கல்விச்சோலை செய்திகள் | > பத்தாம் வகுப்ப

கல்விச்சோலை செய்திகள் |
> பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதிய தேர்வர்கள், அசல் மதிப்பெண் சான்றிதழ்களை டிச.,18 வரை தேர்வு மையங்களில் சான்றிதழ்களை பெறலாம்.

>கம்பைன்டு மெடிக்கல் சர்வீஸ் 2015-க்கான தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

>கல்வியை வர்த்தகப் பொருளாக்கும் உலக வர்த்தக அமைப்பு உடன்பாட்டை இந்தியா நிராகரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

>பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான விடுமுறை எப்போது விடப்படும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

>’நாடு முழுவதும், பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை, தினமும், ஒன்று அல்லது இரண்டு பெற்றோர் சுவைத்து, சோதித்து பார்ப்பதை கட்டாயமாக்க வேண்டும்’ என, மத்திய அரசு கூறியுள்ளது.

>புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலனுக்கான அரசாணை இல்லை என, முதல்வரின் தனிப்பிரிவு கைவிரித்தது. இதனால் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்த 4.20 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

>தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இலவச லேப்டாப்களில், விரைவில் ‘விண்டோஸ் 10 ஆப்ரேட்டிங் சிஸ்டம்’ (ஓ.எஸ்.,) வசதி செய்யப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக ‘லேப்டாப்’களில் தொடுதிரை வசதி ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

>உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்; கலங்காதீர்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உருக்கமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

>வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 21 ஆம் தேதி திருச்சியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

>டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, வி.ஏ.ஓ., தேர்வு எழுதும் மாணவர்களிடம் வேலைவாங்கிதருவதாககூறி ஒரு சிலர் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகபுகார் எழுந்துள்ளது.

>பள்ளிக்கு முன்பாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவு பொருட்களை மாணவர்கள் வாங்கி உண்ணக்கூடாது என ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் – பள்ளிக்கல்வி இயக்குநர்

>தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் விரிவுரையாளர் இன்னும் 5 ஆண்டுகளுக்குள் UGC நிர்ணயித்துள்ள கல்விதகுதியை பெற்றுக் கொள்ள வேண்டும் .இல்லையெனில் 5 வருடத்திற்கு பிறகு தாங்களாகவே வெளியேற சம்மதிக்கிறோம் என தனியார் கல்லூரயில் கையெழுத்து வாங்குகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

>தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு (பிளஸ் 2) தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைதோறும் அரசுப் பள்ளிகள் செயல்படும். அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மற்ற வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் பள்ளி நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் ஓரிரு நாள்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

>வெள்ளத்தால் சீருடைகளை இழந்த 31 ஆயிரம் மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அனுப்பப்பட்டுள்ளன என சமூக நலத் துறையினர் தெரிவித்தனர்.

>மழை, வெள்ளத்தால் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கான சிறப்பு முகாம்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் 132 இடங்களில் திங்கள்கிழமை தொடங்கின. இவற்றில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பவர்களுக்கு ஒரு வாரத்தில் சான்றிதழ் நகல்கள் அளிக்கப்பட உள்ளன.
>உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, வெள்ளப் பாதிப்புக்கு ஆளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 148 பொறியியல் கல்லூரிகளில் அனைத்து பருவத் தேர்வுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. மேலும், தேர்வுகள் டிசம்பர் 28 முதல் தொடங்கி நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

| http://www.kalvisolai.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: