13 ஆயிரம் பட்டதாரிகள் கலந்துகொள்ளும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மெயின் தேர்வு நேற்று தொடங்கியது. தமிழ்நாட்டில் மட்டும் 906 பேர் எழுதினார்கள்.

13 ஆயிரம் பட்டதாரிகள் கலந்துகொள்ளும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மெயின் தேர்வு நேற்று தொடங்கியது. தமிழ்நாட்டில் மட்டும் 906 பேர் எழுதினார்கள்.
இந்தியா முழுவதும் பணிபுரியக்கூடிய மத்திய அரசு உயர் பணிகளான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட 24 வகையான பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை யு.பி.எஸ்.சி. நிறுவனம் வருடந்தோறும் நடத்தி வருகிறது.
இதில் முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய 3 கட்டங்களாக நடக்கின்றன.
முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மெயின் தேர்விலும், மெயின் தேர்வில் அதிக மார்க் எடுப்பவர்கள் நேர்முகத்தேர்விலும் கலந்துகொள்வார்கள்.
மெயின் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மார்க்கில் அதிக மார்க் எடுப்பவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். அதிக மதிப்பெண் எடுப்பவர்கள் அவர்களின் சொந்த மாநிலத்தில் பணிபுரிய அரசு உத்தரவு வழங்கப்படும்.
இந்த வருடம் 1000 பணிகளுக்கு முதல் நிலை தேர்வு கடந்த மே மாதம் 26–ந் தேதி நடத்தப்பட்டது. அதில் இந்தியா முழுவதும் 9 லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதினார்கள். அவர்களில் 13 ஆயிரத்து 500 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த 13 ஆயிரத்து 500 பேரில் தமிழ்நாட்டில் மட்டும் 940 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி பெற்ற 13 ஆயிரத்து 500 பேருக்கான மெயின் தேர்வு நேற்று தொடங்கியது.
சென்னையில் அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு கலை அறிவியல் மகளிர் கல்லூரி, ராணி மேரி அரசு கலை அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் நடந்தது. இந்த இரு தேர்வு மையங்களில் சேர்த்து 906 பேர் தேர்வு எழுதினார்கள். 34 பேர் தேர்வு எழுத வரவில்லை.
நேற்று காலை கட்டுரை தேர்வு நடந்தது. 4 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதில் ஒரு கட்டுரை எழுதினால் போதுமானது. அதிக பட்சம் 2 ஆயிரத்து 500 வார்த்தைகள் எழுதவேண்டும்.
இதற்கு 250 மதிப்பெண் ஆகும்.
இந்த தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த பட்டதாரிகளிடம் தேர்வு எப்படி இருந்தது என்று கேட்டதற்கு அவர்களில் சிலர் கூறியதாவது:–
தேர்வு எளிதாகவும் இல்லை. கடினமாகவும் இல்லை. நடுத்தரமாக இருந்தது. 4 முதல் மற்றும் கடைசி கேள்விகள் தெரிந்த தலைப்பாக இருந்தன. அதில் ஒன்றை தான் பலர் எழுதினார்கள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் என்ஜினீயரிங் பட்டதாரிகள்தான்.
சென்னையில் உள்ள மனிதநேய அறக்கட்டளை நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் 215 பட்டதாரிகள் நேற்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மெயின் தேர்வை எழுதினார்கள்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: