கல்விச்சோலை செய்திகள் | >FIND TEACHER PO

கல்விச்சோலை செய்திகள் |
>FIND TEACHER POST.COM | தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி பெற பதிவு செய்யுங்கள் அல்லது 08067335589 என்ற எண்ணுக்கு MISSED CALL கொடுங்கள்.

>கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு மாற்று கல்விச்சான்றிதழ்கள் வழங்க டிசம்பர் 14 முதல் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

>வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கான நகல்களை வழங்கும் முகாம் திங்கள்கிழமை (டிச. 14) தொடங்கப்பட உள்ளது. 132 இடங்களில் இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் இந்த முகாம்களில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வாரத்துக்குள்ளாக கட்டணமின்றி சான்றிதழ்களின் நகல்கள் வழங்கப்படும் என அதிகாரிகள்தெரிவித்தனர்.

>TRB NEWS | மழை வெள்ளத்தால் சேதமடைந்த TNTET தேர்ச்சி பெற்ற சான்றிதழ் மறுபடியும் DOWNLOAD செய்து கொள்ளலாம் என TRB அறிவித்துள்ளது.

>அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்து தமிழக முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு அரசு , அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கும் பொருந்தும் என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

>பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் டிசம்பர் 11 முதல் 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

>பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதியை அறிவிக்காததால், தேர்வு தாமதமாகுமோ என, மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், மார்ச்சில் பொதுத் தேர்வு நடக்கும். வழக்கமாக, டிசம்பர், முதல் வாரமே பொதுத் தேர்வு அறிவிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு இன்னும் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

>16, 18-ந் தேதிகளில் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. சென்னை உள்பட 4 மாவட்ட மாணவர்கள் தேர்வை ஏப்ரல் மாதம் எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.தேர்வுகள் தள்ளிவைப்புதமிழ்நாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகள் அனைத்திற்கும் செமஸ்டர் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டன.

>சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 34 நாள் விடுமுறைக்கு பின், இன்று, பள்ளிகள் திறக்கப்படுகின்றன. வெள்ளத்தில் புத்தகங்களை பறிகொடுத்த அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகங்கள் மற்றும் சீருடைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

>சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு தொற்றுநோய்கள் குறித்த பரிசோதனை திங்கள்கிழமை முதல் மேற்கொள்ளப்பட உள்ளது. அனைவருக்கும் நிறைவடையும் வரை பரிசோதனை தொடரும்.

>ஆட்சிப்பணி உள்ளிட்ட பதவிகளுக்கு, யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் பிரதான தேர்வுகளை, இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

| http://www.kalvisolai.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: