ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இத் தேர்வில் பிழையான கேள்விகள் இடம் பெற்றிருந்ததால் கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்த எஸ்.விஜயலெட்சுமி, ஜே.ஆன்டனி கிளாரா ஆகியோருக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 
ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை 21 இல் நடத்திய முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில், பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன. பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தனர். பிழையான 40 கேள்விகளுக்கும் முழு மதிப்பெண் வழங்குவது அல்லது பிழையான கேள்விகளை நீக்கிவிட்டு 110 மதிப்பெண்களுக்கு மட்டும் மதிப்பீடு செய்வது என இரு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும், இதை தனி நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ், ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமாகிறது. தகுதித் தேர்வின் மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், மறுதேர்வு நடத்துவதால் இந்தப் பணி மேலும் தாமதமாகும். 31 ஆயிரத்து 983 பேர் எழுதிய தமிழ்ப் பாடத் தேர்வை ரத்து செய்துவிட்டு, மீண்டும் தேர்வு நடத்துவது தேவையற்ற பெரும் செலவினத்தை ஏற்படுத்தும். அதோடு, முந்தைய தேர்வை நன்றாக எழுதியவர்கள், மறுதேர்வில் அதே அளவுக்கு சிறப்பாகச் செய்ய முடியாமல் போகலாம். மறுதேர்வை சில தேர்வர்கள் எழுத முடியாமலும் போகலாம். இதனால் அவர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். ஆகவே, மறுதேர்வு உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டிருந்தனர். 
அதையடுத்து எம்.ஜெய்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதித்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுதாகர், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை வழக்குரைஞர் சோமையாஜி ஆஜராகி, பி வரிசை கேள்வித்தாளில் ஏற்பட்ட பிழை, அச்சுப்பிழை தான், இதனால் கேள்வியின் அர்த்தம் எவ்விதத்திலும் மாறுபடாது. இத்தேர்வை எழுதும் முதுகலைப் பட்டதாரிகள், எளிதில் புரிந்து கொள்ள முடியும். மறுதேர்வு நடத்துவது அரசுக்கு தேவையற்ற நிதிச்சுமையை ஏற்படுத்தும். ஆகவே, தேர்வு முடிவை வெளியிட நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார். அதையடுத்து மனுதாரர்கள் இருவருக்கும் 21 மதிப்பெண்களை வழங்க வேண்டும். மனுதாரர்களுக்கு இரு பணியிடங்களை காலியாக வைத்திருக்க வேண்டும். தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என உத்தரவிட்டனர். 
மேலும், தமிழ் பாடத்துக்கான திருத்தப்பட்ட ரேங்க் பட்டியலைத் தயாரித்து, டிசம்பர் 20 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

8 responses

  1. TET Kuritha arivipayum veli ittal nalamaga irukkum. K.T.Pugal

  2. pass paniyum paithiyam pudikka vacchiruvanga trb

  3. pls announce the CV date for TET……………….we lost our patience…………….

  4. well said sir….net a pathu pauthu kan poirum pola iruku…apram blind priority keka vendi irukum pola…………

  5. Apo kuda namaku job kudukathu trb

  6. when will relaese final trb list

  7. TET pass paniyum velai varuama varathanu pathiyam pidikuthu, epa than CV solunga

  8. what will be cut off for PG Tamil OC, BC, MBC, SC , ST . if any one got more than 110 please reply

Leave a Reply to sathiyamoorthy Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: