சென்னையில் டிசம்பர் 5ம் தேதி பள்ளிக்கல்வித்துறை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னையில் வரும் 5ம் தேதி கல்வித்துறை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் வரும் 5ம் தேதி காலை 9.30 மணிக்கு தாம்பரம், கார்லி மேல்நிலை பள்ளியில் நடைபெற உள்ளது. 
இந்த கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். அமைச்சரவை மாற்றத்திற்கு பின்னர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணி பங்கேற்கின்ற முதல் ஆய்வு கூட்டம் இது ஆகும். மேலும் இதன் தொடர்ச்சியாக டிசம்பர் 6ம் தேதி பொதுத்தேர்வுகள் தொடர்பான கூட்டமும் சென்னை தாம்பரத்தில் உள்ள கார்லி மேல்நிலை பள்ளியில் நடத்தப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் 10, 12ம் வகுப்புகளின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பெற்றோர் ஆசிரியர் கழகம் வாயிலாக காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் கணிதம், அறிவியல், ஆங்கிலம் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்ட விபரம் மற்றும் முதுகலை ஆசிரியர் நியமிக்கப்பட்ட விபரம் போன்றவை தொடர்பாக ஆய்வு செய்யப்பட உள்ளது.A

One response

  1. Is there any chance to discuss about TET Exam and its postings…?????

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: