவனங்களில் 60 விழுக்காடு அளவிற்கு வேலை மாற்றம் இருந்து வருகிறது என்று கூறியுள்ளது.
இந்த வேலை மாற்ற பிரச்சனை என்பது இடை, மேல் நிர்வாக அளவில் இருப்பதால் நிறுவனங்களின் பணித் திறனை அது பெரிதும் பாதிக்கிறது என்றும், இப்படிப்பட்ட ஒரு நிலை தொடர்வது உலகின் தலைசிறந்த அயல் வணிகப் பணி செய்யும் நாடாகத் திகழும் இந்தியாவின் நிலையை பாதிக்கும் அபாயம் உள்ளதென்று அசோசம் அறிக்கை தெரிவித்துள்ளது.
அயல் வணிகப் பணியில் மெக்சிகோ, மலேசியா, ஃபிலிப்பைன்ஸ், சீனா, கனடா, அயர்லாந்து ஆகிய நாடுகளிடமிருந்து கடும் போட்டியை சந்தித்துவரும் இந்திய அயல் பணி நிறுவனங்களுக்கு திறன் சரிவும், வேலை தாவலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதென அசோசம் எச்சரித்துள்ளது.

>பிறர் புகையால் மரணமடைபவர்கள் எண்ணிக்கை 6 லட்சம்

>

“பேசிவ் ஸ்மோக்கிங்” என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தான் புகை பிடிக்காமல் புகைப்பழக்கமுள்ளவர்களுடன் தொடர்புடையதாலேயே மரணமடைபவர்களின் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு 6 லட்சம் பேர் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
நாம் பொதுவாக நம் நண்பர்கள் புகைப் பிடிக்கும் போது அருகில் நிற்போம். மதுபான விடுதிகளிலும் பிற பொது இடங்களிலும் சிகரட் புகையினால் பாதிக்கப்படுபவர்கள் புகை பிடிப்பவர்கள் மட்டுமல்ல அருகில் இருப்பவர்களும்தான்.
பிரிட்டன் மருத்துவ இதழான லான்செட்டில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுத் தகவல்களின் படி குழந்தைகளில் 40 சதவீதத்தினரும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோரில் 30 சதவீதத்தினரும் இம்மாதிரியான பிறரது புகைப்பழக்கத்திற்கு பாதிக்கப்படுகின்றனர்.
ஆண்டொன்றிற்கு பிறரது புகைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களில் இருதய நோயால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை 379,000, கீழ் மூச்சுக்குழல் நோயால் மரணமடைவர்கள் எண்ணிக்கை 1,65,000, ஆஸ்துமா நோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை 36,900, நுரையீரல் புற்று நோயால் மரணிப்பவர்கள் எண்ணிக்கை 21,400 என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகில் நிகழும் மரண விகிதத்தில் பிறரது புகைக்கு மரணமடைபவர்களின் பங்களிப்பு 1% என்று லான்செட் குண்டைத் தூக்கி போட்டுள்ளது.
51 லட்சம் பேர் ஆண்டு முழுதும் உலக அளவில் புகைப்பழக்கத்தால் உயிரிழக்கின்றனர் என்றால் அதில் 6,03,000 பேர் பிறரது புகைப்பழக்கத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.
2004ஆம் ஆண்டு முதல் 192 நாடுகளில் பல்வேறு தரப்பிலும் மேற்கொள்ளப் பாட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்தப் புள்ளி விவரங்கள் கிடைத்துள்ளன.
ஆப்பிரிக்கா, மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் ஆண்டொன்றுக்கு பிறரது புகைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு சுமார் 1,65,000 குழந்தைகள் மரணமடைவதாக உலக சுகாதார மையம் கவலை வெளியிட்டுள்ளது.
பெற்றொர்களுக்கு புகைப்பழக்கம் இருக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களின் தன்மை அபாயகரமாக உள்ளது. அதாவது காது தொடர்பான நோய்கள், நிமோனியா, ஆஸ்துமா, பிரான்க்கைட்டீஸ் ஆகிய நோய்கள் தாக்குவது இயல்பாகி வருகிறது என்கிறது லான்செட் புள்ளிவிவரம்.
பிறரது புகைப்பழக்கத்தினால் மரணமடைபவர்களின் எண்ணிக்கையில் ஐரோப்பாவும் ஆசியாவும்தான் முன்னிலை வகிக்கின்றன.
பிறரது புகைப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் பெண்களே அதிக அளவில் மரணம் அடைவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

>தேனீர் பழக்கம் இருதயத்துக்கு பலம்

>

அடிக்கடி டீ காஃபி குடிப்பவர்களுக்கு இருதய நோய்கள் வருவதற்கான ஆபத்து குறைகிறது என்று குறிப்புணர்த்தும் புதிய அறிவியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

கிட்டத்தட்ட நாற்பதாயிரம் பேரை பதிமூன்று ஆண்டுகளாக கண்காணித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக நெதர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கன் ஹார்ட் அஸ்ஸொஸியேஷன் என்ற அமைப்பின் சஞ்சிகையில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது.
டீ குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் ஒரு நாளில் ஆறு தடவை டீ அருந்துபவர்களுக்கு இருதயக் கோளாறுகள் வருவதற்கான ஆபத்து மூன்றில் ஒரு பங்கு குறைவு என்று இந்த ஆராய்ச்சி கூறுகிறது.
காஃபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் நன்மை ஓரளவுக்கு இருக்கிறது. ஆனால் டீ குடிப்பவர்களுக்கு கிடைக்கும் அளவுக்கு நன்மை காஃபியில் இல்லை.
ஒரு நாளில் இரண்டு முதல் நான்கு கோப்பைகள் டீ அருந்துபவர்களுக்கு அதனை விட குறைவாக டீ அருந்துபவர்களைக் காட்டிலும் இருதய நோய் வருவதற்கான ஆபத்து இருபது சதவீதம் குறைவாக உள்ளது என்றும் இந்த ஆராய்ச்சி கூறுகிறது.
ஆனால் குடிக்கும் டீயின் அளவை அதிகரித்துக்கொண்டே போனால், ஆபத்தின் அளவு மென்மேலும் குறைகிறது என்றில்லை. ஒரு கட்டத்தில் இந்தப் பலன் நின்று போய்விடுகிறது.
நெதர்லாந்தில் மக்கள் டீ குடிக்கும்போது அதில் சில துளிகள்தான் பால் விடுவார்கள், ஆனால் இந்தியர்கள் இலங்கையர்கள் எல்லாம் மொத்தமாக பாலிலோ அல்லது தண்ணீருக்கு சமமான பாலிலோ டீ அருந்துபவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. அந்த அளவுக்கு பால் விட்டு டீ குடிக்கும்போது இப்படியான மருத்துவ பலன் கிடைக்குமா என்பது தெரியவில்லை.
டீயில் இருக்கும் ப்லவனாய்ட்ஸ் என்ற வஸ்துதான் இருதயக் கோளாறு ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பு தருகிறது என்று சொல்லப்படுகிறது.
டீயில் பால் சேர்க்கும்போது பலன் கிடைக்காமல் போய்விடுகிறதா என்பதை இனிமேல்தான் ஆராய்ச்சிகள் உறுதிசெய்ய வேண்டும்.

தேனீர் பழக்கம் இருதயத்துக்கு பலம்

>42 கோடி இந்தியர்கள் வறுமையில் தவிப்பு: ஐ.நா. ஆய்வில் தகவல்

>

இந்தியாவில் எட்டு மாநிலங்களில் 42 கோடியே 10 லட்சம் பேர் வறுமையில் தவிப்பதாக ஐ.நா. சபையின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
166 நாடுகளில் பணியாற்றும் ஐ.நா. சபையின் வளர்ச்சித் திட்ட அதிகாரிகள், இந்தியா குறித்து ஆய்வு செய்து ஆய்வறிக்கை தயார் செய்துள்ளனர்.
அந்த அறிக்கையில், பிகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் 42.1 கோடி பேர் வறுமையில் வாழ்வதாகக் கூறப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள 26 பின்தங்கிய நாடுகளில் வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை 41 கோடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய ஏழைகளின் எண்ணிக்கை அதையும் தாண்டியுள்ளது.
அதாவது, இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் வறுமையின்பிடியில் சிக்கித் தவிப்பதாகவும், இந்தியப் பெண்களில் பாதி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்வதாகவும் ஐ.நா. ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2020-ல் இந்தியா வல்லரசாகும் என்று மார்தட்டும் வேளையில் இந்த ஆய்வறிக்கை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

42 கோடி இந்தியர்கள் வறுமையில் தவிப்பு: ஐ.நா. ஆய்வில் தகவல்

>அமைதி நாடுகள் பட்டியல் : இந்தியா 128வது இடம்

>

சர்வதேச அளவில், இந்த ஆண்டுக்கான,”அமைதி நிலவும் நாடுகள் பட்டியலை’ சர்வதேச பொருளாதார மற்றும் அமைதி மையம் வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா 128ம் இடம் பெற்றுள்ளது.
போர், பயங்கரவாதம், மனித உரிமை மீறல் போன்றவற்றுக்கு எதிராக செயல்படும் நாடுகள் குறித்து ஆய்வு செய்து, சர்வதேச பொருளாதார மற்றும் அமைதி மையம் கடந்த 2007ம் ஆண்டு முதல், “அமைதி நிலவும் நாடுகள் பட்டியலை’ வெளியிட்டு வருகிறது. இதில், மொத்தமுள்ள 145 இடங்களில், இந்தியா 128ம் இடம் பிடித்துள்ளது.கடந்த ஆண்டில் 122வது இடம் பெற்றிருந்தது. அதற்கு முன் 2007ல் வெளியான பட்டியலில் இந்தியா 109ம் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை வெளியான பட்டியலில் இடம்பெறாத பாகிஸ்தான், இந்த பட்டியலில் 145ம் இடத்தை பிடித்துள்ளது.ரஷ்யாவில் இப்போது அமைதி என்பது அதிகம் இல்லை.
அதனால், ரஷ்யா இப்பட்டியலில் 143வது இடத்தில் இருக்கிறது. சீனாவும் தரம் இறங்கி 80வது இடத்திற்கு வந்திருக்கிறது. மிகவும் அமைதி நிலவும் நாடுகள் பட்டியலில், நியூசிலாந்து, ஐஸ்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. மேலும், மேற்கு ஐரோப்பிய நாடுகள் இந்த பட்டியலில் முதல் 20 இடங்களை பிடித்துள்ளன. ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்த பட்டியலில் மிகமோசமாக அடிமட்டத்தில் உள்ளன.

அமைதி நாடுகள் பட்டியல் : இந்தியா 128வது இடம்

>செயற்கை செல் உருவாக்கி விஞ்ஞானிகள் புரட்சி: உயிர் உருவாக்க வழி கண்டனர்

>

உயிரியல் உலகின் உச்சக்கட்ட சாதனையாக, செயற்கை செல்லை உருவாக்கி, அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
செல் என்பது, ஒரு உயிர் அணு. இது உட்கரு, மரபணுவை நிர்ணயிக்கும் டி.என்.ஏ., சைட்டோபிளாசம், செல் சுவர் உட்பட பல பாகங்கள் உள்ளன. “குளோனிங்’ முறையில், ஒரு உயிரினத்தின் செல்லிலிருந்து, மரபணுவை எடுத்து, மற்றொரு செல்லில் புதைத்து பலபடியாக்கி, அதே உயிரினத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் வெற்றி கண்டனர். இப்போது, அதையும் மீறி, ஒரு புதிய செல்லையே உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். இதை “சிந்தடிக் செல்’ என்றழைக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதற்கான முயற்சியை, ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் துவக்கினர்.
ஒரு செல்லின் மொத்த மரபணுவையும், வேறு ஒரு புதிய செல்லுக்கு மாற்றி, அதன் வளர்ச்சியை கண்காணித்தனர். இதில் முக்கிய பங்காற்றியவர் மேரிலாண்டை சேர்ந்த கிரெய்க் என்ற விஞ்ஞானி. அவர் தன் குழுவுடன் நடத்திய ஆய்வு வெற்றி பெற்றிருக்கிறது. தொடர்ந்து, ஒரு செல் உயிரினமான பாக்டீரியாவின் செல்லில், செயற்கையாக உருவாக்கப்பட்ட டி.என்.ஏ., மூலக்கூறுகளை செலுத்தி, அதன் வளர்ச்சியை கண்காணித்தனர். அதில் ஒரு மரபணு ஜோடி பொருத்தத்தில் தவறு நேர்ந்ததை, கம்ப்யூட்டர் உதவியுடன் கண்டறிந்தனர். பின், அதை சரி செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து, அதை மீண்டும், வேறு ஒரு செல்லில் பயன்படுத்தினர். அதன் வளர்ச்சியை கண்டு ஆச்சரியமடைந்த அவர்கள், அந்த செல்லின் முற்றிலும் மாறுபட்டிருந்த மரபணுவை, மீண்டும், வேறு ஒரு உயிரினத்தின் செல்லில் செலுத்தினர். அப்போது தான் ஆச்சரியம் நிகழ்ந்தது.
செயற்கையாக உருவாக்கப்பட்ட டி.என்.ஏ., புதிய மரபணுவுடன், தாய் செல் போலவே, வளர்ச்சி அடைய துவங்கியது. வேறு விதமாக சொன்னால், ஆட்டின் உயிரணு மாட்டின் உயிரணுவாக மாறியது. அப்படியானால் மரபணுவிலுள்ள குரோமசோம்களையே மாற்றி வேறுவிதமாக செய்யும் சாதனை இது. “செயற்கையாக உருவாக்கப்பட்ட புதிய செல், மருத்துவ உலகில் பல புதிய பரிணாமங்களை தோற்றுவிக்கும்’ என இந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதை அவர்கள் “சிந்தடிக் செல்’ என்று அழைக்கின்றனர்.
பாரம்பரிய நோய்கள் உட்பட பலவற்றுக்கும், இந்த புதிய கண்டுபிடிப்பு உதவும். உதாரணத்திற்கு அழுக்கு தண்ணீரை மிகவும் சுத்தமான தண்ணீராக்குவது, குறுகிய காலத்தில் தடுப்பூசி மருந்துகளை தயாரிப்பது போன்றவைகளுக்கு உதவும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே சமயம் “உயிரி ஆயுதமாக இது பயன்படுத்தப்படலாம்’ என்ற அச்சமும் பேசப்படுகிறது. ஆகவே மரபுப்படி பாதுகாக்கும் நடைமுறைகள் குறித்த கமிஷன் தலைவர் அமி குட்மானுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடிதம் எழுதியுள்ளார். இந்த வெற்றியை பாராட்டிய அவர், ” மருத்துவ, சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகிய துறைகளில் இது எந்த அளவு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

செயற்கை செல் உருவாக்கி விஞ்ஞானிகள் புரட்சி: உயிர் உருவாக்க வழி கண்டனர்

சார்லஸ் டார்வினின் பயம் சரியானது தான் என கண்டுபிடிப்பு

தன் மூன்று குழந்தைகளின் திடீர் மரணம், மூன்று குழந்தைகளுக்கு வாரிசு இல்லாமை போன்றவற்றுக்கு, நெருங்கிய உறவில் திருமணம் செய்து கொண்டது தான் காரணமென, சார்லஸ் டார்வின் பயந்தது சரிதான் என, நவீன ஆய்வு ஒன்று உறுதி செய்துள்ளது.பரிணாம கோட்பாட்டின் தந்தை சார்லஸ் டார்வின், தன் 30 வயதில், நெருங்கிய உறவினரான 31 வயதுடைய எம்மா வெட்ஜ்வுட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு பிறந்த குழந்தைகளில் மூன்று பேர், 10 வயதில் இறந்து போயினர். மேலும் மூன்று பேரின் நீண்டகால திருமண வாழ்வில் குழந்தை பேறே கிட்டவில்லை.
இப்பிரச்னைகளுக்கு அடிப்படையான காரணமாக, தனது திருமணம் இருக்கலாமோ என்று அவர் பயந்தார். அவரது பயம் சரியானது தான் என்று, சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வு கூறுகிறது.ஓகியோ மாநில பல்கலைக்கழகத்தின் பரிணாம துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் டிம் பெர்ரா மற்றும் அவரது உடன் பணியாற்றும் இரண்டு பேர், சார்லஸ் டார்வினின் குடும்ப பாரம்பரியம் குறித்த ஆய்வில் ஈடுபட்டனர்.சார்லசின் தந்தை மற்றும் தாய்வழி மரபுகளின் வேர்களை, கி.பி., 16ம் நூற்றாண்டு வரை தேடி கண்டுபிடித்து சேகரித்தனர். அந்த உறவு முறைகளை பற்றிய இவர்களின் ஆராய்ச்சியில், சார்லசின் குழந்தைகள், தங்கள் முன்னோரிடமிருந்து மரபணுக்களை பெறுவதற்கு 6 சதவீதம் வாய்ப்பு இருந்துள்ளது தெரியவந்தது.
‘சார்லஸ் தம்பதியரின் பெற்றோரிடம் நோய் விளைவிக்கக்கூடிய மரபணுக்கள், ஒரே குரோமோசோமில் பதிவாகியிருந்தால், அவை இரண்டும் ஒரே நேரத்தில், அவர்களின் சந்ததியரிடம் வந்து சேர வாய்ப்பு அதிகம் உள்ளது. அவை தான் நோய்களை உருவாக்கும்’ என்கிறார் பெர்ரா.சார்லஸ், இரண்டு வேறுவிதமான தாவரங்களை ஒட்டு முறையில் சேர்த்து புதிய தாவரங்களை உருவாக்கி பார்த்தார். வழக்கமான தாவரங்களை விட, இவை மிகவும் ஆரோக்கியமாக இருந்ததையும், சந்ததி எண்ணிக்கையில் அதிகரித்ததையும் கண்டறிந்தார். அதன் முடிவுகளை மனித குலத்துக்கும் பொருத்தி பார்த்துதான் அந்த முடிவுக்கு அவர் வந்தார்.’டார்வினின் பயத்துக்கான காரணத்தை கண்டறிய விரும்பினேன். அவரது பயம் சரிதான் என் பது இப்போது தெளிவாகி விட்டது. அவருக்கு நவீன தோற்றவியல் குறித்து எதுவும் தெரியாது. அவர் ஒட்டு முறையில் தாவரங்களை உருவாக்கி பார்த்து, அதன் முடிவுகளை மனித குலத்தோடும் பொருத்தி பார்த்தார்’ என்கிறார் பெர்ரா.

>சார்லஸ் டார்வினின் பயம் சரியானது தான் என கண்டுபிடிப்பு

>கன்னியாகுமரி காடுகளில் கணக்கெடுப்பில் 57 யானைகள்

>

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காடுகளில் வனத்துறையினர் நடத்திய கணக்கெடுப்பில், 57 யானைகள் இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கடைக்கோடி மாவட்டமான, கன்னியாகுமரியில் சில தினங்களாக வனத்துறையினர், அங்குள்ள காடுகளில் யானைகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு பணிகளை நடத்தி வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி, வேளிமலை சரகங்களில் யானைகள் எதுவும் தென்படவில்லை. ஆனால், குளியல், அழகிய பாண்டியபுரம் சரகங்களில் கணக்கெடுப்பில் 18 யானைகள் தென்பட்டன. அதேபோல், குலசேகரபுரம் சரகத்தில் 21 யானைகளும் இருப்பது தெரியவந்தது.
இது தவிர மேலும் சில பகுதிகளில் 18 யானைகள் தென்பட்டன.கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் இம்மாவட்டத்தில் 60க்கும் அதிகமான யானைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால், இவ்வாண்டு இதுவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும்தமிழக-கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ள காடுகளில், யானைகள் இங்கும் அங்குமாக இடம் பெயர்வது உண்டு. சபரிமலை சீசன் காலத்தில் கேரளாவில் இருந்து யானைகள் தமிழக காடுகளுக்கும், இங்கு கோடை காலத்தில் நீர் கிடைக்காமல் யானைகள் கேரள காடுகளுக்கும் செல்வது உண்டு.தற்போது கேரளாவிலும், தமிழகத்திலும் கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது.
கேரளாவில் இன்னும் பருவமழை துவங்க சிறிது நாட்கள் உள்ள நிலையில், இரு மாநிலத்திலும் ஒரே நேரத்தில் காடுகளில் யானைகளை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.பொதுவாக காடுகளில் யானைகள் குறித்து, கணக்கெடுக்கும் பணி யானைகளின் மலம், கால் தடங்கள், கால் தடத்தின் அளவு ஆகியவை கொண்டு தான் கணக்கிடப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது யானைகளை நேரில் கண்ட பின் தான் கணக்கிடப்படுகிறது.ஒவ்வொரு காட்டிலும், 500 எக்டேர் நிலப் பரப்பில் மூன்று பேர் கொண்ட குழு தான் இதற்கான கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு, 40 குழுக்கள் பல்வேறு காடுகளில் அலைந்து தான் யானைகளின் மேற்கண்ட கணக்கு விவரம் கிடைத்துள்ளது.

மிகவும் வெப்பமான ஆண்டு 2010 : நான்கு மாத ஆய்வில் வெளியானது

வாஷிங்டன் : ‘உலக வரலாற்றில் 2010ம் ஆண்டு தான் மிகவும் வெப்பமான ஆண்டு என, அமெரிக்க வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:சர்வதேச அளவில் நிலம் மற்றும் கடலின் மேற்பரப்பில் நிலவிய வெப்பநிலையை கணக்கிட்டு பார்த்து, ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த ஜனவரியிலிருந்து ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்கள், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகில் உள்ள நாடுகளிலுள்ள வெப்பநிலை முழுவதையும் ஆய்வு செய்து, அதன் சராசரி அளவை சேகரித்தனர்.இதில், உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, இந்தாண்டு தான் மிகவும் வெப்பமான ஆண்டு என்பது தெரிய வந்துள்ளது. இந்த நான்கு மாதங்களில், உலகின் சராசரி வெப்ப நிலை 13.3 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. இது, கடந்த 20ம் நூற்றாண்டில் நிலவிய சராசரி வெப்பநிலையை விட 0.69 டிகிரி செல்சியஸ் அதிகம். இதேபோல், இந்த நான்கு மாதங்களில், ஏப்ரல் தான் அதிகம் வெப்பமான மாதமாக இருந்துள்ளது.இவ்வாறு வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

>மிகவும் வெப்பமான ஆண்டு 2010 : நான்கு மாத ஆய்வில் வெளியானது

காசிரங்கா பூங்காவில் புலிகள் எண்ணிக்கை உலகிலேயே முதலிடம்

உலகிலேயே, புலிகள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பகுதியாக அசாமில் உள்ள காசிரங்கா வனவிலங்கு பூங்கா அடையாளம் காணப்பட்டுள்ளது. அசாம் வனத் துறையினரும், சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆராநாயக் என்பவரும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலகிலேயே புலிகள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பகுதி எது என்பதை அறிந்து கொள்வதற்காக ஆய்வு மேற்கொண் டோம். காசிரங்காவில் உள்ள தேசிய வனவிலங்கு பூங்காவில் புலிகளின் எண்ணிக்கை எந்த அளவுக்கு அடர்த்தியாக உள்ளது என்பதை அறிவதற்காக ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டோம்.
பூங்காவில் 144 ச.கி.மீ., பரப்பளவில் நடமாடும் விலங்குகள் பற்றிய எண்ணிக்கையை மதிப்பிடுவதற்காக, ஆங்காங்கே ரகசியமாக கேமராக்கள் பொருத் தப்பட்டன. இதில்,100 ச.கி.மீ., பரப்பளவில் 32 புலிகள் வசிப்பது தெரியவந்தது. இதன் மூலம், உலகிலேயே புலிகள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பகுதி கசிரங்கா பூங்கா தான் என்பது தெரியவந்தது. இந்த 32 புலிகளில் ஒன்று குட்டி. 50 நாட்கள் இந்த கேமரா கண்காணிப்பு நடந்தது. இந்தியாவில் உள்ள மற்ற வனவிலங்கு பூங்காக்களில் 100 ச.கி.மீ., பரப்பளவில் சராசரியாக மூன்றில் இருந்து 12 புலிகள் தான் வசிக்கின்றன. இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>காசிரங்கா பூங்காவில் புலிகள் எண்ணிக்கை உலகிலேயே முதலிடம்

அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டவர் பார்ப்பது ‘ஒயிட் காலர்’ வேலைகள்தான்

உலகின் பிற நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறுவோர், ‘ஒயிட் காலர்’ வேலைகளான நிர்வாகம், தொழில்நுட்பம் போன்றவற்றில் தான் பணியாற்றுகின்றனர் என்று ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பிற நாடுகளிலிருந்து குடியேறுவோர் பற்றிய ஆய்வு ஒன்றை அந்நாட்டுப் பத்திரிகையான ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நடத்தியது. இதில் ஆயிரத்து 600 இளைஞர்கள் பங்கு கொண்டனர். பிற நாடுகளிலிருந்து குடியேறுவோரில் யார் மீது அமெரிக்கர்களின் விருப்பமும், யார் மீது வெறுப்பும் இருக்கிறது என்பது குறித்தும் அந்த ஆய்வு நடத்தப்பட்டது.
உற்பத்தி, தூய்மைப் பணி, கட்டுமானம் போன்ற ‘ப்ளூ காலர்’ வேலைகளை விட, நிர்வாகம், தொழில்நுட்பம் போன்ற ‘ஒயிட் காலர்’ வேலைகளில் தான் பெரும்பான்மையான வெளிநாட்டவர் இருக்கின்றனர் என்று அந்த ஆய்வு கூறுகிறது. அமெரிக்காவின் பாஸ்டன், நியூயார்க், சான்பிரான்ஸிஸ்கோ உள்ளிட்ட முக்கியமான 25 நகரங்களில் 14 நகரங்களில் இதுதான் நிலைமை. அமெரிக்காவின் பெருநகரங்களில் தற்போது இரண்டரைக் கோடி பேர் ‘ஒயிட் காலர்’ வேலை பார்க்கும் வெளிநாட்டவர்தான்.
இந்த ஆய்வு, அமெரிக்க அரசியல்வாதிகள், வல்லுனர்கள், பிரபல வக்கீல்கள் ஆகியோர் கொண்டிருந்த, ‘அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் பெரும்பாலும் குறைந்த சம்பளத்தில்தான் வேலை பார்க்கின்றனர்’ என்ற கருத்தை உடைத்துள்ளது.அமெரிக்கர்கள் ஏழையாயிருந்தாலும் பணக்காரராயிருந்தாலும், அதிகத் திறமையுள்ள வெளிநாட்டவரை அவர்கள் நேசிக்கின்றனர்’என்கிறார் அமெரிக்க அரசியல் ஆர்வலர் ஜென்ஸ் ஹெய்ன்முல்லர்.
ஆனால்,சாதாரண குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும் வெளிநாட்டவரை, 60 சதவீதத்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வெறுக்கின்றனர் என்றே இந்த ஆய்வு காட்டுகிறது. இதனால் தற்போது, அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டவர்கள் பற்றிய கொள்கையில் அந்நாட்டு அரசு மாற்றம் கொண்டுவரக் கூடும். இதன் மூலம் அதிகத் திறமையுள்ளவர்கள் மட்டுமே அங்கு குடியேற வழிவகுக்கப்படும். அதற்கான முயற்சிகளை அந்நாட்டு அரசியல்கட்சிகள் எடுத்து வருகின்றன.

>அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டவர் பார்ப்பது ‘ஒயிட் காலர்’ வேலைகள்தான்

மாரடைப்பை குணப்படுத்தும் “ஸ்டெம்” செல்கள்

பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியில் இருந்து எடுக்கப்படும் ரத்தத்தில் இருந்து ஸ்டெம் செல்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த செல்கள் அதற்கென உள்ள வங்கிகளில் 0 டிகிரிக்கும் குறைவான தட்ப வெப்ப நிலையில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன.
சம்பந்தப்பட்ட நபருக்கு குணப்படுத்த முடியாத நோய் ஏற்படும்போது, இந்த “ஸ்டெம்” செல்கள் மூலம் குணப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையின் தற்போது மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களையும் “ஸ்டெம்” செல்கள் குணப்படுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. லண்டனில் உள்ள பிரிஷ்டல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இது பற்றிய ஆய்வை மேற் கொண்டனர்.
“ஸ்டெம்” செல்களை இதய நோயாளியின் உடலில் செலுத்திய ஒரு நாளில் அவை ரத்தக்குழாயில் உள்ள கோளாறுகளை சரி செய்து குணப்படுத்துவது தெரியவந்துள்ளது.
மேலும் இருதய அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கும் இது பெருமளவில் உதவி கரமாக இருந்தது. இந்த ஆய்வின் மூலம் உலகில் உள்ள லட்சக்கணக்கான இருதய நோயாளிகள் குண மடைந்து நீண்ட நாள் வாழ் வார்கள்.

>மாரடைப்பை குணப்படுத்தும் “ஸ்டெம்” செல்கள்

>புற்றுநோய் தீர்க்கும் தாய்ப்பால்

>

தாய்ப்பாலிலுள்ள ‘ஹேம்லெட்’ என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிவதற்காக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது தான், ‘ஹ்யூமன் ஆல்பா லாக்தல்பூமின் மேட் லெதல் டூ ட்யூமர்!’ இதன் சுருக்கம் தான், ‘ஹேம்லெட்!’
மனித உடலில், ‘ஹேம்லெட்’ என்ன பங்காற்றுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், இந்த ‘ஹேம்லெட்’ மனித உடலிலுள்ள 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வின் போது, சிறுநீர் பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, ‘ஹேம்லெட்’ கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிறுநீருடன் புற்றுநோய் செல்கள் இறந்த நிலையில் வெளியேறியது கண்டறியப்பட்டது. இதன் மூலம், புற்றுநோய்க்கான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படக் கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ‘ஹேம்லெட்’ புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கிறது; மற்ற செல்களை பாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஹேம்லெட்’ எப்படி புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது குறித்து, ஆய்வு நடந்து வருகிறது. குழந்தையின் வயிற்றில் செல்லும் தாய்ப்பாலில் உள்ள, ‘ஹேம்லெட்’ அங்கு, அமிலத் தன்மையை உருவாக்குகிறது. அதன் மூலமே, கேன்சர் செல்கள் அழிக்கப்படுகின்றன என்று தெரிய வந்துள்ளது.

பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி: பிரிட்டன் டாக்டர்கள் கண்டுபிடிப்பு

கருமுட்டைகளில் உட்கருவை மாற்றம் செய்வதன் மூலம், பரம்பரை நோய்கள் மற்றும் அரிய வகை நோய்களுக்கு முடிவு கட்டி விடலாம் என்று, பிரிட்டன் டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.மனித குணங்களை நிர்ணயிக்கும் டி.என்.ஏ.,வின் ஒரு நுண்ணுறுப்பு, ‘மைட்டோகான்ட்ரியா!’ இது மொச்சைக் கொட்டை வடிவில் அமைந்திருக்கும். இது தான், ஒரு செல்லுக்கு சக்தியை வழங்குகிறது.இதில் ஏற்படும் குறைபாடுகளே பரம்பரை நோய்கள் வரக் காரணம் என்று நவீன மருத்துவம் கண்டறிந்துள்ளது.பிரிட்டனில் நடந்த ஆய்வுப்படி, தாய்வழியில் வரும் பரம்பரை நோய்கள் 250 பேரில் ஒருவருக்கு மிகச் சிறிய அளவில் இருப்பதாக கண்டறியப்பட் டுள்ளது.
உலகளவில், 6,500 பேரில் ஒருவரை பரம்பரை நோய்கள் மிகத் தீவிரமாகத் தாக்குகின்றன. இதனால் தசைப் பலவீனம், செவிட்டுத் தன்மை, இதயச் செயலிழப்பு, கண்களில் பார்வை பாதிப்பு மற்றும் இதர உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும். சில சமயம் உயிரிழப்பு கூட நேரிடும்.இதுபோன்ற பரம்பரை மற்றும் அரிய வகை நோய்களை முற்றிலும் நீக்குவதற் காக, பிரிட்டன் டாக்டர்கள், ஒரு புதிய வழிமுறையைக் கண்டுபிடித்துள்ளனர்.அதன்படி, செயற்கைக் கருத்தரிப்பு முறையில், விந்தணு சேர்க்கப்பட்ட குறைபாடில்லாத கருமுட்டை ஒன்றை எடுத்து, அதிலுள்ள உட்கருவை (நியூக்ளியஸ்) நீக்குகின்றனர்.பின் இந்தக் குறைபாடுள்ள கருமுட்டையிலுள்ள உட்கரு, ஏற்கனவே உட்கரு நீக்கப்பட்ட கருமுட்டையில் வைக்கப்படுகிறது. இம்முறையில் நோய் பாதிப்பு ஏற்படுத்தும் டி.என்.ஏ.,வின் அளவு மிக மிகக் குறைவாகவே இருக்கும். இதனால், பரம்பரை நோய் மற்றும் அரிய வகை நோய்கள் வர வாய்ப்பில்லை.
இதுகுறித்து, வடகிழக்கு பிரிட்டனைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் டக்ளஸ் டர்ன்புல் கூறுகையில், ‘இது நமது லேப்-டாப்பில் பேட்டரி மாற்றுவது போன்றது. பேட்டரி மாற்றப்பட்டவுடன் வழக்கம் போல் அது இயங்குகிறது. அதன் ‘ஹார்ட் டிரைவ்’வில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.அதுபோல், இம்முறையில் பிறக்கும் குழந்தைகள் தங்கள் பெற்றோர் வழி பரம்பரை நோயால் பாதிக்கப்படுவதில்லை’ என்றார்.

>பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி: பிரிட்டன் டாக்டர்கள் கண்டுபிடிப்பு

>என் எதிர்காலம் இப்படித் தான் இருக்கணும்:10ம் வகுப்பு மாணவர்கள் சிந்தனையில் முதிர்ச்சி

>

இது தேர்வுகளின் காலம். முந்தைய தலைமுறையை விட இன்றைய இளம் தலைமுறைக்கு தங்களின் எதிர்காலம் குறித்த தேடல்களுக்கு எவ்வளவு வாய்ப்புகள் அதிகரித்துள்ளனவோ, அவ்வளவு சவால்களும் அதிகரித்துள்ளன. அதேநேரம், இன்றைய மாணவர்கள் 10ம் வகுப்பிலேயே தங்கள் எதிர்காலம் பற்றி சிந்திக்கத் துவங்குவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.சமீபத்தில், மேற்கு வங்கத்தில், 75 நிறுவனங்களின் 692 பணியாளர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
இவர்களின் குழந்தைகள் தங்கள் எதிர்காலம் குறித்து என்ன நினைக்கின்றனர் என்பது தான் ஆய்வின் மையப் பொருள். ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பயிலுபவர்களில் 25 சதவீதம் பேர், எதிர்காலம் பற்றிய சிந்தனையில் ஈடுபடுகின்றனர். 50 சதவீதம் பேரில், இளம் பெற்றோரைத் தவிர மற்ற பெற்றோர், குழந்தைகளின் எதிர்காலம் குறித்த முடிவு எடுப்பதில் தாமதிப்பதாகக் கூறியுள்ளனர்.
இந்த ஆய்வில் கலந்து கொண்ட கல்வியாளர்கள் கூறியதாவது:இப்போது வாழ்க்கை என்பது பல்வேறு தொடர்புகள், சிக்கல்கள், வாய்ப்புகள் நிறைந்ததாக ஆகிவிட்டதால், வேலைவாய்ப்பு என்பதும் இவற்றோடு தொடர்புடையதாக உள்ளது.நமது கல்வி முறையில், ஒரு மாணவன் ஒரு படிப்பைத் தேர்ந்தெடுத்தால் இறுதிவரை அதிலிருந்து விலகவே முடியாது.
பிளஸ் 2வில் கலைப் பிரிவை ஒருவன் தேர்ந்தெடுத்துவிட்டால், அவனால், பொறியியலுக்கோ, உயிரிதொழில்நுட்பத்துக்கோ மாறமுடியாது. இது ஒரு சிக்கல்.பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2வில் எதிர்காலம் பற்றிய சிந்தனை முழுமையாக இருக்க முடியாது. அந்த நிலையில், அவர்களுக்கு ‘ஜியோஇன்பர்மேடிக்ஸ்’ படிப்பு பற்றியோ, ‘கம்ப்யூட்டேஷனல் பயாலஜி’ படிப்பு பற்றியோ தெரிய வாய்ப்பில்லை.
ஆனால், அறிவியல் தான் எதிர்காலம் என்று முடிவு செய்ய முடியும். அதற்கான அடிப்படை அப்போது கிடைக்கிறது.பள்ளி இறுதியில் எடுக்கப்படும் முடிவுக்கும், கல்லூரி இறுதியில் எடுக்கப்படும் முடிவுக்கும் வித்தியாசம் உண்டு. பள்ளி இறுதியில் மாணவன் தன்னையும், தன் சூழலையும் உணர்ந்திருப்பான் என்று உறுதியளிக்க முடியாது. கல்லூரி இறுதியில், தன்னையும், தன் சூழலையும் அவன் உணர வழியிருக்கிறது.
வேலைவாய்ப்பு சிந்தனைக்கு அடிப்படையே ஒருவன் தன்னை புரிந்து கொள்வதுதான். அதனால் இந்த சிந்தனை ஒன்பதாம் வகுப்பில் துவங்கினால் எப்போது அவன் வேலைவாய்ப்பில் சிறந்ததை எட்டுகிறானோ அப்போதுதான் அது முடிகிறது. இந்தச் சிந்தனை பிளஸ் 1, பிளஸ் 2வில் தீவிரமடைகிறது. ஆனால், இதன் முழுமை என்பது தனிநபரைச் சார்ந்தது.மாணவனின் முடிவில் அவனது குடும்பச் சூழல்தான் பெரிதும் எதிரொலிக்கிறது.
அவன் பெற்றோர் படித்தவர்களாக, தற்கால நிலையைப் புரிந்து கொண்டவர்களாக இருந்தால் அவன் தேடலுக்கு, அவர்களால் பெயரளவில் உதவ முடியும். எதிர்மாறாக இருந்தால் மாணவன் மட்டுமே முடிவு செய்ய வேண்டியிருக்கும்.தரம் உயர்ந்த கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவனுக்கு வேலைவாய்ப்புகள் குறித்த வாய்ப்புகள் அதிகம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சாதாரண கல்வி நிறுவன மாணவன், தானே முயன்று தேடினால் தான் உண்டு. அதனால் தான் மாணவனின் எதிர்காலத்தில் பள்ளியும் முக்கிய பங்கு வகிக்கிறது.
பெற்றோர், தங்கள் குழந்தைகளின் வாழ்வில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு உதவ முடியும். மேற்கு வங்கத்தில் பெரும்பான்மையான மாணவர்களின் முடிவில் பெற்றோரின் முடிவுதான் ஆதிக்கம் செலுத்துகிறது. அதனால், பள்ளிகளில் பெற்றோருக்கு என்று தனியாக, ‘கவுன்சிலிங்’ நடத்தப்பட வேண்டும். தற்போதைய சூழலைப் புரிந்து கொண்டு, தங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் உதவுவதற்கு இம்முறை பெரிதும் உதவும்.இவ்வாறு கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

என் எதிர்காலம் இப்படித் தான் இருக்கணும்:10ம் வகுப்பு மாணவர்கள் சிந்தனையில் முதிர்ச்சி

>தமிழகத்தில் ஒவ்வொரு தனி நபருக்கும் ரூ.14,353 கடன்

>

தமிழகத்தில் ஒவ்வொரு தனி நபருக்கும் ரூ.14,353 கடன்
தமிழகத்தில் ஒவ்வொரு தனி நபருக்கும் ரூ.14,353 கடன் இருப்பதாக நிதியமைச்சர் க. அன்பழகன் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாத்ததுக்கு பதிலளித்து அவர் பேசியது:
“தமிழக அரசு கடனில் மூழ்குவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். அரசு கடனில் மூழ்காது. கடனை வைத்து வேறு சிலரை மூழ்கடிப்போம். மக்களுக்கான அடிப்படை வசதிகளை செயல்படுத்த பணம் வேண்டும். அரசின் பணத்தில் இருந்துதான் அந்தத் திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என்றால் அதற்கு காலம் ஆகும். அதற்குள் அந்தத் திட்டங்களுக்கான செலவு அதிகரிக்கும். எனவே, திட்டங்களைச் செயல்படுத்தவும், நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்யவும் கடன் திரட்டுவதில் தவறில்லை.
தமிழகத்தில் தனிநபர் கடன் பொறுப்பு மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது குறைவாகவே உள்ளது.
மாநிலங்களின் கடன் பொறுப்பைப் பொருத்தவரை, மகாராஷ்டிரத்துக்கு ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 727 கோடியும், ஆந்திரத்துக்கு ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 757 கோடியும், கர்நாடகத்துக்கு ரூ.79 ஆயிரத்து 644 கோடியும், கேரளத்துக்கு ரூ.70 ஆயிரத்து 117 கோடியும், தமிழகத்துக்கு ரூ.89 ஆயிரத்து 149 கோடியும் உள்ளன.
தனிநபர் கடனைப் பொருத்தவரை, மகாராஷ்டிரத்தில் ரூ.18 ஆயிரத்து 575, ஆந்திரத்தில் ரூ.16 ஆயிரத்து 494, கர்நாடகத்துக்கு ரூ.15 ஆயிரத்து 107, கேரளத்தில் ரூ.21,991, தமிழகத்தில் ரூ.14 ஆயிரத்து 353-ம் உள்ளன.
இந்தியாவின் கடன் அளவு ரூ.35 லட்சத்து 15 ஆயிரத்து 606 கோடியும், தனிநபர் கடன் ரூ.34,231-ம் உள்ளன.
தமிழகத்தில் கடனைத் தீர்க்க முடியாத அளவுக்கு இல்லை. கடனைத் திருப்பிச் செலுத்துவோம். கடன் சுமை கட்டுக்குள் உள்ளது.
பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு, மூலதனப் பணம் (திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் பணம்) திருப்பி விடப்படுவதாகக் கூறுகிறார்கள். பற்றாக்குறை முழுவதும் கடனைத் திரட்டுவதன் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது” என்றார் நிதியமைச்சர் க.அன்பழகன்.

பூகம்பத்தை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் தவளை

பூகம்பம் ஏற்படுவதை முன் கூட்டியே தவளைகள் கண்டுபிடித்து விடுவதாக தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தில் மில்டன் கெய்னஸ் பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞானி ராஜெல் கிரான்ட் தவளை கள் நடவடிக்கை பற்றி ஆராய்ச்சி செய்து வருகின்றார்.
இவர் பூகம்பம் ஏற்பட போவது தவளைக்கு முன் கூட்டியே தெரிந்து விடுவதாக கண்டுபிடித்து உள்ளார்.
இத்தாலியில் 2009-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந்தேதி நில நடுக்கம் ஏற்பட்டது. அப்போது சான்ரா பினோவில் உள்ள ஏரியில் வாழும் தவளைகள் குறித்து ராஜெல் கிரான்ட் ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
பூகம்பம் ஏற்படுவதற்கு 6 நாட்களுக்கு முன்பு அங்கிருந்த தவளைகள் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. 5 நாட்களுக்கு முன்பு 96 சதவீத ஆண் தவளைகள் அங்கிருந்து வெளியேறிவிட்டன. 3 நாட்களுக்கு முன்பு அனைத்து தவளைகளும் வெளியேறி சென்று விட்டன. பின்னர் பூகம்பம் முடிந்து 6 நாட்க ளுக்கு பிறகு அதே ஏரிக்கு திரும்பி வந்துவிட்டன.
இதைவைத்து பார்க்கும் போது தவளைகள் முன் கூட்டியே நில நடுக்கத்தை கண்டுபிடித்து விடுகின்றன என்று அவர் கூறுகிறார்.
அந்த தவளைகள் பூகம்பத்துக்கு பிறகு 6 நாட்கள் கழித்து திரும்பி வந்தன. இந்த 6 நாட்கள் வரையிலும் பூகம்பத்துக்கு பிறகு ஏற்படும் சிறிய அளவிலான அதிர்வுகள் இருந்து கொண்டிருந்தன. தவளைகள் திரும்பி வந்த பிறகு அதிர்வுகள் கூட நின்று விட்டன. எனவே தவளைகள் சிறிது அதிர்வையும் முன் கூட்டியே கண்டுபிடித்து விடுவதாகவும் அவர் கூறினார்.
எலி, பாம்பு, மீன்கள், எறும்பு போன்றவையும் பூகம்பத்தை முன் கூட்டியே கண்டுபிடித்து விடுவதாக ஏற்கனவே தகவல்கள் வந்துள்ளன.

>பூகம்பத்தை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் தவளை

சாக்லேட் சாப்பிடுபவருக்கு இதய நோய் வராது; ஆய்வில் தகவல்

தினமும் சாக்லேட் சாப்பிடுபவர்களை இதய நோய் தாக்காது என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக 35 வயது முதல் 65 வயது வரை உள்ள 30 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவர்களில் சுமார் 39 சதவீதம் பேருக்கு இதய நோய் பாதிப்பு ஏற்படவில்லை. சாக்லேட்டில் உள்ள கோகோ பீன்ஸ் ரத்தத்தில் நைட்ரிக் அமிலத்தை அதிகரிக்க செய்கிறது. இதன்மூலம் ரத்தநாளங்கள் நன்றாக செயல்படுகின்றன. எனவே இதயநோய் ஏற்பட வாய்ப்பு இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் வழக்கத்தை விட தினமும் 6 கிராம் கூடுதலாக சாக்லேட் சாப்பிடுபவர்களில் 85 சத வீதம் பேருக்கு இதய நோய்கள் பாதிப்பு இல்லை எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிக அளவில் சாக்லேட் சாப்படுபவர்களின் இதயம் வலுப்பெறும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

>சாக்லேட் சாப்பிடுபவருக்கு இதய நோய் வராது; ஆய்வில் தகவல்