Category Archives: அரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு

பள்ளிக் கல்வித் துறை செயலாளர் டி.சபீதா உட்பட 8 அரசு செயலாளர்களுக்கு முதன்மைச் செயலாளர்களாக பதவி உயர்வு.

1988-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆன 8 அரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் முதன்மை செயலாளர்களாகி அந்த துறையிலே நீடிக்கின்றனர்.
அதன்படி, பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் (பயிற்சி) துறை வெ.இறையன்பு, சுனாமி வாழ்வாதாரத் திட்ட இயக்குனர் விக்ரம் கபூர், சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் அதுல்ய மிஸ்ரா, பள்ளிக் கல்வித் துறை செயலாளர் டி.சபீதா, தமிழ்நாடு காதி, கிராம தொழில்கள் வாரிய தலைமை செயல் அதிகாரி ஜதீந்திரநாத் சுவைன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனர் பி.ஆர்.சம்பத், அரசு அருங்காட்சியகங்கள் கமிஷனர் எஸ்.எஸ்.ஜவஹர், அண்ணா மேலாண்மை பயிற்சி நிலைய இயக்குனர் டி.ஜோதி ஜெகராஜன் ஆகியோர் பதவி உயர்வு பெற்று முதன்மைச் செயலாளர்களாகி அந்தந்த துறையிலே நீடிக்கின்றனர்.