Category Archives: ஆசிரியர்கள் பொதுமாறுதல்-2011-12

>பள்ளிக்கல்வித்துறை- ஆசிரியர்கள் பொதுமாறுதல்-அரசு/நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள்/ தலைமை ஆசிரியர்களுக்கு 2011-2012ம் கல்வியாண்டில் பொதுமாறுதல் – விண்ணப்பங்கள் பெறுதல் சார்ந்தான – அறிவுரை

>

பள்ளிக்கல்வித்துறை- ஆசிரியர்கள் பொதுமாறுதல்-அரசு/நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள்/ தலைமை ஆசிரியர்களுக்கு 2011-2012ம் கல்வியாண்டில் பொதுமாறுதல் – விண்ணப்பங்கள் பெறுதல் சார்ந்தான –  அறிவுரை 


1) 2011-2012 மாறுதல் கலந்தாய்வு தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டதும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.  அங்ஙனம் அனுப்பி வைக்கப்படும் அரசாணையின் நகலினை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு உடனடியாக அனுப்பி அதற்கான ஒப்பத்தினைப் பெற்று கோப்பில் வைக்க வேண்டும்.  தலைமையாசிரியர் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுக்கும் அதனை சுற்றுக்கு விட்டு ஒப்புதல் பெறவேண்டும்.

2) பொது மாறுதல் கோரும் விண்ணப்பப் படிவத்தின் நகல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அதனை அனைத்து உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளுக்கும் உடன் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

3) பொது மாறுதல் கோரும் விண்ணப்பப் படிவத்தில் உள்ள அனைத்து கலங்களும் சரியாக பூர்த்தி செய்யப் பட்டுள்ளனவா என ஆய்வு செய்து தலைமையாசிரியரால் ஒப்பமிடப்பட வேண்டும்.

4) ஆசிரியர் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்குமுறை மற்றும் மேல்முறையீடு) விதிகள்  17 (a), 17 (b),ன் கீழ் ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளதா என்பதையும், நீண்டகால விடுப்பில் உள்ளவராயின் அதன் விவரம், தற்காலிகப் பணிநீக்கத்தில் உள்ளவராயின் அதன் விவரம், ஒழுங்கு நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டவராயின் அதன் விவரம், நிர்வாக நலன் கருதி மாறுதல் அளிக்கப்பட்டிருப்பின் அதன் விவரம் போன்ற விவரங்களைத் தெளிவாக அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள கலத்தில் தலைமையாசிரியரால் குறிப்பிடப்பட வேண்டும்.

5) மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை 21.04.2011 முதல்  10.05.2011 க்குள் மூன்று பிரதிகளில் பெற்று மாறுதல் விண்ணப்பத்தினை தலைமையாசிரியர்கள் மேலொப்பம் இட்டு 12.05.2011 அன்று வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும்.

6) ஒரே மாவட்டத்திற்குள் மாறுதல் கோரும் ஆசிரியர்கள் சார்பாக முழுமையாக விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 1 பிரதியிலும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் ஆசிரியர்கள் சார்பாக முழுமையாக விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 2 பிரதிகளிலும் தலைமையாசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

7) விண்ணப்பம் பெற்ற 5 தினங்களுக்குள் தகுதியுள்ள விண்ணப்பம்/தகுதியிலா விண்ணப்பம் நிராகரிக்கப்பட வேண்டியது என வகைப்படுத்தி A மற்றும் B பதிவேடுகள் தயார் செய்து அவற்றைப் பதிந்து முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்பம் பெற்று பராமரிக்கப்பட வேண்டும்.

8) கலந்தாய்விற்கான நாள் மற்றும் நேரம் இவ்வியக்ககத்தால் பின்னர் அறிவிக்கப்படும்.

9) வெளிமாவட்ட மாறுதல் கோரும் விண்ணப்பங்களைத் தொகுத்து முதன்மைக் கல்வி அலுவலரின் மேலொப்பத்துடன் 12.05.2011 க்குள் சம்மந்தப்பட்ட வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குக் கிடைக்கத் தக்க வகையில் தனிநபர் மூலமாகவோ, விரைவு அஞ்சல் மூலமாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

10) ஒரு ஆசிரியர் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களுக்கு மாறுதல் விண்ணப்பித்திருப்பினும், அந்த விண்ணப்பத்தினை சான்றொப்பமிட்டு அனுப்பலாம்.

11) அரசு உயர்நிலைப்பள்ளி/அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளி/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் சார்ந்தது:-

     அரசு உயர்நிலைப்பள்ளி/ நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களில் மாறுதல் கோருபவர்களின் விண்ணப்பங்களை 21.04.2011 முதல் 10.05.2011 வரை சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கோரிபெற்று, அதனை சரிபார்த்து முதன்மைக் கல்வி அலுவலர் மேலொப்பத்துடன் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு தனி நபர்மூலம் 12.05.2011  அன்று  தவறாமல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

     மேற்படி மாறுதல் விண்ணப்பங்களில் மாவட்டத்திற்குள் மாறுதல் கோருபவர்களின் விண்ணப்பங்களை, தனியாகவும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோருபவர்களின் விண்ணப்பங்களை தனியாகவும் தொகுத்து அனுப்பி வைக்க வேண்டும்.  மேலே கூறப்பட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் தவறாது பின்பற்றி உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆசிரியர்கள் மாறுதல் கோரும் பணியினை முடித்து கலந்தாய்வுக்குத் தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.