அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து வகுப்புகள் ஜனவரி 2–ந்தேதி தொடங்கும் அன்று மாணவர்களுக்கு 3–வது பருவத்திற்கு உரிய விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து வகுப்புகள் ஜனவரி 2–ந்தேதி தொடங்கும் அன்று மாணவர்களுக்கு 3–வது பருவத்திற்கு உரிய விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

பிளஸ்–2 அரையாண்டு தேர்வு 23–ந்தேதி முடிவடைகிறது. அதுபோல எஸ்.எஸ்.எல்.சி. அரையாண்டு தேர்வு 12–ந்தேதி தொடங்கி 23–ந்தேதி முடிவடைகிறது.இந்த இரு தேர்வுகளும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் பொதுவானவை ஆகும்.

தேர்வுகள் முடிவடைந்ததும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் ஜனவரி 2–ந்தேதி திறக்கப்படுகின்றன. பள்ளிக்கூடம் திறக்கும் அன்றையதினம் 1–வது வகுப்பு முதல் 9–வது வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் 3–வது பருவத்திற்கு உரிய விலை இல்லா பாடப்புத்தகங்கள், விலை இல்லா நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. மொத்தத்தில் 2 கோடியே 40 லட்சம் பாடப்புத்தகங்கள் கொடுக்கப்பட இருக்கின்றன.

இதற்காக பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுவிட்டன. அனைத்து பாடப்புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு டிசம்பர் 20–ந்தேதிக்குள் அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் 66 குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு புத்தகங்களை விலைக்கு வாங்குவதற்கு வசதியாகவும் அவர்களுக்கு தனியாக குடோன்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்கள் அளவுக்கு அதிகமாக அச்சிடப்பட்டு வருகிறது.இவ்வாறு வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.
 

One response

  1. Why private schools are conducting holiday classes for students and torcturing them without giving them any relaxation ?????????? will the govt take necessary steps ????????

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: